கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
ஆண்ட இனம் அடிமைப்பட்டுக் கிடக்க அது அரசிழந்து ஆட்சி இழந்தது மட்டுமா குற்றம்..?! அது சக்தி இழந்து கிடப்பதும் குற்றமே..! எழுச்சி கொள் மாணவ இனமே குமுறும் இந்தக் குரல்களுக்கு.. சக்தி கொடு ஈழ தேசமதில் ஒரு விடுதலைப் பூப் பூத்திட...! அதிகார வர்க்கத்தின் பேசும் மொழி அடக்குமுறை.. காக்கிச் சட்டைகள் அதன் ஏவு இயந்திரம்.. அவை எதிர்த்து நில் அமைதி வழியில்..!! வரும் துயர் தாங்கி நில் சக்தி காட்டி நில்... மாணவர் ஒற்றுமையில்..! பொங்குவோம் நாம் தமிழராய் தரணியெங்கும் நீதி செப்பி மானுடம் போற்றும் தமிழினம் காக்கும் தமிழீழ தேசம் மீட்டிட...! போஸ்டர் மீளமைப்பு :- நெடுக்ஸ். இணைப்பு நன்றி:- முகநூல்.
-
- 5 replies
- 768 views
-
-
தமிழீழ புலனாய்துறையினரின்வெளியீடு விழித்திருப்போம் கேட்டுப்பாருங்கள் http://www.esnips.com/doc/eab937d6-453d-48...et=documentIcon
-
- 5 replies
- 1.7k views
-
-
இயந்திர வயல் வெண்நாரைகளின் இயந்திரவயல்களில் கறுப்புக்காகங்கள் உருக்குலைய கரிய மை உதிர்க்கும் எழுதுகோல் உறைத்துப்போனது. மூன்றாந்தர உலகநாடுகளில் போரை வளர்க்கும் முதல்தர வல்லாண்மைகளின் பிடியில் சிக்கி மீளமுடியா வலிக்குள் புதைகிறது மனிதம் கந்தகப் பரீட்சிப்பு வளங்களைத் தின்ன, உயிருக்காய் அஞ்சிப் புகலிடம் தேடும் மனித வளங்களைத் தின்று கொழுத்தன வலியவை. நூற்றாண்டுகளின் கடப்பில் தொடர்ந்தபடி.. மனுநீதி வல்லரசுகளின் காலடியில் நசியுண்டு கிடக்க, போலி வெண்புறாக்கள் பூரித்துப் பறப்பது மூன்றாந்தர நாடுகள்மேல் திணிக்கப்பட்ட சாபம் எண்ணச் சூடேற்றலில் மனிதம் கொதிக்க இயந்திர வயல்களின் அழைப்பு.. உறைய வைத்தது.
-
- 5 replies
- 1.9k views
-
-
எனக்கும் ஆசைகள் கோடி பூவே...! சத்தியமே செத்துவிட்ட பார் இது பூவே...! நித்தமும் நீ தேடுவது என்ன இங்கு உத்தமர்கள் ஆயிரம் நாவளவில் பூவே..! உனக்கு இது புதியதன்றே வித்தகர்கள் பலர் வியந்திடும் பூவே...! குந்தகம் மனதிற்குள் குழிபறிக்க ஆசை எத்தனை மனிதர்கள் பூவே...! இன்றும் எம் அருகினிலே விந்தை அது விந்தை பூவே...! எந்தன் வாழ்க்கையது அவருடனே நன்றிகள் ஆயிரம் பூவே...! கபடம் மறந்த உன் வாசனை அழகிற்கே மனதில் ஒலிக்கும் கவியோசை பூவே...! உந்தன் வாசமுடன் கலந்து இங்கு எனக்கும் ஆசைகள் கோடி பூவே...! உனைப்போல் துன்பம் மறந்திருக்க எழுதுவது இதயநிலா.. "உள்ளங்களே உங்கள் கருத்துக்கள் அறிய ஆவல்…
-
- 5 replies
- 1.3k views
-
-
கொரோனாவுக்கே சிரிப்பாய் கிடக்கு-பா.உதயன் 😂 —————————————————————- இஞ்சியும் உள்ளியும் ————————— இஞ்சியும் உள்ளியும் தன்னையா கொல்லுமாம் கொரோனாவுக்கே சிரிப்பாய் கிடக்கு. பயம் ——- மனிதரை கண்டு மனிதர் பயந்ததை பார்க்க கொரோனாவுக்கே சிரிப்பாய் கிடக்கு. முகம் தொலைந்த மனிதன் ———————————- முகத்தை எல்லாம் மூடிப் போகும் மனிதரை பார்த்து கொரோனாவுக்கே சிரிப்பாய் கிடக்கு. கடுகு சிறிது காரம் பெரிது ———————————- கண்ணுக்கே தெரியாத என்னைக் கண்டு வீட்டுக்க ஒழிக்கும் மனிதனைக் கண்டு கொரோனாவுக்கே சிரிப்பாய் கிடக்கு. கொல்ல முடியல்ல ————————- எத்தினை யுத்தம் செய்தீர் எவ்வளவு மனிதரை கொண்டீர் என்னை மட்டும் கொல்லவா முடி…
-
- 5 replies
- 1.1k views
-
-
எங்கேனும் இருந்தால் எழுது ஒரு பதில் நீ வருவதாய் கனவுகள் நீ எம்மோடு வாழ்வதாய் நினைவுகள்.... நினைவுகள் தின்று நெஞ்சில் துயர் மீதமாய்க் கனக்கிறது..... இரத்தம் செறிந்த புழுதியில் நீயும் புழுதியாய் கலக்கையில் ய…
-
- 5 replies
- 1.7k views
-
-
சொந்த நாட்டு வீட்டுக்கு... எப்பத்தான் நான் போவேன்? என் சொந்தக்காரர் நாலுபேரை... அப்பத்தான் நான் பாப்பேன்! வந்த நாட்டை எண்டைக்கும்... எந்தன் நாடாய் ஆக்கமாட்டேன்! சொந்த நாட்டை மீட்குமட்டும் நிம்மதியா தூங்கமாட்டேன்...!??? வல்லைவெளிக் காற்றாக.... மனம் எல்லைதாண்டிப் பறக்கிறது! நெல்லுவயல் கதிர் பார்க்க.... தினம் எண்ணமெல்லாம் துடிக்கிறது! முல்லை நில கடலோரம்.... அலை ஓயாமல் அடிக்கிறது! ஓயாத அலை ஞாபகங்கள்.... மீண்டும் நெஞ்சில் வந்து துளிர்க்கிறது! ஓடக்கரை அப்பம் தோசை... வாங்கி நல்லா தின்ன ஆசை! பருத்தித்துறை வடையோட... பங்குனிக் கள் அடிக்க ஆசை! வல்வெட்டிதுறை எள்ளுப்பா... வாய் இனிக்க கடிக்க ஆசை! தப்பி ஓடி வந்த பாவியாகி... தஞ்சம் தேடி வந்த அகதியாகி... செல…
-
- 5 replies
- 1.2k views
-
-
தோழன் சிவராமுக்கு வ.ஐ.ச.ஜெயபாலன் எழுந்துவரும் சூரியன் எடுத்துக் கால் வைக்கின்ற கீழைக்கரை மட்டுநகர் ஈழக்கரை விடிய வென்று ஈன்று தந்த தாரகையே பாடுமீன் வாவியழ பனந்தோப்பின் காற்றும் அழ மன்னாரின் கரை நெடுக முத்தெடுத்தோர் பேரர் அழ வன்னிக் காடெல்லாம் மார்புதட்டிச் சூழுரைக்க வெண்பனியின் துருவத்தும் விம்மித் தமிழர் அழ விடிவெள்ளி தனை அழித்தால் வானம் இருளுமென்றா மூடர்களே சிவராமன் மூளைதனைச் சிதறடித்தீர் – அவன் எண்ணமோ வண்ணமயில் எழுதுகோல் வடிவேலாம் மண்ணில்விழ விடுவோமோ – அந்த மாதவனின் வடிவேலை -வ.ஐ.ச.ஜெயபாலன் (ஏப்பிரல் 2005)
-
- 5 replies
- 753 views
-
-
வெல்க தமிழ் இயல்பாய் எழுவாய்! புயலாய் சுழல்வாய்! தமிழா!..... இதுவே முடிவாய் முயல்வாய்! எழும் தழல் மூச்சில் தமிழ் முகம் சிரிக்க, விழும் கனி மடியினில் உலகமும் வியக்க. விழுதுகள் பலமெது? - இது விடை தரும் காலம் அழுது தொழுது அலைந்தது போதும். விழி மடல் திறவா விதியையும் தகர்ப்போம் விரைவீர்! எழுவீர்! வெல்க உரைப்பீர்! அழுகிய பண்டமாய், அனாதிப் பிணங்களாய், குருதிவடி நெஞ்சமாய் குமுறியது போதும். எழுவீர்! எழுவீர்! எண்திசை வெளிக்கும் எங்களின் எழுச்சியில் எல்லாமே சிறக்கும். அழகுறு அன்னையின் விழி நகை மலர, உலகொரு சொல்லதில் உயர்வதைப் பகர, தெளிவுறு தலைவனின் திறனது வெல்ல எழுவீர்! எழுவீர்! வெல்லும் தமிழ் சொல்ல. ப…
-
- 5 replies
- 3.3k views
-
-
சாம்பலாக்கப்பட்ட நிலத்தின் நடுவிலிருக்கிற சிதைக்கப்பட்ட நகரம் ‐ தீபச்செல்வன்: :தீபச்செல்வன் 01 மாடுகள் அலைந்து திரிந்து கண்ணிவெடிகளையும் மண்ணையும் மேய்ந்து கொண்டு சாணியில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாக நகரத்திற்கு வேறு பக்கம் திரும்புகின்றன. எரிந்து கருகிப்போயிருக்கிறது சனங்களின் நிலம். அழிந்து சமதரையாகிப்போன வெளியில் பேய்கள் வாழ்ந்து திரிகிறது. நிலம் எரிந்து சாம்பல் பூத்திருக்க தலைகள் பிடுங்கப்பட்ட மரங்கள் மண்ணில் குத்துண்டு நிற்கின்றன. தலையிழந்த பனைகளால் மிகுந்த வெளியில் நோடட்மிடுகிற காவலரண்களை சுமந்து நிற்கிறது வேர் பட்ட பனங்குத்திகள். உப்பு விழைந்த வாடிகளில் இல்லாத சனங்களின் குருதியும் துயரும் சேர்ந்து விளைந்து…
-
- 5 replies
- 1.1k views
-
-
இதய அறைக்குள் புதைந்து கிடந்த என் சந்தோசங்களை மீட்டுக்கொண்டது உன் முத்தங்கள். என்இதழ் தந்த முத்தங்களும் என் மொழி தந்த கவிதைகளும் நீ..பருகிடும்போதா.. என்னை குயில் என அழைத்து இந்த குயிலில் முத்தங்களை வருடிச்சென்றாய். உன் முத்தப்புயலின் வேகத்தில் அவஸ்தைப்படும் நான். தித்திக்கும் முத்தங்கள் நித்தம் நித்தம் உன்னிடம் இருந்து கிடைக்குமானால் என் வாழ்வையே.. உன்னிடம் அர்ப்பணித்து கொள்வேன்.
-
- 5 replies
- 1.6k views
-
-
[size=4]வெற்றிடமொன்றில் நிரம்பிக்கொண்டிருந்த நினைவுகளின் வெதும்பல்கள் விளிம்பு நிலையொன்றில் முனகிக்கிடக்கும் பகலின் நிர்வாணத்தின் முன் கூனிக்குறுகிக்கிடக்கும் அவை இரவுப்போர்வைகளில் கூர்ப்படைந்து அதீதமான பிரவாகத்துடன் [/size] ஓரங்களை தின்னத்தொடங்கும். [size=4]இரைமுகரும் எலியொன்றின் அச்சம் கலந்த கரியகண்களை, இரையாகும் தவளையொன்றின் ஈன அவல ஒலிகளை உள்ளெழுப்பி உணர்வுகளை சிதைக்கும். தகனமொன்றின் நாற்றங்களை பின்னான எச்சங்களை அருகிருக்கும் இலைகளில் படிந்திருக்கும் புகைகுறியீடுகளை விலகாதிருக்கும் மெல்லிய வெம்மையினை பரப்பி சூனிய தனிமையினை பிறப்பிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக உருவேற்றும் அந்த துர்தேவதைகளின் கொலுசொலிகள் …
-
- 5 replies
- 751 views
-
-
யார் சொன்னது ...? கூப்பிட்ட குரலுக்கு ... கடவுள் வராது என்று ...? கூப்பிட்டு பார் உன் அம்மாவை ......!!! அம்மா கடுகு கவிதை எவராலும் முடியாது .. நொடிக்கு நொடி என்ன ... தேவை என்பதை... உணரும் மனோ தத்துவ .. ஞானதன்மை ...!!! அம்மா கடுகு கவிதை பிறந்தபோது... ஈரத்துடன் பார்த்த ... முகத்தையே - இறந்து ... கிடக்கும் போது இதே ... முகமாக பார்க்கும் ... ஒரே -ஜீவன் - அம்மா ....!!! அம்மா கடுகு கவிதை உயிருடன் ... இருக்கின்ற போது மட்டும் ... அழைப்பதில்லை ... அம்மா ....!!! மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்பத்துக்கும் துன்பத்துக்கும் அழைக்கும் உடன் சொல் .... ஒரே உலக சொல் -அம்மா ....!!! அம்மா கடுகு கவிதை இந்த உலகு புவி சுற்றால்... இயங்க வில்லை -தாயின் .. தூய அன்பால் சுற்றுகி…
-
- 5 replies
- 3.1k views
-
-
ஊடக காரனா நீ...? மக்களின் தொண்டனாய் மன்றேறி வந்தவரே நீதியை கொன்றிங்கே நின்றென்ன உரைக்கின்றாய்..? பிழைகள் செய்தாரென்று பிழையாய் உரைக்கின்றாய் வதைகள் செய்வதற்கா வந்தாய் நீயிங்கே...? கும்பிடு போட்டுனக்கு குலவி வந்தால் தான் சந்திக்கு விடுவாயா சம்பந்த காறனே...? மறையது கழன்றாரென்று மன்றில் நீயுரைத்தால் செருப்பதை எறியாமல்- என்ன செங்கம்பளமா விரிப்பார்...? சுதந்திர தா்மத்தை சுடு காடனுப்பி விட்டு மன்ரேறி என் செய்வாய் மடையனே நீ சொல்லு...? விதி முறை போட்டென்ன விலையா பேசுகின்றாய்..? சீா் கேடி என்செய்வான்- அவன் சிந்தை இது காண்... மதியது தானிழந்தாய் மறையது நீ கழன்றாய் உடையில்லா அல…
-
- 5 replies
- 1.7k views
-
-
இனமான உணர்வோடு தன்னாட்சி வென்றெடுப்போம் 41 Views தொல்புவியில் நாமாண்ட வரலாறு மீண்டெழுத வல்லாண்மைத் திறத்தினொடு அதிவிவேக நுண்மதியால் பல்நாட்டு வல்லரசார் உள்ளத்தை ஊடுருவி சல்லடையாய் சிங்களத்தைத் துளைத்தெடுத்த வேந்தனெங்கே! கர்மவீரன், திடசித்தன், களங்கமில்லாத் தூயநெஞ்சன் தந்தை செல்வா முன்மொழிந்த தமிழ் ஈழம் உருவாக்கி தர்மநெறி தழுவியவர் நாற்படைகள் அரணமைக்க அதர்மத்தை வேரறுத்து இனம்காத்த செம்மலெங்கே! பதினெட்டு வயதினிலே விடுதலையின் கனல்மூண்டு கதியற்றுத் தடுமாறித் தவித்ததமிழ் மக்கள்துயர் பதியத்தன் னுள்ளத்தில் பகையொடுக்கும் ஆவேசம் …
-
- 5 replies
- 889 views
-
-
மலருடன் காத்திருந்தான்.... மருத்துவப் பயிற்சியென்றால்... மாலையில் காண்போமென்றாள்.... மலருடன் காத்திருந்தான்.... அவன் கனவுக்காக கண்மூடினான்.. அவள் காடையரால் கண் மூடினாள்... இவர்கள் காதல் காலத்தால்.... விழித்திருக்கும்... காலமெல்லாம் விழித்திருக்கும்....
-
- 5 replies
- 1.6k views
-
-
இலங்கை சிறு தீவில் சூழ்ந்தது போர் மேகங்கள் அணி வகுத்தது இரு தரப்புக்கள் ஆதிக்கவெறி இன வெறி கொண்ட ஒரு தரப்பும் சுதந்திரத்துக்காய் விடுதலைக்காய் மறுதரப்பும் உள்நாட்டு பிரச்சினை என உலகம் கண்ணை மூடிக்கொண்டிருக்க கொலை கொள்ளை பலாத்காரம் என இன அழிப்பில் கொக்காளம் இட்டது சிங்கள தரப்பு வீரம் கொண்ட தமிழ் இனம் தனது சொந்தக்காலிலே நின்று பதிலடி கொடுக்கத்தொடங்கியபோது விழித்துக் கொண்டது உலகம் மூன்றாம் தரப்பு இணைத்தலைமை அமைதிப்படை சமாதானத்தூதுவர் இன்னும் என்னவோ பெயர்களிலெல்லாம் போதும் போதும் இவர்களெல்லாம் மத்தியஸ்தம் செய்வதுக்கு நாங்கள் நடத்துவது விடுதலைப் போரா இல்லை குறுக்கெழுத்துப் போட்டியா?
-
- 5 replies
- 1.5k views
-
-
நாட்டைவிட்டு ஓடிவந்த நாதேறிகளை நட்புக்கரம் நீட்டி வரவேற்று அடைக்கலம் கொடுத்து தன் நாட்டையே அவனுக்குத் தாரை வார்ப்பான் தமிழன் ரொம்ப நல்லவன் காலம் காலமாய் கட்டிக் காத்த கொள்கைகளை கடாசிவிட்டு அறிவுக்கு உதவாத அவன் கொள்கைகளைப் பின்பற்றி அவனோடு கூத்தடிப்பான் தமிழன் ரொம்ப நல்லவன் மாற்று இனத்தான் தன்னை மெச்சுவதற்காக தன் இனத்தானை அவனிடம் காட்டிக் கொடுத்து அவனிடம் கைத்தட்டல் பெறுவான் தமிழன் ரொம்ப நல்லவன் தன்மொழி பள்ளி இருக்க பிறமொழி பள்ளிக்குத் தன் பிள்ளைகளை அனுப்பி அந்த மொழியில் தன் பிள்ளைகள் பேசுவதைக் கண்டு பூரித்துப் போவான் தமிழன் ரொம்ப நல்லவன் தன் தாய்மொழியைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு பிறர் மொழியில் உரையாடி அந்த மொழி வளர நீரூற…
-
- 5 replies
- 1k views
-
-
காலப் பாலை நடுவினிலே வினோதங்கள் வற்றி உயிர்ப் பம்பரம் ஓய்கையிலே வாழும் கனவாக என் முன்னே வளரும் சிறு நதியே. உன் தோழமையின் பெருக்கில் துயர்கள் கரையுதடி வாழத் துடிக்குதடி கண்ணம்மா என் வார்த்தைகள் காவியமாய் கூதிர் இருட் போர்வை உதறி குவலயம் கண் விழிக்க போதியோடு இலை உதிர்த்த இருப்பும் புன்னகைத்தே துளிர்க்க மனிதருக்கிடையே நாணற்றுச் சூரியன் மண்ணைப் புணருகின்றான். மூதி எழுந்திடென்றாய் கண்ணம்மா மூச்சால் உயிர் மூட்டி. கடைசித் துளியும் நக்கி காலி மதுக் கிண்ணம் உடைத்து என் வாழ்வின் ஆட்டம் முடிந்ததென்றேன். நீ கள்நதியாக நின்றாய். உயிர்த்தும் புத்துயிர்த்தும் இந்த உலகம் தொடர்வதெல்லாம் உன் பொற்கரம் பற்றியன்றோ . மாண்டவர் மீள்வதெல்லாம் ப…
-
- 5 replies
- 1.5k views
-
-
ஊடக இளவலுக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன் இளய கலைஞர்களே சென்னை வரும்போது சென்றவனைப் பாருங்கள் என்பேனே இன்று அவனில்லை. இயமனும் கவிதை சிறுகதைகள் எழுதிப் பிரசுரிக்க அவாவுற்று இவனை அழைத்தானோ. தாகத்தில் தெருப் பாடகர் நினைத்துவரும் சாலையோரத்து ஊருணி மாரியிலேயே வரண்டதுபோல ஊடக இளவல் கிருஸ்ணா டாவின்சி இளமையில் வீழ்ந்தானே. எங்கள் முகங்களை அறிமுகம் செய்த இனியன் முகமின்றி எரிதழலில் படுகிறதோ. இல்லை வாழும் முகமானாள் மகள் நேகா என்றும் சாகா முகமையா உனக்கு தமிழ் கலைஞர் எங்கள் நினைவுகளில்.
-
- 5 replies
- 1.1k views
-
-
சூரனை வதம் செய்தான் அந்த முத்துகுமரன் அதுவும் திருச்செந்தூரன் தன்னையே வதம் செய்தான் இந்த முத்துகுமரன் இதுவும் திருச்செந்தூரன் போன பொழுது உனக்குத் தெரிந்திருக்கும் எம் மாவீரர்களும் மக்களும் உனக்களித்த வரவேற்பு சாவின் நிமிடம் தெரிந்த சத்தியவான்களில் கரும்புலிகளுக்கு அடுத்து நீதானையா! மக்கள் எழுச்சியின் சிகரம் நீ ஈழ மக்களின் மகரம் நீ உனக்காக வருந்தாது மத்திய அரசு உனக்காக அழுகிறது தமிழ் ஈழ அரசு பிரபாவுக்கு சொல்லென்றாய் சொல்லிவிட்டோம் திருமாவுக்கு சொல்லென்றாய் சொல்லிவிட்டோம் பிரமாவுக்கு ஒரு முறை சொல்லிவிடு - உன்னை படைத்ததற்கு கோடி நன்றி என்று தமிழ் ஈழ புல்லும் தமிழ் உயிர்கள் அத்தனையும் உனக்காக அழுவதனை ஒருதரம் கேளாயோ? போய்வா எம…
-
- 5 replies
- 1.6k views
-
-
காஸா நகர் குழந்தைகள் குழந்தைகள் அஞ்சிப் பதுங்கியிருக்கும் நகரில் பிறக்கப்போகும் இன்னொரு குழந்தைக்காய் எப்படிக் காத்திருப்பது? ஒவ்வொரு இஸ்ரேலியப் படையினனும் துரத்திக் கொண்டிருக்கிறான் ஒரு பாலஸ்தீனக் குழந்தையை அவர்கள் ஏன் குழந்தைகள்மீது குண்டுகளை வீசுகிறார்கள்? தமது துப்பாக்கிகளை ஏன் குழந்தைகளுக்கு எதிராய் திருப்புகிறார்கள்? ஒவ்வொரு பாலஸ்தீனரின் கைகளிலும் ஒரு குழந்தையின் பிணம் குழந்தைகளற்ற குழந்தைகள் பதுங்கியிருக்கும் ஓர் நகரை எப்படி அழைப்பது? ஓர் ஈழக் குழந்தையை கருவில் கரைத்துக் கொல்லும்போது பாலஸ்தீனக் குழந்தை ஒன்றை குண்டுகள் தின்று போட்டிருக்கின்றன குழந்தைகளைக் கொல்பவர்களின் நோக்கம் என்னவாய் இருக்கும்? http://globaltamilnews.net/GTMNEditorial/tab…
-
- 5 replies
- 831 views
-
-
போதுமடா சாமி! கட்டிய கோவில்களும் போதும் வெட்டிய புதைகுழிகளும் போதும் அமைத்த ஆலயங்களும் போதும் தொலைத்த உறவுகளும் போதும் எரித்த தீபங்களும் போதும் எரிந்த சடலங்களும் போதும் படித்த பஜனைகளும் போதும் வடித்த கண்ணீரும் போதும் எடுத்த காவடிகளும் போதும் கடித்த குப்பிகளும் போதும் இழுத்த சப்பரங்களும் போதும் இழந்த சரித்திரங்களும் போதும் படைத்த படையல்களும் போதும் கிடைத்த வெகுமதிகளும் போதும் சாமியால் பிழைத்த மனிதர்களும் போதும் மனிதரால் பிழைத்த சாமிகளும் போதும் போதாமல் இருப்பதின்று மனிதருக்காய் வாழும் மனிதர்கள் http://gkanthan.wordpress.com/index/saami/
-
- 5 replies
- 1.1k views
-
-
இனியவளே… என்னைக் கோவப்படுத்தி பார்ப்பதற்க்கானா உன் தேடல் தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது தோல்விக்கு மத்தியிலும் ம்ம்… உனக்கெப்படி தெரியும் உன்னை யாரும் கோவப்படுத்தினால்தான் எனக்கு கோவம் வருமென்று நமக்குள் பிரிவே வரக்கூடாது அப்படி வந்தால் உன்னால் வரக்கூடாது ஏனெனில் அந்த சோகத்தின் கதாநாயகியாக நீ இருந்துவிட கூடாதென்பதால் உன் கல்மனதுக்குள் நுழையும்வரைதான் யோசித்தேன் எப்படி நுழைவதென்று நுழைந்தபின் மறந்தே போனேன் எப்படி யோசித்து நுழைந்தேனென்று ***************************************************** கவிதைகள் எழுதத் தெரியுமா என்று கேட்டார்கள் நான் தெரியாது என்றேன். அப்ப என்ன தெரியுமென்று கேட்டார்கள…
-
- 5 replies
- 1.3k views
-
-
வணக்கம். தமிழீழ விடுதலை காணங்கள் தேவை. படைப்பாளிகளிடமிரந்து எதிர்பார்க்கப் படுகிறது . உங்கள் ஆற்ரலை வெளிப்படுத்த இவை நல்லதொரு சந்தர்பம் தமிழீழத்தின் பிரபல பாடக்கர்கள் ஊடாக இவை வெளி வர இருக்கின்றன இவை அணைத்தும் தமிழீழ தேசத்தை பற்றிய கருப்பொரளாக அந்த விடுதலை சம்பந்தமாக அமையப் பெற வேண்டும். இன்றே களமிறங்குங்கள் படைப்பாளிகளே ஆர்வலர்களே மொழியால். இனத்தால் ஒன்று பட்டு விடிகின்ற எம் தமிழீழ சேத்திற்கு பாட்டால் உயிர் கொடுத்து நாமும் உணர்வு கொண்ட எழுக உங்கள் படைப்புக்களை எமக்கு தனிமடல் ஊடாக அனுப்பி வையுங்கள். உங்கள் பெயர் தொலைபேசி இலக்கம் அல்லது கலகத்தின் அங்கத்தவராயின் தனிமடல் ஊடு தொடர்பு கொள்ளலாம். மேலும் படிக்க.... …
-
- 5 replies
- 2.1k views
-