Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. [size=4]வாழ்க்கை ஒரு போராட்டம் போராடும் வரை லட்சக்கணக்கான விந்தணுக்களுடன் சண்டையிட்டு போராடி தான் பிறக்கின்றோம் போராட்டத்தில் பிறந்து போராட்டத்தில் வளர்ந்து போராட்டத்தில் மடிவது தான் நம் வாழ்க்கை பிறப்பதற்கே லட்சக்கணக்கான அணுக்களை வென்ற நம்மால் வாழ்வதற்கான போராட்டத்தில் வெல்ல முடியாதா என்ன?!!! வாழ்ந்து தான் பார் நண்பா...[/size]

    • 5 replies
    • 10.2k views
  2. [size=4] [size=4]ஆஸ்திரேலியா, கேசி தமிழ் மன்றம் நடத்திய ஆடிப்பிறப்பு நிகழ்வு அன்று “மறந்து போகுமோ?” என்ற கவியரங்கத்தில் “பள்ளிப்பருவம்” பற்றிய எனது படைப்பு. இதில் கவித்துவமோ, நான் பகிர்ந்த விதத்தில் ஒரு அரங்க பாணியோ கிடையாது. ஆனால் அனுபவங்களின் நினைவூட்டல் என்ற வகையில் ஓரளவுக்கு திருப்தியை தந்த படைப்பு. வாசித்து விட்டு சொல்லுங்கள்![/size][/size] [size=4] தமிழுக்குள் என்னை ஆட்கொண்ட எழுத்துக்கு வேந்தர் சுஜாதா எங்கள் கம்பவாரிதி ஜெயராஜ் இருவரையும் மனதார பணிந்து வணங்கி! [/size][size=4] கூழுக்குள் நீந்தியது காணும்! கரையேருங்கள்! எனக்கு புரையேறுகிறது! கவிதைக்கு அவ்வப்போது கரவோசையும் வேணும்!. அவைக்கு அடங்கி ஆரம்பிக்கிறேன் வணக்கம். [/size] …

    • 7 replies
    • 1.1k views
  3. கவிதையின் கவிதைகள் அழகிற்கும் மென்மைக்கும் பிறந்த பெண்மைகள், உள்ளங்களை வெண்மையாய் உடுத்திக்கொள்ளும் கள்ளங்களை அறிந்துகொள்ள... கடந்துபோகும் காலங்களால் மட்டுமே முடிகிறது! செல்லக் கதைபேசி எண்ணங்கவரும், வண்ணத் தேவதைகளின் இதயங்கள் கறுப்புத்தான்! சிந்தை சிதைக்கும் மடந்தைகளின் எண்ணங்களில்... ஆடவர் இதயங்கள் விளையாட்டுப் பொருள்தான் போல!? ஆரம்பம் என்பது அழகாய்த்தான் ஆரம்பிக்கிறது முடிவுகள் மட்டுமேனோ முடிவுகட்டிச் செல்கிறது! விடிவுகள் இல்லாத வாழ்வினையும் கண்ணீரையும் காதல் பரிசாக கொடுத்துவிட்டுச் செல்வார்... நிறம் மாறும் தேவதைகள்! காதலின் பெயரால் கட்டிப்போடும் தேவதைகள் கல்லறைக்கான பாதையையும் காட்டிவிட்டுச் செல்வார்! காரணமில்லாக…

  4. கவிதையின் கவிதைகள் http://3.bp.blogspot.../Photo-0052.jpg மனம் மாறும் மனங்கள் தினந்தோறும் மாறும்! உனைத்தேடும் இதயம் நிதமிங்கு ஏங்கும்! கரைதொடாத அலைகளுக்காய் கரைகள் காத்திருக்க, திசைமாறிய காற்றில் வழிமாறிய அலைகளாய்... பெண்கடல் ஆர்ப்பரிக்க, ஈரப்படாத கரைகள்... சுடுமணாலாய் உதிர்கிறது! கவிதை அனுப்பிய கவிதை பகுதி 04 ஐப் பார்க்க இங்கே அழுத்துங்கள் . http://www.yarl.com/forum3/index.php?showtopic=105723

  5. [size=4]காலை விடிந்து கண் விழித்தால் குழந்தைக்கு முத்தம் கொடுத்துக் கொண்டே இருப்பான் எதிர்வீட்டுக்காரியின் கணவன் இவளைப் பார்த்தபடி[/size] [size=4]வீட்டு வாசலைக் குனிந்து வளைந்து கூட்டும்போது மாடியின் ஜன்னல் வழியே கிழட்டு விழியிரண்டு கீழே விழும்[/size] [size=4]ஏறிட்டுப் பார்த்தால் உதிர்ந்த விழிகள் உடனே சென்று ஒட்டிக் கொள்ளும்[/size] [size=4]நகரப் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்கும்போது தரிசனம் கேட்கும் வழியில் சில தடிமாடுகள்[/size] [size=4]அலுவலகம் போய் அடைந்தால் மின்விசிறி சுழல வீற்றிருக்கும் மேலதிகாரியின் கண் விசிறி சுழல… இளமைக் காகிதம் படபடக்கும்[/size] [size=4]உடன் பணியாற்றும் உத்தமக் கொக்குகளோ ஓடும…

  6. [size=4]உயிரொன்று கரைகிறது...[/size] [size=3]கவிதை - இளங்கவி[/size] பெயரில் சிவந்தன் - அவன் தமிழீழத்தின் சிவந்தமண்... தன் இனம் சிறிது சிறிதாய் அழிவதைப் பார்க்கமுடியாமல் தம் உயிரையே உருக்கி நம் உரிமையை உரக்கச் சொல்லத் துணிந்தவன்..... அன்று... ஆயிரம் மைல்கள் நடந்தான் அவன் உடலிலன்று வலுவிருந்தது.... இன்று.... உணவையும் நீரையும் மட்டும் கொண்டு இயங்கும் உயிர்க் கோளத்தையே உருக்கத்துணிந்து விட்டான் அதை உயிரின் எல்லைவரை உருக்கியும் விட்டான்... பெற்றோரை மறந்து... மணம் கொண்ட மனையாளை மறந்து.... தன் உயிரணுவில் உதித்த பிள்ளையையும் மறந்து...... உரிமையை இழந்து தவிக்கும் உனக்கும் எனக்குமாய் திலீபன் வழினின்று த…

    • 12 replies
    • 953 views
  7. சிட்டு 15ம் வருட நினைவுகளோடு ‘சிட்டு’ சிரிப்பு நிறைந்த மகிழ்ச்சியின் உறைவிடம் நீ. நீயழைந்த காற்றும் நீ நடந்த நிலமும் நினது நினைவுகள் நிறைந்து மௌனித்துக் கிடக்கிறது. கனவுகளோடும் கலையாத நினைவுகளோடும் நீ நிறைந்த இசையும் பாடல்களும் உயிர்ப்பின் இருப்பாய் ஈரமாய்…… இசை நிறையும் திசையெல்லாம் உன்னை ஏந்தியிருக்கிறது ஒலிக்கதிர்கள்….. தீயின் சுவடுகள் மீதேறிய உனது கால்களும் மூச்சும் 01.08.1997அன்று ஓய்வெடுத்து உறங்கிய நாள் கடந்து இன்றுன் நினைவுகள் 15ம் ஆண்டைத் தொட்டு நிற்கிறது. ஆற்ற முடியாச் சோகத்தை இந்த நூற்றாண்டு தந்துவிட்டுச் சலனமின்றி நகர்கிற இந்நாட்கள் பற்றிச் சொல்வதானால்…….???? நீயுறங்கிய நிலம் மீது பேயுலவித் திரிகிறது….. அம…

  8. Started by pakee,

    [size=4]மனிதா நான் யாரு நீ யாரு சொந்த ஊர் ஏது அத எல்லாம் தூக்கி போடு பண்போடு நல்ல அன்போடு நீ முன்னேறு நீதான் ஸ்டார் வாழ்க்கை ஒரு புதிர் போல எது எப்ப நடக்கும் தெரியாது கடவுள் தந்த அழகிய வாழ்க்கையில் நல்லது நடக்கும் நம்புங்கள் முயற்சி இல்லாமல் பலன் ஏது? குறைகளை சொல்வதினால் தடுமாற்றம் உனக்குள் ஒருவன் யார் அதை தேடு அதை நீ அறிந்தால் தான் வரலாறு போட்டி இல்லாமல் வெற்றி ஏது? பொறமை கொள்வதால்தான் தகறாரு நமக்கு தெரியாது பல உண்டு கற்றது கையளவு நீ என்னும் தேடு வா நண்பா மர்மமான வாழ்க்கையில் வாழ்த்துதான் பார்க்கலாம்...[/size]

    • 0 replies
    • 556 views
  9. நெல்லும் உயிரல்ல நீரும் உயிரல்ல முல்லை நிலத்தில் அலைந்து உழன்றவரை கொல்லும் எறிகணைகள் கூட்டாக வீசியவன் மன்னாதி மன்னனென மார்தட்டிக் கொள்கின்றான் எண்ணிக்கை யாருக்கு வேண்டும்? மொழியால் அமைந்த நிலம் எனச் சங்கத் தமிழோடும் செம்மொழியின் வனப்போடும் புதைகுழிக்குள் போனவர்கள் நாங்களன்றோ? குழந்தைகளின் மென்கரத்தை அரிந்து நெருப்பில் எறிந்தவனுக்குத் தாம்பூலம் தந்து தாலாட்டுப் பாடி கால்கள் வருடி தலைமயிருக்கு நிறம் தீட்டி அவன் பேழ் வயிறை வழிபட்ட அப்பாலும் அடிசார்ந்தார் இப்பாலும் இருப்போர்கள் முப்பத்து முக்கோடி படையினர்கள் எல்லோரும் பட்டழிவதன்றி வேறென்ன கேட்கும் என் கவிதை? படித்துப்பிடித்தது . ஈழத்துக் கவிஞர் சேரன்.

  10. வயதான பின்பும் தாம்பத்தியம் இனிக்கின்றது வாய்க்கு பிடித்ததை ருசியாக சமைத்து அன்று உடம்பிற்கு பிடித்ததை மருந்தாக சமைப்பது இன்று அனத்துகின்ற போது அணைத்து கொள்வதும் சிடுசிடுத்தால் சீண்டிவிடாமல் சிரித்து கொள்வதும் தடக்கின்றபோது தள்ளாடாமல் தாங்கி கொள்வதும் அந்தநாள் நினைவுகளை அசை போட்டு பார்ப்பதும் நீ தான் உலகம் என்று பேசிக்கொள்ளும் பெரிசுகள் இரண்டும் பிள்ளைகளாகி சேர்ந்து போவதே தாம்பத்திய இறுதி ரகசியம் இதுவே வாழ்வின் ரகசியமும் கூட. -அம்மாவின் கவிதைகளில் பிடித்தது .

    • 3 replies
    • 1.4k views
  11. பகவான் தத்துவஞானி ஓஷோ காமத்தை துறந்தால் பரிபூரண நிலைய அடையலாம்னு சொல்லி , காமத்தில மனதை ஒடுக்கணும்னு சொல்லி தியான வகுப்புகள நடத்தி பெரிய சர்ச்சைய கிளப்பினாங்க . இப்போ இந்த லவ்வேர்ஸ் கடவுளை பாக்கிறாங்களாம் . உங்க கருத்துங்கள எழுதுங்க . அடிக்காதீங்க . ஓக்கேயா ? முதலில் அறிமுகம் கொஞ்சமாய் சினிமாவை அலசியபின் செக்ஸ் பற்றிய தடுமாற்றமான துவக்கம் மெல்ல பாதுகாப்பான உறவில் கைவசம் காண்டம் இல்லாமலும் முடியும் என்றேன் கண்களை ஊடுருவிய கண்கள் நிலைக்க ஆக்ரோஷமான காமத்தை விரும்புகிறவள் நீ என்றாய் ஒரு பறவையைப் போல் என் காமத்தை அவசரப்படுத்த முடியாது நான் பாம்பு உன்னையும் பாம்பாக பற்றிக்கொள்ளத்தான் முடியும் என்றேன் அவளின் புன…

  12. கவிதையின் கவிதைகள் http://1.bp.blogspot...d-sad-poems.jpg என் அழுத விழிகளின் கண்ணீரிலும் ஓவியங்கள் தெரிகின்றதாய்... உணரும் மனதின், அப்பாவித்தனத்திற்குப் பெயர்தான்... "என்னைக் கடந்து சென்ற காதல் என்"பதா? இன்றுவரை விடைதெரியாத கேள்வி! அனுபவங்கள் பலவிதம்...!-அதில் இதுமட்டும் தனிரகம்! கவிதை அனுப்பிய கவிதை 03 ஐப் பார்க்க இங்கே அழுத்துங்கள் . http://www.yarl.com/forum3/index.php?showtopic=105542

  13. கண்ணயரும் நேரங்களில் காணுகின்ற கனவுகளும் கண்விழிக்கும் போதுகளில் மோதுகின்ற நினைவுகளும் அந்த நாள் நினைவுகளே அன்பான பெற்றோரின் அரவணைப்பில் வளர்ந்ததுவும் பள்ளிப் பருவத்தில் பாடித்திருந்ததுவும் துள்ளித்திரிந்து துள்ளாட்டம் போட்டதுவும் அடம்பிடித்து அம்மாவிடம் அடிவாங்கி அழுததுவும் இந்த வயதினிலும் இனிக்கும் நினைவுகளே . கல்யாணம் கட்டி கணவனுடன் வாழ்ந்ததுவும் குழந்தை பல பெற்று குதூகலமாய் இருந்ததுவும் வாழ்க்கையில் போராடி நொந்ததுவும் வென்றதுவும் நெஞ்சில் இருந்தாலும் நிழல்களாய் தெரிவனவே பிள்ளைகள் வளர்ந்து கரைசேர்ந்து பேரப்பிள்ளைகளும் பிறந்தபின்னர் குடும்பமாய் புலம்பெயர்ந்து குடிபுகுந்தோம் குளிர்நாட்டில் குளிர்நாட்டில் இருந்தாலும் குறையேது…

    • 2 replies
    • 2.9k views
  14. மரண வீடு எல்லா செத்த வீடுகளிலும் என் மனம் என் சாவுக்காக அழுகின்றது, தான் செத்த பின் தனக்காக அழ முடியாத் துயரம் அதுக்கு, பாவம். வளர்த்தப்பட்ட உடலில் தன் உடலை ஒட்டி அழும் மனிதர்களில் தன் மனிதர்களை ஒட்டி வேவு பார்க்கின்றது கள்ள மனசு ஒவ்வொரு சாவு வீடும் தனக்கான ஒரு ஒத்திகை பார்க்கும் இடம் என்று சொல்லுது மனம் எல்லாச் சாவுகளின் செய்திகளின் போதும் எல்லா மரணம் பற்றிய தகவல்களின் போதும் விக்கித்து தன் சாவை நினைத்து ஒரு கணம் தடுமாறுகின்றது எல்லா வீதி விபத்துகளும் என்னை அச்சுறுத்துவன போன்றுதான் எல்லாச் சாவுகளும் என்னை அச்சுறுத்துகின்றன செத்தவருக்காக அழும் கண்ணீர் துளிகளில் பல எனக்காக அழுவன என கண்க…

  15. முதுமை இரவுகள் களைப்பின் முடிவில் அடைபட்ட பின்னாலும் காத்திருந்து கனவை துணைக்கழைத்து பதறி விழிக்க வைத்துப் பறந்து விடுகின்றது பாதி இரவுகள் திறந்த கூடைக்குள் மாலை வந்தடையும் கோழிகள் போல் இனி என்றுதான் வசப்படுமோ இந்த உறக்கம் உயிரினும் மேலான சுகதையல்லவா இந்த முதுமை எடுத்து கொள்கின்றது வேண்டியபடி செல்லும் உடல் கேளாத செவிகள் பாராத விழிகளும் உடன்வராத கால்களும் ஒலிகாணாத குரல்களும் ஒடுங்கி சுமையாகும் எனில் முதுமை சுமைதனே .

  16. கவிதையின் கவிதைகள் [size=5][/size] http://www.desicomme...9692/696921.gif இத்தனை சித்திரவதைகளின் பின்னரும்... நான் உயிருடன் இருக்கின்றேன்... ஆச்சரியந்தான்! நீ என்னிடம் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள் என்னிடமில்லை... அவை உன்னிடந்தான்! நீ மறந்துபோனதாய்க் காட்டிக்கொள்ளும் எம் பழைய நினைவுகளை மீட்டிப்பார்... அனைத்துக்கும் விடை கிடைக்கும்! உன்னிடமும் நான் கேட்கவேண்டியவை, நிறையவே இருக்கின்றது... அதுவரையும், என்னுயிர் பிரியாது! உண்மையான நேர்மையான பதில்கள் உன்னிடமிருந்து வரும்வரைக்கும்... என்னுயிர் போனாலும் உனைத் தொடர்வேன்...! ஒரு கெட்டவனை நல்லவனாக்கவும் ஒரு பெண்ணால் முடிகிறது! ஒரு நல்லவனை கெட்டவனாக்கவும் அதே பெண்ணால் முடிகிறதே!! இ…

  17. கவிதையின் கவிதைகள் http://eluthu.com/ka...image/51704.gif எண்ணங்களும் நினைவுகளும் அதிகமாகப் பயணிக்கும் இரவுவெளிகளின் இறுதியில் கண்களின் ஈரங்களோடு... உறங்கிப்போகின்றது "நேற்று" ! நாளைய அதிகாலையின் இறுதிகள் மீண்டும் மீண்டும்... இரவுகளையே கொடுத்துவிட்டுச் செல்கின்றன! விடியாத இரவுகள் இருந்தாலும் பரவாயில்லை என... ஏங்குகின்றது மனம் இப்போது! கவிதை அனுப்பிய கவிதை பகுதி 1 ஐப் படிக்க இங்கே அழுத்துங்கள் http://www.yarl.com/...howtopic=105253

    • 16 replies
    • 1.3k views
  18. பாவம்.. நயினை அம்மனும் புத்தரின் ஆக்கிரமிப்பில் ஆக்கினைகள் முத்த உயிர் தப்பவோ என்னவோ... ஓடி வந்து அசைலம் அடிக்க.. பாவத்துக்கு இரங்கி இங்கிலாந்தின் மகாராணியும் அளித்தா ஓரிடம்... அது தான் லண்டனில்... என்வீல்ட்...! நாளை அங்கும்... கருடனும் பாம்பும் கடல் கடந்து வந்ததாய் கதையளக்க எங்களில் பலர் உளர்..! இருந்தும் அசைலம் ரெக்கோட் சொல்லும் உண்மைகள் பல...! ஆண்டு தோறும் அங்கு நடக்குது கூச்சலும் கொண்டாட்டமும். அக்கம் பக்கம் எப்படித் தான் வாழுதோ யார் அறிவார்..??! மாலையானதும் பஜனை என்று சிங்காரக் குமரன்களும் குமரிகளும் கழுத்தை அறுக்கிறார்.. காலை ஆனதும் சோறை ஆக்கிப்போட்டு இரண்டு வேளைகள்.. குழையலாகவும் படையலாகவும…

  19. பாடையில் ஏற்றும் பிணத்தின் நெற்றியில் ஒட்டும் நாணயக்குற்றியை நெஞ்சாங்கட்டை நெருப்பெரிந்து முடிந்ததும் கரியைக் கழுவிக் காசெடுக்கும் வெட்டியான்களாய்.. விதைகள் சுமந்த விருட்சங்கள் எல்லாம் வேரோடு அழிக்கப்பட்டு விட்டன வியாபாரிகளால்.. அறுக்கும் முன் அலங்கரிக்கப்படும் ஆட்டுக்கடாக்கள் போல விதைக்கும் முன்னே வீழ்த்தப்பட்டு விட்டது.. பருத்துக் கொழுப்பதற்காய் கிளிசறியாக்குழையும் பூவரசங்குழையும் பருத்திப்புண்ணாக்கும் முத்தர் வீட்டு நல்ல தண்ணியும் குடுத்து நலமெடுத்துக் கிலோ ஏத்தி நல்ல நாள்ப் பார்த்து நாற்பது பேர் சேர்ந்து சுத்தி நிக்க வெட்டி இரத்தம் மூளை மார்பு,தொடை,வயிறு குடல் என்று பங்கு நல்ல விலை அதிலும் நல்ல வியாபாரம்.. மயிலற்றை ஆடு நல்ல விலையாம…

    • 24 replies
    • 2.9k views
  20. [size=4]காலன் கூடக் கண்ணீர் விட்ட நாள்![/size] [size=4]கனவுகள் தொலைந்து போன நாள்! கரம் தூக்கிய மனிதக் கூடுகளைக்,,. காந்தீயம்,கழுவிலேற்றிய கரி நாள்! நம்பிக்கை வைத்தவர்கள் எல்லாம், நடு முதுகில் கத்தி ஏற்றிய நாள்! நம்பிக்கை ஊட்டியவர்கள் எல்லாம், நரிகளாக மாறிவிட்ட நாள்! உலகத் தமிழர்களின் இதயங்கள், ஊமைக் கண்ணீர் வடித்த நாள்! உலகத் தலைவர்களின் காலடிகளில், ஈழத் தமிழன் விழுந்து கெஞ்சிய நாள்! கையிழந்தும், காலிழந்தும், கட்டியணைத்த துணையிழந்தும், கருக் குழந்தைகளின் தொப்புள்கொடிகள், துண்டிக்கப் பட்டதொரு கரிநாள்! கரம் கூப்பி நான் தொழுத தெய்வங்களும், காவடியேந்தி நேர்த்தி வைத்த தேவதைகளும்…

  21. இளம்பிறை கவிதைகள் ஓவியங்கள்: ஞானப்பிரகாசம் நிரம்பித் ததும்பும் நீர் உங்கள் கிணற்றிலிருந்து தூர் வாரி வெளியேற்றப்படும் வெற்று மண்ணாய்க் கொட்டப்படுகிறேன் நான். என் கிணற்றில் எப்போதும் நிரம்பித் ததும்பும் நீராக இருக்கிறீர் நீங்கள். இறகுகள் உதிர்ந்துகிடக்கும் ஏரி திருப்பித் துரத்தும் பேராறு எதிர்பாரா தருணத்தில் சாபச் சாம்பலை வீசிமறையும் வரம் கேட்ட தெய்வங்கள் புழுதி மண்ணில் புரண்டழுது அடம்பிடிக்கும் குளிப்பாட்டி துடைத்தெடுத்த நினைவுகள் தனித்தனியே விழிப்பைச் சுற்றிலும் பசித்த மலைப் பாம்புகளாகத் தொங்கிக்கொண்டிர…

  22. கவிதையின் கவிதைகள் http://crisedangoiss...eux-300x200.jpg [size=4]என் வாழ்வின் அன்றாட நிகழ்வுகள், அதியுச்ச நம்பிக்கைகள் கூட... என் மிச்சம் மீதிகளையும் மிதித்துக்கொண்டு எனைக் கடந்து தொலைந்து போயின...! இனியொன்றும் இல்லை...! எதுவுமே தேவையில்லை...! என்ற மனநிலைகள் நிலைமாறும் காலவோட்டத்தில் தடுமாறலாம் - ஆனால், என் நினைவுகளில் பதிந்துபோன வலிகளின் தடங்களென்றும் மாறாது... மறையாது! தொடரும் என் பயணங்களும்... என் எதிர்பார்ப்புக்களோடு, தொலைந்துபோன நம்பிக்கைகளை தேடியலைந்துகொண்டிருக்கும்... இறுதிவரை![/size]

  23. குறிஞ்சிப் பாடல் -வ.ஐ.ச.ஜெயபாலன் கரும் திரை அசையும் தோற்பாவைகளாய் நெளியும் நீல மலைத்தொடர்களின் மேல் முலை சிந்தச் சிந்த நிலா நட்சதிரக் கன்றுகளைத் தேடுது. சொட்டும் நிலாப் பாலில் கரையும் இருளில் பேய்களே கால்வைக்க அஞ்சும் வழுக்கு மலைப் பாதை பாம்பொடு பாம்பாய் நெளிகிறது. மின்மினிகள் துளை போடும் இருள் போர்த்த காட்டின் வழி நீழ கமழும் நாவல்மரங்கள் உதிர்க்கும் கனிக்கு கரடிகள் அலையும் இரவில் பூத்துக் குலுங்குது முல்லை. ஆதிவாசிகளே அஞ்சும் வன இருளில் வண்ணத்துப் பூச்சிகளும் உறங்கும் இந்தக் கொடிய நள்ளிரவில் ஏன் பூத்தாய் காட்டு முல்லை. நான் மண்ணுக்கு பழசு கவிஞா பொறுத்திரு என்று நகைத்த முது முல்லை சுட்டும் திசையில் …

    • 2 replies
    • 621 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.