வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5563 topics in this forum
-
ரோமானிய அழகி லூலியாவை மணக்கவிருக்கிறார் சல்மான்கான். பாலிவுட்டில் 48 வயதை தொட்டாலும் இன்னும் பெண்களின் கனவு நாயகனாகவே வலம் வருகிறார் சல்மான்கான். இந்நிலையில் ரோமானிய அழகி லூலியா வந்தூருக்கும், சல்மான் கானுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வெளியானது. இருவரும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் லூலியாவை திருமணம் செய்து கொள்ள சல்மான்கான் திட்டமிட்டு உள்ளார். இதனை சமீபத்திய பேட்டியொன்றில் மறைமுகமாக குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது, என் வாழ்க்கை இப்போது திடீர் பிரகாசமாகியுள்ளது. 15 வயதில் இருந்து இது போன்ற கால கட்டம் எனக்கு அமைந்தது இல்லை. முதல் தடவையாக இந்த மாற்றத்தை அனுபவிக்கிறேன். விரைவில் என் வாழ்வில் நல்ல விடயம் ஒன்று ந…
-
- 0 replies
- 607 views
-
-
கடவுள் தந்த துப்பாக்கியும் ஒரு மோதிரமும் - யமுனா ராஜேந்திரன் - மேற்கத்திய சமூகத்தின் இயந்திர கதியிலான வாழ்வைப் பின்புலமாகக் கொண்டு இளைஞர்களிடத்திலும் யுவதிகளிடத்திலும் தோன்றியிருக்கும் வன்முறையைக் கொண்டாடும் அன்றாடக் கொலை உணர்வை தனது படங்களில் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார் ஆஸ்திரியத் திரைப்படக் கலைஞனான மைக்கேல் ஹெனக்கே. வியட்நாமிலிருந்து அமெரிக்கா வெளியேறியதன் பின், அமெரிக்கப் படைப்பணியினைக்; கடந்தகாலமாகக் கொண்ட ஒரு தலைமுறையின் உளச்சிதைவையும் குற்ற உணர்வையும் தற்கொலை மனப்பான்மைiயுயும் அவர்தம் அன்றாட வாழ்வில் இடம்பெறும் வன்முறையையும் தனது படங்களின் பேசுபொருளாகக் கொண்டு கணிசமான படங்களை உருவாக்கினார் அமெரிக்க இயக்குனரான ஆலிவர் ஸ்டோன். கடந்த முப்பதாண்டு கால ஆயுத விடு…
-
- 0 replies
- 391 views
-
-
நேற்று நடந்த மலேசியா விமான விபத்தில் நடிகை நமீதா இறந்து விட்டதாக இணையதளங்களில் செய்திகள் கசிந்தன. இதனால் நமீதா, நான் அதிர்ஷ்டவசமாக விமான விபத்தில் இருந்து தப்பிவிட்டேன் என உருக்கமான தகவலை வெளியிட்டுள்ளார். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சென்று அங்குள்ள தமிழ் மக்களுடன் கொண்டாட வேண்டும் என இரண்டு மாதங்களுக்கு முன்கூட்டியே அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பை ஏற்று நான் மலேசியா செல்ல முதலில் திட்டமிட்டேன். ஆனால் எனது அரசியல் பணிகள் என்னை மலேசியா செல்ல அனுமதிக்கவில்லை. என்னை மலேசியா செல்லவிடாமல் தமிழகத்தில் கட்சி பணியாற்ற சொன்ன மச்சானுக்குதான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். அவர் அப்படி தடுக்கவில்லை என்றால் சீனாவில் உள்ள தமிழ் எப்.எம்-இல் உலக மகளிர் …
-
- 1 reply
- 867 views
-
-
சென்னை: ரஜினிகாந்தின் கோச்சடையான் பட இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இளைய மகள் சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் கோச்சடையான். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸில் இன்று சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், ஜாக்கி ஷ்ராப், நாயகி தீபிகா படுகோனே, இயக்குனர்கள் கே. பாலசந்தர், எஸ்.பி. முத்துராமன், ஷங்கர், கே.எஸ். ரவிக்குமார், இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான், தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ரசிகர்கள் சத்யம் சினிமாஸுக்கு வந்த ரஜினியை பார்க்க அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள…
-
- 0 replies
- 726 views
-
-
ரஜினியை வைத்து ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் புதிய படத்தின் கதாநாயகியாக அனுஷ்கா நடிப்பார் எனத் தெரிய வந்துள்ளது. கோச்சடையானுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் புதிய படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்குவார் என்றும், கன்னட - தமிழ் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பார் என்றும் கூறப்படுகிறது. கோச்சடையான் விழாவில் இந்தப் புதிய படம் குறித்து இன்னும் சில தினங்களில் நடக்கவிருக்கும் கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்ற எதிர்ப்பார்ப்பும் ஆரம்பித்துவிட்டது. இந்தப் படத்தில் அனுஷ்கா நாயகியாக நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அனுஷ்கா ஏற்கெனவே ரஜினிக்க…
-
- 11 replies
- 960 views
-
-
சென்னை: கோச்சடையான் படத்துடன் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடவா என இயக்குநர் கே பாக்யராஜிடம் கருத்து கேட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி. கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேல் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த்தான். அவர் படங்களின் வர்த்தகம் உலகளாவியது. தமிழ் சினிமா வர்த்தகத்தை உலக அளவில் சந்தைப்படுத்த காரணமாக இருந்தவரும் ரஜினிதான். ஆனால் அவரோ தனக்கு இருக்கும் செல்வாக்கை வசூலாக மாற்றுவதிலோ... அரசியலாக்குவதிலோ ஆர்வம் காட்டுவதில்லை. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம்தான் நடிக்கிறார். பதவி வாய்ப்புகள் எதையும் ஏற்பதும் இல்லை. பாபா படத்தின் போதே சினிமாவில் நடிப்பதைத் தொடர்வதா என்ற கேள்வியும் அவருக்கு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. பாபா படம் வெளியானபோதே க…
-
- 4 replies
- 791 views
-
-
சென்னை: உடல்நலக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த காமெடி நடிகர் பாலாஜி இன்று காலை திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 43. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலாஜி. இதனால் இவரை லொள்ளு சபா பாலாஜி என்று அழைக்கப்பட்டார். இவர். சிலம்பாட்டம், திண்டுக்கல் சாராதி உள்பட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிவா நடித்த தில்லு முல்லு படத்துக்கு காமெடி வசனம் இவர் தான் எழுதினார் சமீபகாலமாக மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த பாலாஜி, அதற்காக சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவரது உடல்நிலை மோசமானது. அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாலாஜி சிகிச்சைப் பலனின்றி காலை 8 மணி சுமாருக்கு …
-
- 13 replies
- 1.1k views
-
-
சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகி வரும் ‘கோச்சடையான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கவிஞர் வைரமுத்து 7 பாடல்களை எழுதியிருக்கிறார். அதில் சிவனை நோக்கி தவமிருந்த ‘கோச்சடை யான்’ ஆடும் ருத்திர தாண்டவ பாடல் ஒன்றும் அடங்கும். ‘கோச்சடையான்’ என்றொரு படைத் தலைவன். அவன் ஒரு ஞான குருவும்கூட. தீவிர சிவ பக்தன். போர் முடித்துவிட்டு ருத்திர தாண்டவம் ஆடுகிறான். அந்த ருத்திர தாண்டவம் அவ்வளவு அழகாக படமாகி உள்ளது, என்கிறார் கவிஞர் வைரமுத்து. இந்தப் படத்தின் ரஜினியின் ருத்திர தாண்டவம் தனி சிறப்பாக அமையும். இந்த ஆடலுக்கு இசை மட்டும் இருந்தால் போதும் என்று முதலில் முடிவு எடுத்தார்கள். நீ…
-
- 1 reply
- 936 views
-
-
86வது ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு! லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகத் திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உலக திரைப்படங்களில், சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து அதற்காக ஆஸ்கார் விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 86வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது. இந்த விழாவில் உலக திரைப்பட பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் பெருமளவில் கலந்து கொண்டுள்ளனர். அமெரிக்காவின் 'டல்லாஸ் பையர்ஸ் கிளப்' படத்துக்காக ஜார்டு லெடோவுக்கு சிறந்த துணை நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருது, கேத்தரின் மார்ட்டினுக்கு 'தி கிரேட் கேட்ஸ்பை" படத்த…
-
- 2 replies
- 853 views
-
-
நம்ம சினிமாக்கள் என்னதான் ஒரு பக்கம் டெவலப் ஆகிட்டே போனாலும் சில நேரங்கள்ல 'சி’ சென்டர் ஆடியன்ஸே ஈஸியாக் கண்டுபிடிச்சுக் கலாய்க்கிற மாதிரியான காட்சிகளை, இன்னமும் நம்ம டைரக்டர்ஸ் திரைக்கதைகளில் கோட்டை விட்டுக்கிட்டுத்தான் இருக்காங்க. இதெல்லாம் பாத்தா கண்ணு வேர்க்குது. சில சாம்பிள்ஸ் நீங்களே பாருங்க. உங்களுக்கும் கண்ணு வேர்க்கும். 'எந்திரன்’ படத்துல ஒரு காட்சி. எலெக்ட்ரிக் ட்ரெயின்ல ஐஸ்வர்யாராயைச் சீண்டுகிற ரவுடிகளை அடிச்சுத் துவம்சம் பண்ற நம்ம 'ரோபோ’ ரஜினி பேட்டரி சார்ஜ் இல்லாம கீழே விழுந்துடுறாரு. அங்கே ஒரு எலக்ட்ரிக் போஸ்ட்டுக்குள்ளே கையை விடுறாரு. ('படையப்பா’ படத்தில் பாம்புப் புற்றுக்குள்ளேயே கையை விட்டவராச்சே) அப்படியே அதில் கிடக்கிற வயரை எடுத்து ப்ளக் பண்ணி சார்ஜ…
-
- 0 replies
- 571 views
-
-
-
- 0 replies
- 439 views
-
-
-
- 0 replies
- 437 views
-
-
பிரபல அமலா பால் தனது செல்லபிராணியான நாய்க் குட்டியை கட்டி பிடித்து தூங்குவதை பழக்கமாக கொண்டிருக்கிறார். நடிகைகள் பலர், தங்கள் வீட்டில் நாய், பூனை, பறவை உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்த்து வருவது வழக்கம். படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் அவர்களுடைய பொழுது போக்கே இந்த செல்லப் பிராணிகள்தான். அதனுடன் கொஞ்சி விளையாடி மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் செல்லப் பிராணிகளுக்காக பிரத்யேக ஏசி ரூம் என்று ஆயிரக்கணக்கிலும் செலவு செய்கின்றனர். நடிகை அமலா பால் தனது செல்லப் பிராணியாக நாய்க் குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார். உறங்கும்போது இந்த நாய்க் குட்டியை அருகிலேயே படுக்க வைத்துக்கொள்வதுடன் அதை கட்டிப்பிடித்துதான் கண்ணே அசருகிறார். அதுமட்டுமில்லங்க, அந்த நாய்க் க…
-
- 4 replies
- 629 views
-
-
ஈழத்தமிழர்களின் படைப்பில் நாளையதினம் (28/02/2014) லண்டன் திரையரங்கில் வெளியாகும் “சிவசேனை” புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் ஈழத்தமிழ் இளைஞர்களின் படைப்புக்கள் அதிகளவில் ஐரோப்பிய நாடுகளில் வெளிவரத் தொடங்கியுள்ளன.அந்தவகையில் ஈழத்தமிழர்களின் அடுத்த முயற்சியில் வெளிவந்த “சிவசேனை” என்ற திரைப்படம் லண்டனிலுள்ள திரையரங்குகளில் நாளையதினம் (28/02/2014) திரையிடப்படவுள்ளது. லண்டனில் படமாக்கப்பட்ட இத்திரைப்படத்தில், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினையினை வெளிக்காட்டியிருக்கின்றனர் ஈழத்தமிழ் இளைஞர்கள். இந்தப் படத்தில் சுஜித், தர்ஷியா, அனுசுயா ஆகியோருடன் ஜூட் தர்ஷன், அகிலா, இந்து, ஜான்சன், ராஜமோகன், ஜெய், ஜுதன் ஸ்ரீ, கிருஷாந்தி, ரோகினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். …
-
- 0 replies
- 571 views
-
-
அனைவரும் எதிர்பார்த்துள்ள ”பனி விழும் மலர்வனம்” தமிழ் திரைப்படம்: - 28ம் திகதி வெள்ளிகிழமை உலகமெங்கும் வெளிவருகிறது [Wednesday, 2014-02-26 21:29:29] உலகத்தமிழர்கள் தயாரிப்பில் உருவாகி பெரும் பொருட்செலவுடனும், நவீன தொழில்நுட்ப யுத்திகளைப் பயன்படுத்தியும் தயாரிக்கப்பட்டுள்ள ”பனிவிழும் மலர்வனம்” திரைப்படம் தமிழ் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இத்திரைப்படம் எதிர் வருகின்ற 28ம் திகதி வெள்ளிகிழமை உலகமெங்கும் வெளிவரவிருக்கிறது. எமது படைப்பு வெற்றி பெறுமிடத்து எத்தனையோ எமது கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கபோகும் நிறுவனமாக CTN PRODUCTION திகழும் என்பதில் திண்ணம். பனி விழும் மலர்வனம் தமிழ் திரைப்படத்தினை பற்றியும் அதில் எம்மவர் பங்களிப்பு பற…
-
- 0 replies
- 512 views
-
-
சென்னை: நடிகை ஹன்சிகாவுடன் எனக்கு எந்த உறவுமில்லை. அவருடனான காதல் முறிந்துவிட்டது. இனி நான் தனி ஆள்... இதற்காக வருத்தப்படவில்லை, என அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் நடிகர் சிம்பு. நடிகர் சிம்புவும் ஹன்சிகாவும் அடுத்தடுத்து வாலு, வேட்டை மன்னன் படங்களில் நடித்தனர். அம்மா எதிர்ப்பு ஆனால் இந்த காதலை ஹன்சிகாவின் அம்மா மோனா மோத்வானி ஏற்கவில்லை. தன் மகளின் கேரியர் பாதிக்கும் என்று பதறிய அவர், இப்போதைக்கு இதைப் பற்றி யாரும் பேச வேண்டாம் என்று பேட்டி அளித்து வந்தார். ஆனால் சிம்புவின் தந்தை ராஜேந்தர் மகனின் காதலுக்கு ஓகே சொல்லிவிட்டார். பாண்டிராஜ் வடிவில்.. இந்த நேரம் பார்த்து இயக்குநர் பாண்டிராஜ் தன் புதுப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அவர் முன்னாள் காதலி நயன்தாராவை ஒப…
-
- 1 reply
- 810 views
-
-
கமலஹாசன் சொல்கிறார் -”போர்னோகிராபியால் தான் இன்டர்னெட் வளர்ந்தது”..!! —– ஒவ்வொரு முறை தன் படம் வெளிவரும்போதும், எதையாவது ஏறுமாறாகச் சொல்லி அல்லது செய்து, செலவில்லாமல் பப்ளிசிடி தேடும் கமல் இந்த முறையும் அதே டெக்னிக்கை கையாள்கிறார். விஸ்வரூபம் பார்ட்-2 ரெடி என்று பலமுறை தெரிவித்தும் எதிர்பார்த்த பரபரப்புகள் எதுவும் கிளம்பாத நிலையில், கமலஹாசன் பல சர்ச்சைக்கிடமான கருத்துக்களை புதிதாக ஒரு பேட்டியில் கூறி இருப்பதன் மூலம் பரபரப்பிற்கான சூழ்நிலைக்கு வித்திட்டிருக்கிறார்….! இதுவாவது அவருக்கு கை கொடுக்குமா..? Best of Luck Kamal …! நேரமில்லாதவர்களுக்கு சுருக்கமாக தலைப்புச் செய்திகள் - காந்தியும், பெரியாரும் சினிமாவுக்கு பெரும் அநீதி இழைத்து விட்டார்கள் .. …
-
- 0 replies
- 636 views
-
-
இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாற்றினை தாங்கிய போர்க்களத்தில் ஒரு பூ என்ற திரைப்படம் இயக்குனர் கணேசன் அவர்களின் இயக்கத்தில் இளையாராஜா அவர்களின் இசைஅமைப்பில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு வேதாரணியம் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா படையினர் குண்டுகளை வீசி மக்களை படுகொலை செய்த போர்க்கள காட்சிகளை பெருந்திரளான மக்களுடன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கையில் அங்கு இடம்பெற்ற விபத்தில் இயக்குனர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுருண்டு தரையில் வீழ்ந்தார் தலையில் இருந்து குருதி பெருக்கெடுத்த நிலையிலும் கையால் காயத்தை அடைத்தபடி குருதிவளிந்தோட தொடர்ந்து போர்கள காட்சியினை படம்பிடித்து…
-
- 0 replies
- 556 views
-
-
ஹைதராபாத் சிறையில்.... இளையதளபதி விஜய். சென்னை: ஹைதராபாத் சிறையில் விஜய் என்று தலைப்பை பார்த்து பயந்துவிட்டீர்களா?. அது போலி சிறை, முருகதாஸ் படப்பிடிப்புக்காக போடப்பட்ட செட். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் தீரன் படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது. கொல்கத்தாவில் ஆக்ஷன் காட்சியையும், சென்னையில் பிரமாண்டமாக ஒரு பாடல் காட்சியையும் படமாக்கினர். இதையடுத்து மூன்றாவது கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு ஹைராதாபாத் சென்றுவிட்டது. தீரன் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. ஹைதராபாத்தில் சுமார் ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடக்கிறது. படத்தில் உள்ள சிறை காட்சிகளை ராஜமுந்திரி…
-
- 1 reply
- 1.1k views
-
-
வெல்.. க்ரிஸ்டோஃபர் நோலன் பற்றிப் புதிதாகச் சொல்ல எதுவுமில்லை. அவரைப் பற்றி, ஒரு தலையணை சைஸ் புத்தகம் போடும் அளவுக்கு இண்டெர்நெட்டில் செய்திகள் கிடைக்கின்றன. சமகாலத் திரைப்பட இயக்குநர்களில், மிக முக்கியமானவராகத் தற்போது அறியப்படும் நோலன் எடுக்கும் படங்கள் அனைத்துமே, மனித மனதின் முரண்பாடுகளை முக்கிய அம்சமாகக் கொண்டிருக்கும் . ‘To be or not to be’ என்ற நிலையில், படத்தின் கதாபாத்திரங்கள் என்ன முடிவெடுக்கின்றன என்பதை வைத்தே இவரது படங்கள் எழுதப்படுகின்றன. அதனாலேயே, இவரது படங்கள் ஒவ்வொன்றும் அட்டகாசமான முறையில், நமது மனதுக்கு மிக அருகில் வந்துவிடுகின்றன. இவர் எடுத்த படங்களில், இதுவரை எனக்கு மிகப்பிடித்தமான படமாக இருந்தது, ‘த ப்ரஸ்டீஜ்’. (மெமெண்டோவும் பிடிக்கும் என்றாலும், என்னு…
-
- 0 replies
- 2k views
-
-
http://tamil.oneindia.in/movies/news/t-rajendar-family-converts-christian-193437.html அதில் ஒரு கமெண்ட் 1980 ல நான்தாண்டா மாஸு இப்போ எனக்கு புடிச்சது ஏசு எப்பவுமே புடிச்சது காசு... சிம்பு மேல போடுவாங்க அடிக்கடி கேசு இனிமே என் கிட்ட பாத்து பேசு நான் இப்போ திமூகாவில ஊறிட்டேன் லதிமுகா ஆரம்பிச்சி நாறிட்டேன் பெருமை கிடைக்க பலபேர் காலை வாரிட்டேன் கடைசியா கிறிஸ்துவத்துக்கு மாறிட்டேன் மக்களே இதை நான் தெளிவா உங்களுக்கு கூறிட்டேன் ஏ டண்டணக்கா இல்ல இல்ல ஏ அல்லேலூயா அல்லேலூயா
-
- 37 replies
- 5.6k views
-
-
'''பாலுத் தாத்தா செத்துட்டாராப்பா... நான் ரொம்பக் கவலையா இருக்கேன்...’ என்றாள் என் மகள். எல்லாம் முடிந்து, அப்போதுதான் வீடு திரும்பியிருந்தேன். 'இந்தச் சின்னப்பிள்ளைக்கு யார் இதையெல்லாம் சொன்னது?’ என்ற அதிர்ச்சி. அவளை அள்ளித் தூக்கி, 'அப்படியெல்லாம் சொல்லக் கூடாது பாப்பா. தாத்தா எங்கயும் போகல. அவரு நட்சத்திரமாகிட்டாருப்பா. வானத்துல நாம நட்சத்திரம் பார்ப்போம்ல. அப்படி தாத்தாவும் இப்ப ஸ்டாராகிட்டாருப்பா...’ என்று உடைந்துபோய் அழுதேன். அப்பனின் அழுகை புரியாமல், 'ப்பா... அழாதப்பா...’ என்று என்னைச் சமாதானப்படுத்த ஆரம்பித்தாள் பாலுத் தாத்தாவின் பேத்தி அகிலா (எ) பிரார்த்தனா. ஞானத் தகப்பன் விடைபெற்றுவிட்டான். 'அப்புக்குட்டி அப்புக்குட்டி’ எனக் கொஞ்சிக் கொஞ்சி வளர்த்த குருநாதன். …
-
- 0 replies
- 697 views
-
-
பாலுமகேந்திராவின் மறைவுக்கு வந்த அவரது இரண்டாவது மனைவியான மௌனிகாவை இயக்குனர் பாலா தடுத்து நிறுத்திய விஷயம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நாமும் விசாரணையில் இறங்கினோம். பாலுமகேந்திரா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவுடன் உடனடியாக அங்கு ஓடினார் மெளனிகா. ஆனால் அங்கிருந்த பாலாவின் உதவியாளர்களும் நண்பர்களும் அவரை பார்க்க விடாமல் தடுத்துவிட்டார்களாம். எடிசன் விருது விழாவில் சினி உலக நட்சத்திரங்களின் படங்கள் ! Celebs at Edison Awards 2014 அதற்கப்புறம் அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. மீண்டும் மௌனிகா அங்கு வருகிற தகவல் கிடைத்தது பாலாவுக்கு. உடனடியாக பாலுமகேந்திராவின் சடலம் இருக்கிற இடத்தில் ஒரு நாற்காலியை போ…
-
- 2 replies
- 990 views
-
-
இளையராஜாவின் புதல்வர் யுவன் சங்கர்ராஜா இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ளார்... (இன்னுமொரு றஹ்மானாக மாறும் எண்ணமோ?????)
-
- 100 replies
- 10.5k views
-
-