கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
ஒரே நிறம் ஒரே தோற்றம் சந்திப்பு.. சம்பிரதாயத்துக்கு வணக்கம் கூட இல்லை கேள்வி மட்டும் முந்திக் கொள்கிறது.. எந்த ஊர் ஊரில எவடம் விசா இருக்கோ.. பதிலாய் ஊர் பெயர் மெளனம்.. ஊரில் எவடம் அதுவும் மெளனம்... நீண்ட மெளனத்திலும் தொடரும் கேள்விக்கு முடிவு வேணாமோ..?! விசா மாணவன்..!! அட நீர் ஸ்ருடென்ரே... வார்த்தையில் நக்கல்..!! அப்ப நீர் உதுக்கு சரிவரமாட்டீர்... சிந்தனையிலும் அது தெறிக்கிறது. பேச்சு நீள்கிறது.. போடர் ஏஜென்சி பிடிக்கிறது அனுப்பிறது எல்லாம்.... களவாய் இருக்கிற ஸ்ருடன்ராம் கிரிமினல்களாம்.. மெளனம் பேசியது அப்ப நீங்கள்.. நான் அசைலம்.. விசா எடுத்தோ போடர் தாண்டினனீங்கள்... இல்ல …
-
- 15 replies
- 1.9k views
-
-
எத்தைகைய ஒழுங்குமற்ற எனது சொற்றொடர்களை நீங்கள் கவிதை எனக் கொள்க. பின் நவீனத்துவம் எனக் கொண்டாலும் நலமே..!! சாமத்தில் வீடுசேர்ந்து வைகறையில் தலைசாய்ந்து நண்பகலில் கண்விழித்து - தாமதமுணர்ந்து தவித்து அரக்கபரக்க அங்கம் கழுவி மடித்துவைத்த உடுப்பணிந்து அழுக்கேறிய இருசக்கரத்திலமர்ந்து சாலையோர பெட்டிக்கடை தேடி சிகரெட்டுடையும் சிறுசமோசாவையும் சிற்றுண்டியாக்கி சிக்னலில் சிக்ககூடாதென சிரம்தாழ்த்தி சிவன் தொழுது அண்ணாசாலை நோக்கி வாகனம் பாய வழியில் குறுக்கிடும் வழிப்போக்கர்களை வைது வெம்மையால் வியர்வை வழிய - ஓடோடி அலுவலகத்தின் வாசல் கதவை திறக்க சில்லெனப் பாயும் குளிர்காற்று !!
-
- 6 replies
- 720 views
-
-
இப்ப போகலாமென மனம் அடித்துக் கொள்கிறது. 83இன் பின்னர் மறந்து போயிருந்தவையெல்லாம் நினைவிற்குள் மீண்டன. கறுப்பு வெள்ளைப் போட்டோ ஆல்பம், புத்தகக் கவருக்குள் ஒளித்து வைத்த காதல் கடிதங்கள், திண்ணைச் சுவரில் எண்ணெய் பிசுக்காய் அப்பியிருக்கும் ஆச்சியின் அடையாளம். பின்முற்றம் கக்கூஸ் கிணற்றடி இத்தனை காலமாய் மறந்து போயிருந்த அனைத்தையும் கூட்டி நினைவிற்குள் மீட்க புகாராய் எதுவும் ஒட்டமாட்டேன் என்கிறது. என் மண் என் நாடு என் மக்கள் படபடக்கின்றது மனம் தங்குவதற்கு வசதியான இடம் சப்ப “சுவிங்கம்” சாப்பாட்டு ஒழுங்கும் போக முன்பே செய்ய வேண்டும். இல்லாதவர்களுக்குக் குடுக்க கொஞ்ச பழைய உடுப்பு சொக்லேட்டுப் பெட்டிகள், …
-
- 4 replies
- 1.5k views
-
-
வட்ட நிலவே முகமெனச் சொல்மின் மதி மாதம் தேய்ந்திங்கு வளரும் பிறை காண் அதுபோலவள் வதனம் ஆவது நிதம் கண் கொள்வதற்கு நானிலனே ஒடியுமிடை தனைக்கொடி யென்று கூறிடினும் மழைகாணாப் பயிரினம் கருகி நிலம் வீழும் அதனால் அதுவுமவளிடைக்கு உவமையிங்கிலையே செவ்விதழ்ழிரண்டிற்கும் ரோஜா மலரதனைச் சொல்லொப்பி நிற்கேன் அது சூறாவளிக் காற்றில் சிக்கும் உயிரிழந்துதிர்ந்தும் போகும் அவள் வெண் பல்லுக்குவமை சொல்ல முத்துக்குமிங்கே திருடர் பயம் அவளருகில் நானிக்கும் ஆயுள் நிறைந்து வர தினந் துதிப்பேன் கருங்கூந்தல் கண்ட மனம் கார்முகிலை நினைப்பதுண்டால் கதிரொளியில் வெந்ததுவிண்ணேறும் கலைந்ததுபார் காற்றுடனே கோதையவள் கருவிழிக்கிங்கே கயல்மீன் கண்டுவமை சொல்ல கறி…
-
- 9 replies
- 1.4k views
-
-
[size=5]எந்தன் வாழ்வு உங்கள் கையில்…[/size] முடியாட்சி அதிகாரதில் முடங்கிய நான் குடியாட்சிக் காலத்தில் குதூகலமடைந்தேன் ஆதிக்க வெறியர் அதிகாரம் ஓங்க ஆளுமையிழந்து அவதிப்பட்டேன். இலங்கைக்கு வந்த அன்னியர் பிடிக்க இழுபட்டுத் தவித்தேன் பல காலம் இனத்துவேசிகளிடம் அவர் விட்டுச் செல்ல இன்னல்கள் பட்டேன் சில காலம் நாடுகள் தோறும் புரட்சிகள் ஓங்க நானும் அங்கே மறுபிறவி எடுத்தேன் விடுதலை என்று நாமம் சூட்டி விருப்புடன் என்னை வளர்த்தனர் மக்கள். சுயநலம் காத்து அரசியல் பேசியோர் சுதந்திரமென்று கோசமிட்டார்கள் தமிழீழம் என்று பெயரை வைத்து தரணியிலே அவர்தம் புகழ் சேர்த்தார்கள். உணர்வுள்ள தொண்டர்கள் ஒருசிலர் சேர்ந்து உணர்ச்சியுடன் என்னைத் தத்தெடு…
-
- 1 reply
- 538 views
-
-
எந்தன்குரல் கேட்கிறதா? அவனியிலே வித்தகனாய் அறிவுடனே நான்வாழ அனுதினமும் கனவுகண்ட அன்பான அம்மாக்கு என்னருகே இருக்கையிலே உன்னருமை தெரியவில்லை அருமையினை உணர்கையிலே அருகினிலே நீயில்லை மெழுகுவாத்தியாய் உருகி வெளிச்சத்தைத் தந்தவளே வெளிச்சத்தின் அருமையினை இருட்டில்தான் உணர்கின்றேன் உன்பேனா பிரசவித்த உரைகளைநான் மேடையேற்றி பேச்சாளன் ஆகியதை பெருமையுடன் நினைக்கின்றேன் பரீட்சைக்கு முதல்நாளும் படுக்கையிலே விழுந்திடுவேன் என்னருகே வந்திருந்து எனக்காக நீபடித்தாய் என்பாடம் தனைப்படித்து எனைஉயர்த்த முயன்றவளே உன்பாசம்தனை எந்த உலகத்தில் காண்பேனோ சிந்தையிலே எந்நாளும் எந்தனையே தாங்கியதால் உந்தனுக்கு எப்போதும் நிம்மதிய…
-
- 37 replies
- 5.1k views
-
-
அக்காங்களா ! அண்ணனுங்களா ! இது என்னோட ரெண்ணாவது கவிதைங்க . உங்க மாற்றரில நான் கவிதை பாடுறது றைட்டானு எனக்கு கொன்பியூஸ்சுங்க . பட் என்னோட மெசேஜ் எப்பிடீன்னு , கவிதை களத்தில இருக்கிற என்னைய விட பெரீய ஆளுங்க எல்லாம் காமன்ற் தந்தீங்கன்னா , நான் என்னைய கறெக்ட் பண்ண ஹெல்ப்பா இருக்குங்க :) . ஓக்கேயா ? சொப்னா ஜூட்டடி :lol: :D . முறங்கொண்டே புலியை விரட்டிய தமிழிச்சி வயற்றில் பிந்தவர்களே அழலாமா??? துடையுங்கள் உங்கள் விழிநீரை ....... யார் சொன்னார்கள் நான் இறந்தேன் என்று?? துடைத்திடுவீர் உங்கள் விழிநீரை ........... காற்றோடு காற்றாய் நான் கலந்தாலும், உங்கள் நாடிநரம்பெல்லாம் பாடுகின்றேன் போர்பரணி.... என்றுமே எமக்கில்லை தலைக்குனிவு, மனப்பால் இருத்திடுவீ…
-
- 4 replies
- 1k views
-
-
எனக்காக ஒரு பாடல் தாய்மணணே நீ பாடு எனக்காக ஒரு பாடல்-என் தாய்போல நீ பாடு எனக்காக ஒரு பாடல்-உன் சேய்போல நீ தேடு உனக்காக நான் வாடல்-இன்னும் வாழாத வாழ்வோடு உனக்காக நான் வாடல் தாய்மண்ணைப் பிரிந்தாலும் தலைமுடியே உதிர்ந்தாலும் தாயக நினைவோடு... தளராமல் நான் இருப்பேன் அதற்காக நீ பாடு எனக்காக ஒரு பாடல் பிடிக்காத பிழைப்போடும் பெரும் பாடு பலபட்டும் உயிர்க் காற்றை உறையவிட்டு உனக்காக நான் உழைப்பேன் அதற்காக நீ பாடு எனக்காக ஒரு பாடல் உயிரை உயர்வாக நினைத்தாலும் உடலை கூடாகச் சுமந்தாலும் உற்றார்கள் உன்னை மறந்தாலும் என் உணர்வுதனை உருக்கிடுவேன் அதற்காக நீ பாடு எனக்காக ஒரு பாடல் அன்னிய வனவாச அவலத்தோடும் அன்னை மண் உன் நினை…
-
- 1 reply
- 1.1k views
-
-
எனக்காக தருவாயா? உன்னிடம் விரல்கள் கேட்கிறேன் என் நிலைமையை கவியாக வடிக்க உன்னிடம் வார்த்தைகள் கேட்கிறேன் என் கவிதையை எடுத்துச் சொல்ல! உன் உயிரைக் கேட்கிறேன் என் உடலை வளர்த்துக் கொள்ள! உன் அன்பினைக் கேட்கிறேன் நான் உயிர் வாழ!..
-
- 6 replies
- 1.6k views
-
-
இறந்தால் சொர்க்கம் எப்படி இருக்கும் என்பதை வாழும்போது தந்து கொண்டிருப்பவள் நீ * யார் சொன்னது கண்பட்டால் வாழமுடியாது என்று என்னவள் கண் பட்டதால்தானே வாழ்கிறது என் கவிதைகள் * உன் மூக்குத்தி மின்னுவதில் தெரிகிறது வானவில்லின் அழகு * உன் பாதச்சுவடெங்கும் தேங்கிய மழை நீரில் உன் முகம் காட்டுகிறது நிலா * வாடாத உன் புன்னகை கண்டு பொறாமைப்படுகிறது பூக்கள் எல்லாம் * உன் வருடலுக்காய் ஏங்குகிறது என் நரைமுடிகள் -யாழ்_அகத்தியன்
-
- 5 replies
- 1.1k views
-
-
உன்னைப் பற்றி எழுதியே கவிதையாகி விடுகிறது என் கிறுக்கல்கள் ஒவ்வொன்றும் * என் முதல் கவியை நினைக்கும்போதெல்லாம் நான் மறப்பதில்லை உன் முதல் முத்ததை * என்னை கிறுக்கனாக்கிக் கொண்டிருக்கிறது உன்னை பார்த்த என் கவிதைகள் * நீ மிக அழகானவள் என்பதற்கு உன் மேல் பொறாமைப்படும் என் கிறுக்கல் ஒன்று போதாதா * எனக்கான உன்னை எப்படியாவது மிஞ்ச வேண்டும் என்பதே என் கவியின் தவம் -யாழ்_அகத்தியன்
-
- 0 replies
- 577 views
-
-
இது எனக்கான பாடல். எனக்கான இந்த பாடல் உங்களுக்கான அடையாளங்களை சுமந்திருக்கலாம் ......... ஆனாலும் -இது எனக்கான பாடலேதான். தரவையிலும் தரிசுநிலத்திலும் பாடிக்கொண்டிருக்கும் ஒற்றைப்பறவையின் பாடலொன்றை ஆழ்ந்து கேட்டிருந்தால், ஆளரவமற்று வெறுமையோடு அடங்கிக்கிடக்கும் பெருவீட்டில் அமைதியோடு முடங்கிக்கிடக்கும் நாயொன்றின் விழிகளை கூர்ந்து பார்த்திருந்தால், கனிநிறை மரத்தில் கிளைதாவி குரலெடுக்கும் அணிலொன்றின் தவிப்பின் காரணத்தை ஒருநாளாவது தேடியிருப்பின், எனக்கான இந்தபாடலின் நியமம் புரிபடக்கூடும். இல்லையேல், ஓசைப்பிணைப்புக்களாலும் வார்த்தைச்சிக்கல்களாலும் உணர்த்தப்படப்போவது எதுவென்று புரியப்போவதில்லை உங்களுக்கு எனது ப…
-
- 6 replies
- 729 views
-
-
மறக்க முடியவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை... காற்றிலும் கண்ணீரிலும் தேடுகிறேன் உன்னை உன் நினைவுகள் கொல்கின்றன... உன்னுடன் கழித்த அந்த நாட்கள் நகைக்கின்றன மறக்க மறுகிறது மனம் உறங்க மறுக்கிறது விழிகள் சிரிப்பென்பது என்னவென்றே தெரியாமல் போய்விட்டது... இப்போதெல்லாம் என் இரவுகள் கனவுகளில் அல்ல கண்ணீரில் நிறைகின்றன... நினைத்த போதெல்லாம் வந்தாய் அன்று நினைத்துக்கொண்டே இருக்கிறேன் என்றாவது ஒரு நாள் வருவாய் என்று நிச்சயம் நீ வருவாய் என் இதயம் கலங்குவது தாங்காமால் நீ வருவாய் எல்லா நிராசைகள் போலவே இதுவும் ஒரு நிராசை இருந்தும் நினைத்திருபேன் நீ வருவாய் என இவையனைத்தும் நடக்காவிடின் நான் இறைவனிடம்…
-
- 16 replies
- 2.4k views
-
-
முன்னழகு முந்திவர பின்னழகு அசைந்து வர என்னருகே வந்தவளே காதல் கனிமொழி தந்தவளே எங்கையடி சென்றாய் நீ என்னை விட்டு? அசைந்துவரும் உன் இடையதிலே கட்டிவிட்டேன் என் மனமதையே மாயமாய் சென்று மறைந்தனையே நீ மங்கை தானா மறுமொழி கூறடியே தங்கம் என மின்னும் உடலோடு சொர்க்கம் எனச் சொக்கும் மன்மதக் கணையோடு அன்னம் என எழிலுறும் நடையோடு மொத்தம் இதுவென நித்தம் பருகிட கருவண்டு நானென ரோஜா நீயென - என் அர்ப்பணம் இதுவென தந்தனை நின் உடலினை பசியாற பணி செய்யும் பாவை நீயென மகிழ்ந்தனன் நான்... இதழதில் இதழ் வைத்து இன்பரசம் அருந்துகையில் மனமதில் கள்ளம் வைத்து நடித்தனையே நீயும் பாவி கொடும்பாவி என்னாவி துடி துடிக்க வைத்த மாபாவி என்னவாகி நான் போனேன்... …
-
- 6 replies
- 1.8k views
-
-
எனக்கு மறுக்கப்பட்ட சுதந்திரம்..... கவிதை - இளங்கவி...... பிறந்ததும் இருளில் சிறிதாய் வளர்ந்ததும் இருளில் கொஞ்சம் வாழ்ந்ததும் இருளில் அது அடிமை வாழ்வெனும் சிறையில்..... சின்னஞ்சிறு வயதினிலே அண்ணாந்து பார்த்திடுவேன் அழகான விமானமல்ல எமை அழிக்கவரும் விமானத்தை..... அனைவரும் பதுங்கு குளி நான் மட்டும் அதன்வெளியில் அது நான்மட்டும் அனுபவித்த சிறிதாய் நடமாடும் சுகந்திரம்.... தென்னை ஓலைமட்டை வெட்டி தெருக்களிலே பந்துகொண்டு துடுப்பாட்டம் ஆடிடுவேன் சந்தோசத்தில் மனமகிழ்வேன் ஆமியின் கெலி வருவான் கிட்டவந்து சுட்டுடுவான் ஏனென்று தெரியாது; உயிர்காக்க வீதியிலே படுத்திடுவேன் விளையாட்டு ஒத்திவைப்பு என் ரன்களெல்லாம் வீனடிப்பு; அது என…
-
- 6 replies
- 1.2k views
-
-
என்னை நம்பவைத்து என் கழுத்து நரம்புகளை நறநற வென அறுக்கும் உன்னை எனக்கு பிடிக்கும். எதிர்பார்த்து காத்திருந்த என் கண்களை கூரிய முனையால் குத்தியிழுத்தெடுக்கும் உன்னை எனக்கு பிடிக்கும். நா நுனியில் நட்பென்று பேசி நீ நிலைநாட்டும் நயவஞ்சகம் எனக்கு பிடிக்கும். கனிவாய் நீ பேசி கன்னத்தில் தடவி கண்களால் சைகை செய்து என் கணங்களை நீ எண்ணிக் கொண்டிருப்து பிடிக்கும் உன் வலையில் நான் வீழ்ந்து விட்டதை உணர்ந்தும் உண்ணாமல் உறங்குவது போல் இரசிப்பது பிடிக்கும் உன்குலமே அழிந்தாலும் உன் காலம் கனிந்து வரும்வரை உள்ளுக்குள் நகைத்தபடி என்னை போட எத்தனிக்கும் உன் குணம் பிடிக்கும் என் முதுகை தடவியபடியே எந்த இடத்தில் குத்தலாமென சர…
-
- 9 replies
- 1.1k views
-
-
[size=5][size=4] இனம் தின்னும் ராஜபக்சே................. [/size][/size] [size=4]சொந்த நாய்களுக்குச் சொத்தெழுதி வைக்கும் தேசங்களே! ஓர் இனமே நிலமிழந்து நிற்கிறதே நிலம் மீட்டுத் தாருங்கள் பூனையொன்று காய்ச்சல் கண்டால் மெர்சிடீஸ் கார் ஏற்றி மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே! ஈழத்து உப்பங்கழியில் மரணத்தை தொட்டு மனித குலம் நிற்கிறதே! மனம் இரங்கி வாருங்கள்! வற்றிய குளத்தில் செத்துக் கிடக்கும் வாளை மீனைப்போல் உமிழ்நீர் வற்றிய வாயில் ஒட்டிக்கிடக்கும் உள்நோக்கோடு ரொட்டி ரொட்டியென்று கைநீட்டிடும் சிறுவர்க்குக் கைகொடுக்க வாருங்கள்! தமிழச்சிகளின் மானக்குழிகளில் துப்பாக்கி ஊன்றித் துளைக்கும் சிங்கள வெறிக…
-
- 21 replies
- 9.9k views
-
-
எனக்குமொரு ஆசை --------------------------- தீப்பற்றி உரசிப் போகும் - உன் ஞாபகத் தீண்டல்கள் தீப்பிழம்பாய் எரியும் என் இதயத்தில் - சிறு ஆறுதல் நீரை ஊற்றும் அடிவானத்துக்கும் அப்பாலும் காணவில்லை -உன் இதயத்தின் ஆழம் அருகினில் இருக்கின்றாய் என்பதன்றி -வேறு புரிதல் எதுவும் இல்லை கண்களின் சிமிட்டலில் - என்ன மர்மத்தை வைத்திருக்கிறாய் -என் காதல் அங்கு ஒட்டிக்கொண்டிருக்கிறதே அங்கத்தின் அசைவுகளில் அடைகாத்திருப்பதைப்போல ஒவ்வொரு முறையும் முயற்சிக்கிறேன் உனை விட்டு வெகுதூரம் விலகிப்போக தளும்பி வழியும் மதுக்குவளைபோல -என் இதயமும் உனை இறுக்கிக்கொள்கிறதே சொல்லிவிடு -உன்னைக் காதலிகிறேன் என்று சொல்லிவிடு அறுத்துப் போட்…
-
- 8 replies
- 1.6k views
-
-
எனக்கும் ஆசைகள் கோடி பூவே...! சத்தியமே செத்துவிட்ட பார் இது பூவே...! நித்தமும் நீ தேடுவது என்ன இங்கு உத்தமர்கள் ஆயிரம் நாவளவில் பூவே..! உனக்கு இது புதியதன்றே வித்தகர்கள் பலர் வியந்திடும் பூவே...! குந்தகம் மனதிற்குள் குழிபறிக்க ஆசை எத்தனை மனிதர்கள் பூவே...! இன்றும் எம் அருகினிலே விந்தை அது விந்தை பூவே...! எந்தன் வாழ்க்கையது அவருடனே நன்றிகள் ஆயிரம் பூவே...! கபடம் மறந்த உன் வாசனை அழகிற்கே மனதில் ஒலிக்கும் கவியோசை பூவே...! உந்தன் வாசமுடன் கலந்து இங்கு எனக்கும் ஆசைகள் கோடி பூவே...! உனைப்போல் துன்பம் மறந்திருக்க எழுதுவது இதயநிலா.. "உள்ளங்களே உங்கள் கருத்துக்கள் அறிய ஆவல்…
-
- 5 replies
- 1.3k views
-
-
எனக்கும் கவிதை எழுத ஆசை இலக்கியம் எதுவும் கற்கவில்லை இலக்கணம் எதுவும் அறிந்ததில்லை மொழியின் வகைகள் புரிந்ததில்லை ஆனாலும் எனக்கு கவிதை எழுத ஆசை மரபுக் கவியின் இலக்கணமோ புதுக்கவியின் வரையறையோ எதுவும் அறியா பாமரன் நான் ஆனாலும் எனக்கு கவிதை எழுத ஆசை தமிழ் மொழியில் உள்ள அணி அறியேன் தொல்காப்பியம் குறும் கூறும் யாப்பறியேன் பழம் கவிநூல் எதுவும் கற்றறியேன் ஆனாலும் எனக்கு கவிதை எழுத ஆசை காப்பிய நூல்களை கண்டதில்லை பாரதி பாடல் கேட்டதில்லை உருத்திரமூர்த்தியின் கவி ஒன்றும் படித்ததில்லை ஆனாலும் எனக்கு கவிதை எழுத ஆசை
-
- 11 replies
- 2.6k views
-
-
எனக்கும் கவிதை எழுத ஆசையாய்க்கிடக்கு. ஆராவது உதவி செய்வியளோ? அதுக்காக மண்டையுக்கை களிமண் உள்ளதெல்லாம் கவிதை எழுத ஆசைப்படுதுகள் எண்டு புறுபுறுக்காமல்............ எப்பிடி ஆரம்பிக்கோணும்?வசன நடையள் எழுத்துநடையளை ஒருக்கால் சொல்லித்தருவியளே?
-
- 54 replies
- 5.7k views
-
-
நமக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் வேண்டாம் நமக்குள் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்வோம் அப்படியென்றாலாவது சமாதான மீறல் புரிகிறாயா என்று பாப்பம் நான் குடிக்கவேயில்ல இருந்தபோதும் குடிகாரனாய் நடிக்கிறேன் உன்னை பேசவைக்க வேண்டுமே என்ன தவம் செய்ததோ என் வார்த்தைகள் உனக்காய் கவி எழுதுகையில் மெய் எழுதுக்களும் உயிர் பெற்று விடுகின்றது மழை விட்டது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் இருந்தும் என் குடைக்குள் இன்னும் நீ கோவம் வரும் போது உன்னை நினைக்க சொன்னாய் வராத போதும் உன்னை நினைத்தேன் இப்ப என்னை நினைப்பாயோ யாழ்_அகத்தியன்
-
- 5 replies
- 1.5k views
-
-
எனக்குள் ஒருத்தி அரபி மூலம்: நிசார் கப்பானி தமிழில்: அ. ஜாகிர் ஹுசைன் எனது கோப்பையை வாசிப்பவர்கள் நீதான் என் காதலி என்பதைப் புரிந்துகொள்வார்கள் எனது கைரேகையைப் படிப்பவர்கள் உனது பெயரின் நான்கு எழுத்துக்களையும் எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள் காதலியின் வாசனையைத் தவிர எல்லாவற்றையும் நாம் பொய்யாக்கிவிடலாம் நமக்குள் நடமாடும் காதலியின் அசைவுகளைத் தவிர எல்லாவற்றையும் நாம் மறைத்துவிடலாம் உன் காதலியின் பெண்மையைத் தவிர எல்லாவற்றையும் நீ விவாதப் பொருளாக ஆக்கலாம் காதலியே! உன்னை நான் எங்கே மறைத்துவைப்பேன்? நாம் இருவரும்…
-
- 0 replies
- 1.7k views
-
-
எனக்குள் ஒருவன் இருக்கின்றான் எனக்குள் ஒருவன் இருக்கின்றான் அதிகமாய் அவன்தான் என்னை ஆள்கின்றான் அதிக தடவை அவனை ஆள நான் நினைத்ததுண்டு அது நினைப்போடே போன சம்பவங்கள் நிறையவுண்டு அவன் சொற்கேட்டு ஆடிய போதெல்லாம் - இந்த அவனியே என் காலடியில் அடைக்கலம் போல் தோன்றும் அகங்காரம் நெஞ்சமெல்லாம் குடி கொள்ளும் அவனை நான் எதிர்த்து ஆள முனைந்தபோது அவனியில் புகழாலே ஓங்கியதுண்டு - என் ஆழ் மனமும் ஆண்டவன் குடியிருக்கும் ஆலயம் போல் அமைதியானதுண்டு. 01.06.2004 http://inuvaijurmayuran.blogspot.ch/2013/12/blog-post.html
-
- 0 replies
- 584 views
-
-
இந்த காதல் மழை 50 துளிகளாய் விழப்போகிறது ஒவ்வொரும் தனிரகம் நீ சூரிய உதய நேரம் .... பிறந்திருக்கிறாய் .... உன்னை காணும் .... போதெலாம் சூரியனை .... கண்ட தாமரைபோல் .... என் .... இதயத்துக்குள்ளும் .... மலர்வு ஏற்படுகிறது ....!!! ^ எனக்குள் காதல் மழை தூறல் 01
-
- 18 replies
- 1.3k views
-