Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானி வாபஸ். வடக்கு மாகாணத்தில் நில தீர்வு தொடர்பாக 2025 மார்ச் 28, அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் உள்ள நில உரிமை தீர்வுத் துறையால் வர்த்தமானி அறிவிப்பு எண் 2430 வெளியிடப்பட்டது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள், அரசாங்கம் நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் திருப்பித் தருவதாக உறுதியளித்த போதிலும் மக்களின் நிலங்களைக் கையகப்படுத்த முயற்சிப்பதாகக் கூறி, இந்த வர்த்தமானிக்கு எதிராக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். வடக்கில் …

  2. மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாகக் கூறிவரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலில் வெற்றிபெற்றால், அமெரிக்காவுக்கு உள்ளே மாத்திரமன்றி ஏனைய நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளிலும் மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விபரம்.. http://www.swissmurasam.info/content/view/7092/1/

    • 1 reply
    • 1.5k views
  3. வவுனியாவில் இடம்பெற்ற விபத்துக்களில் ஐவர் காயம் வவுனியாவில் இதுவரையில் இடம்பெற்ற வாகன விபத்துக்களினால் 5 பேர் காயமடைந்தள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். வவுனியா, புளியங்குளம் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த வேன் சாரதி ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த வேன் வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஏ9 வீதியிலுள்ள மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் 5 மணித்தியாலயங்கள் மின்சாரம் தடைப்பட்டிருந்தததுடன், இவ் விபத்து காரணமாக தமக்கு ஒன்றரை இலட்சம் ரூபாய் வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வவுனியா மின்சார சபையினர் …

  4. ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்று தமிழரசுக்கட்சி இந்த கூட்டு முயற்சிக்கு வரவேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Published By: RAJEEBAN 06 JUN, 2025 | 01:41 PM ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்று தமிழரசுக்கட்சி இந்த கூட்டு முயற்சிக்கு வரவேண்டும்என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கூட்டு முயற்சிக்கு வருவதன் ஊடாக தமிழரசுகட்சிக்கு தேவைப்படுகின்ற சபைகளின் பதவிகளை நாங்கள் உறுதிப்படுத்த தயார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலு…

  5. விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான போர் தற்போது உச்சகட்டத்தை எட்டி யிருக்கிறது.இந்நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகின்றன. புலிகள் தொடர்ந்து பின்னடைவைச் சந்திப்பதாகச் சொல்லப்படுகிறதே? ``புலிகள் பலவீனப்பட்டுவிட்டார்கள் என்ற தோற்றத்தை உருவாக்குவதற்காகப் பொய்யான செய்திகளை சிங்கள அரசு தொடர்ந்து பரப்பி வருகிறது. இதில் உண்மை ஏதும் இல்லை. மேலும், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வரலாற்றில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் தங்கள் இன்னுயிர்களைத் தேசத்தின் சுதந்திரத்துக்காக அர்ப்பணித்துள்ளார்கள். கடந்த முப்பது வருடங்களில் …

    • 0 replies
    • 1.4k views
  6. இலங்கையின் புகழ் பூத்த பேராசிரியர் கைலாசபதியின் புதல்வி சுமங்களா கைலாசபதி அமெரிக்காவில் மிக்சிகன் மாநிலத்தில் உள்ள ஆன்ஆபர் நகர சபை உறுப்பினராக தெரிவாகி உள்ளார். ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட இவர் கடந்த 07 ஆம் திகதி சக வேட்பாளரை வாக்கெடுப்பில் தோற்கடித்தார். சுமிக்கு வயது 45. இவர் கடந்த 19 வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வருகின்றார். ஆன்ஆபரில் கடந்த 19 வருடங்களாக வாழ்கின்றார். இவர் பொருளியலிலிலும், அரசியல் விஞ்ஞானத்திலும் தனித் தனியாக இளமானி பட்டங்கள் பெற்றவர். அரசியல் விஞ்ஞானத்தில் பட்டப் பின் படிப்புக்கள் படித்தவர். கிழக்கு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக 10 வருடங்கள் கடமை ஆற்றி உள்ளார். அங்கீகாரம் பெற்ற கணக்காளராக நிறுவனம் …

  7. பூஜித் ஜயசுந்தரவுக்கும் பிணை கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தனக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்து முன்வைக்கப்பட்ட சீராய்வு மனு மீதான விசாரணையின் போது, அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, கொழும்பு மேல் நீதிமன்றத்தால், இன்று முற்பகல் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இருவரும் விளக்கமற…

    • 0 replies
    • 225 views
  8. மனைவியுடன் ஐஸ் விற்பனை; பருத்தித்துறையில் சிக்கிய நபர் இளைஞர்கள் குறிவைப்பு பருத்தித்துறையைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு மனைவி மற்றும் அறிமுகமானவர்களின் உதவியுடன் ஐஸ் மற்றும் கேரளக்கஞ்சா ஆகிய போதைப் பொருள்களைப் பெருமளவில் விநியோகித்து வந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவர் பொலிஸாரால் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறைப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் ஊழல் சோதனைப் பிரிவால் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். பருத்தித்துறை, கட்கோவளத்தில் வசிக்கும் 29 வயது சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து சுமார் 12 கிராம் 40 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன. குறித்த இளைஞர் சமூகத்தை …

  9. [size=3][size=4]முழங்காவில் குழாய் கிணற்றில் இருந்து கடற்படை முகாம் நீச்சல் தடாகம் உள்ளிட்ட படையினரின் தேவைக்கு நாளாந்தம் 200000 லீற்றர் நீர் பறிப்பு[/size][/size] [size=3][size=4]தற்போது கிளிநொச்சியில் நிலவி வருகின்ற கடும் வரட்சி காரணமாக மக்கள் குடி நீர் உள்ளிட்ட நீர்த்தேவைகளுக்காக பெரும் துன்பங்களை சந்தித்து வருகின்றனர் குளங்களின் நீர் மட்டமும் என்றுமில்லாத வகையில் குறைவடைந்துள்ள நிலையில் நிலத்தடி நீரும் குறைவடைந்துள்ளமையால் குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் நீரினை பெற்றுக்கொள்ளும் பொருட்டு நீண்ட தூரங்களுக்கு அலைந்து திரியும் அவலம் நாளாந்தம் இடம்பெற்றுவருகிறது.[/size] [size=4]குறிப்பாக கிளிநொச்சி பூநகரி பிரதேசசெயலக பிரிவில் பாரிய நீர் தட்டுப்பாடு காணப்படுக…

    • 3 replies
    • 506 views
  10. கொழும்பு கொட்டாஞ்சேனை ஸ்ரீ சிவானந்தா வீதியிலுள்ள கருமாரியம்மன் ஆலயத்தின் முன்பாக நின்று வழிபட்டுக் கொண்டிருந்த பெண்ணின் தாலிக்கொடி ஆட்டோவில் வந்த மூவரால் அறுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு இடம்பெற்றுள்ளது. பலர் அவ்விடத்தில் நின்று வழிபட்டபோது திடீரென ஆட்டோவில் வந்த இவர்கள் அப்பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை அறுத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறித் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து கொட்டாஞ்சேனை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீசிவானந்தா வீதியில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல, வெள்ளிக்கிழமை பகல் 1.30அளவில் கொட்டாஞ்சேனை சுமித்திரா மாவத்தையில் வீதியால் நடந்து சென்று கொண்டி…

    • 3 replies
    • 1.4k views
  11. தேசியத் தலைவருக்கு சுடரேற்றிவிட்டு என்ன செய்யப்போகிறீர்கள்..? July 10, 2025 தேசியத் தலைவருக்கு சுடரேற்றிவிட்டு என்ன செய்யப்போகிறீர்கள்..? இந்தப் பதற்றம் பலரை பீடித்துள்ளது என்பதை நாம் அறிகிறோம். ஏன் இந்தப் பதற்றம். தேசியத் தலைவர் தனது வீரச்சாவின் மூலம் தமிழீழக் கொள்கையினை ஒவ்வொரு மானமுள்ள தமிழர் நெஞ்சங்களிலும் ஆணியடித்தாற் போல் பதித்துவிட்டார். தமது அரசியற் கொள்கைகளை அடிக்கடி மாற்றிக்கொள்வோர் தேசியத்தலைவரின் வீரமாண்பை மறைத்துவிடவே முயற்சிப்பார்கள். தேசியத் தலைவருக்கான வீரவணக்க நிகழ்வு நடைபெற்றுவிட்டால் தலைவர் இறுதிவரை அடிபணியாது கட்டிக்காத்த தமிழீழக் கொள்கை ஈழத்தமிழினத்தின் அசைக்கமுடியாத அரசியற் கொள்கையாக நிலைபெற்றுவிடும். தலைவரது உயிர்த்தியாகத்தை முன்னிறுத்தியே அரசியல் …

  12. சிறுமி வல்லுறவு; படைவீரர் கைது 13 வயது சிறுமி ஒருவரை பல தடவைகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவத்தில் தொடர்புடைய இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது :– பதின் மூன்று வயதுடைய மாணவி ஒருவரை பல சந்தர்ப்பங்களில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரைக் கைது செய்த கல்கிரியாகம பொலிஸார் அவரை கெக்கிராவ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை ௭டுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் இருந்து கிடைத்த முறைப்பாட்டை அடு த்தே குறித்த சந்தேக நபர் …

  13. (இராஜதுரை ஹஷான்) ஜெனிவா பிரேரணையில் இருந்து அரசாங்கம் விலகும் தீர்மானத்தை தொடர்ந்து, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தும் நடவடிக்கைகளை புலம் பெயர் அமைப்புக்கள் மிக தீவிரமாக முன்னெடுத்து வருவதாக இராணுவத்தினரது உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். இலங்கையின் உள்ளக விவகாரத்தினை நல்லாட்சி அரசாங்கம் தங்களின் அரசியல் தேவைகளுக்காக சர்வதேசத்தின் மட்டத்தில் கொண்டு சென்றது. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கிய பங்களிப்பினை வழங்கியது. கூட்டமைப்பினர் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுகளுக்கு தீர்வு காண்பதற்கு கடந்த அரசாங்கத்தில் எதிர்க்கட்சியாக இருந்து செயற்படவில்லை. மாறாக புலம் ப…

  14. இலங்கையில் பாடசாலை மாணவிகளிடையே அதிகரிக்கும் கர்ப்பம் சமீப காலமாக பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். இதற்கு தீர்வாக, கல்வி அமைச்சுடன் இணைந்து, இளம் பருவப் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு குறித்த சிறந்த புரிதலை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். 18 வயதுக்குட்பட்ட மாணவிகளின் கர்ப்பங்கள், அவர்களைப் பாதிக்கப்பட்டவர்களாக மாற்றுவதுடன், பல்வேறு சிக்கல்களை உருவாக்குகின்றன. இதனால், பெற்றோரின் கவனிப்பு இல்லாமல், எதிர்காலத்தில் சமூகத்தில் கைவிடப்பட்ட அல்லது அனாதையாக்கப்பட்ட குழந்தைகளின் பிறப்பு …

  15. சார்க் வலய நாடுகளுக்கான பொதுநாணயம் குறித்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. பிராந்திய ஒத்துழைப்பை அடிப்படையாக கொண்டு, பொருளாதார மேம்பாட்டிற்காக இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பயன்படுத்தப்படும் யூரோ நாணயத்தை போலவே பொதுவான நாணயம் சார்க் நாடுகளுக்கும் பொதுவான நாணயத்தை உருவாக்குவது என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த செயற்பாட்டின் போது பிராந்திய வல்லரசான இந்தியாவின் ரூபா நாணய பொறுமதிக்கேற்ப நாணயம் ஒன்றை வெளியிடும் இணக்கம் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கடந்த சார்க் மாநாட்டின் போது, பிராந்திய நாடுகளுக்கான பொதுநாணயம் குறித்த யோசனையை முனவைத்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. http://isoorya.blogspot.com/ …

  16. இலங்கையில் 51 பேருக்கு மரண தண்டனை! சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையில் சுட்டிக்காட்டு! கடந்தாண்டில் மாத்திரம் இலங்கையில் குறைந்தது 51 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. மரண தண்டனை தொடர்பான அதன் வருடாந்த அறிக்கையிலேயே இந்த விடயத்தை, அச்சபை தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையின் போது, வேண்டுமென்றே கொலை செய்தமை தவிர்ந்த குற்றங்களுக்காக - உதாரணமாக போதைப்பொருள் குற்றங்கள் - மரண தண்டனை விதிக்கும் நாடுகளுக்கு உதாரணமாக வழங்கப்பட்டுள்ள 12 நாடுகளில், இலங்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தது 3 மரண தண்டனைகள், இவ்வாறு போதைப்பொருள் குற்றங்களுக்காக வழங்கப்பட்டுள்ளதாக அச்சபை தெரிவிக்கின்றது. சிறைச்சாலைகள் ஆணையா…

    • 0 replies
    • 311 views
  17. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் சாரதி அனுமதி பத்திரத்தை எவ்வாறு பெறலாம்? இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இப்போது தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சர்வதேச சாரதி அனுமதி பத்திரம் மற்றும் அவர்களின் நாட்டின் சாரதி அனுமதி பத்திரம் உள்ள சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் எந்தவொரு வாகனத்தையும் செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் குறிப்பிட்டார். இது தொடர்பில் ஊடகங்களிடம் உரையாற்றிய அவர், தங்கள் நாட்டின் சாரதி அனுமதிப் பத்திரம் மாத்திரம் நாட்டுக்கு வருபவர்களும் இலங்கையில் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற அனுமதிக்கப்படுவார்கள். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கொழும…

  18. * வடமத்திய மாகாணசபை முதன்மை வேட்பாளர் ஜானக பெரேரா பல இராணுவ வெற்றிகளை ஈட்டிக் கொடுத்து தாய்நாட்டைப் பாதுகாக்க பாடுபட்ட எனக்கு உரிய பாதுகாப்பை வழங்க முன்வராத தற்போதைய அரசாங்கம் பல்லாயிரக்கணக்கான பொது மக்களைச் சுட்டும் வெட்டியும் கொலை செய்த முப்படையினருக்கு சேதங்களை விளைவித்த கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் கவச வாகனத்துடனான விசேட பாதுகாப்பை வழங்கியுள்ளது என வட மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி முதன்மை வேட்பாளர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா தெரிவித்தார். அநுராதபுரம் அஷோக் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார். http://isoory…

    • 8 replies
    • 2.2k views
  19. [size=4]புத்தரின் எலும்புகள் அடங்கிய கபிலவஸ்து புனித சின்னத்தை அலரி மாளிகையில் வைத்து வழிபடுவதற்கு அனுமதிக்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விடுத்த வேண்டுகோளை, இந்தியா நிராகரித்துள்ளது.[/size] [size=4]அண்மைய தமிழ்நாட்டு நிலவரங்களினால் பாதிக்கப்பட்டுள்ள இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு இது மற்றொரு அடியாக விழுந்துள்ளது.[/size] [size=4]அலரி மாளிகையில், கபிலவஸ்து புனித சின்னத்தை வழிபாட்டுக்காக வைப்பதற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மூலம் இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.[/size] [size=4]கபிலவஸ்து புனித சின்னத்துக்கான வரவேற்பை அடுத்து இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா அளித்த இராப்போசன விருந்தின…

  20. மன்னார், முல்லை. மாவட்டங்களிலிருந்து கிளிநொச்சிக்கு 10,000 குடும்பங்கள் இடம்பெயர்வு அரச அதிபர் வேதநாயகன் தகவல் அண்மைக் காலமாக வன்னிப் பிரதேசத் தில் இராணுவத்தினர் தொடர்ச்சியாக மேற் கொண்டு வரும் இராணுவ நடவடிக்கை கள் காரணமாக 10 ஆயிரம் குடும்பங்கள் புதிதாக இடம்பெயர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ளன. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் இத் தகவலைத் தெரி வித்தார். மன்னார் மாவட்டத்தின் மடு மற்றும் மாந்தை மேற்குப் பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்து 7,000 குடும்பங்களும் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தைப் பிரதேசங்களில் இருந்து 1,500 குடும்பங்களும் கிளிநொச்சி மாவட்டத் தின் மேற்கு கரையோரப் பகுதியில் இருந்து மேலும் 1,550 குடும்பங்களுமாக 10 ஆயிர…

  21. நல்லூர் தேர்திருவிழாவின் போது நகைகளை திருடிய இளம் யுவதி கைது! adminAugust 22, 2025 நல்லூர் தேர்திருவிழாவின் போது நகைகளை திருடிய இளம் யுவதி ஒருவரை ஆலய சூழலில் கடமையில் சாரணர்கள் பிடித்து காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். நல்லூர் ஆலய தேர் திருவிழா நேற்றைய தினம் (21.08.25) வியாழக்கிழமை இடம்பெற்றது. அதன் போது இளம் யுவதி ஒருவர் , பக்தர்களுக்கு இடையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய வேளை, அதனை அப்பகுதியில் இருந்த சாரணர்கள் அவதானித்து யுவதியை தொடர்ந்து அவதானித்துள்ளனர். அதன் போது குறித்த யுவதி ஒரு பெண்ணிடம் சங்கிலி அறுக்க முற்பட்ட வேளை சாரணர்கள் மடக்கி பிடித்துள்ளனர். பின்னர் அப்பகுதியில் இருந்த காவற்துறையினரிடம் யுவதி ஒப்படைக்கப்பட்ட நிலையில், காவற்துறையினர் யுவதியை…

  22. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் வழங்கப்படும் வாக்குறுதிகளை நம்பி அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ள முடியாதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பயங்கரவாதப் பிடியில் சிக்கித் தவித்த கிழக்கு வாழ் மக்களை அரசாங்கம் காப்பாற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வடக்கில் உள்ள அப்பாவிச் சிவிலியன்களை மீட்டெடுப்பதற்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மனிதாபிமான யுத்தமொன்றை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை நோக்கி அரசாங்கம் நகர்வதனை எம்மால் தெளிவாக உணரக்கூடியதாக இருக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார். தினமின நாளேட்டுக்கு அளித்த விசேட செவ்வியின் போது அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். பிள…

  23. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்பாளரும் அக்கட்சியின் சார்பில் கிழக்கு மாகாண சபை வேட்பாளராகக் களமிறங்கி தமிழ் மக்களால் தோற்கடிக்கப்பட்டவருமான ருத்திரமலர் ஞானபாஸ்கரனுக்கு கிழக்கு மாகாண சபையில் போனஸ் ஆசனம் ஒன்றினை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி மஹிந்தையர் நிராகரித்துள்ளார். தனது சகோதரியான ருத்திரமலர் ஞானபாஸ்கரனுக்கு கிழக்கு மாகாண சபையில் போனஸ் ஆசனம் ஒன்றினை வழங்குவதன் மூலம் இந்த மாகாணத்தின் தமிழர் பிரதேசங்களுக்கு அதிகளவில் சேவையாற்ற முடியும் என பிரதி மீள்குடியேற்ற அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் விடுத்திருந்த வேண்டுகோளே இவ்வாறு நிராகரிக்கபட்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. http://thaaitamil.com/?p=32680

  24. உத்தமனுக்கு இருட்டிலை என்ன வேலை? யாழ்ப்பாணத் தம்பி பட்ட காலிலை படும் கெட்ட குடியே கெடும் எண்டுவினம். அட... கொளுப்புப் புடிச்ச பெடியன் வந்துட்டான் எண்டு நினைப்பியள். நானும் கொஞ்சநாள் வாய மூடிக்கொண்டுதான் இருந்தன். என்ன நடக்குதெண்டு பாப்பமெண்டு. ஆனால் உள்ளது போகாது இல்லது வராது எண்டுற மாதிரி நிறையக் கதையள் அரசல் புரசலாய் கேட்டுது. அண்டைக்கு எங்கடை தாயகப் பத்திரிகை ஒண்டை விரிச்சுப் பாத்துப்போட்டு தாத்தா கெக்குப் புக்கு கெக்குப் புக்கு எண்டு சிரிச்சார். எட, என்னடா கோதாரி உது? எண்டு, கிழவனிட்டை பேப்பரை வேண்டிப் பாத்தன். உவர் எங்கடை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தப…

  25. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன்தான் பண்பில்லாது, ஜனநாயகமில்லாது செயற்படுகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பலர் பிரிவதற்கு இவரே காரணமாக இருக்கின்றார் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொழும்புக்கிளையின் உபதலைவி மிதுலா சிறிபத்மநாதன்தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக்கட்சியில் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விண்ணப்பித்துள்ள நிலையில் அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்படாது கட்சியில் இல்லாத ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவது தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் நாம் வினவியபோது அவர் தெரிவிக்கையில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் உறுப்பினரான உங்களுக்குப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காகக் கட்ச…

    • 5 replies
    • 734 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.