ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142751 topics in this forum
-
அம்பாறை உடும்பன்குள வனப்பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களில் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். நால்வர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 929 views
-
-
மொனராகலை கொட்டியாகல பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியொன்றிலிருந்து 7 சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவல்களை அடுத்து பொலிஸார் இந்த சடலங்களை கண்டு பிடித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு சடலங்கள் முதலில் மீட்கப்பட்டதாகவும், பின்னர் ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. இந்த சடலங்கள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும், இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார் இந்த சடலங்கள் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களுடையதாக இருக்கலாம் என மனித உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். http://www.tamilskynews.com/index.php?opti...…
-
- 2 replies
- 1.2k views
-
-
பிரித்தானியாவில் உள்ள அழும்கட்சியான கான்சர்வேட்டிவ் கட்சி, தமிழர்களுக்கான உப குழு ஒன்றை ஆரம்பிக்க அனுமதி கொடுத்துள்ளது. பிரிட்டிஷ் தமிழ் கான்சர்வேட்டிவ் (British Tamil Conservatives) என்று அழைக்கப்படும் இக் குழுவில் பல ஆழும் கட்சியின் எம்பீக்கள், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மற்றும் தமிழர்கள் இணைந்துள்ளார்கள். பிரித்தானியாவில் வாழும் பல்லின மக்களுக்கு மத்தியில், தமிழர்களுக்கு கிடைக்கப்பெற்ற முதல் உரிமை இது என்று சொல்லப்படுகிறது. வெள்ளை இன மக்களுக்கு நிகரான ஒரு அந்தஸ்த்தை இது பெற்றுத்தந்துள்ளது எனலாம். கடந்த 9ம் திகதி நடைபெற்ற இதன் முதல் மாநாட்டில், ஆழும் கட்சியைச் சேர்ந்த பல அமைச்சர்கள், புத்திஜீவிகள், எம்.பீக்கள் மற்றும் தமிழ் பிரமுகர்கள் கலந்துகொண்டனர…
-
- 8 replies
- 1.2k views
-
-
இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட இழப்பு 21 ஆயிரத்து 600 கோடி [ Tuesday,24 May 2016, 03:34:35 ] ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட இழப்பு 21 ஆயிரத்து 600 கோடி ரூபாவென அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த பேரழிவில் சிக்கி இதுவரை 93 பேர் உயிரிழந்துள்ளதோடு, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனக் கருதப்படுகின்றது. மேலும் இதுவரை மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதோடு, 2004ஆம் ஆண்டு சுனாமிப பேரலையால் ஏற்பட்ட சொத்தழிவுக்குப் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய அழிவு இதுவெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச பங்களிப்புடன் இழப்பீடுகள் பெற்றுக் கொடுக்கப்பட…
-
- 0 replies
- 363 views
-
-
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிசக்தி வாய்ந்த கண்ணிவெடித் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 648 views
-
-
அமெரிக்க வல்லரசின் வேண்டுகோளுக்கு இணங்க பல நாடுகளில் மத்தியஸ்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நாடுகளில் நோர்வே முதன்மை வகிக்கிறது. பிற நாடுகளின் பாதுகாப்புக்கு எவ்விதத்திலும் அச்சுறுத்தல் இல்லாததினாலும், பல மேற்கத்தைய நாடுகளின் சொல்லைக் கேட்பதினாலும், அபிவிருத்தி அடைந்துவரும் அல்லது அபிவிருத்தி அடையாத நாடுகளுக்கு நன்கொடைகளை வழங்கிவரும் நாடு என்பதினாலும் நோர்வேயை அனைவரும் விரும்புகிறார்கள். இதனை நன்கே பாவித்து வருகின்றன சில உலக வல்லரசுகள். இந்த வகையில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நேரடி வேண்டுதலின்பேரில் விடுதலைப்புலிகளுக்கும் மற்றும் சிங்கள அரச தலைமைக்கும் மத்தியஸ்தம் செய்யும் பணி 2000-ஆம் ஆண்டளவில் நோர்வேயிடம் ஒப்படைக்கப்பட்டது. நோர்வேயும் இதய சு…
-
- 1 reply
- 717 views
-
-
“சுதந்திரத்திற்குப் பின்னான ஆட்சிகளில் மைத்திரி றணில் இணையாட்சி சற்று வித்தியாசமானதே” விழுதுகள் நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்: ஒலி - ஒளி வடிவில் செவ்வி இணைப்பு- “சுதந்திரத்திற்குப் பின்னான ஆட்சிகளில் மைத்திரி றணில் இணையாட்சி சற்று வித்தியாசமானதே” என www.gtbc.fmல் "விழுதுகள்" நிகழ்வில் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132662/language/ta-IN/article.aspx
-
- 1 reply
- 315 views
-
-
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை சமர்ப்பிப்பு! தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை (07) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இது சுதந்திர இலங்கையின் 80 ஆவது வரவு-செலவுத் திட்டமாகும். நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்ட உரையை ஆற்றுவார். 2026 வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிதியொதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் சனிக்கிழமை தொடங்கும். வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்கு மொத்தம் ஆறு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி மாலை 6:…
-
-
- 1 reply
- 109 views
-
-
தேசத்தைக் கட்டியெழுப்பவதற்கான அமைச்சர் பசில் ராஜபக்சவும் மக்கள் விடுதலை முன்னணிப் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசநாயக்காவும் பாராளுமன்றத்தில் கோப் தொடர்பான கூட்டத்தின் போது கட்டிப் புரண்டு மோதிக் கொண்டனர். கண்கண்ட சாட்சியங்களின்படி, இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து குத்துச் சண்டை வீரர்கள் போல மோதிக் கொண்டனர். எனினும் அங்கிருந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் பிடித்து பிரித்து விட்டுள்ளனர். இதன்போது ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னணிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் அநுர குமார திசநாயக்காவுக்கு ஆதரவளித்தனர். எனினும் இந்தச் சச்சரவின் போது ஆச்சரியத்தக்க விதத்தில் பசில் ராஜபக்சவுக்கு அரசாங்க …
-
- 9 replies
- 3.3k views
-
-
கடற்படையினர் நிலைகொண்டிருந்த மாதகல் மேற்கு பிரதேசம், மக்கள் மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட்டுள்ளதாக சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் முரளிதரன் இன்று தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசம் நேற்று முன்தினம் கடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இப்பகுதியில் மீள்குடியேறவுள்ள மக்கள் தொடர்பான பதிவுகள் மாதகல் பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர், இதுவரை 269 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் விடுவிக்கப்பட்ட குறித்த பகுதியில் இன்று 212 குடும்பங்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று காணி துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். அப்பகுதியில் மீள்குடியேறும் மக்களுக்கு அரசின் விதிமுறைகளுக்கு அமைவாக வீட்ட…
-
- 0 replies
- 734 views
-
-
விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சியைத் தடுப்பதிலேயே சிறிலங்காவின் பாதுகாப்பு அமைப்புகள் கவனம் செலுத்துவதால், ஐஎஸ் தீவிரவாதம் போன்ற புதிய அச்சுறுத்தல்களில் கவனம் செலுத்துவது பாதிக்கப்படுவதாக அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள, 2015ஆம் ஆண்டுக்கான தீவிரவாதம் தொடர்பான அறிக்கையிலேயே அமெரிக்கா இவ்வாறு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சியைத் தடுப்பதில் சிறிலங்கா பாதுகாப்பு அமைப்புகள் கவனம் செலுத்தி வருகின்றதானது, இலங்கையர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைவது தொடர்பாக கவனம் செலுத்துவதை பாதித்துள்ளது. அதேவேளை விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு இன்னமும் உயிர்ப்புடன் செயற்பட்டு வருகிறது. அமெரிக்க இராஜாங்கத் தி…
-
- 4 replies
- 710 views
-
-
Published By: Vishnu 16 Nov, 2025 | 07:36 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தாஜுதீன் கொலை சாட்சியங்களை மறைத்தவர் தற்போது ஜனாதிபதியின் ஆலோசகராக இருக்கிறார். அதனால் இந்த அரசாங்கம் ஒருபோதும் தாஜுதீனின் கொலையாளிகளை கைது செய்யப்போவதில்லை. முடிந்தால் கொலை செய்தவர்களை கண்டுபிடிக்குமாறு சவால்விடுகிறேன் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (15) இடம்பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அலுவலகங்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், பாராளுமன்றம், ஆணைக்குழுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், தாஜுதீன் கொலை செய்யப…
-
- 1 reply
- 171 views
- 1 follower
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணம் ஆகியவற்றின் பாதுகாப்புக்களை ஆட்டங்காண வைப்பதே தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய நோக்கம் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
அகில கால மீளாய்வு அமர்வுகளில் 99 நாடுகள் இலங்கை குறித்து பேசவுள்ளன 28 அக்டோபர் 2012 அகில கால மீளாய்வு அமர்வுகளில் சுமார் 99 நாடுகள் இலங்கை தொடர்பில் பேச உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில நாடுகள் முன்கூட்டியே இலங்கை தொடர்பான கேள்விகளை சமர்ப்பித்துள்ளன. மனித உரிமை மீறல்கள், வட மாகாணசபைத் தேர்தல், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பரிந்துரைகள் அமுலாக்கம் போன்ற விடயங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, பிரித்தானியா, செக்குடியரசு, கனடா, ஸ்பெய்ன், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் ஏற்கனவே கேள்விகளை சமர்ப்பித்துள்ளன. இலங்கை விவகாரம் குறித்த விவாதத்தின் போது ஒவ்வொரு நாட்டுக்கும் தலா ஒரு நிமிடம் 12 வினாடிகள் ஒதுக…
-
- 0 replies
- 386 views
-
-
குமார் குணரட்னத்தை விடுவிக்கக்கோரி மட்டுவில் கையெழுத்து வேட்டை (சசி) முன்னிலை சோசலிஷக் கட்சியின் அரசியற்குழு உறுப்பினரான குமார் குணரட்னத்தை விடுதலை செய்யுமாறு கோரி மட்டக்களப்பில் இன்று கையெழுத்து வேட்டையொன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு ஆரயம்பதி சந்தைக்கு அருகாமையில் முன்னிலை சோசலிஷக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று பொதுமக்களினடம் இந்த கையெழுத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குமார் குணரட்னத்தினை விடுதலை செய்யுமாறும், அவருக்கு குடியுரிமையை வழங்குமாறும் மற்றும் சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடிவரவு – குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கை…
-
- 0 replies
- 289 views
-
-
கொரோனா தொற்று பரவுவதைத் தவிர்ப்பதற்கு உணவு வகைகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். தற்பொழுது மிகவும் ஆபத்தாக கொரோனா தொற்று பரவிவருவதால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள உணவு கையாளும் ஒழுங்கு விதிகளை முற்றாக அமுல்படுத்துவதுடன் மேலதிகமாக கொரோனா தொற்றை தவிர்ப்பதற்காக கீழ் குறிப்பிடப்ப ட்ட நடைமுறைகளை தவறாது பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார். 1 உணவு கையாளும் நிலையத்தில் பின்பற்றவேண்டிய கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை வாடிக்கையாளர்களுக்கு காட்சிப்படுத்த வேண்டும். 2 இயலுமானவரை உணவு வகைகளை வாங்கிச் சென்று உண்பதை ஊக்குவியுங்கள். 3 உணவு கைய…
-
- 2 replies
- 317 views
-
-
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெவ்வேறு இடங்களில் போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 07 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 10 நாட்களுக்குள், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 08 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் ஏழுபேர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானமை உறுதியானது. இந்நிலையில் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை 07 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பலருக்கு புனர்வாழ்வு! | Virakesari.lk
-
- 0 replies
- 80 views
-
-
விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்காக நடத்தப்படும் போர் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல. விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் பிரதிநிதி கள் அல்லர் என்ற சரியான கண்ணோட்டத்தில் அதனைப் பார்க்க வேண்டும். இலங்கை மீதும், இங்கு வாழும் தமிழ் மக்கள் மீதும் "கரிசனையுள்ள' சகலரும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம, இந்தியாவின் கவலை தெரிவிப்புக்கு நேற்றுப் பதிலடி கொடுத்தார். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் நேற்று முன்தினம் இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பாலிதகனேகொடவை அழைத்து இலங்கையில் இடம்பெற்றுவரும் மோதல்களினால் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக இந்தியாவின் அதிருப்தியை வெளியிட்டிருந்தார். எனவே, இவ்விடயம் குறித்து நேற்று நா…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் சிறிலங்காவின் மனித உரிமைகள் தொடர்பிலான மீளாய்வுக்கூட்டம் (01-11-2012) வியாழக்கிழமை இடம்பெற்றிருந்தது. அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்றேலியா போன்ற சர்வதேச அரசியலின் முக்கிய விசையாகவுள்ள மேற்குலக நாடுகள், சிறிலங்காவின் வாக்குறுதிகளை நம்புவதற்கு இனியும் தாங்கள் தயாரில்லை என்ற நிலைப்பாட்டினை வெளிக்காட்டியுள்ளமை ஓருபுறமிருக்க, மறுபுறம் சிறிலங்காவின் செயற்பாடுகளுக்கு புகழ்மாலை சூட்டாது, இறுக்கமான நிலைப்பாட்டினை இந்தியா இம்முறை சபையில் வெளிப்படுத்தியுள்ளமை பலராலும் கவனிக்கப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் பல தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும், ஜெனீவாவில் முகாமிட்டிருந்து தமிழர்களின் ந…
-
- 10 replies
- 1.5k views
-
-
பசில் ராஜபக்ஸ பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த கடந்த கால ஆட்சியின் போது, அவரது விலை மதிப்பான நாய்கள் இரண்டை பராமரிக்கும் பொறுப்பானது 6 இராணுவ சிப்பாய்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இராணுவ சிப்பாய்கள் பசிலின் நாய்களை பராமரித்தல், உணவுகளை வழங்குதல், மருந்து கொடுத்தல் சொல்லும் கட்டளைகளுக்கு கீழ் பணிய வைத்தல் போன்ற பயிற்சிகளை வழங்கி வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த இராணுவ சிப்பாய்கள் 'நாய் அணி' என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பசில் ராஜபக்ஸ கோல்டன் ரிட்ரிவர் எனும் இனத்திலான நாயை அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும் இதன் பெறுமதி 7 இலட்சம் ரூபா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில…
-
- 0 replies
- 331 views
-
-
இலங்கையின் 200 மில்லியன் டொலர் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை Dec 7, 2025 - 07:23 PM 'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர நிதியிடல் வசதியின் (RFI) கீழ் இலங்கை விடுத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் கோரிக்கைக்கு முன்னுரிமை அளிக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) தீர்மானித்துள்ளது. இந்த அவசர நிதியிடல் வசதியின் (RFI) கீழான உதவிகள், இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதியிடல் வசதியின் (EFF) கீழ் வழங்கப்படும் கடன் வசதிக்கு மேலதிகமாக வழங்கப்படும் நிதியிடல் வசதியாகும் என்றும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், விரிவாக்கப்பட்ட நிதியிடல் வசதியின் (EFF) கீழ் நாட்டிற்கு கிடைக்கவுள்ள ஐந்தாவது மீளாய்வை நிறைவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள…
-
- 0 replies
- 130 views
- 1 follower
-
-
ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பான விவகாரத்தை ஒட்டி கொழும்பு, புதுடில்லி ஆட்சித் தலைமைகள் இடையே எழுந்துள்ள இராஜதந்திர முறுகல் வலுவடைந்;திருப்பாதாக விடயமறிந்த வட்டாரங்களில்; இருந்து தகவல்கள் கசிந்திருக்கின்றன. இவ்விவிகாரத்தை ஒட்டி மஹிந்த சீற்றத்தோடு வெளியிட்ட சில கருத்துக்கள் புதுடில்லித் தலைமையை அதிருப்திக்குள் அழ்த்தியிருக்கின்றன எனவும் தெரியவருகிறது. ஈழத்தமிழருக்கு ஆதரவான எழுச்சி அலை தமிழகத்தில் புதுப் பிரவாகம் எடுக்கத் தொடங்கியுள்ளதன் பின்னணியில் இவ்விடயத்தில் அதிக சிரத்தையும், கரிசனையும் கொண்;டு செயற்பட வேண்டிய அரசில் கட்டாயம் புதுடில்லியில் மத்தி அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. இவ்விவகாரத்தை ஒட்டி தமிழக முதல்வர் கூட்டியுள்ள சர்வகட்சி மாநாடு இன்று சென்ன…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசாங்கத்துடன் இணைவதில் மற்றும் அதன் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சர் பதவியொன்றை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பெருந்தோட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று தேசிய தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். ஜனாதிபதிக்கு ஒரு தார்மீக கடமையிருக்கின்றது. நாங்கள், கடந்த ஜனாதிபதி தேர்தலில் இருந்து, மைத்திரிபால சிறிசேனவுடன் இருக்கின்றோம். பெருந்தோட்டத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தியவர் என்றவகையில், தொண்டமான் மட்டுமே கடந்த ஜனாதிபதி தேர்தலின் போத…
-
- 0 replies
- 176 views
-
-
தேசிய வெசாக் வாரம், மே மாதம் 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை, புத்தசாசன அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/தேசிய-வெசாக்-வாரம்-அறிவிப்பு/175-249559 வெசாக் பண்டிகையின் போது இவ்வாறு செயற்படவும் வெசாக் பண்டிகையின் போது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து அனைவரையும் பாதுகாப்பதற்காக இந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி விகாரைகளுக்கு சென்று வழிபடும்போது தனிமனித இடைவெளிகளை கடைப்பிடிப்பது கடினம் என்பதால் வீடுகளிலேயே வழிபாட்டு நிகழ்வுகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன்,…
-
- 10 replies
- 898 views
-
-
119 அவசர அழைப்பு இலக்கத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் Dec 18, 2025 - 04:48 PM 119 அவசர அழைப்பு இலக்கம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்ப்பது மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான ஏனைய குறுந்தொலைபேசி இலக்கங்கள் குறித்து தெளிவுபடுத்தி இலங்கை பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர். '119' அவசர அழைப்பு சேவைக்குக் கிடைக்கும் அழைப்புகளை ஆராயும்போது, பொலிஸார் உடனடியாகச் செயற்பட வேண்டிய முறைப்பாடுகளுக்கு மேலதிகமாக, பொய்யான முறைப்பாடுகள் மற்றும் ஏனைய அவசர சேவைகளுக்குப் பாரப்படுத்த வேண்டிய முறைப்பாடுகளையும் இந்த அழைப்பு மையத்திற்கு வழங்கி, அதனைத் தவறாகப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உண்மையான…
-
- 0 replies
- 130 views
- 1 follower
-