வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
விஷாலின் 'சத்யம்' படத்திலிருந்தும் விலகியிருக்கிறார் த்ரிஷா. அவருக்கு பதில் நயன்தாரா அப்படத்தில் நடிக்கிறார். தாமிரபரணி படத்துக்குப் பிறகு விஷால் 'சத்யம்' படத்தில் நடிப்பதாக இருந்தது. அறிமுக இயக்குனர் ராஜசேகர் இயக்கும் இந்தப் படத்தில் விஷாலுக்கு அசிஸ்டெண்ட் கமிஷனர் வேடம். முடியை ஒட்ட வெட்டி போலீஸ் கமிஷனர் வேடத்துக்கு தயாரானார் விஷால். அவருக்கு ஜோடியாக த்ரிஷா ஒப்பந்தமானார். சில நடைமுறை சிக்கல்கள்.... 'சத்யம்' படம் தள்ளிப் போனது. இந்த இடைவெளியில் ஜி. பூபதிபாண்டியன் சொன்ன 'மலைக்கோட்டை' கதை பிடிக்க, அதற்காக தயாராகி வருகிறார் விஷால். 'மலைக்கோட்டை' தயாரான பிறகே 'சத்யம்'. இந்த திடீர் மாற்றத்தால் 'சத்யம்' படத்திற்கு த்ரிஷா கால்ஷீட் கொடுக்க முடியாத சூழ்நிலை. இதனா…
-
- 1 reply
- 968 views
-
-
என்னை விட்டால் யாரும் இல்லை ஆழ்வாப்பிள்ளை 'மாதவிப் பெண் மயிலாள் தோகை விரித்தாள்...' என்ற பாடல் வெளிவந்த பொழுது, இது கண்ணதாசன் பாடல் வரிகள் என்றுதான் நினைத்திருந்தேன். அன்று சிவாஜி கணேசன் படங்களுக்கு கண்ணதாசனே அதிகமாகப் பாடல்கள் எழுதிக் கொண்டிருந்ததாலும், பெண் மயிலுக்கு ஏது தோகை? என்ற கேள்வியும் சேர்ந்து கொண்டதாலும் இது கண்டிப்பாகக் கண்ணதாசன் பாடல் வரிகள் என்ற எண்ணமே மேலாக நின்றது. ஆனால் ஒரு சினிமா பத்திரிகையில், 'சமீபத்திய சினிமாப் பாடல்களைப் பார்க்கும்போது, எது நான் எழுதியது, எது வாலி எழுதியது என என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை. இருமலர்கள் படத்தில் வாலி எழுதிய, மாதவிப் பெண் மயிலாள் தோகை விரித்தாள்.. பாடலும் அந்த ரகம்தான்...' என்று கண்ணதாசன் பேட்டி ஒன்றில் சொன…
-
- 1 reply
- 2k views
-
-
படத்தை ஒருமுறை பார்த்துவிட்டுப் படிப்பது நல்லது. கதை எல்லாம் தெரிந்தால் பரவாயில்லை என்பவர்கள் தொடரலாம். கட்டுரையின் கடைசிப் பகுதியை தவற விட வேண்டாம். ** நீங்கள் இருக்கிறீர்கள். பிறந்து, வளர்ந்து, வேலைக்குப் போய், உண்டு உறங்கி, திருட்டுத்தனம் என்று பலவற்றையும் செய்தவாறு நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால்... ஏதோ ஒன்று உங்களைப் போட்டு அலைகழிக்கிறது. ஏதோ ஒன்று சரியில்லை என்று தோன்றியவாறே. எனது வாழ்க்கை யாரோ எழுதிக்கொடுத்தது போல் போய்க்கொண்டிருப்பதாகப் படுகிறது. தத்துவ ஆன்மிக விசாரத்தில் விரசமாக ஈடுபடுகிறீர்கள். 'உலகமே மாயை' என்றும் 'எதுவுமே இல்லை அல்லது நீங்கள் உணர்வது எதுவும் உண்மையில்லை.. உங்களால் உணரப்படவே முடியாததை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? மீனுக்கு நீர் இன்றி ஓர் உ…
-
- 1 reply
- 5.4k views
-
-
யாழப்பாணக் கலாச்சார அன்னை சினிமாவில் குதிப்பு - சீரழிய விடுவார்களா? சிறப்பாக்குவார்களா? 2010-12-18 22:58:46 யாழ்ப்பாண கலாச்சார அன்னையை சினிமாவுக்குள் நுளைத்துள்ளார் 'பனைமரக் காடு்' என்னும் திரைப்படத்தை தயாரிக்கும் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவர் க. செவ்வேள். இன்று 10 மணிக்கு வண்ணை வெங்கடேஸ்வரப் பெருமாள் ஆலயத்தில் 'AAA' மூவிஸ் இன்ரநஷனல் நிறுவனத்தால் நடைபெற்ற பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து இத் திரைப்படத்திற்கான காட்சிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. இது தொடர்பான அனைத்து காணொளிகளும் சில மணி நேரத்தில் உங்களின் முன் கொண்டுவரப்படும். newjaffna.com
-
- 1 reply
- 952 views
-
-
திரையுலகில் ஐங்கரன் ஆதிக்கமும் விளிம்பு நிலையில் தமிழ் திரையுலகில் கலைஞர் தொலைக்காட்சிக்கு துணை போன ஐங்கரன் நிறுவனத்தின் எதிர் காலமும் தமிழகத்தில் கேள்விக்குறியாகியுள்ளதாக கோடம்பாக்கம் செய்திகள் தெரிவிக்கின்றன. ஐங்கரனுக்கு பதிலாக புதிய வர்த்தகத் தளம் ஒன்றை உருவாக்குவதற்கான பேச்சுக்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரிடையே பலமாக இன்று பேசப்படுவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. குறிக்கப்பட்ட படங்களை திரையிட்டும், பல படங்களை தக்கவைத்தும் தனியுரிமையாக ஐங்கரன் நிறுவனம் நடாத்தி வந்த தவறுகள் கடந்த காலத்தில் திரையுலகில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி வந்தன. கனிமொழியுடன் கூடி இவர்கள் உருவாக்கிய கலைஞர் ஐங்கரன் தொலைக்காட்சி ஜெயா டீவியின் வரவுக்கு ஆப்பு வைத்தது குறித்த பே…
-
- 1 reply
- 1.6k views
-
-
முதல் பார்வை: பொன்மகள் வந்தாள் ஒரு பெண்ணின் மரணத்தில் இருக்கும் மர்மத்தைக் கண்டுபிடித்து, நீதிக்காகப் போராடும் இன்னொரு பெண்ணின் கதையே 'பொன்மகள் வந்தாள்'. ஊட்டியில் 10 வயதுக் குழந்தையை ஜோதி என்கிற ஒரு பெண் துப்பாக்கி முனையில் கடத்திவிட்டதாகவும் காப்பாற்றப் போன இரு இளைஞர்களையும் அவர் சுட்டுக்கொன்றதாகவும் அந்த சைக்கோ கொலைக் குற்றவாளியைத் தேடி வருவதாகவும் போலீஸார் கூறுகின்றனர். திருப்பூரில் இருந்து ஜெய்ப்பூர் தப்பித்துச் செல்ல இருந்த சைக்கோ ஜோதியைப் பிடித்துவிட்டதாகவும் பிறகு சொல்கின்றனர். குழந்தையை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டச் சொல்லும்போது, பெண் குற்றவாளி எங்களைச் சுட்டதால் நாங்களும் பதிலுக்குச் சுட்டதில் குற்றவாளி இறந்துபோனார். அவர் வடநாட்டைச் …
-
- 1 reply
- 623 views
-
-
குளியல் தொட்டியில் கணவருடன் சேர்ந்திருக்கும் படத்தை வெளியிட்ட சன்னி லியோன் குளியல் தொட்டியில் கணவருடன் சேர்ந்திருக்கும் படத்தை வெளியிட்டு சன்னிலியோன் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இந்தி நடிகைகள் தங்களை விளம்பரப்படுத்துவதற்காகவும், மார்க்கெட் பிடிப்பதற்காகவும் விதம் விதமான யுக்திகளை பயன்படுத்துகிறார்கள். சமீபத்தில் இலியானா தண்ணீர் தொட்டியில் நிர்வாணமாக படுத்து போஸ் கொடுத்து இருந்தார். அதை இணையதளத்திலும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். முன்பு ஆபாச படங்களில் நடித்த சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் ஒ…
-
- 1 reply
- 980 views
-
-
கவுதம்மேனன் இயக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் திரைக்கதையில் மாற்றங்கள் தேவைப்பட்டதால், படம் நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது! இதற்கிடையில் சூர்யா ஜோடியாக அசின் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஏற்கனவே சென்னையில் ஒரு மழைக் காலம் படத்தில் இருவரையும் ஜோடியாக நடிக்க வைக்க கவுதம் முடிவு செய்தார். ஆனால் அப்படம் நின்று போனது. - See more at: http://vuin.com/news/tamil/we-wont-allow-asin-to-act-in-tamil-films
-
- 1 reply
- 630 views
-
-
சென்னை எக்ஸ்பிரஸ்(இந்தி) - ஒரு பார்வை! தமிழ் மசாலா படங்களில் பார்த்துப் பார்த்துப் பழகிப்போன அதே விஷயங்கள் தான். ஆனா, அதில் ஷாருக்கான் என்ன செய்கிறார் என்பது தான் கொஞ்சம் புதுசு. இந்தி ரசிகர்களுக்கு இந்தப் படம் முழுக்க முழுக்க புதுசாக இருக்கலாம். அதற்காக இது சென்னை சம்பந்தப்பட்ட படம் என்றோ சென்னையில் நடக்கிற கதை என்றோ தவறாக நினைத்துவிட வேண்டாம். ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது இந்தி சினிமா உலகம் இது தான் தமிழ் சினிமா என்று கணக்குப் போட்டு வைத்துள்ளது என்பதே! லாஜிக் என்பது துளியும் இல்லை. நாம் தமிழ் சினிமாவில் பார்த்த சாதாரண மசாலாவைக் கூட கரம் மசாலாவா மாற்றி இருக்கிறது சென்னை எக்ஸ்பிரஸ். தமிழ் புரியாமல் மாட்டிக்கொண்டு சிரமப்படும் ஷாருக்கான், கலர் கலர் உடைகளோடு…
-
- 1 reply
- 2k views
-
-
வந்தே மாதரம்-பட விமர்சனம் நடிப்பு: மம்முட்டி, அர்ஜுன், சினேகா, நாசர் இசை: டி இமான் தயாரிப்பு: பங்கஜ் புரொடக்ஷன்ஸ் இயக்கும்: அரவிந்த் டி படத்தின் தலைப்பப் பார்த்தாலே புரிந்துவிடும் இது எந்த மாதிரி படம் என்பது! 90களில் விஜயகாந்துக்காக வெள்ளாவியில் வேகவைத்து அடித்து துவைத்து நைந்து போன, பழைய 'ஒன்மேன் ஆர்மி தீவிரவாதிகளைப் பிடித்து நெஞ்சு நிமிர்த்தும்' கதைதான் இப்போது வந்தே மாதரமாக வந்துள்ளது. இதற்காக 4 முழு வருடங்களையும் எக்கச்சக்க பணத்தையும், புதிய இயக்குநர் [^] அரவிந்த் டி, தயாரிப்பாளர் மற்றும் நடிகர்கள் வீணடித்திருக்கிறார்களே என்ற ஆதங்கத்தை அடக்க முடியவில்லை. தென் பிராந்திய உளவுத் துறை அதிகாரி கோபி கிருஷ்ணா. அவர் மனைவி சினேகா. வசதியான வ…
-
- 1 reply
- 904 views
-
-
இந்திய பிரதமர், நடிகர் மாதவனுடன் பிரான்ஸ் ஜனாதிபதி செல்பி Published By: Digital Desk 3 17 Jul, 2023 | 10:29 AM இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நடிகர் மாதவனுடன் பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரான் எடுத்துக் கொண்ட ‘செல்பி’ வைரலாகி வருகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 13, 14 ஆம் திகதிகளில் பிரான்ஸ் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார். 14 ஆம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற அந்த நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக மோடி பங்கேற்றார். அதனை தொடர்ந்து, அன்றிரவு பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் பிரான்ஸ் …
-
- 1 reply
- 361 views
-
-
எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல்மாடல்! சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல்மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... 25 மட்டும் இங்கே! எம்.ஜி.ஆர். நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம்சதிலீலா வதி(1936). கடைசிப் படம் மது ரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977). பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்த தாகவே இருக்கும். 'உரிமைக் குரல்' மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வரராவ் நடித்த தெலுங்குப் படம்! எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு…
-
- 1 reply
- 783 views
-
-
கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திற்கு சிம்பு, யுவன் சங்கர் ராஜா இணைந்து பாடலொன்றை பாடியிருக்கிறார்கள். பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விமல், சிவகார்த்திகேயன் இணைந்து நடித்து வருகின்றனர். பிந்து மாதவி,ரெகினா இருவரும் நாயகிகளாக நடிக்க படம் முழுவதும் திருச்சியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. படத்திற்கு நா.முத்துகுமார் பாடல்கள் எழுத யுவன் இசையமைக்கிறார். இந்நிலையில் சிம்பு பாடிய பாடல் வீடியோவாக யூடியுப்பில் வெளியாகியுள்ளது. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ylmZRou87qk http://www.eelamboys.net
-
- 1 reply
- 563 views
-
-
குரூப்-1 தேர்வில் பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்து கேள்வி 4 ஜனவரி 2021 பட மூலாதாரம்,TWITTER தமிழகத்தில் நேற்று (ஜனவரி 3) நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 1 முதல்நிலை தேர்வில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்பு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் பற்றிய கேள்வி இடம்பெற்றிருந்தது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த சிவில் (குரூப்-1) தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 66 காலி பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். அதில், கடந்த 2018ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பரியேறும் பெருமாள்'…
-
- 1 reply
- 515 views
-
-
http://www.youtube.com/watch?v=_T_26EVpWqY
-
- 1 reply
- 581 views
-
-
இம்சை அரசன் விரைவில் 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' ஆக மாறுகிறார். முதல் படத்தில் எட்டடி பாய்ந்தால் அடுத்த படத்தில் பதினாறு அடி பாயவேண்டும் என்று விதியா? இம்சை அரசனில் இரண்டு வேடங்களில் நடித்த வடிவேலு 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' படத்தில் நான்கு வேடங்களில் வருகிறார். முதல்கட்ட தகவல்களின்படி நான்கு வேடங்களில் ஒன்று நார்மல். மற்ற மூன்றும் வித்தியாசமான கெட்டப்புகள். புராண இதிகாசத்தையும், நவீன உலகையும் இணைக்கும் கதை இது. இதற்காக சென்னை ஸ்டுடியோவில் பிரமாண்ட எமலோக அரங்கை அமைக்க இருக்கிறார் கலை இயக்குனர் பி. கிருஷ்ணமூர்த்தி. படத்தின் ஒரே நோக்கம் பார்வையாளர்களை இரண்டரை மணி நேரம் சிரிக்க வைக்க வேண்டும்! இதனால் வடிவேலுவின் கெட்டப்பை மட்டுமல்லாமல் படத்தில் வரும் எமலோக …
-
- 1 reply
- 1.2k views
-
-
சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக ஆஸ்கருக்கு அடுத்தபடியாக உலக அளவில் கவுரவமிக்கதாகக் கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருதுப் போட்டியில் மலேசியா சார்பாக பங்கேற்க தகுதி பெற்றுள்ளது 'பரமதம்' திரைப்படம். 24 வயதான இளைஞர் விக்னேஷ் பிரபு, தன் சகோதரர் தனேஷ் பிரபுவுடன் இணைந்து இப்படத்தை இயக்கி உள்ளார். கடந்த ஆண்டே வெளியீட்டிற்கு தயாராகிவிட்ட போதிலும், கோலிவுட், ஹாலிவுட் உள்ளிட்ட இறக்குமதி படங்களின் தொடர் வெளியீடுகள், கொரோனா விவகாரம் ஆகிய காரணங்களால் இப்படம் இன்னும் மலேசியாவில் திரை காணவில்லை. எனினும் 18 அனைத்துலக விருதுகள் இந்த படத்துக்கு கிடைத்துள்ளது. இதை அங்கீகரிக்கும் வகையில் மலேசிய சாதனைப் புத்தகத்திலும் ஆசிய சாதனைப் புத்தகத்திலும் இ…
-
- 1 reply
- 396 views
-
-
நீதிமன்றத்தை நாடும் தனுஷ், ஐஸ்வர்யா தம்பதி! விவாகரத்துக் கோரி நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். குறித்த மனுவில் கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர். இந்நிலையில் குறித்த மனுவானது விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டும் நவம்பர் 18 ஆம் திகதி நடிகர் தனுஷும், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்துகெண்டனர். பின்னர் இருவரும் தங்கள் திருமண உறவை முறித்துக் கொள்வதாக கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 17ம் திகதி அறிவித்தனர். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இ…
-
- 1 reply
- 706 views
-
-
அனுமதி இல்லாமல் போட்டோ எடுத்தவரின் கேமராவை பறித்து நயன்தாரா உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மனசினக்கரை மலையாள படம் மூலம்தான் சினிமாவுக்கு வந்தார் நயன¢தாரா. இப்படம் ட்டானது. தொடர்ந்து மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லாலுக்கு ஜோடி சேர்ந்தாலும் அங்கு பிரபலமாகவில்லை. தமிழில் கவர்ச்சியாக நடித¢த பின்பே அவருக்கு மவுசு கூடியது. இப்போது நீண்ட இடைவெளிக்கு பின் திலீப் ஜோடியாக பாடிகாட் படத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு மம்மூட்டி, மோகன்லாலைவிட அதிக சம்பளம் பெற்றிருக்கிறார் நயன்தாரா. கேரளாவில் அவருக்கு ரசிகர் வட்டாரமும் பெருகியுள்ளது. கோட்டயம் அருகே கோடிமதை என்ற இடத்திலுள்ள ஸ்டார் ஓட்டலுக்கு நயன்தாரா நேற்று வந¢தார். அவருடன் பாதுகாப்பாளர்களும் இருந்தனர். நயன்தாராவை பார்க்க ரசிகர்க…
-
- 1 reply
- 2.3k views
-
-
இண்டர்ஸ்டெல்லார் திரைப்படத்தின் திரைக்கதை சென்ற வருடம் இணையத்தில் லீக் செய்யப்பட்டது. உடனேயே அதனை நான் படித்தேன். படித்ததும் இண்டர்ஸ்டெல்லார் பற்றிய இரண்டு விபரமான கட்டுரைகளை எழுதினேன். முதல் கட்டுரையில் காலப்பயணத்தைப் பற்றியும், இரண்டாவது கட்டுரையில் கருந்துளைகளைப் பற்றியும் முடிந்தவரை தகவல்களைக் கொடுத்திருந்தேன். இந்தக் கட்டுரையை மேற்கொண்டு தொடருமுன் அந்த இரண்டு கட்டுரைகளைப் படித்துவிட்டால், படம் இன்னும் தெளிவாகப் புரிய வாய்ப்பு உள்ளது. 1. Interstellar and Time Travel 2. Interstellar and Black Holes ஒருவேளை எந்த விபரமும் தெரியாமல் இந்தப் படத்துக்குப் போகிறோம் என்று வைத்துக்கொண்டாலும், அதில் சொல்லப்படும் விஷயங்கள் அத்தனை கடினமானவை அல்ல. அவை வரும்போதே அவற்றுக்கான விளக்க…
-
- 1 reply
- 3.1k views
-
-
'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 1978-ம் ஆண்டு ‘முள்ளும் மலரும்’ படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் மகேந்திரன். அதனைத் தொடர்ந்து 'உதிரிப்பூக்கள்', 'ஜானி', 'நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'கை கொடுக்கும் கை' என பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். முன்னதாக, 'சபாஷ் தம்பி', 'நிறைகுடம்', 'கங்கா', 'திருடி' உள்ளிட்ட சில படங்களுக்கு கதையும் எழுதியுள்ளார். கதையாக எழுதி கிடைத்த வரவேற்பைவிட, இயக்குநராக அவருக்குக் கிடைத்த இடம் மிகவும் பெரியது. 2006-ம் ஆண்டு வெளியான 'சாசனம்' என்ற படம்தான் மகேந்திரன் இயக்கிய கடைசிப் ப…
-
- 1 reply
- 847 views
-
-
விஸ்வரூபம் திரைப்பட பிரச்னையால் கமலை விட்டு நழுவிய பத்ம விருது http://dinamani.com/india/article1437382.ece விஸ்வரூபம் திரைப்பட பிரச்னையைத் தொடர்ந்து நடிகர் கமலஹாசனுக்கு பத்மபூஷண் விருது கிடைக்காமல் போனதாகத் தெரிகிறது. பத்மபூஷண் விருது பெறுவோரின் தகுதிப் பட்டியலில் கமலஹாசன் பெயர் இருந்ததாகவும், கடைசித் தருணத்தில் அவரது பெயரை மத்திய அரசு நீக்கியதாகவும் கூறப்படுகிறது. சிறுபான்மையினரின் உணர்வுகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறி, விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. "பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட வெள்ளிக்கிழமைக்கு முந்தைய நாள் வரை, கமல் பெயர் விருது பெறுவோர் தகுதிப் பட்டியலில் இருந்தது. அவரது விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமிழகத்தைத் …
-
- 1 reply
- 411 views
-
-
தமிழ் சினிமாவின் செல்ல ராசாத்தி! - அருவி விமர்சனம் எதிர்பார்ப்புகளே பல படைப்புகளுக்கு முதல் எதிரி. நிறைய எதிர்பார்த்து திரையரங்கில் அமரும் நம்மை, ஏமாற்றிய படைப்புகளின் எண்ணிக்கை மிக அதிகம். ஒரு சில படங்களே எதிர்பார்ப்புகளையும் தாண்டி நம்மை வசீகரிக்கும். 'அருவி' அப்படிப்பட்ட சினிமா. சர்வதேசத் திரைவிழாக்களில் குவிந்த பாராட்டுகள், சிறப்புத் திரையிடல்களில் வந்த பாசிட்டிவ் விமர்சனங்கள் ஆகியவற்றையெல்லாம் தாண்டி சராசரி ரசிகனும் கொண்டாடுவதற்கு அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன அருவியில்...! அருவி - நீங்கள் தெருவில் இறங்கி நடக்கும்போது கண்ணில்படும் முதல் பெண் அவளாகத்தான் இருக்கும். 'நாம் இருவர் நமக்கு இருவர்' குடும்பம், அந்தந்…
-
- 1 reply
- 2.1k views
-
-
ஸ்கெட்ச் திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் கதைக்கு தேவையென்றால் தன்னை எந்த அளவிற்கும் வருத்தி நடிக்கக்கூடியவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் ஸ்கெட்ச். இப்படத்தின் மூலம் சரியான ஸ்கெட்ச் போட்டு மக்களை கவர்ந்தாரா? இல்லையா? என்பதை பார்ப்போம். கதைக்களம் வட சென்னையில் வண்டிகளுக்கு பைனான்ஸ் கொடுக்கும் சேட்டு ஒருவரிடம் வேலை செய்கிறார் ஸ்கெட்ச் விக்ரம். விக்ரம் ஸ்கெட்ச் போட்டால் மிஸ் ஆகாது என கூறும் அளவுக்கு டியூ கட்டாதவர்களின் வண்டிகளை நண்பர்களோடு சேர்ந்து தூக்குவதில் அவர் கில்லாடி. ஐயர் வீட்டு பெண்ணான தமன்னாவை துரத்தி துரத…
-
- 1 reply
- 949 views
-
-
இந்திய சினிமாவின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறவர் மணிரத்னம். தனிமனிதப் பிரச்சனைகளை தாண்டி தேசிய பிரச்சனைகளை கையிலெடுத்ததை தொடர்ந்து - குறிப்பாக சொல்வதென்றால் 'ரோஜா' திரைப்படத்திற்குப் பிறகு இந்திய அளவில் இயக்குனராக இவரது இருப்பு பிரகாசமடைய தொடங்கியது. இவரது புதிய படம் 'குரு' வும் பிராந்திய எல்லைகளை தாண்டிய ஒரு மாபெரும் தொழிலதிபரைப் பற்றியது. குருபாய் என அழைக்கப்படும் குரு கான்ட் தேசாய்க்கு பெரிய தொழிலதிபர் ஆக வேண்டும் என சிறு வயது முதலே கனவு. துருக்கி சென்று சம்பாதிக்கும் பணம் முதலீடு செய்ய போதவில்லை. வரதட்சணையாக பணம் கிடைக்கும் என்பதற்காக சுஜாதாவை (ஐஸ்வர்யா ராய்) திருமணம் செய்து கொள்கிறார். திருமணம் முடிந்ததும் மனைவி மைத்துனருடன் மும்பை சொல்…
-
- 1 reply
- 833 views
-