ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
சிங்கள பேரினவாதிகளின் மனப்பான்மையும் சர்வதேச சமூகமும் -புரட்சி (தாயகம்)- 'தென்னிலங்கையில் இருக்கின்ற சமாதானப் புலிகள், 'ஊடகப் புலிகள்", 'இடதுசாரிப் புலிகள்" - 'இவர்களை அடையாளங்காணுங்கள்", 'அவர்களை அழியுங்கள்", 'சிங்கள தேசத்தைக் காப்பாற்றுங்கள்" - அண்மைக்காலங்களிலே தென்னிலங்கையில் ஒட்டப்பட்ட பிரசுரங்களில் காணப்பட்ட வாசகங்கள். மகிந்த ராஜபாக்ச அரசானது பதவிக்கு வந்த காலம் முதல் தனது தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகளையும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. தென்னிலங்கை தற்போது முழக்கும் கோசமான 'சிங்கள தேசத்தை காப்பாற்றுங்கள்" என்ற இந்த வாசகமானது கம்போடியாவின் சர்வாதிகாரியாக விளங்கிய பொல்பொட் இனால் பயன்படுத்தப்பட்ட 'தேசத்தை காப்பாற்றுங்கள்…
-
- 0 replies
- 715 views
-
-
யாழ் மாவட்டத்தில் 40 சதவீதத்திற்கும் மேலதிகமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளது : 23 ஜூலை 2011 குளோபல் தமிழ்ச்செய்தியாளர் யாழ் மாவட்டத்திற்கான தேர்தல் வாக்களிப்புகள் நிறைவடைந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 40 சதவீதத்திற்கும் மேலதிகமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக யாழ் செயலகத்தினால் முதல் கட்டமாக வெளியிடப்பட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருமளவில் அசம்;பாவிதங்கள்கள் இடம்பெறாவிட்டாலும் சிறு சிறு அசம்பாவிதங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காரைநகர்ப்பகுதியில் உள்ள ஒரு வாக்களிப்பு நிலையத்தினுள் வாக்களிக்க முற்பட்ட ஒரு குழுவினரை காவற்துறையினர் நுழைய விடாதபடி தடுத்துள்ளனர். காரைநகர் சுந்தரமூர்த்தி வித்தி…
-
- 0 replies
- 621 views
-
-
இலங்கை விடயத்தில் மேற்குலகம் அநாவசியமாக தலையிடுகிறது! – நாமல். இலங்கை நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்பம் மேற்கத்தேய நாடுகளுக்கு அதிக வலியினை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். அவர்களது நாட்டு நாடாளுமன்றில் இடம்பெறும் இதுபோன்ற வன்முறைகள் குறித்து வாய்திறக்காத தூதுவர்கள், இலங்கை விடயம் என்றவுடன் முந்தியடித்து கருத்து வெளியிடுவதாகவும் குற்றம் சுமத்தினார். நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்ற அவர், அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறினர். அவர் மேலும் தெரிவித்த போது- ”இந்த பிரச்சினை உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் இடம்பெறுகின்றன. ஆனால் இலங்கையில் ஏற்படும்போது மாத்திரம் சில மேற்கத்தேய நாடுகளுக்கு …
-
- 6 replies
- 1k views
-
-
28 SEP, 2023 | 03:52 PM கடந்த 2022ஆம் ஆண்டில் மாத்திரம் 400 சிறுவர்கள் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் பிரதிநிதி பேராசிரியர் சமத் தர்மரத்ன தெரிவித்தார். வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபையினால் “வேகமாக அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள்" என்ற தலைப்பில் இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் நேற்று புதன்கிழமை (27) இடம்பெற்ற ஊடக விழிப்புணர்வு சபை கூட்டத்தில் கலந்துகொண்ட உரையாற்றுகையிலேயே இலங்கை மருத்துவ சங்கத்தின் பிரதிநிதி பேராசிரியர் சமத் தர்மரத்ன இவ்வாறு தெரிவித்தார். வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இலங்கையில் 30 வருட கால யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும் எனவும…
-
- 0 replies
- 214 views
- 1 follower
-
-
சனல் - 4 தொலைக்காட்சியில் நேற்று ஒளிபரப்பான காணொளியும் பொய் எனக் கூறுகிறது இலங்கை இராணுவத் தரப்பு [Thursday, 2011-07-28 10:43:52] பிரித்தானிய தொலைக்காட்சியான சனல் - 4 இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்ற ஆதாரமெனக் கூறி நேற்றைய தினம் ஒளிபரப்பிய 13 நிமிடக் காணொளித் தொகுப்பினையும் பொய்யானது எனக் கூறியுள்ள இலங்கை இராணுவத் தரப்பு, அதனை முற்றாக நிராகரித்துள்ளது. நேற்றைய தினம் ஒளிபரப்பான குறித்த காணொளியில் இலங்கையின் யுத்த களத்தில் இருந்த வீரர்கள் எனக் கூறி இருவர் கருத்துகள் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=47307&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 683 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமார துங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் எதிர்வரும் 23ஆம் திகதி வட க்கிற்கு விஜயம் செய்யவுள்ளனர். 25 வருடங்களின் பின்னர் பொது மக் கள் பார்வையிட அனுமதிக்கப்பட்ட வளலாய் பகுதியை உத்தியோகபூர்வமாக அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக இவர்கள் வருகைதரவுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அரசாங்கம் அமையப்பெற்றதன் பின்னர் பொதுமக்களுக்குச் சொந்தமான நிலங்கள் மீண்டும் மக்களிடத்தில் கையளிக்கப்படும் என கூறப்பட்டது. அத்துடன் வடக்கில் இராணுவத்தின் உயர்பாதுகாப்பபு வலயங்கள் அமைந்துள்ள நிலப்பரப்பில் 1100ஏக்கர் ப…
-
- 1 reply
- 546 views
-
-
யாழ்.பல்கலைக்கழக விவசாய பீடத்தை கிளி.அறிவியல் நகருக்கு மாற்ற அங்கீகாரம் யாழ்.பல்கலைக்கழக விவசாய பீடத்தை கிளிநொச்சி அறிவியல் நகருக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். அதேவேளை இதேஇடத்தில் பொறியியல் பீடத்தையும் தற்காலிகமாக இயங்கவைப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸ்ஸநாயக்க, பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அமைச்சரவை அங்கீகாரத்தைக் கோரி பத்திரம் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. விவசாயபீடத்தை இயக்குவதற்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ள அறிவியல்நகர் பகுதி 168 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.va…
-
- 0 replies
- 396 views
-
-
விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்: அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை ஈழத்தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தியதான கொள்கை அடிப்படையில், முன்னாள் நீதியரசரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான க.வி.விக்னேஸ்வரனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம் என்று அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆயுத மௌனிப்பின் பின்னரான தாயக அரசியலானது ஈழத் தமிழ் மக்களின் நலனுக்கு நேர் விரோதமான பாதையில் பயணப்பட்டு ஈற்றில் சிங்கள பௌத்த பேரினவாத நச்சு வட்டத்திற்குள் …
-
- 1 reply
- 556 views
-
-
19 OCT, 2023 | 04:59 PM இலங்கை விமானப்படை விமானிகள் மற்றும் இலங்கை கடற்படைக் கப்பல்கள் பங்கேற்கும், ஹெலிகொப்டர் தாங்கி கப்பல்களின் நடவடிக்கைகள் குறித்த பயிற்சிகளுக்காக இந்தியக் கடற்படையின் அதி நவீன இலகு ரக ஹெலிகொப்டர் 2023 ஒக்டோபர் 19 ஆம் திகதி கட்டுநாயக்காவிலுள்ள இலங்கை விமானப்படைத் தளத்தை வந்தடைந்துள்ளது. இப்பயிற்சிகளின் மூலமாக இலங்கை விமானப்படை விமானிகள் அதி நவீன இலகு ரக ஹெலிகொப்டர்களை கையாளும் வாய்ப்புகளுடன் துணை விமானி அனுபவத்தினையும் பெற்றுக்கொள்ளமுடியும். மேலும், இலங்கை கடற்படைக் கப்பல்களில் தரையிறங்கும் பயிற்சிகளை முன்னெடுப்பதற்கும் இந்த பயிற்சி அணியினர் திட்டமிட்டுள்ளனர். அயலுறவுக்கு முதலிடம் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த…
-
- 0 replies
- 317 views
- 1 follower
-
-
நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை நடாத்தக் கோரி மகிந்தவின் ஆதரவாளர்களால் மன்னாரில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ‘சிறிலங்கா பொது ஜன பெரமுன’ கட்சியின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் பொது வைத்தியசாலை பிரதான வீதியில் ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம் மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக மன்னார் பஸார் பகுதிக்குச் சென்று பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ”மீண்டும் பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமிக்க வேண்டும். சுயாதினமான பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும் ” என்ற கோரிக்கையை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். …
-
- 0 replies
- 500 views
-
-
21.08.11 ஹாட் டாபிக் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொல்கிறதா? இந்தியா தலையிடாது. தமிழர்கள் மலேஷியாவில் அடிவாங்குகிறார்களா? பரவாயில்லை, இந்தியா அதிலும் தலையிடாது. தமிழக ஆட்சியாளர்களை பிற நாட்டினர் விமர்சிக்கிறார்களா? அதைப்பற்றியும் இந்தியாவுக்குக் கவலையில்லை. இப்போது தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு விமர்சிப்பதையும் இந்தியா கண்டுகொள்ளாமல் இருக்கிறது. உண்மையிலேயே, தமிழ்நாடு இந்தியாவில் ஒரு மாநிலம்தானா என்ற சந்தேகத்தை தமிழர்கள் மீண்டும் ஒருமுறை தங்களுக்குள் கேட்டுக் கொள்கிறார்கள். இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை தொடர…
-
- 1 reply
- 1.2k views
-
-
செலுத்த முடியாத தொகையை கடன் வாங்கிய மகிந்த அரசு: குற்றம் சுமத்தும் சந்திரிக்கா [ வியாழக்கிழமை, 09 ஏப்ரல் 2015, 01:17.52 PM GMT ] முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் வெளிநாடுகளிலும் உள்நாட்டு வங்கிகளிலும் செலுத்த முடியாதபடி பெருந்தொகை நிதியை கடனாக பெற்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மேல் மட்டத்தில் நடந்த ஊழல், மோசடிகளை மாற்றி, ஊழல் ஆட்சிக்கு பதிலாக நல்லாட்சியை ஏற்படுத்தி, நாட்டின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் அரசாங்கம் பாரிய வேலைத்திட்டங்களை செய்துள்ளது. செய்ததை விட செய்ய வேண்டிய பணிகள் 100 மடங்காக உள…
-
- 3 replies
- 520 views
-
-
December 14, 2018 தீவுகளுக்கான பயணிகள் படகுசேவைகளில் ஈடுபடும் படகுகளின் தரம் மற்றும் கடல்போக்குவரத்துக்கான தகுதி சான்றிதழ்களை வழங்குவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆளுநர் பணித்துள்ளார். எழுவைதீவு , அனலை தீவு உள்ளிட்ட தீவுகளுக்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபட்டுவந்த எழுதாரகை படகின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை சம்பந்தமாக ஆராயும் விசேட கூட்டம் ஆளுநர் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இங்கு கருத்து தெரிவித்த உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக்டிறஞ்சன் குறித்த எழுதாரகை படகினை பராமரிப்பு செய்வதற்கு போதுமான…
-
- 0 replies
- 813 views
-
-
08 NOV, 2023 | 09:57 AM நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் 48 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய நுவரெலியா தபால் நிலைய கட்டடத்தை புதிய முதலீடுகளுக்காக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பொறுப்பாக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டது. நுவரெலியா தபால் நிலையத்துக்கு பொருத்தமான பிறிதொரு கட்டடத்தை வழங்க நகர அபிவிருத்தி அதிகார சபை உறுதியளித்ததாக குறிப்பிட்டுள்ள தபால்மா அதிபர் எம்.ஆர்.ஜி.சத்குமார சகல சேவையாளர்களின் விடுமுறைகளும் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு (8, 9, 10 ஆகிய திகதிகள்) இரத்து செய்யப்பட்டுள்ளன. ஆகவே, பணிப்புறக்கணிப்பில் ஈடுபடாமல் சகல சேவையாளர்களும் ச…
-
- 0 replies
- 307 views
- 1 follower
-
-
கிரிக்கெட் நிறுவனம் மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் குறித்து எதிர்க்கட்சிகள் இரண்டு வகையாகப் பேசுவதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தமக்கு பாதகமான தீர்ப்புகள் வரும்போது அதை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், தனக்கு சாதகமாக தீர்ப்பு வரும்போது அதை முன்னிலைப்படுத்துவதாக அமைச்சர் தெரிவித்தார். நீதிமன்றத்தின் தீர்ப்புகளை விமர்சிக்க எவருக்கும் உரிமை இல்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றம் இன்று (17) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்த…
-
- 1 reply
- 203 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள தீர்மானத்தை இரத்துச் செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்திற்குள் போராட்டம் நடத்தி வரும் எம்.பிக்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல ஆதரவாளர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். வீதித் தடுப்புக்களைப் பயன்படுத்தி இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அங்கு தொடர்ந்து தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். ஆர்ப்பாட்டக் காரர்களைக் கலைப்பதற்கான நீதிமன்ற உத்தரவை தாம் பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸார் ஆர்ப்பாட்டக் காரர்களுக்குத் தெரிவித்துள்ள…
-
- 3 replies
- 407 views
-
-
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்… December 27, 2018 வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட கிணறுகள் மற்றும் வீடுகளைத் தொற்றுநீக்கம் செய்து சுத்திகரிப்பது எவ்வாறு என்பது குறித்துச் மத்திய சுகாதார அமைச்சின் அனர்த்த முன்னாயத்த மற்றும் எதிர்வினையாற்றும் பிரிவு பொதுமக்களுக்கான விளக்கக் குறிப்புகளை வெளியிட்டுள்ளது. இதனை பின்பற்றிக்கொள்றுமாறு அறிவித்துள்ளனர். வெள்ளப்பெருக்கின் பின்னர் வீடுகளைச் சுத்தப்படுத்தும் படிமுறைகள். 1. உங்கள் வீடுகளிற்குள் நீங்கள் நுழையும் முன்னர் அவ்வாறு நுழைவது உங்களுக்கு எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தாது என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பாதுகாப்பற்…
-
- 1 reply
- 346 views
-
-
இந்தியா என்பது இந்திய மாநிலங்களின் கூட்டாட்சிதான். இந்தியாவிற்குள் இருக்கிற தமிழ்த் தேசிய இனத்தின் ஒருமித்த குரலைத்தான் தமிழ்நாடு சட்டமன்றம் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தண்டனைக் குறைப்பு பற்றிய தீர்மானத்தில் வெளிப்படுத்தியது. ஆனால் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்சித் என்பவர், “அது எங்களைக் கட்டுப்படுத்தாது” என்று சொல்வது மக்களின் குரல் எங்களைக் கட்டுப்படுத்தாது நாங்கள் தான்தோன்றித்தனமாகத்தான் செய்வோம் என்றே பொருள்படுகிறது. தமிழக மக்கள் என்றைக்கும் நீதிக்குப் புறம்பாக செயற்படுகிறவர்கள் அல்லர். நாங்கள் தப்பானவர்களுக்காக கையேந்தி யாரிடமும் பிச்சை கேட்கவில்லை. எந்த வகையிலும் வன்முறையை நாடுகிறவர்கள் தமிழர்கள் அல்லர். 3 லட்சம் ஈழத் தமிழர்களை இலங்கை இந்திய…
-
- 1 reply
- 675 views
-
-
புதிய மொந்தையில் பழைய கள்............. Tuesday, 03 July 2007 போர்நிறுத்த உடன்படிக்கை தொடர்பான கண்காணிப்புக்களை புதியமுறையில் நடைமுறைப்படுத்துவது பற்றி போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவுக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில் கண்காணிப்புப் பணிகளைத் தொடங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைப் போர்நிறுத்தக்கண்காணிப்புக்
-
- 0 replies
- 1.1k views
-
-
Published on September 8, 2011-2:51 am No Comments இராணுவத்தால் உருவாக்கப்பட்ட கிறீஸ்பூதம் என்ற மர்ம மனிதப் பீதிக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், அதனைத் தடுக்கத் தவறினால் மீண்டும் ஒரு மக்கள் போராட்டம் வெடிக்கும். தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்த நினைத்தால் தமிழ் மக்கள் ஒருபோதும் அடங்கிப் போகமாட்டார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார். அவசரகாலச் சட்டத்தை நீக்கிய ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இப்படிக் கூறினார்.சுரேஷ் தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது, அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட போதும் வடக்கு,கிழ…
-
- 1 reply
- 808 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனுக்கும் மாவட்ட நகர அபிவிருத்திக் குழுவுக்கும் இடையிலான சந்திப்பு, செவ்வாய்க்கிழமை(28) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. முல்லைத்தீவு பேரூந்து நிலையம் அமைத்தல், நகர போக்குவரத்தை விரிவுபடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. நகர அபிவிருத்திக் குழுவினரால் மாவட்டச் செயலரிடம் மனுவொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, முல்லைத்தீவு உருவான காலத்திலிருந்து இன்றுவரை அபிவிருத்திப் பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருகின்றன. மக்களுக்கு தேவையான நிலையில் அபிவிருத்தித் திட்டங்கள் அமையவில்லை. மக்களுக்குத் …
-
- 0 replies
- 327 views
-
-
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மின்சாரக் கட்டணங்களில் சாத்தியமான குறைப்புக்கான அறிவிப்பை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அதிகரித்த நீர் மின் உற்பத்தி மற்றும் குறைந்த விலையில் நிலக்கரி கொள்வனவு என்பன மின் கட்டண குறைப்பிற்கான இரு முக்கிய காரணிகளாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த குறிப்பிட்டார்: 2023 இல் நிலக்கரி கொள்வனவுகள் முந்தைய ஆண்டைக் காட்டிலும் குறைவாக இருந்ததாகவும், இது சாத்தியமான செலவினச் சேமிப்பிற்கு பங்களித்ததாகவும் அனுருத்த குறிப்பிட்டார். எவ்வாறாயினும், சரியான விலை மாற்றங்களை தீர்மானிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். மின் கட்டண திருத்தங்களுக்கான முன்மொழ…
-
- 0 replies
- 406 views
- 1 follower
-
-
பாலமோட்டை இராணுவ ஊருவல் அணி மீது தாக்குதல்- ஒருவர் பலி [ஞாயிற்றுக்கிழமை, 15 யூலை 2007, 19:18 ஈழம்] [தாயக செய்தியாளர்] வவுனியா பாலமோட்டையில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஊடுருவல் அணிமீது தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டு அவரது சடலமும் கைப்பற்றப்பட்டுள்ளது. பாலமோட்டைப்பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் சிறிலங்கா இராணுவத்தினர் ஊடுருவல் நடவடிக்கையை மேற்கொண்டபோது அதனை விடுதலைப்புலிகள் முறியடித்தனர். இதில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஓருவர் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட இராணுவத்தினின் சடலம் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் ரி56வகைத்துப்பாக்கி ஒன்றும் தொலைத்தொடர்புக்கருவி ஒன்றும் விடுதலைப்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.yarl.com/files/110913_pandian_india.mp3
-
- 0 replies
- 488 views
-
-
அமெரிக்காவிடம் கூட்டமைப்பு தஞ்சம் புகுவது தவறாம்! அரசியல் நாகரிகம் குறித்து பேசுகிறார் வாசுதேவ! [Tuesday 2015-05-05 20:00] தமிழர் பிரச்சினைக்கு இலங்கைக்குள்ளே தீர்வைக் காண வேண்டுமே தவிர அமெரிக்காவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தஞ்சம் புகுவது அரசியல் நாகரிகம் அல்ல முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அமெரிக்காவுக்கும் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் எதிரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியைக் கவிழ்த்து அமெரிக்காவின் கைப்பொம்மையான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஐ.தே. கட்சி ஆட்சி நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்படுத்தப்பட்ட அமெரிக்க ஆட்சி இலங்கையில் எவ்வாறு செயற்பாடுகளை முன்னெடுக்கின்றதென்பதை ஆராயவும் அதற்கான உதவிகள…
-
- 6 replies
- 589 views
-