கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
அம்மா............... இப்பூமியில் நான் விழும் முன்னே, உன் பாசத்தை அறிந்தவன் நானே....அம்மா...! இவ்வுலகம் காணும் முன்னே, என்னை முதலில் அறிந்தவள் நீயே......அம்மா...! உன் கரு அறையின் இருளில் என்னை, நிம்மதியாகவும்,சீறாகாவும், உறங்க வைத்தவள்........நீ அல்லவா.......! அக் கருவில் நான் உட்கி கிடந்தபோதும், எந்த வசதியும் இல்லாத போதும், அக் கருவிலே பாதுகத்தவள் .......நீ அல்லவா......! உன் உயிர் துடிப்பின் தொப்புல் கோடியிலிருந்து...என்னை, உயிரோடு இப்பூமியில் ஈன்றவளே.......என் அன்னயே.....! உன் தூக்கம் துறந்து, என் உறக்கம் தந்தவளே...........என் தாயே......! உன் மடியில் உறங்கும் தருணம், அந்த வானத்தை கொண்டும், இப்பூமியை கொண்டும், அந்த நிலவை கொண்டும், அந்…
-
- 4 replies
- 1.9k views
-
-
-
"என் இறுதி சடங்கில்" "என் இறுதி சடங்கில் என்னை எரிவனம் எடுத்து சென்று எரிக்க என் நேரடி தொடர்பை அறுக்க எல்லோரும் கூடி கதைப்பது கேட்குது" "ஓய்வு எடுக்க பெட்டியில் வைத்து ஒளி தீபங்கள் சுற்றி வைத்து ஒதுங்கி இருந்து தமக்குள் கதைத்து ஒழுங்கு படுத்துவது எனக்கு தெரிகிறது" "சிறந்த ஆடைகளை தேர்ந்து அணிவித்து சிறப்பான அலங்கார பாடை தருவித்து சிறார்கள் கையில் பந்தம் கொடுத்து சிரிப்பு இழந்து தவிப்பதை பார்க்கிறேன்" "நரம்பு நாடி தளர்ந்து போகையில் நம்மைநாடி நோய் வந்து சேர்கையில் நமக்கு பிடித்தவர் இல்லாமல் போகையில் நல்வரமாய் தான் இறப்பு இருக்குது" "மன்னனாய் பிறந்தாயென்று கர்வம் கொள்ளாதே மன்மத அழகனென்று லீலைகள் செய்யாதே மதுபோதை…
-
-
- 4 replies
- 406 views
- 1 follower
-
-
மெதுவாகப் பேசலாம்... அரசியல் பேசினால்.. அடுத்த அறைச்சுவரும் கேட்குமாம்..ஏன்.. நமக்கு வம்பு... மௌனிகளாயிருப்போம்... யாரங்கே.. பேசவே பயப்படும் பேடிகள்.. இவர்கள்.. என்ற உண்மைகளை சத்தமாய்.. உள்ளே உறைப்பது.. வேறென்ன் செய்ய.. சத்தமாய் பேசிவிட்டால்.. கூட இருப்பவன்தான்.. குழி பறிக்கிறான் என்பது.. மரணத்தருவாயில் மனதறியும்.. தமிழன் காப்பியங்களிலும்.. இலக்கியங்களிலும்தான்.. உயர்வாகப் பேசப்பட்டிருக்கிறான்.. இன்றோ இழிநிலை நோக்கியல்லவா நடக்கிறான்... ஒப்பற்ற வீரன்.. தலைவனாய்க் கிடைத்தும்.. உருப்படத் தெரியாமல்.. கஞ்சாக்கும் காசுக்கும்.. சோரம் போன துரோகிகள் பாதி பதவிக்கும் பட்டத்திற்கும் பல்லிளித்த பாவிகள் பாதி.. …
-
- 5 replies
- 1.5k views
-
-
மீள் ஆயுள் ஓலிவடிவில்... உன் தோள்களை விட்டு நகர்ந்தால் என்னை இழுத்து இழுத்து அணைத்தவனே இரவில் உலாப் போக பிடிக்கும் என்பதால் நிலாவை ஓய்வெடுக்கச் சொன்னவனே உனக்கு பிடித்த பகலை இரவாக்கி காத்திருக்கின்றேன் என் மரணத்திற்க்காய் வாழ்வின் இறுதி நாளில் தொலைத்த உன்னைத் தேடுகின்றேன் நீ தொலைந்ததை மறந்து யார் செய்த பாவமடா? யார் தந்த சாவமடா? உன்னை காதலித்தபடி இந்த ஆயுள் என்னை மறு ஆயுளுக்காக அழைக்கின்றது நான் சென்று வருகிறேன் -இனியவள்
-
- 12 replies
- 4k views
-
-
[size=5]புன்னகையின் காரணமாயிருந்தவளுக்குப் புற்றுநோய் [/size] பதின்மக்கனவுகள் பிணங்களும் அழுகையும் பிணியகலாப் பொழுதின் விடியலைத் தேடிய வீரரின் தடங்களில் 13வயது அவளுக்குக் காட்டிய வாசல் களமுனை கைத்துப்பாக்கி கனரக ஆயுதக் கையாள்கை..... வெற்றியே அவளது வெறிக்கனவு விடுதலையே அவளது விழிக்கனவு விளக்கி முடியுமுன் கொடுத்திடும் காரியம் முடித்திடும் தைரியம் அவளைப் பிடித்தது எல்லோர்க்கும்.... அசாத்தியத் துணிவும் ஆழுமையும் பகையின் வீட்டுக் குகைக்குள் பணி.... சிறைகளும் , சித்திரவதைக் கூடங்களும் அவளுக்கு வலித்ததில்லை வலிமையை விதைத்து வீரமாய் உரமாக்கி கறுப்பாய் வெடிக்கும் களம் தேடிக் கனவுகள் விரிந்தது.... கனவுகள் பலித்திடக் கைத்துப்ப…
-
- 2 replies
- 776 views
-
-
பூவே........... பூச் சூட வா ... மலர்களிலே பல நிறம் கண்டேன் மாலையாகும் திறன் கண்டேன் பூஜைக்கு போகும் சில ,கண்டேன் மலர் வளையமாகும் சில கண்டேன் கண்ணீரில் மிதக்கும் சில கண்டேன் மாடியில் வாடும் சில கண்டேன் மாலையில் மலரும் சில கண்டேன் காலையில் மலரும் பல கண்டேன் நிறம் உள்ளவை பல கண்டேன் , முட்களின் நடுவே சில கண்டேன் நறு மணம் உள்ளவை பல கண்டேன் பால்போன்ற வெண்மையும் கண்டேன் வண்டு மொய்க்கும் சில தேன் உள்ளவை . மொட்டாகி மலராகி கருக்கூட்டி காயாகி கனிந்து பழமாகி ,பலன் கொடுத்ததும் மீண்டும் விதையாகி பூமிக்கு செல்லும். மலர்களிலே இத்தனை வகை என்றால் மனிதமலர் கள் எத்தனை வகை ?...........
-
- 3 replies
- 1.4k views
-
-
[size=4]இறைக்க இறைக்க கிணற்றில் மட்டுமல்ல கண்களிலும் நீர் வற்றிப்போயிற்று துயரப்பெருங்கடலில் அலைகளாய் உடல்களற்ற தலைகள் எழுந்தன உறைந்த குருதியை மாலையாக்கிய போலிச் சிங்கத்தின் பிடரி மயிர் சிலிர்த்தது எப்படி? நவீன உலகம் புலியை கொல்ல காட்டை எரித்தது அதனால் அனைத்தும் எரிந்தது போலிச் சிங்கத்தின் பிடரி மயிரும் சிலிர்த்தது [/size]
-
- 4 replies
- 744 views
-
-
-
உங்கள் வீட்டுப் பெண்களுக்கு மார்புகள் வெட்டப்படவில்லை உங்கள் பிள்ளைகள் எவரும் தொலைந்து போகவில்லை உங்கள் பிள்ளைகளை எவரும் வல்லுறவு செய்யவில்லை உங்கள் சொத்து சுகங்கள் எதையும் நீங்கள் இழக்கவில்லை பசி பட்டினியால் நீங்கள் எவரும் இறக்கவில்லை இழந்தது எல்லாம் நாங்கள் மட்டுமே ஒரு பொல் பொட்டையோ ஒரு ஹிட்லரையே ஒரு ஸ்டாலினையோ ஒரு முசோலினியையோ அந்த மக்களை மறக்கச் சொல்லுங்கள் நாமும் மறந்து விடுகிறோம். பா.உதயன் ✍️
-
- 3 replies
- 727 views
-
-
உளி பல வலிதாங்கி அடிதாங்கி மெய் வருத்தி கோணம் பாகை என எல்லா பக்கமும் தட்டுப்பட்டு தெறிபட்டு மெதுவா செதுக்கிய பாறை ... மெல்ல உருவம் பெற்று பல கை இரத்தம் சிந்தி துடைத்து எடுத்து மேல் அலங்காரம் பூசி வண்ணம் இட்டு மென்மையா கரம் கோர்த்து தூக்கி நிமிர்த்தி அவ் உருவத்தை தோற்றத்தை .. எல்லோரும் அழகு பார்த்து வியந்து நிக்க நாம் செதுக்கிய சிற்பம் என இறுமாந்து நடந்து எம் திமிரை நெஞ்சின் உறுதியை உலகம் பார்த்து வாய் பிளந்து நிக்க நம்மை மிஞ்சிய ஒரு சிற்பியா இருக்க கூடாது என முடிவெடுத்து செய்த சதி .... சிற்பம் முடியமுன் சிற்பியை காணவில்லை உளி பட்ட வலிக்கு கூலியும் இல்லை இதுதான் உருவம் என சொன்னதை வைத்து சிலர் அதை தாமே செய்ததாய் சொல்லி தலையில் கீரிடம் தோளில் மலை…
-
- 14 replies
- 4.9k views
-
-
பெண்ணின் பெருமை பேசி பெண்ணை அடிமை கொள்வார் பெண்ணைப் புகழ்ந்து பாடி பேதைமை கொள்ள வைப்பார் பொன்னே மணியே என்றும் பூவின் வாசமென்றும் பேசிப் பேசிப் பெண்ணைப் பேச்சிழக்க வைத்திடுவார் பூரணை நிலவுபோல் புகுந்தவீடு வருபவள் பத்தும் தேய்த்து தான் தேய்ந்து பழையதாய் ஆகியபின் பெண்ணா நீ என்று பேசியே கொன்றிடுவர் பாலைவனத்தின் பசுந்தளிரே போதை கொள்ள வைக்கும் பணக்கள்ளே பவளமே பென்னரங்கே பொன்மணியே போற்றி உனைத் தொழுவேன் பவளமே எனக் கூறிப் பத்திரமாய்ப் பூட்டிவைப்பார் பாவையரை வீட்டினுள்ளே பாழாய்ப் போன பெண்கள் பூட்டியது தெரியாது பெண்ணென்றால் இதுவென்று பெருமை மிகக் கொண்டிடுவார் பண்பாடு இதுவென்று பட்டிகள் போல் நடத்துவதை பெருமிதமாய் எண்ணி பொங்கும் மனதடங்க புத்தகமாய் ஆகிடுவார் பேதைப் பெண்ணே …
-
- 2 replies
- 765 views
-
-
நாலிரண்டு திக்கிருந்தும் - நல் அருவிகளாய் ஊற்றெடுத்து யாழெனும்...... ஆழியிலே சங்கமித்து ஆனதுகாண் அருஞ்செல்வம் மானமது காக்கும் மறக்குலத்தின் மாவிளக்கே தேனமிழ்தே தாயகத்தின் மணம் உணர்த்தும் தனிமலரே திசை வெளிகள் உன் உறவொளிரும் தீந்....தமிழால் யாழ் இசைக்கும் நரம்பொளிரும் பாரொளிரும் பருவமது பதினாறின் பேரழகே! நாமொளிரக் களமுவந்த யாழ் அரங்கே நீ வாழீ. வானமெனத் தமிழ் பரந்த வலையுலகத் திருவே, ஊனுனதாய், உளமுனதாய் கானமிது எழுகிறதே கண்மணியே..... ! எம் கவின்வனமே! காலவெளி கடந்தும், காற்றுவெளி நிறைந்தும் நீ ஆனதென வாய்கள் மலர்ந்தும் வாழிய நீ பல்லாண்டு
-
- 15 replies
- 1.2k views
-
-
யாழ் உறவுகளே யாரும் இல்லாத் தனியனென்று யாரோ சொன்ன வார்த்தையினால் சோகம் கொண்ட எந்தனுக்குச் சுகமாய் வந்த யாழ்தளமே வாழப் பிடிப்பும் இல்லாமல் வெழும் வழியும் தெரியாமல் சோம்பிப் பொன எந்தனையும் சுறுசுறுப் பாக்கிய உறவுகளே அனைவருக்கும் வணக்கம் உங்கள் எல்லாரோடையும் கொஞ்சம் மனம்விட்டுக் கதைக்கோணும் போலக் கிடக்குது. என்ன சொல்ல வந்தனான் எண்டா நான் இந்த யாழ் குடும்பத்துக்குள்ளை சேந்து ஒரு கிழமைதான். ஆனா அதுக்கள்ளை எனக்குள்ளை நிறைய மாற்றங்கள். சத்தியமாச் சொல்லுறன் ஏதோ தனிமைப் பட்ட மாதிரி யாருமில்லாத மாதிரி ஒரு உசாரில்லாமை இருக்கேக்கைதான் தற்செயலா இந்தத் தளத்துக்குள்ளை புூந்தனான். ஆனா இப்ப தான் தெரியுது எனக்கு எத்தினை பேர் இருக்கிறியள் எண்டு.. என்ரை கதை கவி…
-
- 17 replies
- 2.8k views
-
-
பகல் கனவு கன்னிப் பருவத்தின் வாசலிலே அவள் பொற்ச்சிலையாக நிற்கையிலே வீர நடை போட்டுக் கொண்டே அங்கே அழகிய வாலிபன் போகையிலே சந்தன வாசம் அவன் மூக்கைத் துளைக்கையிலே அத்திசை நோக்கியும் அவன் பார்க்கையிலே பட்டென பதிந்திட்ட அவள் முகம் உணர்ந்து அவன் தன்னிலை மறந்து கனவின் வாசலிலே..... இராத்திரி அவன் பார்த்த திரைப் படத்தினிலே காதலர்களாக வந்து ஆடிப்பாடியவர்கள் போலே அவனும், அவனை தன்னிலை மறக்க வைத்த பெண்ணுடனே காதல் கொண்டு ஆடிப்பாடினான் அமெரிக்காவினிலே.......... ஆடிபாடின வேளையிலே சட்டென யாரோ கைகள் அவன் தோளைத் தொடுகையிலே சிலிர்த்தவன் நெஞ்சினில் பல எண்ணங்களிலே தொட்டவர் கைகளை இறுகப் பற்றையிலே சடாரென விழுந்தது அறைகள் அவன் கன…
-
- 2 replies
- 842 views
-
-
எழுந்து வா..... எவர் வந்தால் எமெக்கென்ன எழுந்தோடி வா தமிழா எம் மண்ணை மீட்போம்.... அஞ்சாத தமிழினமே அஞ்சி நிற்பதுவோ....?? அறபோரில் நாம் வெல்ல அணிதிரளாயோ....??? அடிமை தான் வாழ்வென்று அடிமைக்குள் அடிமையாய் ஆண்டாண்டாய் கிடப்பதுவோ....??? அட தமிழா வெட்கமில்லையா எழுந்துவா.... மாற்றான் காலடியில் மறத்தழிழன் கிடப்பதுவோ...??? மானம் உண்டென்றால் மறத்தமிழா எழுந்து வா.... கூன் விழுந்தா வயதென்ன குமரா நீயென்ன யாராய் இருந்தாலென்ன நம் ஈழம் நாம் காண்போம் நம்பியே எழுந்து வா.... -வன்னி மைந்தன் -
-
- 0 replies
- 770 views
-
-
ஆதவனாய் அவதரித்த மாதவ அவதாரங்கள் பிரபஞ்சம் ஆளும் பிரபாவின் பிள்ளைகள் தாயின் அன்புதனை தலைவரில் கண்டவர்கள் சூரியனாய் ஒளிதந்து உரிமைக்கு உயிர்தந்து கார்த்திகை விளக்கான களம்கண்ட வேங்கைகள் வாழும் வயதினிலே வாழ்வை எமக்காக வழங்கிய வள்ளல்கள் பூமிக்கு மழைதரும் வானம் போல தம்மையே தாய் நிலத்துக்கு விதையாகத் தந்தவர்கள் மண்ணுலகில் தமிழ்வாழ விண்ணுலகை நிறைத்தவர்கள் தம் சுவாசம் தனை ஈந்து ஈழத்தாயை உயிர்ப்பித்த ஈழத்தின் விடி வெள்ளி கார்த்திகை மைந்தர்கள் http://www.thayakaparavaikal.com/kavithaigal.php
-
- 16 replies
- 2.2k views
-
-
‘அடைமழை ஓய்ந்த நாளின் மாலைக்கும் இரவிற்கும் இடைபொழுதில் வாசலில் வந்து நின்றாள் தேவதை . . தொலைதூர பிரயாணத்தின் வழியிடையே எப்போதும் போல் ஏதாவதொரு விடுபடுதலின் நிமித்தமாக இருக்கலாம் . . அடித்து பெய்த மழையின் இறுதி பொழிவுகள் அவளது அதரங்களினூடே . . தேநீர் குவளைகள் இரண்டிலொன்றில் இயலுமான வெப்பம் இதமாயிருக்கும் அவளது உறைகுளிர் போக்க . . பகலிரவு காலத்தை மாற்றிடும் இமை கதவுகள் மூடி திறந்ததும் பெருக்கெடுத்தது வெள்ளி நிரோடை . . ஆசுவாசப் படுத்திக் கொள்ளட்டுமென கன்னங்களை துடைத்து விட்டு மெல்லிய கைகளை பற்றினேன் . . தேவதை மொழியால் விம்மியபடி மாநகர பேருந்தின் லாவகமான காய்நகர்த்தல்களை சொல்லி பேச்சுடைந்தால் . . ஒ! வென அழ…
-
- 2 replies
- 1.1k views
-
-
பள்ளி நினைவுகள் தோழிலே பையுடன் தோழர்கள் புடைசூழ பள்ளி சென்ற பருவ நாட்கள் சிந்தையில் விரிகையில்-இதயத்தில் சின்னதாய் ஒரு நெருடல் நிலவு அல்ல-பள்ளி நினைவுகள் தேய்வதற்கு நித்தமும் விழி எதிரே நிஜங்களாய் மலர்பவை பருவமழை அல்ல-பள்ளி நினைவுகள் வந்துபோக பசுமையாய் பதிந்து பாதத் தடங்களாய் தொடர்பவை காலச்சக்கரம் விரிகையில்-வசந்த காலத்தின் சுவடுகளாய் பதிந்து காற்றினும் பரந்து விரிந்து காவியமாய் நெஞ்சிலே ஒளிர்பவை நேற்றைய நட்புகளே - பள்ளி நாட்களின் உறவுகளே இதயச்சுவர்களில் உங்களின் இனிய நினைவுகள் அழியாத புத்தகமாய் ஆண்டாண்டு வாழும்
-
- 0 replies
- 1.1k views
-
-
என்னை எப்போதும் ..... உன்னுடனேயே வைத்திரு ...... உயிர் பிரியும் வேளைவரை ..... என்னை உன்னுடனேயே ..... வைத்திரு - உன்னை விட ..... யாரும் துணையில்லை ...... எனக்கு - மற்றவர்களில் ..... நம்பிக்கையுமில்லை ............!!! யான் பெற்ற அறிவு ...... யான் பெற்ற செல்வம் ..... யான் பெற்ற புகழ் ....... எல்லாம் உன்னிடமிருந்தே ....... கிடைத்தவை என்பதை ..... யான் நன்றாக புரிவேன் .......!!! மாயையில் மயங்காமல் இருக்க ....... போதையில் பேதலிக்காமல் இருக்க ..... ஆணவத்தில் நடனமாடாமல் இருக்க ...... என்னை எப்போது உன்னோடு ....... வைத்திரு இறைவா ...... என்னை எப்போதும் ..... உன்னுடனேயே வைத்திரு ...... உயிர் பிரியும் வேளைவரை ..... என்னை உன்னுடனேயே ..…
-
- 2 replies
- 882 views
-
-
உலகினினில் இழிய நாடு சிறீலங்கா - மனித உரிமையை மதியா நாடு சிறீலங்கா ஞாலத்தில் இழிய நாடு சிறீலங்கா - புத்த ஞானத்தை மறந்த நாடு சிறீலங்கா பாரினில் இழிய நாடு சிறீலங்கா -கொலைப் போரினை நாடும் நாடு சிறீலங்கா புவியினில் இழிய நாடு சிறீலங்கா - பல புதைகுழி கொண்ட நாடு சிறீலங்கா வையத்தில் இழிய நாடு சிறீலங்கா - இன வெறியர் வாழும் நாடு சிறீலங்கா அவனியில் இழிய நாடு சிறீலங்கா - சில அரக்கர்கள் ஆளும் நாடு சிறீலங்கா தரணியில் இழிய நாடு சிறீலங்கா -அப்பாவித் தமிழர் சாகும் நாடு சிறீலங்கா http://gkanthan.wordpress.com/index/izhiya-naadu/
-
- 0 replies
- 570 views
-
-
ღ♥அன்புள்ள காதலிக்கு ♥ღ♥ பூவுலகில் ஒரு மொட்டாக நான் விழ்ந்து விடலையாய் ஆன பின் என் கண் விழித்திரை விம்பத்தில் உணர்ந்தேன் உன்னை உன்னை பார்த்தாலே எனக்கு பேச்சும் வரவில்லை மூச்சுக்கு என்னவாச்சோ தெரியவில்லை நண்பனை கண்டவுடன் இதயத்தின் ஓர விளிம்பில் ஒரு வித நடுக்கம் ஆனால் உன்னை கண்டாலே மூளைக்குள் ஆயிரம் பூக்கள் பூக்கின்றன, நீ பார்வைகள் உதிர்த்து விட்டு செல்கையில் அது உடலை உருக்கி உயிரை அல்லவா கொல்கின்றது முத்து பற்களும் முறுகிய சுருள் மயிரும் பிராகச மின்னலை உதிரும் விழிகளும் தேன்வடியும் பேச்சும் மெழுகு பொம்மையாய் உடலும்..!! உன அழகை என்னவென்று சொல்வேன்!! அழகு என்ற வார்த்தைக்கு அகராதியில் பொருள் தேடியும் பயனில்லை நடமாடும் அக…
-
- 5 replies
- 1.6k views
-
-
-
சுஐப் எம். காசிம்- ஒவ்வொரு வருடத்தின் ஒக்டோபர் இறுதிதினம் நெருங்கி வரும் நாட்களிலே நெஞ்செல்லாம் வலியெடுக்கும் நினைவெல்லாம் தடுமாறி நீர் நிறையும் கண்களிலே உணர்வெல்லாம் தத்தளித்து உதிரம் அலையெழுப்பும் தாயகத்தின் நினைவெழுந்து தவிதவித்து மனம் கதறும் வேகாத உடலோடு வெந்த உயிர் தொங்கி நின்று பிறந்த தாய் மண்ணினைவில் பிரிவில் துடிதுடிக்கும் "இன்னுயிர்த் தாய் ஈன்றெடுத்த இரட்டைக் குழந்தைகள் போல் நூறு பலஆண்டுகளாய் நோகாதும் நொடியாதும் ஒருயிராய், ஈருடலாய் ஒன்றிணைந்து வாழ்ந்த அந்தக் காலத்தின் நினைவெழுந்து கண்கள் குளமாகிவிடும் ஓர் புலத்தில் தான் வாழ்ந்…
-
- 0 replies
- 682 views
-
-
தமிழர் சொரணை மீட்பு பொங்கல்.. வெற்று சவடால் அரசியல் மேடை பேச்சில் எச்சில் தெறிக்க.. ஆட்டு மைந்தைகள் கர்சீப் கொண்டு அதை துடைக்க.. மைக்கும் அதிர்ந்து தன்னை நிறுத்தி கொண்டது நம் வேலைக்கு இவர்கள் வேட்டுவைப்பார்கள் என்று.. ஈழத்தில் உன்உறவுகள் செத்து கிடக்க.. இவனோ தேரதல் பிரியாணியை தின்று நடக்க.. சொறிநாய் ஒன்று காலை தூக்கியது இது கல்லோ என்று.. தலைவனின் சுவரொட்டியை ஒட்டிவிட்டு அசையாமல் நின்றான் வேறுயாரும் கிழித்துவிடக்கூடாது என்று.. தின்ன அசைந்து வந்த எருமை மாடு அவனை கண்டு ஒதுங்கிபோனது இவனை விட நாம் மேல் என்று.. ஈழத்தில் உன் உறவுகள் சாகிறார்கள்-என்னால் என்ன செய்யமுடியும்? காவிரி பறிபோகிறது என்னால் என்ன செய்யமுடியும்? முல்லை பெரியாற்றை உட…
-
- 7 replies
- 1.8k views
-