வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
2022 - எதிர்பார்க்கப்படும் படங்கள்! மின்னம்பலம்2022-01-10 50 சதவிகித இருக்கைக்கு மட்டுமே அனுமதி, ஞாயிற்றுக்கிழமை முழுமையான ஊரடங்கு என்கிற தமிழக அரசின் அபாய மணியை எதிர்கொண்டு 2022 ஜனவரி முதல் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது தமிழ் சினிமா. கொரோனா தாக்கத்துடன் 2021 கடந்து போனது. 2022ஆம் ஆண்டின் தொடக்கமும் கொரோனா தாக்கத்துடனேயே ஆரம்பமாகியுள்ளது. புது வருடம் பிறந்தாலே முதலில் வரும் பண்டிகையான பொங்கல் வெளியீடாக பல படங்கள் வரும். பொங்கல் விடுமுறை நாட்களில் தீவிர சினிமா ரசிகர்கள் ஒரு சில படங்களையாவது பார்த்து விடுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். அதெல்லாம் அந்தக் காலம் என்று சொல்லும் அளவுக்கு ஒரே ஒரு படமாவது வந்துவிடாதா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடி…
-
- 0 replies
- 490 views
-
-
ஒவ்வொரு வருடமும் இமயமலை சென்று வரும் ரஜினி, எந்திரன் படப்பிடிப்பினால் இரண்டு வருடம் இமயமலைப்பயணத்தை தள்ளிப்போட்டார். எந்திரனின் இமாலய வெற்றிக்குப் பிறகு, இமயமலைப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது அவர் பாபாவின் குகைக்குச் சென்று தியானம் செய்தார். உலகமே அவர் படத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்க, அவர் தனிமையும் அமைதியும் நிறைந்த இமயத்தில், தனது நெருங்கிய நண்பர்கள் இருவர் துணையுடன் பாபாவின் குகைக்குச் சென்றார். மிகவும் ஆபத்தான குகை என்று சொல்லப்படும் இந்த இடத்தில் அவர் தியானம் செய்தார். பின்னர் அவர் பாபாவின் ஆசிரமத்தில் தங்கினார். ரஜினி, தீபாவளிக்கு முன் சென்னை திரும்புகிறார்.http://www.tharavu.com/2010/10/blog-post_1579.html
-
- 0 replies
- 835 views
-
-
கமல்ஹாசன் மகள் அக்ஷரா இலங்கை வாலிபருடன் காதல் மும்பை : கமல்ஹாசன் மகள் அக்ஷரா, இலங்கை வாலிபர் ஜேஸன் ஜெயசீலன் என்பவரை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட படம், இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் & சரிகா தம்பதிக்கு 2 மகள்கள். மூத்த மகள் ஸ்ருதி. படங்களில் நடித்து வருவதுடன், இசை அமைப்பாளராகவும் உள்ளார். இந்தியில் ‘லக்’ என்ற படம் மூலம் அறிமுகமானார். தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக ‘7ம் அறிவு’ என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவரது தங்கை அக்ஷரா மும்பையில் அம்மா சரிகாவுடன் வசிக்கிறார். ‘சொசைட்டி’ என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றுகிறார். நடன இயக்குனராவும் உள்ளார். இலங்கை வாலி…
-
- 3 replies
- 3.1k views
-
-
பிரபல சினிமா பின்னணி பாடகி, எஸ்.ஜானகி, 76. தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம், இந்தி உள்ளிட்ட, பல்வேறு மொழிகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிஉள்ளார். தமிழில், சிங்கார வேலனே தேவா, காற்றில் எந்தன் கீதம், நெஞ்சினிலே… நெஞ்சினிலே உள்ளிட்ட, புகழ் பெற்ற பாடல்களை பாடியுள்ளார். இந்தியாவிலேயே திரைப்படங்களில் அதிகப் பாடல்கள் பாடிய பின்னணி பாடகி என்ற சாதனையைப் படைத்தவர் லதா மங்கேஷ்கர். ஆனால், 17 மொழிகளில் பாடிய ஒரே பாடகி என்ற சாதனைக்கு உரியவர் எஸ்.ஜானகி. ஜானகி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். குண்டூர் மாவட்டத்தில் உள்ள பல்லபட்லா என்ற ஊரில், 1938-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி பிறந்தார் சிறு வயதிலேயே இசையில் ஆர்வம் ஏற்பட்டது. 1956-ல் அகில இந்திய வானொலி, பாட்டுப்போட்டி ஒன்றை…
-
- 0 replies
- 4.8k views
-
-
'பொன்னூஞ்சல் எரிநட்சத்திரம்’ ஷோபா! #ShobaMemories 'செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்....' இந்தப் பாடலின் வரிகளைப் படித்ததும் அநேகரின் நினைவில் நிழலாடுவது, நடிகை ஷோபாவின் முகம்தான். நெற்றியில் பெரிய பொட்டு, துருதுரு பார்வை, குழந்தைமை வழியும் சிரிப்புமே ஷோபாவை நினைவூட்டும் அடையாளங்கள். ஒரு கதாநாயகிக்கான இலக்கணங்களை மீறி, நம் பக்கத்து வீட்டுப் பெண்ணின் தோற்றத்தோடு, வெகு இயல்பான நடிப்பால் சினிமாவில் வலம்வந்தவர் ஷோபா. 1966-ம் ஆண்டு, சந்திரபாபு மற்றும் சாவித்திரி நடித்த, 'தட்டுங்கள் திறக்கப்படும்' படத்தின் மூலம், குழந்தை நட்சத்திரமாகத் திரைத்துறையில் நுழைந்தவர் ஷோபா. நாயகியாக, 'அச்சாணி', 'நிழல் நிஜமாகிறது', 'ஒரு வீடு ஒரு உலகம்'…
-
- 0 replies
- 2.2k views
-
-
ஒரு பாத்திரத்துக்காக எந்த அளவு ஆபத்தையும் சந்திக்கத் தயங்காதவர்களில் விக்ரமும் ஒருவர். குறிப்பாக ஷங்கரின் ஐ படத்துக்காக அவர் எடுத்த ரிஸ்க், உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்றால் மிகையல்ல. கடந்த சில தினங்களாக இணையத்தில் உலா வரும் அவரது ஒரு நோஞ்சான் படத்தைப் பார்த்தாலே அதைப் புரிந்து கொள்ளலாம். படத்தில் வரும் கூனன் கதாபாத்திரத்திற்காக உடல் எடையைக் குறைத்து, எலும்பும் தோலுமாக அவர் காட்சியளிக்கும் அந்தப் படம் பார்ப்பவர் கண்களை குளமாக்கும். இது விக்ரம்தானா? இந்த மனிதர் ஏன் இப்படி ரிஸ்க் எடுக்கிறார்.. இப்படியெல்லாம் கூட ஒருவரால் சினிமாவுக்காக மெனக்கெட முடியுமா? என்று பிரமிப்பும் கவலையும் கலந்த தொனியில்தான் ஒவ்வொருவரும் கேட்டு வருகின்றனர். இனி விக்ரம் இ…
-
- 0 replies
- 944 views
-
-
“கயலை” பார்க்க போனோம்: நேற்றையதினம் பொழுதை போக்கவேண்டி என்ன செய்யலாம்... (வீட்டில் பிள்ளைகளும் டிவி பார்க்கவிடாமல் basket ball game பார்த்துகொண்டிருந்தார்கள்) என்று நினைத்தபோது “கயல், மீகாமன், வெள்ளைத்துரை” ஆகிய படங்களில் ஒன்றை பாரக்கலமே என நினைவுக்கு வந்தது. கயல் என்ற பெயர் இனிமையாக இருந்தது அத்துடன் சாலமன் எடுத்த படம் கட்டாயம் இயற்கை காட்சிகள் இருக்கும் என நினைத்து...கயலை போய் பார்த்தோம். முன்பாதி அருமையான இயற்கை காட்சிகளும் யாதர்த்தமான சிந்திக்கவேண்டிய நகைச்சுவைகாட்சிகளும் நிறைந்ததாக இருந்தது...பின்பாதி அத்தனை சந்தோஷங்களையும் சுனாமி மாதிரி வாரிக்கொண்டு உள்ளே போய்விட்டது கதை.... ஆனாலும் சுனாமிக்கு முன் கட்டாயம் பார்க்கலாம். “கயல்”.. பெயருக்கேற்ப அழகானவள்.. (எனக்…
-
- 4 replies
- 935 views
-
-
கலைப்படம் - தமிழ்ச் சினிமா தவறவிட்ட அத்தியாயம் தாஜ் கனவுகளைச் சுட்டு காசு பார்க்கும் வியாபாரத்தில் அதிஷ்டம் வாய்ந்தது சினிமா! இதில் அமெரிக்காவின் தாயாரிப்புகள் அமர்க்களப்படுத்தும் ரகமென்றால், அடுத்த கலக்கல் இந்திய தயாரிப்புகள்தான். படங்களின் எண்ணிக்கைகளில், தொழில் நுட்பத் திறமைகளில், இன்னும் மிதமிஞ்சிய அதன் கற்பனை வளத்திலும்கூட நம்ம பாலிவுட்டும் கோலிவுட்டும் ஹாலிவுட்டை விட்டேனாபார் என்ற ரீதியில் துரத்திக்கொண்டே இருக்கிறது. ‘கோலிவுட்’ என்று செல்லமாக அழைக்கப்படும் நம்ம கோடம்பாக்கத்தை, பார்க்க கிடைக்கிறபோதெல்லாம் கட்டத்தெரியாமல் கட்டிய கட்டி வரிசைகளுக்கிடையேயான சாலைகளில், அதன் சந்துப்போந்துகளில் சதாநேரமும் திமிரி வழியும் மக்கள் கூட்டம் எப்பவும் மாறா காட்சி!…
-
- 2 replies
- 1.4k views
-
-
பிரபல ஒளிப்பதிவு இயக்குனரும், 12B, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே போன்ற வெற்றி படங்க்ளை இயக்கியவருமான இவர் இலண்டனில் இவரது அடுத்த படமான "தாம் தூம்" படப்பிடிப்பின் போது மாரடைப்பால் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறக்கும் போது இவருக்கு வயது 42. ஒளிப்பதிவு இயக்குனர் ஜீவா அவர்களே, நாம் இழந்தது ஒரு மனிதனை அல்ல, தமிழ் சினிமாவின் ஒரு நல்ல தூரிகையை. http://www.tamilcinema.com/CINENEWS/Hotnew...june/260607.asp
-
- 18 replies
- 3.7k views
-
-
மாசு படத்தில் இரண்டு சூர்யா.. ஒருவர் ஈழத் தமிழர்! "மாசு என்கிற மாசிலாமணி" படத்தில் இரு வேடங்களில் தோன்றும் சூர்யா, ஒன்றில் ஈழத்து இளைஞராக நடித்துள்ளாராம். சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘மாசு என்கிற மாசிலாமணி' படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. இப்படத்தில் சூர்யா அப்பா-மகன் என இருவேறு கெட்டப்புகளில் நடிப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த இயக்குநர் வெங்கட் பிரபு, 'மாசு படத்தில் சூர்யா இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அதில் ஈழத் தமிழனாக ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். ஒரு ஈழத்தமிழனாக சூர்யா நடிப்பது இதுதான் முதல…
-
- 1 reply
- 1k views
-
-
படப்பிடிப்பின் போது திடீர் மாரடைப்பு.. நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்.! குமுளி: தவசி, எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி குமுளியில் நடந்த படப்பிடிப்பின் போது மாரடைப்பால் இன்று அதிகாலை காலமானார்.தவசி படத்தில் "எஸ்க்யூஸ்மி, சாரி ஃபார் த டிஸ்டபென்ஸ்..இந்த அட்ரஸ் எங்க இருக்கு கொஞ்சம் சொல்றீங்களா.? " என்று வடிவேலுவிடம் ஒசாமா பின்லேடனின் அட்ரஸ் கேட்டு பிரபலம் ஆனவர் கிருஷ்ணமூர்த்தி. அவர்தன் பிறகு நடிகர் வலுவேலுடன் இணைந்து பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து புகழ் பெற்றார்.இன்று அதிகாலை 4.30 மணிக்கு குமுளி அருகே வண்டிபெரியாறில் நடந்த திரைப்பட படப்பிடிப்பில் திடீரென கிருஷ்ணமூர்த்திக்கு மாரடைப்பு ஏற்பட்…
-
- 4 replies
- 1.2k views
-
-
The Mehta Boys- அப்பா - மகன் உறவு பற்றி நான் பார்த்த படங்களில் மிகச் சிறந்த, அருமையான படம்! எந்த போலித்தனமான, சினிமாத்தனமான template களும் இல்லாத, நல்லதொரு படம். அநேகமான அப்பாக்களும் மகன்களும் ஒரு குறிப்பிட்ட வயதின் பின் கட்டி இணைப்பதில்லை.. கொஞ்சுவதில்லை.. சேர்ந்து ஒரு வேளை சாப்பிடுவது கூட இல்லை. அப்படி அணைக்கும், hug பண்ண மனசு விரும்பும், சேர்ந்து உண்ணும் தருணங்களை போலி ego நிராகரித்து விடும். ஆனால் அப்படி செய்யாமல் விட்டு, அப்பாவை புரிந்து கொள்ளும் முயற்சிகளை வேண்டும் என்றே ego காரணங்களால் மறுத்தமையால் உருவாகும் காயங்கள் வலி மிகுந்தவை. ஆயுள் வரைக்கும் ஆறாதவை. நான் அந்த வலியை அனுபவிக்கின்றவன். …
-
-
- 1 reply
- 292 views
-
-
டி ஆர் சாதித்த கதை: சகலகலாவல்லவர். எந்த விஷயத்தையும் முறையாகக் கற்றுக் கொள்ளாமல் தானே தெரிந்துக்கொண்டு சாதித்துக் காட்டியவர். இளையராஜா உச்சத்தில் இருந்தபோதே இவரது பாடல்களும் சூப்பர் ஹிட். ரஜினி படங்களுக்கு இணையாக இவரது படங்களும் ஓடியிருக்கின்றன. எதுவுமே தெரியாமல் வந்து எப்படி சாதிக்க முடிந்தது என்ற கேள்விக்குப் பதில் சொல்கிறார் டி.ராஜேந்தர். ‘‘எனக்கு ரொம்ப சின்ன வயசிலேயே மேடையில பேசணும். கைதட் டல் வாங்கணும். நாலு பேர் நம்மை கவனித்துப் பாரட்டணும்னு ஆசை. மூன்றாவது படிக்கும்போது மேடையில் பேச ஆசைப்பட்டேன். ஆனா அந்த வயதில் எனக்கு மேடை கிடைக்கவில்லை. அதனால் பெஞ்ச் மீது ஏறி நின்று என் வகுப்பு மாணவர்களிடம் பேசுவேன். பேசுகிறது என்றால் சாதாரணமாய் பேசுவது அல்ல, எனக்குத் த…
-
- 0 replies
- 1k views
-
-
விமர்சனம் : இட்லி கடை! 2 Oct 2025, 1:18 PM இது ‘பீல்குட் மூவி’யா?! தமிழில் பாக்யராஜ், பாண்டியராஜன், டி.ராஜேந்தர், பார்த்திபன் என்று வெகு சிலரே தாம் இயக்கிய படங்களில் நாயகனாக நடித்து வெற்றிகளைச் சுவைத்திருக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி போன்றவர்கள் அம்முயற்சிகளில் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றனர். இன்னொருபுறம் நாயகர்களாக விளங்கிய சிலர் நடிப்பைத் தாண்டி தமது திறமைகளை வெளிக்காட்ட அல்லது இதர சில காரணங்களுக்காக இயக்குனர்களாகக் களமிறங்கியிருக்கின்றனர். எம்ஜிஆர், ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், அர்ஜுன், கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த் என்று அந்தப் பட்டியலும் கொஞ்சம் பெரியதுதான். அந்த வரிசையில் இடம்பெறுகிற இளைய நட்சத்திரங்களில் ஒருவர் தனுஷ். பவர் பாண்டி, ராயன், நிலவுக்…
-
-
- 8 replies
- 811 views
- 1 follower
-
-
சென்னை: பிரபல குணச்சித்திர நடிகர், நாடக இயக்குநர் பூர்ணம் விஸ்வநாதன் இன்று மாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 78. தமிழ் திரையுலகில் மறக்கமுடியாத சில நடிகர்களுள் முக்கியமானவர் பூர்ணம் விஸ்வநாதன். 1945ல் ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி வாசிப்பாளராக தன் பணியைத் தொடங்கிய விஸ்வநாதன், தன் குரல் வளத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தியை ஆல் இந்தியா ரேடியோவின் தமிழ்ச் செய்தியில் முதன் முதலில் கிழக்காசிய நாடுகளுக்கு அறிவித்த பெருமை இவருக்கு உண்டு. தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கண்களைக் குளமாக்கும் இரக்க சுபாவமுள்ள பல பாத்திரங்களில் நடித்த பெருமையும் இவரை சாரும். ரஜினியுடன் இவர் வித்தியாசமாக நடித்த தில்லு முல்லு, நினைத…
-
- 9 replies
- 2.8k views
-
-
சூப்பர் சிங்கர் பிரகதிக்கு பரதேசி படத்தில் வாய்ப்பு இந்தியாவின் விஜய் டி.வியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிவரை சென்று இரண்டாவது இடம் பிடித்த பிரகதிக்கு பாலாவின் பரதேசி படத்தில் பாட்டுப் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது. விஜய் டி.வியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிவரை சென்று இரண்டாவது இடம் பிடித்த பிரகதிக்கு பாலாவின் பரதேசி படத்தில் பாட்டுப் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதர்வா, தன்ஷிகா, வேதிகா நடிக்கும் பரதேசி படத்திற்காக ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். இப்படத்தில் வரும் கடைசி பாடலை வித்தியாசமாகவும் புதிய குரலிலும் இசையமைக்க வேண்டும் என்று விரும்பிய ஜி.வி.பிரகாஷ், சூப்பர் சிங்கர் ஜூனியரில் வித்தி…
-
- 0 replies
- 1.2k views
-
-
நடிப்பு: விஷ்ணு, சுனைனா, சரண்யா, ராம், சமுத்திரக்கனி, அழகம்பெருமாள் ஒளிப்பதிவு: பாலசுப்பிரமணியன் இசை: என் ஆர் ரகுநந்தன் மக்கள் தொடர்பு: நிகில் தயாரிப்பு: ரெட்ஜெயன்ட் உதயநிதி ஸ்டாலின் எழுத்து - இயக்கம்: சீனு ராமசாமி அழகிய கடல்புறம்... அங்கே கிளிஞ்சல்களாய் சிதறிக்கிடக்கும் எளிமையும் இயல்பும் நிறைந்த மீனவர் வாழ்க்கை... கடல் மணலில் கடவுளின் குழந்தைகளாய் திரியும் சின்னஞ்சிறுசுகளின் காதல்.. மேலும் படங்கள் -கேட்கவே நல்லாருக்குல்ல... ஆனால் அதை திரையில் ரசித்துப் பார்க்கும்படி எடுத்திருக்கிறாரா சீனு ராமசாமி? பார்க்கலாம் வாங்க! கடலலையில் அனாதையாய் வந்து மேரி - லூர்து தம்பதிக்கு மகனாகும் அருளப்பசாமியைப் பார்த்து அந்த கடல்புற கிராமமே அலறுகிறது. பயத்தினால…
-
- 4 replies
- 664 views
-
-
2012: தமிழ் சினிமாவில் இயக்குநர்களின் ஆண்டு எஸ். கோபாலகிருஷ்ணன் 2013ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களின் வெற்றி, தோல்விப் பட்டியல்கள் குவிகின்றன. வசூல் சார்ந்தும் தரம் சார்ந்தும் இந்தப் பட்டியல்கள் அணிவகுக்கின்றன. கிட்டத்தட்ட எல்லா ஊடகங்களும் தத்தமது துலாக்கோலில் கோலிவுட்டை நிறுத்துப் பார்க்கின்றன. தமிழ் சினிமாவின் ஓராண்டுக் கால இயக்கத்தை நுட்பமாக அவதானிக்கும்போது அதில் உருவாகியுள்ள புதிய சலனங்களைப் புறக்கணித்துவிட முடியாது. இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குநர்களே அதிகமாகச் சாதித்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். பல புதுமுக இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் தங்கள் முதல் அடியை அழுத்தமாகவும் ஆழமாகவும் பதித்திருக்கிறார்கள். சில பல வெற்றிகளைக…
-
- 0 replies
- 562 views
-
-
காலம் அழிக்காத கவி வரிகளைத் தந்து, அனுபவ மொழிகளால் தமிழுக்கு அழகு சேர்த்த கவியரசர் கண்ணதாசனின் நினைவுதினம். "நான் மானிட இனத்தை ஆட்டிவைப்பேன் அவர் மாண்டு விட்டால் அதை பாட்டில் வைப்பேன் நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.. " சீசரின் நண்பன் கண்ணதாசன்...! - நினைவு தினச் சிறப்புப் பகிர்வு ‘‘யாருக்காகவும் உன்னை மாற்றிக்கொள்ளாதே; ஒருவேளை மாறநினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி வரும்’’ என்றவர் கவிஞர் கண்ணதாசன். அவருடைய நினைவு தினம் இன்று. ‘‘ஆயிரம் பாட்டுக்கு அடி எடுத்துக்கொடுப்பான்டி!’’ மருது பாண்டியர்கள் நீதி தவறாது ஆட்சி செய்த சிவகங்கைச் சீமையின் சிறுகூடல்பட்டியில் வசித்த …
-
- 0 replies
- 5.7k views
-
-
பவளக்கொடி படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த தியாகராஜ பாகவதர் 1937ஆம் ஆண்டில் நடித்து வெளிவந்த படமான சிந்தாமணி 52 வாரங்கள் தொடர்ந்து ஓடி, அதுவரை வெளியான படங்களில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையைப் பெற்றது. (இன்று 52 நாள் ஓட திக்கு முக்காடும் படங்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்). . மதுரை ராயல் டாக்கீஸ் தயாரித்த இந்தப் படத்தில் பாகவதருக்கு ஜோடியாக நடித்தவர் அஸ்வத்தம்மா. கன்னடத்தில் பிரபல பாடகியாகத் திகழ்ந்த அஸ்வத்தம்மா, பாகவதருடன் போட்டி போட்டு, தமிழில் பாடி நடித்தார். படத்தை இயக்கியவர் ஒய்.வி.ராவ். (நடிகை லட்சுமியின் தந்தை). வசனங்களை அய்யாலு சோமயாஜுலு எழுதினார். பாடல்களை எழுதியவர் பாபனாசம் சிவன். ஒய்.பி. வாஷிகர் என்பவர் கேமராவைக் கையாண்டார். செருகளத…
-
- 0 replies
- 463 views
-
-
Fift E. L. James ஆல் எழுதப்பட்ட ரோமான்டிக் ஏரோட்டிக் பிரிட்டிஷ் நாவல்Fifty Shades of Grey . மிகபிரபல்யமான இந்த நாவல் நூறு மில்லியனுக்கு மேல் உலகமெங்கும் பரபரப்பாக விற்றுத்தள்ளியது. 52மொழிகளில் மொழிபெயர்கப்பட்டது. பிரிட்டிஷ் நாவல் வரலாற்றில்மிகப்பெரிய சாதனையாக இடம்பிடித்து. ஏரோட்டிக் நாவல் என்றாலே உங்களுக்கு புரிந்திருக்கும் அஜால் குஜால் வகையை சார்ந்ததென்று. ஆனால் ஆண்களைவிட அதிகமாக பெண்களினால் இவ் நாவல் மிகரகசியமாக விரும்பி வாசிக்கப்பட்டது. எழுத்து வடிவில் சில சில்மிஷங்களை வாசிப்பது சுவரசியமானதாம், அந்த சைகலோஜிக்கை மெய்பித்திருகின்றது நாவலின் விற்பனை. Fifty Shades of Grey இன் கண்மண் தெரியாத வெற்றியை தொடர்ந்து அதன் தொடர்ச்சியான சீரிஸ் Fifty Shades Darker, Fifty Sha…
-
- 0 replies
- 9.3k views
-
-
அரபுக்குதிரை போல ஹாட்டாக இருக்கும் நடிகை அனுஷ்காவையே கலங்க வைக்கும் ஒரு செய்த ருத்ரமாதேவி படப்பிடிப்பில் நடந்துள்ளது. ருத்ரமாதேவி என்ற வரலாற்று தெலுங்கு படத்தில் ராணி ருத்ரமாதேவியாகா அனுஷ்கா ராணியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராணா கணவர் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அனுஷ்காவிற்கு குதிரை சவாரி எல்லாம் உண்டு. குதிரையில் சவாரி செய்து எதிரிகளோடு மோதும் ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகள் பிரமாதமாக வந்துள்ளது என இதன் இயக்குனர் குணசேகர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இப்போது ருத்ரமாதேவியில் புதிதாக இரண்டு கேரக்டர்கள் உள்ளே நுழைக்கப்படுகிறதாம். அதாவது ராணி ருத்ரமாதேவியின் தங்கைகளாக நடிப்பதற்கு இரண்டு நடிகைகளை தேடிக்கொண்டிருக்கிறார் இயக்குனர். இரண்டு பேரும் பி…
-
- 0 replies
- 537 views
-
-
தற்போது இந்திய திரயுலகை அதிரடி கவர்ச்சி மூலம் கலக்கி வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் ஏற்கனவே நடிகர் சித்தார்த்தை காதலித்துடன் அவருடன் சேர்ந்து குடித்தனம் நடத்தியதாக பேசப்பட்டவர். பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர். இப்படி பல கிசு கிசுகிசுக்களில் சிக்கி வலம் வரும் நடிகை ஸ்ருதி தற்போது கிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன் நெருங்கி பழகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரராக ரெய்னா உள்ளார். சமீபத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 52 பந்தில் 99 ரன்கள் எடுத்து கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தார். அந்த போட்டியை ஸ்ருதிஹாசனும் நேரில் பார்த்து ரெயினாவை உற்சாகப்படுத்தினார். அதன் பின்னர் அடிக்கடி இருவரும் …
-
- 2 replies
- 1.4k views
-
-
சன்னி லியோனுக்கு இரசிகர் மன்றம் பொதுவாகவே இப்போது இரசிகர் மன்றங்கள் தொடங்குவது குறைந்து விட்டது. அதுவும் நடிகைகளுக்கு யாரும் இரசிகர் மன்றம் தொடங்குவதில்லை. காரணம், அதை நடத்த நடிகைகள் பணம் கொடுப்பதில்லை. தற்போதைய நிலவரப்படி, த்ரிஷாவுக்கும், நயன்தாராவுக்கும் இரசிகர் மன்றம் இருக்கிறது. கீர்த்தி சுரேசுக்கு அண்மையில் இரசிகர் மன்றம் தொடங்கினார்கள். ஆனால், இப்போது கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு இரசிகர் மன்றம் தொடங்கி அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறார்கள். கனடா நாட்டைச் சேர்ந்த நடிகை சன்னி லியோன், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்று நடிகையானார். அவரது இந்திய வருகைக்கு பிறகு அவரது கவர்ச்சி வீடியோக்களை இணைய தளத்தில் பார்…
-
- 0 replies
- 445 views
-
-
நம்மைத் துரத்தும் அந்த மூன்றாவது கண்! - ‘புரியாத புதிர்’ விமர்சனம் கேமராக்கள் சூழ் உலகு இது. இங்கு எவ்வளவு பத்திரமாக இருந்தாலும், ஓடி ஒளிந்தாலும் ஆயிரமாயிரம் கண்கள் நம்மைக் கண்காணித்துக்கொண்டுதான் இருக்கின்றன. மொபைல் கேமராக்களால் ஏற்படும் பிரச்னைகள், சிக்கல்கள், பழிவாங்கல்களைப் பதிவுசெய்திருக்கிறது ‘புரியாத புதிர்.’ வளரும் இசைக் கலைஞன் கதிர் (விஜய் சேதுபதி). பப் ஒன்றில் டிஜே-வாக இருக்கும் அர்ஜுனன் மற்றும் டிவி சேனல் ஒன்றில் வேலைசெய்யும் நண்பனுடன் வசித்துவருகிறார். மழை நாளொன்றில் விஜய் சேதுபதியின் கண்ணில்படும் காயத்ரிக்கும் விஜய் சேதுபதிக்கும் காதல். எல்லாம் சரியாக நகரும்போது, காதலியின் அந்தரங்க வீடியோ ஒன்று விஜய் சேதுபதியின் …
-
- 4 replies
- 1.5k views
-