வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
ஒரு சினிமா பாணியிலான ஒரு வெப் தொடர்தான். ஒரு காதல் கதைதான் இருந்தாலும் வாழ்க்கையோடு ஒட்டி பயணிக்கும் கதை துளி விரசம் இல்லை, பொறுப்பற்ற நண்பர்கள் இல்லை, காதல் என்பதால் வேலை வெட்டி இல்லாமலும் எதிர்கால திட்டமிடல் இல்லாமலும் நகரும் கதை அல்ல. கொஞ்சம் பழைய தொடர்தான் பலர் ஏற்கனவே பாத்திருக்கவும் கூடும் , நான் அண்மையில்தான் பார்த்தேன் சும்மா ஒரு பொழுது போக்குக்கு ஒரு பகுதி மட்டும் பார்ப்போமென்று போய் ஆர்வம் தாங்காமல் ஒட்டுமொத்தமா பார்த்து முடிச்சேன். அதில் ஓரிரு பகுதிகள். காதலர்கள் என்றால் கல்யாணத்திற்கு முன் தனியே சந்தித்தால் வெறும் டேற்றிங் மட்டும்தானா? காதலனுக்கு ஆசை ஆசையா மீன் குழம்பும் வைத்து கொடுக்கலாம், காதலி ஆசைப்பட்டால் ஒரு…
-
-
- 1 reply
- 757 views
-
-
-
என் இடுப்பை கிள்ளினார்கள்... சிவகார்த்திகேயன் ரெமோ ரகசியம். சென்னை: என்னை நிஜ கதாநாயகி என்று நினைத்து படப்பிடிப்பு தளத்தில் என் இடுப்பை கிள்ளினார்கள் என்று நடிகர் சிவகார்த்திக்கேயன் கூறியுள்ளார். ரெமோ படத்தில் சிவகார்த்திக்கேயன் மூன்று வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இதில் அழகு தேவதையாக காட்சி தருகிறார் சிவகார்த்திக்கேயன். அழகாக கதாநாயகி கீர்த்தி சுரேஷை விட சிவகார்த்திக்கேயன்தான் அழகாக இருக்கிறார். பெண்ணாக நடிக்கும் போது படப்பிடிப்பு தளத்தில் அனுபவம் எப்படி இருந்தது என்று போஸ்டர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தொகுப்பாளினி கேட்டார். சூட்டிங் முடிந்து எப்படி வந்திருக்கிறது என்று மானிட்டர் பார்த்துக்கொண்டிருக்…
-
- 1 reply
- 471 views
-
-
-
சமந்தா விவாகரத்து: 'நாக சைதன்யாவும் நானும் இனி கணவன் - மனைவி இல்லை' 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@SAMANTHAPRABHUOFFL படக்குறிப்பு, சமந்தா - நாக சைதன்யா. நடிகை சமந்தா மற்றும் அவரது கணவர் அக்கினேனி நாக சைதன்யா ஆகிய இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்துள்ளனர். சமந்தா- நாக சைதன்யா விவாவகரத்து செய்திகள் வெளிவரத் தொடங்கிய போது, இது குறித்து இருவருமே எதுவும் சொல்லவில்லை. வதந்தி என மட்டுமே இதற்கான பதிலாக சமூக வலைத்தளங்களிலும், சமீபத்திய சில பேட்டிகளிலும் தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில், இன்னும் சில நாள…
-
- 1 reply
- 791 views
- 1 follower
-
-
குடும்ப நல நீதிமன்றத்தில் தனது வழக்கில் வக்கீல் வைத்து வாதாட அனுமதி தர வேண்டும் என செனனை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் பிரஷாந்த்தின் மனைவி கிரகலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டு பிரஷாந்திற்கும், கிரகலட்சுமிக்கும் திருமணம் நடந்தது. குழந்தை பெற்றுக் கொள்ள தாய் வீட்டுக்குச் சென்ற கிரகலட்சுமி மீண்டும் பிரஷாந்த் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் பிரஷாந்த். இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பிரஷாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை வரதட்சணை கொடுமை செய்வதாக கிரகலட்சுமி திடீரென போலீஸில் புகார் கொடுத்தார். அதன…
-
- 1 reply
- 1.1k views
-
-
முதல் பார்வை: சிலுக்குவார்பட்டி சிங்கம் உதிரன்சென்னை காவல் ஆணையரின் என்கவுன்ட்டர் குறியிலிருந்து தப்பிய ரவுடி சாதாரண கான்ஸ்டபிளிடம் சிக்கி அவஸ்தைப்பட்டால் அதுவே 'சிலுக்குவார்பட்டி சிங்கம்'. காவல்துறைக்குத் தொடர் தொல்லைகள் தரும் சைக்கிள் ஷங்கரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லத் திட்டமிடுகிறார் காவல் ஆணையர் நரேன். ஆனால், அதிலிருந்து தப்பிக்கும் சைக்கிள் ஷங்கர் (ரவிஷங்கர்) அடையாளம் மறைத்து தலைமறைவு ஆகிறார். முன்னாள் அமைச்சரைக் கொல்ல இந்நாள் அமைச்சர் ஒருவர் சைக்கிள் ஷங்கரிடம் அசைன்மென்ட் கொடுக்கிறார். அதை முடிப்பதற்காகச் செல்லும் சைக்கிள் ஷங்கர் ஒரு நாள் இரவு போலீஸ் காவலில் இருக்க நேரிடுகிறது. அதற்குப் பிறகு தன் அடியாட்களால் காவல் நிலையத்திலிருந்து தப்பும் சைக…
-
- 1 reply
- 633 views
-
-
சொந்தக்காலில் நின்று சாதனை படைத்த சுவிஸ் இளைஞருக்கு திரைப்பட நடிகர் வஸந்த் வாழ்த்து.. சுவிற்சலாந்து ஜே.ஆர்.மீடியா வேக்ஸ் வழங்கிய ஆயிரம் நிலவு உன்னிடம் கண்டேன் என்ற திரைப்படம் கடந்த 10.09.2011 சனிக்கிழமையன்று சுவிற்சலாந்தில் வெளியிடப்பட்டது. இத்திரைப்பட வெளியீட்டு விழா ஆடல் பாடலுடன் அமர்க்களமாக நடைபெற்றது. டென்மார்க்கில் இருந்து திரைப்பட நடிகர் வஸந்த் நேரடியாக கலந்து கொண்டு சாதனை படைத்து வரும் சுவிஸ் இளம் கலைஞர்களை வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களும் காணொளியும் கீழே தரப்பட்டுள்ளன. திரைப்படத்தைப் பார்த்து அனைவரும் பாராட்டியுள்ளார்கள். இந்தத் திரைப்படம் சுவிற்சலாந்தில் இருந்து உலக மக்களுக்கு ஓர் உன்னதக் குரலாக இருக்கிறது.. தொடர்கின்றன சுவிஸ் இளையோரின் சாதன…
-
- 1 reply
- 723 views
-
-
தணிக்கை மற்றும் கருத்துச் சுதந்திரம்: கலையும் அரசியலும் யமுனா ராஜேந்திரன் இன்றைய தகவல் தொழில்நுட்ப, இணைய, உலகவயமாதல் உலகில் ஒரு குறிப்பிட்ட கலைப்படைப்பிற்கு அல்லது திரைப்படத்திற்கு முற்றிலுமான தடை என்பது நடைமுறையில் சாத்தியம் என்பது இல்லை. ஒரு குறிப்பிட்ட நாடு தனது எல்லைக்குள் தடை செய்யலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிலுள்ள நாட்டின் அதிகாரத்தை எதிர்த்துப் போராடும் அமைப்பு தனது அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தடைசெய்யலாம். ஒரு படைப்பாளி தனது படைப்பை தானே முடக்கிக் கொள்வது அல்லது அழித்துவிடுவது அல்லாது இந்த உலகில் ஒரு கலைப்படைப்பை அல்லது திரைப்படத்தைத் தடைசெய்ய முடியாது. பிரதி செய்யும் மின்னணுத் தொழில்நுட்பமும் வலைப்பின்னலான இணையமும், நாடுகள்-பிரதேசங்களின் எ…
-
- 1 reply
- 487 views
-
-
பத்த வச்சிட்டீயே பரட்டை’ன்னு புலம்பினாலும் தப்பில்லை. இந்த விஷயம் கொஞ்சம் கவனமாக சிந்திக்க வேண்டிய விஷயம்தான். மும்பைக்கு போன ரஜினி, பால்தாக்கரேவை சந்தித்துவிட்டு திரும்பியிருந்தால் கூட பிரச்சனை இல்லை. “அவர் எனக்கு கடவுள் போன்றவர்” என்றொரு முத்தை உதிர்த்திருக்கிறார். இதையடுத்து ரஜினியின் இனப்பற்று குறித்து மீண்டும் விவாதிக்க ஆரம்பித்திருக்கிறது உணர்வாளர்கள் வட்டாரம். உலக தமிழர் பேரவையின் தலைவர் ஜனார்த்தனன் ரஜினியின் இந்த பேச்சு குறித்து ஆவேசப்பட்டிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது- பால்தாக்கரே தாராவியில் தமிழர்களை விரட்டியது இருக்கட்டும். அவரால் தமிழ்சினிமாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ரஜினிக்கு தெரியுமா? 1969 ல் பி.எஸ்.வீரப்பா தமிழில் எடுத்த ஆலயமணி படத்தை இந்த…
-
- 1 reply
- 863 views
-
-
தள்ளாடும் காவலன் வெள்ளி, 31 டிசம்பர் 2010( 13:47 IST ) ஈழத் தமிழர்களின் எதிர்ப்பு, ஆளும் அதிகாரத்தின் ஓர வஞ்சனை, திரையரங்கு உரிமையாளர்களின் கோபம் என பல்முனை தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது விஜய்யின் காவலன். பொங்கலுக்கு எப்படியும் படத்தை வெளியிடுவது என உறுதியாக உள்ளது தயாரிப்பாளர் தரப்பு. அம்மாவின் ஆசிர்வாதத்தையும் விஜய்யின் தந்தை நேரில் சென்று பெற்றிருக்கிறார். ஆனாலும் காவலனின் நிலை இன்னும் தள்ளாட்டத்தில்தான் உள்ளது. பொங்கலுக்கு வெளிவரும் ஆடுகளம், சிறுத்தைப் படங்களின் மீதுதான் திரையரங்கு உரிமையாளர்களின் கவனம் உள்ளது. இதன் காரணமாக விஜய் படங்களை விரும்பி திரையிடும் திரையரங்குகளும் காவலனுக்கு முகத்தை திருப்பிக் கொண்டுள்ளன. பொதுவாக விஜய் படங்கள் …
-
- 1 reply
- 1.3k views
-
-
கஜினிகாந்த் திரை விமர்சனம் கஜினிகாந்த் திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் அடல்ட் கதை மூலம் தொடர்ந்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர் சந்தோஷ். எனக்கும் பேமிலி படம் எடுக்கவரும் என்று ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி சந்தோஷ் எடுத்திருக்கும் படம் தான் கஜினிகாந்த். சந்தோஷ் தன்னை நிரூபிக்கும் இடத்தில் இருக்க, ஆர்யாவோ ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றார், இருவரின் குறிக்கோளும் வெற்றிப்பெற்றதா? பார்ப்போம். கதைக்களம் தர்மத்தின் தலைவன் படம் பார்க்கும் போது ஆர்யா பிறக்கின்றார். அதன் காரணமாக என்னவோ ஆர்யாவிற்கு மறதி கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது. …
-
- 1 reply
- 1.1k views
-
-
நடிகர் , இயக்குனர் என்ற பல திறமைகளைக் கொண்டவர்தான் பார்த்திபன். இப்பொழுது பார்த்திபன் தனது புதிய பாதை திரைப்படத்தை ரீமேக் செய்யவுள்ளாராம். எண்பதுகளின் இறுதியில் பார்த்திபன் முதலில் இயக்கிய திரைப்படம் புதியபாதை. அந்தக் காலத்தில் புதிய கதைக்களம், புதிய ஹீரோயிஸம் என்று உருவாக்கப்பட்டு வெற்றிபெற்ற திரைப்படம் என்பதோடு, சிறந்ந திரைப்படத்திற்கான தேசியவிருதையும், சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை மனோரம்மாவிற்கும் பெற்றுக்கொடுத்தது இந்த புதிய பாதை. அதேவேளை இதில் பார்த்திபன் , சீதா ஜோடிப் பொருத்தம் , மற்றும் சந்திரபோஸின் இசை என்பன பேசப்பட்டன. இதனோடு பார்திபன், சீதா நிஜ ஜோடியாகியதும் குறிப்பிடத்தக்கது. இப்போது இருபது வருடங்களுக்குப் பின்னதாக அதனை ரீமேக் செய்யவுள்ளாராம் பார்த்திபன…
-
- 1 reply
- 1.1k views
-
-
அருமையான நாள்: நயன்தாராவுடனான புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்! கடவுளின் அருளால் அருமையான கிறிஸ்துமஸ் தினம் அமைந்ததாக இயக்குநர் விக்னேஷ் சிவன் ட்வீட் செய்துள்ளார். தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி ஜோடியாக 'நானும் ரெளடிதான்' என்ற படத்தில் நடித்தார் நயன்தாரா. அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். இதனையடுத்து, நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன. நானும் ரெளடிதான் படப்பிடிப்பின் இறுதி நாளில் படக்குழுவினர் செல்பி புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். அப்போது விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகிய இரு…
-
- 1 reply
- 312 views
-
-
நல்லவனாக இருப்பதால் எனக்கு இடையூறு செய்கிறார்கள் : கமல்ஹாசன் ஸ்பெஷல் பேட்டி உச்சி வெயில் மண்டையைப் பிளக்க நிருபர்களை தனது ‘உத்தம வில்லன்’ படத்துக்காக சந்தித்தார் நடிகர் கமல். ‘உத்தம வில்லன்’ எப்படிப்பட்ட படம்? கே.பாலச்சந்தர் உடனான நினைவுகள், லிங்கா பிரச்சனையில் ரஜினி நடந்து கொண்ட விதம் என பல விஷயங்களை மனம் திறந்து பேசிய கமல் சென்சார் போர்டின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்க வகையில் இருக்கிறது என்று ஆதங்கப்பட்டார். இதோ இனி கமல் உங்களோடு பேசுவார் ‘உத்தம வில்லன்’ உங்களுடைய சொந்தக் கதையா? இதில் யார் உத்தமன் யார் வில்லன்? இது ஒரு நட்சத்திர நடிகனின் கதை. என்னுடைய எல்லா படங்களிலும் எனது வாழ்க்கையின் ஒரு சிறு பகுதி இருக்கும். ஜெயகாந்தன் எழுதிய எல்லா கதைகளிலும் அ…
-
- 1 reply
- 1.8k views
-
-
'டோலாரே...' பாடலைத் தொடுமா பிங்கா? (வீடியோக்கள் இணைப்பு) சமீபத்தில் வெளியான பஜிராவோ மஸ்தாணி படத்தின் பிங்கா பாடல், தேவ்தாஸ் படத்தின் 'டோலாரே...' பாடலின் சாதனையை முறியடிக்குமா?- இதுதான் பாலிவுட் ரசிகர்களின் தற்போதைய பரபர விவாதம். சரி இரண்டில் எது சிறப்பானது என்பது குறித்த ஒரு சின்ன அலசல்... 2002ல் வெளியான மெகா ஹிட் படம் தேவ்தாஸ். இப்படத்தின் காஸ்டியூம், மேக்கிங் என பல விஷயங்கள் பலராலும் பேசப்பட்டது. இப்படத்தின் பாடல்கள் தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயம். அதிலும் மாதுரி தீட்ஷித்தும், ஐஸ்வர்யா ராயும் நடனம் ஆடும் 'டோலாரே...' பாடல் பள்ளி, கல்லூரிகளின் கலைநிகழ்ச்சிகளில் இப்போது வரை இடம்பிடிப்பதை யாராலும் மறுக்க முடியாது. அதே பாணிய…
-
- 1 reply
- 692 views
-
-
அதென்னவோ தெரியவில்லை, தாயா புள்ளையா பழகுன நடிகைங்க எல்லாம் இப்போ நாயா புள்ளையா பழக ஆரம்பிச்சிருக்காங்க. இந்திய நாய்களை அநாதையா விட்றாதீங்க. நம்மள விட்டா அதுங்களுக்கு யாரு இருக்கான்னு பிரச்சார பீரங்கி மாதிரி கேள்விகளை அடுக்க ஆரம்பித்திருக்கிறார் த்ரிஷா. வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்னு அரசாங்கம் சொல்லுது. வீட்டுக்கொரு நாய் வளருங்க என்கிறார் த்ரிஷா. த்ரிஷாவின் கருணை அப்படியென்றால், ரம்பாவின் கருணை இன்னும் அடர்த்தி. ஹனிமூனுக்கு போய்விட்டு சென்னை திரும்பியவருக்கு பலத்த சந்தோஷம். இவரது சென்னை வீட்டு நாய் ஒன்பது குட்டிகளை போட்டிருக்கிறதாம். புள்ளத்தாய்ச்சி நாய்க்கு எண்ணைய் தேய்ச்சு குளிப்பாட்டாத குறையாக அக்கறை காட்டுகிறார் ரம்பா. இங்க மட்டுமில்ல... புகுந்த வீடான கனடாவ…
-
- 1 reply
- 997 views
-
-
''நாப்கினை மறைக்கத் தேவையில்லை!'' - பாலிவுட்டில் பரபரக்கும் பேட்மேன் சேலஞ்ச் #PadManChallenge பாலிவுட்டில் ’பத்மாவத்’ திரைப்படத்துக்கு அடுத்து பரபரப்பாகப் பேசப்படும் திரைப்படம், ‘பேட்மேன்’. பாலிவுட்டின் ஆக்ஷன் கிங் அக்ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் நடித்துள்ள இந்தத் திரைப்படம் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகிறது. பெண்களுக்குக் குறைந்த செலவில் நாப்கின்கள் தயாரித்த கோயம்பத்தூரைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் வாழ்க்கைக் கதையைப் பேசுகிறது இந்தத் திரைப்படம். ''இந்தப் படம் மாதவிடாய் குறித்து சமூகத்தில் நிலவும் பல கற்பிதங்களை உடைக்கும் வகையில் இருக்கும்'' என்று அக்ஷய் குமார் தெரிவித்திருக்கிறார். திரைப்படத்தைப் பல வகை…
-
- 1 reply
- 305 views
-
-
படப்பிடிப்பு தளத்தில் பிரபல நடிகை துனிஷா சர்மா தற்கொலை? By NANTHINI 25 DEC, 2022 | 11:06 AM படப்பிடிப்பின் இடைவெளியில் மேக்கப் ரூமில் தூக்கில் தொங்கிய நிலையில் பிரபல நடிகை துனிஷா சர்மா தற்கொலை செய்துகொண்டுள்ளதாக இந்திய செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன. பொலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பவர் துனிஷா சர்மா (20). அதிகமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் இவர், தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டி வருகிறார். மும்பை அருகில் உள்ள வசாய் நைகாவ் ராம்தேவ் ஸ்டூடியோவில் நேற்று சனிக்கிழமை (டிச. 24) டிவி நிகழ்ச்சியொன்றின் படப்பிடிப்பில் துனிஷா சர்மா கலந்துகொண்டார்.…
-
- 1 reply
- 283 views
- 1 follower
-
-
அந்தி சாய்ந்தது 'இது ஒரு பொன்மாலைப் பொழுது'வைரமுத்துவின் முதல் திரையிசைப் பாடலான, "இது ஒரு பொன் மாலைப் பொழுது" பாடலை மீட்டும்போதெல்லாம் நிழல்கள் நாயகன், ராஜசேகர் மனத்திரையில் வந்துபோவார்.ஒரு மெல்லிய வயலின் இசையைத்தொடர்ந்து வரும், "வானம் எனக்கொரு போதிமரம் நாளும் எனக்கது சேதி தரும் ஒருநாள் உலகம் நீதிபெறும் திருநாள் மலரும் சேதிவரும் கேள்விகளால் வேள்விகளை நான் வெல்வேன்" என்ற பாடல் வரிகளை பலமுறை திரும்பத் திரும்ப கேட்ட ஞாபகம். வைரமுத்துவையும் ராஜசேகரையும் அறிமுகமாக்கிய இந்த பாடலை ரசிக்காத உள்ளங்களே தமிழ்ச் சமுதாயத்தில் இருக்கமுடியாது. இன்று ராஜசேகர் யார் என்று கேட்டால் சரவணன் மீனாட்சி சீரியலின் நடிகர் என சொல்லும் இளம் மட்டத்துக்கு, நிழல்கள் படத்தின்பின் இயக்குநர் ரா…
-
- 1 reply
- 1.1k views
-
-
தாரை தப்பட்டை: காட்சிகளின் வன்முறை சுகுமாரன் 'சேது’ (1999)வைத் தவிர இயக்குநர் பாலாவின் எந்தப் படத்தையும் தனிப்படமாக எடுத்துக் கொண்டு அந்தக் குறிப்பிட்ட படத்தைப் பற்றி மட்டுமே பேசுவது சற்றுச் சிரமமானது. அவரது சமீபத்திய படமான ‘தாரை தப்பட்டை’யும் பார்வையாளனுக்கு நேரும் இந்த இக்கட்டிலிருந்து விடுபட்டதல்ல. புதிய படத்தைப் பார்க்கும்போது அவரது முந்தைய படங்கள் நினைவுக்கு வந்துவிடுகின்றன. முந்தைய படங்களின் சாயல் புதிய படத்தை ரசிக்கவிடாத வகையில் நிழலாடுகின்றன. கதை அமைப்பு, காட்சி நகர்வு, கதாபாத்திரச் சித்திரிப்பு உட்படப் பல அம்சங்களிலும் பழைய ஏதேனும் படத்தை நினைவுறுத்துகின்றன. ‘தாரை தப்பட்டை’யிலும் இந்த சங்கடத்தைப் பார்வையாளன் உணர்கிறான். இதன்…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஓவியா - சிம்புவின் ’மரண மட்ட' பாடல்! சிம்பு - ஓவியா இணைந்து, புத்தாண்டு ஸ்பெஷல் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். சிம்பு இசையமைத்திருக்கும் இந்த புத்தாண்டுப் பாடலை ஓவியா மற்றும் ஹரிஷ் பாடியுள்ளனர். இப்பாடலின் வரிகளை சிம்பு, மிர்ச்சி விஜய் இணைந்து எழுதியுள்ளனர். இப்பாடலுக்கு ’மரண மட்ட' என்று தலைப்பு கொடுத்துள்ளார் சிம்பு! https://www.vikatan.com/news/cinema/112386-oviya-simbus-newyear-album.html
-
- 1 reply
- 288 views
-
-
ஒரு படத்தின் பாடல் வெளியீட்டுக்கு வந்துவிட்டு மீடியாக்காரர்களுக்கு திடீரென முத்தம் கொடுத்த நடிகை சார்மி குறித்துதான் தற்போது ஆந்திர படவுலகம் முழுவதும் பேச்சு. என்ற படத்தின் பாடல் வெளியீட்டுக்கு வந்த நடிகை சார்மி, மேடையில் ஏறினதும் திடீரென மீடியாக்காரர்கள் பக்கம் திரும்பி, பறக்கும் முத்தத்தை கொடுத்தார். சிறிது நேரம் மீடியா நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தான் மீடியா நபர்களை மிகவும் விரும்புவதாகவும், அவர்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருப்பதாகவும் கூறிய சார்மி, மீடியாவின் தயவில்தான் தான் இவ்வளவு பெரிய நடிகையாக உயர்ந்ததாகவும் குறிப்பிட்டார். நடிகை சார்மி நடித்த நான்கு படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே மீடியாவின் கடுமையான விமர்சனம்தான். இ…
-
- 1 reply
- 663 views
-
-
சினிமா விமர்சனம்: இருட்டு அறையில் முரட்டு குத்து இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நடிகர்கள் கௌதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, ஷா ரா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், ஜான் விஜய், மதுமிதா இசை பாலமுரளி பாலு …
-
- 1 reply
- 3.2k views
-
-
நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ளது. கால்பந்து அளவுக்கு பிரபலமானதல்ல கிரிக்கெட். ஆயினும் இங்கிலாந்து மற்றும் அதன் காலனியாதிக்கத்தில் இருந்த நாடுகளில் கால்பந்தை விட கிரிக்கெட்டிற்கே மதிப்பு அதிகம். இந்தியா கிரிக்கெட் விளையாடும் தினங்களில் சாலைகள் வெறிச்சோடி விடும். முக்கியமாக திரையரங்குகள். பார்வையாளர்களை கிரிக்கெட் ஈர்த்துக் கொள்வதால் திரையரங்குகள் காற்று வாங்கும். உலக கோப்பை கிரிக்கெட் நடைபெறும் காலத்தில் திரையரங்கை கிரிக்கெட் ஒளிபரப்பும் அரங்கமாக மாற்றிய நிகழ்வுகள் இந்தியாவில் நடந்ததுண்டு. ஜனங்களின் இந்த கிரிக்கெட் பீவர் திரையுலகிலும் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக பட வெ…
-
- 1 reply
- 1.1k views
-