ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143662 topics in this forum
-
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட ரீதியான வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை போன்றன காணப்பட்டால் அவற்றை எதிர்வரும் 2 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அரச நிர்வாக அமைச்சு, அமைச்சின் செயலாளர், குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் தேசிய திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆகியோருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோத்தபாயவின் குடியுரிமை தொடர்பில் இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. https://www.tamilwin.com/politics/01/2…
-
- 9 replies
- 972 views
-
-
வருமான வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - உள்ளாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் Published By: Vishnu 16 Dec, 2024 (எம்.ஆர்.எம்.வசீம்) 2023, 2024 மதிப்பீட்டு வருடத்தின் எஞ்சிய வரி பணத்தை எதிர்வரும் 26ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு உள்ளாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த திகதிக்கு முன்னர் வரி பணம் செலுத்த தவறும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படாது என திணைக்களத்தின் ஆணையாளர் சேபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார். இதுவரை செலுத்தாத சுய மதிப்பீட்டு வரி மற்றும் எஞ்சிய வரி பணத்தை அறவிடுவதற்காக கள ஆய்வு மற்றும் …
-
- 0 replies
- 422 views
-
-
-
நாங்கள் வாஷிங்டன், டில்லிக்கு போகிறோம். இப்பிரச்சினையை சர்வதேச மயப்படுத்துகிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால் நாம் இந்த பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தவில்லை. உங்கள் தரப்பினரால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையினாலேயே இப்பிரச்சினை சர்வதேச மயமாகியது. இலங்கையில்தான் நாம் பேச்சு நடத்துகிறோம். ஆனால் அதன் மூலம் தீர்வு காண முடியாவிட்டால், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நாம் சகல நடவடிக்கைகளையும் செய்யநேரிடும்' தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் நேற்று தெரிவித்தார். பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தந்தை செல்வாவின் நினைவுப் பேருரை நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். பே…
-
- 1 reply
- 465 views
-
-
தன்னிச்சையாகச் செயற்படுகிறார் சுவாமிநாதன் : சாடுகின்றார் மாவை சேனாதிராஜா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடும் முயற்சியினாலே அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் மீள்குடியேற்ற அமைச்சராக நியமிக்கப்பட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நாடளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற காணி, சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற, காணி விவகாரத்தில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தன்னிச்சையாகச் செயற்படுவதாகக் குறிப்பிட்ட மாவை சேனாதிராஜா, இது குறித்து பிரதமர் ரணில் வி…
-
- 1 reply
- 518 views
-
-
பங்களாதேஷிக்கு செல்லும் மின்சாரத்தை இலங்கைக்கு விற்பனை செய்யும் வழிகளை ஆராயும் அதானி நிறுவனம்! இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் கோடாவில் அமைந்துள்ள தனது ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு பங்களாதேஷுக்கு விநியோகிக்கப்படும் மின்சாரத்தை இலங்கை போன்ற அண்டை நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கனா வழிகளை அதானி பவர் (Adani Power) நிறுவனம் ஆராய்ந்து வருகிறது. 2X800 மெகாவாட் திறன் கொண்ட ஜார்கண்ட் ஆலை, பங்களாதேஷுக்கு மின்சாரம் வழங்க அதானி பவரின் அர்ப்பணிப்பு திட்டமாகும். பங்களாதேஷில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக சில சிக்கல்களுக்கு மத்தியில் ஆலையில் இருந்து பங்களாதேஷிற்கு மின்சாரம் வழங்கும் அளவை நிறுவனம் குறைத்துள்ளது. இந்தத் திட்டத்தைத் தக்கவைக்க, உள்நாட்டுச் சந்தையில்…
-
- 0 replies
- 471 views
-
-
உசன் படை நிலைகள் மீது புலிகள் பீரங்கி தாக்குதல் இன்று இரவு எழுது மட்டுவாள் உசன் சிங்கள இராணுவ படை நிலைகள் மீது புலிகள் ஏவிய எறிகனைகள் வீழந்து வெடித்துள்ளன. இவ் தகவலை படை நிலைகளிற்குள் அருகில் உள்ள சிலர் கலகத்திற்கு தெரிவித்துள்ளனர். அவா்கள் மேலும் கூறியாவது தமிழீழ விடுதலைப் புலிகள் ஏவிய கனரக பீராங்கி மேலும் படிக்க... http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1129
-
- 0 replies
- 1.5k views
-
-
தம்புள்ளை பள்ளிவாசல் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. அரசாங்கமும் இது தொடர்பில் இன்னும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இந்நிலையில் பள்ளிவாசல் விவகாரத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்று தம்புள்ளை ரங்கிரி விஹாரையின் பிரதம பிக்கு இனாமலுவே சுமங்கல தேரர் எச்சரித்துள்ளார். இலங்கையின் ஆங்கில செய்திதாள் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்தக் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன: இலங்கையில் பௌத்தம் 2 300 வருட வரலாற்றைக்கொண்டது. இஸ்லாமியர்கள், இலங்கைக்கு வணிகத்துக்காகவே வந்தனர். ஆண்கள் மாத்திரமே இங்கு வந்தனர். பின்னர் இங்குள்ள சிங்கள மற்றும் தமிழ்ப் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டனர். இதுவே அவர்களின் வரலாறு எனவே அவர்கள் …
-
- 4 replies
- 1.3k views
-
-
தான் யோகா பயிற்சியில் ஈடுபடும் படத்தை தனது அனுமதியின்றி நாமல் வெளியிட்டுள்ளாா் - மகிந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் யோகா பயிற்சியில் ஈடுபடும் படத்தை தனது மகன் நாமல் ராஜபக்ச அனுமதியின்றி வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பிரகீத் காணமற்போன விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள புலானய்வாளர்களை சந்திப்பதற்காக வெலிக்கடை மருத்துவமனைக்கு சென்ற வேளையே அவர் இதனை தெரிவித்துள்ளார். நான் யோகபயிற்சில் கடந்த சில வருடங்களாக ஈடுபட்டு வருகிறேன், எனினும் இந்த விடயம் ஊடகங்களிற்கு தெரியாது, கடந்தவாரம் நான் எனது மகனுடன் யோகா பயிற்சிநிலையத்திற்கு சென்றதை தொடர்ந்தே வெளியுலகிற்கு இந்த விடயம் தெரியவந்து…
-
- 1 reply
- 515 views
-
-
கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கொழும்புக்கு அழைப்பு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு அடுத்த வாரத்தில் கூடவுள்ளது. இதன்படி எதிர்வரும் 23 , 24ஆம் திகதிகளில் தமது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொழும்புக்கு வருமாறு கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதன்போது வடக்கு கிழக்கு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்கக் கூடிய வேட்பாளருக்கு தமது ஆதரவை வழங்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது http://www.samakalam.com/செய்திகள்/கூட்டமைப்பின்-அனைத்து-பா/
-
- 0 replies
- 360 views
-
-
அரிசியின் விலையை கூட்டுறவு தீர்மானிக்க வேண்டும் adminJanuary 10, 2025 “அரிசியின் சந்தை விலையை தீர்மானிக்கும் சக்தியாக கூட்டுறவு மாற வேண்டும்” என வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார். கைதடி ஐக்கிய மகளிர் சங்க ஏற்பாட்டில் கடந்த வாரம் கைதடி சைவ ஐக்கிய சங்க மண்டபத்தில் “அரிசி அரசியலும் அதனை எதிர்கொள்வதில் கூட்டுறவின் வகிபாகமும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. அதில் வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர் மற்றும் வடகிழக்கு மாகாண விவசாய மேம்பாட்டு கழக உறுப்பினர் தனபாலசிங்கம் துளசிராம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். அதன் போது, அரிசியின் அரசியலை…
-
- 0 replies
- 181 views
-
-
சிறிலங்கா சிங்கள வன்பறிப்பாளர்கள் மடு மாதாவை வன்பறிப்புச் செய்யும் நோக்கத்தை வெற்றியடையச் செய்யாமல் மடு மாதா அங்கிருந்து வெளியேறியமை நிம்மதி தருவதாக கத்தோலிக்க மக்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.5k views
-
-
அவுஸ்திரேலியா பாதுகாப்பு புலனாய்வு நிறுவனத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக்கூறி 6 வயது மற்றும் 8 வயது நிரம்பிய இரு பாலகர்கள் மற்றும் அவரது தாயார் ஆகியோர் காலவரையற்ற தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியுள்ள இக்குடும்பம் கடந்த 1 வருடத்துக்கு மேலாக சமூகத்தில் விடப்பட்டிருந்தனர். அவுஸ்திரேலயா குடிவரவுத் திணைக்களத்தின் அனுமதியுடன் திருமணம் செய்து மெல்பேர்ணில் வசித்துவந்த தாய், மற்றும் அவருடைய இரு சிறுவர்களையும் கடந்த 10ந்திகதி எவ்வித முன்னறிவித்தலுமில்லாமல் நேர்காணல் என அழைத்து கணவரிடமிருந்து பிரித்து சிட்னி வில்லாவுட் தடுப்பு முகாமுக்கு ஏற்றப்பட்டுள்ளனர். http://youtu.be/N5G1JNNx_KI http://www.pooraayam.com/mukia…
-
- 1 reply
- 683 views
-
-
புதிய தலைமுறை பௌத்த பிக்குகள் குறித்து மக்களுக்கு நம்பிக்கையில்லை – ஜனாதிபதி புதிய தலைமுறை பௌத்த பிக்குகள் குறித்து மக்களுக்கு நம்பி;க்கையில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தற்போது பௌத்த பிக்குகளாக துறவறம் பூணும் சிலர் தொடர்பில் பொதுமக்கள் நம்பிக்கையற்ற நிலையில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். அமரபுர நிக்காயவின் பீடாதிபதி வணக்கத்திற்குரிய தெவுல்தென்ன ஞானீஸ்ஸர தேரரரின் 100ம் பிறந்த நாளை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஞானீஸ்ஸர தேரரர் போன்ற பௌத்த பிக்குகளையே பொது மக்கள் பின்பற்றி வருவதாகத் தெரிவித்துள்hளர். எவ்வாறனெனினும் சில புதிய பௌத்த…
-
- 24 replies
- 1.2k views
- 1 follower
-
-
மீண்டும் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து பிரதான வேட்பாளர்களும், தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ள நிலையில், மீண்டும் ஐந்து தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் செயற்பாட்டில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அல்லது நாளை (திங்கட்கிழமை), ஐந்து கட்சிகளுக்கிடையிலான சந்திப்பொன்றை மீண்டும் நடத்துவதற்கு மாணவர்கள் ஆர்வமாக காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கை தமிழரசுக்கட்சி ஏறக்குறைய தீர்மானமொன்றியை எடுத்து விட்டது. அதேபோன்று, தமிழ் மக்கள் யாருக்கு வாக்களி…
-
- 4 replies
- 411 views
-
-
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (28) நீர் கசிந்துள்ளது. மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக இயேசுவின் விரல் பகுதியில் இருந்து நீர் கசிந்தது. சம்பவம் அறிந்து பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த மக்கள் இயேசுவின் காலில் இருந்து வடிந்தோடிய நீரை எடுத்துச் சென்றனர். சகோதர மதத்தினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸார், பொது மக்கள் என பலர் இந்த காட்சியை பார்வையிட்டதுடன் புகைப்படங்களையும் எடுத்துச் சென்றனர். சம்பவம் தொடர்பாக ஆலய பங்குத்தந்தையால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே மேலதிக தகவல்களை வெளியிட முடியுமென கப்பலேந்தி மாதா ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். …
-
- 5 replies
- 591 views
-
-
தேவன்பிட்டியில் மக்கள் ஆர்பாட்டம். மன்னார் மாந்தை மேற்கு தேவன் பிட்டியில் மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு வெளியிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சிறீலங்காவின் கைத் தொழில் அபிவிருத்தி அமைச்சரின் இணைப்பாளர் ஒருவருக்கு எதிராகவே இவ்எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. மன்னார் தேவன் பிட்டி கடலோரமான பல்வேறு வளங்கள் உள்ள நிலையில் அமைச்சரின் பின்னணியில் அவற்றை சுரண்ட முட்பட்ட மேற்படி இஸ்லாமிய முதலீட்டாளரை எதிர்த்தும் அவரது முதலீடுகள் தேவன்பிட்டிக்கு வரக்கூடாது எனத் தொவித்துனம் மக்கள் இவ் ஆhப்பாட்டத்தை மேற்கொண்டதாக அறிய முடிகின்றது. தேவன் பிட்டி கடற்கரையில் பண்ணை அமைந்து கடல் உணவுகளை வளர்க்கமுற்பட்ட வேளை இவ் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றதாகவும் மக்கள் கடும் எதிர்ப்பை அடுத்து திட்டதை கை…
-
- 0 replies
- 798 views
-
-
இந்திய ரோலர்... முல்லைத்தீவு, வட்டுவாகலை சேர்ந்த இரு மீனவர்கள் முல்லைத்தீவுக்கடற்பரப்பில் நேற்று திங்கட்கிழமை மீன்பிடித்துகொண்டிருந்த போது, அவர்களின் படகை இந்திய ரோலர் மோதியதால் அப்படகு கடலில் மூழ்கியது. இச்சம்பவத்தை தொடர்ந்து முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துகொண்டிருந்த ஏனைய மீனவர்கள் மேற்படி இந்திய ரோலரை மடக்கிப்பிடித்துள்ளதுடன் அதிலிருந்த 8 இந்திய மீனவர்களையும் பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர். (படப்பிடிப்பு: நடராசா கிருஸ்ணகுமார்) - See more at: http://www.tamilmirror.lk/163047/%E0%AE%87%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%B0-%E0%AE%B2%E0%AE%B0-#sthash.DfpyKdo3.dpuf
-
- 0 replies
- 476 views
-
-
04 FEB, 2025 | 06:26 PM (நமது நிருபர்கள்) இலங்கையில் 77ஆவது சுதந்திர தினம் வடக்கு, கிழக்கில் கரிநாளாக பிரகடனம் செய்யப்பட்டு இன்றைய தினம் (4) அனுஷ்டிக்கப்பட்டதோடு பாரிய கவனயீர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, இனப்படுகொலைக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். போராட்டங்களில் பல்கலைக்கழக மாணவர்கள், மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர். யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர் போராட்டம் முதலி…
-
- 0 replies
- 129 views
- 1 follower
-
-
இலங்கையின் இறுதிப் போரின்போது இடம்பெற்ற மனித உயிரிழப்புக்கள் மற்றும் இதர பாதிப்புக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்புடைய தொண்டர் நிறுவனங்கள் ஆக்கபூர்வமாக செயற்பட்டுள்ளனவா என்பதை கண்டறிவதற்கு மூன்று பேர்கொண்ட ஐ.நா. நிபுணர் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது.ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழு நான்கு மாத காலத்துக்குள் தனது அறிக்கையை ஐ.நா. சபையிடம் கையளிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. சுயாதீன ஐ.நா. ஆலோசகர்களில் ஒருவரான சாள்ஸ் பெற்றி இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கும் அதேசமயம் ஐ.நாவின் உயர்மட்ட அதிகாரிகளான பென் மெட்ஜ் கொடும்னி, லினா சின்ஹா ஆகியோர் இதன் இதர உறுப்பினர்களாவர். இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது ஆயிரக்கணக்கான மக…
-
- 4 replies
- 845 views
-
-
யாழ் நகரில் தம்பிராசா மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல் யாழ்ப்பாணம் நகரில் தனது வாக்குரிமையைப் பயன்படுத்த தம்பிராசா சென்ற வேளை எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இணைப்பாளர் மு.தம்பிராசா மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.பிரதான அரசியல் கட்சியொன்றின் குழுவொன்றே தன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றச்சாட்டி, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக, தம்பிராசா தெரிவித்துள்ளார்.மேலும் இனந்தெரியாதவர்கள் நடத்திய தாக்குதலில் அவர் காயமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.(15) http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-நகரில்-தம்பிராசா-மீ/
-
- 2 replies
- 486 views
-
-
சர்வதேச செய்தி நிறுவனம் இலங்கை ஜனாதிபதியாக கோதாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவரை ' தமிழ் இன ஒழிப்புக்கு காரணமான இராணுவத் தலைவர் ' என விபரித்தமைக்கு நடவடிக்கை எடுக்க கோரி சுரகிமு ஸ்ரீலங்கா மற்றும் சிங்களே அபி அமைப்பு உள்ளிட்ட நான்கு அமைப்புக்கள் பிரித்தானிய பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளன. அத்தோடு இன்று வியாழக்கிழமை கொழும்பு 7 பௌத்தாலோக மாவத்தையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பிரித்தானியாவை தளமாகக்கொண்டு இயங்கிவரும் சர்வதேச செய்தி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிய கடிதம் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தில் கையளிக்கப்பட்டது. அந்த கடிதத்தில் த…
-
- 1 reply
- 282 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கப்படும் வாக்குகள் பிரபாகனுக்கே - சிறீலங்கா அதிபர் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழக்கப்படும் ஒவ்வொரு வாக்குகளும் பிரபாகரனுக்கு வழங்கப்படுவதாகவே கருதுகின்றோம் என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று தெஹியந்திய கண்டிய மகாவலி விளையாட்டரங்கி் இடம்பெற்ற மே நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எமது படையினரின் அர்ப்பணிப்புடன் மீட்டெடுத்த கிழக்கு மாகாணத்தை விடுதலைப் புலிகளிடம் தாரைவார்க்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். கிழக்கு மாகாணத்தை மீட்டெடுத்தது போல் வடக்கு மாகாணத்தையும் விரையில் படையினர் மீட்டெடுப்பார்கள் மகிந்த ராஜபக்ச சூரைத்துள்ளார். க…
-
- 0 replies
- 790 views
-
-
பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தவறாக நடந்துகொண்டால் சட்ட நடவடிக்கை [ Tuesday,19 January 2016, 03:14:08 ] நாடாளுமன்ற வளாகத்திற்குள் பெண் உறுப்பினர்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுத்தப்படுவார்களாயின் அது தொடர்பில் தனக்கு அறிவிக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்குமாயின் அது தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கத் தான் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற வளாகத்திற்குள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக இரண்டு பிரதான கட்சிகளைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அண்மையில் நா…
-
- 0 replies
- 293 views
-
-
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற 6 மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும்- ஜி.எல். அரசாங்கத்தின் கொள்கைகளை சரியாக நிறைவேற்றுவதற்கு இன்னும் 6 மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஸ்தாபக உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் 225 பேரில் தற்பொழுது 104 பேருடைய ஆதரவே தமக்கு உள்ளதாகவும், இந்த ஆதரவை வைத்துக் கொண்டு அரசாங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்ற முடியாதுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லையென்பதை சாட்டாகக் கொண்டு, கால இழுத்தடிப்பைச் செய்யவும் தாம் விரும்புவதில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். http://www.dailyceylon.com/192945/
-
- 1 reply
- 289 views
-