ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143523 topics in this forum
-
புலிகளின் குரல் கலைஞர் லெப். கேணல் ராணிமைந்தன் வீரச்சாவு [சனிக்கிழமை, 26 யூலை 2008, 07:41 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிக் கவிஞரும் படைப்பாளரும் புலிகளின் குரல் வானொலியின் கலைஞருமான லெப். கேணல் ராணிமைந்தன் வீரச்சாவடைந்துள்ளார். புலிகளின் குரல் வானொலியில் நிகழ்ச்சிகள், கவிதை நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிப் படைப்பாளராக விளங்கியவர் ராணிமைந்தன். விடுதலைப் பாடல்களையும் எழுதியிருக்கும் அவர், சிறந்த ஒரு பேச்சாளராகவும் விளங்கினார். தமிழீழ தேசியத் தொலைக்காட்சியிலும் அறிக்கை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை அவர் உருவாக்கியுள்ளார். புதினம்
-
- 13 replies
- 2.2k views
-
-
இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கையால் அச்சுறுத்தல்! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-27 06:54:09| யாழ்ப்பாணம்] தமது நாட்டுப் பாதுகாப்பு தொடர்பாக இலங்கை அச்சுறுத்தலாக அமைந்துள்ளதா என்பதில் இந்தியா தற்போது அதிக அக்கறை காட்டத் தொடங்கியுள்ளது. அண்மையில் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்ட லஹ்ர் ஈ தொய்பா அமைப்பின் ஒருவர் தாம் இலங்கையில் பயிற்சி பெற்றதாக தெரிவித்தமையை அடுத்தே இந்த அக்கறை ஏற்பட்டுள்ளது. முதலில் இந்தப் போராளிக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் பயிற்சிகளை வழங்கி யிருப்பார்களா? என்ற சந்தேகத்தை இந்தியா கொண்டிருந்தது.எனினும் பின்னர் அது நிரூபிக்கப்படாத நிலையில் இலங்கையின் படையினர் மீது இந்தியாவின் கவனம் திரும்பியுள்ளது. இலங்கையில் 200 லஹ்ர் ஈ தொய்பா அமைப்…
-
- 1 reply
- 2.2k views
-
-
காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனங்களப்புப் பகுதியில் கடந்த சனிக்கிழமை போதையில் நின்ற காடையர்கள் குழுவொன்று தாக்குதல் நடத்தியதில் நீர்வேலி வடக்கைச் சேர்ந்த முன்னாள் அதிபரொருவர் உயிரிழந்துள்ளார். சி.விசுவாசம் (வயது 63) என்ற ஓய்வுநிலை அதிபரே உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: புலம்பெயர் தேசத்தில் இருந்து வருகைதந்த ஒருவர் வைத்த மதுவிருந்தில் பங்கு பற்றியவர்கள், போதையின் உச்சத்தில் யாழ்ப்பாணம் - மன்னார் வீதியால் பௌத்த மத குருமார்கள் பயனித்த பேரூந்தின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து பூநகரி பிரதேசத்துக்குத் தனியார் வகுப்புக்குக் கற்பிக்கச் சென்று கொண்டிருந்த ஓய்வுபெற்ற அதிபர் மீதும் த…
-
-
- 44 replies
- 2.2k views
-
-
குரல்வழிச்செய்தி இணைப்பு - தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனருமான சீமான் சற்றுமுன்னர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று தமிழகம் முழுவதும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பிய சமயத்திலேயே, வீட்டில் வைத்து இக்கைது நடைபெற்றிருப்பதாக அறியமுடிகிறது. சீமான், மற்றும் அமீர் ஆகியோரின் கைதை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் உள்ள அணைத்து திரையரங்குகளும் மூடப்படவுள்ளதாகவும், திரைப்படக்காட்சிகள் அணைத்தும் ரத்தாகும் எனவும் அறியமுடிகிறது! நாளை காலை 9 மணியளவில், avm studio விற்கு முன்னால் திரையுலகக்கலைஞர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தப்போவதாகவும் தெரிவிக்கப்ப்டுகிறது…
-
- 0 replies
- 2.2k views
-
-
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக இலங்கை அரசுடன் ஆலோசிப்பதற்காக இந்தியா மூவர் கொண்ட தனது குழு ஒன்றை அனுப்பிவைக்க உள்ளது. முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர்மேனன், வெளிவிவகாரச் செயலர் நிருபமாராவ் ஆகியோர் அடங்கிய குழுவே விரைவில் கொழும்பு வர உள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட இந்தியத்தரப்புக் குழுவினர் இவர்கள். இதேபோன்ற இலங்கைக்குழு, போர்க்குற்ற விசாரணை தொடர்பில் இந்திய அதிகாரிகளைச் சந்தித்து ஆராய இந்தியா செல்வதற்கான அனுமதியை புதுடில்லி இன்னும் வழங்காத நிலையில் தனது குழுவைக் கொழும்புக்கு அனுப்பி வைக்கிறது. மீண்டும் சதிகாரரா? தமிழக மக்கள் போராட்டம் செய்து இந்த …
-
- 11 replies
- 2.2k views
- 1 follower
-
-
விஷ்ணுவின் அவதாரமே புத்தர்: யாழில் உபதிஸ்ஸ தேரர் தெரிவிப்பு! புத்தரும் விஷ்ணுவின் அவதாரம் தான், எனவே வடக்கில் பௌத்த விகாரைகள் கட்டப்படுவதால், தமிழர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பணகல உபதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு சென்ற அவர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வடக்கு மாகாணத்தில் யார் பெரும்பான்மையாக இருக்கிறார்கள், இந்துக்களா? கிறீஸ்தவர்களா? பௌத்தர்களா? இந்துக்கள் அதிகமாக வாழும் இங்கு பௌத்தரும் ஒரு இந்து தான். கிருஷ்ண பகவானின் எட்டாவது அவதாரம்தான் புத்த பகவான். பௌத்தர்கள் வேற்றுகிரக மதத்தவர்கள் அல்ல. அவர்கள் உங்கள…
-
- 12 replies
- 2.2k views
-
-
இலங்கையில் போர் மேகம்.!! -------------------------- சுவிட்சர்லாந்தில் இலங்கை அமைதிப்பேச்சு தோல்வி அடைந்துவிட்ட நிலையில் நாட்டின் வடக்கே கடும் பீரங்கித் தாக்குதல் தொடங்கிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் முழு மூசசாக விஸ்வரூபம் எடுக்கக்கூடும் என்றும் அப்படி நிகழுமேயானால் அது யாழ்ப்பாணத்தை குறிவைத்து நடக்கும் போராக இருக்கும் என்றும் கூறப் படுகிறது. ëஜனிவா பேச்சு தோல்வி அடைந்ததை அடுத்து விடுதலைப் புலிகள் குழு தனது பயணத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு தாயகம் திரும்புகிறது. அமைதிப் பேச்சு தோற்றுவிட்டநிலையில் இலங்கையில் இனி போரா அமைதியா என்பதை இலங்கை அரசாங்கம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று ëஜனிவாவில் இருந்து தமிழ் முரசிடம் பேசிய விட…
-
- 3 replies
- 2.2k views
-
-
கொலைஞர்களாக மாறிவரும் கலைஞர்களா? கலைஞர்களாக மாறிவரும் கொலைஞர்களா? மனித உருவில் நடமாடும் மிருகங்கள் வாழும் பிரதேசங்களாக புலம்பெயர் நாடுகள் மாறிவரும் நிலைகண்டு சர்வதேச தமிழினமே சஞ்சலத்தில் ஆழ்ந்துள்ளது. தாயகத்திலேதான் சிங்களவன் தமிழினத்தை நேரடியாகாத் தன்னை எதிரியாக இனம் காட்டிக்கொண்டு அழித்தொழிக்கின்றான் என்றால், புலம்பெயர் தேசங்களில் சொந்த உறவுகள், நட்புகளையே உறவாடிக் கொலைசெய்து வரும் ஒருசில உழுத்துப்போன ஊதாரிகளைப்பற்றி எபப்டித் தான் சொல்வதென்றே தெரியவில்லை. மேற்படி சம்பவங்களின் உச்சக்கட்டமாகக் கடந்த வாரம் பாரிஸின் புறநகர்ப் பகுதியான ட்றான்சி என்னுமிடத்தில் இலக்கிய ஆர்வலரும், புதிய சிந்தனைகொண்ட படைப்பாளியும், சிறந்த மேடைப் பேச்சாளரும், குறும்பட, நாடக இயக்குனர், நடிக…
-
- 12 replies
- 2.2k views
-
-
செவ்வாய் 04-12-2007 18:48 மணி தமிழீழம் [மயூரன்] யால வனச் சரணாலயத்தில் படையினர் புலிகள் மோதல் யால வனச் சரணாலயப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக சிறீலங்கா படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். இன்று நடைபெற்ற மோதலின் அரச படைத்தரப்பில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 2 replies
- 2.2k views
-
-
இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா இன்று சென்னையில் இருந்து அன்னை வேளாங்கன்னி மாதா தேவாலயத்திற்கு காரில் சென்றபோது காரைக்காலில் வைத்து ம.தி.மு.க. ஆதரவாளர்களால் வழிமறிக்கப்பட்டு கோசம் எழுப்பப்பட்டுள்ளது. இது பற்றித் தெரியவருவதாவது:- இலங்கை மீன்வளத்துறை மந்திரியாக இருப்பவர் பீலிக்ஸ் பெரேரா. இவர் வேளாங்கன்னி மாதா கோவிலில் தரிசனம் செய்வதற்காக தனது குடும்பத்தினர் 10 பேருடன் சென்னை வந்திருந்தார். காரைக்கால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் குடும்பத்தினருடன் தங்கி இருந்தார். சனிக்கிழமை காலை 9 மணியளவில் இலங்கை மந்திரி பீலிக்ஸ் பெரேரா குழுவினர் காரில் வேளாங்கன்னி தேவாலயம் புறப்பட்டு சென்றனர். அவருடன் தமிழ்நாடு பொலிஸார் பாதுகாப்புக்…
-
- 3 replies
- 2.2k views
-
-
யாழ்ப்பாணத்தின் பிரதான உணவுக் களஞ்சியம் நாவற்குழியில் அமைந்து இருக்கிறது. அந்த இடதில் நிறுவப்பட்டு இருக்கும் பெயர்ப் பலகையில் தமிழ் மொழியின் நிலையை பாரீர் !!!! நன்றி :தமிழ்ச் செல்வன் http://thaaitamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/
-
- 23 replies
- 2.2k views
-
-
யாழ்.குடாநாட்டிலுள்ள சிறிலங்கா படையினருக்கு விநியோகங்களை மேற்கொண்டுவந்த பிரதான கப்பல்களில் ஒன்றான எம்.வி.நிமல்லவ விடுதலைப்புலிகளின் தற்கொலை குண்டு தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 2.2k views
-
-
அமெரிக்காவிற்கு நான் போக முடியாமல் உள்ளது. இலண்டனிற்கும் தான் நான் மட்டுமல்ல எனது மகனும் போக முடியாமல் உள்ளது. இதற்கு காரணம் பொன்சேகா என்னைப்பற்றி கூறிய வெள்ளைக்கொடி சம்பவமே என்று பொரிந்து தள்ளியுள்ளார் கோத்தாபாய. இத்தாலியில் இருந்து ஒரு பொன்சேகா ஆதரவு சிங்கள புத்திஜீவி ஒருவர் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கேட்டுள்ளார். பொன்சேகாவிற்கு மூன்றுவருட சிறை நியாயமற்றது எனவும் கூறியுள்ளார். இதன் போது ஆட்திரமடைந்த கோத்தா; உங்களைப்போல் நான் மின்னஞ்சல் மூலம் போர் செய்பவன் அல்ல நான் களத்தில் நின்று போராடினேன் விடுதலைப்புலிகளை ஒழித்தேன் அப்படிப்பட்ட நான் இன்று வெளி நாடுகளுக்கு போகமுடியாது செய்துவிட்டார் பொன்சேகா அவருக்கு மூன்று வருடமல்ல 10 வருடம் சிறையில் போட்டிருக்க வேண்டும் என ஆவே…
-
- 12 replies
- 2.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஈழத்திற்காக போராடவில்லை அவர் தமிழீழத்திற்காக போராடினார் ;மஹிந்த தேஷப்பிரிய Mathi November 18, 202012:57 am ஈழம் என்ற சொல்லில் எவ்வித பிழையும் கிடையாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற போது நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனை தெளிவுபடுத்தியுள்ளார். ஸ்ரீலங்கா என்பதற்கு சிங்கள மொழியில் பல்வேறு பெயர்கள் உண்டு. அதேபோன்று இலங்கை என்பதற்கு ஈழம் என்ற ஓர் மாற்றுப் பெயர் உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈழம் என்ற சொல் தமிழ் பிரிவிணைவாதத்திற்காக பயன்படுத்தப்படுவதாக ஓர் மாயை உருவாக…
-
- 17 replies
- 2.2k views
-
-
யாழ்ப்பாணத்திற்கு இனி ஞானோதயம் வருமா?? யாழ்ப்பாண மக்கள் இதைப் பார்த்து ஞானம் பெற்றால் சரி...... புத்த பெருமான் ஞானம் பெற்ற வெள்ளரசு மரம்......... இத்தனை காலத்தின் பின் யாழ்ப்பாணம் வருவதேனோ பித்தான உங்கள் தலையில் ஞானம் வரவோ புத்தரும் வந்துவிட்டார் உங்களைத் திருத்துவதற்கு? thx thx http://newjaffna.com
-
- 27 replies
- 2.2k views
-
-
• தமிழக தலைவர்களால் ஏன் வழி காட்ட முடியவில்லை? நடக்கவிருக்கும் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தமிழக தலைவர்கள் இதுவரை கருத்து கூறாதது ஆச்சரியமாக இருக்கிறது. தான் சாவதற்குள் தமிழீழத்தைக் காண வேண்டும் என்று டெசோ மாநாடு நடத்தும் கலைஞர் அவர்கள் ஈழத் தமிழர்கள் இந்த தேர்தலில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஏன் இன்னும் கூறவில்லை? இராணுவத்தை அனுப்பி ஈழத்தை பெற்றுக்கொடுப்பேன் என்று கூறி ஈழத்தாய் பட்டம் பெற்றிருக்கும் ஜெயா அம்மையார் தேர்தலில் ஈழத் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஏன் வழிகாட்டவில்லை? 2016ல் சட்டசபையை கைப்பற்றி தமிழீழத்தை பெற்றுக் கொடுக்கவிருக்கும் "நாம் தமிழர்" சீமான் அவர்கள் அதற்குமுன்னர் …
-
- 23 replies
- 2.2k views
-
-
Published By பெரியார்தளம் On Friday, October 14th 2011. Under பெரியார் திராவிடர் கழகம் இன வெறி, சாதி வெறி இரண்டுக்கும் எதிரான போராட்டங்களின் குறியீட்டுப் பெயர்தான் கொளத்தூர் மணி. உள்ளூர்ச் சேரிகளில் தீண்டாமை திணிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட தமிழர்களுக்கும் ஈழத்து முள்வேலிகளில் அடைக்கப்பட்ட தமிழர்களுக்கும் சற்றும் சமரசம் இன்றிக் குரல் கொடுப்பவர். மூன்று தமிழர்களின் உயிர் காக்க மரண தண்டனை எதிர்ப்புப் பிரசாரப் பயணத்தில் இருந்தவரைச் சந்தித்தேன். ”நீங்கள் பெரியார் கொள்கைகள்பால் எப்படி ஈர்க்கப்பட்டீர்கள்?” ”கொளத்தூர் நிர்மலா உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது, புலவர் வ.வேணுகோபால் என்ற தமிழ் ஆசிரியர்தான் எனக்கு முதன்முதலில் பகுத்தறிவுச் சிந்தனைகளை அறிமுகப்…
-
- 2 replies
- 2.2k views
-
-
புலம்பெயர் தமிழர்கள் நினைத்தால் ஈழத்தமிழர்கள் ராஜ வாழ்க்கை வாழலாம் - செல்வம் அடைக்கலநாதன் http://www.adaderana.lk/tamil/opinion_alindaya.php?nid=2676
-
- 7 replies
- 2.2k views
-
-
விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானிய தடைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று Bharati October 21, 2020விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானிய தடைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று2020-10-21T04:55:40+05:30 FacebookTwitterMore விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அசராங்கத்தினால் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை வெளிவருகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானிய நேரம் காலை 10:30 வழங்கப்பட இருக்கின்ற இர்தீர்ப்பு தொடர்பில், பிரித்தானியா நேரம் மாலை 4:15 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஊடக சந்திப்பொன்றினை நடத்த இருக்கின்றது. இந்த வழக்கானது திறந்த சாட்சியங்…
-
- 16 replies
- 2.2k views
-
-
மறைந்த எங்கள் தோழர் முத்துகுமாருக்கு நடக்கின்ற இந்த வீரவணக்கப் பொதுக்கூட்டத்திற்கு வந்து மேடையிலும் எதிரிலும் அமர்ந்திருக்கின்ற தமிழர்களே, அனைவருக்கும் வணக்கம். இன்று ஈழத்தில் நம்முடைய இன சொந்தங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில், அதற்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ நாடாக ஏற்றுக்கொண்டிருக்கின்ற இந்திய நாடு உதவிக்கொண்டிருக்கின்ற வேளையில், பல்வேறு சிக்கல்களைப் பற்றி கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்காக இந்த மேடையில் அமர்ந்திருக்கின்றோம், உரையாடிக்கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் நான் ஒரு செய்தியை மட்டும் பேச நினைக்கிறேன். ஈழத்தின் சிக்கல்களைப்பற்றி அடுத்து பேச சீமான் இருக்கிறார். நான் பேச நினைப்பது, இந்த நாட்டில் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கி…
-
- 8 replies
- 2.2k views
-
-
'ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் படைச்சிப்பாய்க்கும், பெண் போராளிக்கும் திருமணம்! - நல்லிணக்கத்தை ஏற்படுத்த இந்த ஏற்பாடாம்!!' சிறிலங்கா ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் 25வது கஜபா படைப்பிரிவில் பணியாற்றி வரும் படைச்சிப்பாய் ஒருவருக்கும், விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளி ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. கல்கமுவவைச் சேர்ந்த சிறிலங்கா படைச்சிப்பாயான 20 வயதுடைய ஈ.எம்.டி.சந்துருவன் மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளியான 18 வயதுடைய சந்திரசேகரன் சர்மிளா ஆகிய இருவருக்குமே இவ்வாறு கிளிநொச்சியில் நேற்று முன்தினம் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பினதிடம் சரணடைந்…
-
- 20 replies
- 2.2k views
-
-
சென்னையில் சிகிச்சைக்குஅனுமதி கிடைக்காமல், இலங்கைக்குத் திரும்பிச் சென்ற பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள்... தற்போது வல்வெட்டித் துறை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 'அவர் இப்போது எப்படி இருக்கிறார்?' என்பதை அறிய, வல்வெட்டித்துறையில் உள்ள நண்பர்களுடன் பேசினோம். 'தமிழ்நாட்டில் படித்த ஒரு மருத்துவர்தான் அவருக்கு சிகிச்சை அளிக்கிறார்' என அவர்கள் சொல்ல... வேகமாக மேலே விசாரித்தோம். பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் பிறந்து வளர்ந்தவர் டாக்டர் மயிலேறும் பெருமாள். 1965-ம் ஆண்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் படித்தவர், 1972-ம் ஆண்டு வரை பயிற்சி மருத்துவராகத் தமிழகத்தில் பணியாற்றி, சொந்த நாட்டுக்குத் திரும்பியவர். தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட பல போராளி…
-
- 1 reply
- 2.2k views
-
-
வர்த்தக மற்றும் கடல்சார் உடன்பாடுகளை வேறு நாடுகளுடன் மேற்கொள்வதன் மூலம் தனது பழைய விரோதியாகிய இந்தியாவினைச் சுற்றி சீனா ஒரு வலையினைப் பின்னி வருகிறது. தந்திரோபாயமான ரீதியில் - கட்டுமானத் திட்டங்களையும் துறைமுக வசதிகளையும் மேம்படுத்தும் செயல் திட்டங்களை, இந்தியாவின் சொந்தக் கடற் பிராந்தியத்தில் சீனா ஏற்படுத்தி வருகின்றது. முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் [bush] நிர்வாகம் ஆட்சியிலிருந்த காலப் பகுதியில் - இந்தியாவினைச் சுற்றி சீனா முன்னெடுக்கும் இவ்வாறான ஒவ்வொரு செயல் திட்டத்தினையும் ஒரு ‘முத்து’ என்றும், சீனா இந்த முத்துக்களைக் கோர்த்து ஒரு மூலோபாய வலைப் பின்னலை ஏற்படுத்த முனைகிறது என்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் விபரித்திருந்தனர். இது பின்னர் சீனாவின் ‘முத்துமாலை’ ம…
-
- 30 replies
- 2.2k views
-
-
மஹிந்தவும் நானும் இணைவோம் ; சம்பந்தன் (க.கமலநாதன்) எமது நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் சம உரிமை கொண்ட ஒரே மக்களாவர் . இந்த நாடு என்றும் பிளவுபடவும் கூடாது. எமது பிரச்சினைகளையும் இலகுவாக தீர்த்துக்கொள்ள முடியும். எனவே அதனை புரிந்துக்கொண்டு முன்னாள் ஜனாதிபதியும் நானும் இணைந்து ஆட்சிபுரிய வேண்டும் என்று விரும்புகின்றேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் வினைச்சொற்கள் விபரித்தல் என்ற தலைப்பில் ஜுலம்பிட்டியே மங்கள தேரரினால் இன்று மேல்மாகாண காலாசார சதுக்கத்தில் இடம்பெற்றது இந்நிழ்வில் விசேட விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு…
-
- 13 replies
- 2.2k views
-
-
அனுராதபுரம் வான்படைத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட எல்லாளன் நடவடிக்கையில் வீரகாவியமான கரும்புலி வீரர்களின் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயகத்தின் விடுதலைக்காய் தம்மை ஆகுதியாக்கிய இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 18 replies
- 2.2k views
-