Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நமக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் வேண்டாம் நமக்குள் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்வோம் அப்படியென்றாலாவது சமாதான மீறல் புரிகிறாயா என்று பாப்பம் நான் குடிக்கவேயில்ல இருந்தபோதும் குடிகாரனாய் நடிக்கிறேன் உன்னை பேசவைக்க வேண்டுமே என்ன தவம் செய்ததோ என் வார்த்தைகள் உனக்காய் கவி எழுதுகையில் மெய் எழுதுக்களும் உயிர் பெற்று விடுகின்றது மழை விட்டது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் இருந்தும் என் குடைக்குள் இன்னும் நீ கோவம் வரும் போது உன்னை நினைக்க சொன்னாய் வராத போதும் உன்னை நினைத்தேன் இப்ப என்னை நினைப்பாயோ -யாழ்_அகத்தியன்

  2. நமக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் வேண்டாம் நமக்குள் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்வோம் அப்படியென்றாலாவது சமாதான மீறல் புரிகிறாயா என்று பாப்பம் நான் குடிக்கவேயில்ல இருந்தபோதும் குடிகாரனாய் நடிக்கிறேன் உன்னை பேசவைக்க வேண்டுமே என்ன தவம் செய்ததோ என் வார்த்தைகள் உனக்காய் கவி எழுதுகையில் மெய் எழுதுக்களும் உயிர் பெற்று விடுகின்றது மழை விட்டது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் இருந்தும் என் குடைக்குள் இன்னும் நீ கோவம் வரும் போது உன்னை நினைக்க சொன்னாய் வராத போதும் உன்னை நினைத்தேன் இப்ப என்னை நினைப்பாயோ -யாழ்_அகத்தியன்

  3. எனக்குள் எரியும் ஓர் நெருப்பு செந்தீயில் என் தேசம் வெந்தணலில் என் மக்கள் பந்தாட வந்தோரால் நொந்தேதான் மெய்சோர்ந்தார் வந்தோடி வந்தோர் நாம் சிந்திக்க ஏன் தயக்கம்? என் மண்ணின் மீட்புக்காய் அங்கே ஓர் பெரும் யாகம் இங்கோ நாம் களிப்போடு உல்லாசம் தரும் கோலம் சோகங்கள் எம் மண்ணில் தொடர்கின்ற இந்நேரம் போகங்கள் ஏன் இங்கு பாரங்கள் தான் அங்கு என் மண்ணின் வசந்தங்கள் எங்கோ போய் ஒளிந்ததனால் என்றுமே நிரந்தரமாய் இலையுதிர் காலங்கள் விரக்தியின் விளிம்பினிலே துடித்திடும் உயிர்க் கூட்டை விடுத்திட விரும்புகின்ற மிடிமையில் என் மக்கள் சொந்தங்கள் சுடராகத் துடிக்கின்ற பொழுதிங்கு நெஞ்சங்கள் உருகாமல் நிலைக்கின்ற நிலைகண்டு என்நெஞ்சி…

  4. எனக்கொரு அம்மா இருக்கிறாள். பத்து மாதம் சுமந்து பெற்று பால் ஊட்டி சீராட்டி தாலாட்டி பள்ளிவரை அனுப்பி வைத்தாள் கல்வியோடு ,கண்டிப்பும் பரிவும் பாசமும் ஊட்டியவள் . எது கேடாலும் பெற்று தருவாள் பள்ளிக்கு பணமா? சுற்றுலாவுக்கு அனுமதியா தோழிகளோடு ஊர் சுற்றலா? கடல் கடந்து நான் வெளி நாடு வந்த போதும் என்னுடன் ...வாழும் அம்மா பள்ளிக்கு செல்ல நேரமானால் காலைச்சாபாடு ..ஊட்டி விடும் அம்மா சகோதரிகள் இருவர் ..மணமுடித்து வெளிநாட்டில் கடைக்குட்டி நானும் பல்கலைக்கல்லூரியில் மணமுடித்து நான் மறுவீடு சென்றாலும் மறக்காமல் என்னுடனே வந்து விடு...... வெள்ளைக்காரர் நாட்டில் அன்னையர் தின விழாவாம் எனக்கு தினமும் என் அன்னை தின விழா தான்

  5. எனக்கொரு தேசம் எடுத்திட வேண்டும். முடியாட்சி அதிகாரதில் முடங்கிய நான் குடியாட்சிக் காலத்தில் குதூகலமடைந்தேன் ஆதிக்க வெறியர் அதிகாரம் ஓங்க ஆளுமையிழந்து அவதிப்பட்டேன். நாடுகள் தோறும் புரட்சிகள் ஓங்க நானும் அங்கே மறுபிறவி எடுத்தேன் விடுதலை என்று நாமம் சூட்டி விருப்புடன் என்னை வளர்த்தனர் மக்கள். இலங்கைக்கு வந்த அன்னியர் பிடிக்க இழுபட்டுத் தவித்தேன் பல காலம் இனத்துவேசிகளிடம் அவர் விட்டுச் செல்ல இன்னல்கள் பட்டேன் சில காலம் சுயநலம் காத்து அரசியல் பேசியோர் சுதந்திரமென்று கோசமிட்டார்கள் தமிழீழம் என்று பெயரை வைத்து தரணியிலே அவர்தம் புகழ் சேர்த்தார். உணர்வுள்ள தொண்டர்கள் ஒருசிலர் சேர்ந்து உணர்ச்சியுடன் என்னைத் தத்தெடுத்தார்கள் த…

    • 0 replies
    • 717 views
  6. எனக்கொரு மகன் பிறப்பான்..... ------------------------- எனக்கொரு மகன் பிறப்பான் -அவன் என்னைப்போல இருக்கான்.. ஆமிக்கும் சாமிக்கும் பயந்து ஊரை விட்டுப்போகான் அடுத்தவர் காணியில் கதியால் தள்ளி நடவான்... பூனைக்கும் நாய்க்கும் சகுனம் வைத்து தொடங்கும் முயற்சியை விடமாட்டான் காதல் அறியாவிட்டாலும் காமம் எண்ணி அலையான் வீணுக்குப்போகும் பயல்களுக்காக வேலியை உயர்த்தி அடையான் சோத்துக்கு அலையும் பயல்கள் போல் சோம்பேறி மடத்தில் தங்கான் நாட்டுக்குப் பாரமாக நடு வீட்டில் அலையான் மதிப்பற்ற பயலாக மதில் மேல் குந்தான் படத்தைப் பார்த்துப் படிப்பான் பவுடர்ப் பொடிக்கு மயங்கான் உலகம் போற்றும் சயன்ஸு தெரியாவிட்டாலும் உயிர்கள் கொல்லும் …

    • 6 replies
    • 1.6k views
  7. எனக்கொரு வரமருள் பராபரமே.... புழுதி எழும் ஊரின் புண்பட்ட வீதிகளில் விழுது விட்ட ஆலமரத்தின் பழுது பட்ட திண்ணையில் தொழுது எழும் கோயிலின் அழகு மிகு தேரடியில் உழுது நாற்று நடும் ஊரின் வயல் வரப்பில் பொழுது விழும் நேரம் களித்து மகிழ்ந்து நாங்கள் கால்பந்து விளையாடும் கல்லூரித்திடலில் ஒழுகும் வழி சொன்ன பள்ளியின் வகுப்பறையில் ஆழ வேரெடுத்து அழகாய் கிளைபரப்பி நீள நெடுத்து நிற்கும் முற்றத்து மாநிழலில் வீழமாட்டேனென-திணவெடுத்து சோளக்காற்றிடையும் வாழ நிமிர்ந்து நிற்கும்-தென்னஞ் சோலை மர நிழலில் வாழ வழி பல தந்து வளமும் தந்து-எம் நீள நெடும் பரம்பரையின் வரலாறு தந்த வீரம் படுத்துறங்கும் விடுதலைத்திருநாட்டில் என் வாழும் நாட்களில்-இன…

  8. எனது ஆன்மா காணாமல் போய்விட்டது... நேற்றுவரை என்னுடன்... இருந்த ஆன்மா.. இன்று தூக்கத்தால் எழுந்து பார்த்தபோது காணாமல் போய்விட்டது... இரவில் உறங்கும்போது தொலையக்கூடிய என் ஆன்மா பார்ப்பதற்கு பின்வருமாறு இருக்கும்... அன்பானது... அறிவானது... அமைதியானது... இனிமையானது... இரக்கம் மிக்கது... குழந்தை போன்றது.. குழப்பம் விளைவிக்காதது... விளக்கங்கள் கேட்காதது... ஆன்மா கடைசியாக உடுத்தியிருந்த உடை பேரன்பில் நெய்த நிறமற்ற ஆடை... அன்பனின் ஆன்மாவை ஒன்லைனில் கண்டவர்கள் ஒப்படைக்கவேண்டிய முகவரி... கலைஞன், ஆண்டவன் சந்நிதி.... தேடிக் கண்டுபிடித்து தருபவரிற்கு குடியிருக்க இதயம் ஒன்று பரிசாகத் தரப்படும்... ஓடிவிட…

  9. எனது அறையில் எனது இரவுகளில் எல்லாம் உயிர்பித்திருக்கிறது உனது அன்பின் கிருபையால்... உன் கூந்தலின் கருந்சாந்தெடுத்து பூசிய மேற்கூரையின் இருண்ட வெளியின் தனிமை தீர்க்க உன் வெண்பற்கள் வெண்மைகொண்டு வரைந்த நட்சத்திரங்கள் போதாதென்று சமைந்தது பிறைநிலா நீ வெட்டியெறிந்த நகத்துண்டுகள் சேர்ந்து கோள்கள் சில செய்தேன் முகப்பருக்கள் அளவு கொண்டு புருவங்கள் இணைந்து வானவில் பிறந்தது சுவற்றில் கண்ணீர் பெருக்கில் சமுத்திரங்கள் கலந்தது நதிக்கு வடிவம் தராது திகைத்தேன் சுழித்தாய் உதட்டை மார்பு குவியம் மலைத் தொடரானது வேர்வையில் நனைந்த ரோமங்கள் மழைக் காடுகளாய் மாறியது நெற்றிப் பொட்டை சூரியனாய் தந்துவிட்டு போர்வையினுள் புகுந்தாய் மெல்லினம் வல்லினமாய் மிகுந்து உன் பெண்மையி…

  10. எனது உலகம்... போரில் தொலைந்த நகரத்தைச் சுற்றிலும் சிதறிக்கிடக்கும் ஓலங்களால் என் உலகத்தை வனைந்துகொண்டு கண்ணீராய் அருவிகளில் வழிந்தோடும் எம் மக்களின் துயரங்களில் மூழ்கிக்கிடக்கிறது என் ஆன்மா என் மன நிலத்தில் சுழன்றடிக்கும் துயர்க்காற்றின் அணல் உடலெங்கும் பெருநெருப்பாய் எரிக்கிறது பசியால் வாடுமெங்கள் குழந்தைகளை நினைத்து முகில் உரசும் முகடுகளில் பெருங்குரலில் காற்று மோதி இரைகிறது வயல் நிலங்கள் நீளவும் எம் இனத்தின் துயரங்களை உதிர்த்தபடி பெயர் தெரியாத பறவைகள் பிணங்களைக் கட்டி இழுத்துக்கொண்டு கழுகுகளைச் சபித்தபடி செல்கின்றன மேகங்கள் எம் மக்களின் அவலங்களைக் காவிக்கொண்டு கோபமாய் அலைகின்றன நாய்கள் ஊளையி…

  11. எனது கறுப்பு வானம் அகப்பை காம்பால் மாவு கிளறி அரிசிப் பேணியால் கொத்தி ஓலைப்பெட்டியில் அவியும் அம்மாவின் புட்டையும் பழங்கறிச்சட்டியையும் நான் ... பதம் பார்த்ததையும்... அக்காளும் தங்கச்சியும் மாத்துலைக்கை போட்டு கை வலித்த போது – விரல்களுக்கு நான் நல்லெண்ணை தடவியதையும்... ஒல்லித்தேங்காய்களை இணைத்து வாய்க்காலுக்குள் நீந்தப்பழகியபோது காற்சட்டை கழன்றதை பக்கத்துவீட்டு பார்வதி பார்த்து சிரித்ததையையும்... புத்து இடித்து கறையான் கொண்டுவந்து அப்பா வளர்த்த கோழி குஞ்சுகளை கீரியும் பிலாந்தும் சண்டை பிடித்து திண்றதையும்... வேப்பம் பூ வடகமும் காத்தோட்டியம் காய் சீவலும் - அப்பா அப்பாவுக்கு பிடிக்கும் ஆடி அமாவாசை விரதத்தையும் ... ஓடியல் கூழும் ஒற்றை…

  12. Started by Puyal,

    எனது கற்பனை மலர்ந்தது மலர்ந்தது தமிழ் ஈழம் தமிழ் மக்களின் மனதில் தனி ஈழம் முத்தென முத்தெனப் பிறந்தது அலை கத்திடும் கடலில் பிறக்கவில்லை செத்திடச் செத்திடப் பல உயிர்கள் அங்கே சினமாய்ப் பிறந்தது தமிழ் ஈழம் கொடியினில் கொடியினில் புூக்கவில்லை கொடுந்தீ என்னும் போரில் பிறந்தது தமிழ் ஈழம் துணையெனத் துணையென நாம் கண்ட பல சொந்தங்கள் எமைப் பிரிந்திடவே பலமாய்ப் பிறந்தது தமிழ் ஈழம் அரிதென அரிதெனப் பலர் சொன்னார் அதுவும் இன்று உருவாச்சு அரியணை அரியணை ஏறியது ஐ. நா சபையில் அமர்ந்திடவே துணையெனத் துணையென நாம் கண்ட துணைகள் மீண்டும் திரும்பாது துணையெனத் துணையெனத் தானிருப்பாள் என்றும் என்றும் எம் தமிழ் அன்னை. உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரை…

    • 12 replies
    • 2.6k views
  13. இவை கவிதைகளும் அல்ல, ஹைக்கூக்களும் அல்ல, எவையும் அல்ல...ஆனால் ஏதோ கணங்களில் கடந்து போன சில வரிகள் 1. ரயிலில் எனை உதைத்தது நான் இருக்கை வழங்காத கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை 2. பூச்செடி பூக்கவில்லை; தூக்கி எறியும் போது முளையில் தொங்கியது உயிர் கொண்ட புழு 3. சிவனே அர்த்தநாரீஸ்வரன்!! மறுத்து தானே என்றது மண் புழு சின்னக் குறிப்பு: மண் புழுவில் ஆண் உடலும் பெண் உடலும் சேர்ந்தே இருக்கும் 4. அன்று வைரவர் திருவிழா ! ஊரில் இருந்த நாய்களுக்கு காயடித்தனர் பக்தர்கள்

    • 13 replies
    • 3.5k views
  14. எனது தேசம் -------------- நீல விசும்பின் ஓரத்தில் உறைந்திருக்கும் நீரினாலும் குளிர்விக்கமுடியா இரணங்கள் ஒற்றைக் குருவியின் ஓலமாய் மனது விம்மித் தணிகிறது நேற்றைகளைத் தீயில் கருக்கி நாளைகளின் தடத்தினை தொலைத்து விட்ட தேசம் இன்னுமொரு பொழுதில் பசி சுமந்து துயர் சுமந்து வாழ்வதற்கான முகாந்திரமின்றி வாழ்கின்றது என்றோ வரப்போகும் ஒளிக்கீற்றுக்காய் இன்றும் நாளையும் நாட்களை எண்ணியபடி... -எல்லாள மஹாராஜா-

  15. Started by தாரணி,

    வாசித்ததில் பிடித்த கவிதை

    • 9 replies
    • 1.8k views
  16. காசு இல்லாத உலகம் வேண்டும் மாசு இல்லாத சூழல் வேண்டும் எல்லை இல்லாத தேசம் வேண்டும் கோசம் இல்லாத அரசியல் வேண்டும் ஊழல் இல்லாத அரசாங்கம் வேண்டும் நடுநிலையான நீதி வேண்டும் வேஷம் இல்லாத மேடை வேண்டும் தேசம் மதிக்கும் ஆடை வேண்டும் யுத்தம் இல்லாத மண்ணிலம் வேண்டும் இரத்தம் தோயாத செந்நிலம் வேண்டும் தமிழில் பேசும் தமிழர்கள் வேண்டும் தமிழருக்கென்று ஒரு நாடும் வேண்டும் மானம் காத்த பெண்ணினம் வேண்டும் பெண்மையைப் போற்றும் ஆணினம் வேண்டும் தன்னினம் காத்த மறவர் வேண்டும் மண்ணில் அறம்காத்த மாவீரர் வேண்டும் விலைபோகாத தலைவன் வேண்டும் தலைவணங்காத தன்மானம் வேண்டும் மறைந்தவை மீண்டும் தோன்ற வேண்டும் நல்லதைச் சொல்லும் நண்பர் வேண்டும் நல்லதை அறிந்திடும் நன்ம…

    • 25 replies
    • 2.6k views
  17. Started by Sembagan,

    எனது மண் முற்றத்து பலாக்கனிகள் முகம்மலர்ந்து வரவேற்க செம்பாட்டான் மாங்கனிகள் அசைந் தசைந்து தலையாட்ட தோடை எலுமிச்சை கிணற்றடியில் சுற்றிநிற்க தொங்கும் துலாவிற்கு முள்முருங்கை தோள்கொடுக்க வாழைகள் கூடி நின்று வம்சத்தை நினைவு சொல்ல வாசலில் தென்னைமரம் வாவென்று எனை அழைக்க மந்திகள் கூட்டமாக மாமரத்தில் விளையாட கொம்புத் தேனீக்கள் கூட்டமாய் அதைக் கலைக்க கொய்யாவும் மாதுளையும் குலுங்கிக் கூத்தாட உழுந்தும் பயறும் வயலெங்கும் படர்ந்து நிற்க நெல்மூடை வாசலிலே விருந்தினரை வரவேற்க மாலைக் கதிரொளிகள் மரத்தோப்பினில் ஊடுருவ கொத்திப் புரட்டிய கோடரி மண்வெட்டி கொல்லைப் புறத்தங்கே. தோள்சாய்த்து ஓய்வெடுக்க நானும் அமைதியாய் என் குடிலில் த…

  18. எனது மரணம்: முதலாவது அறிக்கை இப்போதெல்லாம் மரணம் பற்றிய எண்ணங்கள் அடிக்கடி வருகின்றன பல தடவை மரணத்தின் கற்பூர வாசனை (இடையில் சாணி வாசனையும் வரும்) என்னருகே வந்தும் உள்ளது மரணம் நேற்று காபி கடையில் (Starbucks) நான் ஒடு cup காபிக்காக காத்திருக்கையில் என் பக்கம் வந்து அமர்ந்திருந்தது எதுவும் பேசாமல் அதன் கண்ணின் ஓரம் நீர் துளி இருந்தது திடீரென ஒரு Right turn இல் என் car திருப்புகையில் மரணம் என் பக்கத்து seat இல் அமர்ந்திருந்தது என்னை கேள்வி கேட்குமாய் அதன் முகம் இருந்தது பின் அந்த இரவில் சரியாக நடுச் சாமத்தில் மனைவியை தேடி கைகள் போகையில் அருகே மரணம் படுத்திருந்தது இம்முறையும் ஒற்றை வார்த்தையும்…

  19. மின்னஞ்சல் பெட்டியில் மிதக்கின்றன ஓலைகள் அவலங்களாகவும் வாக்குகளிற்காகவும்..! என்னுணர்வுகளிற்கு அழக்கூட ஆசையில்லை அழுதழுது மரத்துப்போனதால்..! யாராவது ஒருவர் மனமிரங்காராவென வாக்குப்போடுகிறேன் இணையத்தளங்களை நாடி.. வருகிறார்களில்லையே!! கண்டிப்பும் எச்சரிக்கையும் வெறும் சேதிகளாகவல்லவா வருகின்றன கைகட்டிக் கொண்டு!! அவரை நம்பி இவரை நம்பி ஆறுதல் தேடலாமென்றால் ஆறுதலுக்கான அன்பளிப்புகள் வேகும் புண்ணில் பாயும் வேல்களாகின்றனவே!! மனிதாபிமான முகமூடிகளுள் முகத்தைத் தேடித்தேடியே என் மின்னஞ்சல்பெட்டியுள் நேரத்தைத் தொலைக்கிறேன்.

  20. Started by வானவில்,

    கைபிடித்து நடந்த கால்தடங்கள் என் பின்னால் வருகின்றன! ஆனால்... நான் இறுக பிடித்த கையையும் காணவில்லை.. ஊரி குத்தும் எனதூர் தெருக்களையும் காணவில்லை! காலமாகிப்போன தெருக்கள்.. ஊனமாகிப்போன உறவுகள்.. என் கண்தேடும் எனதூரின் அழகை காணமுடியவில்லை! கவிபாடும் பனைமரங்கள் தலையறுந்த முண்டங்களாக.... பேயாட்டம் ஆடும் தென்னைகள் பேச்சு மூச்சற்று உறங்குகின்றன! ஊர் அரண்மனையாக திகழ்ந்த கோவில் வௌவால்களின் இருப்பிடமாக.... மழைக்காலத்தில் கூட புல் முளைக்காத எனதூர் மைதானங்கள் பற்றைகளாக.... கோவில் தேர்முட்டியில் குடியிருக்கும் ஆட்டுக் கூட்டம் எங்கே.. மடிந்து விட்டதா.......? கோவில் மடத்தில் கச்சான் விக்கும் ஆச்சியின் குரல் எங்கே..... ஓய்ந்து …

  21. இந்தியப் படைகளின் பெண்களுக்கு எதிரான வன்முறைக் காட்சி. இதே போன்ற காட்சிகள் ஈழத்தில் வன்னியில்.. சிங்களப் படைகளினால். அவர்களின் வழிகாட்டிகள் யார் என்பதற்கு இந்தப் படம் சாட்சி... [ http://southasiaspeaks.wordpress.com/2009/11/23/hr-collective-in-india-calls-for-total-repeal-of-armed-forces-special-powers-act/ ] வானலையில் குயிலாய் ஒலித்தவள் இதய நோயாளி.. வன்னி ஆக்கிரமிப்பில் பல்லாயிரம் தோழிகளோடு பிணமாய்..! தமிழ் பெண்களை புணர்ந்திழுத்தே கொன்ற சிங்கள இன வெறிநாய்களின் தமிழ் ஒட்டுக்குழு ஓநாய்களின் கொடூரத்தின் முன்னே.. மக்களின் கண்ணீர் காய்வதற்கிடையில்.. நாலே வயது நடக்கக் கூட தெரியாத பிஞ்சு – அதை காம வெறியில் பிரிச்சு மேஞ்சு மோச்சரியில் போடுகிற ஆக…

  22. மௌனம் பேசும் வார்த்தைகள் தொலைந்து நின்ற தருணங்கள் கண்ணாடியில் மறைந்த வெட்கங்கள் கனவில் கலந்த ரகசியங்கள் உள்ளம் கேட்கும் ஓசையில் அடங்கிப் போகும் - உனக்குள் எனைத் தொலைத்த நாட்கள்!

  23. என் அக்காச்சி அன்பான பெற்றோருக்கு நிலவொத்த அழகாய் பிறந்தவள் என் அக்காச்சி . அவளின் வேண்டுதலால் ஈரைந்து வருடங்களின் பின் வந்திதுத்த் செல்லப் பயல் நான் ஈரைந்து மாதங்களில் இருந்தே என்னை சீராட்டி பால் புகட்டி தூக்கி திரிந்தவள். துள்ளித்திரியும் பருவத்தே துடுக்கடக்கி தலைசீவி பள்ளிக்கு அனுப்பி வைத்தவள். சக நட்புடன் சண்டை என்றால் கோவித்து நான் முடங்க நீதி கேட்கும் தேவதை அவள். சின்ன சின்ன தவறு செய்தால் திருத்தி விடும் தாயவள். அம்மாவும் அப்பாவும் காய் கறி தோட்டத்தில் பணி செய்ய வேளைக்கு சோறு தந்து வேண்டிய உதவி செய்து சமயத்தில் என் சல்வை தொழிலாளியும் கூட . உயர்கல்வி கற்க வேற்றிடம் செல்ல நேர்கையில் விழி நிறைந்த கண்களுடன் வழிய…

  24. என் ''சின்ரெல்லா'' சிறு தேவதையே...! கவிதை - இளங்கவி சோர்வு ...அரைத்தூக்கம்..... என் மனதில் பல கலக்கம்.... கண்ணிமைகள் தான் மூட கனிவான ஓர் குரல்.... மாமா....மாமா.. தூக்கமா? என் அரைத்தூக்கம் கலைந்து யாரது...? என பார்க்கிறேன்...! என் பக்கத்துவீட்டு குட்டிச்செல்லம்..? கையில் இரத்தக் கறைபடிந்த கரடிப் பொம்மையொன்று...? என்னடா செல்லம் ...? ஓடோடிச் சென்று அவளை அணைக்கிறேன்... ஆமி அடிச்ச செல்லில் என் அம்மா செத்திட்டா.... அப்பாவும் தான் மாமா...! நீங்கள் தந்த ''ரெடி பியர்'' ம் இரத்தத்தில் நனைஞ்சிட்டுது....! ''பெட் ரைம்'' கதைகள் சொல்லி என்னை படுக்கவைத்து ரசித்தீரிகள்.... ''சின்ரெல்லா'' கதையும் சொல்லி என்னை சிந்திக்கவும் வைத்தீர…

  25. என் அன்னை கலைப்பொழுதினிலே என் கடமை முடிக்க முன்னே சேலைத்தலைப்பை தூக்கிச்சொருகி பின்னே வேலைப்பழுவை தன் தோளில் சுமந்து மூலை முடுக்கெல்லாம் தேய்த்துக்கழுவி பாலைக்காய்ச்சி பதம் பார்த்துச்சமைத்து- பாட சாலைக்குச்செல்லும் தன் சேய்க்கு- வாழை இலையில் வதக்கிய கறியுடன் சாதம் இட்டு சாலைவரை தன் கரம்பற்றி வழியனுப்பி- பின்னே காலை விரைந்து வைத்து கடைவீதி சென்று வந்து மாலை வருமுன்னே மதியமும் உண்ணாது நூலைப்போல் இழைத்து என் முகம் காண ஓலைவேலிக்குள் ஒளிந்திருப்பாள் என் அன்னை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.