Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. சென்னை: முஸ்லிம்களை தவறாகச் சித்தரிப்பது கமலின் வழக்கம். எனவே அந்தப் படம் வெளியாகும் முன்பு இஸ்லாமிய அமைப்புகளுக்குக் காட்ட வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கமல் எழுதி இயக்கி தயாரித்து நடித்துள்ள விஸ்வரூபம் படம் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது. தியேட்டர்களுக்கு வரும் முன் இந்தப் படம் டிடிஎச்சில் வெளியாகும் என்பதில் ஆரம்பித்து, முஸ்லிம்கள் எதிர்ப்பு வரை சர்ச்சைகள் கொஞ்சமல்ல. இந்தப் படத்தை வெளியாகும் முன்பு தாங்கள் பார்க்க வேண்டும் என்று முன்பு சில இஸ்லாமிய அமைப்புகள் கேட்டிருந்தன. ஒருவேளை கமல் முஸ்லிம்களை தவறாக சித்தரிக்காவிட்டால், 10000 ஏழைகளுக்கு பிரியாணி விருந்தளிப்போம் என்று கூறியிருந்தனர். அதற்கு பதிலளித்த கமல், அண்டா அ…

  2. மூடப்பட்டது திரையரங்கம்... 'சாந்தி'யை தொலைத்த சிவாஜி ரசிகர்கள்! வணிக வளாகங்களாக மாறிவரும் தியேட்டர்களின் வரிசையில் நடிகர் திலகம் சிவாஜியின் 'சாந்தி'யும் இடம்பெற்றுவிட்டது. அதன்படி நடிகர் சிவாஜிகணேசன் குடும்பத்தினருக்கு சொந்தமான 'சாந்தி தியேட்டர்' நேற்றுடன் தன் பொழுதுபோக்கு பணியை நிறுத்திக்கொண்டது. 1952 ல் பகுத்தறிவு பேசிய பராசக்தி திரைப்படத்தில், 'சக்ஸஸ்... சக்ஸஸ்...' என கலைஞரின் வசனம் பேசி அறிமுகமான அந்த புதுமுக நடிகருக்கு, அன்றுமுதல் வாழ்வின் அத்தனை விஷயங்களும் சக்ஸஸ்தான். நடிக்கத்துவங்கிய சில படங்களிலேயே, வெற்றிகரமான நடிகராக பரிமளித்த அவரது ஆசைகளில் ஒன்று, தான் சம்பாதித்த பணத்தில் தியேட்டர் கட்டுவது. நடிப்பின் அத்தனை பரிமாணங்களையும் வெளிப்படு…

    • 1 reply
    • 965 views
  3. Started by Innumoruvan,

    நெடுநாளா பார்கவேண்டும், ஆனால் நல்ல கொப்பி கிடைத்தால் மட்டுமே பார்ப்பது என்றிருந்து, இன்று தான் மூடுபனி படம் பார்க்க முடிந்தது—லீவில் நிற்பதால் பகலில் பார்க்க முடிந்தது. நாங்க பாராட்டித்தான் பாலுமகேகந்திராவின் திறமை வெளிப்படவேண்டிய நிலை இல்லை, இருந்தும் மனதில் பட்ட சிலதைப் பகிர இந்தச் சிறிய பதிவு. மற்றவர்களிற்கு என்னமாதிரியோ தெரியாது, ஆனால் எனக்கு பிரியா படப்பாடல்கள் குறிப்பா அக்கரச்சீமை அழகினிலே மற்றும் டார்லிஙடார்லிங் பாடல்களைக் கேட்கும் போது ஏதோ ஒரு நேரக்குடவைக்குள் நுழைந்ததைப் போல, அதுவும் கருமேகம் நிறைந்து பகலில் நன்றாக இருட்டி, சாதுவாகத் தூறல் தொடங்கி ஆனால் இன்னும் மழை பொழியத் தொடங்கு முன்னான ஒரு மழைநாளில் ஊரில் பூத்துக்குலுங்கும் சீமைக்கிளுவை மரத்தின் கீழ் நின…

  4. மூத்த ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார் பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார். அவருக்கு வயது 69. தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா இயக்கிய படங்களில் 'நிழல்கள்' தொடங்கி 'பொம்மலாட்டம்' வரை ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர் கண்ணன். பாரதிராஜாவுக்கு மிக நெருங்கிய நண்பராகவும் வலம் வந்தார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அது பலன் அளிக்காததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் பிற்பகல் 2 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தது. Powered by Ad.Plus ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று (ஜூன் 13) காலமானார். அவருக்கு வயது 69. …

  5. மூன்று வருடங்கள் கழித்து நயன்தாராவை இயக்கியுள்ளேன்: விக்னேஷ் சிவன் குஷி! லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள கோலமாவு கோகிலா (கோகோ) படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நயன்தாரா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இசை - அனிருத். ஆகஸ்ட் 17 அன்று வெளிவரவுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடலைத் தான் இயக்கியுள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். இது இப்படத்தின் விளம்பரப் பாடல். ரவி வர்மன் போன்ற ஒரு மேதையும் இணைந்து பணியாற்றியுள்ளேன். நயன்தாராவை மூன்று வருடங்கள் கழித்து இயக்கியுள்ளேன் என்று எழுதியுள்ளார் விக்னேஷ் சிவன். …

  6. மூளையில் ரத்தக்கசிவு: லண்டன் மருத்துவமனையில் பாம்பே ஜெயஸ்ரீ JegadeeshMar 24, 2023 18:26PM பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் இன்று (மார்ச் 24 ) அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார் பாம்பே ஜெயஸ்ரீ. தமிழில் இவர் பாடிய ‘வசீகரா’, ‘ஒன்றா ரெண்டா ஆசைகள்’, ‘யாரோ மனதிலே’ உள்ளிட்ட பல பாடல்கள் இன்றும் ரசிகர்களின் பேவரைட் ப்ளே லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்திற்கு இசைக் கச்சேரி நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அங்கு எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம்ஏற்பட்டு ச…

  7. இன்று தமிழ் தொலைக்காட்சிகளில் சினிமா.சினிமா..சினிமா. 'சினிமாவைத் தவிர வேறொன்றும் தெரியாது பராபரமே!' என்கிறார்கள் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள். சினிமாவை விட்டால் வருடக்கணக்கில் நீளும் அரைத்த மாவையே அரைக்கும் நெடுந்தொடர்கள். நல்ல நிகழ்ச்சிகளும் வருகின்றன. அவை மிக சொற்ப அளவில் உள்ளன என்பது தான் நம் ஆதங்கமே. ஊறுகாய் போலத் தொட்டுக்கொள்ள வேண்டிய விஷயங்களே சாப்பாடாய் ஆகிப்போனது வருந்தத்தக்க விஷயம். நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு கெட்ட விஷயங்கள் என்று நினைப்பவற்றைப் புறந்தள்ளிவிட வேண்டியது தானே என்று ஒரு குரல் கேட்கிறது. அய்யா...உங்கள் அளவுக்குப் பக்குவம் அடைந்தவர்கள் எண்ணிக்கை மிக மிக மிகக் குறைவு என்பது தான் வேதனையே. உடலில் புண் இருந்தால் அதைச்சுற்றி அரிப்…

  8. "வி "ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி--எஸ். ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் 'கங்காரு'. இது,'உயிர்' 'மிருகம்' 'சிந்து சமவெளி' படங்களைத் தொடர்ந்து சாமி இயக்கியுள்ள படம். அர்ஜுனா, வர்ஷா, ப்ரியங்கா, ப்ரீத்திதாஸ் நடித்துள்ளனர். பிரபல பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்கள் வைரமுத்து. 'கங்காரு' பாடல்கள் வெளியீடு விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடந்தது..ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார். வைரமுத்து பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்து பேசும் போது ''பாடகராக அறிமுகமான ஸ்ரீநிவாஸ் பாடகர்களைப் பாடவைக்கும் இசையமைப் பாளராக உருவாகி இருப்பதில் மகிழ்ச்சி. பாடலில் மெட்டு உயிர். மொழி உருவம் என்று தொகுப்பாளர் கூ…

  9. மெட்ராஸ் கஃபே -- யமுனா ராஜேந்திரன் மெட்ராஸ் கஃபே படத்தின் உருவாக்கம் குறித்து அதனது இயக்குனர் சுஜித் சர்க்கார் சொல்லும்போது இப்படம் இலங்கைப் பிரச்சினை குறித்த படம் என்றும், ராஜீவ்காந்தி படுகொலை குறித்த படம் என்றும், நிஜங்களின் அடிப்படையிலான புனைவுப்படம் எனவும் குறிப்பிடுகிறார். ஏழு ஆண்டுகள் இப்படத்தின் திரைக் கதைக்காக ஆய்வு மேற்கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். படத்தின் ஓரு காட்சியில் கூட தமிழ் இனப் பிரச்சினைக்கான வேர்கள் என்ன என்பது குறித்தோ, தமிழர்கள் ஏன் ஆயுதமேந்தினார்கள் என்பது குறித்தோ, ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை, இந்திய ராணுவத்தினரின் படுகொலைத் தாக்குதல்கள் குறித்தோ எந்தவிதமான உரையாடல்களும் இடம்பெறவில்லை. நிஜத்தில் அவருக்குப் பிரச்சினையின் அடிப்படைகள் குற…

  10. தமிழர்களையும் ஈழப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும், மெட்ராஸ் கஃபே படத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. குறிப்பாக மாணவர்கள் அந்தப் படத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்து வருகிறார்கள்.திரையரங்க உரிமையாளர்கள் தமிழகத் தில் இப்படத்தைத் திரையிடுவதில்லை என முடிவு செய்துவிட்டனர். இன்னொரு புறம் மெட்ராஸ் கஃபே படத்தை எதிர்ப்பது கருத்துவுரிமைக்கு எதிரானது என்கிற கருத்தும் வழக்கம் போல் பரப்பப் பட்டு வருகிறது. அதுவும் வட இந்திய ஊடகங்களும் ஆங்கில ஊட கங்களும் விஸ்வரூபம், தலைவா, மெட்ராஸ் கஃபே ஆகிய படங்களை தமிழ்நாட்டில் வெளியிட எழுகின்ற சிக்கலை மையப் படுத்தி, தமிழ்நாடு கருத்துவுரிமைக்கு எதிரான மாநிலமா? என சூடான விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த மூன்று படங்களையும் ஓரே நேர்க்கோட்டில்…

  11. ‘மெட்ராஸ் கபே’ படத்தை பாராட்டிய நடிகை நீது சந்திராவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவர் தமிழில் ‘யாவரும் நலம்’ பேய் படத்தில் அறிமுகமானார். தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதிபகவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். ‘மெட்ராஸ் கபே’ படத்தை புகழ்ந்து தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஏற்கனவே இப்படத்தில் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக தமிழ் அமைப்புகள் கண்டித்துள்ளன. படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளன. தியேட்டர் அதிபர்கள் இந்த படத்தை திரையிட மறுத்து விட்டனர். இதனால் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் மெட்ராஸ் கபே ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. மெட்ராஸ் கபே படத்தை பார்த்த நீது சந்திரா படம் பிரமாதமாக உள்ளது என கருத்து தெரிவித்து உள்ளார்…

    • 0 replies
    • 400 views
  12. மெட்ராஸ் கபே.. தமிழ் விநியோகஸ்தருக்கு நஷ்டம் 1 கோடி! சென்னை: மெட்ராஸ் கபே படத்தை தமிழகத்திலும் புதுவையிலும் திரையிடாததால் ரூ 1கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாம் அதன் விநியோகஸ்தருக்கு. ஜான் ஆப்ரஹாம், நர்கிஸ் ஃபக்கிர் ஆகியோர் நடிப்பில் உருவான ‘மெட்ராஸ் கபே' திரைப்படம் கடந்த 23-ந் தேதி தமிழகம் - புதுவையைத் தவிர பிற மாநிலங்களில் வெளியானது. இந்த படத்தை ஷூஜித் சர்கார் இயக்கியிருந்தார். ஜான் ஆபிரகாமே தயாரித்திருந்தார். இந்தியில் உருவான இப்படம் தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் படம் தமிழருக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளைத் தவறாகச் சித்தரிப்பதாகவும் உள்ளதாக சர்ச்சை எழுந்தது. படத்தை தமிழில் வெளியிட நீதிமன்றம் தடை செய்த நிலையில், திரையரங்கு உரிமைய…

  13. மெய் சிலிர்க்குது "மேதகு" திரைக்காவியத்தில் இடம்பெற்றுள்ள தமிழுக்கும் அமுதென்று பெயர் என்ற பாடலின் எழுத்து வடிவ காணொளி https://www.facebook.com/100008248091467/videos/2967682880183286/

  14. பட மூலாதாரம்,X/2D ENTERTAINMENT 27 செப்டெம்பர் 2024, 06:35 GMT புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில், 2018ஆம் ஆண்டு வெளியான ‘96’ திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தைப் பெருமளவில் ஈர்த்தது. அப்படத்தை இயக்கிய பிரேம் குமாரின் இரண்டாவது படமான மெய்யழகன் இன்று (வெள்ளி, செப்டம்பர் 27) வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், தேவதர்ஷிணி, இளவரசு, ஸ்ரீதிவ்யா, சுவாதி கொண்டே ஆகியோர் நடித்திருக்கின்றனர். 96 படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். சூர்யா-ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2D எண்டர்டெய்ன்மெண்ட் இப்படத்தைத் தயாரித்திருக்கிற…

  15. மெர்சல் திரைவிமர்சனம் உங்களின் விமர்சனம் நடிகர்கள் Vijay, Samantha, Kajal Agarwal, SJ Surya, Vadivelu இயக்கம் Atlee தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசுகளும், புதுப்படங்களும்தான். அதுவும் இந்த வருடம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பைஏற்படுத்தியிருக்கும் படம் ‘மெர்சல்’. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை அட்லி இயக்கியுள்ளார். பல தடைகளைச் சந்தித்த இப்படம், தீபாவளியன்று வெளியாகுமா என்ற சந்தேகம் அனைவரது மனதிலும் இருந்தது. இந்நிலையில், அனை…

  16. மெர்சல் பட வெற்றிக்கு 'ஜோசப்' விஜய் நன்றி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைG VENKET RAM சர்ச்சைகளுக்கு மத்தியில் தான் நடித்து வெளியான 'மெர்சல்' படத்தை வெற்றியடையச் செய்ததற்கு, நடிகர் விஜய் நன்றி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்தப் படத்திற்கு சில எதிர்ப்புகள் வந்ததாகவும் அந்தத் தருணத்தில், அந்த எதிர்ப்…

  17. கமலின் நம்பிக்கை அஸ்திவாரத்தில் பொக்லைன் வைத்து தோண்ட ஆரம்பித்திருக்கிறார்கள் தியேட்டர் அதிபர்கள். நேற்றுவரை இருந்த நிலைமையை ஒரே நாளில் மாற்றிவிட்டார்கள் அத்தனை பேரும். இந்த விறுவிறுப்பான 'கேம்' எப்படி முடியும் என்றே தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். சுமார் 300 தியேட்டர்காரர்களுக்கு மேல் சந்தித்து தனது நம்பிக்கையை அவர்களுக்கு ஊட்டி விஸ்வரூபம் படத்தை திரையிட ஒப்புதல் வாங்கியிருந்தார் கமல். ஆனால் அத்தனையும் இன்றைய தேதியில் ஒன்றுமில்லாமல் போய்விட்டதாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். சங்கம் பலமாக இருப்பதால் தனித்து செயல்பட அச்சம் கொள்கிறார்களாம் அத்தனை பேரும். இது ஒருபுறமிருக்க, சென்னையில் புகழ் பெற்ற நான்கு காம்பளக்ஸ் தியேட்டர்களில் படத்தை வெளியிடவ…

  18. மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 01 – T .சௌந்தர் நினைவில் விழும் அருவி : காலையில் பாடசாலைக்கு தயாராகிக் கொண்டிருந்த ஆசிரியரான தந்தை , தனது மூன்று வயது மகன் விளையாடிக்கொண்டே தன் எண்ணத்திற்கு ஏதோ ஒரு பாடலையும் பாடிக்கொண்டிருப்பதை உற்றுக் கவனித்தார். பாடலின் வரியையும் அதன் மெட்டையும் அட்ஷரம் பிசகாமல் மகன் பாடிக்கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்த தந்தை , மனைவியை அழைத்து அந்த ஆச்சரியத்தைக் காண்பித்து மகிழ்ந்தார். மகனோ தன் போக்கில் பாடலை முழுமையாகப் பாடி முடித்தான்.தனது பேரபிமானத்திற்குரிய மகாகவி பாரதியின் பாடலை மகன் பாடியதால் தந்தையார் பேருவகையடைந்தார்.தனது அண்ணனைப் போல ஒரு இசைக்கலைஞனாக வருவான் என்று மனதில் நினைத்துக்…

  19. விஜய், திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள குருவி, மே 3ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் முதல் தயாரிப்பில், தரணி இயக்கத்தில் உருவாகியுள்ள கில்லி படமான குருவியின் ஆடியோ சமீபத்தில் ரிலீஸாகி பாட்டுக்கள் ஹிட் ஆகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் படம் மே 1ம் தேதி திரைக்கு வரும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 3ம் தேதிக்கு மாற்றியுள்ளனர். மே 2ம் தேதி அகில இந்திய பந்த் ஒன்றை எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இதையடுத்து மே 3ம் தேதிக்கு பட ரிலீஸை தள்ளிப் போட்டுள்ளனர். படம் முழுக்க முடிந்து விட்டது. சின்னச் சின்ன நகாசு வேலைகளையும் முடித்து விட்டனர். தற்போது பிரசாத் லேப்ஸ் பிரிண்ட் போடும் வேலையில் மும்முரமாக…

  20. நல்லா பார்த்துக்குங்கோ மக்களே, மேக்கப் இல்லாத கனவுக் கன்னிகளை...

  21. உங்கள் மனதை புண்படுத்துவதற்காக இதை இணைக்கவில்லை. இதை பார்த்தபின் ஏற்படும் மனமாற்றத்திற்கு நாம் பொறுப்பில்லை....

    • 4 replies
    • 660 views
  22. மேக்கப்பில்லாமல் தீபிகா படுகோனேவை பார்த்திருக்கீங்களா? மும்பை: படத்தில் நடிகைகளைப் பார்க்கையில் அடடா என்ன அழகு, எத்தனை அழகு என்று சொல்வோம். ஆனால் அவர்கள் மேக்கப் இல்லாமல் வருகையில் அந்த பொண்ணு தானா இந்த பொண்ணு என்று வியந்தவர்களும் உண்டு. படங்களில் நடிகைகளின் தோல் மினுமினுக்கும். அவர்களை வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தோன்றும். அது அவ்வளவும் மேக்கப்பால் வந்த அழகு என்று தெரிந்தும் அவர்களின் படத்தையே பார்ப்பவர்கள் ஏராளம். அதே நடிகைகள் மேக்கப் இல்லாமல் வந்தால் பயங்கர வித்தியாசமாக இருக்கும். உண்மையிலேயே இவர் தான் அந்த படத்தில் நடித்திருந்தாரா என்று வியக்கத் தோன்றும். ஆனால் அதிலும் சில நடிகைகள் மேக்கப் இல்லாமலும் அழகாக இருப்பார்கள். பாலிவுட்டில் குறுகிய காலத்தில் பிர…

  23. மோகன்லால், ஜீவா நடித்த ‘அரண்’ படத்தை இயக்கிய மேஜர் ரவி, தற்போது மலையாளப் படம் இயக்கி வருகிறார். இதையடுத்து தமிழில் அவர் இயக்கும் படத்துக்கு, பிரபலமான பழைய படத்தின் பெயர் வைக்கப்படுகிறது. இதில் அர்ஜுன் ஹீரோ. சுந்தர்.சி பாபு இசையமைக்கிறார். ‘சரித்திரம்’ படத்தை தயாரிக்கும் ஐ.டி.ஏ பிலிம்ஸ் எஸ்.என்.ராஜா, இதை தயாரிக்கிறார். பிப்ரவரியில் ஷ¨ட்டிங். -தினகரன் http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=473

    • 0 replies
    • 1.1k views
  24. மேஜையில் தாளம்போட்டு வாய்ப்புகள் கேட்டேன்: இளையராஜா உருக்கம் சஞ்சய், நந்தினி ஜோடியாக சுப்புசுஜாதா இயக்கிய “தாண்டவக் கோனே படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. நடிகர்கள் சம்பத், சுப்பு, தயாரிப்பாளர் பிரபாகர் சீனிவாசகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்படத்துக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். பாடல் சி.டி.யை வெளியிட்டு அவர் பேசியதாவது: புதுசா வருபவர்களை ஊக்குவிப்பது என் சுபாவம். ஆரம்ப காலங்களில் நானும் சிரமப்பட்டேன். எனக்காக என் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் சினிமா கம்பெனிகள் படியேறி வாய்ப்பு கேட்டு அலைவார். எங்கேயாவது சிறிய சினிமா கம்பெனி போர்டு தொங்கினால் கூட அங்குபோய் என்தம்பி நல்ல மியூசிக் போடுவான். கேட்டுப் பாருங்க என்பார். பிறகு எஸ்.பி.பாலசுப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.