ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
கனேடிய ஆங்கில ஊடகங்களிற்கு ஆயிரக் கணக்கான தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் மின்னஞ்சல்கள் எமது எதிர்த்தரப்பில் இருந்து வந்து குவிந்த வண்ணம் உள்ளதாம் எங்களது போராட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தும் கொச்சைப் படுத்தியும் ஊடகங்களின் ஆதரவை இல்லாமல் செய்வதுடன் எங்களது போராட்டத்திற்கு எதிராக பயன்படுத்துவதற்காகவும். இது சகல நாடுகளிலும் நடைபெறுவதாகவும் தெரியப்படுகின்றது. இது எமது தருணம் நாம் தான் எமது நிலைப்பாடுகளை உடனடியாக சகல ஊடகங்களிற்கும் தெரியப்படுத்த வேண்டும். உலகெங்கும் உள்ள உறவுகளே இது உங்கள் நாடுகளிலும் நடைபெறுகின்றன உங்களிற்கு தெரியாமலே. உடனே விழிப்படையுங்கள். (இதன் மாற்றங்களடங்கிய ஊடக இணைப்புகளை இன்னொரு இணைப்பில் இணைக்கின்றேன்)
-
- 0 replies
- 2.1k views
-
-
மைசூர் புலி திப்பு சுல்தான் வீரத்திற்கிணையான ஈழத்துப்புலி பிரபாகரன் on 20-07-2009 18:30 Published in : செய்திகள், இலங்கை மைசூர் புலி திப்பு சுல்தானின் வீரத்திற்கிணையானது ஈழத்துப்புலி பிரபாகரனின் வீரம் – கன்னட முற்போக்காளர்கள் - லங்கேஷ் என்ற கன்னடப் பத்திரிக்கையின் சார்பில் ஜெய் ஈழம் என்றத் தலைப்பில் கருத்தரங்கமும், கன்னடப் பத்திரிகையாளர் குமார் ப்ரோடிகட்டி எழுதிய “ஓ ஈழம்” நூல் வெளியீட்டு விழாவும், கர்நாடகத் தலைநகர் பெங்களூரு காந்தி பஜார், கரூர் வைஸ்யா வங்கி பணியாளர் சங்க அரங்கில் 18/07/2009 அன்று மாலை நடைபெற்றது. லங்கேஷ் பத்திரிக்கையின் அதிபர் கவுரி லங்கேஷ் நிகழ்விற்கு தலைமை தாங்கினார். புகழ் பெற்ற கன்னட எழுத்தாளர். முனைவர் பஞ்சகர…
-
- 4 replies
- 2.1k views
-
-
ஈழம்-நாம் என்ன செய்ய வேண்டும்? - தமிழர் ஒருங்கிணைப்பு இன்று (24.05.09) திருச்சிராப்பள்ளியில் தமிழர் ஒருங்கிணைப்பு அமைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ. மணி, தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் தோழர் பெ.மணியரசன். தமிழ்த்தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தோழர் தியாகு ஆகியோர் கலந்து கொண்டனர். ஈழத்தமிழர்கள் உயிரையும். உரிமையையும் காக்க உடனடியாகச் செய்யவேண்டிய பணிகள் பற்றி விவாதித்துப் பின்வரும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் முதல்கட்டமாக 09.06.2009 சென்னையிலும், 10.06.2009 சேலத்திலும் 11.06.2009 ஈரோட்டிலும் ஈழம் - நாம் என்ன செய்ய வேண்டும்? என்ற தலைப்பில் பெருந்திரள்…
-
- 0 replies
- 2.1k views
-
-
நேற்று வியாழனன்று அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின்போது, செனட் சபையை உருவாக்கும் தனது திட்டம் அடங்கிய குறிப்பொன்றை அரசாங்கம் சமர்ப்பித்தது. இச்சபையை உருவாக்குவதற்கு அரசாங்கம் இரு திட்டங்களை முன்வைத்தள்ளது. முதலாவது திட்டத்தின்படி, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 3 பேர் மாகாண சபைகளால் செனட் சபைக்கு தெரிவுசெய்யப்படுவர். இதன்படி 25 மாவட்டங்களிலிருந்தும் 75 பேர் தெரிவாகுவர். ஜனாதிபதி 15 உறுப்பினர்களை நியமிப்பார். இரண்டாவது திட்டத்தின்படி ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் 7 பேர் வீதம் 63 பேர் செனட் சபைக்கு மக்களால் தெரிவு செய்யப்படுவர். ஜனாதிபதி 17 பேரை நியமிப்பார்.ஆனால், இந்நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதி…
-
- 2 replies
- 2.1k views
-
-
யாழ்ப்பாணத்தில் இன்று ஊடக அடக்கு முறை அதிகரித்துள்ளது. சுதந்திரமாக ஒரு பத்திரிகை தனது கருத்தை வெளியிடமுடியாது. ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக நடமாடவும் முடியாத நிலை. இது தான் இந்த அரசு ஏற்படுத்திய ஊடக ஜனநாயகம். இன்று யாழ்ப்பாணத்தின் உண்மை நிலையை அறிய முடியாது. ஒரு பத்திரிகை உண்மைகளை வெளியிட்டால், அந்த ஊடகம் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது. ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். எந்தவிதமான பாதுகாப்பும் இல்லை. இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வெகுஜன தொடர்பு அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் அங்கே கூறியதாவது: ஊடகவ…
-
- 0 replies
- 2.1k views
-
-
இந்தியாவின் வழியில் பல நாடுகள் நிலைப்பாட்டை மாற்றின: ஜெனீவாவில் இலங்கை அதிகாரிகள் திணறல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பிரேரணை விவகாரத்தில் லத்தின் அமெரிக்க மற்றும் ஆபிரிக்க நாடுகள் பல, இந்தியாவின் வழியில் தமது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளன. இதனால் இப்பிரேரணையை தோற்கடிப்பதற்கு போதிய வாக்குகளைப் பெற்றுக்கொள்வதில் இலங்கை தூதுக்குழுவினர் தடுமாறுவதாக தெரியவருகிறது. இலங்கைத் தமிழர்களுக்கு சமத்துவம், கௌரம், நீதி, சுயமரியாதை ஆகியவற்றின் அடிப்படையிலான எதிர்காலம் கிடைக்கவேண்டுமென்ற இந்தியாவின் நோக்கத்தை இப்பிரேரணை கொண்டிருந்தால் இப்பிரேணைக்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்கும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க கடந்த திங்கட்கிழமை அறிவித்…
-
- 8 replies
- 2.1k views
-
-
கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவியை இந்த முறை தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்டுக் கொடுக்காது என்று தெரிவிக்கப்படுகிறது.கூட்டமைப்பின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 20ம் திகதி கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன இணைந்து, கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்கவுள்ளன. இதன் போது 11 உறுப்பினர்களை கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பே அங்கு முதலமைச்சர் பதவியை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் இடம்பெற்றிருந்த போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுப்பதாக அறிவித்தும், முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்புடன் இணையாது அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கத…
-
- 33 replies
- 2.1k views
-
-
“தமிழர்கள் அழுக்கானவர்கள்”: அமெரிக்கத் தூதரின் கருத்தினால் சர்ச்சை [ சனிக்கிழமை, 13 ஓகஸ்ட் 2011, 11:58 GMT ] [ அ.எழிலரசன் ] இந்தியாவுக்கான அமெரிக்கத் துணைத்தூதுவர் தமிழர்கள் கறுப்பானவர்கள் அழுக்கானவர்கள் என்று தெரிவித்த கருத்துக்கு அமெரிக்கத் தூதரகம் வருத்தம் வெளியிட்டுள்ளது. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நேற்று உரையாற்றிய அமெரிக்கத் துணைத்தூதுவர் மொறீன் சாவோ, 20 ஆண்டுகளுக்கு முன்னர் தான் கல்வி கற்றுக் கொண்டிருந்த போது கலாசாரம் மற்றும் மொழி பற்றி அறிந்து கொள்ள இந்தியாவுக்கு வந்ததாக கூறியிருந்தார். டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு தொடருந்து மூலம் 24 மணி நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டதாகவும், ஆனால் 72 மணிநேரம் கடந்தும் அந்தத் த…
-
- 10 replies
- 2.1k views
-
-
(3 ஆம் இணைப்பு) மூதூர் இறங்குதுறையை கைப்பற்றும் முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிப்பு [வியாழக்கிழமை, 3 ஓகஸ்ட் 2006, 17:21 ஈழம்] [திருமலை நிருபர்] திருகோணமலை மூதூர் இறங்குதுறையை கைப்பற்றுவதற்கு சிறிலங்காப் படையினர் இன்று வியாழக்கிழமை மேற்கொண்ட முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் மூதூர் இறங்குதுறை தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது. பல படகுகளில் படையினர் மூதூர் இறங்குதுறையில் தரையிறங்கி அதனைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். அந்தப்படகுகள் விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டு படையினருடனேயே மூழ்கடிக்கப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பலத்த தாக்குதல்கள் மூலம் படையி…
-
- 7 replies
- 2.1k views
-
-
விடுதலைப் புலிகள் தமது உலங்கு வானூர்திகள் ஏவுகணைகொண்டு தாக்கியதாக ஏன் இலங்கை அரசு பிரச்சாரத்தை மேற்கொண்டது. ? வணக்கம் இது செய்தியல்ல . தமிழ்வின் ஆசிரியரின் கருத்து . கண்டிப்பாக படியுங்கள் . கட்டாயம் படியுங்கள் .இது என் தாழ்மையான வேண்டுகோள் http://www.athirvu.com/target_news.php?sub...amp;ucat=3& நன்றி தமிழ்வின்
-
- 3 replies
- 2.1k views
-
-
முன்னாள் ரெலோ பொபி பிரிவின் தலைவர் பொபி மரணம். ரொலோ அமைப்பின் முன்னாள் முக்கிய உறுப்பினரான பொபி காலமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 85, 86 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ரொலோ அமைப்பில் பாரிய பிளவு ஏற்பட்டவேளை தாஸ் (தாஸன்)தலைமையிலான குழுவும், பொபி தலைமையிலான குழுவுமாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் வாழ்ந்துவந்த பொபி சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் நல்லூரைச்சேர்ந்த பொபி, 80 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ரொலோ இயக்கத்தில் இணைந்து, சாவகச்சேரி தாக்குதல் உற்பட பல்வேறு பட்ட தாக்குதல்களிலும் முன்னின்று செயற்பட்டவராவார். 85 ஆம் அண்டுகாலப்பகுதியில் எற்பட்ட பிளவுகளை அடுத்து ரொலோ அமைப்பின் இராணுவத்துறை தலைவராக இருந்த தாஸ் உற்பட அவரது கு…
-
- 3 replies
- 2.1k views
-
-
பொறுப்பு! இலங்கையில் மறுபடியும் அறிவிக்கப்படாத போர் நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவிற்கு வந்திருப்பது தமிழகத்தில் உள்ள பல கட்சிகளிடம் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. விதவிதமான எதிர்ப்புகள். டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது ஒரு கட்சி. அங்கேயே உண்ணாவிரதம் இருந்திருக்கிறது இன்னொரு கட்சி. இங்கும் உண்ணாவிரதம் முதல் கறுப்புக்கொடி ஏற்றுவது வரை நடந்திருக்கின்றன. ராஜபக்சே கலந்துகொண்ட மாநாட்டினை தமிழக மேயர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். ‘தனி ஈழம்தான் தீர்வு’ என்று விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள நிலையில், இந்திய அரசிடமிருந்து எதையோ எதிர்பார்க்கும் நோக்கம் இலங்கை அதிபரின் வருகைக்குப் பின்னிருக்கலாம். இலங்…
-
- 5 replies
- 2.1k views
-
-
அமெரிக்கப் பிரஜையான பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தவறான நடவடிக்கைகளிலீடுபட்டு வருகிறார். அவரது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு அமைச்சினைப் பயன்படுத்தி அரசாங்கத்தின் கொலைப் பட்டியலிலுள்ளவர்களின் தகவல்களைத் திரட்டி வருகிறாரென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்தார். நேற்று (11.01.2009) இடம்பெற்ற பத்திரிகையாளர் மகாநாடொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், பாராளுமன்ற உறுப்பினர்களான பரராஐசிங்கம், ரவிராஜ், ஜானக பெரேரா உட்பட பலரின் படுகொலைகள், மிஹின்எயார் மற்றும் யுத்த விமானக் கொள்வனவு உட்பட இந்த அ…
-
- 0 replies
- 2.1k views
-
-
கஸ்ரோவின் கணணியில் இருந்து புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டதாக அரசு கூறினாலும், முழுமையான தகவல்களை கே.பியே வழங்கியிருந்தார். சிறீலங்காவில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளில் புலம்பெயர் தமிழ் மக்கள் இணைந்து கொள்ள வேண்டும் என கே.பி அழைப்பு விடுத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்று சில தமிழர்கள் சென்றிருந்தனர். ஆனால் அனைத்துலகத்தில் உள்ள கஸ்ரோவின் உறுப்பினர்கள் கே.பியின் இந்த திட்டத்தை முறியடித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த கே.பி புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களின் விபரங்களை அரசுக்கு தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகமான டெய்லி மிரர் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறீலங்காவின…
-
- 20 replies
- 2.1k views
-
-
35 000 மேல் மக்கள் கொலை; இராசயனங்கள் கொண்டு உடலங்களை எரிக்கும் ராணுவம்; உடனடியாக ஐநாவை இதனை செய்மதி படம் எடுக்க வேண்டுகோள் விடுங்கள்.அல்லது இனம் இருந்த அடையாளமும் இல்லது போய்விடும் The real culprits behind Sri Lankan war; more than 50,000 killed In Sri Lanka, no access to carnage until victory speech, UN lowers expectations
-
- 1 reply
- 2.1k views
-
-
நேசக்கரம் ஆதரவில் நேசம் உணவு உற்பத்தி ஆரம்ப நிகழ்வு நேசக்கரம் ஆதரவில் நேசம் உணவு உற்பத்தி நிறுவனம் திறப்பு விழாவும் உணவு உற்பத்தியும் 09.06.2012 அன்று மட்டக்களப்பு விஸ்ணுகோவில் வீதி வந்தாறுமூலை நேசம் நிறுவன அலுவலகத்தில் இடம்பெற்றது. நேசம் உற்பத்தியின் முதற்கட்ட உற்பத்தியாக உலர் உணவாக மிக்சர் உற்பத்தி ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வில் கணேஸ்வித்தியாலய அதிபர் உட்பட கல்விமான்கள் சமூக ஆர்வலர்கள் விளையாட்டுக்கழகத்தினர் , மற்றும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தைச் சேர்ந்த மேற்பார்வை பொதுச்சுகாதார பரசோதகர் அதிகாரி உட்பட பணியாளர்களும் நேசம் உற்பத்தி பணியாளர்களும் கலந்து நிகழ்வைச் சிறப்பித்தனர். உற்பத்தி பாவனைக்கான அன்பளிப்புக்களான றைஸ்குக்கர் , பாத்திரங்கள் …
-
- 26 replies
- 2.1k views
-
-
பின்வரும் முகவரிகளில் நேரடி ஒளிபரப்பினைப் பார்வையிடலாம் TVI – canada Eurotv - Europe
-
- 7 replies
- 2.1k views
-
-
பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டு தமிழர்களின் முற்றுகைக்குள் சிக்கி முக்கி முழித்துக்கிடக்கும் மகிந்த அவர்கள் தங்கியுள்ள விடுதிக்கு முன்பாக தற்போது பிரித்தானிய மக்கள் உட்பட பல ஆயிரம் ஜரோப்பிய மக்களும் இணைந்து மகிந்தவுக்கு எதிரான தமது போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக ஈழதேசம் அறிகிறது. குறிப்பிட்ட ஆர்ப்பாட்டம் இன்று மாலை பிரித்தானிய நேரம் 4 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடும் குளிர் மற்றும் பணி மழையின் மத்தியிலும் பல ஆயிரம் மக்கள் பங்கு கொண்டு மகிந்தவிற்கு எதிரான தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக நாம் அறிகிறோம். நன்றி: http://eeladhesam.com
-
- 4 replies
- 2.1k views
-
-
யாழ் மக்களே சிந்தித்துச் செயற்படுங்கள் - எல்லாளன் படை யாழ் குடாநாட்டு மக்களே! உங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். தனித் தமிழீழத்துக்கான போராட்டமானது தனது இறுதியான பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதை தாங்கள் அறிவீர்கள். இப் போராட்டத்திற்காக இரண்டு தசாப்த காலங்களாக போராளிகளும் மக்களும் உயிரை துச்சமென மதித்து போராடிக் கொண்டிருக்கும் இவ் வேளையில் போராட்டத்தின் நியாயமான கோட்பாட்டினால் போராட்டமானது இன்று உலகளாவிய ரீதியில் ஒருபரிணாம வளர்ச்சி அடைந்து வந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். அதனைப் பொறுக்காத மகிந்த அரசு தனது தோல்வியையும் எமது மக்கள் படுகொலை செய்யப்படுவதையும் சர்வதேசத்திடம் இருந்து மறைப்பதற்காக அதனுடன் ஒட்டுண்ணி போல் ஒட்டி வாழும் ஒட்டுக் குழுக்கள் மூலமும் துரோ…
-
- 1 reply
- 2.1k views
-
-
ஐந்து வருடத்தின் பின்னர்தான் எங்களை விடுவாங்களாம் என்று இஞ்ச முகாமில கதைக்கிறாங்கள். உங்க என்னெண்டு கதைக்கிறாங்கள்? ஏதாவது தகவல் எங்களைப்பற்றி சொல்லுறாங்களா? வெளி நாட்டில இருக்கிற எங்கட அமைப்புக்கள், சனங்கள் எங்களைப்பற்றி ஏதாவது கதைக்கிறார்களா? கிளி நொச்சியில் இருந்து ஒரு போராளியின் துணைவியார் இவ்வாறு கேட்டார். வெள்ளி கிழமை இந்த பெண் தனது துணைவரை பார்ப்பதற்காக வவுனியாவிற்கு சென்றார். அங்கு தனது துணைவனான ......... என்ற போராளி மேற்கண்டவாறு தனது மனைவியிடம் கூறி இருக்கின்றார். அவர் மேலும் விவரித்தார்.. நான் முகாமிற்கு இவர பார்க்க போனனான் இங்க கிளிநொச்சியிலதான் இருக்கிறம். தகரம் தந்தவங்கள் நிவாரண காசிற்கு கடிதம் தந்திருகின்றாங்கள் ஆனால் காசு இப்போதைக்கு இல்லையாம் என்…
-
- 27 replies
- 2.1k views
-
-
தமிழர் பகுதிகளுக்கு விரைவில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் - இந்தியா நம்புகிறது? [ செவ்வாய்க்கிழமை, 22 சனவரி 2013, 16:18 GMT ] [ அ.எழிலரசன் ] சமத்துவமான, நீதியான, கௌரவமான தீர்வு ஒன்றை எட்டுவதற்கு தமிழர்தரப்புடன் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் தமிழர் பகுதிகளுக்கு அர்த்தமுள்ள அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இந்தியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. புதுடெல்லியில் இன்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித்துடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். புதுடெல்லியில் இன…
-
- 40 replies
- 2.1k views
-
-
சோழர்காலத்தில் கட்டப்பட்ட உருத்திரபுரீஸ்வரர் சிவாலயக் காணியிலும் தொல்பொருட்களாம் !! கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயம் அமைந்துள்ள காணியில் தொல்பொருட்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தியுள்ளது. இந்துக்களின் பொற்காலமாகக் கருதப்படும் சோழர்காலத்தில் முற்றுமுழுதாக திராவிடக் கட்டடக் கலைமரபை பின்பற்றி உருத்திரபுரீஸ்வரர் சிவாலயம் கட்டப்பட்டது. வரலாற்றுத் தொன்மையும், பழமையும் வாய்ந்த சிவாலயத்தை அபகரிப்பதற்கான முயற்சிகள் தொல்பொருளியல் திணைக்களத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உருத்திரபுரஸ்வரபுரம் ஆலயம் அமைந்துள்ள காணியில் புராதன தொல்லியல் சின்னங்கள் அமைந்துள்ளதாக தொல்லியல் திணைக்களம் கூறியுள்ள…
-
- 41 replies
- 2.1k views
- 1 follower
-
-
இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் முஸ்லிம்களின் கருத்தொருமைப்பாடின்றி எந்தவொரு இறுதித் தீர்மானத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளாது என்று கூட்டமைப்பின் தலைவர்இரா.சம்பந்தன், முஸ்லிம் காங்கிரஸிடம் உறுதியளித்துள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுகளின் விவரங்களைப் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் விளக்கிக் கூறினார். அரசுடனான கடந்த சில சந்திப்புகளின்போது இனப்பிரச்சினைத் தீர்வு சம்பந்தமான அதிமுக்கிய விடயங்களான பொல…
-
- 1 reply
- 2.1k views
-
-
ஒரே சீனா என்ற கொள்கைக்கே ஆதரவு தாய்வானின் சுதந்திரத்தை ஏற்கமுடியாது அரசாங்கம் உறுதியாக தெரிவிப்பு வீரகேசரி இணையம் - ஒரே சீனா என்ற கோட்பாட்டுக்கே இலங்கை முழுமையான ஆதரவளிக்கும். சீனாவிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கும், சர்வதேச, பிராந்திய ஒன்றியங்களில் இணைவதற்கும் தாய்வான் எடுக்கும் சகல முயற்சிகளையும் கடுமையாக எதிர்ப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது, சீனாவிடம் இருந்து பிரிந்து சுதந்திரம் பெறுதல், ஐக்கிய நாடுகள் சபையில் தாய்வான் என்ற பெயரில் இணைதல் என்பவற்றுக்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்த தாய்வான் திட்டமிட்டிருப்பது மிகுந்த கவலையை அளிக்கின்றது. இலங்கை அரசாங்கம் ஒரே சீனா என்ற கொள்கைக்கே ஆதரவளிக்க…
-
- 11 replies
- 2.1k views
-
-
இலங்கைச் சிறைச்சாலையில் இன்னும் சித்திரவதைகள் இடம்பெறுவதாகவும், அங்கே காரணம் இன்றி பல ஆயிரக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. பத்திரிக்கைச் சுதந்திரம் இல்லை, மற்றும் 1973ம் ஆண்டு முதல் இலங்கை அவசரகால சட்டத்தின் கீழ் இயங்கிவருவதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளதோடு, இது தொடர்பாக அறிக்கை ஒன்றை தயாரித்து காணொளியாக வெளியிட்டுள்ளது. இத் தகவல்கள் காரணமாக சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கலாம் என ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். http://www.manithan.com/index.php?subaction=showfull&id=1299736716&archive=&start_from=&ucat=1&
-
- 3 replies
- 2.1k views
-