Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தன்னைக் கொன்றவனின் வாக்குமூலம் ஆராய்தலின் பின் தற்கொலையென்று தள்ளி வைக்கப்படுகிறது. அங்கு, தன்னைக் கொன்றவனின் வார்த்தைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்காது. தன்னைக்கொல்ல துணிந்தவனின் வார்த்தைகள் வாழ்க்கைக்குள் தன்னை கொன்றவனுக்கு எப்படிப் புரிந்திருக்கும் ? தன்னைக் கொல்லுதல் மலர் உதிர்வதுபோலவும் இருக்கலாம். மை கரைவது போலவும் இருக்கலாம். ஒரு மரம் சரிவது போலவும் இருக்கலாம். தன்னைக்கொன்றவனின் கடைசி நிமிடங்கள் பற்றி எவரும் பேசுவதில்லை, அவன் சுமந்திருந்த தனிமையை எவரும் உணர முயல்வதுமில்லை. அவன் உருவாக்கிய வெற்றிடம் குறித்தும் எவரும் கவலைப்படுவதில்லை, ஆனாலும், தன்னைக்கொன்றவனைத் தாண்டிவிட முடிவதில்லை எவராலும் வழமைபோல, அவனுக்கு அந்த நேரத்தில் தேவையாக…

    • 8 replies
    • 709 views
  2. தற்போது களத்தில் காதல் வாசம் வீச்தொடங்கியுள்ளது. ஜம்முவிற்கும் காதல் வந்திடுச்சு அதனால் எனது பழைய கவிதைகளை இங்கு தூசு தட்டி ஜம்முவை வரவேற்கின்றேன் 01 தேய்ந்து போகின்றேன் நீ நடந்த பாதையெங்கும் விழி வினா வீசி காத்திருக்கின்றேன் தாண்டிச்சென்ற பூங்காற்றே மீண்டும் வருவாயா ? காத்திருப்பதில் எத்தனை ஆணந்தம் பூமி காத்திருருக்கின்றது மழையின் வருடலிற்காய் பூக்கள் காத்திருக்கின்றன வண்டின் தீண்டலிற்காய் வானம் காத்திருக்கின்றது நிலவின் நெருக்கத்திற்காய் அன்பே நான் காத்திருக்கின்றேன் உன்தன் உறவிற்காய் பத்துமாதம் அன்னை காத்திருந்தாள் இப் ப+மிமீது உன்னை பூப்பறிக்க வைக்க பல வருடம் நான் காத்திருக்கின்றேன் என் பள்ளியற…

    • 8 replies
    • 1.4k views
  3. வல்லமையின் குரல் நலிந்தால் வளவுக்குயில் பாடாது. எழுச்சி கொள்க கவிஞர்களே! தாயகமூச்சு எமக்கில்லையா? ஆயிரம் தடைகளை ஆரும் போட்டாலென்ன? உன்னிப் பெருமூச்செடுத்து உறவணைக்க எழுந்திடுக. நோயுண்ணும் உடல் நலித்தும், பேயுண்ணும் உணர்வொழித்தும், தாய் நிலத்தின் வேதனையை - எம் தோள் தாங்காதிருக்கும் பாழ்வாழ்வு எங்களது என வரலாற்று பதிவேட்டில் பதிவிக்கப் போகிறோமா? கூடாது... கூடவே கூடாது. முற்றத்து மணற்பரப்பில் முழுமதியின் எழிலொளியில், சுற்றம் சூழப் புற்பாய் போட்டமர்ந்து பேசி, அடிவளவு மூலையிலே படர்ந்த முல்லைச் சொதி மணக்கும் கவளச் சோறெண்ணி, ஏக்கங்களை மட்டுமே எமதாக்கி, பனிநிலங்களில் உயிர் தொய்ய வாழ்கிறோமே.... விட்டுவிடுவோமா? தாய்நிலத்தி…

  4. என் தொப்பியையும், துப்பாக்கியையும் தொலைத்துவிட்டு... சட்டைப் பையில் மீதமாய் இருப்பது, என் வியர்வையின் ஈரம் ஊறிய பாண் துண்டு மட்டுமே... இங்கே அறைகள் சுத்தமாகவும், சுவர்கள் கதகதப்பாகவும் இருக்கின்றன நான் தேநீர் குடிக்கின்றேன், என் வாய் யாரையும் சபிக்கவில்லை கொஞ்சம் புகை பிடிக்கின்றேன் ஆம், இப்படித்தான் ஒருமுறை இருந்தது..... „நான் என் பயத்தை தொலைத்துவிட்டேன் இங்குள்ள தாங்க முடியாத வெக்கையால் எழும் பயம், ஒவ்வொரு குளிகாலப் பயத்தை நினைவுபடுத்திச் செல்கிறது அங்கே எங்கோ ஓர் இடத்தில் தொலைத்த என் பயத்தை நான் தேடவில்லை.... வயிறு நிறைய உண்டபின் உறங்க விரும்புபவர்கள் போல மரணத்தைக் காதலித்து வீழ்ந்துகிடந்த என் நண்பர்களைக் கடந்து செல்கின்றேன் ஆம்…

  5. [size=4]தண்ணொளிநிலவே_ தளராது எனைதொடரும் உறவே, கண்மணிகள் கல்லறைகள் கண்டனையோ யென்மண்மீதினில், [/size] தழுவிக்கடக்கும் தென்றலே_தலை [size=4]தடவிமகிழ்த்தும் தாயே, விழுந்திட்ட மறவர் சிதைகளை வணங்கிச் சுமந்திங்கு வருவாயா?[/size] வான்முகிலே, கருணையின் உருவே_என் [size=4]விழியின் நிழலே,விலைபோகாத பொருளே பொன்னிறமேனியர் விதைத்த நிலத்தில் பூத்தூவியவர்கள் முகம் மலர்த்தி வருவாயா? எழுவான்கதிரே விடியலின் திருவே_எம் உணர்வின் வடிவே, உயிரின் முதலே வழுவாதயெம் வீரர்துயிலிடத்தில் வெம்மையகற்றி மெதுவாய் வருவாயா? நின்றெதிரில் விழியுருகித்தீபமேற்றிட அவருறங்கும் கல்லறைகண்டு தொழுதிட இன்றெமக்கொரு வழியுமில்லையே எம்விழி நீர்துடைக்கவொரு நாதியில்ல…

  6. பதற்றம் செஞ்சோலையில் குண்டுவீச்சு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இடைநிறுத்தம் "செல்வி" உயிர் தப்புவாளா?

    • 8 replies
    • 1.6k views
  7. இதமான வசந்த காலம் தன் வனப்பை இழந்து நொடிந்து போகிறது தெளிவான அந்த நீல வானமும் கருமையை வேண்டி பூசிக்கொள்கிறது குதூகலிப்புடன் பூத்து குலுங்கிய மலர்களும் தன் சோபையை பறிகொடுத்து வாடி வதங்குகின்றன பச்சை வர்ண இலைகள் மண்ணில் விழுந்து ஒப்பாரி வைக்கிறது அதெப்படி முடிகிறது ? வசந்தகாலத்தில் இலையுதிர்காலம் எப்படி நுழைந்தது ? நேற்றைய சந்தோஷ வானில் இன்று மின்னலுடன் கூடிய பேரிடி ! நட்சத்திர விளக்குகள் அத்தனையும் அணைந்த நிலையில் வானமும் இருண்ட நிலையில் ! என் சந்தோஷ இறகுகள் விரிக்க திரணியற்று வலுயிழந்து போன நிலையில் உணர்வலைகளும் தோற்றுப் போய்விட்டன இன்று நட்பாக வந்த நல்ல இதயம் நஞ்சு ஊறிப்போய் தன் சுயநல போர்வையில் நினைவுகளுக்கு சுகமான ராகம் மீட்ட நினைத்த வேளையில் நரம்பருந…

  8. 'கொற்றவை' வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதன் தாக்கத்தில், நந்தன் இணைத்த 'ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு ஐயா' பதிவையும் வாசித்தபோது இதைப் பதியத் தோன்றியது: -- பிரக்ஞை தொடர்வதென்று பேச்சுண்டு. ஆழத்தின் அதிர்வுகள் பண்டையனவென்று கருத்துண்டு, நிறுவல் அசாத்தியம். ஆனால் உள்ளிற்குள் கரவொலி. பறவைகள் பரிசோதிக்கப்படுகின்றன. பொரித்த முட்டைகளிற்குள்ளால், உணரப்படாத, கடத்தப்பட்ட அனுபவங்கள் தேடப்படுகின்றன. பேசப்படும் மொழி எதுவும் சட்டென்று தோன்றிற்றிலை. சரித்திரம், பணம் பண்ணமுடியாப் பாடந்தான், இருப்பினும், இருப்பின் தடம் அதற்குள்தான். அகத்தியன் செய்த அற்புத பாடல்கள், மதுரை தாழ்கையில் சேர்ந்து தாழ்ந்தனவாம், பின்னொரு பொழுதில், தென்னவன் ஒருவன், சன்னதங் கொண்டு கக்கித்துப்பியதை, அதிகம் கற்றவன் அல்…

    • 8 replies
    • 748 views
  9. உன் நினைவுகள் * உன் பெயர் எழுத என் பேனா ஓடும் போதெல்லாம் கேலிச் சிரிப்போடு வந்து பிள்ளைக் குறும்பாய் பிடுங்கி எரிந்தாய்! * உன் மெல்லிய உதடுகளால் புன்னகையிட்டு மேனியெங்கும் மின்சாரம் பாய்ச்சி என் போர்வைக்குள் புகுந்து நித்திரை கலைத்தாய்! * என் ஜன்னல் வழி நழுவி வந்து சில்மிஷக் கணங்களில் என் பெண்மை பூக்கச் செய்து உயிரை உருக்கி உலையிலிட்டு ஜீவன் பருகி தாகம் தீர்த்தாய்! * உன் முத்தங்களை பொக்கிஷமாய் மார்புக்குள் பொத்தி வைத்தேன் பிரிவின் துயரில் அவை கரைந்து போயின! * ஞாபகச் சின்னமான நம் நிழல்படம் சிதிலமாகி சிதைந்து கிடக்கிறது! * வீத…

    • 8 replies
    • 3.6k views
  10. தேசத்து அன்னையவள் துயர் துடைத்திட பெற்றவர் மறந்து நீர் புலிப்படை கண்டீர் பாரினில் பலரும் பயந்து நடுங்கிடும் படை கண்டு பகை வென்று போர் கண்டு நின்றீர் ஊனாகி உயிராகி உதிரத்துள் உணர்வாகி உயிரை நீர் எமக்காகத் தந்தீர் ஊரெங்கும் உறங்காது உணர்வுகள் பொசுக்கி உங்கள் மண் காத்திட ஒன்று திரண்டீர் போர் கண்ட பூமியில் புது நெற்களாய் நீர் பூத்துக் காய்த்துப் பொலிந்து தான் நின்றீர் பாதகர் கண்கள் பட்டதனால் இன்று பகடைக் காய்களாய்ப் போனீரோ வீரரே வேர் கண்டு விழுதாகி விருட்சமாய் ஆனீர் வினை கெட்டு விதி கெட்டு வில்லங்கம் சூழ வீழ்ந்திட முடியா மானிடர் நீங்கள் வீதிகள் எல்லாம் வீழ்ந்துதான் போனீர் …

  11. என் வாழ்வில் ஓர் மின்னல்..... கவிதை..... என் வாழ்வில் ஓர் மின்னல்.... முழு நிலவொன்று மின்னலாய் என் கண்களை கடந்து செல்ல....! அதை கண்டதும் அதிசயித்து பின் எனதாக்க முயன்றேன்....! முயற்ச்சித்தேன் பல வழியில் முதலில் மருண்டாள்.. பின்னர் அடம்பிடித்தாள்... அதன் பின் சேர்ந்துகொண்டாள்....! என் வாழ்க்கையின் வெளிச்சம் நீ என்றேன் மகிழ்ந்து கொண்டாள்.. பின்னர் ஓர் இரவு.... காணாமல் மறைந்து விட்டாள்.....! தேடினேன் கிடைக்கவில்லை அதன் பின் தெரிந்து கொண்டேன்.... மின்னலின் குணமோ தோன்றி மறைவதென்று....! தவறு என்மேல் தான் அதை தடுக்க நினைத்ததற்கு....! இளங்கவி

  12. பொங்க வேண்டும் .......... பொங்க வேண்டும் பொங்கல் வயிற்றுக்கு உணவாகும் வெறும் அரிசி பொங்கல் அல்ல .உள்ளத்து உனார்வுடன் , வீர விடுதலை வேட்கையுடன் , பொங்கி எழ வேண்டும் புலம் பெயர் உறவுகள் , உணர்வுகள் பங்களிப்புடன் பொங்கி எழ வேண்டும் வேடுவ சாதி வெடி கொழுத்தி பொங்கி மகிழ்கிறான். என் இனம் வேதனை தீ ,வெறுமை தீ விரக்தி இரத்த ஆற்றில் பொங்கி எழுகிறது. அவனுக்கு ஆயிரம் ஆயிரம் பேர்,உதவிப் பொங்கல் .நம் மானத் தமிழனுக்கு தமிழ் உதவி , உறவுகளின் கை நீட்சி தான் பொங்கல். இன்னும் கரையாத நெஞ்சமுண்டோ , என் சமுதாயமே , பொருளாக பொங்குக உணர்வுகாளால் பொங்்குங்கள் பரப்புரைகளால் போங்குங்கள் கொக்கரிக்கும் கூட்டம் பெட்டி பாம்பாய் ஒரு வேளை அடங்க…

  13. அறிவினுயிர் கற்பனையென்றான் ஐன்ஸ்டீன். என்னுயிர் கற்பனைகளும் அவளாலே. அறிவியல் விந்தைகளும் அவளைப்போலவே... இவள் நெற்றிப்பிறை பூமிப்பெண் சூடும் வளர்பிறை இவள் விழிவீச்சு ஒசோனை ஊடுருவும் புறஊதாக்கதிர்வீச்சு இவள் சிரிப்பலை உலகமியங்கும் மின்காந்த கதிரலை இவள் கண்ணங் கருவிழிகள் விண்மீன்களை விழுங்கும் கருந்துளைகள் இவள் கவுல்கள் வெண்ணிலவின் பால்வண்ணப் பரப்புகள் இவள் செவ்விதழ்கள் செவ்வாய் கிரகத்தின் மண்வளைவுகள் இவள் மறைமேடுகள் ஆழ்கடல் பனிமுகடுகள் இவள் உந்திச்சுழி பால்மவீதிகளில் சுழலும் சூரியசூறாவளி கருந்துளைகள் – black holes சூரியசூறாவளி – solar wind

  14. முட்டுவதற்கு வளர்க்கப்பட்ட ஆடு வெட்டுண்டு கிடக்கிறது மற்றைய ஆடுகள் கதறுகின்றன கத்திக்கு சொந்தக்காரன் யார் என்று பதறுகின்றன முன்பு ஒரு நாள்.. ஆடு கட்டுக்குள் அடங்க மறுத்தது யாருக்கும் சொல்லாமல் கயிறு அறுத்தது ஆயினும் பின்பு ஆடு திருந்தியது தானாகவே வீடு திரும்பியது காலங்கள் ஓடியது.. ஓநாய்களை முட்டப் பழகிய ஆடு புதிய களத்திற்கு ஒரு நாள் வந்தது அங்கே ஓநாய்கள் நிற்கவில்லை உடன்பிறந்த ஆடுகள்தான் நின்றிருந்தன முட்டுவதில் பழைய வேகம் இல்லை முட்டுகிறதா? ஒட்டுகிறதா? எசமானர்களுக்கு சந்தேகம் வந்தது உண்மைதான். இன்றைக்கு ஆடு வெட்டப்பட்டுக் கிடக்கிறது மற்றைய ஆடுகள் எசமானர்கள் பின்னே நடக்கின்றன ஓநாய்களின் பற்தடம் தேடித் திரிகின்றன ஓநாய்க…

    • 8 replies
    • 940 views
  15. Started by nunavilan,

    அரோகரா! அரோகரா! அரோகரா அரோகரா நல்லூர்க் கந்தனுக்கு அரோகரா வண்ணமயில் ஏறிவரும் வடிவேலனுக்கு அரோகரா முருகா! என்னப்பா இது? இனம் மொழி தாண்டி உன்ர வாசலிலை நிறையுது பக்தர்கள் வெள்ளம் கடையில விக்கிற பிள்ளையார் சிலையில மேடின் சைனா இருக்கு கடைக்குட்டிக்கு வாங்கிற அம்மம்மா குழலை வடக்கத்தையான் விற்கிறான் ஐப்பான் காரன் வந்து “சோ” றூம் போடுறான் பாகிஸ்தான் காரன் வந்து பாய் வி(ரி)க்கிறான் கண்ணுக்கு தெரியிற இடமெல்லாம் துரோகிகள் கூட்டம் கண்கட்டி வித்தை காட்டுது சிங்கள தேசம் வெள்ளை வேட்டி கட்டி சுது மாத்தையாக்கள் வெறும் மேலோட களு பண்டாக்கள் போதாக்குறைக்கு விமானச் சீட்டுக்கு…

  16. Started by ivann,

    பிணம் தின்னி கழுகுளாக மாறிய மனிதர்கள் மதம் என்ற மதம் பிடித்த மடையர்கள் நிலம் கேட்காத நிலத்திற்கு நீட்டிய வாள்கள் தன்னவரையும் எதிரியையும் துளைக்கும் குண்டுகள் கொன்று கூவித்துவிட்டு கூச்சலிடும் பீரங்கிகள் அலைந்து பறந்து மரணத்தை அடித்த உலோகப் பறவைகள் கால்களை காகிதமாய் துண்டித்த கண்ணி வெடிகள் ஆடவரை இழந்து விதவையான பெண்களின் ஒப்பாரிகள் தந்தையை இழந்து அனாதையான பிஞ்சுகளின் கூக்குரல்கள் காதலியை தொலைத்து நாட்டிற்காக உயிர்தொலைத்த வீரர்கள் மரணத்தை விட கொடுமையான ஊனங்கள் அந்த ஊனத்தை குறைக்க மருந்தை விற்கும் வியாபாரிகள் நீர் போல ஓடிய ரத்த ஆறுகள் குருதியை குடித்து குளித்த மானிட ராட்சதர்கள் கன்னிகளின் கற்பை சூறையாடிய கயவர்கள் தாயின் பாலை வற்ற வைத்த நயவஞ்சகர்…

    • 8 replies
    • 1.7k views
  17. என்னைப் பிரிந்து நீ எங்கோ வாழ்கிறாய் இருந்தும் நீ பிரிந்ததை ஞாபகப்படுத்த மறுக்கிறது என் காதலின் நினைவு* உன்னோடு வாழ்ந்த காலத்தைவிட உன் நினைவுகளோடு வாழும் காலம்தான் அதிகம் என்றபோதும் என்னைக் கவலைப்பட விட்டதில்லை உன் ஞாபகங்கள் * எரிக்க மனமின்றித்தான் எரித்தேன் உன் கடிதங்களை அதன் எழுத்துக்களாவது என்னோடு எரிந்துவிட வேண்டும் என்பதற்க்காக * என் கவிதைகள் எல்லாமே சோகத்தோடு பிறப்பதால்த்தான் உன் கண்ணில் படமாலிருக்க என் கையாலே கொள்ளிவைத்து விடுகிறேன். * உன்னைச் சந்திக்கும் வரை உன் முகத்தை யார் யாரோ முகத்தில் தேடிப்பார்த்தேன் உன்னைப் பிரிந்த பின் என் முகத்தை யார் யாரிலோ தேடிப் பார்க்கிறேன் * தயவு செய்து என் பெயர…

  18. சுதந்திர வான் நோக்கி தனிப் பறவையாய் நான் இணைச்சிறகடித்து பறந்திட மலரே உன்னை மலர்ச் சிறகாக்கி என்றோ என் நினைவுச் சிலையில் செதுக்கி வைத்தேன்...! தோப்பிருந்து புறப்பட்டு இலக்கு நோக்கிப் பறக்கும் வேளை மலரே உன் நினைவு மட்டும் மனதோடு இல்லைக் கண்டால் அடிக்கும் என் சிறகும் ஓய்தல் காண்கிறேன் அதற்காய் நான் உன்னடிமையில்லை...! உன் அன்புக்கு அடிமையாகி உன்னினைவின் சக்தியில் பறப்பதாய் மட்டுமே உணர்கிறேன் பார்...! அதுவும் ஓர் நிலை உந்துசக்தியாக....! நாளை என் சிறகுகள் பலமிழந்தால்.... உடல் வீழ்வது உறுதி என் இலட்சியம் என்னோடு கனவாகிச் சிதறவும் கூடும் அவ்வேளை உன் அன்பு மட்டும் எனைத் தாங்கும் கோலம் கண்டால் மீண்டும் எழுவேன்...! வேற்றுமையில்லா உன்னன்பு போதுமடி என் ச…

  19. நெய் வடியும் அழகு வதனங்களா.. பொட்டு நிறை பிறை நுதல்களா.. ஓடை நீரோட்டம் கோலம் போடும் பின்னல்களா.. அள்ளி போர்க்கும் மாராப்பு குரும்பைகளா... சங்குக் கழுத்தில் மின்னும் பசும் தங்கங்களா.. வளையல் போட்ட வளைக் கரங்களா.. தொடப் பூரிக்கும் மென் விரல் பூக்களா... மெல்லப் புன்னகையில் மெத்த பேசும் பதுமைகளா.. ஐந்தடி என்றாலும் ஐஸ்வரியம் ஆளைக் கவரும் வர்ணங்களா.. நேர் நோக்கையில் விழி தரைநோக்கும் நாணல்களா.. உங்கள் வாய்மொழி தமிழ் மொழி தேன் சுரக்கும் கொவ்வைகளா.. அந்த தகுதி ஒன்றே போதும்... நீங்கள் தானடி எங்கள் இதயம் கிள்ளும் தமிழச்சிகள்..! (படம்: முகநூல்)

  20. Started by மொழி,

    கைபேசி

  21. ஆயுத கப்பல் வருகுது......!!! கடலில வருகுது கப்பலு கனரகம் தாங்கிய கப்பலு.... போர்க்கலம் ஆயிரம் தாங்கியே போருக்காய் வருகுது கப்பலு... அரபிக் கடலதை தாண்டியே அசைந்து வருகுது கப்பலு.... வின்னிடை பாயும் கணைகளும் தாங்கியே வருகுது கப்பலு.... கனரக ஆட்லெறி கனமதாய் காவியே வருகுதே கப்பலு.... கரிகாலன் படையனி களமதை கனம் பாக்க வருகின்ற கப்பலாம்..... சிங்கள பகையதை சிதைத்திட அந்தோ சிரித்தே வருகுதாம் கப்பலாம்.... சுதந்திர தீபம் ஏற்றிட அந்தோ சுதந்திர கப்பல் வருகுதாம்.... வருகுது கப்பல் வருகுதாம் பகை வஞ்சகம் தீர்க்க வருகுதாம்.... விரைவினில் ஈழம…

    • 8 replies
    • 2.3k views
  22. ''சுட்டு வீழ்த்தடா கிபிரை.......!!!'' எங்கள் வானில் வந்து பகை எம்மை அழிப்பதா......??? இதை கண்டு கண்டு வேங்கை இனி சும்மாய் இருப்பதா.....??? கோரமதாய் வந்து பகை கொன்று அழிப்பதா.....??? எம் தமிழர் உயிர்களையே தின்று களிப்பதா....??? இத்தனையும் ஆடும் பறவை விட்டு வைப்பதா....??? எங்கள் வானில் உள் நுழைய விட்டு கொடுப்பதா....??? கொட்டமடித்து எங்கள் வானில் பறக்க முனைவதா.....??? மீண்டும் மீண்டும் எம் தமிழை அழிக்க நினைப்பதா.....??? இத்துடனே நிறுத்தி கிபிரை சுட்டு வீழத்தடா....!!! வன்னி மைந்தன்

  23. Started by வானவில்,

    சோலையில் பூத்த மலர்களே நீங்கள் கண்மூடி உறங்குங்கள் எங்கள் நிலை பார்த்தால் காலையிலையே நீங்கள் வாடிவிடுவீர்கள் ஆடை தரித்த எங்களூர் இன்று குட்டி கிரோஷிமாவாகிவிட்டது எங்கள் நிலை கண்டு கூவிக் கூவியே நம்மூர் குயில்களின் குரல்களும் தேய்ந்து விட்டன கரைந்த காகங்களும் காலமாகிப் போய்விட்டன அமாவாசை இரவில் பூரணைச் சந்திரனை எதிர் பார்த்து ஏமாந்து போனவர்களாக நாம்! விடிகின்றது தினமும், நமக்கில்லை........ இன்று வரையில் இருட்டிற்குள்தான் நம் விடிவும்...! நாளை போர் தீர்ந்து கண்ணீர் குறையுமா நம் கண்ணில்..........?

  24. Started by sathiri,

    எதிர் பார்த்திருந்தேன் இந்த ஆண்டிற்கான தலையின் படம் வரவில்லை எதிர் பார்த்திருந்தேன் இந்த ஆண்டிற்கான தளபதியின் படம் வரவில்லை எதிர் பார்த்திருந்தேன் உலக நாயகனின் படம் வந்தது ஆனால் எதிர் பார்த்தது கிடைக்கவில்லை எதிர் பார்த்திருந்தேன் சூப்பர் ஸ்ராரை அவர் வருவாரா ? வரமாட்டாரா தெரியாது ஆனால் எதிர் பார்த்த ஒன்று வந்தது ஜ.நா சபை அறிக்கை வழைமைபோல். கண்டிக்கிறோம். எதிர்பார்ப்புக்கள் தொடரும்.....

    • 8 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.