கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
-
தேசத்தின் குரலோனே செங்கதிர் சொல்லோனே தேசியத்தின் சுவடோடு சென்றுவிட்ட வல்லோனே தமிழ் வாழும் நாள் எல்லாம் வாழ்ந்திடுவீர் எம்மோடே காலனின் வருகை கண்டும் கலங்கினீர் தமிழனுக்காய் காலம் கனியும் நேரம் கவர்ந்து விட்டான் காலதேவன் பேனா முனைகளிலே பேசியது உம் உணர்வு துப்பாக்கித் தோட்டாவாக துளைத்தது சிங்களத்தை பேச்சுவார்த்தை மேசைகளில் பேரமிட்ட சிங்கள துவேசிகளை மதியுரைஞர் உம் மதியினாலே மதியிழந்து கலங்கவைத்தீர் போரும் சமாதனமும் தந்தீர் போற்றுகின்ற பொக்கிசமாய் நோய் வந்து உழன்றபோதும் நேசித்தீர் சமதானத்தை தேசியத்தலைவரின் நேசத்துக்குரிய நண்பா தேசம் போற்றும் உம் நேசக்கரம் என்றும்
-
- 5 replies
- 1.3k views
-
-
தீ... கவிதை - இளங்கவி உனக்கு தமிழனில் என்ன பகை சொல்.... பலகாலமாய் எங்களை ஓட ஓட விரட்டுகிறாயே...... சிங்களனைப் போல உனக்கும் எங்கள் இரத்தம் தான் பிடிக்குமா... அன்றி அவனுக்கு நீ அடிமையா..... தொட்டந் தொட்டமாய் கட்டங் கட்டமாய் எங்களைக் காவுகொண்டும் அடங்கலையா உன் பசி...... கருஞ்சாம்பல் புகையாகி காவியம் படைத்தவர் உன்னை வென்றவர்..... அவர் கதையை உன்னில் அட க்க எனக்கு விருப்பில்லை...... காரணம் அவர்கள் உனக்கு அஞ்சாதவர்..... ஆனால் நீ எரித்த அப்பாவி உயிர்களுக்கு நீ தானே பொறுப்பு..... முள்ளிவாய்க்கால் வரை விரட்டி விரட்டி நீ எரித்த எம் மூச்சுக்களுக்கு நீ தானே பொறுப்பு.... அழக்கூட நேரமின்றி அந்த இடத்…
-
- 5 replies
- 2.6k views
-
-
நானோ ஒரு கேடி.... வைச்சிருக்கன் தாடி....... வீணையதை வேண்டி போறேன் நானும் பாடி..... வேண்டுகிறேன் நான் கோடி.... ஈழமதை சாடி.... உலகம் எல்லாம் ஓடி.... வருகது என்னை தேடி........ சாக்கடையில் மாடி....... கட்டிறேன் நான் கூடி..... கேடு செய்யிறதில் நான் கேடி....... போவேனா நானும் வாடி.....??? ஈழ மக்கள் கட்சி..... இன்னல் செய்யும் கட்சி....... அதுக்கு இல்லை சாட்சி..... மக்கள் மதிக்கும் மன சாட்சி.... துனிஞ்ச மனம் எனக்கு.... மக்கள் பலம் எதுக்கு....??? உலகமதில் எனக்கு.... பெயரு ஒன்னு இருக்கு.... நான் துரோகி.......!!!
-
- 5 replies
- 2k views
-
-
வித்து காசு பாத்துறாதண்ணே எம்புட்டு நேரம் நிற்கிறது சீக்கிரமா படமெடுண்ணே அம்மாக்கு ஒத்தாசையா செங்கல் தூக்கனும் அழுக்குத் துணி மாத்தி கலைஞ்ச முடியை வாரி பூச்சுடி அழகா போஸ் கொடுக்க வருச பொறப்புக்கு வாண்ணே இந்த படத்தை எங்கயும் வித்து காசு பாத்துறாதண்ணே பள்ளிக்கூட போற வயசில்ல பக்கபலமா அம்மாக்கு இருக்கேன் குழந்தைத் தொழிலாளினு சொல்லி பொழப்பை கெடுத்துராதண்ணே உழைச்சாத்தான் பசிக்கிற வயிறும் சந்தோசப்படும் இந்த விசயம் படத்தில தெரியுமாண்ணே! http://www.greatestdreams.com/2010/03/blog-post_04.html
-
- 5 replies
- 1.2k views
-
-
நமக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் வேண்டாம் நமக்குள் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்வோம் அப்படியென்றாலாவது சமாதான மீறல் புரிகிறாயா என்று பாப்பம் நான் குடிக்கவேயில்ல இருந்தபோதும் குடிகாரனாய் நடிக்கிறேன் உன்னை பேசவைக்க வேண்டுமே என்ன தவம் செய்ததோ என் வார்த்தைகள் உனக்காய் கவி எழுதுகையில் மெய் எழுதுக்களும் உயிர் பெற்று விடுகின்றது மழை விட்டது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் இருந்தும் என் குடைக்குள் இன்னும் நீ கோவம் வரும் போது உன்னை நினைக்க சொன்னாய் வராத போதும் உன்னை நினைத்தேன் இப்ப என்னை நினைப்பாயோ யாழ்_அகத்தியன்
-
- 5 replies
- 1.5k views
-
-
தற்கொடைகள் வீண் தற்கொலைகளாக வேண்டாமே...! முத்துக்குரமன் மூட்டிய தீ எங்கும் மூசியெரிகிறது. தமிழன் செத்துக் கிடப்பதை உலகோ சத்தமின்றிச் சகிக்கிறது. பலம் கொண்ட மட்டும் பகைவன் பலியெடுக்கும் கொலையிருந்து மீளுதற்காய் புலமெங்கும் தமிழன் போர் வீச்சாய் எழுகிறான். ஈழம் பெறும் நாளை கையிலெண்ணிக் கடுங்குளிரின் விறைப்பிலும் வீதிகளில் இறங்கி நீதி கேட்கும் நிலையிலுள்ளான். பலம் வெல்லும் என்ற நிசம் புரிந்தும் நம்பிக்கையுடன் தமிழன் நெடுந்தவம் புரிகின்றான் - இக் கடுந்தவத்தின் பரிசெமக்கு காலம் தருமென்ற நினைப்போடு. தினம் வரும் செய்திகளால் - உயிர் மனம்வாடித் துவளுகின்ற துயர் உயிரைத் தின்கிறது - எனினும் தொடரான ஈர்ப்புக்கள் குறயாமல்…
-
- 5 replies
- 1.8k views
-
-
மண்ணின் அந்தரங்க இருளில் புணர்ந்திருக்கும் மரத்தின் வேர்களைப்போல் ஆட்சிப்பீடம் சேர்ந்தே இருக்க காற்றின் உதைப்பில் முட்டுண்டு தான் முறிந்ததென்றால் மரம் அழியும் என எண்ணி தன்னை தானே முறிக்கும் கிளைகளைப் போல் மண்தின்னும் மலமாகுறான் தொண்டன்
-
- 5 replies
- 1.2k views
-
-
கிடைக்குமா உன் நிஜங்கள் உதிராது என்றுமே மலர்ந்திருக்கும் அழகிய ரோஜாக்கள் போல் என்றுமேயான உன் நினைவுகள் மீண்டும் மீண்டும் நான் தான் உணர்கிறேன் உன் பிரசன்னத்தை என் உள்ளத்திலே இன்று நீ என்னிடம் இல்லாதிருப்பினும் உன் காதலில் எச்சசொச்சங்கள் என்னில்... என் உள்ளத்தைக் கொத்திக்காயப்படுத்தி கடித்து முறித்துச் சுவைத்து பார்த்த நீ பறந்து சென்றுவிட்டாய்... உன் எண்ணங்களின் நிழல்கள் தாங்கி நான் இன்று உன் நிஜத்தினை தேடிக்கொண்டிருக்கின்றேன் கிடைக்குமா எனக்கான உன் நிஜங்கள்....
-
- 5 replies
- 1.2k views
-
-
பிதற்றுகிறான் சுடலைமாடன் கோடை வெப்பம் கொடுமையாய் முடிந்து ஈர வரவை மண் எதிர்பார்த்து காத்திருக்க இளவேனில் முடிந்து இருள் எங்கும் படர தொடங்கும் போது உள் நுழைந்தான் சுடலை மாடன் யாழ் இணையத்தினுள் வந்தவனை வா என்று வாழ்த்தியது ஒரு சிலரே பெண் (பிள்ளை புனை) பெயரில் இங்கு தனில் வந்திருந்தால் வாழ்த்தயுள்ளார் பலபேர் பொல்லாத கவி வடித்து புகழ்வதாய் பொய்யுரைத்து வல்லோராய் தம்மை காட்டயுள்ளார் பலபேர் கன்னிகளின் கேள்விகளுக்கு கவிதையிலே பதில் சொல்லி தூங்காமல் இணையத்திலே அலைந்து தேடி பல இணைப்புகளை இணையத்தில் இணைத்திடுவார் ட்யூப் லையிட் வெளிச்சத்தில் யூடுபில் இல் படம் தேடி பக்குவமாய் பதிவு செய்து பக்கங்களை நிரப்பிட…
-
- 5 replies
- 2k views
-
-
தலை குனிதல் தமிழரின் இயல்பல்ல தலை குனியும் போதெல்லாம் கவி வரையும் பேனா இன்று எம் மண்ணின் நிலை கண்டு கண்ணீர் மட்டுமே வடிக்கின்றது அன்பெனும் கூட்டில் சங்கமித்து ஆசையாய் குழந்தையை பெற்றெடுத்து அடுக்கடுக்காய் கனவுகண்டு வளர்த்து வந்த வேளையிலே ... பூண்டோடு குடும்பத்தை அழித்துவிட்ட கயவனே. உண்மையில் நீயெல்லாம் மனிதன்தானா? இல்லையில்லை ரத்தத்தைப் பிழிந்து குடிக்கும் கொடூர விலங்குகள் நீங்கள். பால்குடித்த ஈரம் காயும் முன்பே மழலைகள் உயிரைப் பறிக்கிறீரே விதையைக் கிழித்து துளிரை அழிப்பது போல் தாயின் வயிற்றைக் கிழித்துக் கருவைக் கொல்லும் காட்டுமிராண்டிகள் நீங்கள். கயவரே உன் காலடிகள் எம் மண்ணில் …
-
- 5 replies
- 1.4k views
-
-
[size=4]என் இரவுகள் அவள் குரல் கேட்டே விடிந்தது என் விடியல்கள் அவள் முகம் பார்க்க துடித்தது என் விரல்கள் அவள் தலை கோத விழைந்தது என் சுவாசம் அவள் வாசத்தால் நிறைந்தது என் குறும்புத்தனங்கள் முழுதும் அவளின் செல்ல கோபத்திற்கவே உருவானது நான் வாங்கும் பொருட்கள் எல்லாம் அவளாலே அழகானது ஏனோ நான் காதல் சொன்ன போது அவளின் மொழி மட்டும் மௌனமானது..![/size]
-
- 5 replies
- 1.4k views
-
-
குருதியோடிச் சேறாகி வறண்டுபோய் வெடித்துக் கிடக்கிறது எங்களின் நிலம், முளைகருகிச் சருகாகி புல்பூண்டுகளும், மக்கி மண்னேறி மண்டையோடுகளும் இன்னபிற அவயத்துண்டுகளும் கறைபடிந்த துணிகளும் ஆங்காங்கே சிதைந்து கிடக்கின்றன, ஆந்தைகளும் ஆட்காட்டிகுருவிகளும் கூட இடம்தேடி எங்கோ போய்விட்டன, கடந்தவைகளை மறந்து அடங்கிக்கொண்டிருக்கிறது தேசம். தழுவல்களும் கண்ணீரும் ஒப்பாரிகளும்-என் சிறுதேசத்தில் மாற்றங்களை நிகழ்த்த முயன்று தோற்றுப்போகின்றன, இழவு முடிந்த எங்களின் வீட்டு சுவர்களிலும் தூண்களிலும் தங்களின் கழிவுகளை கொட்டிவிடும் வன்மத்தோடுதான் வாசல்களில் மேடை போடுகிறார்கள் கௌதம புத்தரின் வழிப்பிள்ளைகள். அவர்களுக்காக, சாம்பல் மேடுகள்மீது செங்கம்பளம் விரித்து சாமரையோடு காத்திருக்கிறார்கள்…
-
- 5 replies
- 714 views
-
-
சூர சம்கார சுதந்திரச்சிற்பிகள் அதிகாலை அரும்பாகி அந்தியிலே சருகாகும் ஆழகான மலரும் அல்ல மலர் சூடி மணமேடை மணக்கோலம் தான்காணும் மங்கலம் இவர்க்கில்லை காண் உயிரோடு உயிர்ப்பூவை உணர்வோடு ஒருங்காக்கி விதையாக விழுகின்றார் பார் இவர் உயிர்மீது தமிழீழம் உருவாகி வரும்வேளை எதிர்பார்க்கும் இளவேனில்கள் கருவோடு திருவாக உருவாகி வரவில்லை இரவோடு உருவானார்கள் இவர் தெருவுக்குள் விளையாடி பருவத்துக் கனவெல்லாம் உருவற்று உருக்கிட்டார்கள் மருவுற்ற மனங்களில் செருவுற்ற சேதிகள் விரவிட்ட வி~வித்துக்கள் எங்கும் பரவிட்ட பாதிப்பில் பாசறை புகுந்திட்ட உதயத்து விடிவெள்ளிகள் தேனான நிலவுகள் தினம் தோய்ந்து எழும்ப இவர் தேகத்தில் துடிப்புமுண்டு வானத்து ந…
-
- 5 replies
- 1.3k views
-
-
வாசல்களில் மரணத்தின் வரவுகளை கணக்கு வைத்திருந்த கணப்பொழுதுகள் அவை . முன்பெல்லாம் உறவுகள்கூடி உடலம் சுமந்து மயானம் செல்வோம், ஊரே மயானமாகிப்போக இறுதிக்கடன் மட்டுமல்ல இறுதியாய் கண்ணீர்கூட விடாமல் உடலங்களை கடந்த தினங்கள் அவை. எங்காவது எமக்காய் எம் குழந்தைகளுக்காய் எம் உறவுகளுக்காய் ஒரு குரலாவது ஒலிக்காதா என்று ஏங்கிக்கிடந்தோம். கரகரத்த குரலாவது ஒலிக்கும் என்று முனுங்கிக்கிடந்தோம். காற்றும் கடலும் வானும் எண்திசைகளும் எரிந்தன எரிகுண்டுகளாலும் எறிகுண்டுகளாலும், உடலங்களை கண்ட நாய்களும் நரிகளும் இன்னபிற விலங்குகளும் அஞ்சியோடின, அப்போதும் வலிகளோடு ஏங்கித்தான்கிடந்தோம். எதிலியாகி நடந்தோம். அறிந்தவன் நீ எரிந்துபோனாய். தோழனே முத்துக்குமார் !!!! நீ மூட்டியது…
-
- 5 replies
- 606 views
-
-
கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! ஏ இந்தியாவே...!எத்தனை கொடுமைகள் செய்துவிட்டாய் எங்கள் தமிழினத்திற்கு... எத்தனை வழிகளில் கெஞ்சியும் கூத்தாடியும் காலில் விழுந்தும் கதறியும் கொளுத்திக் கொண்டு செத்தும் தீர்ந்தாயிற்று... எதுவுமே காதில் விழாத உங்களுக்கு இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்... பட்டினியால் சுருண்டு மடிந்த பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து அழுது வீங்கிய கண்களோடும் அரற்றிய துக்கத்தோடும் களைந்த கூந்தலோடும் வயிரெரிந்து இதோ விடுகிறேன்.. கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! குறள் நெறியில் வளர்ந்து அறநெறியில் வாழ்ந்தவள் …
-
- 5 replies
- 1.8k views
-
-
எழு..எழு..தமிழா எழு...எழு..- எங்கள் விடுதலை காண எழு..எழு.... அடிமையாய் தினம் வாழ்கிறாய் அட தமிழா அதை உடை எழு..எழு... போர்களம்..ஏறி..புகு...புகு... எங்கள் புலி படை கூட எழு..எழு.. விடுதலை காண எழு..எழு... எங்கள் விடியலை தேட..எழு..எழு.. இதுவரை நீ உறங்கினாய் போதும் இனி..இனி..எழு..எழு... விடுதலை காண எழு...எழு... தமிழா விரைந்து நீ எழு..எழு... அந்நியன் வந்து எம்மைஆழ்வாத அவன் காலிலே நீ வீழ்வதா....?? முந்தையர் ஆண்ட குடிதனில் இந்தையர் வந்து ஆழ்வதா...?? அட வீரம் கொண்ட தமிழா -நீ விடுதலை காண எழு..எழு... இதுவரை நீ அடிமையாய் இருந்தது போதும் இனி..எழு..எழு.... விடியலை தேடியே எழு...எழு.. இனி விரந்தே தமிழா எழு...எ…
-
- 5 replies
- 1.2k views
-
-
புது உலகம் படைத்திடப் பிறந்தான் -தமிழ் தவத்தால் தலைவன் கிடைத்தான் இவன் விழிகளில் தீப்பொறி பறக்கும்.. பார்க்கும் வழிகளில் தென்றல் நடக்கும் புது உலகம் படைத்திடப் பிறந்தான் -தமிழ் தவத்தால் தலைவன் கிடைத்தான் ஏறென நடக்கிறான் பாரு-பிரபாகரன் இறங்கிப்போவது ஏது இரக்கம் இவனிடமிருக்கும்..எமை ஏளனம் செய்தால் கொதிக்கும்.. ஒழுக்கம் சொல்லித் தந்தான்.. உலகே வியந்து பார்க்க படைகள் பலவும் செய்தான்.. பகைகள் தொடைகள் ஆட கடலில் காவியம் படைக்கும் கரிகாலன் படைதான் நிலைக்கும்.. எங்கள் நெஞ்சைக் கொள்ளை கொண்ட ஏக தலைவனம்மா..அவனாயுள் கூட எந்தனாயுள் இன்றே தருவோமம்மா.. புது உலகம் படைத்திடப் பிறந்தான் -தமிழ் தவத்தால் தலைவன் கிடைத்தான் வாழ்வைத் தமிழுக்குத்…
-
- 5 replies
- 1.6k views
-
-
பாலக்காடு 2006 வ.ஐ.ச.ஜெயபாலன் வண்ன ஆடைகளை வானெங்கும் வீசிவிட்டு அம்மணச் செஞ் சூரியன் அரபிக் கடல் இறங்க ஆகாச விளிம்பு பற்றும். நாமும் பகலின் பல்லக்குத் தூக்கி களைத்துப்போய் இருந்தோம். கிளர்ந்து குன்று தளுவும் முகிலின் ஈரக் கருங்கூந்தல் இரப்பர் காட்டில் சரிந்து கீழே அறுவடையாகும் வயல்மீதும் சிந்திப் படர்கிறது. வான் நோக்கும் அறுவடைக்காரி முதல் துளியையே குருவி எச்சமாய் அருவருத்து நச்சு வசவுகளை உமிழ்கிறாள். நாளை அவளே வெட்கமின்றி பொங்கலும் வைத்து மழையே வா எனப் பாடுவாள். இது வாழ்வு. வானில் இரவு தன் இளம்பிறை மதுக் கிண்ணத்தை உயர்த்திய…
-
- 5 replies
- 1.5k views
-
-
அண்டையில் இருக்கும் அசிங்கமே அநியாயமே 87 இல் ஈழத்தில் தமிழனைக் காப்பதாய் படைகள் கொண்டு வந்தாய் சிங்களத் துவக்கால் அடியும் வாங்கினாய் இருந்தும் அவன் வால்பிடித்து கரம் குலுக்கி அடித்தவனைக் காத்தாய்.. நண்பனெனும் வரமும் கொடுத்தாய்..! வரவேற்று.. பூமாலை போட்ட தமிழனை "பூமாலை" என்ற பெயரில் படைகள் ஏவிக் கொன்றாய் குவித்தாய் சொந்த இனத்தைச் சூறையாட கூலிகளை வளர்த்தாய் இறுதில் சுருட்டியதோடு கூட்டிக் கொண்டு ஓடினாய்..! நீண்ட தொல்லை இது துரத்தாமல் தீராது என்றே.. வீரப் புலிகள் விரட்டி அடிக்க ஓடிய நீ... மீண்டும்... கொல்லைப்புறந்தில் இருந்து கொண்டு முள்ளிவாய்க்காலில் சிங்களத் துணையோடு வேட்டைகள் ஆடினாய்..! தமிழர் சாவினில் அரசியல் செய்தாய் காந்தியம…
-
- 5 replies
- 700 views
-
-
பேசவேண்டும் யார் இருக்கிறீர்கள் வெறுமையாகிப்போன தேநீர்க் கோப்பையில் நிறைகிறது என் குரல். நீங்கள் எனக்காவும் பேசுவதாக இருந்தால் தேநீர்க் கோப்பையை கவிழ்த்துவிடலாம் என் வெற்றிடங்கள் நிறைந்து கொள்ளும். எதைப்பற்றி பேசுவீர்கள்.. வழிக்காத என் தாடியைப் பற்றி கசங்கிப்போன என் ஆடையைப் பற்றி கிழிந்துபோன காலனி பற்றி அருகில் இருப்பவரைப் பற்றி.. ஓ, நீங்கள் என்னைப்பற்றி பேசவே மாட்டீர்களா? ஓசைகளை கழற்றி எறிந்துவிட்டு சொற்களை கொட்டுவீர்கள் பின் எப்போது சிதை ஏற்றுவீர்கள் நான் செத்தபின்பா அப்போதாவது என்னைப் பற்றி பேசுவீர்களா என்ன. எப்போதுதான் பேசுவீர்கள் என்னைப்பற்றி? எனக்குத் தெரியும் உங்களால் பேசவே முடியாது. ஏனென்றால், நீங்கள் உங்க…
-
- 5 replies
- 873 views
-
-
கோயிலைத்தான் சுற்றிவருகிறார்கள் உன்னைத் தருசிக்காத பக்தர்கள் மட்டும் * உனக்காகவே நட்டு வைத்த பூச்செடியில் யார்யாரோ பறித்து செல்கிறார்கள் தங்கள் காதலியை கண்டுபிடித்தவர்கள் * என் காதல் திருமணத்தில் முடியவில்லைத்தான் ஆனாலும் மரணம்வரை வாழ்த்திருக்கிறது இல்லையென்றால் தற்கொலை செய்திருப்பேனா...? * என்னைப்போல் யாரும் உன் அமைதியை விரும்ப மாட்டார்கள் உன் கீழ் உதடாய் நீ மாறும்போதும் உன் மேல் உதடாய் நான் மாறும் வரையிலும் * இன்றுவரை காதலோடு வரும் எந்த பெண்களுடனும் நான் உரையாடியதில்லை காரணம் எனக்கே தெரியாத உனக்கு துரோகம் செ ய்யக் கூடாது என்பதால் * முடிந்தவரை உன் வீட்டுக் கண்ணாடி முன் நின்று என்னோடு உரையாடு எத்தனை தடவை …
-
- 5 replies
- 1.2k views
-
-
இன்றைய மது வ.ஐ.ச.ஜெயபாலன் உலகம் விதியின் கள்ளு மொந்தை. நிறைந்து வழிகிறது அது மதுக் கிண்ணம் தாங்கியவர்களால் எப்போதும் நுரைத்தபடி. நேற்றிருந்தது வேறு. இங்கே நுரைபொங்குவது புதிய மது. அது இன்றைய நாயகனுக்கானது. நாளை கிண்ணம் நிறைகிறபோது வேறு ஒருவன் காத்திருப்பான். நிச்சயம் இல்லை நமக்கு நாளைய மது அல்லது நாளை. எனக்காக இன்று சூரியனை ஏற்றி வைத்தவனுக்கு நன்றி. அது என் கண் அசையும் திசைகளில் சுவர்க்கத்தின் கதவுகளைத் திறக்கிறது. மயக்கும் இரவுகளில் நிலாவுக்காக ஓரம்போகிற சூரியனே உன்னையும் வணங்கத் தோன்றுகிறதடா. கள்ளு நிலா வெறிக்கின்ற இரவுகள்தோறும் ஏவாளும் நானும் கலகம் செய்தோம். ஏடன் தோப்பினால் விரட்டி அடித்தோமே கடவுளையு…
-
- 5 replies
- 1.2k views
-
-
யூலை 1983... படித்துக்கொண்டிருந்த என்னை தெருவில் ஓடத்துரத்தியநாள் இலங்கையனாக இருந்த என்னை தமிழனாக மாற்றியநாள் இலங்கை என் தாய்நாடு என்பதை வடக்கு கிழக்கு என்றநாள் தமிழன் என்று அடையாளமிட்டு கொல்லப்படவேண்டியவனாக்கியநாள்.. இசுலாமிய சகோதரர்களின் சுயரூபத்தை நான் தரிசித்தநாள் அகப்பட்டிருந்தால் இன்று 31வது நினைவஞ்சலி நாள்............
-
- 5 replies
- 1.5k views
-
-
மலரோடு நேசம் வைக்க குருவிக்கு கற்றுத் தரத் தேவையில்லை.. நிலவோடு நேசம் வைக்க வானுக்குச் சொல்லித் தரத் தேவையில்லை.. இதழோடு நேசம் வைக்க முத்தத்துக்கு எச்சில்கள் தேவையில்லை.. சூரியனோடு நேசம் வைக்க சூரியகாந்திக்கு மின்னஞ்சல் தேவையில்லை.. தென்றலோடு நேசம் வைக்க தோப்புக்கு பேஸ்புக் தேவையில்லை.. காலத்தோடு நேசம் வைக்க வாழ்க்கைக்கு செல்போன் தேவையில்லை.. கருவோடு நேசம் வைக்க இலத்திரனுக்கு புவிஈர்ப்பு விசை தேவையில்லை.. என்னோடு நேசம் வைக்க.. மின்னணுக்களில் மின்னிய உன் காதலை அழிக்கத் தேவையில்லை.. காரணம்... உன் மின்னணுக்கள் என் உடலணுக்கள் எங்கும் நிலைபெற்று விட்டதால்..! Spoiler (யாவும் கற்பனை என்று சொல்ல முடியல்ல. பழைய மின்னஞ்சல்களை வாசித்த…
-
- 5 replies
- 1k views
-