Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பரம பிதாவே இறுதிச் சுற்றறிக்கையில் அவர்கள் அப்படித்தான் கட்டளையிட்டு இருந்தார்கள் கவனமாக எழுதப்பட்ட எழுத்துகளின் மூலம் எம் சாவை பற்றி அவர்கள் அறிந்து கொண்டுதான் இருந்தார்கள் நீர் அறிவீர் அதை பிதாவே அடைக்கப்பட்ட குறுநிலம் ஒன்றில் எல்லா அதிகாரங்களும் குவிந்து கொண்டன உலகின் இண்டு இடுக்குகளிலும் இருந்து அதிகாரத்தின் குரல்கள் எம் சாவை வலியுறுத்தி கட்டளையிட்டன நாம் சாவதற்காகவே அடைக்கப்பட்ட மந்தைகள் என்றனர் எம் சாவின் மூலம் உலகின் முதலாம் தர நியாயம் வலியுறுத்தப்படும் என்றனர் எம் குழந்தைகளின் இரத்தத்தினால் மட்டுமே தம் பாதைகள் செப்பனிடப்படும் என்றனர் பரம பிதாவே நீரே ஒத்துக் கொள்வீர் அந்த வார்த்தைகளில் அந்த எழுத்துகளில் அந்த எத்தனிப்புகளில் வஞ்சகம் நிறைந்து இருந்தன என்று ஆ…

  2. இருத்தல் பெருந்தொகையில் இடம் பெற்ற கவிதைகளில் ஒன்று. பெருந்தொகை பற்றி விமர்ச்சகர் பேராசிரியர் மு.நிதியானந்தன் நிகழ்த்தும் விமர்சன உரை தீபம் தொலைக் காட்சியில் வெள்ளிக்கிளமை இடம் பெறுகின்றது. நேரம் இங்கிலாந்து 8.30 - 9.30, கண்ட ஐரோப்பா 9.30 - 10.30. வருகிற சனிக்கிளமை 13.10.2007 இருந்து 18.10 வரை பரிசில் இருப்பேன். இலக்கிய நண்பர்களைச் சந்திக்க விருப்பம். ஜெயபாலன் இருத்தல் வாலாட்டி வாலாட்டி நீருள் இரத்தினங்களாக வெயில் சிதைய மகிழ்ந்திருக்கும் சிறுமீன்கள். காற்றில் முளைத்து தாழை மடலில் தரை இறங்கும் மீன்கொத்தி. மீண்டும் அமர்ந்தேன். தென்னங் கீற்றுத் தோகைக்குள் இசைத்த சிறு குருவி சிறகை விரித்தாச்சு. இனி வானத்துச் சிப்பி வயிற்றுள் மிழிருகின்ற …

    • 5 replies
    • 1.5k views
  3. ''தீர்வொன்றை தந்திடுங்கள்....'' நாலும் நடக்குது மனித கொலை- இந்த இலங்கையில்; இன்றதுக்கென்ன விலை...??? செய்து குண்டுகள் வைத்து கொலை- அதை செய்மதியல் பார்க்குது அதந்த பகை.... உலகதில் இன்றது மனித நிலை ஊனமாய் ஆனதால் இந்த நிலை முண்டமாய் விழுகுது மனித தலை- அதை முந்தியே உண்ணுது கழுகு தலை.... நாளும் இலங்கையில் நாளும் யுத்தம்- அழியுது உயிர்கள் அதனால் நித்தம் பகையென போடுறார் யாரோ சத்தம் பழியென ஆகுது உயிர்கள் நித்தம்... தேசமே நனையுது குருதியிலே நீதி சபைகள் ஏனோ உறக்கத்திலே..? விடுதலை கொடுத்திட எழுந்திடுங்கள் விடியலை கொடுத்தே உறங்கிடுங்கள்... ஈழத் தமிழினம் தவிக்கிறதே இன்னலில் இன்றது துடிக்கிறதே கண்ணீர் ஆறாய் பாய்கிறதே கவலையில் தேகம…

  4. Started by இலக்கியன்,

    பத்து மாதம் கருவறையில் பக்குவமாய் பயிற்றுவித்து உடல் உயிர் கொடுத்தாய் நீ சிற்பி நான் உயிர் சிலை நீ வரைஞன் நான் ஓவியம் நீ படைப்பாளி நான் உன் கவிதை

  5. அலரி மாளிகை மாடி வீட்டு மகிந்த அங்கிள் வர்ணக் கிளி வளர்க்க குறுனி தூவி... ஏசி றூமில் நாய் வளர்க்க நாய்க்கு ஒரு நாலு பெயர் வைச்சு அழகு பார்த்த மைத்திரி அங்கிள்... கொடூர சுறா வளர்த்து குஞ்சு மீனை தீனியாக்கி அது துடிச்சுச் சாக துள்ளிக் குதித்து குரூரமாய் ரசித்து மகிழ்ந்த கோத்தா எனும் கொடூரன் குருவி சுடுவது போல் தமிழனை சுட்டு தள்ள கைக்கட்டி வேடிக்கை பார்த்த மைத்திரி அங்கிள்... செம்மணியை தமிழர் குருதியால் சிவப்பாக்கி.. எங்கள் தங்கை கிருசாந்தியை கிண்டிப் புதைத்து அதை மறைக்க ஆயிரம் சித்து விளையாடிய.. சந்திரிக்கா என்ற அரக்கி வீட்டில் தர்ப்பார் நடத்தும் மைத்திரி அங்கிள்... ஜே ஆர் தாத்தாவின் கொள்கையில் வளர்ந்த.. கொஞ்சம் கொஞ்சமாய் ஈழத்தீவில் …

  6. அடயாளத்தேடலுக்காக நிதானத்தை சாகடிக்கும் வித்தை தெரிந்தவர்கள் வித்துவான்கள் முடுக்கிக் கொண்டுவரும் மூத்திரம்போல் எதோ ஒரு திசையை சுட்டிக்காட்டுகின்றார்கள் சுட்டிக்காட்டுதலே இங்கு அனைத்திலும் பிரதானம் காட்டும் திசையில் பயணிக்கப் பாதைகள் இல்லையென்பதை சுட்டிக்காட்டினால் அது துரோகம். சிறுபோகமோ பொரும்போகமோ எதுவும் இங்கு சாத்தியமில்லை தற்போதைக்கு சாவை மட்டுமே யதார்த்தம் உணர்த்துகின்றது இருந்தும் பாடைகட்ட கொஞ்சப்பேர் பாடைக்கு குஞ்சம் கட்ட கொஞ்சப்பேர் தெளிவுதண்ணி கொடுப்பது குறித்துப்பேசினால் அது துரோகம் கேள்விக்குறிகளில் ஊஞ்சல்கட்டி ஆடிக்கொண்டிருப்பதில் எப்போதும் பெருமை செய்திகளும் புத்தகங்களும் தரும் அரசியலை விட போர் தந…

  7. தீண்டத் தீண்டத் துடிப்பவளே நோண்ட நோண்ட நெருங்குபவளே தொடுகை எனும் மந்திரத்தால் தூரம் எனும் இலக்கை தகர்ப்பவளே..! அழகு முகம் காட்டி உடல்தனை வருடத் தருபவளே சுகிப்பின் களிப்பில் சூடாகிச் சிணுங்குபவளே..! அணைப்புத் தப்பினால் அலங்கோலம் ஆகி நிற்பவளே..! தொடாமல் நானிருக்க விரதம் கொள்ளத் தூண்டுபவளே கொண்ட கொள்கை நீளாமல்.. சிணுங்கி அழைத்து சில்மிசத்தில் சிக்க வைப்பவளே..! மணிகளை வினாடிகளாக்கி இனிய பொழுதை நொடியில் விழுங்குபவளே.. நீ இன்றிய தருணங்கள் நினைச்சும் பார்க்க முடியல்லையடி..! எட்ட நின்றாலும் கிட்ட வந்து சட்டைப் பையில் அடங்கி விடும் அழகினவளே நீ ..சட்டென்று தொலைந்து விட்டால் பதைபதைக்குமே மனசு..! பெற்ற இடத்தில் சொல்லாத ரகசியம் உன்னிடத்தில் சொல்லி வை…

  8. ஈழமண்ணே! என்தாயே!! வேற்றுவர் வந்துன்னில் வெந்தணலைக் கொட்டி வேதனை செய்வதெல்லாம்........ விளங்காத பொருளாக வேடிக்கை பார்ப்பதிலும்.... விடமுண்டு மாள்வதே என் விதிக்கு நன்று.

  9. மனதை நெகிழ வைப்பதுதான் கவிதை என்றால் அவளின் சந்தோசங்கள்தான் எனது கவிதை... மனதை உருக்குவதுதான் கவிதை என்றால் அவளின் சோகங்கள்தான் எனது கவிதை... மனதுக்கு ஆறுதல் தருவதுதான் கவிதை என்றால் அவளின் பேச்சுதான் எனது கவிதை... மனதை லேசாக்குவதுதான் கவிதை என்றால் அவளின் சுவாசம்தான் எனது கவிதை... மனதை தொடுவதுதான் கவிதை என்றால் அவளின் முத்தம்தான் எனது கவிதை... மனதுக்கு பிடித்ததுதான் கவிதை என்றால் அவள்தான் எனது கவிதை...

    • 11 replies
    • 1.5k views
  10. உரிமைக்கு ஒரு குரல் ஞாலத்தில் பரந்து நாற்றிசை வாழும் ஈழத்துத் தமிழா! நில்!! வாழத் துடிக்கின்ற ஈழத்தமிழினத்தின் காலச் சுவடுகளைச் சொல்! மத்துக்குள் சிக்கிய தயிரடா - இன்றெங்கள் தமிழரின் நிலையெங்கும் கடைபவர் கடைகிறார், காடையர் என்கிறார் தடைகளும் போடுறார் பார்! எத்தர்கள் சாட்சியும், ஏவலர் சூழ்ச்சியும் நித்தமும் சூழுது பார்! - இந்த நித்திலத்தில் வாழும் வித்தகத்தமிழரே! விரைந்து நீர் எழுந்து வாரீர்! மற்றவர் . தப்புக்கணக்கோடு எம் தாய்மண் மீட்பை தர்க்கித்துத் தாக்குகையில் உப்பரிகை சுகத்தோடு உல்லாசப் போக்கிருந்தால் உடனேயே செத்துவிடு! - இல்லை செப்புகிற நல்லுணர் நாவிருந்தால் அதை செகத்திற்கு உணர்த்திவிடு! …

  11. சிற்ப்பிகள் இரண்டு வரைந்த ஓவியம் வெள்ளை நிறத்தில் விளையாட்டின் விடைகள், கூடத்தில் மழலைகள் போட்ட கோலங்கள் நிலவுகள் எழுதிய கவிதைகள் இங்கு சமாதான நிறத்தில்

  12. எல்லோர் பருவத்திலும் ... வந்த காதல் இவனுக்கும் .... வந்து தொலைந்தது .... யார் இவன் .....? காதலுக்காய் காதல் ... செய்தான் காதோடு .... வாழ்ந்தான் இப்போ .... காதலி இல்லாமல் .... காதலோடு வாழ்கிறான் ....!!! காதல் இளவரசன் .... என்பதா ..? காதல் தோல்வி .... தேவதாஸ் என்பதா ...? இரண்டுக்கும் .... இடைபட்டவன் தான் ... இந்த கவிதை தொடரின் ... நாயகன் - கதாநாயகன் ... " பூவழகன் " தொடர்ந்து வருவான் ... இவன் கதை கூட உங்கள் ... கதையாக இருக்கலாம் ....!!! ^ கனவாய் கலைந்து போன காதல் கவிப்புயல் இனியவன் வசனக்கவிதை

  13. இந்த வார ஆனந்த விகடனில் (8.10.15-14.10.15) சொல்வனம் பகுதியில் "உள்ளுறையும் ஈரம்" என்ற எனது கவிதைவெளியாகியுள்ளதை, யாழ் களத் தோழர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். உங்கள் ஊக்கத்துக்கும் வாசிப்புக்கும் நன்றி! வடை மழை வயற்காட்டிலிருந்து திரும்பும்போது கணக்கு வைத்திருக்கும் மளிகைக் கடையில் தேன் மிட்டாயோ வரிக்கியோ மறக்காமல் வாங்கி வருவார் அப்பா வானம் இருட்டிக்கொண்டு மழை வரும் அறிகுறி தெரிந்தால் உளுந்தை ஊறவைத்துவிடுவாள் அம்மா. மழை வரும் நாளில் கண்டிப்பாக வடை சுடுவாள் என்று தூறலோடு ஓடிவருவார் அப்பா, அன்றைக்கு மட்டும் வெறுங்கையோடு. ‘என்ன வாங்கி வந்தேப்பா?’ என்று ஓடிவரும் பிரியாக்குட்டியிடம் அம்மா சொல்வாள் ‘இன்னைக்கு உங்கப…

  14. Started by N.SENTHIL,

    காட்டுமல்லிக்கொடியாய் யாருமற்ற வனத்தில் முளைத்து கிடந்தேன் பூப்பறிக்க வந்தவள் - இந்த கொடியில் ஆசை வைத்து பறித்து போனாள் பதியம் போட்டாள் , பொழுது தவறாமல் நீர் ஊற்றினாள் உரம் போட்டு என் வளர்ச்சிகண்டு பூரித்தாள் மொட்டுவிடும் பருவத்திலொரு நாள் நன்று கொதித்த வெந்நீர் ஊற்றினாள் வேர் வரை பாய்ந்து துடித்தேன் - ஏன் இப்படியென்றேன் பூக்கள் பிடிக்காதென்றாள் பூப்பதுதானே என் இயற்கை விதி என்றேன் பூக்காது பார்த்துக்கொள் என்றாள் ............. முயற்சிக்கிறேன் என்று சொல்லி செத்துப்போனேன்

    • 7 replies
    • 1.5k views
  15. ஒருகணம் வழித்தடம் திரும்பி... வீறுகொண்டெழுவோம்! 2010.. இது புத்தாண்டு! வாசல் திறந்து வரவேற்கின்றோம். ஆனால்... வண்ணக்கோலமிட முடியவில்லை. வளைதோரணம் கட்டவும் இயலவில்லை. வாசல் தொலைத்து வாடிக்கிடக்கின்றோம். அந்நியன் வாசலில் யாசகம்செய்து – ‘புத்தாண்டே வாராய்!’ என்று இரு கரம்நீட்டி அழைக்கின்றோம். பத்தோடு பதினொன்றாக ஆண்டுகள் வருவதுண்டு. வந்தவழியே திரும்பிப் போவதுமுண்டு. நாங்களும் வரவேற்போம் - முந்நூற்றறுபத்தைந்து நாட்கழித்து ஒவ்வோராண்டும் கடந்து சென்றுவிடும். 2009 வந்தது. உள்ளம் பட்டாம் பூச்சியாக சிறகு விரித்துப் பறந்தது. கண்கள் அகலத்திறந்து வாசல் நோக்கி விரிந்தது. இது எங்கள் ஆண்டு! இது எங்களுக்கான ஆண்டு! என்றன்றோ அப்பொழுது திளைத்தோம்?…

  16. சித்திரையாள் நித்திரையோ? சிதைந்த எம் வாழ்க்கை காணலையே! எத்தனை சித்திரை பிறந்து வந்தது இத்தரை நன்மை நடந்ததா இதுவரை? புதுச் சித்திரை மாது நீ நன்மை நடத்த வந்த தூது நீ துவக்கினால் உயிர்கள் தூங்கியது போதும் தூங்கவை துவக்குகளை காட்டுமிராண்டுகளை ஓட்டு நீ உலகை விட்டு இரக்கமில்லா மனிதப் பிராணிகளை கொளுத்து நீ விசாரணை விட்டு இரத்த மழை பெய்யாது ஆக்கிவிட்டு சாமாதான கீதங்களை இதயவீணை தோறும் மீட்டி விட்டு உலகைப் பார் கார்ச்சியளிக்கும் கவலை விட்டு கதிரை விளித்துப் புதிரை அவிழ்க விடிவே நீ வாராய் விரைந்தே நீ வாராய் நடுச் சாமமானாலும் நரகக் குழியானாலும் நீயே எமக்குக் கதி இதுவே எமது துதி எட்டி நின்று ஒட்டிப் பார்க்காது அண…

    • 5 replies
    • 1.5k views
  17. காதலுக்கு இரண்டு கண்கள் ------------------------- நம் காதலுக்கு இரண்டு கண்கள் ஆசை, பயம் ஆசை பார்க்கின்றது பயம் மூடிக்கொள்கின்றது சூரியன் இல்லாமலேயே வெப்பம் மூட்டுகின்றது ஒன்று சந்திரன் இல்லாமலே குளிரைத் தூவுகின்றது மற்றொன்று பொங்கித் தணியும் கடலைப் போல ஒன்றை யொன்று இழுக்கின்றது உச்சத்தில் நிற்கும்போது உயிரைக் கீழிழுக்கின்றது ஒன்று உயிரே போனதாய் உணரும் போது உயர்த்தி விடுகின்றது மற்றொன்று காதல் கத்தியைப் போல காயப் படுத்தி விடும் காதலிப்பவரை காதல் மட்டும் காயமில்லாமல் தப்பி விடும் கத்தியைப் போல அதனால் தான் இன்னும் காதலும் காதலுக்காக கட்டப்படும் சமாதிகளும்....

  18. பட்டென்று நினைத்தே பதறியே போனேன் தொட்டது பட்டறை இரும்பென்ற போது..! அணைக்க நினைத்தே எரிந்தே போனேன் அணைத்தது கொடுந் தீப்பந்தென்ற போது..! கவ்வ நினைத்தே மரணித்துப் போனேன் கடித்தது சயனைட் இதழென்ற போது..! மேகமென்று நினைத்தே சிறைபட்டுப் போனேன் சிக்கியது கூந்தலில் என்ற போது..! இசையென்று நினைத்தே செவிப்பறை இழந்தேன் பேசியது பெண் குரல் என்ற போது..! கலையென்றே நினைத்தே பாடம் படிக்கப் போனேன் படித்தேன் கன்னியவள் கலையெடுத்தாடிய போது..! பஞ்சணை என்று நினைத்தே நிலையிழந்து போனேன் உணர்விழந்தேன் படுக்கையில் அவள் என்ற போது..! வசந்தம் என்று நினைத்தே விவாகத்துள் போனேன் விக்கித்தேன் "வீணாப்போனவனே" என்ற போது..! …

    • 7 replies
    • 1.5k views
  19. Started by thamilmaran,

    என்னை கருவறையில் சுமந்த போது தினம் தினம் என்னை தடவி உன் வாழ்க்கை எப்போதும் இருட்டறையில் தான் என சொல்லி வந்ததின் அர்த்தம் புரிந்தது............ கருவறையின் வெளியில் இருந்து ; வந்த என்னை அரை உயிராக புதைகுழிக்குள் புதைத்த போது.........

    • 3 replies
    • 1.5k views
  20. விட்டம் வெறித்து மருத்துவர் கையில் இருக்கையில்.. பத்து வயதில் தாமிரபரணியில் பக்கத்து வீட்டு குமரேசனது போலிருந்த ஞாபகம்.. பதிமூன்றில் கண்ணாடி முன் அறியாத மனதில் லேசாய் வந்த கலவரம் ஞாபகம்.. பதினைந்து வயதில் பெருமூச்சோடு காகிதம் அடைத்தது இன்னும் ஞாபகம்.. இருபதில் ஊர்முன்னே நிமிர்ந்து நடக்க செருக்கு தந்த ஞாபகம்.. இருபத்தேழில் காதல் பொழுதில் கணவர் கண்பட்டு வெட்கமின்னும் ஞாபகம்.. முப்பதில் செல்ல மகள் பசி தீர்த்த திருப்தியும் ஞாபகம்.. நாப்பது வயதில் தட்டுப்பட்ட சிறு கட்டி தந்த கேள்விக்குறிகள் ஞாபகம்.. எல்லாம் கடந்து எனை அழித்து அவ…

    • 17 replies
    • 1.5k views
  21. சிலையாக வடித்த சிற்பம் தான் அவளோ இப்பொழுது மலர்ந்த மல்லிகைதான் இவளோ கண்கள் இரண்டும் கதைகள் பேசின காதலின் விரசம் இதழ்களில் தவழ்ந்தன வகுப்பறையில்.... பாடங்கள் மறக்க பாடம் கற்பித்தாய் நீ ஆசான் நான் மாணாக்கன் ம்ம்ம்..... பாடம் நடத்து

  22. கனன்றே எரிவாய் தீக்கனலாக...... காலத்தின் உப்பரிகையில் கை கொட்டிச் சிரிக்கிறான் காலன் இது யாரோ ஒருவரின் கனவுக் கலைப்பல்ல விடுதலை விரும்பும் விதியின் விரல் பிடித்து விளையாடும் மொழியாக தினமும் இழப்புக்கள் அறுவடைக்கு ஆட்களை அசைபோடும் இரைமீட்பில் ஆண்டவனை அர்ச்சிக்கும் வரம் பெற்ற வள்ளலுக்கும் வழங்கிய பரிசு மரணம் குழந்தை இயேசு குடிகொண்ட மண்ணில் நிரந்தரமாய் நீ விடைபெற்ற செய்தி அறிந்ததால் அதிர்ந்தோம் அந்நிய மண்ணில் தடம் பதித்தாலும் மண்ணின் நினைப்பில் மனம் புதைந்தே கிடக்கும் மண்ணின் விழுதுகள் நாம் இறை உணர்வினில் கனல் மணக்கும் ஏழிலான வெண்மலரே மானிட வதையினால் மனம் கனக்க உம்மை கல்லறைக்குள் வைத்தோம் இது காலத்தின் கட்டளை ஈழ விடுதலையில் இதய…

  23. பச்சோந்தி கைஃபி ஆஜ்மி ஒரே கழுத்தில் எண்ணற்ற முகங்கள் ஒவ்வொரு முகத்திலும் ஆயிரமாயிரம் தழும்புகள் ஒவ்வொரு தழும்பும் மூடிய கதவுகளாய் அதனின்று வெளிச்சம் வராது அதனின்று வெளிச்சம் போகாது எந்தக் கருப்பை பெற்றெடுத்ததோ இதனை எந்த வீட்டில் வளர்ந்ததோ இது எந்த வீட்டில் திரிந்தோ இது எல்லா மொழியையும் பேசுகிறது ஜன்னலைப் போல் திறக்கிறது காயங்களை இதயத்திடம் சொல்கிறது கதையை உனது மதம்; உனது உன்னத கடவுள் உனது பண்பாட்டின் அடையாளத்தை இவையனைத்தையும் அபாயம் சூழ்ந்துள்ளது இவற்றை பின்தொடர்கிறது பேரிருள் உறைந்து போகிறதென் குருதி முடிக்கொள்கிறதென் திறந்த விழி உலகின் அனைவருமென் எதிரிகள் இப்படியே உணர்கிறேன் தோழர்களாக எவருமில்லை என்னை உயிருடன் வி…

  24. ஒட்டு படை ஒழிகிறது...... ஓலங்கள் தந்தது ஒட்டுப் படை -அந்தோ ஓடியே ஒளியுது அந்த படை... அவலங்கள் ஆயிரம் தந்த படை - அந்தோ அழியுது பாரது அந்த படை... இனவாதி யோடது இருந்த படை இளைஞரை யுவதியை பிடித்த படை.... காட்டியே கொடுக்கின்ற கயவர் படை கண்களை கட்டியே கடத்திய படை... சுட்;டு வெட்டியே கொன்ற படை - அதை சுற்றியே அழிக்குது புலிகள் படை..... கொடுமையாய் கொடுமைகள் ஆடியதே கொடியாரை தமிழரை சாடியதே... கடத்தியே கப்பங்கள் பறித்ததுவே அவர் உயிர்களை வேறது குடித்ததுவே.... எத்தனை எத்தனை இன்னல்களை எண்ணியே எண்ணியே தந்ததுவே... அந்தோ பாரது அழிகிறதே ஆனந்தம் எமக்கு பிறக்கிறதே.... ஒட்டு படைய…

    • 4 replies
    • 1.5k views
  25. Started by nedukkalapoovan,

    தமிழினி.. எனி... முகநூலில் தெரிந்தவள்.. படைப்பில் என்னை கவர்ந்தவள்.. வந்த இடத்தில் அறிமுகமானவள்.. போர்க்களத்தில் துணிந்து நின்றவள்.. சேனைகள் அழிந்த போதும் சோரமே போகாதவள்.. பொய்யில் புலம்பெயர விரும்பாதவள்.. நோயில் கூட உதவி தேடாதவள்.. போர் முடிந்தும் மங்கை மறைமுகமாகப் போராடினள்.. வாழ்ந்து பார்க்க ஆசை இருந்தும் அடக்கிக் கொண்டவள்.. இன்னும் என்னென்னவோ பிறர் தரும்.. அடைமொழிகளை தாங்கி நிற்பவள்.... இத்தனை இதயங்களிலும் யார் உளர் அவள் கனவை இனங்காண.. நனவாக்க....??! தமிழினி எனி......................................................!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.