ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143690 topics in this forum
-
விடுதலைப்புலிகள் மற்றுமொரு சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு விரைவில் முன்வருவரென்ற நம்பிக்கை அரசிடம் காணப்படுவதாக அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். அமைச்சர் இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில்; ஜெனீவாப் பேச்சுக்கள் தோல்வியில் முடியவில்லையாயினும் கூட, மற்றுமொரு சுற்றுப் பேச்சுவார்த்தையில் அரசியல் தீர்வு பற்றி பேசுவதற்கு இப்பேச்சுவார்த்தை அடித்தளமிட்டுள்ளது. புலிகள் கூட அரசியல் தீர்வு குறித்து பேசினர். ஜெனீவா பேச்சுவார்த்தையின் போது அரசாங்கத்தின் சமாதானம் மீதான பற்றுதலை சர்வதேச சமூகம் நன்கு அறிந்துகொண்டது. நாங்கள் நவம்பர் மாதமும், ஜனவரியிலும் மற்றுமொரு சுற்றுப்பேச்சுக்கு தயாராகவிருந்தோம். எனினும், பேச்சுக்கான அடுத்த திகதி தீர்மானிக்கப்படாமலே நிறைவடைந்தது. இ…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கியமை, ஈழ மக்களுக்குக் கிடைத்த பெரிய வெற்றி என்று சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சட்ட ஆலோசகர் லதன் சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்புக் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், இன்று தமிழர் வரலாற்றில் முக்கியமானதொரு நாள். முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் ஈழத்தமிழர்களுக்கு பெரியதொரு அங்கீகாரத்தினை இந்த தீர்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த தீர்ப்பினை அடுத்து, தற்போது ஜனநாயக ரீதியாக உருவாகியுள்ள அமைப்புக்களினூடாக அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை மிகத் தெளிவாக முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=118821&…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஐ.நா. குழுக்களுக்கான விண்ணப்பம் படிவங்கள் http://www.tamilnaatham.com/pdf_files/2007..._2007_03_06.pdf ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான சபையின் நான்காவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகின்றது. இந்த கூட்டத்தில் அதன் அங்கத்துவ நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் ஒன்று கூடி சிறிலங்கா உட்பட பல நாடுகளின் உள்ள மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
- 2 replies
- 1.1k views
-
-
வேற்றுக்கிரகவாசிகளின் நடமாட்டமே இலங்கையில் சிவப்பு மழைக்கு காரணம் - நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்! [saturday, 2013-02-02 21:32:49] பொலன்னறுவை - அரலகங்கவில பிரதேசத்தில் அண்மையில் கிடைக்கப்பெற்ற விண்கல்லின் பகுதிகள் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் பெய்த சிவப்பு மழையிலும் பூமிக்கு வெளியில் உயிரினங்கள் வாழ்வதற்கான உறுதிப்பாடுகள் தென்படுவதாக நாசா நிபுணர் தெரிவித்துள்ளார். சிவப்பு மழை மற்றும் விண்கல் பகுதிகள் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இலங்கை வந்துள்ள நாசா நிறுவனத்தின் நிபுணர் பேராசிரியர் சந்ரா விக்கிரமசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அவருடன் பேராசிரியர் ரிச்சட் பீ ஹுவர் ஆகியோர் நேற்று மாலை சுகாதார அமைச்சின் செயலாளர் நிஹால் ஜயதிலக்கவை சந்தித்துள்ளனர். அதன்போது…
-
- 4 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா ஊர்காவல் படைக்கு கூடுதலாக ஆட்சேர்ப்பு [வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2007, 21:02 ஈழம்] [தாயக செய்தியாளர்] தமிழ்மக்களுக்கு எதிரான நடவடிக்கைக்காக சிறிலங்கா ஊர்காவல் படைக்கு கூடுதலாக 2ஆயிரம் பேரை சேர்க்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கிழக்கில் புதிதாக கைப்பற்றப்பட்ட பகுதிகளில் அவர்கள் நிறுத்தப்படுவர் என்று சிறிலங்கா படைத்துறை மக்கள் பாதுகாப்புப் படைபொறுப்பதிகாரி ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். மேலும் 2000பேர் திரட்டப்பட்டு வவுனியாப்பகுதி எல்லையில் நிறுத்தப்படுவர் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது சிறிலங்கா ஊர்காவல்படையின் பலம் 35 ஆயிரம் ஆக உள்ளது. நன்றி - புதினம்
-
- 1 reply
- 1.1k views
-
-
ஜனாதிபதியின் உரை குறித்து சர்வதேச குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் – மாவை 12 Views இறுதிப் போரில் நந்திக்கடல் பிரதேசத்தில் பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும் இழுத்து வந்து நாய்கள் போல் சுட்டேன் என்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷவின் குற்றஒப்புதல் வாக்குமூலம் நிச்சயம் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய குற்ற ஒப்புதல் வாக்குமூலமேதான். இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அம்பாறை மாவட்டம், உஹனையில் கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது நாடாளுமன்ற உறுப்ப…
-
- 4 replies
- 1.1k views
-
-
போர் தீவிரமாகப் போகும் நாளும் அதனை ஒத்திவைப்பதற்கான பிரயத்தனங்களும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்திலும் தென்னிலங்கையிலுமாக ஒட்டுமொத்தமாக இலங்கைத்தீவு முழுவதும் நாளாந்தம் படுகொலைகளும் ஆட்கடத்தல்களும் இடையறாது நடந்து வருகின்றன. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தொடரும் இந்த பயங்கரவாதத்தில் பலியாகிக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் தமிழ் பேசும் மக்களேயாவர். இதில் இருந்து இதற்கான சூத்திரதாரிகள் யார் என்பதை தெளிவாக அடையாளம் கண்டுவிட இயலும். இதனைத் தமிழ் மக்கள் புரிந்துகொள்வதற்கு எந்த விசாரணைக்குழுக்களும் தேவையில்லை. நாளாந்தம் ஐந்து அல்லது ஆறு பேர் என்ற கணக்கில் தமிழினக் குறைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது கடந்த திங்களன்று அம்பாறையில் பத்து முஸ்…
-
- 0 replies
- 1.1k views
-
-
fஈழப்போர் இன்று ஒரு அவலமான காலகட்டத்தை அடைந்திருக்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் ஆதிக்கப் போரில் தமிழ் மக்களின் இரத்தம் அபிஷேகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இத்தனை ஆயிரம் மக்களின் இறப்பிற்குப் பின்னாலும் சர்வதேச சமூகம் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றத
-
- 0 replies
- 1.1k views
-
-
Sunday, 24 April 2011 12:36 விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் சரணடைதலை கோத்தாபயவும், ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டிருந்தார்கள்: நிபுணர் குழு அறிக்கை இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் சரணடைவது குறித்து பாதுகாப்புச் செயலாளரும், ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் அதன் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசனின் தலைமையில் சரணடையத் தயாராக இருப்பதாக சர்வதேச நாடுகள் மற்றும் முக்கிய அமைப்புகளுக்கு அறியப்படுத்தப்பட்டிருந்தது. ஐக்கிய அமெரிக்கா, நோர்வே, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் என்பன அவற்றில் முக்கியமானவையாகும். பிரஸ்தாப சரணடைதல் விவகாரம் தொட…
-
- 3 replies
- 1.1k views
-
-
இடம்பெயர்ந்த தமிழ் மக்களுடைய நிவாரண மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தியா செயற்படுகின்றது என தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதம் ஒன்றில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருக்கின்றார். இந்த விவகாரம் தொடர்பாக தம்முடைய கவலையை சிறிலங்காவிடம் இந்திய அரசாங்கம் தெரிவித்திருப்பதாகவும் இந்த பதிலில் மன்மோகன் சிங் குறிப்பிட்டிருக்கின்றார். தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்களுடைய நிலை தொடர்பாக தனது கவலையைத் தெரியப்படுத்தி தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி அனுப்பிவைத்திருக்கும் கடிதத்துக்குப் பதிலளிக்கும் முகமாகவே இந்தியப் பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார். "இடம்பெயர்ந்த தமிழர்களுடைய நலன்…
-
- 8 replies
- 1.1k views
-
-
ராஜபக்சவுக்கு எதிரானவர் என்பதால் மட்டுமே ஒருவர் தமிழர்களுக்கு ஆதரவானவர் ஆகிவிட முடியுமா, முடியாதல்லவா? ஆனால், சரத் பொன்சேகா விஷயத்தில் மட்டும் இப்படி யாரும் யோசிக்கவில்லை. இப்போது ராஜபக்சவுக்கும் பொன்சேகாவுக்கும் இடையேயான மோதல் நாடகத்துக்கு ஒருவழியாக சுபம் போடப்பட்டிருக்கும் வேளையில், இலங்கையின் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவராகிவிட்டார் அவர். அதாவது, தமிழ் இனப்படுகொலையை இறுதிவரை முன்னின்று நடத்தி எல்லா வகையான மனித உரிமை மீறல்களையும் செய்த பொன்சேகா, இப்போது தியாகி அளவுக்குச் சித்திரிக்கப்படுகிறார். தமிழர் பகுதியைச் சுடுகாடாக மாற்றிய பெருமைக்குரிய இவரைத்தான் அதிபர் தேர்தலில் சில தமிழ் அமைப்புகள் ஆதரிக்க …
-
- 1 reply
- 1.1k views
-
-
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு... மீண்டும் 5,000 ரூபாய்! குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவாக 5,000 ரூபாவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மாதாந்தம் 5,000 ரூபாய் வீதம் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அடையாளம் காணப்பட்ட, குறைந்த வருமானங்களை பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவானது வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1273764
-
- 9 replies
- 1.1k views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=pvrl71ILdHo கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் ஏற்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், அவரது சடலம் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் பொலிஸார் இந்த தகவலை வெளியில் கசியாமல் பாதுகாக்க முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் இரண்டு நாட்களாக கொலை செய்யப்பட்ட நபர் வீடு திரும்பாததைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் பொலிஸாரிடம் இது தொடர்பில் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தகவல் வெளியில் கசிந்துள்ளது. இதற்கிடையில் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவையும் மீறி பொலிஸார் இந்த ஆர்ப்…
-
- 6 replies
- 1.1k views
-
-
இந்தியாவை எச்சரிக்க மன்னாரில் சீனா, ஜப்பானுக்கு சிறிலங்கா அனுமதி >>>>>>>>>>>>>>>>>>>>> http://www.eelampage.com/?cn=27875
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=4][size=5]இலங்கையில் சீனா: கருணாநிதி கவலை[/size] இலங்கையில் சீனப்படைகளின் இருப்பு குறித்து வெளியாகும் தகவல்கள் குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி கவலை தெரிவித்துள்ளார். [/size] [size=4]இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் சீனப்படைகளின் இருப்பு குறித்து வெளிவரும் தகவல்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தல் அளிக்கும் விஷயம் என்றும், ஆகஸ்ட் 12ம் தேதி நடக்கும் டெசோ மாநாட்டில் மற்ற விஷயங்களுடன், இந்த விஷயம் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும், இதுகுறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்தார்.[/size] [size=4]http://tamil.yahoo.com/இலங்க-ய-ல்-ச-ன-132500797.html;_ylt=AsncAlRL4s7NTUEzXs8w_ruZBtx_;_y…
-
- 16 replies
- 1.1k views
-
-
'சம்பந்தன் ஏமாற்றப்பட்டார்' -எஸ்.நிதர்ஸன் “எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டிருக்கின்றார் அல்லது இராஐதந்திர ரீதியில் தோல்வியடைந்திருக்கிறார் ”என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினுடைய 34 ஆவது கூட்டத்தொடர், எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது. அதில் இலங்கை தொடர்பான விடயங்கள் தொடர்பாக ஒன்றரை வருட கால அவகாசம் இலங்கை அரசால் கேட்கப்பட இருக்கின்றத…
-
- 6 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு யாழ். பிரதான வீதியை புனரமைப்புச் செய்யும் பணிகள் இன்று திங்கட்கிழமை முதல் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறன. அண்மைக்காலமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் சேதமடைந்திருந்த இந்த வீதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டிருந்தன. இந்த வீதி திருத்த பணிகள் தொடர்பாக புனரமைப்பு வேலையில் ஈடுபட்ட ஆர். யோகேஸ்வரன் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு இந்த வீதி புனரமைக்கப்பட்டு வருகிறது. வீதியை அகலப்படுத்துவதற்காகவே இவ்வளவு காலமும் வீதி புனரமைக்கப்படாமல் இருந்தது என்றார். தைப்பொங்கல் விழாவையொட்டி யாழ்ப்பாணம் வரவிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரியாலைப் பகுதியில் இந்திய நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுவரு…
-
- 1 reply
- 1.1k views
-
-
தொப்பிகல மற்றும் மன்னாரில் விமானத் தாக்குதல் [Friday July 06 2007 01:31:21 PM GMT] [யாழ் வாணன்] மன்னார் மற்றும் தொப்பிகலயில் விடுதலைப் புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது விமானப்படையினர் வான் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொப்பிகலயில் விடுதலைப்புலிகளின் முகாமொன்றின் மீதும் , மன்னார் பாலம்பிட்டியலும் புலிகளின் முகாமொன்றின் மீதும் , மன்னார் ,பாலம்பிட்டியிலும் புலிகளின் முகாமொன்றின் மீதும் இன்று காலை முறையே 6.15 மற்றும் 6.20 மணியளவில் விமானப்படை கிபிர் ஜெட் விமானங்கள் வான் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் . இதில் புலிகளின் இலக்குகள் முற்றாக தாக்கியழிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது…
-
- 1 reply
- 1.1k views
-
-
விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சரத் பொன்சேகா செயல்பட்டதாக இலங்கை அமைச்சர் அனுரா பிரிய தர்ஷனா கூறியுள்ளார். இலங்கை அமைச்சர் அனுரா பிரிய தர்ஷனா யாபா இலங்கை அரசு டி.வி.க்கு அளித்த பேட்டி ஒன்றில் சரத் பொன்சேகாவை கடுமையாக விமர்சித்து உள்ளார். அவர் பேட்டியில் கூறியதாவது: சரத் பொன்சேகாவின் அறிக்கைகள் பொறுப்பற்ற முறையில் இருந்தன. அவரது அறிக்கை இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக மக்களை திருப்பும் வகையில் இருந்தன. விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்பான தமிழ் தேசிய கூட்டணி, அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு அளித்தது. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் கூறியதால்தான் தமிழ் தேசிய கூட்டணி பொன்சேகாவுக்கு ஆதரவு அளித்தது. இதன் பிறகு பொன்சேகா வ…
-
- 2 replies
- 1.1k views
-
-
சுய நிர்ணய கோரிக்கையை கோரிப் போட்டியிடுகிறார் சிறிதுங்க. மகிந்தவுக்கும் மயித்திரிக்கும் இடையில் நடக்கும் அடுத்த மன்னர் யார் என்ற போட்டியில் மக்களின் கோரிக்கைகள் நசுங்கிச் செத்துக்கொண்டிருக்கிறது. நிறைவேற்று அதிகாரத்தை வழங்கிய கையோடு மக்கள் மீட்சி பெற்றுவிடுவார்கள் என்ற போலி நம்பிக்கையில் எதிர்கட்சி பக்கம் திரண்டவர்களும்கூட இன்று தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள். மயித்திரியின் சிந்தனையும் மகிந்த சிந்தனையாகவே இருக்கிறது. தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை யாராவது கதைத்தால் அது மகிந்தவைப் பலப்படுத்திவிடும் என்ற பயக்காட்டுதலை செய்து உரிமைக் கோரிக்கைகள் நசுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதையும் மீறி ஒருவர் தனித்து நிற்கிறார். மயித்திரி மகிந்த என்று பல பெயர்களில் …
-
- 15 replies
- 1.1k views
-
-
லண்டன் வாழ் தமிழர்கள் கடத்தப்படும் தளமாக இலங்கை: யாழ். இளைஞனையும் காணவில்லை ஞாயிற்றுக்கிழமை, 20 பிப்ரவரி 2011 11:09 லண்டனிலிருந்து இலங்கைக்கு வந்திருந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார் என அறிவிக்கப்படுகிறது. தமது உறவினர்களைப் பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் வந்திருந்த 31 வயதான தமிழ் இளைஞர் ஒருவர் வவுனியாவில் வைத்துக் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது. வவுனியாவில் வைத்து இவர் கடத்தப்பட்டிருக்கலாம் என இவரது குடும்பத்தவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளார்கள். விஸ்வலிங்கம் மௌனகுரு என்ற இந்த இளைஞத் தனதுகுடும்பத்தவர்களைப் பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் வந்திருந்ததாகவும், கடந்த 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்தபோது வவுனியாவில் வைத்துக் காணாமல்…
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்தோ னேஷிய வெளிவிவகார அமைச்சர் ஹஸன் விராஜுதா இன்று இலங்கை வருகிறார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரும் இவர், அமைச்சர் ரோஹித போகொல்லா கமவுடன் இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க ஆகியோரை நாளை 30 ஆம் திகதி இவர் சந்தித்துப் பேசவுள்ளார். அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் விசா தவிர்ப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவார்கள். இதேவேளை, இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர், “இந்தோனேஷிய வெளிவிவகாரக் கொள்கையும் ஏசியானும், “எனும் தொனிப்பொருளில் விரிவுரை நிகழ்த்துவார். கொழும்பு, சர்வதேச உறவுகளுக்கான கதிர்காமர் நிலையத்தில் இந்த சொற்பொழிவு இ…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தியாவின் உதவி தொடரும் என உறுதியாக நம்புகின்றேன்! இந்தியாவின் 75 ஆவது குடியரசு தினம் இன்று (26) கொண்டாடப்படுகின்றது. இதனைமுன்னிட்டு அமைச்சர் ஜீவன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, “ ஒட்டுமொத்த உலகுக்குமே அஹிம்சையை போதித்த நாடுதான் பாரத தேசமாகும். ஜனநாயகத்தின் இருப்பிடமாகவும் அந்நாடு கருதப்படுகின்றது. இன்று உலகில் பலமான பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலிலும் இணைந்துள்ளது. அதுமட்டுமல்ல தொழில்நுட்ப துறையிலும் வேகமாக முன்னேறிவருகின்றது. நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையுடன் இந்தியா இன்று குடியரசு தினத்தைக் கொண்டாடுகின்றது. அனைத்த…
-
- 7 replies
- 1.1k views
-
-
திங்கட்கிழமை, பெப்ரவரி 7, 2011 வந்தாறுமூலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி முகாம்களில் உள்ள மக்கள், ஒரு உணவுப் பொதியில் 7 பேர் உண்ணும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள வந்தாறுமூலை பிரதேசத்தில் மக்கள் தமக்கு இதுவரை எதுவித உணவுப் பொருட்களும் வழங்கப்படவில்லையென தெரிவித்தனர். வந்தாறுமூலை மேற்குப் பிரதேசத்தில் உள்ள 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்த வெள்ளம் காரணமாக பலத்த பாதிப்புகளை சந்தித்துள்ள போதிலும் இதுவரையில் எதுவித நிவாரணமும் தமக்கு வழங்கப்படவில்லையென கவலை தெரிவிக்கின்றனர். தமது குழந்தைகளுக்கு பால்மா கூட பெற்று…
-
- 0 replies
- 1.1k views
-
-
உள்நாட்டு பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இருதரப்பும் பேச்சின் மூலம் தீர்வு காண வேண்டும்:சியாம் சரண் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனையில் சம்மந்தப்பட்ட இருதரப்பும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வைக் காணவேண்டும். ஏனைய நாடுகள் இலங்கையின் இனப்பிரச்சினையில் தலையிட்டாலும் தீர்வு காணமுடியாது என இந்திய வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் சியாம் சரண் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற 'இந்திய வெளியுறவுக் கொள்கையும் இலங்கையுடனான நட்புறவும்' என்ற கருப்பொருளில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நீண்டு கொண்டு செல்லும் இலங்கைத்தீவின் இன ரீதியிலான பிச்சினைக்கு சம்பந்தப்பட்ட இரு தரப்பின…
-
- 1 reply
- 1.1k views
-