Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வெறிச் சிங்களத்தின் கண்டிச் சிறையகம் வீழ்ந்த என் உடன்பிறப்புக்காள்! தெறிக்கும் விழிக்கனல் பறக்கும் புலிகளே! தெய்வம் உண்டு நம்புங்கள்! பொறிச்சிறை நம்மை என்செயும் பார்ப்போம்! போர்க்களம் எமக்கென்ன புதிதோ? குறிக்கோள் இனியது கொண்டோம் தம்பிகாள்! கூத்தாடுவோம்! இது பொன்னாள்! எந்தமிழ் ஈழம் ஒளிபெற நாங்கள் இருட்சிறை ஆடுதல் இன்பம்! வெந்தழல் ஆடி விழிமழை தோய்ந்து வெல்லுதல் விடுதலை கண்டீர்! சிந்துக முறுவல்! மெய்சிலிர்த் திருங்கள்! செந்தமிழ் மூச்சென்ன சிறிதோ? வந்தெதிர் கொள்ளும் துயரெலாம் ஏற்போம்! வைர நெஞ்சங்களோ வாழி! ஆழமா கடலின் அலைகளே இருங்கள்! அறம் காத்தல் நம்கடன் அன்றோ? கோழைகள் அல்லோம்! கொடுஞ்சிறைக் கோட்டம் குளிர்மலர்த் தோட்டம் என்றார்ப்போம்! ஈழ…

  2. துகிலுரியப்பட்ட கட்டங்களும், வீதிகளும் கோரத்தின் எச்சங்களாய்.. 2010ஆம் ஆண்டு ஏ-9 நெடுஞ்சாலை மீண்டும் திறந்த சில மாதங்களின் பின்னர் வன்னியூடான எனது பயணத்தின் சில அனுபவங்கள் கவிதை வடிவில், கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் கால அரக்கனின் நினைவுச் சின்னங்கள்.. துகிலுரியப்பட்ட வீடுகள் கட்டடங்கள் எச்சங்களாய்...!! களி மண் சகதியால் குளிப்பாட்டப்பட்ட வடலிகள்..! சேவைக்கால மூப்பு காரணமாக ஓய்வு வழங்கப்பட்ட பெரிய நீர்த்தாங்கி மல்லாக்காய் படுத்து மீளாத்துயில் கொள்கிறது..! எல்லையற்ற காணிகள்.. பிடிப்பற்ற வாழ்க்கை.. துளிகளாக சிலர் கண்களில்..! தூக்கத்தை கெடுப்பதற்கென்றே உருவாக்கப்பட்டது போல் யாழ்-கொழும்பு …

  3. Started by priyaa,

    உலகைப் பார்த்து ரசிக்க வேண்டிய இவர்கள் தொட்டும் தடவியும் பார்க்கிறார்கள் ஆச்சரியத்தோடு.. வியப்புக்குறிகள் கூட விரல்களின் தொடுகையில்.. விடியலின் நிறம் கூட விடியாத நம் மனம் போல.. வீணாக மண்ணில் புதைப்பதை விட்டு விதையாக விதைப்போம் இவர்களின் முகத்தில்.. விழிகளைக்கொடுத்து வெளிச்சம் பெறுவோம் இறப்புக்குப் பின்பும் இவர்களால் உலகைக் காண்போம்..

    • 12 replies
    • 7.8k views
  4. முல்லைப் பாட்டு - வ.ஐ.ச.ஜெயபாலன் ஆயிரம் காலங்களைக் கடந்த கடல் ஒரு முதுகவிஞன் காதலைப் பாடுவதுபோல இன்றும் புது அலைகளை எழுப்புகிறது. அந்த அலைகளின் எல்லைக்குமேலே யுகம்யுகமாய் மோர் வார்த்துக் கைசிவந்த இடைச்சிகளின் மேச்சல் நிலம். அந்தக் கானல் பொட்டலின் கந்தல் குடையான சிறு மரம் நோக்கி கத்திக் கம்போடும் செல்பேசியோடும் பெயர்கிறாள் ஒரு புல்வெளியின் இளவரசி. நூல் பாவையாய் அவள் அசைவின் ஏவலுக்கெல்லாம் ஆடித் தொடர்கிறது நாய். அந்த நான்கு கண்களின் பார்வையில் கட்டுண்டு மேய்கிற ஆட்டுக்கிடைகள் செம்புழுதி போர்த்த பற்றைகளிடை காடைகள் மிரளாமல் ஊரும். ஆயிரம் காலத்து வளமையாய் நிழல் தேடிவரும் ஆயர்குலத் தேவதைக்கு பழமும் வைத்திருக்கிறது இலந்த…

    • 14 replies
    • 3.1k views
  5. Started by துளசி,

    காதலிக்கிறேன் என்றாய்... பல பல பொய்கள் புனைந்து புகழின் விளிம்பில் இட்டு சென்றாய்... காதலில் இது சகஜம் என நினைத்தேன்... இன்று நீ... அதையே வேறோருவளிடம் சொல்லிக்கொண்டிருக்கிறாய்.... சற்றும் மாறாமல்.....

  6. இப்ப போகலாமென மனம் அடித்துக் கொள்கிறது. 83இன் பின்னர் மறந்து போயிருந்தவையெல்லாம் நினைவிற்குள் மீண்டன. கறுப்பு வெள்ளைப் போட்டோ ஆல்பம், புத்தகக் கவருக்குள் ஒளித்து வைத்த காதல் கடிதங்கள், திண்ணைச் சுவரில் எண்ணெய் பிசுக்காய் அப்பியிருக்கும் ஆச்சியின் அடையாளம். பின்முற்றம் கக்கூஸ் கிணற்றடி இத்தனை காலமாய் மறந்து போயிருந்த அனைத்தையும் கூட்டி நினைவிற்குள் மீட்க புகாராய் எதுவும் ஒட்டமாட்டேன் என்கிறது. என் மண் என் நாடு என் மக்கள் படபடக்கின்றது மனம் தங்குவதற்கு வசதியான இடம் சப்ப “சுவிங்கம்” சாப்பாட்டு ஒழுங்கும் போக முன்பே செய்ய வேண்டும். இல்லாதவர்களுக்குக் குடுக்க கொஞ்ச பழைய உடுப்பு சொக்லேட்டுப் பெட்டிகள், …

  7. வலிகளும் வேதனைகளும்... புணர்ந்து பெற்ற மழலை! சொல்லி விளங்காத வரிகளில்... தெரியுமா இவன் செயலை? தூக்கிய ஆயுதம் வைத்து... தூங்கிய பின்னரும் -இவன், கனவில் பேனாதான் வந்து நிற்கும்! ஒரு பேனா முனையின் உயர் அழுத்தம், முற்றுப்புள்ளிதான் வைக்க முடியும்! ஆனால் இவன் கனவுகளிலும்... அதன் முனை அசைவதையே ஆசைப்பட்டான்! இரவெல்லாம் அழுதுமுடித்த... பேனாக்களின் வண்ணக் கண்ணீரில், காகிதத் தலையணைகள்... ஈரமாகிப் பாரமாகின! முதற்பக்கம் இல்லாத புத்தகம் போல், முகமூடிகள் மட்டும் முகப்பானது! பொறுப்பாக பொறுப்பேற்க பொறுப்பற்ற வெறுப்போடு வெறுப்புற்று வெளியேற்ற... இன்னும் நீர் பேதம் பார்த்தால்.... வெறியான எண்ணங்கள் வெளியேற வெறுப்பற்ற வெளிப்படையாய், புரிதல் எ…

    • 9 replies
    • 1.5k views
  8. ஊருக்கு தாண்டி நான் கில்லாடி என் மனச உடைச்சது நீதாண்டி பொய்யாச்சு எல்லாம் பொய்யாச்சு என்னை விட்டு எல்லாம் போயாச்சு கண்ணதாசனும் கம்பன் கவிஞனும் பொம்பள மனச எவனும் புரியல கவிஞர் வாலியும் வைரமுத்துவும் பொம்பள மனச எவனும் அறியல உன்னை நினைச்சதால நான் மறக்கல உன்னை மறக்க நினைச்சாலும் முடியல மனச மனசுக்குள் புதைச்சதல பிரிக்க முடியல மனசல உறக்கம் கொஞ்ச நேரம் கிடைச்சாலும் அது கிடைக்கவேணும் உன் மடியில என்னை பார்த்தும் பார்க்காம போகிற உன்னால முடியுது என்னால முடியல...

    • 4 replies
    • 1.3k views
  9. Started by முல்லைசதா,

    முரளி, விக்கெட் அறுவடை இயந்திரம்; இந்தியாவின் மூலப் பொருளில் இலங்கைத தயாரிப்பு. இருபது ஆண்டுகள், இலக்கைத் தாண்டிய சாதனை. அதே மாடலில் மீண்டுமொன்று , முயற்சிகள் நடக்கின்றன; முடியவில்லை.

  10. கடைசிப் பாலகனின் இரத்தம் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - தீபச்செல்வன் மூட மறுக்கும் பாலகர்களின் கண்களில் குற்றங்களின் முடிவற்ற காட்சிகள் அசைகின்றன இறுதியில் எதையோ சொல்ல முயன்றபடியிருக்கும் மூடாத வாய்களில் மறைக்கப்பட்ட வாக்குமூலங்கள் ஒலிக்கின்றன இரத்தத்தில் பிறந்து இறுதிவரையில் இரத்தம் காயாமல் பிசுபித்தபடி உடல் எங்கும் வழிய குண்டுகளால்சிதைக்கப்பட்ட பாகங்கள் உதிர எனது நிலத்து பாலகர்கள் திரிகையில் இலையான்கள் காயங்களை அரித்து அவர்களைத் தின்று முடித்தன எல்லோருடைய கண்களின் முன்பாகவும் எனது தேசத்திற்கெதிரான போரில் பாலகர்களை பலியிடும் பொழுது தாய்மார்களை நோக்கி அவர்கள் அழுகையில் தாய்மடிகளில் இரத்தம் பெருகியிருந்தது பெண்…

  11. இன்னும் கொஞ்சம் பசியுள்ளபோதே நிறுத்திவிட வேண்டும் உணவை;உணவே மருந்து இன்னும் கொஞ்சம் சக்தியுள்ளபோதே அடக்கிவிட வேண்டும் கலவியை; நிறைந்த இல்லற வாழ்வினை அனுபவித்த பின்னர் ஆன்மீக நாட்டம் கொண்டு இல்லற சுகத்தை விட வேண்டும் இன்னும் கொஞ்சம் ஈட்ட முடியும் போதே துரத்திவிட வேண்டும் பணத்தை. பணத்துக்கு நீ அடிமையாகி விடுவாய் இன்னும் கொஞ்சம் வாழமுடியும் போதே விட்டுவிட வேண்டும் மூச்சை. கிடந்து அழுந்தாமல் இந்த முயற்சிகளுக்கும் - முடியாமைகளுக்கும் இடைவெளியில் பாசியாய் மிதந்து கொண்டிருக்கிறது பாவப்பட்ட மனித வாழ்க்கை. படித்து சுவைத்தவை . _________________

  12. எங்கள் விடுதலையின் பொருளறியும் கண்முன் விரிந்து கனவுவெளியெங்கும் விதைந்து கிடக்கிற எங்கள் மீதான வன்மங்கள் ஒருநாள் ஓர்மமாய் எழும். அன்று எங்கள் தீ விரல்கள் இப்பூமியெங்கும் தணலேற்றும்….. தமிழச்சிகளின் மார்பையறுத்தவனும் பிறப்புறுப்பை மிதித்தவனும் மரணத்தின் வலியறியும் விதியெழுதும் நாளின் பொழுதறியும் - எங்கள் விடுதலையின் பொருளறியும்.... 12.03.2012 (நிர்வாணமாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்போராளிகளின் ஒளிப்படங்கள் பார்த்த வலியின் வெளிப்பாடாய் இக்கவிதை)

    • 3 replies
    • 984 views
  13. Started by nedukkalapoovan,

    கருவினில் அவள் வயிற்றினில் உதைந்தோம்..! வளர்கையில் அவள் மார்பினில் உதைந்தோம்..! பள்ளிப் பருவத்தில் அவள் ஆசைகளையே உதைந்தோம்..! வளர்ந்த பின் அவளையே உதைகிறோம் இறுதியில்.. தனிமையில் தள்ளுகிறோம்..! இருந்தும் அவள்.. இன்னும் எங்களையே நினைக்கிறாள்.. உருகிறாள் அழுகிறாள் அன்பைப் பொழிகிறாள்.. அவள் தான் அம்மா...! அன்பு மக்களாய் அவளுக்கு நாம் என்ன அளித்தோம்..???! வெறும்..ஏமாற்றங்களே...! பதிலுக்கு அவளோ இன்னும்.. அளிப்பது அனுதினம் அன்பும்.. ஊக்கமும்..! அன்னையை கடவுளாய் தொழ வேண்டாம் பூக்களால் பூஜிக்க வேண்டாம் பொன்னால் அலங்கரிக்க வேண்டாம் பட்டால் போர்க்க வேண்டாம் பரிசால் குவிக்க வேண்டாம்.. அவள் பேசும் ஒரு வார்த்தை…

  14. எனக்கொரு தேசம் எடுத்திட வேண்டும். முடியாட்சி அதிகாரதில் முடங்கிய நான் குடியாட்சிக் காலத்தில் குதூகலமடைந்தேன் ஆதிக்க வெறியர் அதிகாரம் ஓங்க ஆளுமையிழந்து அவதிப்பட்டேன். நாடுகள் தோறும் புரட்சிகள் ஓங்க நானும் அங்கே மறுபிறவி எடுத்தேன் விடுதலை என்று நாமம் சூட்டி விருப்புடன் என்னை வளர்த்தனர் மக்கள். இலங்கைக்கு வந்த அன்னியர் பிடிக்க இழுபட்டுத் தவித்தேன் பல காலம் இனத்துவேசிகளிடம் அவர் விட்டுச் செல்ல இன்னல்கள் பட்டேன் சில காலம் சுயநலம் காத்து அரசியல் பேசியோர் சுதந்திரமென்று கோசமிட்டார்கள் தமிழீழம் என்று பெயரை வைத்து தரணியிலே அவர்தம் புகழ் சேர்த்தார். உணர்வுள்ள தொண்டர்கள் ஒருசிலர் சேர்ந்து உணர்ச்சியுடன் என்னைத் தத்தெடுத்தார்கள் த…

    • 0 replies
    • 722 views
  15. வலைப்பூவில் எழுதும் தீபிகாவின் கவிதையில் பிடித்த கவிதையொன்று. உண்மை அறியும் பொய்கள் சமாதானம் தருவிக்கப்பட்டதாய் சொல்லப்படுகிற எனது நிலத்தில் வீதிகளை விழுங்கிக்கொண்டு வளர்ந்திருக்கிற விளம்பர மரங்களின் நிழலில் நாய்களுடன் சேர்ந்து வீடுகள் பறிக்கப்பட்ட உடல்களும் படுத்துக் கிடக்கின்றன. திரும்பிப் பெறமுடியா இழப்புக்களோடு திரிகிற சனங்களின் முகங்களில் படரமுடியாத மகிழ்ச்சியின் ரேகைகள் மிச்சமிருக்கும் வாழ்க்கையை எதிர்பார்ப்புகளற்று செலவு செய்கின்றன. சிறைப்பிடித்து காட்சிக்கு வைத்திருக்கும் மிருகக்காட்சிச் சாலை விலங்குகளை பார்க்கும் ஆவல் நிறைந்த அதே கண்கள் குளிர்சாதனப் பேரூந்துகளில் வந்திறங்கி கும்மாளமிட்டபடி ஊரெங்க…

  16. கலிகாலம் பிறக்கக், காத்திருக்கும் கபோதிகள்! கண்ணீர்க் குமுறலுடன் , கண்ணில் விரிந்தது அவலம்! காற்றையும் நஞ்சாக்கிய, கனரக ஆயுதங்களின் குமுறல்! கார்வண்ணன் தேரோட்டாத, குருசேத்திரப் போர்க்களம்! கருகி எரிந்த பிஞ்சுகள் நடுவில், குருதியில் குளித்தன சருகுகள்! கூட்டாக நடத்திய கொலைக்களம்.. கூட்டங்கள் நடத்தம். கொலைகாரர்! கொஞ்சிக் குலாவுகின்றன, காந்தீயக் கோழைகள் ! கலிங்கத்து மன்னனின், கால் பட்ட தூசியும், காந்தீய தேசத்தின்.,, கதை கேட்டு விலகியோடும்! கலிங்கத்துப் பரணியில், கூழுண்ட பேய்களும், கொடுப்புக்குள் சிரிப்புதிர்க்கும்! போதிமரம் காணும் புதிய குருத்துக்கள், பாவத்தின் சின்னமாகும்! பூவேந்தி நீ செல்லும், புத்தனின் தூபிகள், போர்க…

  17. என்னை நம்பவைத்து என் கழுத்து நரம்புகளை நறநற வென அறுக்கும் உன்னை எனக்கு பிடிக்கும். எதிர்பார்த்து காத்திருந்த என் கண்களை கூரிய முனையால் குத்தியிழுத்தெடுக்கும் உன்னை எனக்கு பிடிக்கும். நா நுனியில் நட்பென்று பேசி நீ நிலைநாட்டும் நயவஞ்சகம் எனக்கு பிடிக்கும். கனிவாய் நீ பேசி கன்னத்தில் தடவி கண்களால் சைகை செய்து என் கணங்களை நீ எண்ணிக் கொண்டிருப்து பிடிக்கும் உன் வலையில் நான் வீழ்ந்து விட்டதை உணர்ந்தும் உண்ணாமல் உறங்குவது போல் இரசிப்பது பிடிக்கும் உன்குலமே அழிந்தாலும் உன் காலம் கனிந்து வரும்வரை உள்ளுக்குள் நகைத்தபடி என்னை போட எத்தனிக்கும் உன் குணம் பிடிக்கும் என் முதுகை தடவியபடியே எந்த இடத்தில் குத்தலாமென சர…

  18. [யாழ் உறவுகளின் உள்ள உணர்வுகளுக்கு அதி கூடிய மதிப்பளிக்கும் வகையிலும் மனச் சங்கடங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும் படம் நீக்கப்பட்டுள்ளது.] பாலன் பிறக்கிறான் சேதி கேட்டு.. வேட்டை ஆரம்பம் கொலைகளின் நடுவே இரத்த ஆற்றில்.. அவன் வாழ்வு..! அற்புதங்கள் செய்கிறான் ஏழை மக்களை கவர்கிறான் சண்டாளர்களின் சாவில் இருந்து.. மக்களை காக்க சொற் கருவி ஏந்துகிறான்..! ஆட்சியாளர்களின் கர்வமும் கோபமும் பொங்க.. முட்கிரீடம் தரித்து சிலுவையில் உலோகங்களால் குத்தப்பட்டு மரிக்கிறான். அங்கும் மனித உரிமை மீறல்கள் நீதி விசாரணை இன்றி.. 2012 ஆண்டுகள்..! இவன் 1950 களில் பிறக்கிறான் காலத்தின் கோலமாய் சாதாரணமாய் வளர்கிறான். சிங்களப் பேரின அரக்கர்…

  19. மவுனித்துப் போன குரலில், மனிதம் புன்னகைக்கின்றது! மண்ணுள் புதைந்த மனிதத்தின், கீறல்கள் விழுந்த உடலில், கோரப் பற்கள் கீறிய கோடுகள்! சீரற்ற மூச்சுக் காற்றுச், சேடமாய் இழுக்கையில். கோரைப் புற்கள் அசைகின்றன! பேரழிவின் பெரும் பசியில். ஆவிகள் கரைந்து போய். ஆயிரம் நாட்களாகி விட்டன! பறக்கும் பருந்துகள் மட்டுமா, பக்கத்திலிருந்த புறாக்கள் கூட. பங்கு கேட்கின்றன! பாவமென்ற வார்த்தைகளால் மட்டும், பசியாறிக் கொண்டிருக்கிறது மனிதம்! கோவில்கள் நிமிர்கையில், , கோபுரங்கள் வளர்கையில், காவியுடை தரித்தவர் கண்களில், கனலாய் எரிகிறது நெருப்பு! கழிந்து போகும் நாட்களில், அழிந்து போகின்றன தடயங்கள்! ஆனாலும் மனிதம் சிரிக்கின்றது. ஆழ்ந்த இருட்டின் …

  20. Started by கோமகன்,

    பசியின் வலி பார்வையில் தெறிப்பு முல்லையின் மைந்தர்கள் மற்றவர்களுக்கு பசி போக்கிய காலம் போய் ஒரு பிடி சோறுக்காய் நாலுகால் பிராணிபோல் ஆணவத்தின் பின்னால் ஆரோகணிக்கும் அவலம்தான் என்ன ? புலத்திலே புறணி படிக்காமல் பேச்சைக் குறைத்து செயலை கூட்டினால் நாலுகால் இருகாலாக வருமே!! ஒருநாளிற்கு ஒரு யூறோ போக்கிடுமே என் இனத்தின் இழிநிலையை ஒருவேளை சிங்கவம்சங்களுக்கும் நாளை இதே நிலை வரலாமோ ?? இப்பொழுது சிங்கங்கள் சிங்காரமாய் எம் நிலைகண்டு சிரிக்கலாம் அவர்களுக்கும் பசி ஆழிப்பேரலையாய் வந்தபொழுது கைகொடுத்தோமே ஏனெனில் நாங்கள் தமிழர் !!!!!

    • 6 replies
    • 1k views
  21. சந்தையில் மலியும் வரை விந்தையான உள்ளத்தில் உறங்காதிருப்பவை

  22. நள்ளிரவின் பொழுதினிலே உளத்தில் எழும் எண்ணங்கள், பள்ளி கொள்ள மனமின்றி எழுத்தில் எழுதத் தூண்டுகோல் பிறந்த ஊரும் சிறந்த வாழ்வும் மறந்த மனம் மீண்டும், பிரிந்த உறவுகளை பறந்து சென்று கண்ட பின் மாறும் மாந்தோப்பாய் வாழ்ந்த வாழ்வு தனி மரமாப்போச்சு ... பிரிந்து சிதறி வாழும் எங்கள் மனமும் மரத்துப்போச்சு... ஓலைப்பாய் தூக்கம் தந்த சுகம் பஞ்சு மெத்தையில் இல்லை... கலகலப்பாய் இருந்த மனம் தொடும் வேதனையின் எல்லை... அல்லும் பொழுதும் சொந்தம் பிரிந்து அல்லலுறும் நிலை - அதனில் கல்லும் முள்ளும் காலில் உறுத்தி தந்த வலி வலியில்லை இசை விளங்கும் தேசமது இசைக்கு இசைந்து வாழ்ந்தோம்... இச்சையின்றி புலம் பெயர்ந்து தேனிசையின் சுகம் இழந்தோம் தாய் மண்ணின் எண்ணங…

  23. இச்சைகளின் அரசி சர்ப்பங்களை வசியம்செய்து ஏவல் வாங்கினாள்: சமிக்ஞைகளைச் சிரமேற்கொள்ளவாய்க் கட்டுண்ட சர்ப்பங்களுக்கு ஏக்கங்களை ஏற்றி உரு மறைந்து திரிய அவள் கற்பித்தாள், போகங்களின் நெருப்பைத் தீனியிட்டாள் அஞ்சனமிட்ட நீள் விழிகளுக்கு -அவை மத்தியில் கூறாய்ப் பிரியா இணைந்த கட்புருவமுடையன- சைகைகளினால் போர்களை ஆணையிடும் வலுவிருந்தது. களங்களின் சூட்சுமங்கள் தேறிக் கொய்த குறிகளை மாலை அணிந்தவளின் ஆழ் புலங்களில் அவளை மாசு அற விசுவாசித்தவர்கள் சேவகம் பணிக்கப்பட்டிருந்தார்கள். ஆசைகளால் உருவேற்றி மந்திரித்த பாம்பின் முட்டைகளை காற்றில் தூவி ஆண்களில் தீரா வியாதிகளை ஏற்றடுத்தியவள் நேரங்களைக் குறுக்கீடுசெய்து அவர்களைப் பித்து நிலையி…

    • 2 replies
    • 698 views
  24. ''அந்த செய்திக்காக காத்திருக்கின்றேன்'' ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ அந்த செய்திக்காக, நாளை எமக்கு ஏதாவது நல்ல செய்தி வரும் என்று அந்த செய்தி என்னுடைய காதுக்கு கிட்டுமோ ? என மனம் தினமும் ஏக்கத்தில் காத்திருக்கின்றது ....... ஆனால் வரவேண்டிய அந்த செய்தி வரவில்லை ! அந்த செய்திக்காக மீண்டும் காத்திருக்கின்றேன் ...... வந்தன பல செய்திகள் வந்தன அவை எவையும் நான் எதிர்பார்த்திருக்கும் செய்தியாக வரவில்ல்லை ! மாறாக செய்திகள் பல வருகின்றன ....... நான் விரும்பாத செய்திகளே தொடர்ந்து வருகின்றது ! நான் எதிர்பார்க்கும் செய்திக்காக தினமும் காலையில் ஆவலாக எதிர்பார்த்து ....... அந்த செய்தி வரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் காத்திருக்கின்…

  25. கல்பனா.. விண்வெளிக்கு போனாளாம் சில்பா... லண்டனில பரிசு வாங்கினாளாம் குஸ்பு.. தாலியை கேலி செய்தாளாம் "கற்பு என்றால் என்ன " துணிந்து கேட்டாளாம்..! இன்னொருத்தி இமயத்தில் கொடியை நட்டாளாம்.. இதெல்லாம் பெண் விடுதலையின் விளைவுகளாம்..! பெண் மேலாளர் ஆனாளாம் பெண் புத்தகம் தூக்கினாளாம் பெண் வாகனம் ஓட்டினாளாம் பெண் விமானம் செலுத்தினாளாம் பெண் வீட்டை என்ன நாட்டையே ஆள்கிறாளாம்..! வையகத்துள்.. பெண்ணில்லா துறைகள் இல்லை எனும் நிலையும் படைத்திட்டாளாம் இவை எல்லாம் சாதனைகளாம்..! பேதையரே எப்போ உம் நிஜக் கண் திறப்பீர்.. ஈழத்தில் சிங்கள இன வெறிக்கு தீனியாகும் தமிழச்சிகள் பெண்ணில்லையோ..???! அவள் ஆடை களைந்து மானம் விற்கும் சிங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.