கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
மனதை நெருடிய கவிதை. கடவுள்......? கலைமகள்: பாலுமினி பாகும் பருப்புடனே தேனீந்து காலம் முழுதுமுனைக் கைதொழுதோம் - சீலமுடன் சங்கத் தமிழ்வீரம் சாற்றும் மறத்தமிழைச் சிங்கம் சிதைக்கவிட்ட தேன் வெள்ளைக் கொடிபிடித்து வெள்ளை மனமெடுத்து வெள்ளம் எனும்மக்கள் வாழ்வதனை - அள்ளி கோரக் கொலைசெய்வோர் கேடு நிறுத்தவர வாரி உடல்சிதைத்த தேன் மலைமகள்: தேருங் கலை,கல்வி திறைபொன்னும் பின்வைத்துப் பேரும் புகழ்வீரம் பெரிதென்றோம் - சேருமனம் உன்னை முதல்வைத்தே உள்ளம் தொழுதவரை அன்னைநீ மாளவிட்ட தேன் கல்விபணம் காப்பதெனில் காணும் சுதந்திரமே இல்லையொரு வேற்றுவழி என்றெண்ணி - வல்லவராய் வாழ்வின் விடுதலைக்கு வாளெடுத்த நல்லவரை வீழ்ந்திடவென் றாக்கியது மேன் கலைமகள…
-
- 0 replies
- 703 views
-
-
ஒரு பிரகடனத்தின் எதிர்வினை - சஹானா எங்களுடைய புன்னகையை சந்தேகிக்கும் எல்லோருக்கும் சொல்கிறோம்……. எங்கள் கடல் அழகாயிருந்தது எங்கள் நதியிடம் சங்கீதமிருந்தது எங்கள் பறவைகளிடம் கூட விடுதலையின் பாடல் இருந்தது….. எங்கள் நிலத்தில்தான் எங்கள் வேர்கள் இருந்தன… நாங்கள் நாங்கள் மட்டும்தான் இருந்தோம் எம்மூரில்… அவர்கள் எங்கள் கடலைத் தின்றார்கள்… அவர்கள்தான் எங்கள் நதியின் குரல்வளையை நசித்தார்கள்… அவர்கள்தான் எங்கள் பறவைகளை வேட்டையாடினார்கள்…….. எங்கள் நிலங்களைவிட்டு எம்மைத் துரத்தினார்கள் அவர்கள்தான் எங்கள் குழந்தைகளின் புன்னகைகளை தெருவில் போட்டு நசித்தார்கள்….. நாங்கள் என்ன சொல்வது நீங்களே தீர்மானித்து …
-
- 3 replies
- 1.3k views
-
-
தலைவரை வாழ்த்தி பதியப்படும் கவிகளை இங்கு இணைக்கிறேன் அறுபத்தியொரு கவிதைகளை இணைக்க வேண்டும் என்னும் ஒரு ஆசையில் முடிந்தால் நீங்களும் உங்கள் கண்களுக்கு தென்படும் வாழ்த்துப்பாக்களை இணையுங்கள் உறவுகளே . 1. எங்களுக்குள் இருக்கும் சின்னப்பிள்ளைத் தனங்களை நினைக்கும்போதுநீ இன்னும் எங்களுக்குள் ஆச்சரியங்கள் நிகழ்த்துகின்றாய்வெறும் பேச்சுக்களில் பிரபாகரன் ஆகிவிடவேண்டுமென நினைக்கும் வியாபாரிகள் மத்தியில் நீ தெளிந்த உருவமாய் தெரிகின்றாய் உனது மயிராகவும் கூட ஒருவனும் ஆக முடியாது என கடந்த ஆறு வருடத்தில் வரலாறு நிரூபித்துவிட்டது கால புருசர்கள் வெறும் கைதட்டல்கள் மத்தியில் உருவாக முடியாது. நெடும்புயல்களுக்கு பூகம்பங்களுக்கு நெரு…
-
- 9 replies
- 48.5k views
-
-
-
வைரமுத்துவின் கவிதைகள் 1. சங்க காலம் ஆற்றுத் தூநீர் ஆரல் உண்டு குருகு பறக்கும் தீம்புனல் நாடன் கற்றை நிலவு காயும் காட்டிடை என்கை பற்றி இலங்குவளை நெகிழ்த்து மேனி வியர்ப்ப மெல்லிடை ஒடித்து வாட்கண் மயங்க உண்டதை மீண்டும் பசலை உண்ணும் பாராய் தோழி 2. காவிய காலம் பொன்னங் கொடியென்பார் போதலரும் பூவென்பார் மின்னல் மிடைந்த இடையென்பார் - இன்னும் கரும்பிருக்கும் கூந்தல் சுடர்த்தொடிஉன் சொல்லில் கரும்பிருக்கும் என்பார் கவி. 3. சமய காலம் வெண்ணிலவால் பொங்குதியோ விரக்தியால் பொங்குதியோ பெண்ணொருத்தி நான்விடுக்கும் பெருமூச்சாற் பொங்குதியோ பண்ணளந்த மால்வண்ணன் பள்ளிகொண்ட பான்மையினால் விண்ணளந்து பொங்குதியோ விளம்பாய் பாற்கடலே! …
-
- 2 replies
- 6.1k views
-
-
கில்லாடி நாடு கெட்டுப் போனாலும் நமக்கென்ன என்றே தன் வீடு மட்டும் வாழ விதிவகுத்த கில்லாடி தொண்ணூறைத் தாண்டி தொண்டு கிழமானாலும் மண்ணாசை மாறாதெம் வாழ்வழிக்கும் கில்லாடி ஈழத்தமிழர்களை இனக்கொலைக்கு ஆளாக்கி வாழத்தன் சொந்தம், வழிவகுத்த கில்லாடி. மந்திரிகளாக்க மகள் மகன்மார் பேரர்களை செந்தமிழ் ஈழத்தைச் சிதைத்திட்ட கில்லாடி ஐயா வருவார் அரவணைப்பார் என்றிருக்க பொய்யாயுண்ணாவிரதப் புரளி செய்த கில்லாடி
-
- 4 replies
- 2.3k views
-
-
பணத்துக்காக .... திருமணம் செய்தேன்.... என்னை விட பணத்தை .... வட்டிக்கு கொடுப்பவன்..... சந்தோசமாய் ..... இருக்கிறான் .....!!! திருமணத்தை ...... மணவாழ்கையாக ..... செய்யாமல் .... பணவாழ்கையாய் ....... செய்தால் வாழ்க்கையும் .... சந்தை பொருள்தான் ....!!! ^ நினைத்து பார்த்தால் வலிக்கிறது கவிப்புயல் இனியவன்
-
- 1 reply
- 748 views
-
-
காலுடைந்த ஆட்டுக் குட்டியும் சிறுமியும் நொந்து போன நாட்களைத் தனது சின்னஞ்சிறு தோள்களில் சுமந்தலைந்த சிறுமி காலுடைந்த ஆட்டுக்குட்டியைக் கீழிறக்கி வைத்துவிட்டு மண்தெருவில் சிந்திக் கிடக்கும் நெல் மணிகளைக் குடிசைக்குள் காவிச் சென்றிட நினைக்கிறாள் முன்பெனில் வயல் வரப்பொன்றில் குந்தியிருந்து அவளது பிஞ்சுக் குரலெட்டாத் தொலைவு வரை திரிந்து உதிரி நெற்கதிர் பொறுக்கி வரும் அம்மாவுக்காகக் காத்திருப்பாள். அம்மா திரும்பி வரும் வேளை ஒரு முயல் குட்டியை ஒரு செம்மறியாட்டு மந்தையை ஒரு அபூர்வப் பறவையை விழிகளால் துரத்தியவாறு மாபெரிய வானத்தில் முகில் கூட்டங்களிடையே அலைந்து கொண்டிருப்பாள் அல்லது நாரைக் கூட்டங்களுக்குக் கையசைத்து விடைகொடுத்தவாறு அவை சென்று …
-
- 3 replies
- 795 views
-
-
பெரியாரின் தம்பி பிரபாகரனின் தொண்டன் பாரதிராசாவின் சீடன் சத்தியராசாவின் தோழன் சீமானின் ஆசான் புலியாக வாழ்ந்த காந்தி சினிமாவில் இருந்தும் போராளிகளைத்தந்தவன் எதைச்செய்தாலும் - அதில் ஈழத்தமிழர் நலன் சேர்த்தவன் எங்கு சென்றாலும் - எமக்காக இரு சொல் பேசியவன் இடியாக இறங்கியது செய்தி இழந்து நிற்கின்றோம் எம் நெஞ்செல்லாம் வீற்றிருக்கும் ஒப்பற்ற தோழனே அண்ணனே உன்னை மறவோம் நாம் தமிழிருக்கும் வரை உன் பெயர் இருக்கும் உன் கனவு பலிக்கும் அதை கண்ணால் காண எம்முள் வந்து பிறப்பாயாக...........
-
- 15 replies
- 1.9k views
-
-
என் இனமே என் சனமே கூடு சேரும் பறவைகளே நம்புங்கள் தமிழீழம் நிச்சயம் கிடைக்கும் தானைத்தலைவன் கண்சிவப்பது என் இனத்தின் மீது சூரிய ஒளி பட்டொளியாய் வீசவே அன்னைபூமியின் மடியில் உறங்கும் பாலகர் மீது சத்தியம் மாய்ந்து விட்ட மழழைகள் மீது சத்தியம் மரணித்த மங்கையர் மீது சத்தியம் வித்துக்களை தந்த வீரத்தாய் மீது சத்தியம் பண்பாட்டின் பாட்டிகள்.பாட்டனார்மீது சத்தியம் மானம் காத்த மறவர் மீது சத்தியம் சகோதரி சகொதரன் மீது சத்தியம் என் இனமே என் சனமே கூடு சேரும் பறவைகளே நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும் அதுவும் தானைத் தலைவன் காலத்திலே என் இனமே என் சனமே பூக்கள் பூத்துக் குலுங்கும் தேனீக்கள் இசை பாடும் நெற்கதிர்கள்வரவேற்கும் தலயசைத்து முற்றத்து…
-
- 1 reply
- 1.1k views
-
-
எனக்கு உள்ளே ஒரு நெருப்பு கனன்று கொண்டிருக்கின்றது. மன அழுத்தம், சிதளூரும் காயங்கள், மற்றும் நெஞ்சு நிறைந்த வலிகள், எல்லாம் ஒன்றுகூடி ஒவ்வொரு நொடியும் என்னை விரட்டுகின்றன. இருள் ஆழமாக, அதிகமாக என்னைப் பின்தொடர்ந்து வருகிறது. மிகவும் சிக்கலான கோடுகள் என்னைச் சுற்றி வரையப்பட்டன. என் சுதந்திரம் சிறைபிடிக்கப்பட்டபோது யதார்த்தம் செத்துப்போனது. நட்சத்திரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உதிர்ந்த பின்னிரவில், நிலவு மறைந்து போனது, மீளா இருள் எங்கும் வியாபித்தது. மின்மினிகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசை கட்டிப் பறந்தன. நீரோடி வியாபித்த நீர்நிலைகள் வற்றி வறண்டன. பள்ளத்தாக்குகள் சுக்குநூறாகப் பிளவுபட்டன. கண்ணுக்கெட்டிய திசையெங்கும் கந்தகப் பு…
-
- 10 replies
- 853 views
-
-
மகாத்மாவுக்கு ஒரு மனிதனின் அஞ்சலி. மகானே! மீண்டும் பிறந்து வா! குண்டுகளுக்கும் தோட்டாகளுக்கும் பயப்படாதவன் நீ! ஆகையால் மீண்டும் பிறந்து வா! தலைவனை இழந்து துயரப்படும் குழந்தைகள் நாங்கள்! 'இன்று' எங்களுக்கு எல்லாவற்றையும் கற்றுத்தருகிறது அம்மை அப்பனை முதியோர் இல்லத்தில் சேர்க்க! சகோதரனை சொத்துக்காக ஹர சம்ஹாரம் செய்ய! மனைவியை மந்தையாக்க! எதிரிகளை முதுகில் குத்த! என எல்லாவற்றையும் இன்றைய இன்று எங்களுக்குக் கற்றுத்தருகிறது. விலைமகளிடம் போய்விட்டு விலை போகாமல் வந்தவன் நீ! இன்று விலைமகளிடம் போய்விட்டு விலைகொடுத்து வாங்கி வருகிறோம் நாங்கள்! காலத்தைப் பார்த்தாயா மகானே! வா! வந்து படித்த சிலருக்கேனும் வாழு…
-
- 2 replies
- 1k views
-
-
மே15 சென்னையில் இருந்தேன். என் உறவினர்கள் பலர் களபலியான குமுதினிப் படகுப் படுகொலை சமபவச்சேதி கேட்டு மனசும் ஆன்மாவும் கந்தலாய்க் கிழிந்துபோனது. இரவு தூங்க முடியவில்லை. அண்ணா நகரில் வாழெத என் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றேன். அந்த இரவே "இரத்தம் எழுதிய கவிதை" என அஞ்சலி எழுத ஆரம்பித்தேன். அப்போது விடுதலை அமைப்புகளுக்கிடையில் ஐக்கிய முன்னணியை உருவாக்கும் கனவுகள் மெய்படாத துயரில் வாடியிருந்த காலம். அஞ்சலி எழுதி முடித்தபோது மே 16 விடிய ஆரம்பித்திருந்தது. விடியும். இரத்தம் எழுதிய கவிதை - வ.ஐ.ச.ஜெயபாலன் மே பதினைந்தில் இந்துமா கடலில் வானம் அதிர ஓலமிட்டது புயல் தீண்டிய கருங்கடலல்ல. என்னரும் தீவின் மக்கள் அறிவீர்! அன்று என் கரைகளில் சிவப்பாய்ச் சுடர்ந்தது மேதினத் தன்றெ…
-
- 2 replies
- 881 views
-
-
என் கவிதா ப்ரவாகம் [2] காதல் உன் கடிதங்களோடு உன் எல்லாவற்றையும் திருப்பி கேட்டாய். தந்தேன்! மன்னித்துக்கொள்!! உன் காதலை திருப்பி கேட்ட உனக்கு என் காதலையும் கேட்டது என்ன நியாயம்??? என் காதல் மட்டும் இன்னும் அப்படியே... நீ விட்டு போன மீதி வசந்தங்களோடு நன்றாகவே!!!! நான் மட்டும் தொலைந்து போன அந்த நாட்களை இன்னமும் தேடுகின்றேன் திருடப்பட்டது புரியாமல்!!!!!
-
- 3 replies
- 1.5k views
-
-
உனக்கும் எனக்குமான இறுமாப்பு ஏகாந்த வெளிதனில் எல்லைகளற்று விரிந்திருந்தது அதுவே இன்று நிட்சயம் அற்றதாய் நம்பிக்கையற்றதாய் நாளும் நடுவானில் நூலறுந்த பட்டமாய் நரகமாகிக் கொண்டிருக்கிறது எந்நேரமும் உச்சரிக்கும் இரகசிய மந்திரமாய் மனம் ஏக்கங்கள் கண்டு இன்றும் வாழ்கிறது ஏதிலியாய் எதுவுமற்று வாழ்தலற்ற வகையின்றி வரம்புகள் கடந்தோம் தான் வகை தெரியா மூடர்களாய் வெற்று வெளியில் நாமின்று வேலிகள் எதுவும் இன்றி விழுதுகள் கூட இன்றி வேடர்களின் வில்லாய் நாம் வசமானோம் வரப்புகள் இன்றி விதியின் சதிதானா வீழ்ந்தது மதியின் தவறிய கணக்காய் மனிதம் தொலைத்த மனம் மிச்சத்தின் எச்சங்களாக எங்கும் எண்ணக் கணக்குகள் தவற எதிரிகள் எண்ணற்றுப் போக எதுமற்றவர்களாய் நாங்கள்…
-
- 5 replies
- 607 views
-
-
தமிழனையே தாக்குகின்றாய் நீயும் தமிழன் இல்லையடா? தேசியத்துக்கு துரோகம் செயவது நீங்கள் இங்கு ஏனடா ஏன் தான் நாய்கள் போல குரைக்கிறீங்கள் இங்கு ஏனடா கிணத்து தவளை போல நீங்கள் கத்துவது ஏனடா மாரித் தவக்கை போல கத்துவது நீங்கள ஏனடா கடசியில வயிறு வெடித்து சாவதும் நீங்கள் தானேடா தமிழனையே தூற்றுவது நீங்கள் ஏனடா இங்கு தமிழ்தாயின் துகிலை உரிவது ஏனடா?
-
- 9 replies
- 3.1k views
-
-
பிரபஞ்சத்தின் அந்தகார இருளில் மூழ்கிக் கிடந்த பூமிப் பந்தில் தோன்றிய சிறியதொரு ஒளிக்கீற்று! பிரம தேவனின் பிரதிநிதியாய் உயிர்ச்சங்கிலி ஓய்ந்து விடாது ஓட வைக்கும் அற்புதப் படைப்பு! கருவை வளர்த்தெடுத்து, அதன் கண்ணையும்,மூக்கையும் கற்பனையில் வடித்துக் குருதியில் குளித்துச் சிலையாய் வடித்தெடுக்கும் ஒரு சிற்பியின் திறமை! குழந்தையின் முகம் பார்த்துக் காலம் காலமாய்க் கட்டி வைத்த ஆசைகளின் கனவுக் கோட்டையைக் கணப்பொழுதில் உடைத்தெறியும் ஒரு முனிவனின் முதிர்ச்சி! நோய் கண்ட வேளையில், இரவும் பகலும், அரைக்கண் மூடி, நீ கொள்ளும் அனந்த சயனத்தில் பாற்கடலில் பள்ளிகொள்ளும் அந்தப் பரந்தாமனின் பக்குவம்! பூவைத் துளைத்து அதன் …
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
அன்பின் நண்பனே... பட்டாம்பூச்சி பெண் என்னை விழிகளுக்குள் சிறைபடுத்தி கொண்டாய் ... எப்போது விடுவிக்கப் போகிறாய்... உன் நெஞ்சை மஞ்சமாக்கி துயில் கொள்ள என் நெஞ்சம் கெஞ்சுகின்றதே... எப்போது என்னருகில் வரப்போகிறாய்... விழி மூடி தூங்க முயற்சித்தால் இமைகளுக்குள் வந்து இம்சிக்கிறாய்... எப்போது தூக்கம் தரப்போகிறாய்... மயக்கும் சிரிப்பிலும் வசீகர குரலிலும் உயிரை வசியம் செய்தவனே... எப்போது என்னுயிரை திருப்பி தரப்போகிறாய்... சிரிக்க வைத்து ரசிக்க வைத்த என் நண்பனே எப்போது என்னுள் நுழைந்தாய் காதலனாக... நண்பன் காதலனான கதை இருக்கட்டும் அன்புக்காதலா எப்போது மீண்டும் என் நண்பனாகப் போகிறாய்... அறுசுவை.- அனுதீபா
-
- 0 replies
- 940 views
-
-
தூக்கத்தில் நடப்பவை தூக்கத்தில் கனவுகள் நிகழ்கின்றன கனவுகள் பெரும்பாலும் நினைவிலிருப்பதில்லை தூங்குவதுபோல் கனவு கண்டு விழிப்பவர்களுக்கு தூக்கமே கனவாகப் போய்விடுகிறது தூக்கத்தில் மரணங்கள் நிகழ்கின்றன தூக்கத்தில் சாவது நல்ல சாவென்று செத்தவனைத் தவிர்த்து எல்லோரும் சொல்லுவார்கள் தூக்கத்தில் விபத்துகள் நிகழ்கின்றன இறந்து போன பயணிகளும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்ததாக யூகங்களினடிப்படையில் ஊடகங்கள் தெரிவிக்கின்றன சாவதற்கு சற்றுமுன் அவர்கள் விழித்திருப்பதற்கு சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளன. தூக்கத்தில் நிகழ்கின்ற விபத்துகளில் பெண்களின் தூக்கத்தில் அதிகார்ப்பூர்வ கணவர்களால் நிகழ்த்தப்படும் விபத்துகள் சேர்க்கப்படக் கூடாதென உச்ச நீதிமன்றமே தீர்ப்ப…
-
- 0 replies
- 564 views
-
-
என் செல்லமே செல்லமாக நான் வளர்த்த நாய்க்குட்டியே சொல்லாமல் எங்கு சென்றாய் இன்று நீ கடுங்கோவங்கொண்டு பிறர் உனை கடி நாய் என அழைத்த போதிலும் ரொம்ப பாசத்தோடு நான் உனை ரொம்மி என நாமமிட்டு அழைக்கையில் செல்லமாக வாலை ஆட்டி வேகமாக வந்து மெல்ல என் காலடியில் இருக்கும் என்குட்டியே காலை மாலை என தவறாமல் பாலை நான் தட்டில் ஊற்றுகையில் நன்றியோடு என நோக்கி நாவால் வருடும் நான் வளர்த்த செல்ல நாய்க்குட்டியே எங்கு நான் வெளியில் சென்றிடினும் என் வழித்துணையாக வந்த உனை எவர் கடத்தி சென்றனர் இன்று எப்படி இருக்கின்றாய் அங்கு நீ நான் உறங்கிய போதில் என்னருகில் விழித்திருந்து காவல் செய்வாயே நீ இன்று இல்லாத இந்த நாட்களில் விழிகள் …
-
- 19 replies
- 3.4k views
-
-
தன் தந்தையை நேசிக்கும் எல்லோருக்கும்...!!! இந்த கவிதை...!!! சமர்ப்பணம்..!!! அப்பா...! " நான் காதலித்த முதல் ஆண் நீங்கள் அப்பா..." என் முதல் கதாநாயகன்.. நீங்கள் தான் அப்பா..! தலைகனத்தில் நான் ஆடும் போது குட்டு வைத்தது நீங்கள், தடுமாறி நான் விழுந்த போது தூக்கி நிறுத்தியதும் நீங்கள் அப்பா..! உங்கள் உயிரே என் மீது வைத்து இருந்தும், ஒரு சிறு இடைவெளியில்தான் நம் பந்தத்தை நீங்கள் வைத்து இருந்தீர்கள், அந்த இடைவெளிதான் உங்கள் பாசத்தை உணர வைத்தது எனக்கு, கம்பீர பார்வை, நேர் படும் பேச்சு, அஞ்சா நெஞ்சம், சில சமயம் ரௌத்திர குணம் இருந்தாலும் உங்கள் மனம் என்றும…
-
- 4 replies
- 883 views
-
-
பார்வைபோல் இருளுக்குள் அலைமோதுகிறது பக்குவமாய் நான் கோர்க்கநினைக்கும் சொற்கள் ஒளி கொண்டு கலைப்பதற்குள் கருப்பைக்குள் வீசப்பட்ட விந்தைப்போல் எண்ணத்துள் கருக்கட்ட பாலின் ஆடையென நிலாமேல் படர்ந்து தவிக்கிறது நினைவெனும் பறவை எண்ணங்களின் பறப்பு விரிக்க விரிக்க காலப்பெருநதியை கட்டுடைத்துக் காத்தல் கற்றோடு கரைந்து தவிக்கிறது தனியே
-
- 0 replies
- 849 views
-
-
வேலைக் களைப்பில் அவன் தேவைக் களைப்பில் அவள்... நாலு சுவருக்குள் நடத்தும் நள்ளிரவுக் கூத்துக்கு சாட்சி யாரு... வாயே பேசாத பாப்பா தங்கச்சி பாப்பா கேட்டானாம்...! அருமையான பூமிப் பந்தில் அனுதினம் நிகழும் கருக்கலைப்புக்கும் அவனே சாட்சி...! கன்னத்தில் ஒரு முத்தம் தந்து அம்மா சொல்லுறா... "அப்பாக்கு இந்த தங்கச்சி பாப்பா வேணாமாம் பிள்ளைக்கு அடுத்த முறை பெத்துத் தாறன்..!" கருவறை எல்லாம் கழிவறையாக.. இரத்தக் கட்டிகளாய் பிறக்குது உயிரற்ற கலக்கூட்டம்..! உனக்கும் ஆபத்து உயிர்க்கும் ஆபத்து இருந்தும் தொடருது உறைகளற்ற உறவுகள்..!!! தொடர்ந்தும்.. வேலைக் களைப்பில் அவன் தேவைக் களைப்பில் அவள்..!
-
- 21 replies
- 1.9k views
-
-
அந்நியர் வந்து பாத்திடும்போது அதிசயம் தானே பூத்ததடா! கவி சொன்னவர் பலர் பார்த்திடும் போது ஆகாயம் தானே பார்த்ததடா புலி ஆகாயம் தானே பாய்ந்ததடா வென்றிடும் களம் நாடிச்சென்றதில்லை அங்கே குன்றிடும் மனம் என்றும் இருந்ததில்லை சென்றிடும் வீரர் கொன்றிடும் வரையிலும் ஓய்ந்ததில்லை களம் என்றிடும் வீட்டினில் கண் தூங்கவில்லை வெடித்திடும் குண்டும் பயம் கொடுக்கவில்லை பாயும் துப்பாக்கிச்சன்னமும் கூட துளைக்கவில்லை சாயும் வேங்கைகள் என்றுமே நமைவிட்டுப் போகவில்லை பாயும் கரும்புலிகூட சிரிக்கத் தவறவில்லை சென்றிடும் போதும் சிரித்திடும் முகம் பகை கொன்றிடும் போது கலங்குது மனம் என்றிவர் மனமாறுமோ, களம் தீருமோ …
-
- 22 replies
- 4.3k views
-
-
மிச்சமிருக்கும் உயிரின் கதைகள்: தீபிகா மிச்சமிருக்கும் உயிரின் கதைகள் ————————————————- உங்களுக்குத் தெரியுமா? நாங்களொரு பருக்கை சோற்றுக்காக … உமிக் கும்பிகளை இரகசியமாய் இரவுகளில் கிளறியவர்கள். யானை மிதித்த கால்தடத்திற்குள் வற்றாது மிச்சமிருந்த தண்ணீரில் தாகம் தீர்த்துக் கொண்டு தப்பி வந்தவர்கள். கடவுள்கள் உறுப்பிழந்து அனாதையாகி செத்துக் கிடந்ததை நம்பமுடியாத கண்களுக்குள் ஏந்தியவர்கள். வீடுகளை பார்த்துக் கொண்டு பதுங்குகுழிக்குள் படுத்துறங்கியவர்கள். மின்விளக்குகளை அணைத்துவிட்டு மெழுகுதிரி வெளிச்சங்களில் படித்தவர்கள். விமானங்களை கண்டால் விழுந்தடித்துக் கொண்டு பதுங்கியவர்கள் பட்டாசுகள் வெடித்தாலும் காதுகளைப் பொத்திக்கொண்டு படுத்த…
-
- 2 replies
- 593 views
-