கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
சொல்லடுக்குகளில் பின்னிக்கிடக்கும் எது நீயென்று அறியமுடியவில்லை எப்படி நிராகரிப்பது. அலையும் நரம்புகளில் எந்த நரம்பில் நீ எப்படித்தான் நிறுத்துவது. சகி இந்தக் கவிதையில் எந்த இடத்தில் நிறைகிறாய். எந்த வார்த்தைகளில் வெளியேறுகிறாய் புரியவில்லை. முகிலிடை வெட்டும் மின்னல் மிதந்தலைந்துவரும் வாசம் பெருந்துயரொன்றின் மெல்லிய நீட்சி எதிர்பாராமல் மனதுக்குள் அவிழும் பாடலின் மெட்டு எழுதென்று கலைக்குமுணர்வு மீறி நிற்கும் சோம்பல் நீயும் இவைப்போல அல்லது இவையும் உன்னைப்போல. பேரன்பே, யுகஅழிவின் இறுதிக் கணத்தில் கிடைத்த பேழை நீ. ஆதியிலிருந்து சுமந்திருந்த பிரியத்தை இறக்கிவைத்து இளைப்பாறுகிறாய். வா ஓய்வெடு. யுகமீட்சியின் பரிபூரணத்துவம் அன்பாலே நிகழு…
-
- 8 replies
- 1.2k views
-
-
சேரனின் காடாற்று கவிதை தொகுப்பு காலச்சுவடு வெளியீடாக கனத்த அட்டையுடன் அழகான புத்தகமாக வெளிவந்திருக்கின்றது. அதிலிருந்து இரு கவிதைகள் . நீரற்றது கடல் நிலமற்றது தமிழ் பேரற்றது உறவு தற்கொலை. காவற்பரணில் ஒரு கண்ணிழந்த போராளி.
-
- 8 replies
- 1.1k views
-
-
-
துள்ளி எழும் நீரலை எட்டி நோக்க அது கண்டு நாணல்கள் நாணிக் குனிய தமிழ் நங்கையர் நளினம் பண்ண வன்னி மண்ணெடுத்து நயந்தது ஓடியது பாலி ஆறு. தங்கத் தலைவன் சேனையது வீரச் சமர் முடித்து இளைபாற தாகம் தீர்க்க நாலு துளி நீர் வழங்கி பெருமை கண்டது அது..! காட்டிடை நகரும் அன்ன நடையில் அழகு கண்டு வன்னியனின் வீரமதில் வரலாறு கண்டு தம்பி சேனையதன் வெற்றியில் சுதந்திர மூச்சிழுத்து வாழ்ந்த ஆறு இன்று.... ஈனர்களின் ஒற்றர்களின் காக்கவன்னியச் சகோதர்களின் காட்டிக் கொடுப்பில் வறண்டே போனது..! தமிழ் விளையாடிய நிலமதில் சிங்களம் அரங்கேறுது. நாரைகளும் நாணல்களும் கூடி விளையாடிய நீரதில் புத்தம் சிலை வைக்குது..! பிறை பங்கு பிரிக்குது..! பாலி ஆறு நாளை வரைபடத…
-
- 8 replies
- 1.8k views
-
-
இருளுக்குள்ளும் நிழலை தேடியவர்கள் ... கண்ணி வெடிகள் விதைத்த வயலில் பாதை தேடியவர்கள் .. சன்னங்கள போகும் உயரம் அளத்தவர்கள் ... கந்தக பொதி சுமந்து வந்தோருக்கு பாதை காட்டியவர்கள் .. ஓடும் பாதையில் இருக்கும் தடைகள் அறிந்தவர்கள் ... கம்பி வேலியின் எண்ணிக்கை தெரிந்தவர்கள் ... பலமான இடத்தில் பலவீனம் தேடியவர்கள் .. தலைவன் சொல்லும் பாதையை எடுப்பவர்கள் .. வெடி விழுந்தாலும் கதறி அழாதவர் ... தோழனுக்கு சைகையால் ஓடிடு என்று சொன்னவர்கள் ... குண்டை கழட்டி தன்னுடன் அணைத்தவர் ... எதிரி நெருக்கி திருப்ப எமனாகி போனவர்கள் .. தங்களின் பணியை தரவுடன் தந்தவர்கள் ... தலைவன் சொல்லுக்கு தலைசாய்த்து நின்றவர்கள் .. தாக்கும் இறுதி கணம் வரை ரகசியம் காத்தவர் ... வெற்றி களிப்பிலும் இணையாது …
-
- 8 replies
- 1.7k views
-
-
திலீபன்....... போர் மட்டுமே தெரியும் ........ புலிகளுக்கு என்றவர்க்கு....... நீர் ஆகாரம் கூட இலாது - புரட்சியில்... நீந்தவும் தெரியும் என்று சொல்லி........ தன்னை தானே........ வேருக்கு உரமாக்கிய செம்பருத்தி!! கூச்சல்களும் கூவல்களும் .... செத்து செத்து விழுந்தாலும்..... எதிரி கை முத்தமிடும் பிழைப்பும்..... தொடர் கதையாய் இன்னும் இருந்தாலும்... ஒரு சுடர் அணைந்து போச்சுதே...... இன்னும் இருட்டு..... இதயத்தின் ஒரு மூலையில்!! உயிர் உருக உருக ....... தனை எரித்து போனது ஒரு ....... ஊரெழுவின் வர்த்தி........ ஊருக்கு வெளிச்சம் வந்ததோ இல்லையோ........ உன் பேருக்கு - இறப்பு என்றுமேயில்லை! தியாகம் என்பார்.......... அதன் உச்சம் என்பார்…
-
- 8 replies
- 11.1k views
-
-
விரல்கள் .. வேண்டும் எண்ணங்களின் வலி என்னை எழுத வைக்கிறது நண்பர்களே .. எழுதுகோல் என் கையில்; ! எழுது .. எழுது என்ற ஏக்கமேயன்றி எதுகை மோனை. பாடுபொருள்….. பக்குவம் எல்லாம் தொலைந்து விட்டது .. நான் பிறந்த நாடு எனக்கில்லை .. என்றார் ! நான் பிறந்த மண்ணை தமதென்றும் சொன்னார் ! தட்டிக் கேட்ட தமிழரை யெல்லாம் சுட்டுக் கொன்றார் .. விடுபட்டுப் போன சிலரை பூசா முகாமில் பூட்டியே வைத்தார் .. தப்பியோடிய தமிழர்க்கு தந்ததே உலகம்.. அகதி எனும் நாமம் பல ஆயிரம் கண்கள் சிந்திய கண்ணீர் சில ஆயிரம் இதயத்தைக் கூட கரைக்கலையே ! பல ஆயிரம் உடல்கள் சிந்திய இரத்தம் சில ஆயிரம் உள்ள…
-
- 8 replies
- 1.4k views
-
-
மஞ்சளும் மண்ணும் கலந்த நிறத்தில் பொன்வண்ண அச்சுடன் என்றோஎடுத்த இன்சுரன்சிற்கு இன்றும் அனுப்புகின்றான் டயரி எழுதாத சில பக்கங்களுடன் கிறுக்கிய பல குறிப்புகளுடன் பழையதை தூக்கி அட பதினொன்றாவதா என அடுக்குகின்றேன். சிரிக்கும் புதுப்பக்கதில் படுக்கும் நேரத்தில் சிவப்பு பேனாவால் வைய படபோகும் மாந்தர் அல்லது மானிடம் எதுவுமாகலாம். அன்றைய நாள் தலைப்பில் எனக்கு எதிரியாக எவன் பட்டாலும் அன்று அவனுக்கு தான் அத்தனை பூசைகளும் அபிசேகமும் போனவருட டயரியின் பக்கங்கள் சில இப்பவும் மணக்குது செம்புதூக்கி சோபா, விட்டுவாங்கி யோ.கா, நாய்வைத்தியன் நடேசன் இலக்கிய கள்ளன் பூபதி என்று மூத்திரம் தொட்டு எழுதியதால், நேரில்காண்கையில் நடுமூஞ்சையில் பிசகாமல் அடிப்பேன் து…
-
- 8 replies
- 1.3k views
-
-
-------------------------------------- மீன்பாடும் தேன்நாடு வங்கக்கடலுக்கோ வெண்பட்டு மணல்விரிப்பு மலையகத்து அருவிகட்கோ பச்சை வயல்விரிப்பு பாடும்மீன் தாலாட்டும் பௌர்ணமி நிலாவுக்கு ஒயிலாக முகம்பார்க்க ஒய்யாரமாய்த் தூங்க மட்டு நகரில் வாவியிலே நீர்விரிப்பு. எங்கிருந்தோ வந்தவர்கள் எல்லாம் அனுபவிக்க சொந்தங்கள் இங்கே துயரம் சுமக்கிறது. காலமெல்லாம் இங்கே கணபதியும் எங்கள் காக்கா முகம்மதுவும் தெம்மாங்குபாட திசைகாணும் தாய் எருமை. திசைதோறும் புற்கள் முலைதொட்ட பூமியிலே கன்றை நினைந்து கழிந்தபால் கோலமிடும். காடெல்லாம் முல்லை கமழும் வசந்தத்தில் வயல்புறங்கள் தோறும் வட்டக்களரி எழும். வட்டக்களரியிலே வடமோடிக் கூத்தாடும் இளவட்டக்கண்கள் தென்றல்…
-
- 8 replies
- 2.2k views
-
-
ஒருமுறை .... கண்ணுக்குள் .... வந்துவிடு உன்னை .... கண்ணுக்குள் புதைத்து .... வைத்திருக்கிறேன் .....!!! என்னால் உனக்கு ... கண்ணீர் வந்தால் ... உனக்கும் சேர்த்து நானே .... அழுதுவிடுகிறேன் .....!!! சிலவேளை கண்ணில் வெளியேற .... நீ விரும்பினால் .... கண்களை குருடாக்கி .... சென்றுவிடு - உன்னை தவிர ... நான் யாரையும் பார்க்க ,,, விருமவில்லை ....!!! & கவிப்புயல் இனியவன் உருக்கமான காதல் கவிதை இரக்கமானவர்களுக்கு புரியும்
-
- 8 replies
- 52.4k views
-
-
ஏய் மனிதா நில்லு உலகம் படைச்சது எதற்காக நீ... உலோகம் கொண்டு எல்லையிடவா..??! ஏய் மனிதா சொல்லு இவள் பிறந்தது எதற்காக நீ.. கம்பி வேலியிட்டு அடைத்து வைக்கவா..??! ஏய் மனிதா சொல்லு ஒற்றை மலலாவுக்கு குண்டடி என்றதும் பதறுவது எதற்காக.. நீ இவளை முட்கம்பியால் கட்டி வைக்கவா...??! ஏய் மனிதா சொல்லு உன் குழந்தைக்கு ஐபாட்டும்.. ரெடிபெயரும் எதற்காக நீ இவள் போல் எண்ணற்ற குஞ்சுகளை வதைப்பதை மறைக்கவா..??! ஏய் மனிதா சொல்லு யுனிசெப் என்ற ஒன்று எதற்காக.. நீ உள்வீட்டுப் பிரச்சனைகளில் உளவு பார்க்கவா..??! ஏய் மனிதா சொல்லு மனித உரிமைகள் யாருக்காக.. நீ வெள்ளைத்தோலால் உலகை ஆள்வதற்கா..??! ஏய் மனிதா சொல்லு.. இந்த வேசங்கள் எதற்காக நீ அழிவைத் தேடிச் செல்வதால…
-
- 8 replies
- 1.1k views
-
-
அன்று கையில் புத்தகமும் கையுமாய் கல்வியும் கண்ணுமாய் அன்னை தந்தை ஆசிரியன் சொற்படிமாய் தமிழ்த் தம்பிமார் இருந்தார்கள் இன்று வாயில் புகையும் தண்ணியுமாய் கையில் கத்தியுமாய் வாளுமாய் கொன்று திரிகிறார்கள் அன்று ஒரு காலம் மேய்ப்பவன் ஒருவன் இருந்தான் ஏன் என்று கேட்க அங்கு ஒரு ஒழுங்கு இருந்தது அமைதி பேண தமிழருக்காய் ஒரு படை இருந்தது இன்று என்ன இருக்கின்றது இன்று எவரும் இல்லாமல் ஏன் என்று கேட்க தானாய் தம்மையே அழிக்கிறார்கள் தமிழர் தெரிந்து கொள்ளுங்கள் எம்மை ஆக்கிரமித்து இருப்பவனுக்கும் நாம் அழிவது தானே விருப்பம் இனி என்ன தான் மிஞ்சி இருக்கப் போகிறது கஞ்சிக்கு கடைசியில் என்ன செய்வீர் …
-
- 8 replies
- 567 views
-
-
அம்மா மூக்குவழி நீருகுக்க வைக்கும் இந்த முன்பனிக் காலம் இதயமாயில்லை. காதுமடல் களவாடிச் செல்லும் பைன்மரக்காடுகளின் ஊதற்காற்று துன்பம் தருகிறதம்மா! என்னிலும் சற்று வெளிறியவன் ஏவலிட்டான். மாதக் கடைசியை மனம்கொண்டு தேய்த்ததில் பாத்திரங்கள் போலத்தான் கைகளும் வெளுத்துப் போயின. என்ன குறையென்று நேற்றென் நண்பன் கேட்டான். ஏதுமில்லைத்தான் சொல்லுதற்கு. ஆனாலும் ஆனாலும் உறுத்துகிறது ஏதோவொன்று கவளம் சோற்றில் கடிபட்ட கல்லாய். அம்மா! நானும் அப்பா போல் பெரியவனாகி விட்டேன் அப்பாக்கு அறுபத்தாறில் அடங்காதென்ற "நாரிப்பிடிப்பு" உன்மகனுக்கு இருபத்தாறில். இங்கு பருவங்களில் ஒன்றாம் வசந்த க…
-
- 8 replies
- 1.4k views
-
-
உன்னுடன் நான்படித்த காலம் கண்ணில் தெரியுதடா என்னுயிர் நண்பாஉன் நட்பின் தீபம் எரியுதடா உன் மனம் என்னவென்று யாருக்குத்தான் புரியுமடா உன்மனம் அறிந்த உண்மை எனக்கு மட்டும் தெரியுமடா அன்னையுடன் வாழ்ந்த நாளில் ஆத்ம நண்பராயிருந்தோம் இன்னல் மறந்த தோழர்களாய் கல்விக்கூடம் சென்று வந்தோம் இன்சுவை வேண்டுமென்று ஐஸ்கிரீம்கள் பல சுவைத்தோம் முன்கூட்டியே முள்ளி வாய்க்கால் அழிவினை அறியாதிருந்தோம் தோழமைக்கு இலக்கணமாய் துடிப்புடனே நின்றவனே ஆளுமையின் அகல்விளக்காய் அன்னைக்காக சென்றவனே வேளத்தின் பலத்துடனே பகைக்கு முகம் கொடுத்தவனே வாழவேண்டும் நாடென்று வீரத்துடன் மொழிந்தவனே என்னினிய நண்பா இன்று நீ பிறந்த நன்னாள் உன்னை வாழ்த்திக் கவியெழுத எனக்கு வாய்த்த பொன்னாள் …
-
- 8 replies
- 717 views
-
-
-
அன்னை தேசம் சிந்தும் குருதி அகிலம் எங்கும் உறைய வைத்தும் ஈழத் தமிழன் ஈந்திடும் கண்ணீர் ஈரம் கண்டும் இரங்காத உலகம் சிங்கள வெறியன் சீண்டிடும் கைகள் சீறும் படையால் சிதைந்திடும் காணீர் எம் நிலம் வந்து எம்மையே கொல்லும் துரோகிகள் துரோகம் தூர்ந்திடும் விரைவில் தீந்தமிழ் வீரர் தியாகம் வேள்வி தன்னிலை மாறி தமிழீழம் பிறக்கும்...
-
- 8 replies
- 1.8k views
-
-
என் கண்ணே சிரி!! எதற்காக அழுகிறாய் கண்மணி? என் ஒவ்வொரு தோல்விகளிலும் சோராமல் தோள் தந்தவள் நீ! "துவள்வதும், துவண்டு புரள்வதும் ஆண்மைக்கு அழகல்ல" என்று என்னையே எனக்கு அடையாளம் காட்டியவள் நீ!!.. இன்று உன் விழிகளில் ஏனடி நீர்த்துளி?!! முள் கிழித்த என் விரல்கள் பார்த்தா?! முட்டாள் மனிதர்கள் முதுகில் குத்திய தடயம் பார்த்தா?!!கண்ணி வெடி என் ஒரு கால் தின்றதைப் பார்த்தா?!! அடி பேதைப்பெண்ணே! உன் கையும் நம்(பிக்)கையும் இருக்கிறதே! துவளாதே கண்மணி வீரனுக்கு நம்பிக்கையே போதும்! சோராதே பெண்மணீ!. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்!! எங்கே சிரி! துயரம் எரி!!...உன் புன்னகையில் தானடி என் வெற்றிக்கனி! நன்றி!
-
- 8 replies
- 1.9k views
-
-
GijFopapypUe;J xU Fuy;… cwNt cwNt cwNt - vd; Fuy; cdf;Ff; Nfl;fpwjh? vd;id ahnud;W cdf;Fg; Ghpfpwjh? GijFopapypUe;J Gyk;GfpNwd;. GOtha; vd;Dly; nespfpwJ. vYk;Gfs;jhd; vd; milahsk; vg;gbf; fhz;gha; ehd; ahnud;W ve;jd; Fuy;Nghy; gy Fuy;fs; vk; Njrj;jpd; kz;zpy; vOfpd;wd. cuj;j Fuypy; xd;wpize;J cyfk;Nfl;f eP nrt;tPuh? chpik Nfl;L ehd; Nghuhltpy;iy cwTf;fhfTk; Fuy; nfhLf;ftpy;iy njUtpNy jdpikaha; epd;wNghJ njUehiar; Rl;lJNghy; Rl;Ltpl;lhh;. Fowpg; ghhj;Njd; Kbatpy;iy Fk;gpl;Lk; mONjd; Nfl;ftpy;iy njUNthuk; vd;id ,Oj;Jr;nrd;W jpkpwj; jpkpwj; jho;j;Jtpl;lhh;. vd;Dld; Nrh;e;j gyNgiu vhpj;jhh; joypy; Ftpj;Jitj;J vQ;rpa rpyhpd; vYk;Gfis miuj;J…
-
- 8 replies
- 707 views
-
-
சிறையை உடை சிறகை விரி இந்த இடம் எனக்கு ரொம்பப் பிடிக்கும் காற்றோட்டமான அறை பெரிய மண்டபம் செயற்கைப் பூந்தோட்டம் பார்த்துப் பார்த்துக் கவனிக்க பலர் வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கங்களையும் பார்த்துப் பார்த்து சுமைகளை எமதாக்கி சுகங்களை உமதாக்கி தோளிலும் மாப்பிலும் தூக்கிச் சுமந்தோம் எந்த உணவு பிடிக்கும் எந்த உடை பொருத்தமாக இருக்கும் எந்தப் பாடசாலை உங்களை உயர்த்தும் எந்தப் படிப்பு உங்களுக்கு இலகுவாக அமையும் ஆம், பார்த்துப் பார்த்து படியேற்றி விட்டோம் அதற்கு பிரதியுபகாரமாக நீங்கள் எம்மை இங்கு படியேற்றி விட்டுள்ளீர்கள் நேரத்திற்கு உணவு நாளுக்கோர் உடை வசதியான படுக்கை வளமான இருக்கை பிரயாணிக்க சொகுசு வண்டி கூப்பிட்ட குரலுக்கு செவிலி குறிப்பறிந்து கவனிக்க தாதி எல்லாமே எல்லாமே இருக்கும…
-
- 8 replies
- 3.5k views
-
-
செல்லாதா எங்கள் பா...?? துடுப்பை பறித்து- நீ தூர எறிந்தால் கரைக்கு போகாதா எம் கவிதை படகு...?? இடுப்பை உடைத்து- எம்மை இருத்தி வைத்தால் நடந்து போகாதா- எங்கள் நறுக்கு வரிகள்...?? குப்பி விளக்கதில்- நாம் குத்தும் வரிகள் எட்டி பார்க்காதா எங்கள் தேசம்...? எழுது முனையை- பறித்து சிறையில் இட்டால் பறந்து போகாதா- எங்கள் பா வரிகள்...?? -வன்னி மைந்தன்-
-
- 8 replies
- 1.7k views
-
-
பிஞ்சுகளைப் பிளந்த பிசாசுகள் செஞ்சோலையில்-எங்கள் பிஞ்சுகளின் செங்குருதி குடித்த இரும்புப் பறவைகளே முல்லையின் மரண ஓலம் கேட்கிறதா..? வானம் பார்த்து விழிமூடிக் கிடக்கும்-எங்கள் வண்ணப் பூக்களை வந்து பாருங்கள் யுத்தவெறி பிடித்த புத்தமுகம் கிழியும்! உங்கள் தாகம் தீர்த்துக் கொள்ள தமிழனின் குருதியென்ன மதுபானமா? பிணவெறி பிடித்த இனவெறிகளே! எங்கள் வலிகளைக் சேமிக்கும் இதயங்கள் இனியும் தாங்காது வலிகளைச் செலவு செய்ய வருவோம்! எங்கள் குருதியால் எழுதப்படும் சிங்கள மகிந்தவின் சிந்னைக்கு எரிமலைப் பிழம்புகள் கொடுப்போம்! எல்லை மீறிய எதிரிகள் கூட்டமே-இனி எழுது கருவிகள்கூட ஏவுகணையாகும் எட்டுத் திக்கிலும் வெற்றி எமதாகும!; கனத்த நெஞ்சுட…
-
- 8 replies
- 1.5k views
-
-
தேன் சிந்துதே வானம்........... இரவல் ஒளியெடுத்து இரவில் ஒளிஉமிழும் அழகில் மயங்க வைக்கும் ஒற்றைத் திங்கள் வளையில் ஒளித்திருந்து வாகாய் படம் பிடித்து வளைய வரும் எட்டுக் காலில் நண்டு காற்றடிக்கும் திசைகளெங்கும் காலாற நடைபயின்று பூப்பந்தாய் உருண்டு வரும் இராவணனின் மீசை வெள்ளி நிலா விளக்கேற்ற வீச்சுவலை இழுத்து வரும் கடலோரக் கவிதைகளாய் கட்டுமரம் சோளகத்தில் மோதிவரும் சுழற்காற்றில் தலையாட்டி தாளலயம் தப்பாத தென்னம்பிள்ளை வானக் குடைபிடிக்க வண்ணமலர் சிரிக்க சோலையிலே இசைபாடும் கானக் குயில் வாடைக் காற்றுரச வயல்களிலே கதிருரச பூமணத்தை சுமந்து வரும் காலைத் தென்றல் காலைப் பனித் துளியில் மேனி தனைத் துவட்டி தளுக்காகச் சிரிக்கின்ற செம்பருத்தி ஆத வன் எழும்பு முன்பு அடிவானம் சிவக்கு முன்பு ம…
-
- 8 replies
- 1.4k views
-
-
அனாதைக் குழந்தையம்மா .. :..:..:..:..:..:..:..:..:..:..:..:..:..:..:.. அன்புள்ள அம்மாவுக்கு…! அழுது…அழுது… அடம்பிடித்து வேப்ப மரத்தில் ஏறியொழித்து… இன்னும்….இன்னும்…. எத்தனை….எத்தனை… விட்டாயா…? ஏஐன்சிக்குக் காசுகட்டி எல்லாம் முடிந்தபின் – எனை கொற கொறவென இழுத்தபோது படலையைப் பற்றியபடியே நானிட்ட கூச்சல் ஊரையே கூட்டியதே…! மறந்துவிட்டாயா…? ஏனம்மா என்னை ஐரோப்பியத்தெருக்களில் அனாதையாய் அலையவிட்டாய்…? “உயிரெண்டாலும் மிஞ்சுமெண்டுதான் மோனை ஐயோ… வேண்டாம் நிறுத்து…! உணர்விழந்த உடலுக்கு உயிரெதற்கம்மா…? நான் சின்னப்பொடியனெண்டாப்போலை காம்பில வாறவன் போறவன் வெள்ளை.. கறுவல்.. காப்பிலி.. சப்பட்டை.. எ…
-
- 8 replies
- 2.2k views
- 1 follower
-
-
அந்த அகதிமுகாம்கள் இல்லையில்லை மீட்பர்களற்ற வதைமுகாம்கள் மின்சார முட்கம்பிகள் சூழப்பட்ட அந்தகாரத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. பசி மயக்கத்தில் கேட்பாரற்று உறவுகளைத் தவறவிட்ட அவலத்தில் சருகாகின தனிமைக் கூடுகள். அட்டதிக்கிலும் முற்றுப்பெறாத ஒப்பாரிகள் உயிரைப் பிசைந்து உணர்வைக் கரைக்கிறது. கூடி அழ ஆளின்றி மானிட மரணங்கள் மலினப்படுகின்றன. தன் பிறப்பை மறந்த அன்னையைப் பார்த்து சிசு கதறிக் கதறி விதி வலிக்கக் கிடக்கிறது. ஒதுங்கவும் உள்ளுடுத்தவும் வழியின்றி பெண்மை கறையுற்று நனைகிறது. மறைப்புகள் அற்ற திறந்த வெளி இருட்டில் மட்டுமே மானத்தைக் காக்கிறது அகரத்தை எரிக்கும் அசிட் திரவத்தை அடிவயிற்றை கிழித்து மிருகங்கள் உமிழ்கின்றன. …
-
- 8 replies
- 1.6k views
-
-
முதற் பெண்மாவீரரான மாலதி அவர்களின் 26வது நினைவு சுமந்து வீரவணக்கங்கள்! தமிழினப் பெண்களின் அடையாளம் ஆகினாள்! ----------------------------------------------------------------------- வென்றிடச் சென்றவள் பெண்வேங்கையுள் முன்னவள் தாலியைத் தாங்கிடும் மரபிலே வந்தவள் தடை யுடைத்தவள் நஞ்சினைச் சூடினாள்! வேதனை கண்டவள் வெஞ்சினம் கொண்டவள் போரிலே புகுந்தவள் புதுயுகம் படைத்தவள் பாரிலே நிலைத்தவள் செங்கொடி ஏந்தினாள் போர்க்கலை காட்டினாள் தமிழ்ப்பெண்நிலை மாற்றினாள் அஞ்சுதல் போகினாள் ஆயுதம் சூடினாள் தூற்றுதல் துடைத்தவள் களப்பணி யாற்றினாள் வீறுடன் நடந்தவள் வித்தென வீழ்ந்தவள் அடையாளம் ஆகினாள் தமிழினப் பெண்களின் அடையாளம் ஆகினாள்!
-
- 8 replies
- 1.5k views
-