ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
சிறீலங்கா சமாதானச் செயலகப் பிரமுகர் தெகிவளையில் சுட்டுக் கொலை..! மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. Kethesh Loganathan shot dead [TamilNet, August 12, 2006 16:21 GMT] Kethesh Logananathan, Deputy Secretary General of the Secretariat for Coordinating the Peace Process, (SCOPP), and a former member of EPRLF, shot and injured by unknown gunmen near Vandervet place in Dehiwela Colombo at 9:30 p.m. Saturday, died on the way to Kalubowila Hospital, sources in Colombo said. Mr. Ketheshwaran Loganathan resigned from the Board of Directors and as Head of the Peace and Conflict Analysis Unit of the Center for Policy Alternatives (CPA) 1st April 200…
-
- 3 replies
- 2.3k views
-
-
ஆரோ ஒருத்தன் இன்ரநெற்றில யாழ்ப்பாணத்துப் பொம்பிளைப் பிள்ளைகள் சீரழிகிறதைக் காட்டுறான் என்டு கன பேர் சொன்னதைக் கேட்டு கேள்விப்பட்டு ஓடிப் போய் இன்ரநெற் கபேல லைன்ல நின்டு அந்த இன்ரனெற் வெப் தளத்தைப் பார்த்தால் அதில எந்த ஒரு அறுப்பும் இல்லை. நான் கொச்சையா எழுதிறன் என்டு ஒருத்தரும் கோவியாதையுங்கோ இரண்டு பெட்டையல் சந்தோசமா கான்போன் கதைச்சுக் கொண்டு நின்டிச்சுதுகள். மற்றச் செய்தில ஏதோ கிடக்குது என்று பார்த்தால் அதுலையும் சும்மா செய்திதான் போட்டிருக்கிறாங்கள் வேற ஒன்டையும் கானேல. எனக்கு சப்பென்று போச்சுது. ஒன்றுக்கும் சம்மந்தமில்லாமல் ஒரு நல்ல படமும் போடாமல் இப்படி பேய்க்காட்டி விட்டானே என்ற கோவத்தில எனக்கு ஒன்டும் செய்யேலாமல் போச்சுது. எனக்கு சொன்னவன…
-
- 5 replies
- 2.3k views
-
-
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது இறுதி மூன்று நாட்களில் செய்மதி தொலைபேசி ஊடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4பேருக்கு பல தடவைகள் அழைப்புகளை மேற்கொண்டு பேசியுள்ளமை தெரியவந்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் தலைவர் இறுதி மூன்று நாட்களில் இந்தியா, மலேசியா, சிங்கபூர் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அழைப்புகளை மேற்கொண்டுள்ளார். இந்த தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்தவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குகின்றனர். இந்த உறுப்பினர்கள் இலங்கை திருப்பிச் செல்ல முடியாமல் அந்த நாடுகளில் தங்கியிருப்பதாகவும் அந்த பேச்சாளர் மேலும் கூறியுள்ளார். போரை நிறுத்த சர்வதேச ரீதியில் அழுத…
-
- 1 reply
- 2.3k views
-
-
நிஜமான புலி நேரில் வரும்போது.... உலகெங்கும் நடைபெறுகின்ற விடுதலைப்போராட்ட நிகழ்வுகளில் துரோகங்கள் இடம்பெறா விட்டால் அந்த போராட்டத்தின் வரலாறு நிறைவு பெறாது. கிறித்துவ வரலாறாகட்டும் அல்லது பௌத்த வரலாறாகட்டும், சமணர் வரலாறாகட்டும், திராவிட வரலாறாகட்டும். அதில் துரோகங்களின் பக்கங்கள் என்று ஒன்று இருக்கும். ஆனால் அதை கடக்காமல் நாம் ஒன்றையுமே புரிந்து கொள்ள முடியாது. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இப்படி துரோகங்கள் அலை அலையாக எழுந்து, நமது போராட்டத்தின் ஓசையை முடக்க பெரும் எழுச்சியோடு எதிரிக்கு பக்கத்தில் நின்றது. நம்மை, நமது விடுதலையை கொச்சைப்படுத்தும் விதமாக இந்த துரோகக் கூட்டங்கள் செய்த அளவிடமுடியாத மாந்த நேயமற்ற இனதுரோக நடவடிக்கைகளை நாம் இந்த நேரத்திலே புரிந்…
-
- 1 reply
- 2.3k views
-
-
-
- 2 replies
- 2.3k views
-
-
Published By: DIGITAL DESK 3 28 MAY, 2024 | 04:10 PM தமிழர்களின் உணர்வுகளை அவமானப்படுத்தவே கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்துள்ளதாகவும், அதனை தென்னிலங்கை அரசியல் சக்திகளின் சதித்திட்டமாகவே தான் பார்ப்பதாகவே தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே ஒரு அவ்வாறு தெரிவித்தார். தென்னிலங்கையில் செருப்பு உற்பத்தியை மேற்கொள்ளும் நிறுவனம் தமிழர்களின் பாரம்பரியமானதும், தனித்துவம் வாய்ந்த கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்து அவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கியுள்ளனர். தமிழ் தேசிய பரப்பிலேயே கா…
-
-
- 30 replies
- 2.3k views
- 1 follower
-
-
அந்த இரவு, விடியவே இல்லை! கடந்த வெள்ளிக்கிழமை விடியலை உற்சாகமாக எதிர்கொண்டார் நளினி. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் நளினிக்கு, வேலூர் பெண்கள் சிறையே பளிச்செனத் தெரிந்தது. சிறையில் இருந்து விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனு மீது அன்றுதான் விசாரணை. தமிழக அரசு தனக்குச் சாதகமான முடிவை நிச்சயம் அறிவிக்கும் என்று எதிர்பார்த்தார் நளினி! சகோதரர் பாக்கியநாதனின் இரண்டு வயது மகளை வேலூர் சிறைக்கு அழைத்து வரச் சொல்லிஇருந்தார். குட்டி மருமகளின் மழலைக் குழைவை அதிகமாகவே ரசித்தார். ''அரித்ராவைத்தான் (நளினியின் மகள்) பார்த்து ரெண்டரை வருஷமாச்சு. ஆனா, சீக்கிரமே அவகூடவே இருக்கிற மாதிரி தீர்ப்பு வந்துரும்'' என்றவரின் கண்களில் ஒளி! ஆனால், அந…
-
- 2 replies
- 2.3k views
-
-
கச்சத்தீவை கோரும் உரிமை தமிழக அரசாங்கத்திற்கு கிடையாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா கச்சத்தீவை மீட்பது தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 1974ம் ஆண்டு இலங்கைக்கும் இந்திய மத்திய அரசாங்கத்திற்கும் இடையிலான உடன்படிக்கை ஒன்றின் மூலம் கச்சாத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. கச்சத்தீவை மீட்டெடுப்பது தொடர்பில் அண்மையில் தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.…
-
- 1 reply
- 2.3k views
-
-
வன்னியில் நச்சுவாயு பேரழிவு அபாயமா? - அதிர்ச்சி தகவல் 8 ஏப்ரல் 2009 | 20:04 186 views No Comment Print This Post Print This Post பாதுகாப்பு வலயத்தின் மீது நச்சு வாயு வீசி மக்களை கூண்டோடு கொல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அலம்பில் பகுதியில் பல பாரிய குழிகள் தோண்டப்படுவதாகவும் இப்பணியினை சிறிலங்காவின் ஊர்காவல் படையினர் மேற்கொள்ளுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 2 1/2 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வாழும் பாதுகாப்பு வலயத்தில் வெறும் 60000 மக்கள் இருபது பெரும் சந்தேகத்தையும் மர்மத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நேற்றைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்…
-
- 1 reply
- 2.3k views
-
-
image: dailymirror.lk இலங்கையில் இருந்து தமிழினத்தை அழிக்க வேண்டும் அல்லது அதனை அடக்கி ஆள வேண்டும் என்பதுடன், இலங்கையை பெளத்த சிங்கள சிறீலங்காவாக கட்டி எழுப்ப வேண்டும் என்பதில்.. எல்லா சிங்கள பெளத்த பேரினவாதக் கட்சிகளும் கொள்கை வேறுபாடுகள் கடந்து ஒன்றித்துப் பயணிப்பதை.. இப்படம் தத்துரூபமாக இனங்காட்டி நிற்கிறது. ஆனால் சிங்களவனால் அழிக்கப்படும் தமிழனோ.. பிச்சைக் காசுக்கும்.. பதவிக்கும் அடிபணிந்து.. தமது மக்களின் குருதியால்.. உயிரால் கட்டி வளர்க்கப்பட்ட உரிமைப் போராட்டத்தையே காட்டிக் கொடுத்துப் பிழைக்கும் துரோகத்தை எவ்வித தயக்கமும் இன்றிச் செய்ய மட்டும் துணிகின்றானே.. எப்படி தமிழனுக்குள் மட்டும் இப்படி ஓர் இழிசிந்தனை...??! சுதந்திரக் கட்சியும்.. ஐக்கிய தேசியக்…
-
- 4 replies
- 2.3k views
-
-
சவூதியில் இலங்கைப் பெண்ணுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட விவகாரம்; சபையில் கடும் சர்ச்சை சுமந்திரன் எம்.பி.யுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முஸ்லிம் எம்.பி.க்கள் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவரை ஷரி ஆ சட்டத்தின் பிரகாரம் கல்லால் எறிந்து மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் சர்ச்சை நிலை ஏற்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்படி தண்டனைக்கு எதிர்ப்பு வெளியிட்ட நிலையில் சுமந்திரன் எம்.பி.யின் இச்செயற்பாட்டுக்கு அமைச்சர் ரிஷாத் பதியூதீன், உறுப்பினர்களான நவவி, மரிக்கார் மற்…
-
- 9 replies
- 2.3k views
-
-
சண்டையை நிறுத்த இலங்கை அரசு, புலிகளுக்கு இந்தியா கோரிக்கை டெல்லி: இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் சண்டையை நிறுத்தி விட்டு, பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இன்று காலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை நிலவரம் கவலை தருகிறது. இலங்கை அரசு தான் பிடித்து வரும் வினோதப் பிடிவாதத்தைக் கைவிட வேண்டும். அதேபோல விடுதலைப் புலிகளும் தங்களது சண்டைய நிறுத்த வேண்டும். இரு தரப்பும் இந்தியாவின் கோரிக்கையை காது கொடுத்துக் கேட்க வேண்டும். இலங்கையில் நடந்து வரும் நிகழ்வுகள் மத்திய அரசுக்கு கவலையை அளிப்பதாக உள்ளது. இந்திய அரசு தனது செல்வாக்கைப் பயன்படு…
-
- 5 replies
- 2.3k views
-
-
வவுனியாவில் கவசவாகன அணி தாக்கப்பட்டுள்ளது வவுனியா தெற்கு பகுதியில் சிறீலங்கா பவள்கவச அணிமீது பூவரசங்குளத்திற்கும் செட்டிக்குளம் பகுதிக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பவள்கவசவாகனம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதன்போது ஐந்து இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் பவள்கவச வாகனம் பாரம்தூக்கி வாகனம் ஒன்றில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. pathivu
-
- 2 replies
- 2.3k views
-
-
கருணாவை வழியனுப்பி வைக்கும் ராஐபக்ச அரசு கேணல் கருணா என அழைக்கப்பட்ட முரளிதரனின் முறைகேடான வாழ்க்கை முறையால் அவரின் அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிட்டதாக டெய்லி மிரர் பத்திரிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ’The Decline and Fall of Colonel Karuna’ எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள அதன் ஆசிரியர் தலையங்கத்தில் கருணாவின் அரசியல் அதன் இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்டதாக எழுதப்பட்டுள்ளது. இவ் ஆசிரியர் தலையங்கத்தின் முழுவிபரம் வருமாறு: கருணா தனது சொந்த மாவட்டத் தேர்தலிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளதுடன் தேசியப் பட்டியலின் ஊடாக தன்னை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யும்படி அரசாங்கத்தைக் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தேர்தலில் போட்டிய…
-
- 9 replies
- 2.3k views
-
-
காலி மாவட்டத்தில் பெந்தர எல்பிட்டிய பகுதிகளில் மூடப்பட்டிருந்த முஸ்லிம் கடைகளுடைய பூட்டுக்களில் மனித மலம் பூசப்பட்டிருப்பதாகவும்,நாய்கள் படுகொலை செய்யப்பட்டு அப்பகுதிகளில் வீசப்பட்டிருப்பதுடன், நாய் இரத்தமும் அங்குள்ள கடைகள் மீது தெளிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காலி மாவட்டத்தில் பெந்தர எல்பிட்டிய பகுதிகளில் முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்கள் பொருட்கள் வாங்குவதை நிறுத்துமாறும் முஸ்லிம்கள் கடைகளை மூடிவிட்டுச் செல்லுமாறும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிமிருந்த நிலையிலேயே இந்த அசிங்கம் நிறைந்த தகவல்களும் வெளியாகியுள்ளன. இச்சம்பவங்களுக்கு சிங்கள பேரினவாதிகள் காரணமாக இருக்கலாமென நம்பப்படுகிறது. தம்மை சிங்கள தேசப்பற்றாளர்கள் எனக்கூ…
-
- 21 replies
- 2.3k views
- 1 follower
-
-
திருமணமாகாத லெப்.ஜெனரல் பாரமி குலதுங்கவின் மனைவி, பிள்ளைகளுக்கு பிரதமர் அனுதாபம் [03 - July - 2006] [Font Size - A - A - A] பன்னிப்பிட்டியவில் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலியான திருமணமாகாத லெப். ஜெனரல் பாரமி குலதுங்கவின் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க தனது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார். லெப். ஜெனரல் பாரமி குலதுங்கவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தும் பொருட்டு, அவரது வீட்டிற்குச் சென்ற பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க, பிரதமர் என்பதற்காக தனது அனுதாபக் கடிதத்தை அங்கு கையளித்தார். அக் கடிதத்தில் இராணுவ அதிகாரியின் பிரிவால் துயருறும் அவரது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்…
-
- 5 replies
- 2.3k views
-
-
யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்களை விடுவிக்குமாறு கூறுவதைவிட தன்னால் வேறு என்ன சொல்ல முடியும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் காணாமல் போயுள்ள லலித் குமார வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார். அவர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றில் கூறப்பட்டதை கேட்டிருக்கிறேன். காணாமல் போயுள்ளமை தொடர்பில் எனக்குத் தெரியாது. கடத்தப்பட்டிருந்தால் விடுவ…
-
- 1 reply
- 2.3k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேதினத்தில் சிங்கக்கொடி ஏந்தியமைக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கோருகின்றேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இன்று தெரிவித்துள்ளார்.சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் சுதந்திர ஊடகக் குரல் என்ற அமைப்பு முன்னெடுத்த மூத்த ஊடகவியலாளர் கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மேதினத்தில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுமென்று சிங்கக் கொடியினை கையில் ஏந்தவில்லை, அவரது கையில் சிங்கக்கொடி திட்டமிட்டுத் திணிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்திற்காக நான் பகிரங்க…
-
- 14 replies
- 2.3k views
-
-
-
- 1 reply
- 2.3k views
-
-
அநுராதப்புரத்தில் கைவிடப்பட்ட வீடொன்றிலிருந்து 280 குண்டு துளைக்காத கவசங்கள் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். நேற்றைய தினம் மதவாச்சியில் வைத்து லொறியொன்றை சோதனையிட்ட் பொலிஸார் அதிலிருந்து 68 குண்டு துளைக்காத கவசங்களை கைப்பற்றினர். அத்துடன் இது தொடர்பில் இருவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கலிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து சந்தேக நபர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இன்று அநுராதபுரத்தில் கைவிட்ட வீடொன்றிலிருந்து மேலும் 280 குண்டு துளைக்காத கவசங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். செய்தி அவையடங்கி http://www.kalakam.com/forum/viewtopic.php?t=177
-
- 2 replies
- 2.3k views
-
-
புலிகளின் தலைவர் பிரபாகரன் உரை அடங்கிய இறுவெட்டு வைத்திருந்தவர் கைது 2/25/2008 7:39:14 PM வீரகேசரி இணையம் - விடுதலைப் புலிகளின் தலைவர் மாவீரர் தின உரை அடங்கிய இரண்டு இறுவட்டுக்களை வைத்திருந்த மஸ்கெலியா பிரவுன்ஸ் விக்தோட்டத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு செட்டியார் தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட இளைஞர் ஒருவர் தெமட்டகொடை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளõர். ராமஜெயம் ரவிச்சந்திரன் (வயது 34) என்ற வாலிபரே ஜாஎலயிலுள்ள தனது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டவர். கடந்த 19ஆம் திகதி இவரது வீட்டுக்கு சென்ற இரகசிய பொலிஸார் சுமார் 105 சினிமா பாடல் திரைப்பட இறுவட்டுக்களை தகவல் ஒன்றை அடுத்து எடுத்துச் சென்றதாகவும், அதில் இரண்டு இறுவட்டுக்கள் பிரபாகரனின் மாவீரர் …
-
- 1 reply
- 2.3k views
-
-
யாதும் ஊரே யாவரும் கேளிர் என உலகப் பொது நீதி பாடித் தமிழ் இனத்தின் பண்பை உலகின் செவிகளில் பறை சாற்றிவர்; சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார். அதையே இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் தனது செயலில் காட்டி உலகை விழி பிதுங்க வைத்துள்ளது. அன்றாடம் தனது பிராந்தியத்தில் உள்ள பொது மக்களின் குடியிருப்புக்கள் மீது கடந்த பல மாதங்களாகக் காலை மாலை இரவு பகல் பாராது இலங்கை அரசு குண்டு மழை எறிகணை வீச்சுக்களால் போர் நடத்தி அழிப்புகளைச் செய்து வருகின்றது. நாலா புறமும் போர்க் கள முனைகளைத் திறந்து எதிரி படைகளின் முழு முற்றுகையைப் பல மாதங்களாக நில வன்பறிப்பும் இன அழிப்பும் செய்து வருகிறது. இத்தகைய நெருக்கடி நிலையிலும் ஆசியப் பிராந்திய அரசுகளின் உச்சி மகாநாட்டை இலங்கையில் அமைதியாக ந…
-
- 8 replies
- 2.3k views
-
-
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் விரோத திமுக-காங்கிரசுக் கூட்டணியை படுதோல்வியடைந்துள்ளது.பணபலம், அதிகார பலம், இவற்றிற்கு பணியமாட்டோம் வாக்கு என்ற ஆயுதத்தால் அவற்றை வீழ்த்துவோம் என்று மெய்ப்பித்த எம் தமிழ்ச் சொந்தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வரலாறு காணாத வகையில் ஊழல்,வன்முறை,குடும்ப ஆதிக்கம்,அராஜகம்,மணற்கொள்ளை, திரைத்துறையில் ஏகபோகம்,நிர்வாகச் சீர்கேடு, இனத் துரோகம்ஆகியவற்றில் மலைக்கத்தகும் மலையாய் எழுந்து நின்றது காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி.அந்த மலையை சுக்குசுக்காய் உடைத்து தரை மட்டமாக்கியிருக்கிறார்கள் தமிழர்கள். மக்களின் எதிர்ப்புக்கு சிறிதளவும் மதிப்பளிக்காமல் தான் பெற்ற மக்களின் அதிகாரத்திற்காகவே ஆட்சி நடத்…
-
- 11 replies
- 2.3k views
- 1 follower
-
-
சிறிலங்காவை விமர்சிக்க அமெரிக்காவுக்கு உரிமை இல்லை: அமைச்சர் ராஜித சேனாரட்ன. சிறிலங்காவை விமர்சிக்க அமெரிக்காவுக்கு உரிமை இல்லை என்று சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரட்ன சாடியுள்ளார். கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறியதாவது: கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட போது இதேபோன்ற நடவடிக்கையை அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்டது. அப்படியான நிலையில் சிறிலங்காவை விமர்சிக்க அமெரிக்காவுக்கு உரிமை இல்லை. பல முஸ்லிம்களை அமெரிக்கா கைது செய்தது. சதாம் உசேனின் இரு மகன்களைப் படுகொலை செய்தது. இப்போது எங்கள் நாட்டில் மனித உரிமைகளைப் பற்றி அமெரிக்கா பேசுகிறது என்றார் அவர். மற்றொரு அமைச்சரான ஜெயராஜ் பெர்ன…
-
- 5 replies
- 2.3k views
-
-
இந்தச் செய்தி எந்தளவுக்கு உண்மை என்று தெரியாது, ஆனால் srilankaguardian எனும் இலங்கையில் இருந்து வரும் ஆங்கில இணையம் முக்கிய செய்தியாக இதனை இப்போது பிரசுரித்துள்ளது சாராம்சம்: மகிந்த தேர்தல் முடிவுகள் தனக்கு எதிராகப் போய்விடும் என்று அஞ்சி இந்தியாவின் இராணுவ தலையீட்டைக் கோரி இன்றிரவு விசேட விமானத்தின் மூலம் டெல்லி நோக்கி பயணமாகின்றார். ஆனால் இதனை மகிந்தவின் வட்டாரங்கள் மறுத்து அவர் விசேட பூசை ஒன்றுக்காகவே டெல்லி போகின்றார் என்று குறிப்பிட்டனர் President Mahinda fly to Delhi (January 25, Colombo, Sri Lanka Guardian) According to information reaching through reliable sources confirm, President Mahinda Rajapakse is now flying to Delhi in a special jet. It is u…
-
- 12 replies
- 2.3k views
-