வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
இயக்குனர் Q ' விடம் கேட்கப்பட்ட கேள்வி: 'இது போன்ற படத்தை எப்படி எடுத்தீர்கள் '? 'என்னிடம் டிஜிட்டல் கேமரா இருக்கிறது, படத்தொகுப்பு வசதிகளும் ஒலி கலவை கூடமும் இருக்கிறது , என் மேல் நம்பிக்கை வைத்து என் அலைவரிசையில் பயணிக்கக்கூடிய நண்பர்கள் இருக்கிறார்கள்... ஏன் என்னால் சினிமா எடுக்க முடியாது?'. இது போன்ற பதிலை நாம் இங்கே பலரிடம் எதிர்பார்க்கலாம் ஆனால் இந்த பதிலுக்கு பின்பான அனுபவரீதியான தெளிவும் கலாபூர்வமான தீவிரமும் அனைவருக்கும் சாத்தியப்படாது. ஏனெனில் இன்று மைய்ய நீரோட்ட சினிமாவில் நட்சத்திரங்கள் இல்லாத ஒரு படத்தை எடுத்து அதை வெளியிடுவதே குதிரை கொம்பாக இருக்கும் வேளையில், முற்றிலும் சர்ச்சைக்குரிய சுயாதீன சினிமா ஒன்றை எடுத்துவிட்டு என்ன செய்ய முடியும் என்ற கேள்வி …
-
- 1 reply
- 1.2k views
-
-
புலிகளும் வேதாளங்களும் மோதலை நிறுத்துமா? ‘இது அட்டகாசமான புலி... அசத்தலான புலி... அட்ராக்ட் பண்ற புலி... அதிசய புலி... அசால்ட்டான புலி... அற்புதமான புலி... அசுரப் புலி...’ என்று புலி திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் டி.ராஜேந்தர் பேசிய பேச்சை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க முடியாது. ஆனால், அதுவே விஜய் ரசிகர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாகப் பெரிய தலைவலியாகிவிட்டது. அதை வைத்தே இன்று வரை சமூக வலைதளங்களில் களைகட்டி வருகின்றன மீம்ஸ் கிண்டல்கள். இத்தகைய மோதல்கள் ‘தல - தளபதி’ ரசிகர்கள் இடையேதான் அதிகமாக இருக்கின்றன. அஜித் ரசிகர்கள் என்கிற போர்வையில் சிலர் மோசமாகக் கிண்டல் அடிக்க கொதித்துப்போன விஜய் ரசிகர்கள், தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் காவல் துறை கண்காணிப்ப…
-
- 1 reply
- 465 views
-
-
மோகன்லால்: உளவியலும் உடல்மொழியும் ஆர். அபிலாஷ் கமலின் நடிப்பு பற்றி ஒரு ஓரு பேட்டியில் மணிரத்னத்திடம் கேட்கிறார்கள். அவர் ”நாயகன்” படத்தில் ஒரு காட்சியை படமாக்கிய அனுபவம் பற்றி சொல்கிறார். அது ரொம்ப முக்கியமான காட்சி. அதனால் அதை டாப் ஆங்கிளில் படமாக்க நினைக்கிறார் மணிரத்னம். அது போல் பின்னணி சூழல் அமைப்பிலும் கவனம் செலுத்துகிறார். ஆனால் கமல் நடிக்க துவங்கியதும் மொத்த காட்சியையும் அவர் ஆதிக்கம் செலுத்துகிறார். அதாவது ஒளிப்பதிவாளர், பின்னணி இசை அமைப்பாளர், கள அமைப்பாளர், கூட நடிப்பபவர்கள் யாரையும் பொருட்படுத்தாமல் கமல் தன்னந்தனியாக காட்சியை தன் முதுகில் தூக்கி செல்கிறார். மணிரத்னம் இதை ஒரு சிறப்பாக வியந்தாலும் கூட இது ஒரு குறை அல்லவா எனவும் …
-
- 1 reply
- 592 views
-
-
திரைப்பட விமர்சனம்: பீச்சாங்கை திரைப்படம் பீச்சாங்கை நடிகர்கள் ஆர்.எஸ். கார்த்திக், அஞ்சலி ராவ், எம்.எஸ். பாஸ்கர், விவேக் பிரசன்னா, கே.எஸ்.ஜி. வெங்கடேஷ், பொன்முடி இசை பாலமுரளி ராஜு ஒளிப்பதிவு, இயக்கம் கௌதம் ராஜேந்திரன், அசோக் தமிழில் கடந்த சில ஆண்டுகளில் சற்று வித்தியாசமான கதை, திரைக்கதையுடன் பல படங்கள் வெளிவந்திருக்கின்றன. பீச்சாங்கை படத்தை மிகச் சிறந்த படமென்று சொல்ல ம…
-
- 1 reply
- 814 views
-
-
புத்திகெட்ட மனிதர் எல்லாம்-----எங்கட பெடியளின் வெற்றி படம்
-
- 1 reply
- 413 views
-
-
திரைப்பட விருதுகளும், பாஜகவின் அரசியலும்! விருதுகளின் பின்னணியில் இத்தனை வில்லங்கங்களா..? தேசிய விருதுகளுக்கு பாஜக அரசு வைத்துள்ள அளவுகோல்கள் என்ன? விருதுகளின் பின்னணியில் இருக்கும் அரசியலை விமர்சிக்காமல் கடப்பது அரசியல் தலைவர்களுக்கு அழகா..? யமுனா ராஜேந்திரன் நேர்காணல்; சர்ச்சைக்கு உள்ளான காஷ்மீர் ஃபைல்ஸ், விண்வெளி விஞ்ஞானியாக மாதவன் நடித்த ராக்கெட்டரி, கடைசி விவசாயி போன்ற படங்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதே சமயம் ஜெய்பீம், கர்ணன், சர்தார் உத்தம் சிங், சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் திரை விமர்சகரான யமுனா ராஜேந்திரன் விருது வழங்குவதன் அடிப்படை, அதிலுள்ள அரசியல் போன்றவை பற்றி இந்த நேர்காணலில் பேச…
-
- 1 reply
- 318 views
-
-
சிவப்பு மஞ்சள் பச்சையில்.. தொடர்ச்சியாக, பல வார இறுதிகளில் சென்னைக்கு பயணம் செய்து கதை விவாதத்தில் கலந்து கொண்ட படம் திரைக்கு வந்துவிட்டது. சிவப்பு மஞ்சள் பச்சை. இயக்குநர் சசியின் இல்லம் கே.கே நகரில் இருந்தது. தமது வீட்டுக்கு மேல் உள்ள தளத்தில் உள்ள ஒரு வீட்டில் அலுவலகம் அமைத்திருந்தார். வெள்ளிக்கிழமை இரவு கிளம்பி வந்து அதிகாலையில் அலுவலகத்தைத் திறந்து அங்கேயே படுத்துக் கொள்வேன். எட்டு மணிக்கு எழுந்து தயாராகி உணவை முடித்த பிறகு ஒன்பது அல்லது பத்து மணிக்கு கலந்துரையாடல் தொடங்கும். மதிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மாலை வரை தொடரும். சில வாரங்களில் ஞாயிற்றுக்கிழமையும் உண்டு. இல்லையெனில் கிளம்பி ஊருக்குச் சென்று…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மற்றும் வாக்குப்பதிவு சென்னை திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில், தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் விசு மற்றும் விக்ரமன் போட்டியிட்டனர். அதே போல் இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்டனர். 2700 உறுப்பினர்களை கொண்ட இயக்குநர் சங்கத்தில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் இன்று மாலையே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது இந்த தேர்தலில் விக்ரமனுக்கு 716 வாக்குகளும், விசுவுக்கு 556 வாக்குகளும் கிடைத்தது. 716 வாக்குகள் வாங்கிய விக்ரமன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.http://www.d…
-
- 1 reply
- 546 views
-
-
இலங்கையில் இனப்பிரச்சினை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட 'பியம்பனா மாலுவோ' (பறக்கும் மீன்கள்) என்ற திரைப்படத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த திரைப்படம் இருப்பதனால் அத்திரைப்பிடத்திற்கு தடைவிதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த திரைப்படத்தை தயாரித்தவருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை சஞ்ஜீவ புஷ்பகுமாரவே தயாரித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிடப்படவிருந்த நிலையிலேயே தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படமானது பொதுமக்களுக்கு காண்பிப்பதற்கு உ…
-
- 1 reply
- 421 views
-
-
ஹைதராபாத் சிறையில்.... இளையதளபதி விஜய். சென்னை: ஹைதராபாத் சிறையில் விஜய் என்று தலைப்பை பார்த்து பயந்துவிட்டீர்களா?. அது போலி சிறை, முருகதாஸ் படப்பிடிப்புக்காக போடப்பட்ட செட். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் தீரன் படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது. கொல்கத்தாவில் ஆக்ஷன் காட்சியையும், சென்னையில் பிரமாண்டமாக ஒரு பாடல் காட்சியையும் படமாக்கினர். இதையடுத்து மூன்றாவது கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு ஹைராதாபாத் சென்றுவிட்டது. தீரன் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. ஹைதராபாத்தில் சுமார் ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடக்கிறது. படத்தில் உள்ள சிறை காட்சிகளை ராஜமுந்திரி…
-
- 1 reply
- 1.1k views
-
-
அவள் திரைவிமர்சனம் பல கதைகள் படங்களில் எடுக்கப்பட்டாலும் பேய் படங்களுக்கு இன்னும் மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. படப்போட்டிகள், விடாப்பிடி மழைக்கு நடுவே வந்துள்ள இந்த அவள் யார், பின்னணி என்ன, நம்மை விரட்டுமா இல்லை உட்காரவைத்து படம் காட்டுமா என திகிலுக்குள் செல்வோம். கதைக்களம் நடிகர் சித்தார்த் ஒரு கைதேர்ந்த மருத்துவர். மூளை குறித்த அறுவை சிகிச்சையில் ஸ்பெஷலிஸ்டாக இருக்கிறார். ஆண்ட்ரியாவை காதலித்து திருமணம் செய்கிறார். பின் மலைப்பகுதியில் உள்ள வீட்டில் குடியேறுகிறார்கள். நெருக்கம், அன்யோன்யம் என இவர்களின் வாழ்கை நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. இவர்களின் வீட்டிற்கு அருகே…
-
- 1 reply
- 898 views
-
-
திரைவிமர்சனம்: கொடி இயக்குநர் துரை செந்தில்குமார் ‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’ படங்களைத் தொடர்ந்து இயக்கி யிருக்கும் படம் ‘கொடி’. தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் முதல் படம் என்பதால் இந்தப் படத்தை ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்தனர். தனுஷ் த்ரிஷாவுடன் இணைந்து நடிக்கும் முதல் படம் என்பதும், ‘ப்ரேமம்’ புகழ் அனுபமா பரமேஸ்வரன் தமிழில் அறிமுகமாகும் படம் என்பதும் கூடுதல் ஆவலை உருவாக்கியிருந்தன. கொடி (தனுஷ்) பிறக்கும்போதே அரசியல் அவனுடைய வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது. அவனுடைய அப்பா (கருணாஸ்) தான் வாய் பேச முடியாததால் அரசியலில் சாதிக்க முடியாததை தன் மகன் சாதிக்க வேண் டும் என்று விரும்புகிறார். ஊரில் மெர்குரி கழிவுகளைக் கொட்டி …
-
- 1 reply
- 695 views
-
-
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் சாய் பிரசாந்த். நடனம், மிமிக்ரி என பன்முக திறமை கொண்ட இவர் சினிமாவிலும் நடித்துள்ளார். வடகறி படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார். சமீபத்தில் தான் இவருக்கு திருமணமானது. இந்நிலையில் இன்று இவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த செய்தி கோடம்பாக்கத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபகாலமாக சீரியல் நடிகர்கள், இயக்குனர்கள் தற்கொலை செய்துவருவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.cineulagam.com/tamil/news-tamil/tv/124363/
-
- 1 reply
- 566 views
-
-
[size=2]மலையாளத்தில் வெற்றிப்பெற்ற ‘டிராபிக்’ படம் தமிழில் சென்னையில் ஒரு நாள் என்ற பெயரில் தயாராகிறது. இதில் ‘ஆட்டோகிராப்’ மல்லிகா கதாநாயகி நடிக்கிறார். [/size] [size=2] இதில் நான் சேரனுக்கு ஜோடியாக நடிக்கிறேன். அவருக்கு ஜோடியாக நடிக்க விருப்பமில்லை. காரணம் ‘ஆட்டோகிராப்’ படத்தில் நடிக்கும் போது என்னை அடித்தார். ஆனால், இப்போது அவரே வந்து சமாதானம் சொன்னார். படத்தின் இயக்குநர் என்ற முறையில் உன்னை அப்போது அடித்தேன். ஆனால் இப்போது நானும் நடிகராகவே படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னபிறகு நடிக்க சம்மதித்தேன் என்றார் மல்லிகா.[/size] [size=2] http://pirapalam.net/news/cinema-news/chennaieil-oru-naal-131012.html[/size]
-
- 1 reply
- 721 views
-
-
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=SuuypjzzqRw#at=55 ஆட்டத்துக்கு நல்ல பாட்டு!!! அர்த்தமில்லா குத்துப்பாட்டு!!! யாரும் பொழிப்புரை எழுதத் தேவையில்லை. அவங்களே எழுதிட்டாங்க!!!!
-
- 1 reply
- 682 views
-
-
திரைப்படப்பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பட்டாம்பூச்சியை விற்றவர் பாடலாசியராக உயர்ந்த கதை பற்றி.. ‘பட்டாம் பூச்சியை விற்பவன்’ அப்டினு தான் என்னுடைய கவிதைத் தொகுதிக்கு பேர் வச்சிருந்தேன். கவிதையினுடைய அடுத்த கட்ட விஞ்ஞானவளர்ச்சி என்பது திரைப்படப்பாடல்னு பார்க்கிறேன். ஒரு கவிதை எழுதும் போது ஒரு 5000 பேருக்கு மட்டும் தான் போய்ச்சேரும். அதுவும் எழுதப் படிக்கத் தெரிஞ்ச சிலருக்கு மட்டும்தான். திரைப்படப்பாடலா வரும் போது உலகெங்கும் இருக்குற தமிழர்களை சென்றடையும். திரைப்படங்கள் மேல காதல் உண்டு. கவிதையின் அடுத்த கட்ட இசைவடிவ கவிதைகளா திரைப்படப்பாடல நினைக்கிறேன். கவிஞர் அறிவுமதி மெட்டுக்கு எழுதுறதுக்கு பயிற்சி கொடுத்தாரு. ‘கண் பேசும் வார்த்தைகள்’ தொகுப்பு உருவான விதம் பற்றி சொல…
-
- 1 reply
- 2.5k views
-
-
ஆணுறை விவகாரம்: நடிகர் ரன்வீர் மீது கோபத்தில் இருக்கும் சன்னி லியோன். மும்பை: பாதுகாப்பான உறவை வலியுறுத்தி ஆணுறை விளம்பரத்தில் நடித்தது குறித்து நடிகர் ரன்வீர் சிங் மீது நடிகை சன்னி லியோன், கடுப்பில் உள்ளார் என்று கூறப்படுகிறது. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பாதுகாப்பான உறவை வலியுறுத்தி ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளார். அவரைப் போன்றே நடிகை சன்னி லியோனும் ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ஆணுறை விளம்பரத்தில் நடித்த முதல் நடிகர் தான் தான் என ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார். அதெப்படி அவர் ஆணுறை விளம்பரத்தில் நடித்த முதல் நடிகர் என்று கூறலாம் என சன்னி ரன்வீர் மீது கோபத்தில் உள்ளாராம். அண்மையில் செய்தியாளர்கள் ரன்வீரிடம் நீங்கள் சன்னி நடித்த ஆணுறை வி…
-
- 1 reply
- 938 views
-
-
இந்திய இறையாண்மைக்கு எதிரான படமென லீனா மணிமேகலையின் செங்கடல் படத்துக்கு தடை! தமிழ் இலக்கிய பரப்பில் நன்கு பரிச்சயமான, பெண்கவிஞர் லீனா. மணிமேகலையின் செங்கடல் படத்துக்கு தமிழக திரைப்படத் தணிக்கைக்குழு தடை விதித்திருப்பதாகத் தெரியவருகிறது. இந்திய இறையாண்மைக்கு எதிரான படம் என்ற காரணத்தினாலேயே இதற்குத் தடைவிதிக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் அறியப்படுகிறது. இலக்கிய வட்டம், ஆவணப்பட வட்டாரம், ஆகியவற்றில் பிரபலமான பெண் கவிஞர் லீனா. மணிமேகலை. பறை உட்பட்ட இவர் இயக்கிய பல ஆவணப் படங்கள், சர்வதேச அளவில் விருதுகளை அள்ளியிருக்கின்றன. ஒற்றை இலையென, உலகின் அழகிய இளம்பெண் போன்ற இவரது கவிதைத் தொகுப்புக்களும் நவீன தமிழ் கவிதைப் பரப்பில் நவீன பெண்மொழிக்காக பாராட்டப் பட்டு வருபவை. ஈ…
-
- 1 reply
- 1.3k views
-
-
கமல் என்ற சகாப்தம்... சக கலைஞர்களின் வாழ்த்து மழை! இன்று பிறந்த நாள் காணும் கமல் ஹாஸனுக்கு தமிழ் திரையுலகினர் வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர். களத்தூர் கண்ணம்மாவில் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கி இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கும் உலக தமிழ் நாயகன் கமல்ஹாஸனுக்கு இன்று சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்துத் தெரிவித்தார். அவருடன் மேலும் பல பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். அவர்கள் விவரம்: சரத்குமார் - தலைவர், திரைப்பட நடிகர் சங்கம் பத்மஸ்ரீ கமல் ஹாஸன் அவர்களுக்கு எனது இதயப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். தமிழர்களுக்கு மிகவும் பெருமையைத் தந்துள்ள மாபெரும் கலைஞர் அவர். இன்னும் பல்லாண்டுகள் திரையுலகில் புதுப்புது …
-
- 1 reply
- 1k views
-
-
படங்களில் நடிக்க ஓராண்டு தடை - பிரகாஷ்ராஜ் ஆவேசம் சனி, 26 ஏப்ரல் 2014 (16:39 IST) தெலுங்குப் படங்களில் நடிக்க பிரகாஷ்ராஜுக்கு ஓராண்டு தடை விதித்துள்ளது தெலுங்கு இயக்குனர்கள் சங்கம். இது குறித்த விசாரணை வரும் 28ஆம் தேதி நடக்கிறது. ஸ்ரீனு வைட்லா இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் ஆகடு படத்தில் பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். முதல்நாள் ஷுட்டிங்கின் போது பிரகாஷ்ராஜுக்கும் படத்தின் இணை இயக்குனர் சூர்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் கடுமையான வார்த்தைகளில் பரஸ்பரம் திட்டிக் கொண்டனர். இதனையடுத்து பிரகாஷ்ராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதில் சோனுசூட் ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இணை இயக்குனர் சூர்யா இய…
-
- 1 reply
- 1k views
-
-
தற்கொலை முயற்சி நாடகம் நடிகை விஜயலட்சுமி 4 பேரை காதலித்தார்: படக்குழு பெண் பரபரப்பு தகவல் டி.வி.நடிகை விஜயலட்சுமி தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்றார். டைரக்டர் ரமேஷ் திருமணம் செய்து கொள்ளுமாறு தொந் தரவு செய்ததால் இந்த முடிவை எடுத்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். அவர் மீதும் டைரக்டர் ரமேஷ் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தனிப்படை போலீசார் பெங்களூர் சென்று டைரக்டர் ரமேஷிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது விஜயலட்சுமி தொடர்பாக பல புதிய தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன. நடிகை விஜயலட்சுமிதான் விரட்டி, விரட்டி டைரக்டர் ரமேஷை காதலித்ததும், பிறகு அவராகவே பிரிந்து சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து நடிகை விஜயலட்சுமி யார்-ய…
-
- 1 reply
- 1.9k views
-
-
இந்தியப் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியைக் கொன்ற கொலையாளிகளைப் போற்றும் வகையிலான பஞ்சாபி திரைப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்திரா காந்தியின் படுகொலையை மையமாகக் கொண்டு பஞ்சாபி மொழியில், "கெளம் தே ஹீரே' என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் இந்திரா காந்தியை படுகொலை செய்த கொலையாளிகள் பேயாந்த் சிங், சத்வந்த் சிங், கேஹர் சிங் ஆகியோரைப் புகழ்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இத்திரைப்படத்தை வெளியிட்டால் நாட்டில் சட்டம்-ஒழுங்கு கடுமையாகப் பாதிக்கும் என்பதால், இத்திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்கும்படி பஞ்சாப் மாநில காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சகம், மத்திய உள்துறை அ…
-
- 1 reply
- 370 views
-
-
ரஜினி கிண்டலடித்தாரா? - குழப்பத்தில் சந்தானம் கதாநாயகர்களைப் போல நகைச்சுவை நடிகர்களுக்கும் இரசிகர்களால் பட்டம் வழங்கப்படுகிறது. வடிவேலுக்கு வைகை புயல் என்று பட்டம் இருக்கிறது. வடிவேலுவை தொடர்ந்து தற்போது காமெடியில் கோடிகளை குவித்து வரும் சந்தானத்திற்கு இதுவரை பட்டம் எதுவும் வழங்கப்படவில்லை. அந்த குறை இனி நீங்கப்போகிறது. தற்போது சந்தானம் ஆர்யாவுடன் நடித்து வரும் படம் சேட்டை. ஹிந்தி டெல்லி பெல்லியின் ரீமேக். கண்ணன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் டைட்டில் கார்டிலும், விளம்பரங்களிலும் சந்தானத்தை காமெடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் குறிப்பிடப் போகிறார்கள். இதற்கு சந்தானமும் ஒப்புதல் கொடுத்து விட்டாராம். சந்தானம் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம்…
-
- 1 reply
- 647 views
-
-
எஸ்பிபி 50: 'பாடும் நிலா'வை உருகவைத்த யேசுதாஸின் புகழாரம் எஸ்.பி.பி 50 பத்திரிகையாளர் சந்திப்பில் பாடகர் யேசுதாஸ் பேசும் போது | படம்: எல்.சீனிவாசன் எஸ்.பி.பி தனது சாதனையை இந்த உலகுக்கு நிரூபித்துள்ளார் என பாடகர் யேசுதாஸ் புகழாரம் சூட்டினார். திரையுலகில் பாடகராக 50 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி, பத்திரிகையாளர்களை சந்தித்தார் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அப்போது, வெளிநாட்டில் 'எஸ்.பி.பி 50' என்ற பெயரில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியைப் பற்றி வீடியோ பதிவு ஒன்றைத் திரையிட்டார்கள். இச்சந்திப்பில் பாடகர் யேசுதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அங்கு எஸ்.பி.பி குடும்பத்தினர், யேசுதாஸ் மற்றும் அவருட…
-
- 1 reply
- 669 views
-
-
’சின்ன பின் சார்ஜர் இருக்கா? ‘ கலகலப்பான முதல் வார தெலுங்கு பிக் பாஸ்! #BiggBossTelugu சேவ் பரணி, ஓவியா ஆர்மி, பிந்து மாதவி என வாரம் ஒரு ட்ரெண்டாக லீடிங்கில் போய்க்கொண்டிருக்கிறது பிக் பாஸ். தமிழ் போலவே தெலுங்கு பிக் பாஸிலும் பரபரப்புக்குப் பஞ்சம் கிடையாது. ப்ராங்குகள், தண்டனைகள் என செம ஸ்ட்ரிக்ட் காட்டுகிறார் தெலுங்கு பிக் பாஸ். இரண்டு வாரங்களை நிறைவு செய்திருக்கும் தெலுங்கு பிக் பாஸின் முதல் வாரத்து ஹைலைட்ஸ் இதோ... 16 ஜூலை தமிழ் போலவே முதல் நாள் ஜூனியர் என்.டி.ஆர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று ''இது கிச்சன், இங்கே சமைக்கலாம், காய்கறி நறுக்கலாம், பால் காய்ச்சலாம். இது பெட்ரூம்... படுக்கலாம், உறங்கலாம்'' என வீட்டைச்…
-
- 1 reply
- 1.8k views
-