Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. காலக்கரைபற்றி நீள நடக்க முயல்கிறேன் உன்னையும் என்னையும் அறிந்த ஒற்றைத்திங்கள் மட்டும் உடன் வருகிறது. வெட்கமற்று என்னைத் தழுவிய உப்புக் காற்றை உள்ளம் தேடுகிறது. உனக்குமெனக்குமான மோனப் பொழுதுகளில் முகையவிழ்த்த முல்லைகளின் சிரிப்பொலி சில சமயங்களில் இரைச்சலாகவும், சில சமயங்களில் இன்னிசையாகவும்....... காலநதிக்கரையில் பதித்த தடங்கள் இன்னும் சிதையாமல்.... காத தூரம் கடந்தும், கருகியும் பாதைவெளிகள் பிரிந்தும் ..... தொடர்ந்தும்,...... ஒற்றைத்திங்கள் மட்டுமே உடன்வருகிறது சாட்சி சொல்ல.

  2. தகிக்கும் தாபங்களின் உச்சக் கட்டமாய், தளர்வதற்காய்த் தள்ளாடும்... தேகங்களின் தேடல்களுக்கு, இடுக்களில் வடிந்தோடும் - மன்மத நீரில் நீந்தியபடியே... உயிர் பிரியும் போராட்டம்!!! பதின்மங்களில் பெற்றதை பலமுறை பழகிப் பார்க்க, தவறிய சந்தர்ப்பங்களை... இப்பொழுதேனும் முறையாய் நிறைவாய் பயின்றிடத் துடிக்குது, நெஞ்சம் - கொஞ்சம்! ஆனாலும் பக்கத்தில் இல்லையே... என் மஞ்சம்!!! "இயற்கையின் தவிப்பு இயற்கைதான் ! -அப்படியானால், அதை அடக்குதல் என்பது செயற்கையோ???"

  3. கடற்கரைச் சாலையோரம் அந்தி சாயும் மாலை நேரம் கடல் மகள் கலைந்த கோலம் கண்களில் காதல் ஜாலம் அலைகளின் ஆட்டம் எல்லாம் கரைகளை கரைத்து சீண்டும் கடலிடை நாரைக்கூட்டம் காத்திடும் இரைகள் தேட மணலிலே நண்டுக்குடைகள் கடலுடன் தூது பேசும் தவழ்ந்திடும் தென்றல் காற்று உடலதை வருடிச்செல்லும் கரைந்திடும் காக்கை உறைவிடம் நாடிச்செல்லும் இயல் இசைக்கவிதையாக இயற்கையைப் போற்றிப்பாடும்

  4. என் இருப்பின் எல்லைக்குள் என் வசமாகுமா? வெள்ளி மீன் சிரிக்கும் வானக் கடலினுள்ளே பிள்ளை நிலா தவழ்ந்துவரும். மல்லிப் பூ விரிக்கும் மோகனப் பொழுதினிலே உள்ளம் என் வசமிழக்கும். படம் விரித்த கடல் நாகம் தரையிலே மோதும். - பாவம் இடம் விட்டு கரைமகுடி அதைத் திருப்பி அனுப்பும். உப்புக் காற்று வந்து - என் உடல் தழுவி, சப்புக் கொட்டி - பல சண்டித்தனம் செய்யும். தப்பென்று யான் முறைத்தால் அப்பால்ச் சென்று தென்னங்கீற்றோடு கை கொட்டிச் சிரிக்கும். பட்டுத் துகிலுடுத்திச் சிட்டுக்குருவி வரும். மொட்டவிழ் மலரினுள்ளே மட்டு எடுத்துக் கொண்டிருக்கும். வட்டமாய் விழி அகல, வெட்டாமல் யான் முழிக்க - தன் குட்டிச் சொண்டாலே, - எனைக் க…

    • 2 replies
    • 1k views
  5. மண் காக்க தனை தந்த மாவீரரே மனங்களில் நாம் பூஜிக்கின்றோம் இந்நாளிலே சுதந்திர தாகத்தை நெஞ்சில் நிறுத்தியே சுகங்களை எல்லாம் உங்கள் நினைவிலிருந்து அகற்றினீரே உற்றம் சுற்றம் நம் மக்கள் என்றும் கொண்டீரே உயிரையும் துச்சமாக எண்ணிக் கொண்டீரே எதிரியை சூறையாட வெறி கொண்டீரே எமக்காக மண் மீட்க புறப்பட்டீரே தேசத்தின் கனவை சுமந்தபடியே தேகத்தை கொடுத்தீர்கள் ஒரு கணமும் தயங்காமலே வீழ்ந்தாலும் நீங்கள் விதைகளாகவே வீரத்துடன் மீண்டும் எழுவீர் விருட்சமாகவே நமக்காக நம் தேசம் மலரும் என்று நம்பிக்கையுடன் உங்களை போற்றுகின்றோம் இந்நாளிலே …

  6. நந்திக்கடல் – 2012 ஆவணி : நிலாந்தன் மிஞ்சியிருப்பது இரும்பும் சாம்பலுமே, மாமிசத்தாலானதும் சுவாசிப்பதுமாகிய அனைத்தையும் சுட்டெரித்த பின் தங்கத்தாலானதும் துருப்பிடிக்காததுமாகிய அனைத்தையும் கவர்ந்து சென்றுவிட்டார்கள். மாமிசத்தாலாகாததும் துருப்பிடிக்கக் கூடியதுமாகிய இரும்பையெல்லாம் சேகரித்து உப்புக்களியில்குவித்து வைத்திருக்கிறார்கள். உப்புக்களியில் இருபோக மழையில் துருவேறிக் கிடக்கிறது கனவு. காடுகளின் சூரியன் நந்திக் கடலில் உருகி வீழ்கிறான். கானாங்கோழி காணாமற்போனவரின் கடைசிச் சொற்களை அடைகாத்திருக்கிறது. நிலாந்தன், 2012 – ஆவணி, யாழ…

  7. [size=5] [/size] [size=5]சிற்றலை ஓடிவர சிறுநண்டு குழிபுக சிதறுண்டு கிடந்த சோகி சிறுகை கொண்டு சேர்த்தேன். பொறுக்கிய சோகி சேர்த்து பொதுவில வைத்து விட்டு பொத்தலானவென் பையிலிருந்த பொரி முறுக்கை விற்று வந்தேன். கடற்கரை ஓரத்தில் காலாற நடந்துவந்த கனவான்களிடம் தான் காசாக்கினேன் என் பொரி முறுக்கை. சிக்கடித்த தலையுமாய் சீரற்ற உடையுமாய் சில்லறைக்கு முறுக்குவிற்கும் சிறுபையன் தான் நான். இருக்கின்ற முறுக்கு விற்று இனிதாய் திரும்பும் வேளை இருக்குது சில்லறை இவளவும் உனக்கென்றான். எனக்கேன்றதாலோ என்னவோ ஏழைமனம் விரும்பியது எதையும் பார்க்காது ஏங்கியபடி போனதவன்பின்னே. போனவன் சேர்ந்தான் பொ…

  8. மாவீரர் தினம் 2012 எதிரி புலத்தில் களத்தில் மாணவர்கள் நேற்று அழித்தோம் இன்று உருவாக்கினோம் ஆண்கள் மேல் தடை பெண்கள் விளக்கால் உடை கைப்புலிகளை அழித்து உணர்வுப்புலிகளை உசுப்பித்து உலகத்திற்கும் சிங்களத்திற்கும் வெல்ல முடியாது தமிழன் விடுதலை உணர்வை !!!!!!!

    • 0 replies
    • 317 views
  9. மரத்திலிருந்து விழும் ... பழுத்த இலை சொன்னது ...!!! நான் எத்தனையோ முறை .. வானத்தை தோட முயற்சித்தேன் .. முடியவில்லை -என்றாலும் .. கலங்கவில்லை என் அடுத்த .. வாரிசு நிச்சயம் தொடும் ...!!! என் குழந்தை துளிர் .. நிச்சயம் எட்டுவான் ... தந்தை செய்து முடிக்காத .. நாற்காரியத்தை -மகன் நிறைவேற்றியே ..... ஆகவேண்டும் .....!!! & கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை

  10. மனிதம் செத்து விட்டதோ – என் மனம் சொல்கிறது மனிதம் செத்து விட்டது. செய்யாத குற்றத்துக்காக இந்த தண்டனையை ஏற்றுக்கொள்ள என் மனம் குறுகுறுக்கிறது . என் செய்வேன் எனக்கென்று பேச யாருண்டு எங்களுக்கென்று எங்கே நாடுண்டு எவரிடம் கேட்பேன் நீதி..! என் குடும்ப சுமையை இறக்குவதற்காக – என் தலைமேலே நான் ஏற்றிய சிலுவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது தான் மனிதாபிமானமற்ற அரக்கர்களிவர்கள் என உணரவைத்தது. இதைவிட என் குடும்பத்தோடு எனது நாட்டிலிருந்து … பட்டினியால் செத்திருக்கலாமோ என எண்ணுகிறேன். ஒரு பச்சிளம் குழந்தையை நான் கொண்றேன் என்று பழி என்மீது விழுந்தது. அந்த பிள்ளையினால் தானே எனக்கு கிடைத்தது வாழ்வு நானேன் கொல்ல வேண்டும். பால் குடிக்கும் ப…

    • 0 replies
    • 518 views
  11. Started by theeya,

    ---

    • 6 replies
    • 1.6k views
  12. எழுதியதெல்லாம் மொழிபெயர்ப்புத்தான். இளைஞர் விழிகளில் எரியும் சுடர்களையும், போராடுவோரின் நெற்றிச் சுழிப்புகளையும் இதுவரை கவிதையென்று மொழிபெயர்த்திருக்கிறேன்! ******* உயிர்ப்பின் முதல் நொடியை உணர முயல்கிறேன் மீண்டும் பொருளில் உணர்வு தோன்றிய கணம் ஓடுவரா முட்டையின் முதல் அசைவு வித்தின் மண்தேடும் ஆதி விழைவு நரைத்து ஒரு முடி உதிர்ந்த சமயம் உணர்ந்தேன் அது என் மறதியின் முதல் நொடி ****** மனுசங்கடா நாங்க மனுசங்கடா உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள மனுசங்கடா நாங்க மனுசங்கடா எங்களோட மானம் என்ன தெருவில கிடக…

  13. தாங்கவியலா வெறுமைகளில் அமிழ்ந்து விழிகளில் நீர்வர நினைவுகள் கரைந்தழிகிறது... எழுதுகோலும் வெற்றுத்தாளுமாய் என் எதிரிலே... எதை எழுதுவது...? முகவரி இழந்து முகமிழந்து முற்றத்து நிழல் இழந்து ஊர் சுமந்த கனவிழந்து உள்ளே வலி சுமந்து அகதியாய் உருக்குலைந்து கிடக்கும் கதை எழுதவா..? ஒளித்து ஒளித்து - தன் இணையுடன் விளையாடும் ஒற்றைப்பனை அணிலுக்கும் விரத விருந்துண்டு களைத்து முற்றத்தில் துருத்திக்கொண்டு நிற்கும் வேம்பில் கரகரத்த குரலில் கரையும் காக்கைக்கும் கிடைத்த சுதந்திரம் என் மண்ணில் என் முற்றத்தில் எனக்கு மறுக்கப்பட்டதை எழுதவா..? என் பாடு பொருளாய் பலகாலம் இருந்த கொலுசொன்றின் ஒலிக்காக மனசெல்லாம் காத்த…

  14. உடல்கள் புதைந்தாலும் உணர்வு புதையவில்லை.... இளங்கவியின் - கவிதை..... முற்றத்தில் வேப்பம் பூ கோலமிட... வாசலுக்கு வெற்றிலைகள் மாலையிட... செம்பருத்தி பூ வருவொரை வரவேற்க ஆச்சியின் எடுப்பான வெளிப்பல்லு சொந்தங்களை அன்பாக வரவேற்ற.... எங்கள் அன்பான தமிழீழம் அழிந்து அடிமண்ணில் புதைந்ததுவே..... இடப்பெயர்வில் தொடங்கி பட்டினியில் தொடர்ந்து பயத்திலே வாழ்ந்து பாதியாய் செத்து; பின்னர் மீதியும் செத்த; மானமுள்ள தமிழினமாம்..! ;இன்று மண்ணோடு மண்ணாக மரணப் புதைகுழியில்.... கடைசிக் கதறலும் கயவனுக்கு கேட்கவில்லை கண்ணீரில் பல குழந்தை அவர்கட்கு காயமும் வலிக்கவில்லை ஆனாலும் தன் மரணம் ஏனென்றுதான் புரியவில்லை உயிருடன் உள் …

  15. நான் ஒரு இஸ்லாமியன் இஸ்லாமியக் குடியரசுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நான் ஒரு இஸ்லாமியன் எனக்கும் எந்திரத் துப்பாக்கிகளுக்கும் பெண்களை இருட்டறையில் பூட்டுவதற்கும் அமெரிக்க டாலர்களுக்கும் கல்லால் அடித்துக்கொல்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை நான் ஒரு இஸ்லாமியன் இறைவனை நம்புகிறவன் அதனாலேயே கருணையை நம்புகிறவன் கடவுளினால் நீதி மறுக்கப்பட்டால் அந்தக் கடவுளை சந்தேகிக்கவும் தயங்காதவன் சமாதானத்திலும் சுதந்திரத்திலும் இறைவனை தொட்டு உணர்கிறவன் மசூதியை இடித்தவனை எப்படி வெறுக்கிறேனோ அவ்வாறே புத்தரின் சிலையை வெடிவைத்து தகர்ப்பவனையும் வெறுக்கிறேன் எல்லா பழங்கால தண்டனைமுறைகளும் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்று நம்புகிறேன் நா…

  16. Started by eezhanation,

    உதிக்கையிலே மெல்லெனச்சிரித்தது உச்சியிலே சுள்ளென முறைக்கும் சாய்ந்தாடும் மரஞ்செடியும் சலனமின்றி விறைக்கும். ஊரெல்லாம் புழுங்கும் உடல்களெல்லாம் வியர்வை வெள்ளம்விழுங்கும். அடர்மர முற்றமதில் சுற்றமொன்றாய்க்கூடும் சிறுசுகளும் பெருசுகளும் விசிறிகொண்டு வீசும் நாசியிலே புழுதிமணம் புதுச்சேதி ஒன்றுபேசும். காய்ந்த புல்லை மேய்ந்தபசு தாகசாந்தி தேடும் நட்டுவைத்த பயிர்களெல்லாம் தலைகுனிந்தே வாடும். வாய்பிளந்த பூமியது நீலவானை நோக்கும் பொறுமையன்றோ உனது பண்பு என்று வானம் கேட்கும். தூரவான இடியோசை காற்றின் சிறை உடைக்கும் சில்லென்றதென்றல் வந்து புதிய யுகம்…

  17. மழையை என்றால் குடையும் கூடவே .. வானம் என்றால் முகிலும் கூடவே ... மரம் என்றால் காற்றும் கூடவே .. நிலா என்றால் நட்சத்திரம் கூடவே .. ஒன்றை விட்டு இன்னொன்று தேடலில் .. என்னை விட்டு உன்னை தேடலில் .. உன் கண் கண்டபின் காதல் தேடலில் .. இருவரும் சேர்கையில் காமம் தேடலில் .. எல்லோரும் போல் உன்னை ரசிக்க .. எல்லோரும் போல் உனக்கு பொய் சொல்ல .. எல்லோரும் போல் உன்னை வர்ணிக்க ... எல்லோரும் போல் நான் புலவன் இல்லை .. என்னுள் மறைந்து இருந்து பார்க்கும் .. என்னுள் என்னை தேடும் காதல் .. உன்னில் மட்டும் வராமால் போகுமோ .. எம்மை நாம் ஆக்கும் காலம் வரும் .. அதுவரை நம் காதல் கவிதையில் .. வாழட்டும் ரசனையில் இருக்கட்டும் .. எம் குடில் நாம் அமைக்கு…

  18. Started by amudhini,

    தோரண வாயில் எல்லாம் விளம்பர விசாரிப்புகள் வெள்ளை கோபுரம் வண்ணமேற்றி கொண்டுள்ளது கருங்கல் தூண்கள் பளிங்குப் போர்வையில் பதுங்கிவிட்டன தொன்னையில் சிரித்த பொங்கல் நயிலான் பையில் அழுகின்றது அர்ச்சகரெல்லாம் நகைக்கடை ஒப்பனைகளாய் சாமி சயனத்தில் இருப்பதால் சந்திக்க இயலாதாம் ஏமாற்ற் வெளினடப்பில் எதிர்ப்பட்ட சிறுவன் ஏந்திய கையில் இருந்த இறைவன் கேட்டான் “இங்கு விடுத்து எங்கு தேடினாய் என்னை” என்று

  19. முதன் முதலாய் அம்மாவுக்கு... ஆயிரந்தான் கவிசொன்னேன் அழகழகாப் பொய் சொன்னேன் பெத்தவளே ஒம்பெரு(மை)ம ஒத்தவரி சொல்லலையே! காத்தெல்லாம் மகன்பாட்டு காயிதத்தில் அவன் எழுத்து ஊரெல்லாம் மகன் பேச்சு ஒங்கீர்த்தி எழுதலையே! எழுதவோ படிக்கவோ ஏலாத தாய்பத்தி எழுதிஎன்ன லாபமின்னு எழுதாமாப் போனேனோ? பொன்னையாத் தேவன் பெத்த பொன்னே! குலமகளே! என்னைப் புறந்தள்ள இடுப்புல்வலி பொறுத்தவளே! வைரமுத்து பிறப்பான்னு வயித்தில்நீ சுமந்ததில்ல வயித்தில்நீ சுமந்த ஒண்ணு வைரமுத்து ஆயிருச்சு கண்ணுகாது மூக்கோட கறுப்பா ஒருபிண்டம் இடப்பக்கம் கெடக்கையில என்னென்ன நெனச்சிருப்ப? கத்தி எடுப்பவனோ? களவாணப் பிறந்தவனோ? தரணிஆள வந…

  20. இன்றைய தேதியில்... மகிமைக்கு உரிய அத்தனை பேரையும், பத்துநாள் பட்டினி போட்டால் திருந்துவார்கள்! அந்தஸ்தோடு ஆட்டிப்படைக்கும் மனித எந்திரங்கள்!! அதிகாரங்களின் அதிகாரங்கள் இவர்கள்!!! அவர்களை நினைத்தாலே போதும் ... ஒலிவாங்கியோடு ஒரு ஒளிநாடாதான் எம் கண்முன் நிற்கும். அதை விட்டால் வேறொன்றும் வராது!? வராதா....????!!!! அடங்குவதும் தாங்குவதும் அவர்களுக்கும் இயல்புதான். அவர்கள் வாழும் முகவரியும் அதே எங்கள் பூமிதான். வலியும் கிலியும் அவர்களுக்கும் இருக்கு. வழியும் சளியும் ... நெளியும் பாம்பும் அவர்களையும் பயமுறுத்தும். என்றாவது ஒருநாளேனும் அவர்களை இயல்பாய் பார்த்திருக்கின்றோமா? பசித்தலும் புசித்தலும்... புசித்தபின் படுத்தலும் , காலையிலெழுதலும் காலைக…

  21. ஊரெல்லாம் வீடுகள் இருந்தது வீடெல்லாம் மனிதர்கள் இருந்தார்கள் தேர்முட்டியில் ஆட்கள் இருந்தார்கள் திருவிழாக்களில் கூட்டம் இருந்தது. நாடுமாற நாங்கள் திசைமாறி வந்தோம். ஊரெல்லாம் வீடுகள் இருக்கிறது வீடுகள்தான் பாழ்பட்டுக் கிடக்கிறது சிலவீடுகள் கூரையில்லாது தவிக்கிறது சிலவீடுகள் சுவருடைந்து தவிக்கிறது சிலவீட்டில் காட்டாக்காலி வாழ்கிறது வேலிகள் இல்லாது வளவுகள் தவிக்கிறது துகில் போனபின் அது அம்மணமாய் துடிக்கிறது வாடகை கொடுத்துக் குடியிருந்தார் அப்பொழுது வருமானம் வேண்டிக் குடியிருக்கிறார் இப்பொழுது காலம் மாறி இருக்கிறது. கனடாவுக்கு கதைத்து முடிவெடுக்கிறார். ஆண்டவனைத் துாக்குவதற்கே ஆள்பிடிக்கப் அலைகிறார்கள். அகப்பட்டால் அவர் சகடையில் ஊர்வலம் …

  22. அமைதியின் நிழல் மரணம் கொன்றடக்கப்படும் ஆயுதமாகும் பொழுது யார் யாரோ போராடத் தொடங்குகிறார்கள் சனங்கள் அமைதியின் நிழலை இப்பூமியில் என்றாவது ஒரு நாள் மீளவும் உருவாக்குவார்கள் இருள் கவிழந்த பொழுதில் இந்த வார்த்தைகளை எழுதி வைக்கிறேன் உனது போரைத் துடைத்து அதிகார நிழலை அடித்து விரட்டுகையில் இப்பூமியில் வெளிச்சம் படரும் இரத்தமும் காயமும் இல்லாத பூக்கள் பூத்துக் கொட்டும் அமைதியின் நிழலைப் பார்க்காது முடிக்கிறது இந்தக் காலம் அது எவ்வளவு அழகாயிருக்கும்? _________________________ தீபச்செல்வன்

    • 1 reply
    • 1.2k views
  23. இரு வேறுபட்ட இல்லத்தில் .... பிறந்து ஒரு வேறுபாடும் .... தெரியாமல் வாழ்வது ... நல் இல்லறம் ....!!! ஆயிரம் கிளைநதிகள் .... சங்கமிப்பது சமுத்திரத்தில் .... ஆயிரம் எண்ணங்கள் .... சங்கமிப்பது , வாழ்வது.... நல் இல்லறம் ....!!! + கே இனியவன் இல்லறக்கவிதைகள்

  24. புத்துணர்ச்சியூட்டிப் புதுவாழ்வைக் காட்டுத்காய் பொங்கல் நன்னாள் எம்முன் புன்னகைத்து வருகிறது. வாருங்கள் நண்பர்களே வரவேற்போம் புத்தாண்டை நீர்மேல் எழுத்தாகி நிலைகுலைந்து எம் வாழ்வு போரால் அழிந்ததனைப் புதுப்பிக்க, எங்களது இன்னல்கள் நீங்கி இனியதொரு பொற்காலம் மின்னி ஒளிர விளக்கேற்றி வாருங்கள். போனதெல்லாம் போகட்டும் புது வாழ்வு இனிவேண்டும் காய்ந்து நிலம்பிழந்து கட்டாந்தரையாகி ஓய்ந்ததனால் எல்லா உயிர்ப்பும், எம் தாயகத்தில் சாய்ந்தவைகள் மீண்டும் சாம்பரிலே நின்றெழும்ப பாடிடுவோம் தோழர்களே பண்ணெடுத்துப் பாடிடுவோம் வேதமுதல்வன் விழிதிறந்து நெற்றியிலே ஊதிப் பொறிசிதற உள்ளங்கள் ஒன்றிணையச் சந்தமெடுத்துத் தமிழினிக்கப் பாடிடுவோம். ஆதிசிவன் பெற…

    • 0 replies
    • 934 views
  25. நீ என் நிலவரசி முகில்களைக் கிழித்து வெண்புரவி பறக்கிறது. கைக்கெட்டாத் தூரத்தில் என்று காற்று காதில் கிசுகிசுத்தது. ஆழிக்குமிழிகள் போல் வெளியே தெரியாமல் உள்ளத்ததில் பெரிய பெரிய.. முகில்களைக் கிழித்தாயிற்று அடுத்தென்ன? இன்னுமின்னும் அண்டத்தை நோக்கி பயணம் தொடர்கிறது. தொட்டே தீருவேன் வேட்கை வியாபித்து விரிகிறது. கட்டித் தழுவி நீயிடும் முத்தத்திற்கான அவா ஆவியை உசுப்புகிறது. தீபோல் உன்மேல் நான்கொண்ட காதல். என்னை எரித்தெரித்து என் சுயத்தை சாம்பலாக்கி சரசமிடுகிறது. உருவழிகிறாய் என்று ஓரத்தில் ஒருமனம் விசிக்கிறது. உணர்ந்தும், உயிர்ப்பு உன்னை மட்டுமே யாசிக்கிறது. அடி!, என் நெஞ்சக் கூட்டறையில் குடிகொண்ட நிலவரசி என் மஞ்சச் சாய்கைக்கு நீ மடிதருவதெப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.