கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
நேற்று என்பதை மறந்து விடு நாளை என்பதை நெஞ்சில் நிறுத்திவிடு இது விளையாட்டும் இல்லை நடிப்பும் இல்லை இதுதான் வாழ்க்கை தாயும் இல்லை தந்தையும் இல்லை தலைவன் ஒன்றே தெய்வம் தங்கமும் தேவை இல்லை வைரமும் தேவை இல்லை மண்ண் ஒன்றே என் உயிர் மண்ணிற்கே எனது உடல் எனக்கு மூச்சுக் காற்றும் தேவை இல்லை தென்றல் காற்றும் தேவை இல்லை என் தேசத்தின் சுதந்திரக் காற்று ஒன்றே போதும் என் வாழ்க்கைன் போகட்டும் மண்ணிற்காக நாளை நம் பிஞ்சுகள் வாழட்டும் அவர்களிற்காக
-
- 5 replies
- 1.3k views
-
-
யார்க்கெடுத்துரைப்போம்? யார்க்கெடுத்துரைப்போம் பாதுகாப்பு படையின் பாதகச்செயலை பிஞ்சுடன் பூவுமாய் செடியைப் பிடுக்கின்றார் நான்கே மாதச் சிசு மார்பில் மூட்டிய அனல் ஆறவில்லை அடுத்து அடுத்து அனலை நெஞ்சில்க் கொட்டுகின்றார் யார்க்கெடுத்துரைப்போம் பாதகர் பாவச்செயலை தம்பி உன்னை அடிக்கும் போது அண்ணா என்று கதறினாயா? :cry: அண்ணா உன்னை அடிக்கும் போது தம்பி என்று கதறினாயா? :cry: கண் முன்னே பாலகரை வதைக்கும் போது மகனே என்று கதறினாயா? :cry: உன் மனைவியைச் சூறை ஆடும் போது கண்ணே என்று கதறினாயா? :cry: யார்க்கெடுத்துரைப்போம் பாதகர் பாவச்செயலை எப்படி எப்படி குமுறலுடன் உம் உயிர் போயிருக்கும் நினைத்து பார்க்கையிலே நெஞ்சம் …
-
- 5 replies
- 1.9k views
-
-
கார்த்திகைத் தீபங்கள். (ஹைக்கூக்கள் 26) வீரத்தின் விழுதுகள் வித்தான முத்துக்கள் விழிக்கும் காந்தள் கார்த்திகையில் உறவாக அழுகையிலும் உணர்வாக எழுகின்றது உங்கள் ஈகம் வாழ்வை தந்தவர்கள் வரலாற்று நாயகர்கள் வருகின்றனர் வழியில் மலர்கின்றது காந்தள் இடிக்கப்பட்டு இயல்புநிலை மாற்றப்பட்டது இடியாமல் 'இன்னும்' பசுமையாய் இன்றும் மனங்களில் மாவீரர்கள் நஞ்சு மாலை சுமந்தவருக்கு மாலையிட்டு மலர்தூவுகின்றோம் - கார்த்திகையில் நெஞ்சில் அவரைச் சுமந்து. துயிலுமில்ல தூயவர்க்காய் துரிதமாக துளிர்க்கிறது தூயதாய்க் கார்த்திகை பூ கனக்கின்ற இதயங்கள் இதமாக பூக்கின்றது கார்த்திகையில் காந்தள் உறங்கும் உறுதிகள் உணர்சிகளின் உண்மை வடிவம் …
-
- 5 replies
- 1.2k views
-
-
கனவின் பொருளுரையீர். களிகொண்ட மனமொன்றுகூடும் அதிகாலையொன்றில் காட்டினிடையேகித் தனியனாய் நடைபயின்றேன். மனிதருடன் உரையாடல் சலித்து மரங்களுடன் உரையாடும் அவாவெழுந்து ஊர்தாண்டி உவகையுடன் தொலைந்தேன். பசுமைக்கும் பழுப்புக்கும் இடைப்பட்ட பருவமது பார்வைக்கு இதமழித்ததெனினும் காட்டினிலும் பதுங்கிக் கிடந்ததோர் ஊமைச்சோகம். எதிர்காலமெண்ணித் துயருற்றாற் போலான ஏக்கமெங்கும் மரங்களிலும் கிளைகளிலும் பற்றிப் படர்ந்தது போல் ஒரு தோற்றம். "ஆரூடக்காரனே, எம்மொழியைப் புரிந்தாய் நன்று. எம்முடனே நட்பிழைந்தாய் நன்று. வானமொழியிழக்கும் பருவமிது நம் வாழ்வும் என்னாகுமென்றெண்ணித் துயிலிழக்கும் காலமிது. தன்னந்தனியர்களாய் நின்றிருந்தோம் நாமிங்கு வந…
-
- 5 replies
- 1.7k views
-
-
உதவிகள் தேவை என்றால் சுற்றி சுற்றி வந்திடுவாய் உதவிகள் பெற்றவுடன் நைசாக மாறிடுவாய் சேர்ந்து இருக்கும் போது சிரித்து சிரித்து பேசுடுவாய் அடுத்தவிடு போயும் நீ அவனைத் தூற்றிடுவாய் சந்தர்ப்பம் கிடைக்கும் போது நல்லா சுரண்டிவிடுவாய் பச்சோந்தி போல நீயும் உன்னை நீ மாற்றிடுவாய் கூட இருந்து நீயும் குழி பறிக்கப் பார்த்திடுவாய் சமயம் கிடைக்கும் போது குழியிலே தள்ளிவிடுவாய் கடனாக காசு வாங்கி நல்ல செலவழிப்பாய் கொடுத்த பணத்தை கேட்டால் அடிக்கவும் வந்திடுவாய் முன்னேறி வந்தால் போட்டும் கொடுத்திடுவாய் வசதிகள் பெற்று விட்டால் …
-
- 5 replies
- 1.5k views
-
-
காதல் வந்தால் கவிதையும் பிறக்கும் காயங்கள் எல்லாம் தானாக மாறும் நோய்கள் எல்லாம் பறந்து போகும் சோகத்தின் வலி எல்லாம் மறைந்து போகும் சிந்தனை எல்லாம் மாறிப் போகும் கனவுகள் எல்லாம் வந்து குவியும் கடசியில் எல்லாம் கவிழ்ந்து போகும் :roll: :wink:
-
- 5 replies
- 1.6k views
-
-
ஆண்டுகள் ஏழு கடந்தும்.. சுவடுகளாய் கட்டிய சேலைகளும் காவிய பொம்மைகளும் சீன அமிலத்தில் கரைந்து போன எலும்புக்கூடுகளுக்கு மாற்றீடாய்..! இலட்சியம் சுமந்த மறவர் பின் விடுதலைக் கனவோடு பாதம் பதித்த நம்பிக்கைகள்... எதிரியின் உயிர்ப்பிச்சைக்காய் ஏங்கியே ஒதுங்கிய அந்த மணற்றரையில் உப்பில் கலந்து உடல் கரைவார் என்று யார் நினைத்தார்..! கந்தகக் குண்டுகளோடு பொஸ்பரஸ் அதுஇதென்று ஆவர்த்தன அட்டவணையில் அடங்கியவை எல்லாம் கொட்டி உலகம் எல்லாம் ஒன்றாய்க் கூடி ஓர் இனத்தின் தலைவிதியை தலையறுத்து சன்னங்களால் சன்னதம் ஆடிய பூமி அது..! இலைகள் உதிரலாம் கி…
-
- 5 replies
- 1k views
-
-
உண்மை ஒளி குன்றா உறவின் பெருங்கொடியே! கருணைப் பெருங்கடலே! கன்னல் சுவையூறும் தமிழ் பூத்த திருநாடே! உண்மை ஒளி குன்றா உறவின் பெருங்கொடியே! திண்மை கொண்டெழுந்த உங்கள் திடல் தோளில் சிறிது சாய்ந்து இளைப்பாறிக் கொள்கிறோம். தாயின் மடியில் தமிழ்ப் பாலுண்ட கோடி நெருப்பொன்றாய் தகிக்கக் கண்டோம். வீசும் தமிழ் காற்றும், உணர்வின் அலையும் தீய்ந்து கருகும் எங்கள் வாழ்வை ஆற்றும். உக்கித் தனிமரமாய் துயர் சுமந்த எங்களுக்கு உயிர்ப்பின் கொடி பிடித்து அரவணைக்கும் உறவுகளே! தெக்கும் உணர்விடையே உயிர்ப்பூ கசிகிறது. தேம்பும் விம்மலொலி சிறிதடங்கிக் கிடக்கிறது. பால் வாசம் வீசும் மார்பிடையே அணைத்தவளே! பனித்த விழிகளால் பாசத்தைப் பொழிபவளே! மனித்த…
-
- 5 replies
- 1.3k views
-
-
என்றோ ஒரு நாள், எனது அபிமானத்துக்குரிய கள உறவு, சாந்தியின் வேண்டுகோளுக்கு இணங்க, மாவீரன் சிட்டுவின் நினைவாக,அவரது வலைத்தளத்துக்காக அடியேன் எழுதிய கவிதையொன்றை, இன்று தேசக்காற்று இணையதளத்தில் கண்டேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டுமென்ற ஆவலில், இங்கு பதிகின்றேன்! மேஜர் சிட்டுவுக்கு எனது வீர வணக்கங்களுடன்...... மரணத்தின் முகநூலுக்கு, மனம் விரும்பி, நட்பு நாடிய, மாவீரர்கள் வரிசையில், முண்டியடித்து முன்னேறியவன்! வாழ்வின் வசந்தத்திற்கு விடை கொடுத்தனுப்பிய, வீரத் தளபதிகளின் வரிசையில் விதையாகி வீழ்ந்தவன்! வீசும் வாடைக் காற்றின் வெறி அடங்கும் ஓசையில்… அசையும் காவோலைகளின் சர சரப்புச் சத்தத்தில் , ஆசையுடன் நிலம் தழுவும் அலைகளின் முனகலில், சிற்றா…
-
- 5 replies
- 1.1k views
-
-
உனக்கும் எனக்குமான இறுமாப்பு ஏகாந்த வெளிதனில் எல்லைகளற்று விரிந்திருந்தது அதுவே இன்று நிட்சயம் அற்றதாய் நம்பிக்கையற்றதாய் நாளும் நடுவானில் நூலறுந்த பட்டமாய் நரகமாகிக் கொண்டிருக்கிறது எந்நேரமும் உச்சரிக்கும் இரகசிய மந்திரமாய் மனம் ஏக்கங்கள் கண்டு இன்றும் வாழ்கிறது ஏதிலியாய் எதுவுமற்று வாழ்தலற்ற வகையின்றி வரம்புகள் கடந்தோம் தான் வகை தெரியா மூடர்களாய் வெற்று வெளியில் நாமின்று வேலிகள் எதுவும் இன்றி விழுதுகள் கூட இன்றி வேடர்களின் வில்லாய் நாம் வசமானோம் வரப்புகள் இன்றி விதியின் சதிதானா வீழ்ந்தது மதியின் தவறிய கணக்காய் மனிதம் தொலைத்த மனம் மிச்சத்தின் எச்சங்களாக எங்கும் எண்ணக் கணக்குகள் தவற எதிரிகள் எண்ணற்றுப் போக எதுமற்றவர்களாய் நாங்கள்…
-
- 5 replies
- 601 views
-
-
தமிழீழம் செல்லும் வழியில் ஒரு பாறாங்கல்........ அந்த வழியால் வந்தனர் தமிழ் அரசியல்வாதிகள்... சம்பந்தம் இல்லாமல் ஒரு அரசியல்வாதி சொன்னார்.... "இதற்கு வழி, தெரியவில்லை. ஒரே வழி திரும்பி செல்வதே!" தவளை வாயை திறந்து ஒரு அரசியல்வாதி சொன்னார்....."இதற்கு வழி, எனக்கு பாதுகாப்பை திருப்பி தருவதே!" தொண்டைய கனைத்து ஒரு அரசியல்வாதி சொன்னார்..... "இதற்கு வழி, போட்ட நாராயணனை வைத்து கல்லை தூக்குவதே!" வெள்ளை வானில் வந்த ஒரு அரசியல்வாதி சொன்னார்....."இதற்கு வழி, எதிரியின் தலைவனின் காலில் உருண்டு புரள்வதே!" கருணை இல்லாத ஒரு அரசியல்வாதி சொன்னார்....."இதற்கு வழி, எனக்கு எதிரியிடம் உபதலைவர் பதவி பெறுவதே!" வாகன விளக்கை பார்த்த (தொங்கு) மான்கள் போல்... கல்லை பார்த்து பேச…
-
- 5 replies
- 1.6k views
-
-
வரண்டுபோனதொரு பூமி வானத்தை பார்த்து மழைக்காய் தேடல் கொண்டு தேகம் வாடி நிற்கிறது! பசியென்ற ஒன்று இருப்பதால்தான் உழைப்பின் தேடல் தொடர்கிறது.... பருவம் என்ற ஒன்று இருப்பதால்தான் காதல் என்ற ஒன்று இன்னும் காணாமல் போய்விடாமல் தவிக்கிறது! பகுத்தறிவென்ற ஐந்தோடு சேர்ந்த ஓரறிவு வாழ்வதானாலே அநியாயங்களை காண்கையில் உள்ளம் ஆக்ரோசம் என்ற தேடல் கொள்கிறது! இறப்பு என்ற ஒன்று இருப்பதால்தான் இறைவனை இடைக்கிடையாவது நினைக்கும் தேடல் வாழ்கிறது! எதிர்காலம் பற்றிய பயம் எம்மோடு இருப்பதானால்தான் சேமிப்பு என்ற தேடல் உயிர்கொள்கிறது! தேசியம் என்ற ஒன்று நிமிர்ந்து நிற்பதால்தான் -இனமானம் பற்றிய தேடல் இன்னும் உன்னுள் இருக்கிறது! தெரியாதவனிடம் எல்லாம் அடிவாங்கும் …
-
- 5 replies
- 2.3k views
-
-
அண்ணன் புலம்பெயர்ந்த நாட்டில் சட்டி பானையோடு சண்டை பிடிக்கிறான் தம்பி உள்ளான் சண்டைக்குள் என்பதால் * எல்லாம் இருக்கிறது புலத்தில் எனக்கு எல்லாமுமான என் குடும்பத்தை தவிர * ஊரில் இருந்துவரும் கடிதம் பிணப்பாரமாகவே வருகிறது இறந்தவர்களின் செய்தியோடு வருவதால் * புலத்தில் பட்டினி கிடந்து உழைத்தும் என் குடும்பத்தின் பசியைத்தான் போக்கமுடிந்தது தூங்கவைக்க முடியவில்லை * புலத்தில் வயிறு முட்ட உண்டாலும் வீசவில்லை அம்மாவின் கைவாசம் * நேத்தி வைத்த கோயிலிலும் செல் விழுகிறது யாரிடம் போவேன் என் வீட்டை காப்பாற்ற * அங்கு விழுந்தால்தான் வெடிக்கும் செல் இங்கு விழுகிறதா என்றாலே இறக்…
-
- 5 replies
- 1.2k views
-
-
மாவீரர் குரல் வழி காட்டி மறைந்தோம். ஒளி ஏற்றி வருவீர்கள் என்ற நம்பிக்கையோடு விழிமூடிக் கிடக்கிறோம். குளுகுளுவென மண்மகள் மடி இதமாக இருக்கிறது. தமிழினத்திற்காக உயிர் விளக்கேற்றிய எங்களைத் தாங்கிய பூமகள் எங்களைத் தன்னோடு ஐக்கியமாக்கி தனக்குள் மகிழ்கிறாள். மண்தாயின் அணைப்பு இதமாகத்தான் இருக்கிறது, இருப்பினும் எடுத்த காரியத்தை முடிக்காத காரணத்தால் எங்களுக்குள் கனலும் விடுதலை நெருப்பு அன்னையின் அரவணைப்பை மறுக்கிறது. எங்கள் விழிகள் உங்களைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. இந்த வாரம் எங்களைத் தேடி எங்கள் துயிலும் இல்லங்களுக்கு நீங்கள் எல்லோரும் வருகின்றீர்கள். ஒளிக்கோலம் போட்டு எங்கள் கல்லறைகளில் கண்ணீர் உகுக்கின்றீர்கள். உங்கள் கண்ணீர் மண்ணில் கசிந்து எங்…
-
- 5 replies
- 1.4k views
-
-
ஓய்ந்த மழை பட்சிகளின் அயர்ச்சிகளை ஒன்றுக்கொன்று சீண்டிக்களைத்த மேகங்கள் தன்னிலை மாற்றி ஒழிகிறது களைகூட்டி காடு செய்த வானம் முன்பொருபோதுமில்லாத சிறகுகளிழந்து வெறித்துக் கிடக்கின்றது இரவைக் காத்து புத்தகங்களுக்குள் மறைத்த புகைப்படங்கள் காட்டும் புன்னகையும் பொருத்தமில்லாது பொய்த்து விடுகையில் விடுபட்ட சுவர்களுக்கிடையே குடிகொண்ட்ட கரப்பான்களின் ஒழுக்கமற்ற சத்தங்களின் விதைகள் நிலமூர்கிறது அங்கொரு மழை ஓய்கிறது.. யாழினி பண்புடன் இணையத்திற்காக http://new.panbudan.com/archives/401#more
-
- 5 replies
- 815 views
-
-
விண்தொடும் கனவுகள் வீணாகிப்போய் மிதியடி மண்ணாய் தட்டப்படுகையில், அடையாளம் பறிக்கப்பட்டு அடையாளம் குத்தப்படுகிறது அறிந்தவர்களின் அறியாமையால் , பிறிதொரு இருப்பிடம் தேடி அலைகிறது அவர்களின் அவதானம் ......................... உள்ளொருபுள்ளியில் இருக்கிறது இன்னும் அவர்களின் எச்சவடு! எனை கடந்து அவனை கடந்து _பின் மற்றொருவனை அனைத்து செல்கிறது அவதானம் ஆங்காங்கே எச்சவிளைவுகள் பயங்கரமாய் எதிரொலிக்க எதையும் கண்டுகொள்ளாத _அதன் பயணம் தொடர்ந்து கொண்டு ............... இருளாய் வியாபிக்கிறது என்னுள் ஒரு கேள்வி ! இன்னவாகி வருவான் _என்ற எதிர்பார்ப்புகளை எங்கு,எப்படி புதைப்பேன் இனி ................!
-
- 5 replies
- 1.2k views
-
-
வணக்கம் இந்தக் கவிதை என்னுடையது இல்லை . முகநூலில் என்னை நெருடிய முள் அவ்வளவே . நேசமுடன் கோமகன் ******************************************************************************************************************************************************** காதலின் புனிதத்தை காமத்தின் பெயரால் கறைபடிய விட்டதும் காணாமல் கருவுக்கு உயிர் கொடுத்து தெருவில் எறிந்த மனிதமற்ற மண்புழுக்களே வார்தைகள் கொண்டு உங்களை திட்டுவது தமிழுக்கு நான் செய்யும் துரோகம்.... நல்ல உள்ளங்களே யாரும் ஆனாதையாக பிறப்பதில்லை இந்த சமுதாய சனியன்கள் சிலரால் உருவாக்க படுகிறார்கள்................... நன்றி : முகநூல்
-
- 5 replies
- 771 views
-
-
தியாக தீபமே தமிழ் மக்களுக்காய உண்ணாநோன்பிருந்து (15-09-1987 தொடக்கம் 26-09- ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கவிதையை மீள்பிரசுரம் செய்கிறேன்.... தாயகம் தந்தநற் புதல்வர்கள் வரிசையில் தனக்கென இடத்தினைப் பிடித்தஎம் திலீபனே அவனியில் தமிழினம் வாழ்ந்திடும் வரையினில் அடிக்கடி உன்பெயர் நினைவினில் வந்திடும் ஊரே எழுந்திடில் உரிமைகள் கிடைத்திடும் ஊரெழு மண்ணினில் பிறந்தவன் நம்பினான் ஊரினை எழுப்பிட உண்மையாய் உழைத்தவன் கூரிய நாவினைக் கருவியாய் ஆக்கினான் தனித்துவம் இழந்ததோர் இனமதாய் வாழ்ந்ததால் மருத்துவம் மனதினில் படிந்திட மறுத்தது இனத்துவம் காத்திடும் பணியினில் இணைந்தவன் இளைத்துமே சாய்ந்தனன் நல்லையூர் மண்ணிலே சுந்தரப் பெண்களைச் சுதந்திரப் பெண்களாய் கண்டிடும் பணியிலே…
-
- 5 replies
- 715 views
-
-
புலம்பெயர் ஈழத் தமிழர்களே புலம்பெயர் ஈழத் தமிழர்களே-உங்கள் போக்கில் வேண்டும் மாற்றங்களே நிலவிட வேண்டும் ஒற்றுமையே-உடன் நீங்கிட வேண்டும் வேற்றுமையே வலைதனில் காணும் கருத்துகளே-கவிதை வடித்திட காரணம் பொறுத்திடுக நிலைதனை தெளிவாய் அறிவீரே-நீர் நிச்சியம் ஈழம் பெறுவீரே இதுவரை நடந்ததை எண்ணாதீர்-கடந்த எதையும் பெரிது பண்ணாதீர் புதுவழி காணல் ஒன்றென்றே-அறப் போரினை தொடங்குவீர் நீரின்றே அதுவரை நடக்கும பேயாட்டம்-சிங்கள ஆணவ நாய்களின் வாலாட்டம் எதுவரை இந்தியா கைகொடுக்கும்-அதை எதிர் வரும் காலம் காண்பிக்கும் வஞ்சக சிங்களர் சொயலாலே-உங்கள் வாழ்வில் வீசிய புய லாலே தஞ்சம் தேடி உலக கெங்கு…
-
- 5 replies
- 1.5k views
-
-
அப்பால் தமிழ் இணையத்தளத்தில் வெளிவந்துள்ள கவிதை இது. படித்தேன். பிடித்திருந்தது. பகிர்கிறேன். எதிரிக்காயும் கவலைப்படும் உள்ளம் தமிழர் உள்ளம் என்பது கவிதையில் மீண்டும் வெளிப்படுகிறது. போர்த்துக்கீசரில் தொடங்கி, சிங்களவரிடம் வந்து... கவிஞர் மிக இயல்பாகவும், கவிநயத்தோடும் கவிதை வடித்து வைத்துள்ளார். இந்தக் கவிதையை வாசித்ததும் எனக்கு நினைவில் வந்த வரிகள்: இசையை மட்டும் நிறுத்தாதே எழுதியவர்: க.வாசுதேவன் 1. அமெலியா, போர்த்துக்கல் அழகியே, நீ சற்று அதிகமாகவே குடித்துவிட்டாய் இன்று இது எம் இறுதி இரவு சாளரத்தினூடே பார் இருள் அடர்த்தியாக இருக்கிறது வானெங்கும் அளவிற்கதிகமாகவே விரவிக் கிடந்தாலும் நட்சத்திரங்களால் என்னதான் செய்முடியும்? …
-
- 5 replies
- 1.8k views
-
-
சின்னச் சின்ன பொன்மணிகள் செல்லச் செல்லக் கண்மணிகள் கனவுகள் சுமந்த வெண்புறாக்கள் இரத்ததில் ஊறைந்தன செல்வங்கள் மலரத்துடித்த இளம் மொட்டுகள் தரணியிலே அநாதைக் குஞ்சுகள் அன்புக்கு ஏங்கிய ஜீவன்கள் இப்படி உறங்கி இருப்பதைப்பாருங்கள் புத்தனின் போதனையும் இதுதானோ? இயலாதவன் வேலை சரிதானோ? உலகத்தின் பார்வைகுருடு தானோ? தமிழனுக்கு சாபம் இது ஏனோ? செஞ்சோலைக் தோட்டத்தில் மலந்தார்கள் உதவும் கரங்களில் தவழ்ந்தார்கள் மக்களுக்கு உதவ ஒன்று கூடினார்கள் இரும்புக் கழுகுக்கு இறையாகினார்கள் இறைவனே இல்லையோ இதைப்பாருங்கள் தமிழிழ்த்தாயும் தாங்குவாளா சொல்லுங்கள் இரத்தமே கொதிக்குது உறுதிகொள்ளுங்கள் இதற்குபாவிகள் விரைவில் பாடம் கற்பார்கள்
-
- 5 replies
- 1.4k views
-
-
விமானக் கிலி காலமும் மாறுது காட்சியும் மாறுது கயவரின் தலைநகர் கதிகலங்குது குண்டுகள் தினமும் கொட்டிய சிங்களம் மண்டுகள் போலவே மருண்டு அலறுது காண்பது அனைத்தும் மஞ்சளாய் தெரிகிற காமாலைக் கண்ணனாய் காவல் புரியுது காகமும் அவர்க்கு காலனாய் தெரிந்திட கயவர் கூட்டம் கத்திக் குளறுது ஒளியினை எங்களின் வாழ்க்கையில் பொசுக்கியோர் ஒளியினை நிறுத்தியே ஒழிந்து மறைகிறார் வெளிச்சம் நிறுத்தியே வெருண்டு கிடக்கிறார் வெற்று வானிலே வெடிகளைச் சுடுகிறார் பகலிலே வந்தால் பார்க்கலாம் என்பதாய் பைத்தியக் காரனாய் பேட்டிகள் கொடுக்கிறரார் வினையினை மண்ணிலே விதைத்தவர் கேளுமே விடுதலை வரும்வரை விண்ணுமக்(கு) எதிரியே!
-
- 5 replies
- 1.2k views
-
-
உட்காரப் புல்வெளி. எதிரே நீர்வெளி. நீர்மேல் எண்ணெயாய் சூரியன் . பால் சொட்டுகளாய் பறவைகள் . முட்டாமல் மோதாமல் இணக்கமாய் காற்று . தூரத் தூர ரயிலோசைக்கும் செவிக் கூசும் நிசப்தம் . ....................................... .......................... எல்லாம் தவிர்த்து கவனமாய் காத்திருக்கிறான் கரையில் ஒருவன் . தொண்டையை கிழித்து கண்ணைத் துளைத்த தூண்டில் முள்ளுடன் துடிக்கும் ஒரு மீனைக் காணும் ஆவலுடன் .
-
- 5 replies
- 1k views
-
-
-
யாழில் செய்தி பார்த்தேன் பியர் உடலுக்கு நல்லது பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4 தற்பால்சேர்க்கை சாத்திரியின் கொலைவெறி அடுத்த பிறவியில் பூனையாகப்பிறப்போம் காணாமல் போகின்றோம் 2012 இல் காணாமல்தான் போவோம்.
-
- 5 replies
- 1.4k views
-