கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
நெருப்பு நதிகள் நிலம் தடவி நடக்கின்றன. பொறுத்திருப்பீர். பொறுப்பற்ற நா நுனியில் ஏளனத்தைப் பூட்டாதீர். இருப்பிற்கான எல்லாம் இனிவரும் காலத்தில் தெளிவுறும். உரம் அள்ளிச் செறிவோம். உற்சாக வார்த்தை தன்னும் உடன் அள்ளித் தருவோம் கரத்திற்கும், நாவிற்கும் பணியுள்ள காலமிது. இயங்காப் புலனிருப்பின்... எம் இன்னுயிர்க்கு மதிப்பில்லை. அது.... இருந்தென்ன ? செத்தென்ன? என்றைக்கோ ஒரு நாள்... சாவெமைத் தின்னும். எதற்குமே பயனற்றா... எம்கட்டை வேகும்?
-
- 7 replies
- 1.4k views
-
-
அம்மா ஆயிரம் உறவு எம்மைத் தேடியே வந்தாலும் அம்மா உன்போல் அன்பான உறவெமக்கு அகிலத்தில் இனி வருமா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா - உன் பரிவிற்கா? பாசத்திற்கா? நட்பிற்கா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா. நல்லதொரு மனையாளாய் நானிலத்தில் வாழ்ந்ததற்கா? பெற்றவர்கள்தான் உவக்க பெருமையுடன் வாழ்ந்ததற்கா? உற்ற உம் உறவுகளை உயர்வுடனே சுமந்ததற்கா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா எம் உயர்வுக்காய் உனை உருக்கி ஓடியோடி உழைத்ததற்கா? - நாம் உடைந்துபோன நேரங்களில் உறுதுணையாய் நின்றதற்கா? எம் திறமைகள் அனைத்திற்கும் திறவு கோலாய் இருந்ததற்கா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா. கருத்தாய் கல்விக்கண் ஊட்டியே வளர்த்ததற்கா? கடமையே உயர்வென்று கண்ணியத்தை போதி…
-
- 9 replies
- 1.9k views
-
-
எதிரலை எங்கோ ஒர் கரையின் மடியில் - நமக்கான நாற்காலிகள் காத்திருக்கின்றன எதோ ஒர் கடலின் அலைகள் - நம் வருகை எதிர் நோக்கி நிலம் தொடுகிறது தனக்கான வேக விளிம்பைத்தாண்டி- நம் சந்திப்பின் காலம் நோக்கி - விரைகின்றன கடிகார முட்கள் இனி எப்போதுமே நாம் சந்திக்க - போவதில்லையெனும் உண்மையறியாமல்
-
- 7 replies
- 1.7k views
-
-
ஆவி ஈந்தவர் முகத்தில் ... ஈ மொய்க்கும்..! ஆசுவாசமாய்.... இருக்கையின் இருபுறம் இரு கை ..விரித்துக்கொண்டே சொல்கிறாய் - புலி முடிந்ததென்றே! தளங்களை வென்றவர்... வென்றதெல்லாம் தளங்களா? எமக்காய் தலங்கள்! நாவில் ஈரமென்று .. யாரோ சொன்னார்... மெய்யில்லை நண்பா நண்பா! உனக்கு................. அதன் சுவையரும்புகளில்.. நஞ்சின் கசிவு! சாணம் மேல் ஈயாய் கிட...! உரம் அது என்று தெரிந்தும்.. ஈரத்தை உறிஞ்சு.... மண்ணில் புதைக்கும் நாள் வந்தால்.... எழுந்து பறப்பாய்..!! இருப்பதை ஏளனம் செய்தாலும்... ஆலமரத்தை உன்னால் தனித்து.... ஆண்டியாக்க முடியுமா? வேர்களுக்கும் - விழுதுகளுக்கும் எதிரி ஆவாய்!
-
- 2 replies
- 1.1k views
-
-
1. எதிர் திசைப் பயணி ஒரு பாதாளத்தின் மேடையில் பிரிந்தவள் சொர்க்கத்தில் சந்திக்கலாம் எனக் கூறிச் சென்றாள். என் பயணப் பையும், கால்களும் நினைவின் பள்ளத்தாக்கில் கீழ் நோக்கி இழுத்துச் செல்லுகின்றன ஒவ்வொரு பறவைக்கும் தெரிகின்றது மாலையில் அதனதன் கூடு அவற்றின் மரக் கிளைகள்... சாபத்தின் சின்னமாய் நின்றபடியே துயிலும் குதிரையாக்கி நடுக்காட்டில் விட்டுச் சென்றிருந்தாள் ஆளுயரப் புல்வெளியில் என் வகிடு எதுவென்று தேடுகின்றேன்... எந்தப் படகும் தென்படாத இரவின் நதியைக் கடக்கு முன் நிற்க ஓர் இடம்.. வெறித்துப் பார்த்தபடி படுத்திருக்க ஒரு கூரை ஏதுமின்றி இருக்கிறேன்... மழைத் தூறலும் குளிர் காற்றும் ஏந்தி வரும் ஒரு தேவாலயத்தின் மணியோசை... அங்கே ஒளி நடனம் புரியும…
-
- 3 replies
- 556 views
-
-
யாழ்க்கள உறவுகளே! இது ஒரு ஆரம்பம். வாருங்கள் எதிர்ப்பாட்டு எடுக்கலாம். ஏற்கனவே இத்தகைய பாடல்கள் இங்கு உலா வந்திருக்கின்றன. உதாரணத்திற்கு உங்களுக்குப் புரியும் வகையில் சில ஆக்கங்களை இங்கு இடுகின்றேன். இந் நிகழ்வு கவிதை அந்தாதி போன்று விரும்பியவர்கள் எழுதலாம். உதாரணம்1 ஆதி, காப்பாய் வெண்ணிலா கடம்பவன புூங்கொடியே பார்ப்பாய் பாவியேன் படும்பாட்டை பரிதவிக்கும் நிலைப்பாட்டை கேட்பாய் என் அழுங்குரலை கிடந்து உழலும் யாழ்க்களத்து வால்களின் வலியிருந்து தண்நிலவே ஆதியின் உயிர் காப்பாய். சுயிந்தன், காக்காய் வெண்ணிலவே காக்காய் பிடித்திடினும் பார்க்காய் பாவியரை பகடைக்காய் ஆக்கிடுவார் கேட்காய் அழுங்குரலைக் கேள்வியிலே காய்த்திடுவார் வால்வலியே வாழ்வாகட்டும்…
-
- 45 replies
- 6.3k views
-
-
விடியலின் பாதை அனு தினமானது. கொடியரின் பாதை அது மாதிரியே நாளும்,பொழுதும் கொலை,கடத்தல் இந்த சம்பவம் இல்லையெனில்-அது சிறீலங்காவே இல்லையென ஆச்சு. இணையத்தை பார்த்தால் ஆளாளிற்கு தனது கற்பனையால் இன்னமும் எரிகின்ற நெருப்பில் பிடுங்கிய வரை லாபமென ஏதேதோ எழுதுகின்றார். வீரம் மெளனித்தால் ஈரமுள்ள நெஞ்சகம் என் செய்யும்? நிலைமை ஒன்றும் சீராக இல்லை. இதற்குள் எத்தனை சீரழிவை இன்னமும் செருகுவர்? தூற்றுவதே சிலரது பொழுதாக தேற்றும் உள்ளகச் செழிப்பகற்ற ஊற்றுக் கண் இருந்தும் இல்லாததாய் இழவுகள் சேதி எழுதும். மாற்றம் தேடும் மனிதங்களை கறைப்படுத்தும் காகிதங்கள் வரையின்றி ---- குழப்பம் ஏற்படுத்துவதில் குறியாக சில துன் மார்க…
-
- 5 replies
- 1.7k views
-
-
எதிர் பார்த்திருந்தேன் இந்த ஆண்டிற்கான தலையின் படம் வரவில்லை எதிர் பார்த்திருந்தேன் இந்த ஆண்டிற்கான தளபதியின் படம் வரவில்லை எதிர் பார்த்திருந்தேன் உலக நாயகனின் படம் வந்தது ஆனால் எதிர் பார்த்தது கிடைக்கவில்லை எதிர் பார்த்திருந்தேன் சூப்பர் ஸ்ராரை அவர் வருவாரா ? வரமாட்டாரா தெரியாது ஆனால் எதிர் பார்த்த ஒன்று வந்தது ஜ.நா சபை அறிக்கை வழைமைபோல். கண்டிக்கிறோம். எதிர்பார்ப்புக்கள் தொடரும்.....
-
- 8 replies
- 1.1k views
-
-
வேர்களை நினைந்தழுதபடியே தூங்கிப்போன நீண்ட ஒரு துயரநாளின் நடு நிசியில் தூக்கம்களுக்கிடையே கனவுகளின் வீதியில் கோபத்துடன் கணன்றுகொண்டிருந்த ஊரை எரிக்கும் நினைவுகளை பின்தொடர்ந்தேன்... கழுகளுக்கஞ்சிய கண்களில் மிரட்சியுடன் சேதி சொல்லி அழைத்துச்சென்ற நினைவுகளின் கரங்கள் எல்லாவற்றிலும் தழும்புகள் நிறைந்து கிடந்தன... ஒவ்வொரு தழும்புகளில் இருந்தும் சொட்டிக்கொண்டிருந்த ஆன்மாக்கள் வீதிகளில் அலைந்து கொண்டிருந்தன... உற்றுப்பார்க்கிறேன்.. ஈழத்து இதிகாசங்களில் எழுத்தப்பட்ட பெயர்கள் எச்சங்களைத் தேடியவாறு.. முகவரி கொடுத்தவர்களின் எச்சங்களின் முகங்கள் எல்லாம் வறுமைக் குழிகளுக்குள் அடித்த சுழிகளுக்கிடையே செத்தழிந்துகொண்டிருந்தன.. …
-
- 29 replies
- 3.9k views
-
-
முல்லைத்தீவு போயிருந்தேன் - அந்த முள்ளிவாய்க்கால் தாண்டிப் போனேன் இறங்கி நின்று படமெடுக்க - என் இதயம் ஒன்றும் இரும்பால் ஆனதில்லை விசுமடு தாண்டிப் போக நான் தொழுத வீரர் புதைந்த குழி மேடாய் கண்ட பின்னர் வீதி வழி விடுப்புப் பார்த்து மனம் கனக்க விருப்பம் இன்றி பூனை போல ஆகி நின்றேன் ஆனந்தபுரமும் மாத்தளனும் பெயர்ப் பலகையிலே அருகிருந்த தம்பி தட்டி அதன் கதை சொல்லி காட்ட ஆவி அடங்கி அத்தனை உயிர் கொடுத்த இடத்தை ஆர்வம் இன்றி அகம் கனக்க அகன்று போனேன் வட்டு வாக்கால் பாலம் தாண்ட தேக்கி வைச்ச மீதிக் கண்ணீர் விழி உடைத்து வழி தேட வார்த்தைகள் வாய் திறந்து உதிர்க்க மறுத்து வரலாற்றில் பதிந்த அந்தத் தடம் கடந்தேன் இந்த ஏரிதான் எங்கள் உறவுகள் உடலங்க…
-
- 9 replies
- 1.4k views
-
-
உனக்கு யாரோ ஒருவனின் கவிதை பிடித்ததில் இருந்து கிறுக்கிக் கொண்டுதானிருக்கிறேன் என்னில் ஏதாவது ஒன்று உனக்கு பிடித்ததில் கவிதையாவது இருக்கட்டுமே என்று -யாழ்_அகத்தியன்
-
- 4 replies
- 1.2k views
-
-
எதிர்பார்ப்பு மனம் தான் நம் அனைவருடைய உண்மையான முகம் அது என்னை சதா துரத்திக் கொண்டே இருக்கிறது நான் சொல்ல நினைத்த, நினைக்கிற எண்ணங்கள் என் மனதுள்ளே புதைந்து போகின்றன எங்கே என்னிடம் உள்ள ரகசியங்களை வெளியே சொல்ல முடியுமா உன்னால்? என்று என்னை பார்த்து அது நகைக்கின்றது ஓவ்வொரு முறையும் நான் சொல்ல நினைத்து சொல்லாமல் விடுகின்ற எண்ணங்கள் என் மனதோடு சேர்ந்து என்னை பார்த்து சிரிக்கின்றன என் எண்ணங்களை சொல்ல வேண்டியவர்களிடம் சொல்ல வேண்டிய நேரத்தில் தயங்காமல் நான் சொல்ல போவதை ஆவலுடன் என்னுடன் சேர்ந்து என் மனமும் எதிர்பார்க்கின்றது
-
- 17 replies
- 2.4k views
-
-
அழகா அழகா வான் மதிதான் அழகா பூமியில் பெண்மதி அவள்தான் அழகா வானத்து விண்மீன்கள் ஒளிதான் அழகா மங்கை அவள் கண் சிமிட்டல்தான் அழகா மேகத்தில் தோன்றுகின்ற வானவில்தான் அழகா மங்கை அவள் தாவணியின் வர்னங்கள்தான் அழகா கீழ்வானம் சிவக்கின்ற சூரியன் தான் அழகா வெக்கத்தால் சிவக்கின்ற அவள் கன்னங்கள்தான் அழகா பூமியை நனைக்கின்ற மழைத்துளிகள்தான் அழகா க்ண்களைக் கழுவும் அவள் குறும்பு அழுகைதான் அழகா கூவுகின்ற குயிலின் குரல்தான் அழகா அவள் பேசுகின்ற தமிழ்தான் அழகா
-
- 20 replies
- 3k views
-
-
எது அழகு.. ஏகாந்தம்..இளவேனில்.. இல்லாத கடவுள்.. இருக்கின்ற கோவில் வாசப்பூக்கள்..வரண்ட வேர்கள்.. பழைய சிற்பம்..புதிய நுட்பம்.. மெல்லிய ஆடை.. மெல்லியல் ஆடல்.. பஞ்சுமேகம்..பிஞ்சுப்பாதம்.. நெடுஞ்சாலை..நீர்வீழ்ச்சி குண்டுகுழி..காடும்மேடும். பளபளமேனி..பட்டுஆடை.. வசீகரப்புன்னகை..வைரங்களில் நகை மிடுக்குநடை..சின்னஇடை அமுதப்பேச்சு..வண்ணப்பூச்சு.. வெளியில் தளுக்கு உள்ளே அழுக்கு சிந்தை நொந்து..சிந்தை நொந்து சின்னஅறிவைக் கேட்டு பார்த்தேன்.. எது மெய் அழகு...
-
- 12 replies
- 3.4k views
-
-
எது ஈடு இதற்கு...? மனதைத் தாலாட்டும் மாலைத் தென்றல் சுள்ளென எரிக்கா மெல்லிய வெயில் சில்லெனப் பரவும் இரவுக் குளிர் கதகதப்பாக்கும் போர்வைத் துணி இவை போதும் எனக்கு வேறு எது ஈடு இதற்கு...? இரவில் நிலவு இரையும் மழை பருகத்தேநீர் பாயில் தூக்கம் கனவில் சுகம் கவலையற்ற மனம் இவை போதும் எனக்கு வேறு எது ஈடு இதற்கு...? கலையும் இருள் காலை நிசப்தம் கண்ணைக் குத்தா கதிரவன் ஒளி விழித்தபடி தூங்கும் சுகம் இவை போதும் எனக்கு வேறு எது ஈடு இதற்கு...? குளையல் சோறு குளிக்க வெந்நீர் துவட்ட முந்தானை தூங்க உன் மடி இவை போதும் எனக்கு வேறு எது ஈடு இதற்கு...? ஒழுகும் மழை ஒற்றைக் குடை புழுதி வீசும் பூமி வாசம்…
-
- 6 replies
- 1k views
-
-
எது சுகமோ? தொடர் - 2 அன்னையவள் அருகிருந்து - என் அன்னமே என அணைத்தால் அந்நேரம் அவள் அணைப்பில் கண் அயர்ந்தால் அது சுகமா? கண்களிலே கதைபேசி காரியத்தில் ஒருமிக்கும் கண்மணிகள் கரமிணைந்தால் காதலுக்கு அது சுகமா?
-
- 12 replies
- 2.3k views
-
-
எது சுகம்? ---------------------- பட்டப்படிப்பு சுகமா? அதனால் வந்த பதவி வாழ்வு சுகமா? கட்டிக்காத்த சொத்து சுகமா? இல்லை கட்டிலறை என்னும் மனித இச்சை தான் சுகமா? அள்ளி அள்ளி சேர்க்கும் பணம் சுகமா? அதனால் வரும் பகட்டு சுகமா? உண்மை சொல்லுங்க அம்மா இல்ல ராசா இல்ல சாப்பிடுடா செல்லம் என்று சொல்ல அன்னை கையால் சோறு உண்டு வாழ்ந்தோமே அதை விடவா இத்தனையும் சுகம்????
-
- 34 replies
- 4.1k views
-
-
ஒரு கிறுக்கல் ஒன்று: எது நடக்கின்றதோ அதுவும் அநீதியாகவே நடக்கின்றது எது நடக்க இருக்கின்றதோ அது அறம் மீறியே நடக்க இருக்கின்றது உன்னுடையதை எல்லாவற்றையும் எல்லாவுமாய் இழந்தாய், ஆயினும் ஏன் ஆனந்தப்படுகின்றாய் எதை நீ பிறப்பிலிருந்து கொண்டு வந்தாயோ அவை அனைத்தும் பறிக்கப்படுகின்றன எதை உனக்காக படைத்தாயோ அதை அவர்கள் அவர்களுக்காக எடுத்துக் கொண்டனர் எதை அவர்கள் எடுத்தார்களோ அவை அனைத்தும் உன்னிடம் இருந்து பறித்துக் கொண்டவை எதை நீ அவர்களிடம் இழந்தாயோ அவை அனைத்தும் மீண்டும் உன்னாள் பெறப்பட வேண்டியவை பறித்த எதை அவர்கள் தமதென்று கொண்டாடுகின்றனரோ அவை அனைத்தும் உனக்கும் உன் சந்ததிக்குமானவை பிறிதொரு நாளில் உன் தெருவில் தோரோட்டி போகும் போது உனக்கான கீதையாக உன் சுதந்திரத்…
-
- 6 replies
- 1k views
-
-
எதுவரை...... கவிதை - இளங்கவி குளிர் நிலவை கைகளில் ஏந்தி.... கோடி மின்மினியை வானத்தில் காட்டி.... அப்பா வந்தால் அடித்திடுவார் சாப்பிடடி என் செல்லம் என்பாள்.... சோறுடன் சேர்த்து தமிழையும் ஊட்டிடுவாள்..... இது ஈழத்து மண் கண்ட இனிய பொழுதுகள்..... இன்று கனவுகளில் மட்டும் நாம் காணும் நினைவுகள்..... வாழ்ந்த நிலங்களெல்லாம் எரி நிலமாய் மாறிவிட..... எமை வாழவைத்த வயல்களெல்லாம் கந்தகத்தில் புதைந்து விட... நம் பிணக்குவியல் மேலே புத்த விகாரைகள் எழுகிறது.... எம்மை அடைத்து வைத்த சிறைகள் பூட்டியே இருக்கிறது.... அன்று உணவூட்ட நட்சத்திரம் அழைத்தாள்..... அருகில் இருத்திட நிலவையும் அழைத்தாள்.... இன்று முகாமில் நட்ச…
-
- 14 replies
- 1.5k views
-
-
எங்கேயோ கேட்கிறது அந்த முனகற் சந்தம்! காரிருள் கவ்விய பொழுதில்... ஈருடல் தழுவிய நிலையாய்... யாருமறியாமல் நடக்கிறது கதகளி! கையில் அகப்பட்டதையெல்லாம் அள்ளியெடுக்கிறான் திருடன்! மெய்யில் வசப்பட்டதையெல்லாம் அள்ளிக்கொடுக்கிறாள் திருடி! கன்னக்கோல் கன்னம் வைக்க எண்ணம்போல் கன்னம் சொக்க, கொஞ்சங் கொஞ்சமாய் திருடுபோகிறது! கொஞ்சிக் கொஞ்சி உதடு நோகிறது! பின்னிப் பிணைந்த அரவங்கள் போல் எண்ணித் துணியும் அவயவங்களுக்குள், சிக்கித் தவிக்கிறது ஒளிபடா இடங்கள்! தறிகெட்டுப்போன மனதுக்கும் வெறி முற்றிப்போன உடலுக்கும் விடை கொடுக்கின்றன துகிலங்கள்! பாலாடை நீக்கி பால்பருக... பசியோடு காத்திருந்த பாலகன்போல் மேலாடை விலக்கி அடம்பிடித்து, கீழ்நோக்கி நகர்கின்றான் பாதகன்! …
-
- 11 replies
- 1.3k views
-
-
புற்றில் நுழையும் பாம்புபோல மென்மையாக இறங்குகிறாய் இரைதேடியோ அன்றில் உறைவிடம் நாடியோ ? இழக்காத அந்தரங்கவேர்கள் மீதும் சொல்லெறிகிறாய் இடம்மாற்றவோ அன்றில் பிரட்டிப்போடவோ ? மௌனங்களை வென்றுபோக சலனமில்லாத விழிச்சுழற்சியை அனுப்புகிறாய்... என்னை கொள்ளவா கொல்லவா? எதுவென்றாலும் செய்துவிட்டுப்போ.. அதற்குமுன் வா .. இந்த குளிரைப்போக்க ஒரு தேநீர் அருந்தலாம்.. பின்பொரு முத்தத்தை பகிரலாம்.
-
- 10 replies
- 1.1k views
-
-
தாங்கவியலா வெறுமைகளில் அமிழ்ந்து விழிகளில் நீர்வர நினைவுகள் கரைந்தழிகிறது... எழுதுகோலும் வெற்றுத்தாளுமாய் என் எதிரிலே... எதை எழுதுவது...? முகவரி இழந்து முகமிழந்து முற்றத்து நிழல் இழந்து ஊர் சுமந்த கனவிழந்து உள்ளே வலி சுமந்து அகதியாய் உருக்குலைந்து கிடக்கும் கதை எழுதவா..? ஒளித்து ஒளித்து - தன் இணையுடன் விளையாடும் ஒற்றைப்பனை அணிலுக்கும் விரத விருந்துண்டு களைத்து முற்றத்தில் துருத்திக்கொண்டு நிற்கும் வேம்பில் கரகரத்த குரலில் கரையும் காக்கைக்கும் கிடைத்த சுதந்திரம் என் மண்ணில் என் முற்றத்தில் எனக்கு மறுக்கப்பட்டதை எழுதவா..? என் பாடு பொருளாய் பலகாலம் இருந்த கொலுசொன்றின் ஒலிக்காக மனசெல்லாம் காத்த…
-
- 21 replies
- 2.3k views
-
-
சட்டெனத் தூறிய மழைத்துளியில், முற்றாக நனைந்து போனேன்...! சாயம் போனவன் போலாகி... - காயமாகி, அம்மணமாய் அழுது நின்றேன்! வழமையாய்... நான் பேசினால், பத்து ஊருக்கு பவ்வியமாய்க் கேட்கும்...! ஆனால், பேச இயலாத ஒருவனாய்... - அகதியாய், எங்கேயோ தொலைந்து போனேன் ..! என் தாயின் முகம் மலர... மாற்று நாமம் சூடிக்கொண்டேன்! பல முகமூடி போர்த்திக்கொண்டேன்...! - ஆனால், உண்மையான என் முகம் தொலைத்து நின்றேன்! நெருப்பாய் இரு... எரிக்காதே! கனலாய் இரு ...கருக்காதே! கருத்தாய் இரு.... வருத்தாதே!!! - இறுதியில், அர்த்தமற்ற பிழையாய் ... நின்றேன் ! என் மானங்காக்க.... அழகாய் உடுத்திக்கொண்டேன்! என் பெண்டிர் விருப்பம்போல்.... வாங்கிக் கொட…
-
- 5 replies
- 1.3k views
-
-
ஆடி பாடி திரிந்த குழந்தைகளை நம் நாட்டின் வருங்கால முத்துக்குகளை கொலை வெறி கொண்ட சிங்கள அரசு கொன்று குவிக்குறது எத்தனை குழந்தைகள் ஆனதைகளாய்.. எத்தனை குழந்தைகள் ஊனமாய்.. அலயோசை அடித்து சத்தம் கேட்பது போல் நம் குழந்தைகளின் அலறல் ஓசை உங்கள் காதில் விழ வில்லயா உலக நாடுகளே?
-
- 0 replies
- 683 views
-
-
அங்கே பிணங்கள் விழுந்துகொண்டிருக்கின்றன; 'எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன?" என்று விசாரித்துக்கொண்டிருக்கிறோ
-
- 0 replies
- 839 views
-