ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
தமக்கு உறுதியளித்தப்படி இலங்கையின் உயர்கல்வி அமைச்சு சுற்று நிருபங்கள் சிலவற்றை இன்னும் விலக்கிக் கொள்ளவில்லை என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் இராணுவப் பயிற்சிகள் உட்பட்ட சில விடயங்கள் தொடர்பில் பல்கலைக்கழக மூதவைகளுடன் பேசவேண்டும் என்று விரிவுரையாளர்களும் அரசாங்கமும் இணங்கியிருந்தன. இதன்படி தற்போதுள்ள கட்டாய தலைமைத்துவ பயிற்சி தொடர்பான சுற்றுநிருபத்தை விலக்கிக்கொள்வதென்று இலங்கையின் அமைச்சர் பெசில் ராஜபக்ச தலைமையிலான குழுவினர் உடன்பட்டிருந்தனர். எனினும் இதுவரை அந்த உடன்பாடு செயற்படுத்தப்படவில்லை என்று பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்க பேச்சாளர் மஹிம் மெண்டிஸ் குற்றம் சுமத்தியுள்ளார். எனவே தாம் அரசாங்கத…
-
- 1 reply
- 351 views
-
-
இறுதி யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பலரும் பல்வேறு நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றிருப்பதாக ஊடகமொன்று தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து வெளிவரும் ஊடகமொன்றில் வெளிவந்துள்ள இது தொடர்பான செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விடுதலைப் புலிகளின் முக்கிய படையணிகளில் பணியாற்றிய 54 முக்கியஸ்தர்கள் நான்கு நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் முக்கியஸ்தரான யஸ்மின் சூக்கா இதனை உறுதிப்படுத்தியுள்ளார். விடுதலைப் புலிகளின் முக்கிய படையணிகளான சோதியா, ராதா, இம்ரான் பாண்டியன் மற்றும் புலனாய்வுத்துறை ஆகியவற்றைச் சேர்ந்த முக்கியஸ்தர்களே இவ்வ…
-
- 0 replies
- 258 views
-
-
பேராபத்தில் தமிழ் அரசியல் கைதிகள்- சிவசக்தி ஆனந்தன் பகிரங்க அழைப்பு by : Litharsan சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கொரோனா வைரஸ் பரவலால் பேராபத்தில் உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர்கள் தொடர்பாக தீர்க்கமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கட்சி பேதமின்றி அனைவரையும் ஒன்றிணையுமாறு அவர் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று (திங்கட்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “நாடளாவிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கொரோனா வைரஸின் பரவலால் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். …
-
- 2 replies
- 460 views
-
-
யாழ். பல்கலையில் போதனைசாராப் பணியாளர் வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி தொழிற்சங்க சம்மேளனம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை 10 Dec, 2025 | 11:26 AM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிலவும் போதனைசாராப் பணியாளர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், தவறின் தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தள்ளப்படுவோம் என்றும் அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 355 போதனைசாராப் பணியாளர் வெற்றிடங்கள் நிலவுக…
-
- 0 replies
- 59 views
-
-
சென்னை: இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி திமுக ராஜ்யசபா எம்பி பதவியை கனிமொழி ராஜினாமா செய்துள்ளார். சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் இது தொடர்பாக நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இரு வார காலத்துக்குள் இலங்கையில் தமிழர்கள் மீதான சி்ங்கள ராணுவத்தி்ன் தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும், இலங்கை ராணுவத்துக்கு ஆயுத உதவிகளை உடனே நிறுத்த வேண்டும், இதை இரு வாரத்துக்குள் செய்யாவிட்டால் தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வர் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது ராஜ்யபசா எம்பிக்களுக்கும் பொறுந்தும் முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார். இந் நிலையில் இன்று தனது ராஜ்யசபா எம்பி பத…
-
- 18 replies
- 2.5k views
-
-
சிறிலங்கா படையினரின் ஆறுமுனை முன்நகர்வுகள் புலிகளால் முறியடிப்பு [திங்கட்கிழமை, 20 ஒக்ரோபர் 2008, 06:54 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] நாச்சிக்குடா தொடக்கம் அக்கராயன் வரையிலான பகுதிகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட ஆறுமுனை முன்நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் உக்கிரமான எதிர்த்தாக்குதலை நடத்தி படையினரின் நகர்வுகளை முடக்கியுள்ளனர். இதில் படையினருக்கு பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை (17.10.08) தொடக்கம் இன்று திங்கட்கிழமை காலை வரை சிறிலங்கா படையினரின் ஆறுமுனை முன்நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் உக்கிர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர். வான்படையின் எம்.ஐ-24 ரக உலங்குவானூர்திகள், கிபீர், மிக்-27 ரக வானூர்திகள், வெ…
-
- 0 replies
- 1.1k views
-
-
பலாலி: 10 ஆண்டுகளுக்குப் பின் வழக்கு விசாரணைக்கு அனுமதி கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 12 நவம்பர், 2012 - 11:01 ஜிஎம்டி இலங்கை உச்சநீதிமன்றம் 10 ஆண்டுகளுக்குப் பின் விசாரணைக்கு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையின் வடக்கே பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இன்று திங்கட்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு அரசதரப்பு முன்வைத்த ஆட்சேபணையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்…
-
- 0 replies
- 438 views
-
-
இலங்கை வந்தடைந்தார் இந்தியாவின் புதிய தூதுவர்- மருந்துப் பொருட்களும் வந்தன இலங்கைக்கான இந்திய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கோபால் பாக்லே மருந்து பொருட்களுடன் நேற்று(வெள்ளிக்கிழமை) இலங்கையினை வந்தடைந்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தனது கடமையை பொறுப்பேற்க முடியாத நிலையில் காணப்பட்ட புதிய தூதுவர் இந்தியாவிலிருந்து 12.5 தொன் மருந்துப்பொருட்களுடன் இலங்கை வந்த விமானப்படை விமானத்தில் இலங்கையினை வந்தடைந்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் பேச்சாளராகவும் இந்திய பிரதமர் அலுவலகத்திலும் பணியாற்றிய பாக்லே கடந்த பெப்ரவரி மாதம் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையிலேயே அவர் மருந்துப்ப…
-
- 0 replies
- 360 views
-
-
”தையிட்டி போராட்டம் நில அபகரிப்புக்கு எதிரானதே – பௌத்தத்திற்க எதிரானது அல்ல” யாழ். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக் கடுமானத்தை மக்கள் ஒரு போதும் வலுக்கட்டாயமாக அகற்ற விரும்பவில்லை சட்டத்துக்கு உட்பட்டு சட்டவிரோத கட்டிடத்தை உரியவர்கள் அகற்ற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் எம்மைப் பொறுத்தவரையில் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸவிகாரை விகாரையல்ல தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் அடாத்தாக கட்டப்பட்ட சட்ட விரோத கட்டிடம் . இதற்கு எதிராக இரண்டு வருடங்கள் கடந்தும் ஜனநாயக நீதியாக மக்கள் ப…
-
- 0 replies
- 118 views
-
-
இறுதிப் போரின் முடிவில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடையது என்று இராணுவத்தினரால் காண்பிக்கப்பட்ட உடல் அவருடையது இல்லை என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவரின் உடல் என காண்பிக்கப்பட்ட உடலை மரபணு பரிசோதனைக்குட்படுத்த அரசு விரும்பினால் கனடா மற்றும் டென்மாக்கில் உள்ள அவரது சகோதரியும், சகோதரனும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டுவிட்டார் என அறிவிக்கப்பட்டவேளை நான் இந்தியாவில் இருந்தேன். இலங்கை இராணுவத்தினர் காண்பித்தது அவரின் உடலா என்பது குறித்து எனக்கு சந்தேகங்கள…
-
- 1 reply
- 406 views
-
-
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்ட நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட கிளினிக்! 10 Jan, 2026 | 02:37 PM மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட கிளினிக் வெள்ளிக்கிழமை (09) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை நரம்பியல் சத்திர சிகிச்சை மற்றும் அதனுடன் தொடர்புடைய நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பயணம் செய்ய வேண்டிய நிலையில் இருந்தனர். இதனால் அவர்கள் பெரும் பிரயாண மற்றும் பொருளாதார சிரமங்களை எதிர் கொண்டு வந்தனர். இந்த நிலைக்கு தீர்வாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் எம். எச். எம். ஆஸாத் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாணம் …
-
- 0 replies
- 126 views
- 1 follower
-
-
வீரவசனங்கள் விசில் அடிப்புக்கள் கை தட்டல்கள் கடல் அளவு வாங்கியவர் கலைஞர். எவரும் பதவிப் பொறுப்புக்கள் பாசப் பிணைப்புக்கள் வந்த பின்புதான் அவற்றால் பெற்ற பேருக்கும் புகழுக்கும் உள்ள சுமை தெரியும். கலைஞரின் செயற்பாடு ஈழத் தமிழினத்துக்கு இது வரை காலமும் ஏமாற்றம் தந்தன என்பது உண்மை. ஆனால் அவர் எத்தகைய ஒரு கீழ்த் தரமான எதிரியை வைத்துக் கொண்டு தமது தமிழ் உணர்வையும் தமிழினப் பாசத்தையும் வெளிப் படுத்த வேண்டும் என்பது இப்பொழுது மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஒரு ஈழத் தமிழனின் சோக மரணத்தைக் கூடத் தமது தமிழில் கவிதையில் வடிப்பதே தேசத் துரோகம் எனக் கூறுவதும் . அதற்காக அவரது ஆட்சிசைக் கலைக்க வேண்டும் எனக் கூச்சல் போடுவதும் மிகக் கீழ்த்தரமான அரசியல். அப்படியான ஒரு கலைப்புக் கரசியி…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கை தொடர்பில் திருப்தியில்லை; நடவடிக்கை எடுக்க அமெ.தயங்காது இலங்கையின் அரசியல் மற்றும் இதர நிலைவரங்கள் குறித்து முழுமையாகத் திருப்தி அடைய முடியவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கை அரசு அளித்த உறுதிமொழிகள் குறித்து ஆக்கபூர்வமான பிரதிபலிப்புகள் இல்லாதபட்சத்தில் எதிர்காலத்தில் அதற்கேற்றவாறான நடவடிக்கைகளை எடுக்க தாம் பின்னிற்கப் போவதில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய சந்திப்பு ஒன்றில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ்ஸா ஐரிஸ் அமெரிக்காவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற…
-
- 4 replies
- 917 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை விவகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிதானமாகக் கையாண்டது. அதனூடாகவே திருப்திகரமான வெற்றி எமக்குக்கிடைக்கப் பெற்றிருக்கின்றது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் உறுப்பு நாடுகளும்வலியுறுத்திய விடயங்களை இலங்கை அரசு கவனத்தில் எடுத்துச் செயற்படவேண்டும். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமானஇரா.சம்பந்தன் தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடுஎன்ன என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் தமிழ்ப் பத்திரிகை வினவியது. அதற்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையையும், இலங்கை தொடர்…
-
- 0 replies
- 218 views
-
-
நாடாளுமன்றை மீள கூட்டுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் தாம் கூட்டப்போவதில்லையென திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் கோட்டாபய ராஜபக்ச. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்திலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. நிறைவேற்று அதிகாரத்தை தாம் இதுவரை பயன்படுத்தவில்லை என்றும், தேவைப்படின் அதனை பயன்படுத்த தயாராகவே இருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின்படியே நான் செயற்பட்டுள்ளேன்.அரசியல் காரணங்களை வைத்து எனக்கு அழுத்தங்களை வழங்க எவரும் முயற்சிக்கக்கூடாது. நாடாளுமன்றை மீளவும் கூட்டுமாறு நீதிமன்றம் சொன்னாலும் நான் மீண்டும் ஒத்திவைப்பேன். அல்லது கூட்டும் வர்த்தமானியை விடுத்து மீண்டும…
-
- 21 replies
- 1.6k views
-
-
இலங்கைத் தமிழர் குடும்பம் ஒன்றை தத்தெடுக்க விரும்புவதாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா அளித்த அதேவேளை, இலங்கை அகதிகளுக்கு உதவ தனது 300 ஏக்கர் நிலத்தை வழங்குவதற்கு தயாரென நடிகர் ரித்தீஸ் கூறினார். நடிகர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திலேயே இவ்வாறான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அத்துடன் பல கட்டுபாடுகளுடன் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய எவரும் 'விடுதலைப் புலிகள்' என்ற பதத்தைப் பிரயோகிக்கவில்லை. நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களிடம் 'ஈழத்தமிழர்களைக் காக்க போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஆயிரக்கணக்கில்தந்திகள் அனுப்புங்கள். அப்படிச் செய்தால் தான் நீங்கள் என் மீது அன்பு வைத்திருக்கிறீhகள் என்று அhத்தம்' என்றார். நடிகர் பார்த்திபன் …
-
- 2 replies
- 2.2k views
-
-
திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்காவின் பிரதிநிதி வியாழன், 13 நவம்பர் 2008, 19:49 மணி தமிழீழம் [செய்தியாளர் நிலாமகன்] அமெரிக்காவின் தெற்காசிய வணிகத்துறையின் துணைப் பிரதிநிதி மைக்கல் டெலினி திருகோணமலை துறைமுகத்தைப் பார்வையிடச் சென்றுள்ளார். அவருடன் சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவவர் ரொபேட் ஓ பிளாக்கும் உடன் பயணித்துள்ளார். இன்று வியாழக்கிழமை திருகோணமலைக்குச் சென்ற இவர்கள் அங்க வணிக முதலீகள் குறித்து ஆராய்வதற்கம் அவதானிப்புகளை மேற்கொள்ளவும் இவர் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அங்கு சிறீலங்காக் கடற்படைப் பொறுப்பதிகாரி மற்றும் ஏனையு அதிகாரிகளையும் அவர் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். பதிவு
-
- 1 reply
- 1.5k views
-
-
கோட்டாபயவின் இராணுவ பாதுகாப்பு குறைப்பு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இராணுவ பாதுகாப்பின் ஒரு பகுதி இன்று செவ்வாய்க்கிழமை விலக்கிகொள்ளப்பட்டுள்ளது. விலக்கி கொள்ளப்பட்ட இராணுவத்தினருக்குப் பதிலாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இதேவேளை, தனக்கு வழங்கப்பட்ட இராணுவ பாதுகாப்பை திருப்பப்பெற வேண்டாம் என்று கோட்டாபய, முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தார். எவ்வாறாயினும், நபரொருவரின் பாதுகாப்புக்கு யாரை பயன்படுத்துவது என்பது குறித்து பாதுகாப்பு சபைதான் தீர்மானிக்கும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது. - See more at: http://www.tamilmirror.lk/176829/க-ட-ட-பயவ-…
-
- 0 replies
- 828 views
-
-
ஓகஸ்ட்டில் பொதுத்தேர்தல் : நாளை வர்த்தமானி அறிவித்தல் பொதுத்தேர்தலை எதிர்வரும் ஓகஸ்ட் ஆரம்பத்தில் நடத்த திட்டமிட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகி இருக்கின்றன. எனினும், திகதி குறித்த இறுதித் தீர்மானம் நாளை திங்கட்கிழமை, ஆணைக்குழு கூடி முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல் குறிப்புக்களை தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது பரிசீலித்து வருவதாகவும் இதன் அடிப்படையில் தேர்தல் நடத்தபபடலாம் என்றும் தெரியவருகிறது. அந்த குறிப்புக்களின்படி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மாவட்டம் தோறும் ஒவ்வொரு பெரிய கூட்டங்கள் வைக்க அனுமதிப்பதுடன், அதில் அதிகபட்சமாக 500 பேரே கலந்து கொள்ளலாமென தெரிவிக்கப்பட்ட…
-
- 0 replies
- 427 views
-
-
யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு உத்தரவு! 23 February 2026 யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத்தின் அனைத்து நிர்மாணப் பணிகளையும், சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கும் வரை உடனடியாக நிறுத்துமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை உத்தரவிட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையின் ஒரு பகுதியாக, 'திட்ட வரைபு அறிக்கை' ஒன்றை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கபில மஹேஷ் ராஜபக்ஷ தெரிவித்தார். மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட 48 ஏக்கர் காணி, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள் வரவில்லை என்பதை வனப் பாதுகாப்புத்…
-
-
- 5 replies
- 382 views
-
-
''இலங்கைப் படையில் இந்திய அதிகாரிகளா?'' ராஜபக்ஷே ஸ்பெஷல் பேட்டி... ''புலிகளின் அரசியல் தலைநகர் கிளிநொச்சியை விரைவில் பிடித்துவிடுவோம். இனிமேல் புலிகளுடனான போர்நிறுத்தம் என்பது கிடையாது. தேவையா னால், புலிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண்டர் ஆகட்டும்!'' என இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியாவுக்கே வந்து வீராவேசம் காட்டிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் பிரபாகரனோ, ''இலங்கையோடு போரிட்டு வென்று தமிழீழம் மலரச் செய்வோம்...'' என சூளுரைக்க... இலங்கையில் உச்சகட்டப் போர்! இந்த நிலையில், சமீபத்தில் இந்தியாவுக்கு வந்தஇலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். ''நீங்கள் இலங்கை அதிபரான பிறகுதானே தமிழர்கள் மீதான தாக்குதல்கள் கடுமையாகி இருக் கின்றன..?'' …
-
- 0 replies
- 2.5k views
-
-
தமிழீழத்தை தமிழ் நாட்டரசு அங்கீகரிக்கத் துணிய வேண்டும் -கனகரவி சிங்களப் பேரினவாதிகள் ஈழத் தமிழர்களை நெடுங்காலமாக அழித்து வருகின்றனர். 1948 ஆம் ஆண்டு இலங்கைத் தீவிற்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டதென்று பதியப்பட்டிருக்கும் வரலாற்றில் தமிழரின் தனியரசாட்சிகளை பறித்தெடுத்து ஆண்ட அந்நிய சக்திகள் மீண்டும் தமிழரை இன்னொரு அந்நிய சக்தியிடம் தாரைவார்த்து விட்டன. 04.02.1948 ஆம் ஆண்டு தமிழரின் சுதந்திரம் பறிக்கப்பட்ட நாள். இந்த நாளிற்குப் பின்னர் (முன்னரும் சிங்களப் பேரினவாதிகள் தமிழின அழிப்பில் அக்கறை காட்டிய வரலாறுள்ளது.) மிகவும் தீவிரமாகத் தமிழரை அழிப்பதில் இறங்கினார்கள். சிங்களப் பேரினவாதிகளின் தமிழின அழிப்பு நடவடிக்கையினால் ஒரு லட்சத்தையும் தாண்டிய உயிரிழப்புக்கள், த…
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ். பல்கலைக்கழக மோதல் சம்பவத்துக்கு பல்கலைக்கழக அதிகாரிகளே பொறுப்புக்கூற வேண்டியவர்கள் எனஅமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். “யாழ். பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டமைக்கு பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகளே பொறுப்புக்கூற வேண்டும். இந்த சம்பவம் தொடர்பில் நான் மிகவும் வருத்தமடைகின்றேன். இவ்வாறான சம்பவங்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை. இனவாதம், கடும்போக்குவாதம் என்பவற்றை பரப்பி மீளவும் பீதியை ஏற்படுத்த நாம் இடமளிக்க கூடாது.இவ்வாறான சம்பவங்களினால் தேசிய ஒற்றுமைக்கோ, நல்லிணக்கத்திற்கோ பாதிப்பு ஏற்பட இடமளிக்க முடியாது.குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவிடமும், பொலிஸ் ஆணைக்குழுவிடமும் முறைப்பாடு ச…
-
- 0 replies
- 225 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிசிஆர் பரிசோதனை எதிர்வரும் தேர்தலின் பின்னர் ஒன்று கூடவுள்ள முதலாவது நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது, அனைத்து உறுப்பினர்களும் உள்நுழைவதற்கு முன்னர் பெரும்பாலும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுகின்ற அனைத்து உறுப்பினர்களும், நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் முதலாவது கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒரு மீட்டர் இடைவெளியைப் பேணி அனைத்து உறுப்பினர்களையும் ஆசன அடிப்படையில் அமர வைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக முதலாது கூட்டத் தொடரின் போது, 225 உறுப்பினர்க…
-
- 1 reply
- 413 views
-
-
கல்லாறு நாதன் குடியிருப்பு அகதி முகாம் மீது நள்ளிரவு கிபிர் தாக்குதல் இருவர் பலி 5 சிறுவர், 7 பெண்களுட்பட 19 பேர் காயம்... கிளிநொச்சியிலிருந்து கிடைத்த தகவல் Midnight Terrible Arial Attack to Refugee camp at Kilinochchi. 29 November 2008. Nathan Kuddirrippu Refugee camp at Kallaru Kilinochchi was Arial attacked today early morning at 1.35 am. Including one child two death bodies were brought to Tharmapuram Hospital. 1. Sivakumar Sutharsan 5 year 2. Elder one- not identified. Further death bodies may be recovered because still evacuation is going on. Including 5 children and 7 women nineteen injured people were admitted …
-
- 10 replies
- 4.8k views
-