கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
இயற்கையால் இணைக்கப்பட்ட நம் உறவு ஒன்றோடு ஒன்று கலந்திட்ட அழகிய வாழ்க்கைத் தோட்டம்! இங்கே வாழும் நாம் எப்போது சிந்திப்போம்? ஆண்கள் தப்பா? பெண்கள் தப்பா? சந்தேகப் பட்டிமன்றம் போட்டு வாதிட்டு வாதிட்டுக் களைத்துவிட்டோம் ஆனாலும் தீர்ப்புகள் மட்டும் மாறி மாறி வந்து போகின்றது நாம் இருட்டுக்குள் வாழ்வதால் வெளிச்சத்தில் சண்டை போடுகின்றோமோ எம் அறிவுக்கண் எப்போதுதான் திறக்கும்? எமக்குள் தப்புகள் வரும்போது மட்டும் நானா? நீயா? என சண்டை போடும் நாம் எப்போது இருவருக்கும் பங்குண்டு என ஏற்றுக்கொள்வோம்? வாழ்கை நொந்து கொள்வதற்கு அல்ல அழகாய் வாழ்வதற்கு இது இருவரும் சேர்ந்தால்தானே முடியும் எப்போத…
-
- 10 replies
- 1.8k views
-
-
முற்றத்து மல்லிகையே முற்றத்து மல்லிகையே நான் எங்கே என்று தேடினாயா? வேலியோர மாதுளையே நான் விரும்பி நீர் வார்த்த குறோட்டன் செடியே நான் இல்லையென்றே நீ வாடினாயா? கிணற்றடி துலாவே கிணற்றடி துலாவே உன் கழுத்தில் கயிறு மாட்டி நாளும் இழுத்தவன் காணலயே என்று தேடினாயா? வேப்ப மரமே வேப்ப மரமே உன் தோழ்வலிக்க ஊஞ்சலாடி தொல்லை தந்தவன் இப்போ எங்கேயென்று எப்போதாவது எண்ணினாயா? குயிலக்கா - குயிலக்கா நீ ...............கூவ மறைந்திருந்து நான் குரலெழுப்ப உன் - உறவுதான் அதுவென்று எண்ணி ஓயாமல் கூவினாயே இந்த ஏமாற்றுகாரன் எங்கே என்று எண்ணி எபோதாவது ஏங்கினாயா? கருங்குயிலென்று ஆனாலும் சொந்த நாட்டிலிருந்தாய் சுத்த வெள்ளை - நீ! …
-
- 10 replies
- 2.1k views
-
-
என் காதலியின் இடை கடவுள் போல... இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்....!
-
- 10 replies
- 4.1k views
-
-
பாலைவனத்தில் பந்தாடும் சிறுத்தைகளுக்கு... (05.06.2012 அன்று தமிழீழ தேசிய உதைபந்தாட்டஅணி முதன் முதலாக பாலைவனத்தில் பந்தாடியபோது வெளியிடப்பட்டது.) பாலைவன தேசத்தில் எங்கள் சிறுத்தைகளின் பந்தாட்டம் பக்கம் இருந்து பார்க்கின்ற கொடுப்பனவு எமக்கில்லை எட்ட நின்றாலும் பக்கம் வந்து உணர்வாலே உம்மை பாடி வைக்க தமிழ்தாய் வரம் தந்ததால் பாடுகின்றேன் உம்மை வெற்றித்திலகமிட்டு வாழ்த்துகின்றோம் வீரரே ! வென்று வாரும். சாவினிற்க்கு அஞ்சாதோர் மீது சாற்றிய கொடியொடு சென்றுள்ளீர் நிச்சயம் வென்றுதான் வருவீர்!!! குண்டடிபட்ட எம் தேசக்கொடி பந்தடிக்கும் வீரரே! உம்மால் பாரினில் பறக்குது இன்று காணொளியில் கண்டதுமே கை கூப்பித் தொழுகின்றோம் கதிரவன் உதிக்கும் திசை நோக்கி எத்தனை ஆயிரம் வீர…
-
- 10 replies
- 720 views
-
-
"கிளி" வீழலாம் புலி வீழுமா?!! வெற்று நிலத்தை பிடித்துவிட்டு வென்று விட்டோமென்று கொட்டம் அடிக்கும்! கூட்டம் ஒன்று!! எட்டி நின்று பார்ப்பவர்க்கு உண்மை புரியாது!! எங்கோ இருந்துகொண்டு தமிழன் வீழ்ந்த செய்திகேட்டு எக்களித்துச்சிரிக்கின்ற பேடியர் இனமொன்று மானத்தை எரித்து விட்டு உயிர்வளர்க்கும் இவர்க்கும் புரியாது!! பாடி விளையாடி பகடி விட்டு கூடிக் களிக்கின்ற வயதில் தன் இனம் வாழ மானமே ஆடையெனக் கட்டிக்கொண்டானே அவனே மாவீரன்! எங்கள் புலிவீரன் வெத்திலை சப்பிச் சிவக்கின்ற உங்கள் வாய்களுக்கு எங்கள் நிலம் சிவக்கும் நீண்ட கதை தெரியாது அதனால் தான் கொக்கரித்துக் கொண்டாடுகின்றீர்கள்! 'கிளிநொச்சி மட்டுமல்ல கிழக்கிலங்கை வடக்கு முழுவதுமே தமிழ…
-
- 10 replies
- 2k views
-
-
-
தீயினை கண்களில் கொழுத்து உன் மேனியில் அல்ல...!!! --------------------------------------- ”மக்கள் புரட்சி வெடிக்கும் சுதந்திர தமிழீழம் மலரும்” அண்ணன் திலீபன் உயிர் கருகும் போது சொன்ன வார்த்தை... இன்று தமிழகமெங்கும் ஓங்கி ஒலிக்கும் நேரம் மாணவர் புரட்சி வெடிக்கும் தருணம்... தொப்புள்கொடி உறவுகள் தோள் கொடுக்கும். எப்போதும் உங்களை எங்களின் இரத்த உறவுகளாய்த்தான் பார்க்கிறோம் எப்போதும் உங்களின் மேல் வைத்த நம்பிக்கையையும் விட்டதில்லை. தம்பிகளா உங்களின் எழுச்சி ...!! தங்கைகளே உங்களின் கோபங்களின் வீரியம்..!! தம்பிகளா உங்களின் ஒற்றுமை..!! தங்கைகளே உங்களின் கொள்கையின் நம்பிக்கை..!! இதில் எதுவுமே சோரம் போகாத யாருக்கும் அடிபணியாத எவனுக்கும் விலைபோகாத உற…
-
- 10 replies
- 1.1k views
-
-
இன்று சாந்தி அக்காவின் பழைய புளொக் ஒன்றைப் பார்த்தேன்...2006 ஆம் ஆண்டின் பின்னர் எந்த அப்டேற்றும் அங்கு இல்லை...சாந்தி அக்காவுக்கே இந்த புளொக் நினைவு இருக்கோ தெரியலை...ஆனால் அழகான கவிதைகள் பலவற்றை அங்கு கண்டெடுத்தேன்....இவை சாதாரணமாக எழுதப்பட்டவையாக தெரியலை..ஏதோ ஒரு வலியை எழுதித் தீர்க்க எழுதப்பட்டவையாக தெரிகின்றன....அவற்றில் இருந்து எனக்கு மிகப் பிடித்த சில கவிதைகளை உங்களுக்காக இணைக்கிறேன்.... இப்படியே ! உன்னை மறந்து நெடுநாளாயிற்று. என் நினைவுகளிலிருந்து - நீ இன்னமும் விடுபடாமல்.....! உன் பெயரைக்க கேட்டால் அல்லது யாராவது உன் பெயரில் இருந்தால் நான் நானாயில்லை..... உன்னை உடன் பார்க்க வேண்டும் போல்.... பேசவேண்டும் போல்....., ஆயிரம் அதிர…
-
- 10 replies
- 4k views
-
-
ஆக்காண்டி ஆக்காண்டி... சண்முகம் சிவலிங்கம் ஆக்காண்டி, ஆக்காண்டி எங்கெங்கே முட்டை வைத்தாய்? கல்லைக் குடைந்து கடலோரம் முட்டை வைத்தேன். வைத்ததுவோ ஐஞ்சு முட்டை பொரித்ததுவோ நாலு குஞ்சு நாலு குஞ்சுக் கிரை தேடி நாலுமலை சுற்றி வந்தேன், மூன்று குஞ்சுக் கிரைதேடி மூவுலகம் சுற்றி வந்தேன். ஆக்காண்டி, ஆக்காண்டி எங்கெங்கே முட்டை வைத்தாய்? கல்லைக் குடைந்து கடலோரம் முட்டை வைத்தேன். குஞ்சு பசியோடு கூட்டில் கிடந்த தென்று இன்னும் இரைதேடி ஏழுலகும் சுற்றி வந்தேன். கடலை இறைத்துக் கடல் மடியை முத்தமிட்டேன். வயலை உழுது வயல் மடியை முத்தமிட்டேன். கடலிலே கண்டதெல்லாம் கைக்கு வரவில்லை. வயலிலே கண்டதெல்லாம் மடிக்கு வரவில்லை. …
-
- 10 replies
- 3.6k views
-
-
அவர்கள் சூரியனை தேடிநடக்கவில்லை சூரியனாக மாறினார்கள் இருள் மறைய தொடங்கியது என்னும் அவர்கள் மாறுகின்றார்கள் புளியமர இடுக்கினூடே நிலவு மேறகில் இருந்து இறுமாப்புடன் வேகமாக எழும்பியது நிலவுக்கு எதிர்ப்புறமாக கிழக்கு நோக்கி நடந்தார்கள் நிலவும் சில கிளிகளும் கெக்கட்டம் விட்டு சிரித்தது கேட்டது விடியலை நோக்கி நடந்தார்கள் நடுங்கிய தேகத்திலும் வன்மம் வான்வரை எட்டி நின்றது தள்ளாடி தடுமாறினார்கள் இருந்தும் பசியும் தாகமுமும் வலியும் முன்னேற சக்தி தந்தது செவிப்பறைகளில் வீறிட்ட ஓலங்கள் வழித்துணைக்கு தாலாட்டின தொடர்ந்து வந்தது நிலவு சிரித்துக்கொண்டே வந்தது ஏளனம் செய்தது எள்ளிநகையாடியது என்ன ஒரு இறுமாப்பு …
-
- 10 replies
- 1.9k views
-
-
கனடாவில் மொன்றியலில் வசிக்கும் கே.செல்வகுமார் இயற்றிய இந்த 2 பாடல்களை கேட்டு உங்கள் அபிப்பிராயங்களை சொல்லுங்கள். http://www.esnips.com/doc/e2dffaf4-f393-4d...ngam-(Srilanka) http://www.esnips.com/doc/93efb0c8-d1f3-4d...---Krishnarajah உயிரான காதல் என்ற பாட்டில் வரும் " நீ ஓம் என்று சொன்னால் நான் ஒழுங்காக படிப்பேன்" நாங்கள் ஊரில் யாருக்கோ சொன்ன ஞாபகம் வருகிறது அல்லவா ? ஒழுங்கை, புளிய மரம், பங்குக்கிணறு ஞாபகமா? பாடிய நிலுக்ஷி ஜெயவீரசிங்கம் எங்கள் பாடகி. இனிமையான குரல் வளமுள்ளவர்!
-
- 10 replies
- 2k views
-
-
வரலாறு. ---------------------------------------------------- தாயம் விளையாடிக் கடவுள் ஒருதடவை தன்னை மறந்ததனால் காலம் பெருக்கெடுத்துக் கரையுடைந்து தொடங்கியது வரல் ஆறு மறதிக் கருங்குழியில் மறைவுபெறும் மானிடமும் மற்றனைத்தும் வெறும் மடையிழந்த பாய்ச்சல்களே எறும்புகளின் புற்றானாலென்ன தேனீக்களின் கூடுகளானாலென்ன மனிதர்களின் நகரங்களானாலென்ன காலத்தின் கண்களில் இவையெல்லாம் ஒன்றே. எங்கே அந்த பபிலோனியா? எங்கே என் மொகஞ்சதாரோ ? பாலைவனங்களுக்குள் எத்தனை நகரங்கள் தூசியாய் போனது ? மசெடோனியாவின் மகாபுதல்வன் பபிலோனியாவில்மரித்தது விதியின் முரண்நகை. வீழ்த்திய நகரிலேயே வீழ்தான் இப்பேர்மனிதன். எங்கே உறங்குகிறாய் நீ அலெக்ஸாண்டர்?…
-
- 10 replies
- 2.3k views
-
-
நான் கிளை தேடும் பறவை நான் கிளை தேடும் பறவை நீ பறித்தாயென் சிறகை ஆகாயம் அழைத்தாலும் ஏதோ சொல் பயணம்.... பூபாளம் கேட்டாலும் ஏதோ சொல் ஜனனம் ஆறோடும் கரையோரம் அமர்ந்தேனே உயிரே... நீ வருவாயோ..மாட்டாயோ அலைபாய்வேன் தனியே.. நான் உனைக்காண உனைக்காண ஓடோடி வந்தேன்.. உனைக் காணாமல் காணாமல் உயிர்வாடி நின்றேன். யாரென்ன சொன்னார்கள்.. அறியேனே அன்பே.. எதற்காக பிரிந்தாய் நீ தெரியாதே கண்ணே.. மலர் பறிக்காமல் பறிக்காமல் நான் ரசித்து நின்றேன்.. மலர் பறிபோக பறிபோக நான் துடித்து நின்றேன். என் காதல் என்னோடு பிரியாது அழியும்... என்ஜீவன் உனைச்சுற்றி ஓயாது திரியும்.. உயிரோடு உயிரான நினைவோ…
-
- 10 replies
- 1.7k views
-
-
(முள்ளிவாய்க்காலில் படுகொலையான மக்களுக்கு அமெரிக்காவில் அஞ்சலி – 2010) கறுப்புத் தான் உன் உடம்பு மனசு என்னே வெள்ளை.. தமிழகம் ஆள வந்த முதல்வன் நீ எங்கப்பன் நீயென்று.. கறுப்பா.. கிழவா உன்னை நம்பிய ஈழத்து அப்பாவிகள் எண்ணங்கள் மரித்த நாள் மே 18...! "அன்னை" சோனியாவின் புன் சிரிப்பில் பொற்குவியல் கண்டவனே.. மேடைகள் தோறும் நடிகைகளை குலுங்கவிட்டு ரசிக்கும்.. கறுப்புக் கண்ணாடிக் கள்வனே.. கவிதையும் கடிதமும் உன் ஆயுதங்கள்.. அவையே "என் அக்னி ஏவுகணைகள்" என்றாய் ஈழத்தமிழரை காக்கும் "நாகாஸ்திரம்" என்றாய் ஆனால்.. அவை சாதித்ததுவோ தமிழரின் சாவிலும் உன் குடும்பத்து வாரிசுகளுக்கு நாற்காலி...! வீணனே.. குஷ்புவோடு வீணி வடித்தது போத…
-
- 10 replies
- 2k views
-
-
முற்குறிப்பு - வழக்கம் போல் ஓரளவு நீண்ட கவிதை, பொறுமை உள்ளவர்களுக்கு மட்டும்.. - இது போன்ற தொனிப்பொருளில் நான் எழுதுவது குறைவு போட்டி காரணமாக எழுத விழைந்தேன் .(ஏனென்றால் உணர்வு பற்றிய கவிதைகள் பாதிப்பது அதிகம் என உணர்ந்ததால், பற்றும பழைய கசப்புகள் ) விழிபற்றி விதையாகி... (வழங்கப்பட்ட கருப்பொருள் விழியதன் வழியினிலே) எழுதியவர்: மதுரகன் செல்வராஜா துடிக்கின்ற விரல்களிலிருந்து கண்களைப்பற்றி ஆயிரம் கவிதைகள் எழுதவேண்டும் - காதல் மயக்கத்தில் அல்ல... கண்ணீர் பற்றியெரியும் கதைகளையும் வற்றிப்போன விழிகளையும் கொண்டு இன்னும் சிலிர்க்கின்ற மயிர்களும் புடைக்கின்ற நரம்புகளும் கொஞ்சம் மீதமிருப்பதை எதிரிக்குப்புலப்படுத்த வலிக்கின்ற இதயங்களுடன…
-
- 10 replies
- 1.8k views
-
-
சாம்பல் மேட்டில் போட்ட .. பூசணி விதை முளைத்து ... கொடிவிட்டு அடர்த்து பரந்து.. நாலு திக்கும் அகல விரிந்து .. தனக்கென ஒரு ராஜ்ஜியம் இட்டு .. பச்சை பசேலென கண்குளிர இருந்த்தது .. அதில் பூத்த பூக்களில் காய்யாகி வந்த .. ஒரு பிஞ்ச்சு மண்ணுக்கு தன்னை கொடுக்க .. மிகுதி இரண்டு எவனோ களவாடி போக .. தேடிய தோட்டக்காரி கிடைக்காது ஏங்க.. கூட இருந்த இளம் பிஞ்ச்சும் சேர்த்து போக .. பார்த்து இருந்த திருடர் தாம் பிடிபடுவம் .... என்னும் பயத்தில் சூழ்ச்சி செய்தனர் ... காணியும் தோட்டமும் உன்னது இல்லை .. அதில் பூசணி கொடியே இருக்க வில்லை .. என்று புரளி கிளப்பி பொய்யர் ஆக்கி .. கொடியை மண்ணுடன் பிஞ்ச்சுடன் சேர்த்து .. பிடிங்கி ஒளித்து வைக்கிறார்கள் அவர்கள் .. அவர்களுக்கு தெரியாது …
-
- 10 replies
- 1.4k views
-
-
அந்த நாள் வராதோ?? உற்சாகமூட்டும் காலைப் பொழுதினிலே வீசும் தென்றல் காற்றினிலே பச்சைப் பசுமையான வயலினிலே, ஆடி அசையும் நெற் கதிர்களையும், பெண்கள் வைக்கோல் சுமப்பதையும் ஆண்கள் மூட்டை தூக்குவதையும் விவசாயி ஆவைச் செல்லமாக தட்டுகையில் அவற்றின் கால்கள் சேற்றிலே[/ப்] பதிவதையும் மெய் மறந்து கண் குளிரப் பார்த்த அந்த நாள் இனி எப்போது வருமோ?
-
- 10 replies
- 2k views
-
-
திசைகள் புணர்ந்த இடத்திலிருந்து திரும்பத்தொடங்குகிறேன். நான் நீ இனி முத்தமிட்டுக்கொள்ளலாம். முன்னைய முத்தத்தின் நினைவுகள் கூடாதவகையில் முத்தமிடு. இனியொருபோதும் நிகழமுடியாத சந்திப்பின் இறுதி முத்தமென்று நினைவில்கொள் முத்தமிடு. சாம இரவுகளில் வெற்றுத்திடல்களில் சுடரும் ஒளியிறக்கி முத்தமிடும் மின்மினிகளைப் பார். பேரண்டத்தின் மூர்க்கம் கொண்ட மூலையில் இருந்து எடுத்துவை முத்தத்தை. இதழ் ஊறும் காமம் தீண்டி உயிர்க்கும் விரல்கள் இறந்துபோன காலமொன்றினை கடந்துவரட்டும். மேனிகுழல் வாய்முத்தம் இசைக்கின்றன துவாரங்கள் கனப்பொழுதொன்றில் வித்துறை உடைந்து நிலம் கிழித்து எழுகிறது முளையம், அன்பு. ஒற்றைப் பார்வைக்கும் மற்றைச்சொல்லுக்கும் ஒத்திவைக்கும் …
-
- 10 replies
- 1.8k views
-
-
சிதைக்கப்பட்ட சித்திரங்கள் கவிதை - இளங்கவி அழகான இந்தச் சித்திரத்தை அசிங்கமாய் சிதைத்தது யார் ?; தமிழர் இனக்கொலையின் அலையடிப்பில் நம் குழந்தையொன்றின் சிதறலை பார்....! ஏனென்று தெரியாமல் இறக்கும் நம் செல்வங்கள்..... அவர் இறக்கவில்லை விதைக்கப்பட்ட ஈழத்து நெருஞ்சி முட்கள்.... எதிரியின் கால்படும் இடமெல்லாம் கண்டபடி குத்தி நிற்கும்.... அவன் வாழ்வின் நின்மதியை என் நாளும் கெடுத்து நிற்கும்...... இளங்கவி
-
- 10 replies
- 2.2k views
-
-
1 நினைவை விட்டழியா நெருப்பு நாட்கள் இனவெறித்தீ பரவி எமை அழித்த-அந்த நெருப்பு நாட்கள்-எம் இதயம் சுமக்கும் எரிதணல்கள். நீறாகிய எம் உறவுகள் நினைவுகள் நாளும் நாளும் கனன்று-இன்று பெருநெருப்பாகி வியாபித்து எரிகின்றது. இரத்தப்பெருவௌ;ளத்துள் திக்கித்திணறி தத்தளித்து எங்கள் தமிழினம் தவித்த-அந்த கொடியநாட்கள்-எங்கள் நினைவைவிட்டழியா நெருப்பு நாட்கள் தமிழினத்து வேரை தகர;த்தெறிவோமென்று தறிகெட்ட மிருகங்கள் எம்மினத்து குருத்துக்களை குதறிக்கிழித்து குதுhகலித்த-அந்தநாட்கள் எங்கள் நினைவைவிட்டகலா கறுப்புநாட்கள் தமிழினத்தை தலைகுனியவைக்க தமிழ்ப்பெண்களை வன்கொடுமைக்குள்ளாக்கி குதறிக்குற்றுயிராக்கி கொடுஞ்செயல்புரிந்த அந்த கோரநாட்கள் எங்கள் வாழ்வின் இருண்டநாட்கள் பச்சிளம் குருத்துக்கள் …
-
- 10 replies
- 1.1k views
-
-
ஒரு அழகான காலைப்பொழுது !சூரியன் மலைகளில் பட்டுத் தெறித்ததில் பூமியெங்கும் பரவசம் ! மலை விட்டு இறங்கிய அருவி மெதுவே தரை தட்டி நதியானது. பார்வை பட்ட இடமெல்லாம் திரும்ப மனமின்றி பதிந்து நின்றது. நதி நிலை அருகே தனி வழி நடந்தேன். கண் முன்னே கடவுளின் உலகம் போல் கரும் கல் மலை! நிமிர்ந்து பார்க்கும் போதெல்லாம் அந்த இயற்கை கட்டிய சுவரின் பின்னே இன்னுமோர் உலகமும், மனிதர்களும் இருக்கிறார்கள் என்கிற பிரமை எழுவதை தவிர்க்க முடியவில்லை. உயர்ந்து நின்ற அந்த மலை மௌனத்தின் பரிமானம் எனக்கு உணர் த்தி நின்றது. அடிவாரத்தில் போய் அப்படியே தங்கி விடலாமா, மனம் கேட்டது..! உற்றுப் பார்த்த போதெல்லாம் என்னை வாவென்று அழைக்கிறதோ, என்ணத் தோன்றியது. ' உனக்கும் எனக்கும் அதி…
-
- 10 replies
- 11.2k views
-
-
இனிய இளகிய காலை ஒன்றில் மனவெளியில் மட்டற்று மயக்கங்கள் நீண்டு தெரியும் நெடுமரங்களோடு நட்பாய் நடக்கையில் நிமிர்வற்ற மரங்களின் உதிர்ப்பில் நிலம் முழுதும் நிறைந்து கிடக்கும் நிழல் தந்த இலைகள் நெஞ்சமதை நெகிழ்க்கின்றன உதிர்ந்த மரக்கிளைகளில் கொஞ்சலும் கொற்றலும் கூச்சலுமாய்க் கூடியிருந்த புலுனிகள் கூட்டம் கூடி ஒன்றாய் புல்லமர்ந்து கொற்றித் தின்றன எதையோ பின் கூடி எழுந்து கோலமிட்டபடி கண்ணிமை மூடித் திறக்குமுன்னே காணாமலும் போயின மீண்டும் அவை வந்து போகலாம் மிடுக்காய் அமர்ந்து மின்னலாய்ப் பறந்து மாயங்கள் செய்யலாம் காலம் மாறிக் கடும்பனி போனபின் குனிந்த மரங்கள் மீண்டும் குளிர் விரட்டி தளிர் கொள்ளலாம் நாம் மட்டும் தொலைந்த எம் இருப்பை எண்ணி தொலைவிலும் தெரியா துள…
-
- 10 replies
- 728 views
-
-
'பூக்களைப் பறிக்காதே' என்கிறது எச்சரிக்கைப் பலகை! ஆனாலும் புற்றரை யெங்கிலும் பூக்களின் சிதறல்! காற்றைக் கோபித்துக் கொள்ளாதீர் பாவம் அதற்குப் படிக்கத் தெரியாது! ----இது ஒரு ஜப்பானியக் கவிதை...... எப்போதோ படித்தது....
-
- 10 replies
- 2.5k views
-
-
மரணத்தறுவாயிலும் மறக்கோம் உங்களை.. முள்ளிவாய்க்காலோடை எல்லாம் முடிஞ்சுது - இனி முதுகு சொறியும் நிலைதான் தமிழர் நிலை என்றிருந்தோம் தம்பியர் தூண்டி விட்ட திரியில் துயருற்றிருந்த - எங்கள் மனங்களில் மத்தாப்பு பூக்கின்றது மலரும் எங்கள் தேசம் என்ற மமதையில் நிற்கின்றோம். அள்ளி அணைத்து ஆதரிக்க எங்கள் அன்னை தமிழகம் இருக்கின்றது சுற்றி வரும் பகை யுடைத்து சுதந்திரத்தை பெற்றுத்தர - திலீபனின் வழியில் பல்லாயிரம் தம்பிகள் அங்கே விழி திறந்து விடுதலைக்காய் வழி திறந்து விட்டிருக்க வார்த்தைகள் ஏதுமின்றி மகிழ்கின்றோம் கந்தகக் களஞ்சியத்துள் வீழ்ந்திட்ட சிறுபொறிபோல் - அகிலத்தை கலங்கடிக்கும் அருஞ்செயல் கண்டு மீள நாம் துளிர்க்கின்றோம் கலங்கிக் கிடந…
-
- 10 replies
- 900 views
-
-
கப்டன். மொறிஸ் [செப்டம்பர் 12, 1969 - மே 1, 1989 ] சின்னஞ்சிறு பாலகனாய்... முற்றும் அறியாத பிஞ்சாய் நான், நஞ்சு தரித்த எம் வீரரை... நட்புடனே பார்த்து நின்றேன்! கிழமைகளில் சில நாளில் இனிமையாய் அவர்களுடன், எங்கள் வீட்டில் உணவுண்டு நன்றி சொல்லிச் செல்லும் வீரர்... மறுமுறை வரும்போது ஒருவரேனும் குறைவார்... தேடுவேன்!! "மொறிஸ்" என்று சொன்னால் ஊருக்கே தெரியும்! அப்போது இந்தியனுக்கும் நன்றாய்த் தெரியும்! வல்லரசுக் கனவான்களின் கனவுகளுக்கு, அவன் விட்ட வேட்டுக்கள்தான் வேட்டுவைத்தன! ஒரு வீரனின் பெயரைக்கேட்டே அஞ்சியது இந்தியம்!! தலைவன் வழியில் நின்றவன்... தமிழருக்கு காவலன்! இந்தப் பாலகன் கவிதைக்கும் அவன்தான் நாயகன்! அவன் கருங்குழல் ஆயுதந்தனை …
-
- 10 replies
- 2.9k views
-