கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
தற்கொடைகள் வீண் தற்கொலைகளாக வேண்டாமே...! முத்துக்குரமன் மூட்டிய தீ எங்கும் மூசியெரிகிறது. தமிழன் செத்துக் கிடப்பதை உலகோ சத்தமின்றிச் சகிக்கிறது. பலம் கொண்ட மட்டும் பகைவன் பலியெடுக்கும் கொலையிருந்து மீளுதற்காய் புலமெங்கும் தமிழன் போர் வீச்சாய் எழுகிறான். ஈழம் பெறும் நாளை கையிலெண்ணிக் கடுங்குளிரின் விறைப்பிலும் வீதிகளில் இறங்கி நீதி கேட்கும் நிலையிலுள்ளான். பலம் வெல்லும் என்ற நிசம் புரிந்தும் நம்பிக்கையுடன் தமிழன் நெடுந்தவம் புரிகின்றான் - இக் கடுந்தவத்தின் பரிசெமக்கு காலம் தருமென்ற நினைப்போடு. தினம் வரும் செய்திகளால் - உயிர் மனம்வாடித் துவளுகின்ற துயர் உயிரைத் தின்கிறது - எனினும் தொடரான ஈர்ப்புக்கள் குறயாமல்…
-
- 5 replies
- 1.8k views
-
-
பகவான் தத்துவஞானி ஓஷோ காமத்தை துறந்தால் பரிபூரண நிலைய அடையலாம்னு சொல்லி , காமத்தில மனதை ஒடுக்கணும்னு சொல்லி தியான வகுப்புகள நடத்தி பெரிய சர்ச்சைய கிளப்பினாங்க . இப்போ இந்த லவ்வேர்ஸ் கடவுளை பாக்கிறாங்களாம் . உங்க கருத்துங்கள எழுதுங்க . அடிக்காதீங்க . ஓக்கேயா ? முதலில் அறிமுகம் கொஞ்சமாய் சினிமாவை அலசியபின் செக்ஸ் பற்றிய தடுமாற்றமான துவக்கம் மெல்ல பாதுகாப்பான உறவில் கைவசம் காண்டம் இல்லாமலும் முடியும் என்றேன் கண்களை ஊடுருவிய கண்கள் நிலைக்க ஆக்ரோஷமான காமத்தை விரும்புகிறவள் நீ என்றாய் ஒரு பறவையைப் போல் என் காமத்தை அவசரப்படுத்த முடியாது நான் பாம்பு உன்னையும் பாம்பாக பற்றிக்கொள்ளத்தான் முடியும் என்றேன் அவளின் புன…
-
- 5 replies
- 1.8k views
-
-
எரிகற்கள் விழுந்தழிந்த பூநிலத்தின், மீதியான மூத்த குடிகள் நாம்! எறிகணைகள் விழுந்த நிலத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட அகதிகள் நாம்! விட்டகுறை தொட்டகுறை முடிக்கவென... நல்லபடி விடியுமொரு நாளிலென... நம்பியிருந்தோம் நாம்! இழப்புகளும் வலிகளும் எமைத்துரத்த... ஓடியோடியே களைத்தோம் நாம்! ஒரு கையில் கைக்குழந்தை... மறுகைதோளில் அதன் தாயின் உடலென எத்தனை வலிகளை சுமந்தோம் நாம்! கால்வாசி புலமக்கள் மட்டும்... வீடு பெயர்ந்து வீதியில் போராட, நடுக்காட்டில் நாதியற்று ஒளிந்தோம் நாம்! பாதி உலகம் பகலோடு பார்த்திருக்க... பகையாலே பரிதவித்து அழிந்தோம் நாம்! மிச்சம் மீதியின்றி சிந்திய குருதியின்... செவ்வினமான மிச்சசொச்சம் ஆனோம் நாம்! சில இரவு பல பகலில்... வ…
-
- 8 replies
- 1.8k views
-
-
கடற்கரைச் சாலையோரம் அந்தி சாயும் மாலை நேரம் கடல் மகள் கலைந்த கோலம் கண்களில் காதல் ஜாலம் அலைகளின் ஆட்டம் எல்லாம் கரைகளை கரைத்து சீண்டும் கடலிடை நாரைக்கூட்டம் காத்திடும் இரைகள் தேட மணலிலே நண்டுக்குடைகள் கடலுடன் தூது பேசும் தவழ்ந்திடும் தென்றல் காற்று உடலதை வருடிச்செல்லும் கரைந்திடும் காக்கை உறைவிடம் நாடிச்செல்லும் இயல் இசைக்கவிதையாக இயற்கையைப் போற்றிப்பாடும்
-
- 11 replies
- 1.8k views
-
-
மாவீரர்கள்..........!! தமீழீழ விடிவிற்காய் நும் விடியலை துறந்து தமிழருக்காக விடியலை தேடிய உன்னதமானவர்களே! எம் உதட்டில் பூக்கும் புன்னகைமலரிற்காக உயிர்துறந்த உங்களுக்கு மலர்தூவும் நேரம் இது!! கதிரவன் ஒளிபாய்ச்ச அஞ்சும் எம் தமீழீழ மண்ணில் நஞ்சுமாலையணிந்து திக்கெட்டும் ஒளிபாய்ச்சிய துஞ்சா நெஞ்சங்களே!! பெயருக்கும், புகழிற்கும் பேராசைப்படும் இவ்வுலகில் எதையும் எதிர்பாராது பெயரதனை மறந்து தலைவனின் கரத்தை பலபடுத்த வந்தவர்களே!! உதட்டளவில் வீரத்தை உச்சரிக்கும் மனிதருள் வீரத்தை நிஜமாக்கி காட்டி மெளனமானவர்களே..!! எம் மண்ணிற்கு உயிர் தந்து உம்முயிரை மண்ணிற்கு அர்பணித்த வீரர்களே நீங்கள் வீரர்கள் அல்ல வீரபுருசர்…
-
- 7 replies
- 1.8k views
-
-
என் உயிர் எழுத்தே!! அன்பே அன்பே அன்பின் அன்பே என்பை உருக்கி நின்றால் கூட அன்பைக் காட்டும் அன்பே அன்பால் உன்பால் இணைந்தேன் அன்பே அதனால் என்னுள் உயர்ந்தேன் நானே!! ஆறுதல் தரும் ஆருயிர் நீயே ஆறாய் என்னுள் பாயும் தமிழே ஆரிருள் நீக்கிட என்னுள் வந்தாய் செல்லம்! ஆறுதல் என்றும் உன் திருமடியே! இடிகள் கூடத்தாங்கும் இதயம் பழிகள் தாங்க முடியாப்பொழுதில் இன்னிசை தந்து இன் தமிழ் தந்து இன்னல் போக்கி இன்பம் தந்து இணைத்துக்கொள்ளும் இன்னுயிரே இசைந்தே நிறைந்தேன் உந்தன் மடியே!!. ஈட்டி போல குத்தும் வார்த்தைகள் கேட்டதும் உடனே வாடிவிடுவேன்!! ஈர்த்தாய் உன்பால் இணையில்லாத் தமிழால் ஈரம் உள்ள நெஞ்சைக் கண்டேன்…ஈரேழுலுகமும் வாழ்த்தவேண்டும் ஈடில்லா உறவே உனைச் சேர்ந்திட வேண்டும…
-
- 8 replies
- 1.8k views
-
-
கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! ஏ இந்தியாவே...!எத்தனை கொடுமைகள் செய்துவிட்டாய் எங்கள் தமிழினத்திற்கு... எத்தனை வழிகளில் கெஞ்சியும் கூத்தாடியும் காலில் விழுந்தும் கதறியும் கொளுத்திக் கொண்டு செத்தும் தீர்ந்தாயிற்று... எதுவுமே காதில் விழாத உங்களுக்கு இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்... பட்டினியால் சுருண்டு மடிந்த பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து அழுது வீங்கிய கண்களோடும் அரற்றிய துக்கத்தோடும் களைந்த கூந்தலோடும் வயிரெரிந்து இதோ விடுகிறேன்.. கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! குறள் நெறியில் வளர்ந்து அறநெறியில் வாழ்ந்தவள் …
-
- 5 replies
- 1.8k views
-
-
கவிதையின் கவிதைகள் [size=5][/size] http://www.desicomme...9692/696921.gif இத்தனை சித்திரவதைகளின் பின்னரும்... நான் உயிருடன் இருக்கின்றேன்... ஆச்சரியந்தான்! நீ என்னிடம் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள் என்னிடமில்லை... அவை உன்னிடந்தான்! நீ மறந்துபோனதாய்க் காட்டிக்கொள்ளும் எம் பழைய நினைவுகளை மீட்டிப்பார்... அனைத்துக்கும் விடை கிடைக்கும்! உன்னிடமும் நான் கேட்கவேண்டியவை, நிறையவே இருக்கின்றது... அதுவரையும், என்னுயிர் பிரியாது! உண்மையான நேர்மையான பதில்கள் உன்னிடமிருந்து வரும்வரைக்கும்... என்னுயிர் போனாலும் உனைத் தொடர்வேன்...! ஒரு கெட்டவனை நல்லவனாக்கவும் ஒரு பெண்ணால் முடிகிறது! ஒரு நல்லவனை கெட்டவனாக்கவும் அதே பெண்ணால் முடிகிறதே!! இ…
-
- 7 replies
- 1.8k views
-
-
முன்னழகு முந்திவர பின்னழகு அசைந்து வர என்னருகே வந்தவளே காதல் கனிமொழி தந்தவளே எங்கையடி சென்றாய் நீ என்னை விட்டு? அசைந்துவரும் உன் இடையதிலே கட்டிவிட்டேன் என் மனமதையே மாயமாய் சென்று மறைந்தனையே நீ மங்கை தானா மறுமொழி கூறடியே தங்கம் என மின்னும் உடலோடு சொர்க்கம் எனச் சொக்கும் மன்மதக் கணையோடு அன்னம் என எழிலுறும் நடையோடு மொத்தம் இதுவென நித்தம் பருகிட கருவண்டு நானென ரோஜா நீயென - என் அர்ப்பணம் இதுவென தந்தனை நின் உடலினை பசியாற பணி செய்யும் பாவை நீயென மகிழ்ந்தனன் நான்... இதழதில் இதழ் வைத்து இன்பரசம் அருந்துகையில் மனமதில் கள்ளம் வைத்து நடித்தனையே நீயும் பாவி கொடும்பாவி என்னாவி துடி துடிக்க வைத்த மாபாவி என்னவாகி நான் போனேன்... …
-
- 6 replies
- 1.8k views
-
-
அம்மா இங்கே வா வா!! அம்மா இங்கே வா வா! Arrest Warrant தா தா! வேலூர் ஜெயிலில் போட்டு கண்ணுல தண்ணியும் காட்டு! அப்புவும் ரவியும் கூட்டு சின்ன 'சாமி'க்கும் வேட்டு குடுத்தாங்க மாமீங்க பேட்டி சாயம் போச்சுது காவி வேட்டி பெருசுங்க பொருளுங்க குட்தாங்க கூடவே போட்டாவும் புட்ச்சாங்க எதிராளிய குத்தம் சொன்னாங்க மீதிய அமுக்கினு போனாங்க போஸ்டரு நோட்டிசு அடிப்பாங்க கட்டவுடுக்கு பாலும் ஊத்துவாங்க அந்த 'ஸ்டாரோட' குஞ்சு-கல காணோங்க பாலில்ல! ஒருபுள்ள போச்சுதுங்க அபலைங்க சோகமும் பார்த்தாச்சி அனுதாபமும் எரக்கமும் பட்டாச்சி பழய துணிமணி கொடுத்தாச்சி சுனாமி சோகமும் போயாச்சி மிருனாள் சென் -ஆ! யாருங்க? ஜெயலச்சுமி செரினா தெரியுங்க ஐயோ! '…
-
- 6 replies
- 1.8k views
-
-
என்வலி ஒரு பேப்பருக்காக கோமகன் சொல்லிச் சொல்லி சொல்லால் அடித்தாயே அடியே சொல்லால் அடித்தாயே பொட்டுப் பொட்டாய் உடைந்ததுவே என் இதயம் சொட்டுச் சொட்டாய் வடிந்ததே வலியாய் ரத்தம் நீயும் நானும் கூடிய வாழ்க்கை ஒருவரை ஒருவர் உயர்த்திய வாழ்க்கை தெளிந்த ஓடைபோல் நகர்ந்த எம் வாழ்வில் கல்லை எறிந்தது யார் சொல் விழுந்த கல் தந்தது அலையை மட்டுமா எம் வாழ்வின் வேரையே ஆட்டியதை நீ அறியாயோ அடி கிளியே நீ அறியாயோ என் மூச்சிருக்கும் வரை உன் பேச்சு இருக்கும் என் இதயத்தின் ஓரத்தில் உன் பேச்சு இருக்கும் என்னதான் நீ என்னை சொல்லால் சுட்டாலும் என் இதயத்து சிம்மாசனத்தில் நீதானே நித்திய கல்யாணியடி நித்தம் நான் காணும் உன் முகம் வாடவும் விடு…
-
- 19 replies
- 1.8k views
-
-
வானுயரப் போக வாய் பிளந்து குதிக்க... வெடிக்கும் அந்தக் கந்தகத் துகள்கள் காற்றில் கலக்க.. மாசும் அங்கு தொன் கணக்கில் ஏற.. சுவாசக் காற்றும் உள்ளிளுக்கும் நச்சுப் புகையை.. மகிழ்வுற வாங்கி.. நாங்களோ.. பட்டாசு வெடித்து பண்டிகை செய்வோம். சொந்த இனத்தவன் சாவில் மாற்றான் காட்டிய வேதக் கணக்கில் சுய புத்தியற்று குதூகலித்தபடியே..! இந்த இடைவெளியில் பொருளீட்டும் முதலைகள் வாயில்.. "வண்டி" வலிக்க உண்டிக்கு ஏங்கி இருக்கும் மழலைகள் கூட மனித இரைகளாக..! வெடிக்கும் அந்தப் பட்டாசு ஓசைக்குள்.. விடுதலைக்காய் வாழ்வுக்காய் கதறும் இந்த குரல்கள் கேட்காது.. நாளை நமக்கும் இதுபோல் ஓர் நிலை வந்தால்.. நாலு பேரில் ஒருவராய் ந…
-
- 12 replies
- 1.8k views
-
-
பொய்த்துத்தான் போகாயோ ******************************* சத்தம் இன்றி - பெரும் யுத்தம் இன்றி சலசலப்பு ஏதுமின்றி சிணுங்கி வழிகிறாள் சிலநாளாய் வானமகள் முன்பெல்லாம் அவள் வரவு கண்டு ஆனந்தித்த பொழுதுகள் அளவுக்குள் அடக்க முடியாதவை மனம் ஆனந்தப்பூங்காற்று பாடி மமதையிலே திழைத்திருக்கும் மண் மணம் நாசி ஊடு புகுந்து மண்ணில் வாழ்ந்த நாளை மறுபடியும் மறுபடியும் கிளறி நிற்கும் ஊர் போய் வந்த பின்னர் உறவுகள் நிலை கண்ட பின்னர் பெய்யெனப் பெய்யும் மழை பிய்ந்த கூரை வழி வழிந்து நிறைவில்லா வீடுகளை நிறைத்து நின்றதனை கண்டதனால் நீ எம்மவர் நிலை மாறுமட்டும் பொய்த்துத்தான் போகாயோ எனும் பெரும் ஏக்கம் நெஞ்சமெங்கும்... #ஈழத்துப்பித்தன் 01.02.2016 …
-
- 0 replies
- 1.8k views
-
-
நாசாவுக்கு (NASA) வயது 50 தீண்டாக் கனிமமாய் திட்டுக்களில் கிடந்த போதும் தீண்டித் தீட்டி திடமாய் இலக்கு வைத்த போதும் தீயில் தவிழ்ந்து உருப்பெற்ற போதும்.. தீராத வேட்கை விடுதலைத் தாகம் எனக்குள். தீர்வுகள் தேடும் அக்னிக் குஞ்சாய் வானில் பறக்கிறேன் அண்டம் திறந்து தேடித் தருவேன் இருளுக்குள் என்ன..??! விடை. வானத்து மின்மினிக்குள் மிண்ணுவதென்ன வைரமா..??! வட்ட நிலவுக்குள் வாழ்வதென்ன வாலைக் குமரியா..??! செக்கச் சிவந்த செவ்வாய்க்குள் சிவப்பு என்ன தோஷத்தின் கோபமா..??! வளையங்கள் தாங்கும் சனிக்குள் சூத்திரம் என்ன சாத்திரமா..??! அருந்ததிக்குள் வாழ்வதென்ன ஆகாய நங்கையா..??! தேடப் போகிறேன் எட்டாத் தீர்வுகள்..! வானில் எப்…
-
- 12 replies
- 1.8k views
-
-
மலர்களின் அழகில் களித்திருப்போம் வேர்களின் வலிகள் புரிவதில்லை மரங்களின் நிழலில் குளித்திருப்போம் வேர்களின் தியாகம் புரிவதில்லை மண்ணுக்குள்ளே அவை புதைந்திருக்கும் எங்களின் கண்ணுக்குத் தெரிவதில்லை - - - - - - - - - - - - - - - - - - - - - - - - ஒவ்வொரு முறையும் உங்கள் மரணத்தின் போது நான் மெளனித்துப் போகிறேன் கூனிக் குறுகித் தலை குனிந்து!
-
- 6 replies
- 1.8k views
-
-
புலத்து இளைஞனின் புலம்பல் புரிந்திட முடியாப் புதிராம் எந்தனை புரிந்திட மறுக்கும் உறவுகள் சொல்கிறார் வெந்த என் மனதிலே வேலினைப் பாய்ச்சியே விடுப்பினை அறிந்திடும் விருப்பிலே துடிக்கிறார் கற்பனை ஆயிரம் காண்கிற வயசிலே களிப்புடன் வாழ்ந்திட வழியுள நாட்டிலே இல்லற வாழ்வினை தேடிடாக் காரணம் இயம்பிடச் சொல்லியே தினம்தினம் குடைகிறார் ஆண்டுகள் போகுதாம் ஆயினும் எந்தனை அண்டவே இல்லையாம் திருமண ஆசைகள் கிழவனாய்ப் போனபின் அண்டிடார் பெண்களாம் கிண்டலாய்ச் சொல்கிறார் கோபமும் கொள்கிறார் காதலில் தோல்வியோ கன்னிமேல் வெறுப்போ களவியல் வாழ்க்கையில் நாட்டமோ கேட்கிறார் வாழ்ந்திடும் நாட்டின் மக்களைப் போலவே வாழ்ந்திட மனதில் எண்ணமோ என்கிறார் பேரனைக் கொஞ்சிடும…
-
- 8 replies
- 1.8k views
-
-
-
- 2 replies
- 1.8k views
-
-
தூல உடல் துறந்தோரின்.... ஆலயமழித்தோர் அரன்மனையும் கால நெருப்பில் கட்டாயம் அழியும். இது கார்த்திகை மாதம் பூவேந்தி எம் புதல்வரின் பொன்முகம் காணும் காலம் மண்மடியில் குடிபுகுந்த புனிதர்களைப் புதுக்குவித்து, எண்சாண் மெய்சிலிர்த்தெம் உயிர் உருகும் நேரம். காலப்பெருவெளியில் ஈழக்கதை எழுதிய இளவேணில்கள் - தம் உறவுகளைக் காணக்காத்திருக்கும் திருமாதம். தூல உடல் துறந்தோரின் ஆலயம் அழித்தோர் அரன்மனையும் கால நெருப்பில் கட்டாயம் அழியும். ஈனமா… இனத்திற்கா… இன்னுயிரை ஈந்தோமென தோழ ஆத்மாக்கள் தொய்தொடுங்கக்கூடாது. ஆழத்தாய்மடியின் அணைப்பிற்குள் இருக்கும் எங்கள் காலப்புதல்வர் கண்கலங்கக்கூடாது. ஞாலப் பரப்புகளில்……. உறவுகளே! காலச்சி…
-
- 12 replies
- 1.8k views
-
-
பெண் அன்பில் ஒருதாய் பெண் அழகில் ஒரு தேவதை பெண் அறிவில் ஒரு மந்திரி பெண் அதரவுயில் ஒரு உறவு பெண் வெறுப்பில் ஒரு நெருப்பு பெண் வெற்றிக்கு ஒரு மாலை பெண் தோல்விக்கு ஒரு பள்ளம் பெண் நட்பில் ஒரு நேர்மை பெண் கண்டிப்பில் ஒரு ஆசிரியார் இருந்தாலும் பெண் ஒரு புரியாத புதிர்...
-
- 6 replies
- 1.8k views
-
-
நீ எதற்காகப் பயப்படுகிறாய் இரைச்சலுக்கா இல்லையேல் அமைதியான பொழுதுகளுக்கா எதைத் தவிர்க்க விரும்புகிறாய் தனிமையா அன்றேல் அதன் கடினத்தையா உன் அயலில் யாராவது குழந்தை புன்னகைத்தாலும் வாணொலி காதலைப்பாடினாலும் உன் கண்கள் கசிவது ஏன். நீ அலைகளாலேயே தொடர்புற மறுத்த, ஆழத்திலுள்ள தண்ணீர். நீ யாருமே அணுக மறுந்துபோன மலை. எனக்கு நன்றாக உன்னைத் தெரியும் நீ கடினமான டைட்டானியத்தால் செய்யப்பட்ட மனதையுடையவன் இருந்தாலும் உன் அயலில் யாராவது குழந்தை புன்னகைதால் உன் கண்கள் கசிவது ஏன். எனக்குப் புரியும் மொழியையும் சொற்களையும் தெரிவுசெய்து, என்னுடன் உரத்தகுரலில் பேசு எதைக்கூறுகிறாயோ அதையெல்லாம் நான் ஒரு கவிதையில் அடக்குகிறேன் …
-
- 0 replies
- 1.8k views
-
-
அன்புக்குரிய யாழ்க்கள, தமிழ் இசை, கவிதை நண்பர்களுக்கு, அன்பு வணக்கம். காதல் கடிதம் (02.08.2003) - காதல் மொழி(14.05.2006) - காதல் வானம்(25.06.2008 ) வசீகரனின் வரிகளில், வி.எஸ்.உதயாவின் வசந்த இசையில் 25.06.2008 அன்று நோர்வேயில் காதல் வானம் வெளியீட்டு விழா நிறைவாக நடைபெற்றது. காதல் வானம் இறுவட்டு ஈழத்தமிழ் மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்கின்ற பல பாடல்களுடன் வெளிவந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இப்படைப்பை இறுவட்டாக பெற்றுக் கொள்ள PAYPAL சிறந்த முறை. இறுவட்டு பாதுகாப்பாக அஞ்சலில் அனுப்பி வைப்பேன். காதல் வானம் இசைத் தொகுப்பின் குறுந்தககட்டுப் பிரதி வேண்டுகிறவர்கள் தொடர்புகொள்ளலாம் : vaseeharan@hotmail.com (Paypal Account). Vaseeharan:…
-
- 4 replies
- 1.8k views
-
-
காதலர் தினம் கொண்டாடும் அதேவேளை காதலால் வீழ்ந்த மக்களையும் நினைவு கூற வேண்டாமோ. அதுதான். காதல் செய்யுங்க வேணாம் என்றல்ல.. ஆனால் மற்றவர்களை ஏமாற்றனும் என்ற குறிக்கோளை நினைப்பில வைச்சுக் கொண்டு காதலை செய்யாதீங்க. நன்றி பேஸ்புக்.
-
- 9 replies
- 1.8k views
-
-
வஞ்சியிடை வளைந்தாட பிஞ்சுக்கையில் வளையாட கொஞ்சியவன் விளையாட மிஞ்சியிருந்த வெட்கமும் உரசிய மூச்சுக்காற்றில் பஞ்சாய்! கட்டியவன் களைந்தாட கட்டிலிலே அளைந்தாட இன்பத்தில் திளைத்தாட உடலெங்கும் வேர்த்தோட காமக் கடலெங்கும் உணர்வலைகள்! கார்கூந்தல் கலைந்தாட கருவிழிகள் கலந்தாட அங்கங்கள் எழுந்தாட உணர்வுகள் திண்டாட மனவானமெங்கும் வாண வேடிக்கை! தாபங்கள் சேர்ந்தாட தாகங்கள் தீர்ந்தாட தேகங்கள் போராட உரசியுரசிப் பற்றிய தீயில் பற்றிக்கொண்டது மோகத்தீ! கையிரும்பு கோர்த்தாட மெய்நரம்பு தெறித்தோட தொட்டுடல் விரித்தாட கட்டுடல் நீர் உடைத்தோட பட்டுடல் நிலம் நனைந்து... ஈரலித்துப் பேதலித்தது! *************************************************** சில எழுத்துப…
-
- 14 replies
- 1.8k views
-
-
நீ வீசும் காற்றுக்காய் காதலால் துளைக்கப்பட்ட குழலே என் இதயம் * நீ எனக்குக் கொடுத்த தண்டனை எது தெரியுமா..? கடலில் வாழ்ந்த என்னைக் காப்பாற்றுகிறேன் என தொட்டிக்குள் கொண்டு வந்ததுதான் * நீ என்னில் முளைத்ததும் நான் உன்னில் முளைக்காமல் போனதிலும் தெரிந்து கொண்டது ஒரே விதையென்றாலும் வேர்விட எல்லா மண்ணும் சம்மதிப்பதில்லை என்பதுதான் * உன்னால் புகைக்கப்பட்ட சிகரட் நான் என்றாலும் உனக்கு முன்னே இறந்துபோன பாக்கியசாலி நான் * என் வாழ்க்கை எனும் பேருந்தில் இறங்கிப் போன மறக்க முடியாத சாரதி நீ -யாழ்_அகத்தியன்
-
- 9 replies
- 1.8k views
-
-
காபன் இரு ஒட்சிசன் துணை சேர ஒரு மூலக்கூறாகி அந்தரிக்கும் வழியில் இலை வாய் வசம் அகப்பட்டு பச்சைய உருமணியின் பஞ்சணையில் தண்ணியடித்து தான் கிடக்க.. சூரியக் கதிரின் நீல சிவப்பு விளக்குகள் ஊக்கமூட்ட தாக்கம் நடக்க நிலை குலைந்து குளுக்கோசானது..! குளுக்கோசும் சும்மா கிடக்காமல் இணைந்து சுருண்டு மாப்பொருளாகி கலக்கிட்டங்கியில் சேமிக்கப்பட.. உணவுச்சங்கிலியில் காத்திருந்த சேவலும் பேடும் காதல் கொண்டு களித்திருந்த வேளையில் களைப்பு மிகுதியில் பசியெடுக்க தானியமாய் கொத்தி உண்டு மகிழ்ந்தது..! சேவலின் உணவுக்கால்வாயில் நொதியப் பீரங்கிகள் கொண்டு உடைபட்டு அகத்துறிஞ்சப்பட குருதியில் அடைக்கப்பட்டு ஈரலுக்குள்…
-
- 12 replies
- 1.8k views
-