ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143537 topics in this forum
-
வன்னியில் இறுதிகட்ட யுத்தம் இடம்பெற்றதன் பின்னர் தொடர்சியாக எடுக்கப்பட்ட செய்மதி படங்கள் மூலம் பாரிய மனித புதைகுழிகள் இருப்பதற்கான சாட்சியங்கள் உள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை இன்று தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையானது அரசாங்கம் பாரிய ஆயுதங்களை பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தவில்லை என்பதற்கு சவாலாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித புதைகுழிகளும் மோட்டார் எறிகனை தளங்களும் மக்கள் தங்கியிருந்த இடங்களுக்கு அருகில் காணப்படுகின்றமையே இந்த செய்மதி படங்கள் காட்டுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. செய்மதி படங்களின் படி மூன்று பாரிய புதைகுழிகளும் அதனை தவிர மொத்தமாக ஆயிரத்து 346 மனித புதைகுழிகளும் காணப்படுவதாக மன்னப்புச் சபை தெரிவித்துள்ளது. …
-
- 14 replies
- 2k views
-
-
தமிழ்மக்களின் உண்மையான விடுதலைக்காக செயற்படுகின்ற அமைப்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியை தேர்ந்தெடுத்ததாக விடுதலைப்புலிகள் அமைப்பில் முன்னர் செயற்பட்ட செல்வி கோகுலவாணி தமிழ்க்குரல் அவுஸ்திரேலிய வானொலிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். புலத்துவாழ் தமிழர்களிடம் எதிர்பார்ப்பது என்ன? தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உண்மையில் என்ன செய்கின்றது? வித்தியாதரன் மேற்கொள்கின்ற சதித்திட்டங்கள் என்ன என்பது பற்றி இந்நேர்காணலில் கோகுலவாணி விபரித்துள்ளார். அவரது முழுமையான வானொலி நேர்காணல்: http://tamilleader.com/?p=50148
-
- 2 replies
- 2k views
-
-
கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் விஞ்ஞானப்பிரிவில் கல்வி பயிலும் நடராஜா சஞ்ஜீவநாத் என்ற மாணவன் சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் கார் ஒன்றைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். திருக்கோவிலைச் சேர்ந்த இம்மாணவன் புதிய கண்டுபிடிப்புகளை கண்டு பிடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் சூரிய சக்தியில் இயங்கும் இம் மோட்டார் கார் கண்டு பிடித்ததன் மூலம் தமது கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் வீ.பிரபாகரன் தெரிவித்தார். சூழலில் கிடைக்கும் கழிவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த மோட்டார் காரினை தயாரிக்க 22,000 ரூபா செலவு மட்டுமே ஏற்பட்டுள்ளது.இதில் இரண்டு பேர் செல்ல முடியும். அத்தோடு அங்கவீனமானவ…
-
- 6 replies
- 2k views
-
-
அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு மீணடும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை மாலை 125.65 ரூபாவாக இருந்த ஒரு டொலரின் மதிப்பு நேற்று 128 ரூபாவாக அதிகரித்தது. சிறிலங்கா ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்து, இன்று முற்பகல் ஒரு அமெரிக்க டொலர் 130 ரூபாவாக விற்கப்பட்டது. கடந்த மார்ச் 19ம் நாள் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடுமையான வீழ்ச்சியடைந்து, அமெரிக்க டொலர் ஒன்று 131.60 ரூபாவாக விற்கப்பட்டது. இதையடுத்து சிறிலங்கா அரசாங்கம் நாணய மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்க முனைந்தது. இந்தநிலையில் கடந்தவாரம் டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு 125 ஆக உயர்ந்தது. எனினும் இந்தவாரம் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வர…
-
- 17 replies
- 2k views
-
-
திங்கள் 09-04-2007 18:09 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஆகக்குறைந்தது வெப்பத்தை நாடிச்சென்று தாக்கும் ஏவுகணைகளையாவது வாங்கி அனுப்புங்கள் - மேஜர் ஜெனரல் சந்திரசிறீ யாழ் குடாநாட்டில் உள்ள முக்கிய இராணுவ மையங்களில் கனரக விமான எதிர்ப்பு ஆயுதங்களை விரைவாகப் பொருத்திய சிறீலங்காப் படையினர் தற்பொழுது அவசர அவசரமாக விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கி அனுப்புமாறு கொழும்பில் அமைந்துள்ள இராணுவத் தலைமைப் பீடத்திற்கு அவசர செய்தியை அனுப்பியுள்ளனர். இதுகுறித்து கொழும்பு இராணுவ பீடத்திற்கு செய்தியை அனுப்பியுள்ள யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ வல்லைப்பாலம், குடத்தனை, எழுதுமட்டுவாள், நாவற்குளம், கெற்பெலி, வரணி, கிளாலி, பலாலி, காரைநகர், காங்கேசந்துறை போன்ற தளங்களுக்…
-
- 2 replies
- 2k views
-
-
சுமந்திரனுக்கு வடமாகாணசபை செருப்படி ‘புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு புலிகளுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு வேலை செய்திருக்கவில்லை. புலிகளுடன் எவ்வித கூட்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடையாது. புலிகளின் கொள்கைகளையும் ஏற்கவில்லை. தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழர் உரிமைக்காகப் பாடுபடுகின்றது. அதற்காக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவோ ஆதரிக்கவோ இல்லை. புலிகள் மீண்டும் ஒன்று திரள்வார்கள். இலங்கைளில் மீண்டும் பயங்கரவாதம் புலி வருகை என்பது உண்மைக்கு புறம்பானது அப்படி ஒரு நிலை வந்தாலும் மக்கள் அவர்களை ஆதரிக்கவோ அனுமதிக்கவோ மாட்டார்கள்.’ இது இரா.சம்பந்தன் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இறக்குமதி செய்யப்பட்ட சட்டத்தரணி ம.அ. சுமந்திரன் அவர…
-
- 1 reply
- 2k views
-
-
கொழும்புத்துறை கரையோரப் பகுதிகளில் நேற்றிரவு 20 நிமிட நேரமாக மோதல் மக்கள் பலரும் இடம்பெயர்வு [Wednesday February 13 2008 08:11:06 AM GMT] [யாழ் வாணன்] கொழும்புத்துறை மற்றும் துண்டி கடற்கரையோரப் பகுதிகளில் நேற்றிரவு 8.30 மணி முதல் சுமார் 20 நிமிடங்களாக கடும் மோதல் இடம்பெற்றது. பல்குழல் ஷெல் தாக்குதல் மற்றும் சர மாரியான தொடர் துப்பாக்கி வேட்டுச் சத் தங்களால் நகரப்பகுதி அதிர்ந்த வண்ணம் இருந்தது. எதிர் எதிரே துப்பாக்கிச் சூட்டு மோதல் கள் நடைபெறுவதுபோன்று மிக அண் மித்ததாக நகரப் பகுதியில் இடைவிடாது சத்தங்கள் கேட்டவண்ணம் இருந்தன. அவை ஓய்வதற்கு சுமார் 20 நிமிடங்கள் சென்றன. கடற்கரையோரத்துக்கு அப்பால் விடு தலைப் புலிகளின் நடமாட்டம் காணப்…
-
- 0 replies
- 2k views
-
-
வடக்கில் முடங்கியது போக்குவரத்து!! வடக்கில் முடங்கியது போக்குவரத்து!! வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் இன்று திங்கட்கிழமை தொடக்கம் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர். தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதுவிடின் போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர். இது தொடர்பில் வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் பொதுச் செயலர் அருளானந்தம் மேலும் தெரிவித்ததாவது; வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தனித்துவத்தை இல்லாதொழிக்கும் முதலமைச்சரின் நடவடிக…
-
- 28 replies
- 2k views
-
-
அமைச்சர் பதவி பெறுவது குறித்து நான் சொன்னது என்ன? சுமந்திரன் பேட்டி July 25, 2020 “பொதுத் தேர்தலின் பின்னர் ஆட்சி அமைக்கக்கூடிய அரசுடன் பேரம் பேசுவதற்கன தந்திரோபாயங்கள் எல்லாவற்றையும் முன்கூட்டியே பொது வெளியில் சொல்ல முடியாது. ஆனால் 2/3 பெரும்பான்மையை தேடி நிற்கிற அரசோடு பேரம் பேசுவதற்கான சந்தர்ப்பங்கள் நிச்சயமாக வரும்” எனக் கூறுகின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். அண்மைக்காலத்தில் சர்ச்சைக்குள்ளாக்கப்படும் பல்வேறு விடயங்கள் குறித்தும் தினக்குரலுக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலிலேயே சுமந்திரன் இதனைத் தெரிவித்தார். அவரது நேர்காணலின் விபரம் வருமாறு; கேள்வி: “பாராளுமன்றத்தில் பலமாக இருந்தால்தான் முக்கியமான அமைச்சுப் பத…
-
- 14 replies
- 2k views
-
-
http://www.tamilkathir.com/news/1078/75//d,audio.aspx
-
- 0 replies
- 2k views
-
-
""தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிடிபட்டால் அவரைக் கெளரவமாக நடத்த வேண்டும்'' என முதல்வர் கருணாநிதி விடுத்திருக்கும் வேண்டுகோள் விஷமத்தனமானது. தீய உள்நோக்கம் கொண்டது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்திய, சீன, பாகிஸ்தான் நாடுகள் வாரி வழங்கியுள்ள நவீன ஆயுதங்களை ஏந்திப் போராடும் சிங்கள ராணுவத்தை எதிர்த்து வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தை பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் நடத்தி வருகிறார்கள். நமது மக்களைக் காப்பாற்றப் போராடும் புலிகளுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூறவோ அல்லது ஈழத்தமிழர்கள் மீது நச்சு வாயுக் குண்டுகளை வீசி கொடூரமாகக் கொலை செய்யும் சிங்கள வெறியர்களைக் கண்டிப்பதற்கோ இதுவரை முன்வராத கருணாநிதி அவர்களின் முதுகில் குத்துவத…
-
- 7 replies
- 2k views
-
-
நாம் வர்த்தக செய்மதிகளை தவறாக பயன்படுத்தவில்லை: விடுதலைப் புலிகள் அனைத்துலக நாடுகளில் தமது ஒளிபரப்புக்களை நடத்துவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வர்த்தக செய்மதிகளை தவறாக பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டை விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர். 'நாம் சட்டபூர்வமாகவே அவற்றைப் பயன்படுத்துகின்றோம், திருட்டுத்தனமாக அல்ல' என இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் விடுதரலப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசியூடாக தெரிவித்துள்ளார். உலகின் பெரிய வர்த்தக செய்மதி நிறுவனமான இன்ரல்சற்றின் பேச்சாளர் விடுதலைப் புலிகள் தமது ஒரு செய்மதியை தவறாக பயன்படுத்துவதாக நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார். யூரோப் ஸ்ரார் - 1 என்ன…
-
- 2 replies
- 2k views
-
-
-
கொழும்பு புறக்கோட்டையிலுள்ள ஒரு சைவ உணவகத்தில் சாப்பாட்டுத் தட்டில் போடப்படும் “லஞ்ச் சீட்” டுக்கும் இரண்டு ரூபா மேலதிகமாக அறவிடப்படுகிறது. இது எவ்வகையிலும் நியாயமில்லை எனப் பொதுமக்கள் கூறுகின்றனர். தண்ணீர் செலவைக் குறைக்கும் நோக்குடன் சாப்பாட்டுத் தட்டுக்களைக் கழுவாமல் மீண்டும் பரிமாற இந்த “லஞ்ச் சீட்” முறை துணை செய்கிறது. இருப்பினும் இந்த சைவக் கடையில் இது ஒரு மேலதிக கட்டணமாகவே அறவிடப்படுகிறது. மலிவாகச் சாப்பிட தோசைத் கடைக்குச் சென்றால் இப்படி கொள்ளையா? என்றும் மக்கள் கேட்கின்றனர். இதே கடையில் தோசை சாப்பிட்டு விட்டு மூன்று இடியப்பங்கள் கேட்டால் ஐந்து எடுக்குமாறு வெயிட்டர்கள் வலியுறுத்துகின்றனர். ஐந்து இடியப்பத்துக்கே கட்டணமும் அறவிடப்படுறது. இது மற்றும் ஒரு பகல் கொள்ளைய…
-
- 3 replies
- 2k views
-
-
இருவருக்காக தமிழ் காங்கிரஸை துஷ்பிரயோகம் செய்துவிட்டார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசியல் முதிர்ச்சியின்மையின் வெளிப்பாடு; சாடுகிறார் விநாயகமூர்த்தி அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் இன்னும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தே உள்ளது. பெருந்தலைவர் அமரர் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் கொள்கை ரீதியான உறுதிப்பாட்டுடனேயே அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் செயலாற்றி வருகின்றது. இவ்வாறு அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை யாழ்.மாவட்டத்தில் ஆவரங்காலில் நடைபெற்ற தமிழரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடத்தப்பட்ட முதலாவது பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது கூறினார். ஆவரங்கால் சிவன் கோயிலின் அருகில் உள்ள வயல்வெளியில்…
-
- 28 replies
- 2k views
-
-
ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்பு தொடர்பில் சுமந்திரனின் கருத்து ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்பு தொடர்பான தமது கருத்தினை இன்று பாராளுமன்றத்தில் சுமந்திரன் தெரிவித்தபோது, ரஞ்சன் ராமநாயக்கவின் குறித்த வழக்கில் தாமே அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி என்பதை தெரியப்படுத்தியதோடு நேர்மையானதொரு அரசியல்வாதியின் சார்பில் தாம் அவ்வழக்கினை முன்னெடுத்ததில் பெருமையடைவதாயும் தெரிவித்திருந்தார். துரதிஷ்டவசமாக அவர் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு நான்கு வருட கடூழிய தண்டனை விதிக்கப்பட்டது அசாதாரணமானதும் பாரதூரமானதொரு நிகழ்வு என்பதை தெரிவித்திருந்தார். நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக சட்டங்கள் இயற்றப்படாத காரணத்தினால் பாராளுமன்றம் இதற்கு பொறுப்பு க…
-
- 19 replies
- 2k views
-
-
மீண்டும் தாம் பயங்கரவாத இயக்கமென நிரூபித்தது ஐ நா. இன அழிப்பை ஊக்குவிக்கும் ஐ நா, தெற்காசிய நாடுகள், மற்றும் மனித உரிமை மீறல்களில் தேர்ச்சி பெறும் தெற்காசிய நாடுகள் தோற்று நிற்கும் மேற்கத்தியம்...... வரும் நாட்கள் ........... கருத்துக்கள் தேவை
-
- 8 replies
- 2k views
-
-
அரச புலிகளின் குழு இன்று ஒஸ்லோ பயணம் கடைசி செய்தியை சொல்லவே செல்கிறோம் என்கிறார் புலித்தேவன் சர்வதேசத்திற்கு கடைசி செய்தியை எடுத்துச் செல்வதற்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் ஒஸ்லோவுக்கு செல்கின்றனர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்துடன் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியும் அப்பேச்சுக்களில் ஏற்றுக் கொண்ட உறுதிமொழிகள் எதனையும் அரசு நிறைவேற்றவில்லை. நிறைவேற்றுவதற்கான மனநிலையும் அதற்கு இல்லை. இதனை கடைசியாக சர்வதேச சமூகத்திற்கு சொல்வதற்காகவே ஒஸ்லோவுக்கு செல்கிறோம் என்றும் புலித்தேவன் மேலும் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒஸ்லோ பயணம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: …
-
- 7 replies
- 2k views
-
-
விடுதலைப்புலிகளை இலங்கையின் ஆயுதப்படைகள் இராணுவரீதியாக வெற்றி கொண்டதன் பின்னர் தொடருகின்ற வெற்றிவிழாக் கொண்டாட்டங்களின் எழுச்சியின் அபாயம் குறித்து ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் பான் கி-மூன் எச்சரித்திருக்கிறார். பயங்கரவாதம் என்று எதனை மக்கள் கிரகித்துக்கொண்டு அதனைப் பொறுத்துக் கொண்டிருந்தார்களோ, அச் செயல்கள் நிறைவு பெற்றதனால் அடைந்த நிம்மதியின் வெளிப்பாடாக, “பயங்கரவாதத்தின் முடிவு” என்பதனை அவர்கள் கொண்டாடக் கூடும். அதேவேளையில், ராஜபக்ஸ அரசு இந்த வெற்றியினூடாக அதன் அரசியல் பயணத்தில் பெரிய விளைவுகளைப் பெற்றுக் கொள்கிறது. எனவே தன்னை இன்னும் பிரபலப்படுத்துவதற்காக வெற்றியின் உற்சாகம் தரும் மெல்லிய புறத்தோற்றத்தை சடுதியாகப் போர்த்திக் கொள்கிறது. அதேச…
-
- 2 replies
- 2k views
-
-
ஐங்கரநேசன், குருகுலராசாவை பதவி நீக்குங்கள்! பரிந்துரைத்தது முதலமைச்சர் நியமித்த விசாரணைக் குழு வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு தனது அறிக்கையில் இரு அமைச்சர்கள் பதவி விலகவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா குருகுலராசா மற்றும் விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, கூட்டுறவு மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோரையே பதவி விலகவேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது. அனேகமாக நாளை செவ்வாய்க் கிழமை நடைபெற இர…
-
- 10 replies
- 2k views
-
-
யாழ்.குடா நாட்டில் பெண்கள் இரவு 12 மணிக்கும் சுதந்திரமாக நடமாடும் காலம் வரும் வரையில் எனது நடவடிக்கைகள் தொடரும்- நீதிபதி இளஞ்செழியன் (பாறுக் ஷிஹான்) யாழ்.மாவட்டத்தில் சட்ட ஒழுங்குக்கு கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயம் உருவாக வேண்டும். அந்த கட்டமைப்பை உருவாக்குவதற்கு தான் இங்குள்ள நீதிக்கட்டமைப்பு மற்றும் பொலிஸ் கட்டமைப்பு இயங்கி வருகின்றன. குற்றம் செய்பவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்குவதன் மூலமே தவறான வழியில் சென்று கொண்டிருக்கும் சமூகம் ஒன்றிணைந் திருத்த முடியும் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்தார். சமூக சே…
-
- 30 replies
- 2k views
-
-
ஐபிசிக்கு எதிராக அம்பிகா சற்குணநாதன் கோரிக்கை கடிதம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தமது சட்ட பிரதிநிதி சட்டத்தரணி லக்ஸிகா பக்மிவெவ ஊடாக லிபாரா மொபைல் இணை-ஸ்தாபகர் பாஸ்கரன் கந்தையாவுக்குச் சொந்தமான இலண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் தொலைகாட்சி வலையமைப்பான IBC தமிழுக்கு கோரிக்கைக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். தமது நற்பெயருக்கு தீங்கு, மற்றும் அவதூறு விளைவிக்கும் இழிவான முறையில் தாம் காட்சிப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டு, ஜுலை மாதம் ஒளிபரப்பான அரசியல் தொலைகாட்சி நிகழ்ச்சி சார்ந்து சற்குணநாதன் அவர்கள் இந்த கோரிக்கைக் கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளார். அரசியல் நையாண்டியில் ஈடுபடுவதற்கான உரிமையை ஏற்றுக்கொள…
-
- 15 replies
- 2k views
-
-
ஐ.நா அறிக்கையை வெளியிடாது தடுக்க இந்தியா துணைபோகின்றதா? - தஞ்சை பல்கலைக்கழக பேராசிரியர் கேள்வி! சிறிலங்கா அரசாங்கத்தின் போர்க்குற்றங்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை வெளியிடவிடாமல் தடுக்க இந்தியா துணைபோவதாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் தொ.பரமசிவம் குற்றம் சுமத்தியுள்ளார். சிறிலங்கா அரசாங்கத்தால் வன்னியில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை நடவடிக்கைக்கு இந்தியாவும் முணை நின்றதால், ஈழத்தமி;ழ் மக்களிடம் மத்திய அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்துள்ளதாவது: 'இலங்கைத் தமிழர் இனப்படுகொலை குறித்து ஐ.நா தயார் செய்துள்ள அறிக்கையை வெளியிட க…
-
- 3 replies
- 2k views
- 1 follower
-
-
எதிர்வரும் 2 தொடக்கம் 3 ஆண்டுகளுக்குள் சிறிலங்காவிற்கு வழங்கப்படும் அபிவிருத்திக்கான உதவிகளை நிறுத்துவதற்கு சுவீடன் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது சரிந்து போயுள்ள சிறிலங்காவின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை உண்டு பண்ணலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் வாசிக்க
-
- 2 replies
- 2k views
-
-
மகிழ்ச்சியில் கொண்டாடித் திளைக்கிறது தென்னி லங்கை. தெற்கு எங்கும் வெற்றிக் களிப்பு. பேருவகை ஆரவாரம். எதிரி தேசத்தை அடியோடு வீழ்த்திய சந் தோஷம். சிறுபான்மையினரான தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கிவிட்ட பெருமிதத்தில் வெடிக்க வைக்கப்படும் பட்டாசுகளால் தலைநகரம் அதிர்கின்றது. இனி என்ன என்பதுதான் இப்போதைய கேள்வி. சர்வதேசம் கைவிட்டுவிட்டது. "தொப்புள் கொடி"உறவுகளும் எதிர்பார்த்ததைச் செய்யவில்லை. அல்லது செய்ய முடியாமல் போயிற்று. இனி, அடக்குமுறைக் குள் நசிந்து கிடப்பதுதான் வாழ்வு என்றாகி விடும் என்ற அவநம்பிக்கையின் எல்லையில் தமிழினம். "தர்மத்தின் வாழ்வு தன்னை ‹து கவ்வும். எனினும் தர்மம் ஒரு நாள் வெல்லும்." என்பதுதான் மானுடத் தின் அசையாத நம்பிக்கை. இன்று நிலைமை என்…
-
- 0 replies
- 2k views
-