வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
நடுத்தர குடும்பத் தலைவரான நெடுமுடி வேணுக்கு, தன் ரிட்டயர்மென்ட் மூலம் கிடைத்த பணத்தில் வீடு கட்ட ஆசை. 30 லட்ச ரூபாய் கொடுத்து சென்னை புறநகர் பகுதியில் ஒரு கிரவுண்ட் நிலம் வாங்குகிறார். அதை ஆக்கிரமித்துக் கொள்ளும் ரியல் எஸ்டேட் தாதா நாசர், ரூ. 15 லட்சம் கொடுத்தால்தான் காலி செய்வேன் என்கிறார். சட்டமும், போலீசும் நாசருடன் பேசி முடிக்க கமிஷன் பேசுகிறதே தவிர, நியாயம் பேச மறுக்கிறது. மேலும் போலீஸ், ஜெயில் என்று வேணுவை அவமானப்படுத்து கிறது. வெறுத்துப்போகும் வேணு, அந்த நிலமே வேண்டாம் என்று முடிவெடுக்கிறார். ஆனால் மகன் கார்த்திக், தனது வெளிநாட்டு சாப்ட்வேர் வேலை கனவை துறந்துவிட்டு, தன் காதலி பியா பணியாற்றும் நாடக கம்பெனியுடன் இணைகிறார். நாசர், பிறரை ஏமாற்றி நிலம் பறிக்கும் அ…
-
- 0 replies
- 801 views
-
-
சந்திரபோஸ் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டார். அதற்காக, அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 24ம்தேதி அவருடைய உடல்நிலை மோசமானதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். மேலதிக புகைப்படங்கள் பார்க்கவும்
-
- 1 reply
- 801 views
-
-
சென்னை: நடிகை ஹன்சிகாவுடன் எனக்கு எந்த உறவுமில்லை. அவருடனான காதல் முறிந்துவிட்டது. இனி நான் தனி ஆள்... இதற்காக வருத்தப்படவில்லை, என அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் நடிகர் சிம்பு. நடிகர் சிம்புவும் ஹன்சிகாவும் அடுத்தடுத்து வாலு, வேட்டை மன்னன் படங்களில் நடித்தனர். அம்மா எதிர்ப்பு ஆனால் இந்த காதலை ஹன்சிகாவின் அம்மா மோனா மோத்வானி ஏற்கவில்லை. தன் மகளின் கேரியர் பாதிக்கும் என்று பதறிய அவர், இப்போதைக்கு இதைப் பற்றி யாரும் பேச வேண்டாம் என்று பேட்டி அளித்து வந்தார். ஆனால் சிம்புவின் தந்தை ராஜேந்தர் மகனின் காதலுக்கு ஓகே சொல்லிவிட்டார். பாண்டிராஜ் வடிவில்.. இந்த நேரம் பார்த்து இயக்குநர் பாண்டிராஜ் தன் புதுப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அவர் முன்னாள் காதலி நயன்தாராவை ஒப…
-
- 1 reply
- 801 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,VHOUSEPRODUCTIONS நடிகர்கள்: சிம்பு, எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய்.ஜி. மகேந்திரன், வாகை சந்திரசேகர், கருணாகரன், ப்ரேம்ஜி அமரன், அஞ்சனா கீர்த்தி, மனோஜ் பாரதிராஜா, உதயா, அரவிந்த் ஆகாஷ்; இசை: யுவன் சங்கர் ராஜா; ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம். நாதன்; இயக்கம்: வெங்கட் பிரபு. ஒரு நபருக்கு ஒரே நிகழ்வு திரும்பத் திரும்ப நடப்பதை மையமாக வைத்து ஹாலிவுட்டில் நூற்றுக்கணக்கான படங்களை எடுத்துக் குவித்திருக்கிறார்கள். இந்தியாவில் அம்மாதிரி முயற்சிகள் மிகக் குறைவு என்றாலும் கடந்த வாரம்தான் இதே போன்ற 'Ti…
-
- 3 replies
- 800 views
-
-
46 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறார் ‘மாட்டுக்கார வேலன்’ புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் ஜோடியாக நடித்து வெள்ளி விழா கண்ட ஜனரஞ்சக திரைக்காவியம், ‘மாட்டுக்கார வேலன்’ 46 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., இரட்டை வேடங்களில் நடித்த படம் என்ற பெருமையையும், கவியரசர் கண்ணதாசன் மற்றும் வாலிபக்கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த தித்திக்கும் பாடல்களையும் கொண்ட காவியத் திரைப்படம் என்ற பெருமையையும் ஒரு சேர பெற்ற படம் ‘மாட்டுக்கார வேலன்’. ப.நீலகண்டன் இயக்கத்தில் 1970-ல், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, லட்சுமி, அசோகன், …
-
- 2 replies
- 799 views
-
-
ஆர்யா - நயன் பற்றிய கிசுகிசு தான் தற்போதைய தமிழ் திரையுலகின் ஹாட் ரொப்பிக்! இதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்னுமோர் செய்தி தற்போது உலா வருகிறது. இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லி புதிதாக படம் ஒன்றை இயக்க திட்டமிட்டு இருக்கிறார். இதில் நாயகனாக நடிக்க ஆர்யாவிடம் பேசி வருகிறார்கள். இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்க இருக்கிறார். 'சேட்டை', 'இரண்டாம் உலகம்', அஜீத்துடன் ஆர்யா நடிக்கும் இயக்குனர் விஷ்ணுவர்தன் படம் என அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்தவுடன் தான் இப்படம் துவங்குகிறது. இதில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேசி வருகிறார்கள். நயன்தாரா பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதால் எப்படியாவது இப்படத்திற்கு தேதிகள் ஒதுக்கி தருமாறு நச்சரித்து வருக…
-
- 0 replies
- 799 views
-
-
தமிழின் முன்னணி நடிகையாக திகழ்ந்த நயன்தாரா பிரபுதேவாவுடன் திருமணம் செய்வதற்காக நடிப்பதை நிறுத்தினார். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர், காதலுக்காக இந்துவாக மாறினார். சென்னையில் உள்ள ஆரிய சமாஜ மடத்துக்கு சென்று வேதமந்திர சடங்குகள் செய்து வேள்வி வளர்த்து மதம் மாறினார். அதன்பிறகு இந்துக்கோவில்களுக்கு பயபக்தியுடன் சென்று வந்தார். நெற்றியில் விபூதி, குங்குமம் பூசுவதையும் வழக்கமாக கொண்டார். தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் காவி சேலை, ருத்ராட்ச மாலையுடன் சீதை வேடத்தில் நடித்தார். இந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக படப்பிடிப்பு முடியும் வரை சைவம் மட்டுமே சாப்பிட்டு விரதம் இருந்தார். பிரபுதேவாவுடனான காதலை முறித்து விட்டு பிரிந்த பின்பு, அவரிடம் இன…
-
- 3 replies
- 799 views
-
-
நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு - தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.! சென்னை: நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். திரைப்படப்படப்பிற்காக சமீபத்தில் வட இந்திய மாநிலங்களுக்கு சென்று திரும்பியிருந்தார் விவேக். நேற்றைய தினம் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைவரும் தயக்கம் காட்டக்கூடாது என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் விவேக். இன்று காலையில் அவரது உடல் நலம் பாதிக்கப்படவே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். விவேக்கிற்கு மூச்சுத்திணறலும் இருப்பதாக மருத்துவமனை வட்…
-
- 4 replies
- 799 views
-
-
தனது முன்னாள் தயாரிப்பு நிர்வாகி நஸீரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார் மணிரத்னம். மணிரத்னத்தின் முன்னாள் தயாரிப்பு நிர்வாகியும், மாதவன், த்ரிஷா ஆகியோரின் மேனேஜருமான நஸீர் முதல் முறையாக தயாரிப்பாளராகியுள்ளார். படத்தின் பெயர் களவாணி. பசங்க படத்தில் அறிமுகமான விமல்-கேரளாவைச் சேர்ந்த ஓவியா ஆகிய இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடந்தது. இயக்குநர் மணிரத்னம் ஆடியோவை வெளியிட்டார். இயக்குநர் சசிகுமார் பெற்றுக்கொண்டார். விழாவில் பேசிய மணிரத்னம், தன்னிடம் நஸீர் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த காலத்தில், தனது இயக்கத்தில் ஏற்படும் தவறுகளுக்காகக் கூட நஸீரிடம் கோபித்துக் கொண்டதாகவும் அதற்காக இந்த மேடையில் மன்னிப்புக் க…
-
- 0 replies
- 798 views
-
-
கெட்ட கெட்டவன், நல்ல கெட்டவன், பயக்கோழி தோழி... என்ன நடக்கிறது? திருட்டுப்பயலே - 2 விமர்சனம். போலீஸிலிருக்கும் திருடனுக்கும், ஃபேஸ்புக்கிலிருக்கும் திருடனுக்கும் இடையே நடக்கும் திருடன் - திருடன் விளையாட்டுதான் `திருட்டுப்பயலே 2' அகல் (அமலா பால்) - செல்வம் (பாபி சிம்ஹா) மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் ஜோடி. உயர் அதிகாரியுடைய உத்தரவின் பேரில், சிலரது செல்போன் உரையாடல்களை ஒட்டுக் கேட்பதுதான் பாபி சிம்ஹாவின் வேலை. கூடவே தனது லாபத்துக்காகவும் இந்த வேலையைப் பயன்படுத்திக்கொள்கிறார். அவர் கேட்கும் ஓர் அழைப்பினால் `ஹேக்கிங் கில்லாடி' பாலகிருஷ்ணன் என்ற பால்கியை (பிரசன்னா) எதிர்க்க நேரிடுகிறது. அது என்ன பிரச்னை, இருவருக்குமான போட்டி…
-
- 1 reply
- 797 views
-
-
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் கடந்து வந்த பாதை ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி ஹா ங்காங்கில் பிறந்த அந்தக் குழந்தையை மருத்துவர் வியப்புடன் பார்த்தார். எடை 12 பவுண்டு. எப்படியாவது அக்குழந்தையை தான் வளர்க்க வேண்டுமென்று அந்த மருத்துவர் விரும்பினார். குழந்தையின் பெற்றோரிடம் கேட்க வும் செய்தார். ஆனால் சார்லஸ் சானும் சரி, லீ & லீயும் சரி அதற்கு சம்மதிக்கவில்லை. இத்தனைக்கும் சார்லஸ் சான் ஒரு சமையல்காரர். லீ & லீ, வீட்டு வேலைகளை செய்பவர். http://www.youtube.com/watch?v=cI1AwZN4ZYg போதிய வருமானம் ஒருபோதும் வந்ததில்லை. ஆனாலும் தங்கள் குழந்தையை தாங்களே வளர்க்க விரும்பினார்கள். சான் காங் & காங் என நாமகரணமும் சூட் டினார்கள். ஹாங்காங்கி…
-
- 0 replies
- 797 views
-
-
கமல் | படம்: கிரண் சா 'உத்தம வில்லன்' படத்தில் கமல் ‘உலக நாயகன்’ எனத் தனது ரசிகர்களால் அழைக்கப்படும் கமல் ஹாசனுக்கு 60-வது பிறந்தநாள். தமிழ் சினிமாவின் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக மட்டுமின்றி, சக படைப்பாளியாகவும் பயணிக்கும் கமல் ஹாசனைச் சந்தித்துப் பேசியதிலிருந்து… உங்களுக்கு இதுவரை தமிழ் சினிமா செய்தவை என்னென்ன? எதை நான் சொல்றது..? சம்பளம், பாடம், சவுக்கடிவரை எல்லாமே கொடுத்திருக்கிறது தமிழ் சினிமா. நான் பெற்றவை எல்லாம் இங்கிருந்து பெற்றவைதான். கற்றவையும் துன்புற்றவையும் இங்கிருந்து வந்தவைதான். தொழில்நுட்ப ரீதியில் ஏற்படும் மாற்றங்களை அப்டேட் செய்துகொண்டாலும்கூட, தமிழ் சினிமாவில் வர்த்தக ரீதியிலான சாதக நிலையை அனுபவிக்கும் சூழல் பரவலாகவில்லையே... தொழி…
-
- 0 replies
- 797 views
-
-
'என் வீடியோவ பாத்து நானே பயந்துட்டேன்!' -லக லக கல்பனா அக்கா நம்மூருல கஜினி மொட்டைமாடி கல்பனாவ கூட தெரியாதுன்னு சொன்னாகூட விட்டுடுவானுங்க.ஆனா இந்த கல்பனா அக்காவ தெரியலைன்னு சொன்னா ஏற எறங்க பாப்பாங்க. எம்.எஸ்.வில இருந்து ஹாரிஸ் ஜெயராஜ் வர எல்லார் பாட்டையும் பாரபட்சம் பாக்காம பாடி அத வீடியோவா அப்லோடி நெட்டிசன்களை நாக்கு தள்ள சிரிக்கவைத்துக் கொண்டிருக்கும் கல்பனா அக்காவிடம் ஒரு சிட்-சாட் இதோ: சொல்லுங்க? நீங்க யாரு? இதுக்கு முன்னாடி நீங்க பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க? சொல்லுங்க! நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் இலங்கைதான்.நல்லாவே வசதியான எங்க குடும்பத்துல என் கூடப்பொறந்தவங்க மொத்தம் 7 பேரு.அதுல நான்தான் கடைக்குட்டி.பயங்கர செல்லம் வேற.16 வ…
-
- 4 replies
- 797 views
-
-
த்யா காயத்ரி Entertainment கோவை குணா விஜய் டிவியில் ஒளிபரப்பான `கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் முதல் டைட்டில் வின்னர் கோவை குணா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான `அசத்தப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலமாகவும் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இன்று கோவை குணா உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்திருக்கிறார். பல குரல் பேசி பலரையும் வியக்க வைத்தவர். மிமிக்ரி உலகில் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்தவர். அவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், அவருடன் கலக்கப்போவது யாரு மேடையில் பழகி நண்பனாக பயணித்த வெங்கடேஷை தொடர்பு கொண்டு இது குறித்துப் பேசினேன். "கோவை குணாவுக்கு சிறுநீரகப் பி…
-
- 8 replies
- 797 views
- 1 follower
-
-
பொல்லாதவன், ஆடுகளம் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த தனுஷ்-வெற்றிமாறன் ஜோடி தற்போது புதிய படத்தில் மீண்டும் இணைந்திருக்கின்றனர். படத்தின் பெயர் காக்கா முட்டை. ஆனால் இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்கப்போவதில்லை. அவருடைய உதவியாளர் மணிகண்டன் இயக்க, வெற்றிமாறன், தன்னுடைய கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தில் தனுஷுடன் நடிக்க ஹன்சிகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ஏற்கனவே சிம்புவுடன் இரண்டு படங்கள் உள்பட பிஸியாக இருக்கும் ஹன்சிகா இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுப்பாரா என்பது கேள்விக்குறியாக இருப்பினும், ஹன்சிகாவைத்தான் ஹீரோயினாக போடவேண்டும் என தனுஷ் தனிப்பட்ட முறையில் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளாராம். சிம்புவுட்ன் நெருக்கமாக காத…
-
- 1 reply
- 796 views
-
-
இதுவரை யாரையும் லவ் பண்ணலை... சொல்கிறார் தமன்னா மும்பை: இந்தி இயக்குநர் சாஜித் கானின் அடுத்தடுத்த 2 படங்களில் நடித்த தமன்னா இயக்குனரை ரகசியமாக சந்தித்து, காதல் வளர்த்து வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. மேலும் தமன்னா-சாஜித் கான் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. சமீபத்தில் இந்தக் காதல் விவகாரங்கள் குறித்து நடிகை தமன்னா விளக்கம் அளித்திருக்கிறார். Read more at: http://tamil.filmibeat.com/heroines/tamanna-explain-about-her-love-rumors-038945.html சிங்கன்கள் ட்ரை செய்யலாம். http://tamil.filmibeat.com/heroines/tamann…
-
- 5 replies
- 796 views
-
-
நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாக தயாராகின்றது… நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாக தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பெங்களூரை சேர்ந்த ரசிகர் மன்றத்தினர் இந்த படத்தை உருவாக்கி வருவதாகவும் இதற்காக . ஸ்ரீதேவியிடமும் அவரது கணவர் போனிகபூரிடமும் அனுமதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகும் இந்த ஐந்து பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், மம்முட்டி, அம்பரீஷ் உள்பட அனைத்து மொழி நடிகர்-நடிகைகள் ஸ்ரீதேவி பற்றி பாராட்டி பேசும் கருத்துகளும் அவரது படங்களில் பணியாற்றிய இயக்குனர்கள் உள்ளிட்ட தொழில…
-
- 0 replies
- 796 views
-
-
முல்லைப் பெரியாறு அணை உடைந்தால்.... சர்ச்சைப் படம் எடுத்த மலையாள இயக்குநர்! தமிழக மக்களின் உணர்வுப் பிரச்சினையான முல்லைப் பெரியாறு அணையை மையப்படுத்தி ஒரு படம் ஆங்கிலத்தில் உருவாகியுள்ளது. டேம்999 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை எடுத்திருப்பவர் ஒரு மலையாளி. இந்தப் படம் தமிழிலும் வெளியாகப் போகிறது. இந்தப் படத்தில் அணை உடைந்தால் என்னவாகும் என்பதை கிராபிக்ஸில் காட்டி மக்களைப் பீதிக்குள்ளாக்கியுள்ளனர். சொத்தை விற்று அணை கட்டிய பென்னி குக் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது முல்லைப் பெரியாறு அணை. ஆங்கிலேயர்தான் என்றாலும் பென்னிகுக் என்ற மக்கள் நல விரும்பியால் கட்டப்பட்ட இந்த அணை தமிழகத்தின் ஜீவாதாரங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த அணை கட்டும் பணியின்போது …
-
- 0 replies
- 796 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Darbar ரஜினிகாந்த் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஒரு சிறந்த, வெற்றிகரமான கலைஞராக நிலைத்து நிற்கிறார். சிறிய சிறிய மாற்றங்களோடு தன்னைப் புதுப்பித்தும் வருகிறார். அவர் வெற்றிகரமான நடிகராகத் தொடரப் போகிறாரா அல்லது போட்டி மிகுந்த அரசியல் களத்தில் எதிர்நீச்சல் போடப்போகிறாரா? 70 வயதை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்த், ஆசியாவின் அதிக ஊதியம் பெறும் நடிகர்களில் ஒருவர். 1975ல் துவங்கி விரைவில் வெளியாகவிருக்கும் தர்பார்வரை 167 திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கும் ரஜினிகாந்த், மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் சினிமா உலகின் மீது பெரும் ஆதிக்கம் செலுத்தியவர். தற்போது 168வது படத்திற்கான பணிகளில் தீவிரமா…
-
- 0 replies
- 796 views
-
-
Karnan- Realeased first on 14th Jan 1964, first digitised film in Tamil to get wide release in 2012 ran for 150 days collected more than 10 Crores.My take on that film. கதைகளில் மகாபாரதத்தை மீறிய Epic உலகளவில் இல்லாதது போல ,கர்ணனை மீறிய பாத்திர படைப்பு இது வரை உலகம் கண்டதில்லை. வீரபாண்டிய கட்டபொம்மனை குறிப்பிடும் போது ஒரே single agenda , ஒரே பகைவன், ஒரு சில ஆள்காட்டிகள் என்பதோடு பன்முக தன்மை இல்லாத பாத்திரம். ஆனால் கர்ணனோ மிக பெரிய பராக்கிரம சாலியும் அவன்தான். உலகத்தின் மிக துர்பக்கியசாலியும் அவன்தான். மிக மிக போற்ற பட்ட மனிதனும் அவன்தான். ஆனால் எதிரிகளாலேயே சூழ பட்டு வாழ்ந்த மனிதனும் அவன்தான். எல்லோரும் கவனம் செலுத்திய மனிதனும் அவன்தான். ஆனால் தாய் முதல் ,வாழும் குல…
-
- 0 replies
- 795 views
-
-
சூப்பர் ஸ்டார் ரஜினி, தீபிகா படுகோனே நடித்துள்ள படம் கோச்சடையான். இதுவரை எந்தப் படத்துக்கும் இல்லாத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் டிரைய்லர் நாளை விநாயகர் சதுர்த்தியன்று (செப்படம்பர் 9) ரிலீசாகிறது. தற்போது கோச்சடையான் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகி உள்ளது. 125 கோடி ரூபாய் செலவில் மோசன் கேப்ச்சர் (அவதார்) தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ள இந்தப் படத்துக்கு இந்தியா முழுவதுமே பெரும் எதிர்பார்ப்பு இருப்பதால் இதன் வியாபார எல்லையை தயாரிப்பு நிறுவனம் விரிவுபடுத்தி உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் இந்தி பேசாத மாநிலங்களுக்கும் படத்தை கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறது. அதற்காக பெங்காலி, பஞ்சாபி, மராத்தி, ஒரியா ஆகி…
-
- 1 reply
- 795 views
-
-
விஜய்யின் வேலாயுதம், அஜீத்தின் மங்காத்தா படங்கள் ரிலீசுக்கு தயாராகின்றன. இரு படங்களையும் ஆகஸ்டில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியும், கட் அவுட்கள் வைத்தும் பட ரிலீசை விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இதற்கிடையில் ரசிகர்கள் இடையே மோதலை தவிர்ப்பதற்காக இரு படங்களையும் ஓரிரு வாரம் இடைவெளி விட்டு ரிலீஸ் செய்ய பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன. மங்காத்தா, வேலாயுதம் படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மத்தியிலும் போட்டா போட்டி நடக்கிறது. அஜீத்துக்கு மங்காத்தா 50 வது படம். திரிஷா ஜோடியாக நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். விஜய்யின் வேலாயுதம் படத்தை ராஜா இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஜெயம், சந்தோஷ் சுப்பிர மணியம், எம்.குமரன் சன்ஆப…
-
- 0 replies
- 795 views
-
-
பிசினஸ்மேன் பார்ட் 2 மகேஷ்பாபுவின் நடிப்பில் வெளிவந்திருக்கும் பிசினஸ்மேன் சக்கைப்போடு போடுகிறது. மூன்றே நாளில் 27 கோடியை வசூலித்து சக நடிகர்களுக்கு பீதியை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தப் படத்தை இயக்கிய பூரி ஜெகன்நாத்தின் இப்போதைய வேலை மகேஷ்பாபுவை பாராட்டுவது மட்டுமே. அவரின் அருமை பெருமைகளை பேட்டிகளில் தளும்ப தளும்ப எடுத்துரைப்பவர், விரைவில் பிசினஸ்மேன் பார்ட் 2 தொடங்கப்படும் என்கிறார். பிசினஸ்மேன் 150 கோடியை வசூலிக்கும் என்கிறார்கள் விமர்சகர்கள். http://tamil.webduni...120118032_1.htm
-
- 0 replies
- 795 views
-
-
சிறந்த இயக்குனர் லோகேஷ்-சிறந்த நடிகர் சிம்பு: சைமா விருதுகள் Sep 12, 2022 17:21PM IST திரைத்துறையினருக்கு வழங்கப்படும் 2022 ஆம் ஆண்டுக்கான சைமா விருதுகள் வழங்கும் விழா பெங்களூருவில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருது இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கும், சிறந்த நடிகருக்கன விருது நடிகர் சிம்புவுக்கும் வழங்கப்பட்டது. நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியான படம் மாஸ்டர். இந்த படம் விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்கியதற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு சிறந்த இயக்குனருக்கான சைமா விருது வழங்கப்பட்டது. கமல் நடிப்பில் ,…
-
- 0 replies
- 795 views
-
-
படம் தொடங்குனதுல இருந்து ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் சிரிக்கவைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதுவே பெரிய வெற்றி. ஏற்கனவே இலங்கையில் வெளிவந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பதால் கதையின் ஒன்லைன் தெரியும். ஆணுறுப்பு எழுச்சியடைந்த நிலையில் இறந்துபோகும் ஒரு பெரியவர், குடும்பத்தினர் இதனை மறைத்து எவ்வாறு அவரை நல்லடக்கம் செய்கின்றனர். அதுதான் கதை. இதில் என்ன நகைச்சுவை செய்துவிட முடியும் என்கிற அதிருப்தியில்தான் படம் பார்க்கவே சென்றேன். சும்மா சொல்லக்கூடாது திரிகொளுத்தி பட்டாசாக வெடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியுமே நல்ல நேர்த்தி, நடித்தவர்கள் எல்லோருடைய பங்களிப்புமே மிகநன்று, சரியான டைமிங் டயலாக்ஸ், சின்னச் சின்ன முகபாவனைகளில், பார்வையில், பல்வேறு செய்திகளை குறிப்பால் உண…
-
-
- 16 replies
- 794 views
- 1 follower
-