கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
என் ஊரில் முற்றத்து நிலவு என்னைத் தேடித் தவிக்க, ஊரைவிட்டு வந்த நான்... நிலவைத்தேடி, கண்கூசும் மின் விளக்குகளோடு அலைகின்றேன்... முகவரியில்லாத தேசமொன்றில்!!! அம்மாவின் நிலாச்சோறும், மண்வாசனையும்... அடிக்கடி அனுப்பும்... அன்பான அழைப்பிதழ்களையும், என் சூழ்நிலைக் காவலர்கள்... என் மன குப்பைக் குழியில், அப்போதே போட்டுப் புதைக்க... இருட்டு மட்டுமே துணையாக!! இன்னும் நிலவைத் தேடியபடி.... நான் முகவரி தெரியாத பயணத்தில்... பசியோடு!
-
- 6 replies
- 1.7k views
-
-
காதல் காதல்......! ------------------- தவழும் வயதில் தாய் மீது காதல் நடக்கும் வயதில் முற்றத்தின் மீது காதல் படிக்கும் வயதில் பாடங்கள் மீது காதல் இரசிக்கும் வயதில் இயற்கை மீது காதல் துடிக்கும் வயதில் பெண்மீது காதல் மயங்கும் வயதில் மன்மதக் காதல் முதிரும் வயதில் இறைவன் மீது காதல் முடியும் வயதில் பாய் மீது காதல் முடிவின் வழியில் தீயின் மீது காதல்
-
- 6 replies
- 1.1k views
-
-
இனி வருமா டோறா...??? ஆழக் கடல் ஏறி... ஆடி வந்த டோறா பாதி வழி வந்து பாதியானதே..... தமிழ் ஈழமது காற்றில் சேதி யானதே...இன்று சேதியானதே.... பாயும் புலி வேங்கை படை தனை அழிக்க ஓடி வந்த டோறா ஒய்ந்து போனதே - இன்று ஓய்ந்து போனதே.... அண்ணனவர் சொல்லில்- வேங்கை அலையதில் நடக்க பாய்ந்து வந்த டோறா பாதியானதே சுக்குநுாறாய் போனதே... எங்கள் புலி வீரரை ஏளனங்கள் செய்தவன் அஞ்சி ..அஞ்சி ..போனான்- இன்று அஞ்சி..அஞ்சி..போனான்... எங்கள் கடலேறி இன்னும் பகை வரு..மா..? வந்தால் அடி முழங்கும்- வானில் வேங்கை கொடி ஆடும்... //// ஆழக் கடல் ஏறி... ஆடி வந்த டோறா பாதி வழி வந்து பாதியானதே..... தமிழ் ஈழமது காற்றி…
-
- 6 replies
- 2.1k views
-
-
முள்ளிவாய்க்கால் 7ஆம் ஆண்டு: ஆற்ற ஒண்ணா அஞர் சேரன் சில வாரங்களுக்கு முன்பு தொறொன்ரோ நகரின் மத்தியில், குளிரில் மெல்ல நடுங்கியவாறு, குளிராடையுமின்றிக் கோப்பிக் கடையொன்றின் வாசலருகே கோப்பியொன்று வாங்கித் தருமாறு போவோர் வருவோர் எல்லோரையும் இரந்த ஒரு தமிழரைக் கண்டேன். எனது வீட்டுக்கு அருகில் ஸ்கொட் மிஷன் நூறு ஆண்டுகளாக நடத்திவரும் வீடற்றவர்களுக்கான இரவுநேரத் தங்குமிட வாயிலில் அவரை அடிக்கடி கண்டிருந்தாலும் பேச வாய்ப்புக் கிடைத்ததில்லை. (ஒருமுறை இந்த மிஷனுக்குச் சாப்பாடு வழங்க என இடியப்பம் எடுத்துச் சென்றபோது, அங்கிருந்த அம்மணி, “இங்கு வருபவர்கள் இத்தகைய அந்நியச் சாப்பாடுகள் சாப்பிட மாட்டார்கள். வேறு ஏதாவது கொண்டு வாருங்கள் என்று சொன்னது நினைவு வந்தது”) …
-
- 6 replies
- 2.6k views
-
-
தேடிக்கொண்டிருக்கிறேன்! --------------------------------------- என்னைத் துடைத்து அழகு பார்த்தவன் இன்னொருவனுக்கு பரிசாய்க் கொடுத்துப் புதைந்து போனான்! விதையென்றானதாய் விழி துடைத்தவள் என்னைத் தாங்கினாள் வீறுடன் நடந்தாள் பேருடன் வந்தாள்! பெரும் பேறினைப் பெற்றவள் தானென கருமையில் கலந்தாள் கடமை முடித்தாள்! மீண்டும் தோள்களில் மிடுக்குடனிருந்தேன் நாட்கள் கழிந்தன! வங்கத்திலாடிய வஞ்சகர் கூட்டம் நஞ்செடுத்தாடி நாயகர் சாய்ந்தனர் நானுமிப்போ தமிழீழ மக்களைப்போல அனாதையாய் சாய்தேன் யாருமிப்போ தீண்டுவதில்லை யார்வருவாரோ தேடிக்கொண்டிருக்கிறேன்!
-
- 6 replies
- 1.2k views
-
-
தமிழன் வரமாய் வந்த -புலி வாலிபர்கள் போட்ட கிலிக் குண்டுகளாய்.. குதங்களெல்லாம்.. எரியுதையா..எரிகிறதே.. எம்மேலே..வட்டமிட்டு.. வகைவகையாய்.. தீ முட்டையிட்டு.. மழலையையும் மாமனையும்.. மண்ணிலே மரிக்கவிட்டு இனவெறியாட்டம் போட்டவன் புரிந்திருப்பான்..உயிர்வலி மக்கள் மீது குண்டு போட்டு.. எம்மாவீரர்.. அழிப்பதில்லை கண்மூடிக் குண்டெறிந்து.. விளையாடிப் போவதில்லை ஆயிரம் குண்டு போட்டும் இலக்கெட்டா ஆணவத்தை.. பிசகாத குறியாலே பிய்த்தெரிந்த எம்மருமை அண்ணாக்களே.. கண்ணீர் பொழிய வாழ்த்துகிறேன்.. களிப்பிலே நீந்துகிறேன்.. வெற்றியில் நிலைத்து வேள்வியில் தளைத்து நூறாண்டு வாழுங்கள்..
-
- 6 replies
- 1.3k views
-
-
பசியின் வலி பார்வையில் தெறிப்பு முல்லையின் மைந்தர்கள் மற்றவர்களுக்கு பசி போக்கிய காலம் போய் ஒரு பிடி சோறுக்காய் நாலுகால் பிராணிபோல் ஆணவத்தின் பின்னால் ஆரோகணிக்கும் அவலம்தான் என்ன ? புலத்திலே புறணி படிக்காமல் பேச்சைக் குறைத்து செயலை கூட்டினால் நாலுகால் இருகாலாக வருமே!! ஒருநாளிற்கு ஒரு யூறோ போக்கிடுமே என் இனத்தின் இழிநிலையை ஒருவேளை சிங்கவம்சங்களுக்கும் நாளை இதே நிலை வரலாமோ ?? இப்பொழுது சிங்கங்கள் சிங்காரமாய் எம் நிலைகண்டு சிரிக்கலாம் அவர்களுக்கும் பசி ஆழிப்பேரலையாய் வந்தபொழுது கைகொடுத்தோமே ஏனெனில் நாங்கள் தமிழர் !!!!!
-
- 6 replies
- 996 views
-
-
எனக்கு மறுக்கப்பட்ட சுதந்திரம்..... கவிதை - இளங்கவி...... பிறந்ததும் இருளில் சிறிதாய் வளர்ந்ததும் இருளில் கொஞ்சம் வாழ்ந்ததும் இருளில் அது அடிமை வாழ்வெனும் சிறையில்..... சின்னஞ்சிறு வயதினிலே அண்ணாந்து பார்த்திடுவேன் அழகான விமானமல்ல எமை அழிக்கவரும் விமானத்தை..... அனைவரும் பதுங்கு குளி நான் மட்டும் அதன்வெளியில் அது நான்மட்டும் அனுபவித்த சிறிதாய் நடமாடும் சுகந்திரம்.... தென்னை ஓலைமட்டை வெட்டி தெருக்களிலே பந்துகொண்டு துடுப்பாட்டம் ஆடிடுவேன் சந்தோசத்தில் மனமகிழ்வேன் ஆமியின் கெலி வருவான் கிட்டவந்து சுட்டுடுவான் ஏனென்று தெரியாது; உயிர்காக்க வீதியிலே படுத்திடுவேன் விளையாட்டு ஒத்திவைப்பு என் ரன்களெல்லாம் வீனடிப்பு; அது என…
-
- 6 replies
- 1.2k views
-
-
டெங்குவே உன்னைச்சுற்றி நாளும் நாளும் உயிர்களை பறித்து கோர ஆட்டம் போடும் டெங்குவே! உன் கொட்டத்தை அடக்கி, மக்கள் உயிரைக் காத்திட மனிதரில்லை. உன்னை வைத்து அரசியல் நடத்த ஆயிரம் பேர் கிளம்பியுள்ளார்கள். கேட்க யாருமில்லை என்பதால் நீயும் ஆவேசமாய் உயிர்களை பறித்தெடுக்கும் வெறியாட்டத்தை தொடர்கிறாய். ஆயிரம் கேள்விகள்,குற்றச்சாட்டுகளை மாறி மாறி எதிர் எதிராக தொடுத்து, அட்டகாசம் புரியும் கேடு கெட்ட மனிதர்களால் நாளும் நாளும் வேதனைக்குள் தத்தளிக்கும் மக்களை காத்திட யார் வருவார். உன்னிடமிருந்து மக்களை காத்திட எவருமே உள்ளத்தால் நினைக்கவில்லை. உன்னை வைத்து தமக்கு இலாபம் ஈட்ட எண்ணில்லாதோர் முளைத்துவிட்டார்கள். மருத்துவமனைக்கு செல்லல்,ஆறுதல் கூறல் …
-
- 6 replies
- 1.1k views
-
-
ஒரே ஒரு வெய்யில் காலம் எனக்கு கொடு! விதவைகளாய் இருந்த மரங்கள் பச்சை போர்க்க , ஊரெல்லாம் பண்பாடியே பறவைகள் பறக்க , சூரியனும் பனிக்கு பாய் ( bye ) சொல்லி ; சூட்டுக்கு ஹாய் (hi )சொல்ல , அது கண்டு என் மனம் உவகை பொங்கும் . மெலிதாகவே என் மனம் வருடும் மெல்லிய காட்சிகள் நிறைந்த ஒரே ஒரு வசந்தம் எனக்குக் கொடு ! அந்த காட்சிகளை நிரவிக் கொண்டபின் , சந்தோசத்துடன் என் இதயம் சத்தத்தை அடக்கத் தயார் .
-
- 6 replies
- 929 views
-
-
அகதியாய் அலைந்து ஆழ்கடல் கடந்து இன்னல்கள் சுமந்து ஈழத்தைப் பிரிந்து உறவுகளைத் தேடி ஊட்டி வரை ஓடி எல்லாம் இழந்து ஏங்கித் தவித்து ஐயோ அம்மாவென ஒரு பாத்திரம் கொண்டு ஓடும் எங்கள் நிலை கண்டால் ஒளவைப் பாட்டி மட்டும் ஃமாய் நிற்பார் !
-
- 6 replies
- 1.7k views
-
-
தேவனுக்கு ஒரு திறந்த மடல் அன்பான பாலகனுக்கு , உலகமே உம் வரவை உற்சாகமாய் கொண்டாட என் மண் மட்டும் ஏன் ஐயா சிரிப்பைத் தொலைத்தது ??? ஆழிப் பேரலையாய் ஆவேசமாய் வந்தீரோ ? ஆரவாரமாய் என்மக்களை உம்மிடம் இழுத்தீரோ? பல வடுவை சுமந்த எமக்கு உம் வருகை உவப்பாய் இல்லை....... வெளியே நாம் சிரித்தாலும் உள்ளே நாம் உறைந்துதான் போனோம். வருடங்கள் பல பறக்கும் காலங்கள் கலகலக்கும் ஆனாலும் நீர் வைத்த ஆழ வடு ஆறவில்லை எங்களுக்கு. வாரும் பாலகனே வாரும் .. என்மக்கள் நிலையில் மற்றதை தாரும்.. கோமகன் மார்கழி 24 2013
-
- 6 replies
- 794 views
-
-
தாமரை இலையின் நீர்த் திவலை...! எத்தனை முறை தான் நீர் நினைத்தாலும் ஒட்டிக்கொள்ள முடிவதில்லை - இலையுடன்; நீர் பலமுறை சினந்திருக்கின்றது இலைக்கு புரியவில்லையே என்று...! பாவம் இலை...! அதனால் என்ன செய்யமுடியும் அதன் நெஞ்சுக்குள்ளும் ஈரமுண்டு... அதைவிட அதிகமாய் வலிகளும் நிறையவே உண்டு தடாக நீருக்கும் நீர்த் திவலைக்குமிடையே தடுமாறுகின்றது - இலை எத்தனை முறைதான் நீர்த்திவலைதனை அணைத்துக்கொள்ள நினைத்தாலும்... அதன் ஸ்பரிசத்தை மட்டுமே இலையால் கைது செய்ய முடிகின்றது. இலை அழுதகண்ணீரில் தான் தாமரைக் குளமே நீர்பெறுகின்றதென்பது எத்தனை பூக்களுக்குத் தெரியும் இருந்தாலும் என்ன... நீர் இருக்கும் வரை அதனைத் தன்மீது தாங்கி..…
-
- 6 replies
- 1.2k views
-
-
அப்பிக்கிடக்கும் அந்தகாரம் துடைத்து கசியும் நிலவொளி துருவேறிய கம்பிகளை கடந்து கரடுமுரடான பழுப்பேறிய சுவர்களில் திட்டுதிட்டாய் விழுகிறது காய்ந்த உதிரச் சிதறல்கள் உயிர்வற்றிய ஓவியங்களாய் பயமுறுத்துகிறது. இரவின் நிசப்தம் உடைகிறது கூட்டத்தைப் பிரிந்து தனியனாகிப்போன குட்டியானையொன்றின் பிளிறலைப்போல் அருகிலோர் அறையில் அலறி அடங்கிப்போகிறது அந்தரித்த ஒரு தமிழ்க்குரல் அடிவயிற்றைப் பிழிகிறது பயம் அடுத்தது நானாகவும் இருக்கலாம் கடந்த விசாரணையின் காயங்களே காயவில்லை உதிரம் கலந்து ஒழுகிறது சலம் பிளாஸ்ரிக்குழாய் செருகப்பட்ட மலவாயிலில் மரணவேதனை நகம் பிடுங்கப்பட்ட விரல்களில் இலையான்கள் இருக்க எத்தனிக்கிறது. இன்னமும் நான் இருக்கி…
-
- 6 replies
- 1.8k views
-
-
இந்த இனைப்பை கொஞ்சம் பாருங்களேன் http://www.karuthu.com/forum/forum_posts.asp?TID=2335 நன்றி சிவராஜா
-
- 6 replies
- 1.4k views
-
-
வான் மழை கழுவி வந்த வானவில்லின் வர்ணம் கொண்ட மலரே..... தென்றலிடம் கடன் வாங்கிய விசிறி கொண்டு திரவியமாய் பரப்பும் நறுமணம் கொண்டவளே.. மெல்லிதழ் தான் அசைத்து என்னை மெல்ல அழைத்திட்டாய் செவ்விதழ் விரித்து உன் தேனமுதம் பருகவிட்டாய்... எள்ளளவும் மனப் பயமின்றி நான் உன்னை தழுவி இன்புற்றேன் உன் பட்டுடல் பட்டு பக்குவமானேன்..! நான் மட்டும் உன் அன்புக்குக் காதலனாக மாலைக்குள் நீ வாடினாலும் உன் ஆயுள் முடிந்தாலும்... உன் சந்ததி பெருக்கும் மகரந்தம் தாங்கியவனாய்..! தியாகத்தின் செம்மல் நீ... உன்னை நாளும் ஆணை ஆடையாய் மாற்றிடும் மனிதப் பெண்ணுக்கு உவமை சொல்பவன் ஓர் மடையன்..! [size=2]Photo taken …
-
- 6 replies
- 790 views
-
-
அம்மா உன் அன்பு உள்ள வரை தனிமை தெரிவதில்லை உன் கரிசனம் இருக்கும் வரை உணவும் தேவையில்லை தனித்த் போது ஒரு சிணுங்கலில் தாவி ஓடி அணைத்திடுவாய் அள்ளி முத்தம் தந்திடுவாய் அம்மா மடி மீது நான் மட்டும் அரசாட்சி கண்ணுறங்க கதை சொல் வாய் அப்பாவை எனக்கு அறிமுகம செய்தவளே தப்புக்கள் நான் செய்தால் தட்டிக் கேட்பவளே பகட்டான பட்டுச்சட்டை கலர் கலராய் காலுறை மெத்தென்ற சப்பாத்தும் கை காது கழுத்துக்கும் நகையணிபூட்டி அழகு பார்த்தவளே பள்ளிக்கு சென்று நானும் பாடங்கள் பல படித்து பரீட்சையில் சித்தி பெற்று பட்டங்கள் பல பெற்று பாங்காய் ஒரு பணியிடத்தில் பல்லாயிரம் பணம் பெற்று பக்குவமாய் வீடு கட்டி பல பேரும் பார்த்து நிற்க பாரினில…
-
- 6 replies
- 3k views
-
-
மண்ணில் நாம் வந்து பிறந்துவிட்டோம் வாழ்வு எது என்றும் அறிந்துவிட்டோம் எண்ணிலாத ஏக்கங்களை எம்மைச் சூழ ஏற்றிவிடோம் பொன்னின் ஆசைகள் போதையாகிட பொருள் மட்டுமே வாழ்வுமாகிட பேரவா கொண்டு பேதைமை கொண்டு போட்டிகள் கொண்டிங்கு போதையிலேயே வாழுகிறார் மண்ணின் ஆசைகள் மனதெங்கும் மாய்த்திட மானமிழந்து மதிகெட்டலைந்து சுற்றமிழந்து சுறுசுறுப்பிழந்து சொந்தமிழந்து சொத்துமிழந்து செக்குமாடுகளாய் வாழுகிறார் பெண்ணின் ஆசையில் கண்ணும் குருடாகிட பேரிடர் பல தாங்கியே நிதம் பெண்டிர் மறந்து பெருமை மறந்து பித்தராய்ப் பலர் வாழுகிறார் உயிர் காக்க உணவே இன்றி உடல் காக்க உடையும் இன்றி உறவேதும் உதவிட இன்றி உணர்வு கொன்று உயிர் காவ உள்ளம் வென்று உணர்வு காக்கும் உருக்குலைந்த உண்…
-
- 6 replies
- 640 views
-
-
எது ஈடு இதற்கு...? மனதைத் தாலாட்டும் மாலைத் தென்றல் சுள்ளென எரிக்கா மெல்லிய வெயில் சில்லெனப் பரவும் இரவுக் குளிர் கதகதப்பாக்கும் போர்வைத் துணி இவை போதும் எனக்கு வேறு எது ஈடு இதற்கு...? இரவில் நிலவு இரையும் மழை பருகத்தேநீர் பாயில் தூக்கம் கனவில் சுகம் கவலையற்ற மனம் இவை போதும் எனக்கு வேறு எது ஈடு இதற்கு...? கலையும் இருள் காலை நிசப்தம் கண்ணைக் குத்தா கதிரவன் ஒளி விழித்தபடி தூங்கும் சுகம் இவை போதும் எனக்கு வேறு எது ஈடு இதற்கு...? குளையல் சோறு குளிக்க வெந்நீர் துவட்ட முந்தானை தூங்க உன் மடி இவை போதும் எனக்கு வேறு எது ஈடு இதற்கு...? ஒழுகும் மழை ஒற்றைக் குடை புழுதி வீசும் பூமி வாசம்…
-
- 6 replies
- 1k views
-
-
சுடும் மழைக் காலம்... குளிர் வெயிலாய் நீ வந்தாய் ! இலையுதிர்கால.... வெளிர்ப் பூவை நீ தந்தாய் !! மனதிழை ஓடும்.... மெல்லிசையாய் உன் பெயரை, இதழிடை பாடும்.... இன்னிசையாய் நீ அமைந்தாய் !!! கனதரம் நினைத்திடும்... கணங்களும் இனித்திடும்...! நிரந்தர வதிவிடம்... மனங்களும் கொடுத்திடும்...!! சிலதரம் பார்த்திடும்... நால்-விழிகளும் கலந்திடும்...! வெண்ணிலா வெட்கத்தில்... மெல்லமாய்ச் சிவந்திடும்...!! எங்கே நீ சென்றாலும்... என் நினைவும் பின்னால் அலையுமடி..! அங்கே வானவில் வீடு கட்டி... உனக்காய் வாசல் வரையுமடி... !! உந்தன் குரலைக் கேட்டு... மெல்லப் பூக்கள் பூக்காதா... ? பூமொட்டு விரியும் தாளம் எந்தன்..... காதில் கேக்காதா... ?? என் கைகள் தொட்டுச் செல்லும் மேகம்…
-
- 6 replies
- 1.9k views
-
-
வாரா வாரம்... திரை கூர்ந்து விழிப்புலன் கூர்மையாக்கி செவிப்புலன் நேர்மையாக்கி தெளிவாய் பார்க்கிறேன் கேட்கிறேன்.... ராசி பலனில் பகவான்கள் பலர். என்னோட அதிபதி.. குருபகவான் கூட கன்னிப் பெண்கள் மேல தான் கண்ணோட... கருசணையாய் இருக்கிறார். காளை எனக்கு மாதம்.. வருடம் பல... காத்திருந்தும் பலனில்லை. பகவான்... கிருபையும் எனக்கில்லை..! சாத்திரியின் கடைக்கண் பார்வையிலும் நானில்லை..! காளை என்னை விளித்து.. பலன் சொல்லவும் யாருமில்லை..! இருந்தும்.. பூமிப்பந்தில் நாம் நிமிர்ந்து நிற்கிறேன்.. சுய தேடலும் சுய உழைப்புமே என் வாழ்க்கை என்பதால்..! எல்லாம் நான்.. நெஞ்சில் இரண்டு சிரட்டை இன்றி பிறந்ததன் பலன்..!
-
- 6 replies
- 941 views
-
-
செருக்களத்துப் புலியொடுக்க தரணியெங்கும் முறுக்கெடுத்து தருக்குடனே தடைபோட்ட தனவான் தேசங்களே! கல்லுறங்கும் மாவீரர் எங்கள் உள்ளிருக்கும்வரை வில்கொண்ட கணைகளுக்கு வீதித்தடை என் செய்யும்?
-
- 6 replies
- 1.9k views
-
-
எந்த வெள்ளை புறா நடந்து சென்ற பாத சுவடுகள் இந்த நட்சத்திரங்கள்?! வானம் இரவு நேரங்களில் போர்த்திக் கொள்ளும் பொத்தல் நிறைந்த போர்வையா இந்த நட்சத்திரங்கள்?! பால் நிலா தோட்டத்தில் பூத்திருக்கும் தேன் மல்லிப் பூக்களா இந்த நட்சத்திரங்கள்?! வானம் சுத்தம் செய்யப்படுவதற்காய் தெளிக்கப்பட்ட சோப்பு நுரைகளா இந்த நட்சத்திரங்கள்?! மேக தேவதைகளின் உறக்கத்திற்காய் வான் மெத்தை மேல் தூவப்பட்ட வெள்ளிப் பூக்களா இந்த நட்சத்திரங்கள்?! நிலாவிற்கு வர்ணம் பூசினப்போது சிந்தின துளிகளா இந்த நட்சத்திரங்கள்?! விதியினை எழுதும் எழுதுகோலில் மை உள்ளதா என்று இறைவன் உதறிப் பார்த்த துளிகளா இந்த நட்சத்திரங்கள்?! வானம் …
-
- 6 replies
- 1.7k views
-
-
தியாகத்தாயே! சரித்திரம் தன்னில் பேரெழுதிச் சென்ற சத்தியத் தாயே பூபதியே! நித்தமும் நின்னை நினைக்கின்றோம் உனக்காய் கண்ணீர் வடிக்கின்றோம்! அரக்கரினத்தின் கொடுமையினை எதிர்க்கத் தாயே பூபதியே! அஹிம்சை வழியில் நின்றாயே! அகிலத்தை நீ வென்றாயே! விதியின் வழியில் சாகாமல் ஈந்தாய் அம்மா உன் உயிரை தமிழரினத்தின் தன் மானத்திற்கு எழுதிச் சென்றாய் முன்னுரையை உந்தன் தியாகம் உலகறியும் நம்மை சூழ்ந்த பகையும் உடனகலும் வேகும் தீயில் யாகம் செய்யும் வேங்கை வழியில் பகை முடியும்! நாடே அறியும் வகையில் நீ இருந்தாய் விரதம் உண்ணாமல்! ஈழத் தாயே!! எம் பூபதியே! விடியும் நேரம் மிக விரைவில்!.. பறக்கும் புலிக்கொடி ஈழமண்ணில்!. நன்றி..
-
- 6 replies
- 1.4k views
-
-
நம் தலைவனின் கனவு நிஜமாக..... கவிதை - இளங்கவி..... அடிமை வாழ்வில் குப்பையாய் கிடந்தோம் கூட்டுவார் இன்றி காற்றுக்கும் பறந்தோம் ஏய் தமிழா...! உன் தேச மண்ணில் குப்பையாய் கிடக்கின்றாய் கூனிக் கிடந்து கூன் விழுந்திட்டாய் ; என்று இந்தக் குப்பை மேட்டிலே ஓர் பொறியாக விழுந்தாய் சிறுதணல் மூட்டினாய் சிறிதாகவும் புகைந்தாய்; ;பின் செந்தணல் ஆகி விடுதலை தீயை மூட்டினாய் இன்றோ கோடி தமிழனின் மனங்களில் கொழுந்து விட்டெரிந்து விடுதலைத் தீயாய் வீறுகொண்டு எரிகிறாய்......! வேதனை வாழ்விலும் வீரியம் தந்தவன்..... எங்களின் வாழ்வுக்காய் தன் வாழ்வையும் மறந்தவன்...... இருபதில் தொடங்கி இருபதினாயிரம் கண்டாய்...... இன்னமும் காண்பாய் இற…
-
- 6 replies
- 1.4k views
-