வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
நயன்தாராவின் அடுத்த அதிரடி தென்னிந்தியத் திரையுலகத்தில், ஒரு நாயகி இவ்வளவு சம்பவளம் வாங்குவாரா என்று, ஏற்கெனவே வியக்க வைத்தவர் நயன்தாரா. தற்போது மீண்டும் அவருடைய சம்பளத்தை உயர்த்தி, அவருடைய அடுத்த அதிரடியை ஏற்படுத்தியிருக்கிறார். நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ளது. இந்த மாதக் கடைசியில் 'இமைக்கா நொடிகள்' படம் வெளியாக உள்ளது. தற்போது நயன்தாரா தமிழில். 'விஸ்வாசம், கொலையுதிர் காலம், சிவகார்த்திகேயன் படம் எனச் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் மலையாளத்திலும் தலா ஒவ்வொரு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். நயன்தாரா அவருடைய சம்பள…
-
- 0 replies
- 389 views
-
-
தமிழ், மலையாளாம், தெலுங்கு என மூன்று மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தற்போது கவர்ச்சியாக நடிக்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம், அவரது காதலர் விக்னேஷ் சிவன் கவர்ச்சியாக நடிக்க கூடாது என தடை போட்டுள்ளாராம். தமிழ் சினிமா நடிகைகளில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா. சில படங்கள் நயன்தாராவுக்காகவே ஓடியது. தொடர் வெற்றி படங்களால் தற்போது உச்சத்தில் இருக்கும் நயன்தாரா, தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என அடம் பிடிக்கிறாராம். கதைக்கு தேவைப்பட்டால் தாராளமாக கவர்ச்சியாக நடிப்பவர் நயன்தாரா, ஆனால் தற்போது பாபு பங்காரம் படத்தில் பாடல் காட்சியில் அரைகுறை ஆடைகள் அணிந்து ந…
-
- 2 replies
- 542 views
-
-
நயன்தாராவின் சுவாரஸ்ய ஃப்ளாஸ்பேக்! ஒவ்வொரு படத்திலும் நடிப்பால் வித்தியாசம் காட்டி தமிழில் டாப் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. முதல் தமிழ் படத்திலேயே முன்னணி நடிகரான சரத்குமாருடன் 'ஐயா' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். தொடர்ந்து இவர் கொடுத்த பட வெற்றிகளும் அவரின் நடிப்பும் ரசிகர்களின் மனதில் இவரை நம்பர் ஒன் நடிகையாக மாற்றியது. இவரின் நடிப்பின் மூலம் திருப்புமுனை கொடுத்த படங்ககளைப் பற்றியான ஒரு சின்ன கொசுவர்த்தி ரிவைண்ட்.. யாரடி நீ மோகினி: மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷுடன் 2008ல் இணைந்து நடித்தப் படம் யாரடி மோகினி. கீர்த்தி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நயன்தாராவின் அறிமுக காட்சியிலேயே ஸ்கோர் செய்திருப்பார். “எங்கேயோ பா…
-
- 1 reply
- 610 views
-
-
நயன்தாராவின் காதலர்களின் வரிசையில் புதிதாக ஒரு பிரபலமான தயாரிப்பாள மற்றும் நடிகராகவுள்ள அரசியால் வாரிசு பிரபலத்தின் பெயர் ஒன்றும் சேர்ந்துள்ளது. காதல் சர்ச்சைகளுக்கும் நயன்தாராவுக்கும் அப்படி என்ன பொருத்தமோ தெரியவில்லை. நயன்தாரா விட்டாலும் ஊடகங்களின் கிசுகிசுக்கள் அவரை விடுவதாக இல்லை. அண்மையில் தமிழகத்தின் குமுதல் ரிப்போட்டரில் நம்பர் நடிகைக்கும் அரசியல் வாரிசு நடிகருக்கும் காதல் என புதியதொரு பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கிறார்கள். ஏற்கனவே சிம்புவுடன் காதல் முறிவு. பின்னர் திருமணம் முடித்த பிரபுதேவாவுடன் திருமணம் வரையில் சென்ற நயன்தாராவின் காதலும் பிரிவில் முடிந்தது. இதன்போது நயன்தாராவுக்கு ஏகப்பட்ட பொருளாதார நஷ்டம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இவற்றுக்கிடையே …
-
- 0 replies
- 490 views
-
-
நயன்தாரா கால்ஷீட்டை நாங்கள் வீணாக்கவில்லை என்றார் தயாரிப்பாளர் போஸ். லிங்குசாமி இயக்கும் பையா படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். போஸ் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிக்க ரூ. 1 கோடிக்கும் அதிகமாக நயன்தாராவுக்கு சம்பளம் பேசப்பட்டது. இதுவரை எந்த நடிகைக்கும் இவ்வளவு அதிக சம்பளம் தராததால் இது தமிழ் திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், Ôசம்பளத்தை குறைக்கக் கூறியதால் லிங்குசாமி படத்திலிருந்து விலகுவதாக நயன்தாரா அறிவித்தார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தயாரிப்பாளர் போஸ் கூறியதாவது: நயன்தாராவுக்கு முதலில் பேசப்பட்ட சம்பளத்தை, சமீபத்தில் குறைத்துக்கொள்ள சொன்னது உண்மைதான். சமீபகாலமாக ப…
-
- 0 replies
- 816 views
-
-
நயன்தாராவுக்கும் கோயில்: 'சாதனை' படைக்கத் துடிக்கும் ரசிகர்கள்! ரசிகர்களின் பைத்தியக்காரத்தனத்துக்கும், விளம்பர மோகத்துக்கும் ஒரு முற்றுப் புள்ளியே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. குறிப்பாக திருச்சிக்காரர்கள், இதில் டபுள் பிஎச்டி வாங்குமளவுக்கு தேறிவிட்டார்கள். நடிகைகளுக்கு கோயில் கட்டும் அரிய திருப்பணியை ஆரம்பித்து வைத்தவர்களும் இவர்கள்தான். இவர்களைப் பார்த்து, சும்மா இருக்க முடியாமல் நெல்லையைச் சேர்ந்த சிலர் எங்கோ ஒரு கிராமத்தில் நமீதாவுக்கு கோயில் கட்டியதாக அறிவிக்க, அதை போலீசார் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு தேட வேண்டி வந்தது. இப்போது மீண்டும் திருச்சியைச் சேர்ந்த சிலர் கோயில் திருப்பணியைத் துவங்கிவிட்டனர். இந்த முறை அவர்களுக்கு நயன்த…
-
- 147 replies
- 18.2k views
-
-
நயன்தாராவுடன் அமெரிக்காவில் பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன் நானும் ரௌடிதான் இயக்குனர் விக்னேஷ் சிவன், தன்னுடைய பிறந்த நாளை நயன்தாராவுடன் அமெரிக்காவில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. இப்போது 3 மொழி படங்களிலும் ‘பிசி’யாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் நயன்தாராவும், சிம்புவும் காதலிப்பதாக கூறப்பட்டது. பின்னர் பிரபுதேவாவுடன் நெருங்கி பழகினார். அவரை திருமணம் செய்து கொள்வதற்காக நயன்தாரா மதம் மாறியதாகவும் செய்திகள் வெளியாகின. தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்…
-
- 4 replies
- 517 views
-
-
திரிஷா திரிஷா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘சகலகலா வல்லவன்’. இதில் ஜெயம் ரவி, அஞ்சலி, சூரி, விவேக், பிரபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சுராஜ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் ஜூலை 31ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் திரிஷா, அஞ்சலியுடன் இணைந்து நடித்திருக்கிறார். இது போல் எந்த நடிகையுடன் இணைந்து நடிக்க ஆசை என்று திரிஷாவிடம் கேட்டதற்கு, நயன்தாராவுடன் இணைந்து நடிக்க ஆசை என்று கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ‘நயன்தாரா என்னுடைய நெருங்கிய தோழி. அவருடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஏற்கனவே, என்னையும் நயன்தாராவைவும் வைத்து பெண்களை மையப்படுத்தும் கதையம்சம் கொண்ட ஒரு படத்தை இயக்க வெங்கட் பிரபு மு…
-
- 0 replies
- 427 views
-
-
கொலிவுட் நாயகன் சிம்பு தான் எந்த படத்திலும் நாயகி நயன்தாராவுடன் நடிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். நயன்தாராவோடு என்னை இணைத்து பேசாதீர்கள். அவருடன் எந்த படத்திலும் நடிக்கவில்லை, நடிக்கவும் மாட்டேன் என்று உறுதியாக அறிவித்திருக்கிறார் சிம்பு. வல்லவன் படத்தில் சிம்புவின் ஜோடியாக நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது என்றும் திடீரென்று ஏற்பட்ட பிரச்னையினால் இருவரும் பிரிந்தனர் என்றும் தகவல் வெளியானது. தற்போது பிரபுதேவாவுடனான காதல் முறிவினைத் தொடர்ந்து, சிம்பு தனது படங்களில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிப்பதாக தகவல் வெளியானது. தான் நடிக்கும் வட சென்னை படத்தில் அவரை நாயகியாக நடிக்க அழைப்பு விடுத்ததாகவும், வேட்டை மன்னன் படத்தில் ஒரு பாட…
-
- 4 replies
- 3.3k views
-
-
பில்லா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா வேடத்தில் நடிக்கிறார் அனுஷ்கா. அவர் கூறியதாவது:பில்லா படத்தில் நயன்தாரா கவர்ச்சியாக நடித்திருந்தார். தெலுங்கில் அதே வேடம் எனக்கு தரப்பட்டுள்ளது. நானும் இதில் நீச்சல் உடையில் நடிக்கிறேன். அதனால் நயன்தாராவுக்கு போட்டியா எனக் கேட்கிறார்கள். போட்டி போட¢டு நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். பொங்கலுக்கு வெளியாகும் வில்லு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார். இப்போது வேட்டைக்காரன் படத்தில் விஜய்க்கு ஜோடி சேர்ந்துள்ளீர்களே என்றெல்லாம் ஒப்பிடுகிறார்கள். அதையெல்லாம் நான் யோசிப்பதில்லை. ஒவ்வொரு நடிகைக்கும் ஓர¤டம் சினிமாவில் இருக்கிறது. எனக்கான இடத்தில் நான் இருக்கிறேன். என்னைப் பற்றி கிசு கிசு அதிகம் வெளியாவதை பற்றி எத…
-
- 0 replies
- 1.2k views
-
-
பானு. தமிழ்நாட்டுக்கு 'தாமிரபரணி' கொடுத்திருக்கும் மலையாள தேவதை. படித்தது ப்ளஸ்டூ, நடித்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் என சூப்பர் குட் பயோடேட்டாவுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். பேச்சில், சிரிப்பில், பார்வையில் என பானுவின் எல்லா செயல்பாடுகளிலும் தடுமாறி விழுகிறது மனசு. "என்னோட முதல் படம் 'அச்சன் உறங்காத வீடு.' லால்ஜோஸ் சார் இயக்கிய படம். படம் சூப்பர் ஹிட்டாக, மலையாள வாலிபர்களின் மனசுக்குள் எனக்கும் ஒரு நாற்காலி போடப்பட்டது. ஹரி சார் தாமிரபரணிக்கு நடிக்க கூப்பிட்டப்ப அவருடைய படங்களை பற்றி கேள்விப்பட்டு அடுத்த நிமிடமே ஓ.கேன்னு தலையாட்டிட்டு தமிழ்நாட்டுக்கு ப்ளைட் ஏறிட்டேன். இதோ இப்போ பானுவா உங்க முன்னாடி. 'தாமிரபரணி' வெற்றி படமானதுல்ல எனக்கு ரொம்ப சந்தோஷம் விஷாலோ…
-
- 2 replies
- 1.6k views
-
-
நடிகை நயன்தாரா பிறப்பால் ஒரு கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர். பின் பிரபு தேவா மீது கொண்ட காதலால் இந்து மதத்திற்கு மாறினார், பிறகு அந்த காதல் தோல்வியில் முடிந்த கதை தான் நமக்கே தெரியும். தற்போது ஆன்மிகத்தில் மூழ்கியிருக்கும் நயன்தாரா, சமீபத்தில் கூட வட இந்திய கோவிலுக்கு சென்று வந்தார். இவர் பல படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், ஏதோ ஒரு மன விரக்தியில் தான் இருந்து வருகிறார். மனஅமைதி கிடைக்க செய்யும் முயற்சியில் நித்யானந்தா ஆசிரமத்தை சேர்ந்த சிலர் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் நித்யானந்த ஆசிரமத்துக்கு வருமாறு நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். நிறைய பெண்கள் ஆசிரமத்துக்கு வந்து தியானம், யோகா மூலம் கவலைகளை மறக்கிறார்கள். எனவே நீங்களும் ஆசிரமத்துக்க…
-
- 5 replies
- 977 views
-
-
அண்மையில் சென்னை வந்திருந்த பிரபுதேவா, தன் மனைவி ரம்லத்திடம் எல்லா விஷயங்களையும் போட்டு உடைத்து ‘நாம் பிரிவதுதான் ஒரே வழி’என்பதை குழப்பமில்லாமல் கூறிவிட்டதாக தகவல்.இதனால் சென்னை அண்ணாநகர் வீட்டில் ஒரு நள்ளிரவில் மிகப் பெரிய ரகளையே நடந்து அந்த நள்ளிரவு முழுவதும் விசும்பல்களில் முடிந்திருக்கிறது. இப்போதைய நிலவரப்படி,விவாகரத்து செட்டில் மெண்ட்டிற்கும் கண்ணீருடன் ரம்லத் ஒப்புக் கொண்டுவிட்டதாக தகவல்.அதன்படி அண்ணா நகர் வீடு, மூன்று கோடி ரூபாய் ரொக்கம், 180 பவுன் நகை, தனது இரண்டு குழந்தைகளின் முழு படிப்புச் செலவு ஆகியவற்றை பிரபுவிடமிருந்து ஏற்க சம்மதித்துள்ளாராம். இவை தவிர, ஐம்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸை,தன் அன்புப் பரிசாக நயன்,பிரபுதேவா மூலம் ரம்லத்திற்கு அனுப்ப…
-
- 0 replies
- 935 views
-
-
நயன்தாராவை பார்த்தால் வியப்பாக இருக்கிறது: ஜோதிகா சிறப்பு பேட்டி ஜோதிகா | கோப்புப்படம். தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 2018-ம் ஆண்டு சிறப்பான ஆண்டு என்கிறார் நடிகை ஜோதிகா. பாலாவின் 'நாச்சியார்', மணிரத்னத்தின் 'செக்கச் சிவந்த வானம்', ராதா மோகனின் 'காற்றின் மொழி', புதிதாக இரண்டு படங்களில் ஒப்பந்தம் என்று பிஸியாக இருக்கிறார் ஜோ. அவருடனான சந்திப்பில்.., 'செக்கச் சிவந்த வானம்' இசை வெளியீட்டு விழாவில் அத்தனை நடிகர்களும் வந்திருந்தனர். உங்களைப் பார்க்க முடியவில்லையே... அந்த நேரத்தில் என்னுடைய குழந்தைகளுக்கு விடுமுறை விட்டிருந்தது. இமயமலைக்கு ட்ரெக்கிங் சென்றிருந்தோம். அவர்களின் விடுமுறையின்போது பொதுவ…
-
- 0 replies
- 547 views
-
-
நயன்தாராவை நான் மறந்து விட்டேன், என்று நடன இயக்குனரும் நடிகருமான பிரபுதேவா கூறியுள்ளார். பிரபுதேவா அளித்துள்ள பேட்டியில், நான் இப்போது பாலிவுட் படங்களில் பிஸியாக இருக்கிறேன். இந்தி பட வேலைகள் காரணமாக தான் மும்பைக்கு குடிபெயர்ந்து விட்டேன். ஒரு படம் தொடங்குவதற்கு முன்பு ஏகப்பட்ட வேலைகள் உள்ளன. நடிகர்–நடிகைகள் தேர்வு, மேக்கப் டெஸ்ட், உடையலங்காரத்துக்கு அனுமதி என நிறைய வேலைகள் இருக்கிறது. அதையெல்லாம் சென்னையில் இருந்து கொண்டு செய்ய முடியாது. என் சொந்த வாழ்க்கையில் சில பாதிப்புகள் ஏற்பட்டது உண்மை. ஆனால், அது என் தொழிலை பாதிக்கவில்லை. கடவுள் அருளால், தொழில் நன்றாகவே நடக்கிறது. நயன்தாரா விஷயத்தில் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்து இருக்கிறது. மனமுதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. நட…
-
- 0 replies
- 348 views
-
-
-
- 6 replies
- 1.4k views
-
-
கதாநாயகியாக ஒரு திருநங்கை நடித்திருக்கும் தமிழ்ப் படம்! 'ஊரோரம் புளியமரம்’ வகையறாப் பாடல்களுக்கு கேலிப் பொருளாக மட்டுமே பயன்பட்டு வந்த திருநங்கை சமூகத்தைப்பற்றி நேர்மறையாகப் பேசுகிறாள் இந்த 'நர்த்தகி’. வணிக நோக்கம் தவிர்த்த, இந்த முயற்சிக்காகவே இயக்குநர் விஜயபத்மாவுக்கும் தயாரிப்பாளர் கீதாவுக்கும் வாழ்த்துக்கள்! தன் ஒரே மகன் தன்னைப்போல சிலம்பு வீரனாக வளர வேண்டும் என்று நினைக்கும் தந்தை, கணவன் காட்டுவதே உலகம் என்று தனது ஆசாபாசங்களைக்கூட புதைத்துக்கொண்டு வாழும் அம்மா, விவரம் புரிந்த வயதில் இருந்தே தன்னைக் கணவனாக மனதில் பதித்துக்கொண்டு வாழும் மாமன் மகள்... இப்படி ஒரு சூழலில், ஒருவன் தன்னைப் பெண்ணாக உணர்ந்தால்? சிறுவன் சுப்பு மனதளவில் தன்னைப் பெண்ணாக உணர்கிறா…
-
- 2 replies
- 1.7k views
-
-
நல்ல ஆங்கில படங்கள். ஆங்கில படங்கள் பார்ப்பதென்றால் எனக்கு அலாதி பிரியம். யாழ்ப்பாணத்தில் ரீகல்,றியோ,மனோகரா,சிறீதர்,லிடோ,ராஜா போன்ற தியேட்டர்களில் ஆங்கிலப் படங்கள் வரும்.ரீகல் மாத்திரம் தான் நிரந்தர ஆங்கில எனக்கு பிடித்த தியேட்டர்.சிறுவயதிலேயே அப்பா போர்ன் பிறீ,தெ இன்கிறடிபில் ஜேர்ணி இந்த இரு படத்திற்கும் கூட்டிக் கொண்டு போனார்.பின்னர் வளர எத்தனையோ படங்கள் பார்த்தேன்.இப்பவும் எனது நம்பர் வன் படம் வன் புலு ஓவெர் தெ கூகூஸ் நெஸ்ட் அங்குதான் பார்த்தேன். எனது கட்டாய லிஸ்டில் கொஞ்சப் படங்களுள்ளது ஆங்கில பட பிரியர்கள் விரும்பினால் பார்க்கவும். 2.கோட் பாதெர். 3.கிறமர் Vஸ் கிறமர் 4.டக்சி ட்ரிவெர் 5.மிட்னைட் எக்ஸ்பிரஸ் பட்டியல் ரொம்ம்ப நீளம் சந்தர்ப்பம் வரும் போது ஒ…
-
- 6 replies
- 5.9k views
-
-
நல்ல காரியம் ஒன்றிற்காக திருமணத்திற்கு போன் எடுத்து வர வேண்டாம் என அழைப்பு விடுத்த ஜார்ஜ் க்ளுனி !! அமெரிக்க நடிகர் ஜார்ஜ் க்ளுனியும் பிரிட்டனைச் சேர்ந்த அலாமுதீன் ஆகியோரின் திருமணம் வெனிஸ் நகரத்தில் மூன்று நாட்கள் கோலாகளமாக நடைபெற உள்ளது. திருமணத்தில் ஹாலிவுட் நட்சத்திரங்களான பிராட் பிட்,ஆஞ்சலினா ஜொலி,டாம் க்ரூஸ் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். திருமணத்திற்கு வரும் அனைவருக்கும் மாப்பிள்ளை ஒரு கட்டளை விடுத்துள்ளார். யாரும் செல்போன் எடுத்து வர வேண்டாம் என்பதே அவரின் வேண்டுகோள். திருமணத்தில் எடுக்கப்படும் அனைத்து புகைப்பட உரிமைகளையும் அமெரிக்கன் வோக் என்னும் வார இதழுக்கு விற்றுள்ளார். இதில் கிடைக்கும் பணம் அங்குள்ள சேரிடிக்கு நன்கொடையாக சேறும் என்று தெரிவித்துள்ளா…
-
- 3 replies
- 910 views
-
-
மதுரை: தான் இறந்து விட்டதாக செய்தி பரப்பும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நடிகர் செந்தில் மதுரை போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போதுநகைச்சுவை நடிகர் செந்தில் இறந்து விட்டதாகச் செய்திகள் வாட்ஸ் அப்பில் பரவின.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், நான் நலமுடன் இருக்கிறேன் என்று ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.பின்னர் அந்த வதந்திகள் பரவவில்லை. இந்நிலையில், மீண்டும் நேற்று(திங்கள்) முதல் வாட்ஸ் அப்பில்,அதே வதந்தி பரவி வருவதாக நடிகர் செந்தில் கூறியுள்ளார்.இது தொடர்பாக மதுரை போலீஸாரிடம் "தான் இறந்து விட்டதாக வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . இது திமுகவினரின் தூண்டுதல் பேரில…
-
- 0 replies
- 340 views
-
-
நீண்டநாட்களின் பின்னர் நேற்று ஒரு தமிழ் திரைப்படம் முற்றாகப் பார்த்து முடிக்க முடிந்தது. அதிக எதிர்பார்ப்பு எதுவுமின்றி இன்றைக்கு ஒரு தமிழ் படம் பார்த்தே தீருவது என்ற அடம்பிடித்த மனநிலையில் உட்கார்ந்து பார்க்கத் தொடங்கினேன். மிகவும் சாதாரணமான, அனைவரிற்கும் பழகிப்போன, ஒரு கடுகளவு கதை மூலம் கடலளவு சங்கதிகளை இயக்குனர் பேசியுள்ளார். அதற்கும் மேலால், பிரசங்கம் செய்யாது, கருத்தாடியுள்ளார். அதுவும் சம்பளத்திற்காய் சிந்திக்கும் மட்டத்தினரிற்காக அல்லாது சாதாரண மக்களிற்காக, நாளாந்த மனிதர்கள் சிந்திக்கவேண்டும் என்பதற்காக பல ஆழமான விடயங்களை அலட்டல் இன்றி, அரிதாரம் இன்றி சாதாரண பாசையில் இயக்குனர் பேசியுள்ளார். மொத்தத்தில், தமிழ் படம் தானே என்ற ஒரு ஏனோ தானோ போக்கில் இப்படத்தைப் ப…
-
- 11 replies
- 2.8k views
-
-
விநாயகா http://www.rajtamil.com/2012/02/watch-vinayaga-movie-online/ கார்திக் அனிதா http://www.uyirvani.com/forums/index.php/topic/23000-karthik-anitha-watch-tamil-live-movie/ ...தொடரும்
-
- 7 replies
- 1.5k views
-
-
நல்ல படம் மக்களே... ஆனா, கபாலியை கலாய்ச்சது ஏன்? - 'மதுரவீரன்' விமர்சனம் Chennai: சாதியைத் தூக்கிப்பிடித்துக் கொண்டாடும் மண்வாசனை சினிமாக்களுக்கு மத்தியில், 'இன்னும் எத்தனை நாளைக்குத்தான்யா இப்படி சண்டை போட்டுக்கிட்டே இருக்கப்போறீங்க?' என எழுந்திருக்கும் சமாதானக் குரல்தான், 'மதுரவீரன்'. சுத்துப்பட்டு கிராமங்கள் முழுவதும் மதிக்கும் மனிதர், சமுத்திரக்கனி. சாதிகளே வேண்டாம் எனவும், உழைப்பவனே முதலாளி எனவும் கருத்துரை பரப்பும் கருப்புச் சட்டை போட்ட கம்யூனிஸ்ட்காரர். சாதிகளால் பிளவுபட்டுக் கிடக்கும் ஊர்களை ஜல்லிக்கட்டால் இணைக்கமுடியும் என நம்புகிறார். அவரின் தீவிர முயற்சியால், ஜல்லிக்கட்டும் நடக்கிறது. ஆனால், நினைத்ததற்கு மாறாகப் பகை ம…
-
- 0 replies
- 264 views
-
-
நல்ல விஷயம்ப்பா... இன்னும் நல்லாப் பண்ணியிருக்கலாம்ப்பா! - `எழுமின்' விமர்சனம் விகடன் விமர்சனக்குழு குழந்தைகளுக்கான படங்கள் என்பது சுத்தமாக நின்றுவிட்ட கோலிவுட் சூழ்நிலையில் குழந்தைகளுக்குத் தற்காப்புக்கலை மிகவும் அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தி வெளியாகியுள்ளது `எழுமின்'. கோடிகளில் புரளும் தொழிலதிபரான விவேக்கிற்கு தன் மகனை பாக்ஸிங் சாம்பியனாக்க வேண்டும் என்பதுதான் லட்சியம். அவரின் மகனும் அதற்கேற்றார்போல நிறைய போட்டிகளில் வெற்றி பெறுகிறார். அவரின் நண்பர்களும் சிலம்பாட்டம், கராத்தே, குங்ஃபூ போன்றவற்றில் பயிற்சி பெற்று வருகிறார்கள். மகனுக்காக, அவனின் நண்பர்களுக்காக ஒரு பயிற்சி மையமும் தொடங்குகிறார் விவேக். இங்கேதான் ஒரு ட்விஸ்ட். அதன்பின் என்ன நடக்கிறது எ…
-
- 0 replies
- 544 views
-
-
ஸ்ரேயாவை தமிழ் படங்களில் கண்டு நெடுநாள் ஆகிவிட்டது. கடைசியாக ஜீவாவுடன் ‘ரௌத்திரம்’ படத்தில் நடித்தார். 2011-ல் இப்படம் வந்தது. அதன் பிறகு விக்ரமுடன் ராஜபாட்டையில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடிவிட்டு போனார். கன்னடத்தில் ஸ்ரேயா நடித்த ‘சந்திரா’ படம் சில மாதங்களுக்கு முன் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. ரஜினி, விஜய், விக்ரம், விஷால், தனுஷ் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக வந்த அவர் தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக நடிக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. இன்னொரு புறம் புதுமுக நடிகைகள் வரத்தும் ஸ்ரேயாவை ஓரம் கட்ட வைத்துள்ளது. இதுகுறித்து ஸ்ரேயா கூறியதாவது:- நான் சினிமாவுக்கு வந்து பதிமூன்று வருடங்கள் ஆகிவிட்டன. எனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி. சினி…
-
- 1 reply
- 426 views
-