ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
படைத்துறை வியூகங்களை முறியடிக்கும் உத்திகள் -அருஸ் (வேல்ஸ்)- கடந்த ஆண்டு மியான்மாரில் நடைபெற்ற அரசியல் போராட்டங்களையும், அதனை அடக்கிய இராணுவ ஆட்சியாளர்களின் வன்முறைகளையும் தொடர்ந்து அனைத்துலக சமூகம் மியான்மார் அரசின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முயன்று வந்தன. அதன் முதற்கட்டமாக மியான்மார் நாட்டிற்கான படைத்துறை விநியோகங்களை நிறுத்திக் கொள்வது என்பது அவர்களின் தீர்மானமாக இருந்தது. மியான்மாருக்கான பிரதான ஆயுத விநியோகஸ்தராக சீனாவே இருக்கின்ற போதும் இராணுவ அரசின் மீது தமது செல்வாக்கை செலுத்தும் நோக்குடன் ஏனைய ஆசிய நாடுகளும் மியான்மாருக்கான ஆயுத மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருவதுண்டு. அவற்றில் இந்தியாவும் பிரதான பங்கு வகிக்கின்றது. எனினும் கடந்த வருடம் ம…
-
- 2 replies
- 1.9k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">
-
- 5 replies
- 1.9k views
-
-
தயா மாஸ்டருக்கு பாதுகாப்பு வழங்கிய அரசாங்கம் வெளிநாட்டு இராஜதந்திரிக்கு வழங்காதது ஏன்? * ஐ.தே.க. எம்.பி. கயன்த கருணாதிலக கேள்வி விடுதலைப் புலிகளின் "தயா மாஸ்டரை" கொழும்பு அப்பலோ வைத்தியசாலைக்கு கொண்டு வரும்போது பலத்த பாதுகாப்பை வழங்கிய அரசாங்கம், இந்நாட்டிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு உயர் பாதுகாப்பை வழங்காது மட்டக்களப்பிற்கு அழைத்துச் சென்றமை பிழையான செயலென குற்றம் சாட்டும் ஐ.தே.கட்சியின் எம்.பி.யும் ஊடகப் பேச்சாளருமான கயன்த கருணாதிலக இராஜதந்திரிகள் தாக்குதலுக்குள்ளான சம்பவத்திற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஐ.தே.கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற…
-
- 2 replies
- 1.9k views
-
-
ஞாயிறு 04-11-2007 13:23 மணி தமிழீழம் [செந்தமிழ்] வவுனியாவில் ஐந்து இளைஞர் படுகொலை இன்று காலை வவுனியா தவசிக்குளப் பகுதியில் ஐந்து இளைஞர்களது உடலங்கள் துப்பாக்கüச் சூட்டு வெட்டுக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இவர்களில் நால்வர் இனம் காணப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது. pathivu.com
-
- 2 replies
- 1.9k views
-
-
கண்டி வீதியை வல்வளைக்க முயற்சித்த சிறிலங்கா படையினர் மீது முறியடிப்புத் தாக்குதல்: 45 படையினர் பலி 100 பேர் காயம் [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 12:19 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] பணிக்கன்குளம், கிழவன்குளம், பழைய முறிகண்டி பகுதிகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வு மீது தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதல் நடத்தினர். இதில் 45 படையினர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். படையினரின் உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: கண்டி வீதிக்கு மேற்காக இருந்து கண்டி வீதியை வல்வளைக்கும் நோக்கில் பணிக்கன்குளம், கிழவன்குள…
-
- 3 replies
- 1.9k views
-
-
7 வயது சிறுமியின் வாழ்க்கையை சீரழித்த இராணுவ வீரர் கைது வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் 7 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்தகாரத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தரில் இராணுவ வீரரொருவர் நேற்று (22ம் திகதி) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவத்தனர். நெடுங்கேணி இராணுவ முகாமைச்சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரையே பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்ததோடு சந்தேகநபரை இன்று (23ம் திகதி) காலை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக அறிவித்தனர். ஆனால் மதியம் வரை சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபடவில்லை என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இதேவேளை, இராணுவ பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற நெடுங்கேணி சேனப்பலவு பகுதிக்கு சென்றிருந்ததுடன் அப்பகுதியில் …
-
- 17 replies
- 1.9k views
-
-
கணவன் குளிப்பது இல்லை எனக் காரணம் குறிப்பிட்டு விவாகரத்து கேட்டு மனைவி தாக்கல் செய்த மனுவை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து கட்டளையிட்டது. “நீங்கள் காதலித்து திருமணம் செய்வீர்கள். பின்னர் குளிக்கவில்லை போன்ற சட்டத்தில் கூறப்படாத காரணங்களைக் குறிப்பிட்டு மண நீக்கம் கேட்டு வந்தால் நீதிமன்றம் கட்டளை ஆக்க முடியாது” என்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் கட்டளையில் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் தனது சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் ஊடாக விவாகரத்து கேட்டு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில் விவாகரத்துக்கான காரணங்களில் ஒன்றாக கணவர் குளிப்பது இல்லை என…
-
- 14 replies
- 1.9k views
-
-
உங்களுக்கும் ராஜபக்சக்களுக்குமிடையில் என்ன தான் நடந்தது தவறாக? :‐ என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் நல்ல நண்பர்களாயிருந்தோம். போர் முடிவடைந்த பின்னர் அதனை நான் சிறிது உணர்ந்தேன். சில் இடங்களில் புரிந்துணர்வின்மை இருந்தது. போர் முடிவடைந்தவுடன் சில இடங்களில் சரியாக நடாத்தப்படவில்லை. சரத் இராணுவ அதிகாரியாகத் தொடர்ந்திருக்கவே விரும்பினார். தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாக அவர் இருக்க விரும்பவில்லை. போர் வீரர்களின் நலன்கள் தொடர்பில் அவர் பணியாற்ற விரும்பினார். ஆவர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. அவர் கோட்டபாயவைச் சந்தித்து தான் தொடர்ந்து இராணுவத் தளபதியாகவே இருக்க விரும்புவதாகத் தெரிவித்தார். ஆனால் அவர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. அது தான் பிரதான பிரச்சினையாக இருந்தது.…
-
- 10 replies
- 1.9k views
-
-
வதந்திகளை நம்பவேண்டாம்: விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை வேண்டுகோள் [சனிக்கிழமை, 12 யூலை 2008, 07:37 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] ஆதாரமற்ற தகவல்களை அப்படியே நம்பிவிடும் மனநிலையிலிருந்து விடுபட்டு பகுத்தறியும் திறன்கொண்ட மக்களாக நாம் இருக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் "பொய்மையில் இருந்து உண்மைக்கு" எனும் தலைப்பில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அன்பிற்குரிய தமிழீழ மக்களே! எதிரி தனது முப்படைகளையும் கொண்டு தமிழர் தாய் மண் மீது ஒரு கொடிய போரை ஏவிவிட்டுள்ளான். மூர்க்கமான இப்போரின் மூலம் தமிழரை அடிமைப்படுத்த முயல…
-
- 3 replies
- 1.9k views
-
-
கருணா என்று அழைக்கப்படும் சிறீலங்கா சிங்களப் பயங்கரவாத அரசின் தமிழ் ஆயுதக் கைக்கூலியான வி.முரளிதரன் என்பவர், தமிழ்நாட்டு மக்கள் ஈழத்தில் போரை நிறுத்தச் சொல்லி செய்யும் போராட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவும், தமிழர் தாயகத்தில் சிங்களப் பேரினவாத அரசின் போரை தொடர்ந்து முன்னெடுத்து "இலங்கைத் தீவை சிங்களத் தீவாக" பிரகடனப்படுத்துவதை ஆதரிக்கும் வகையிலும் மட்டக்களப்பில் பிரமாண்டப் பேரணி நடத்தப் போகிறாராம் என்று ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். இதற்கிடையே.. சிறீலங்கா சிங்களப் பயங்கரவாத அரசின் படைகளுக்கு உணவு மற்றும் ஆயுத விநியோகம் தடுக்கப்படுவதைக் கண்டித்து.. ஈபிடிபி எனும் இன்னொரு தமிழ் ஆயுதக் கைக்கூலிக் கும்பல் இன்று யாழ்ப்பாணத்தில் ஹர்த்தால் நடத்தி வருகின்றமை.. இ…
-
- 11 replies
- 1.9k views
-
-
நன்றி தினக்குரல்
-
- 0 replies
- 1.9k views
-
-
-
[காணொளி] பாலஸ்தீன விடுதலையை ஆதரிக்கும் இந்தியா தமிழீழ விடுதலையை எதிர்ப்பது ஏன்…? – குவைத்தில் இயக்குநர் சீமான் [காணொளி] குவைத்தில் சனிக்கிழமை(03.10.2009) அன்று வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற வண்ணத்தமிழ் திருவிழா நிகழ்வில் பங்கேற்ற நாம் தமிழர் இயக்க தலைவர் இயக்குநர் சீமான் அவர்கள் ஆற்றிய எழுச்சியுரை. வீடியோ காண : http://www.meenagam.org/?p=12725
-
- 1 reply
- 1.9k views
-
-
இந்தியன் என்ற உணர்வும்,தாய்நாட்டு பற்றும் எனக்கு சற்று அதிகம்தான்.சாராசரியை விட கூடுதல் தேசப்பற்று எனக்கு.ஆனால் கடந்த சில வருடங்களாக இரண்டும்கெட்டான் நிலையில் குழம்பி வருகிறேன். காரணங்களை சொல்லுகிறேன். தொடர்ச்சியாக மத்தியில் ஆளும் அரசு தமிழனுக்கும் தமிழ் இனத்திற்கும் பாரபட்சம் காட்டி தீங்கு இழைத்து வருவதாக ஆழமாக நம்புகிறேன்.இந்தியன் என்ற உணர்வு நீர்த்து போய் தமிழன் என்ற நிலைக்கு கொஞ்ச கொஞ்சமாக தள்ளபடுவதாக உணர்கிறேன். காரணங்கள்..! நதிநீர் பிரச்சனைகள் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தும் தமிழகத்துக்கு வழங்கபடாத நியாயங்கள். இந்திய மத்திய அரசின் பாராமுகம்; தமிழர்கலேனும் இலக்காரம், பாரபட்சம்....! கச்சதீவு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி இலங…
-
- 1 reply
- 1.9k views
-
-
முல்லைத்தீவில் பரா வெளிச்சக் குண்டுகளை வீசி வான்தாக்குதல். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு, மாத்தளன், கேப்பாப்புலவு ஆகிய பகுதிகள் மீது இன்று சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான மிக்-27 ரக வானூர்திகள் இரண்டு குண்டுத்தாக்குதல்களை நடத்தியுள்ளன. இன்று வெள்ளிக்கிழமை இரவு 8.10 மணியளவில் பரா வெளிச்சக்குண்டுகளை ஏவி அந்த ஒளியில் குண்டுகளை மிக் - 27 ரக வானூர்திகள் வீசியுள்ளன. இதில் ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. -Puthinam-
-
- 6 replies
- 1.9k views
-
-
யாழ்ப்பாணத்தில் மாம்பழ உற்பத்தி வலயம்! இலங்கையில் முதலாவது மாம்பழ உற்பத்தி வலயங்களை யாழ்ப்பாணம் மற்றும் தம்புள்ளை ஆகிய பிரதேசங்களில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த மாம்பழ உற்பத்தி வலயங்கள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது. உலக வங்கியின் நிதியுதவியுடன், நடைமுறைப்படுத்தப்படும் நவீன விவசாய திட்டத்தின் கீழ் இந்த மாம்பழ உற்பத்தி வலயம் அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம் ஒரு இலட்சம் சிறந்த ரக மாங்கன்றுகள் செய்கை பண்ணப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. http://athavannews.com/யாழ்ப்பாணத்தில்-ம…
-
- 8 replies
- 1.9k views
-
-
உயிருக்கு ஆபத்து: பொன்சேகாவை கைது செய்தவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!! .ஜெனரல் சரத் பொன்சேகாவை கைதுசெய்த நடவடிக்கையை தலைமையேற்று செயற்பட்ட மேஜர் ஜெனரல் சுமித் மானவடு தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி திடீரென வெளிநாடு சென்றுள்ளார். சரத் பொன்சேகாவின் கைது தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெறும் தேவையிருப்பதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அறிவித்திருந்த நிலையில் மானவடு இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளார். சரத் பொன்சேகாவின் கைது தொடர்பாக மானவடுவை தவிர ஏனைய அனைத்து இராணுவ அதிகாரிகளிடமும் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா இராணுவ தளபதியாக பதவி வகித்த காலத்தில் மேஜர் ஜெனரல் மானவடு ப…
-
- 4 replies
- 1.9k views
-
-
இலங்கை முகாம்களில் இருந்து தமிழர்கள் வீடு திரும்புகிறார்கள். சண்டை ஒழிந்தது சாந்தி தழைக்கின்றது! சகோதர யுத்தம் ஓடிஒளிந்தால் எல்லாம் நன்மையாகவே முடியும்! என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பருவ மாற்றங்களைப் பற்றிக் கவலைப்படாமல், இலங்கைத் தீவில் ஆடிக்காற்று வீசிக் கொண்டிருந்தது. அந்தி வானத்திலே சிவப்பு; அந்தப் பூமியெங்கும் பரவியிருந்தது. அந்த வண்ணத்தை அந்தத் தீவின் தெருக்களில் தீட்டுவதற்கு தமிழ் ஈழ உரிமைப் போரில் ஈடுபட்ட இலங்கை வாழ் மக்களின் படைவரிசை இருபக்கமும் நின்று குருதி பொழிந்தவண்ணம் இருந்தன. சகோதர யுத்தத்தை, பாண்டவர்கள் கௌரவர்கள் கதையிலே படித்த மக்கள்; கடந்த சில…
-
- 20 replies
- 1.9k views
-
-
ஜான் ஹான்சன் பவர் வெள்ளிக்கிழமை கிளிநொச்சி பயணம். இலங்கை அரசின் கோரிக்கைக்கேற்ப விடுதலைப் புலிகளின் தலைவர்களை வரும் வெள்ளிக்கிழமையன்று கிளிநொச்சியில் சந்திக்கத் நோர்வே சிறப்பு சமாதானத் தூதுவர் ஜான் ஹான்சன் பவர் திட்டமிட்டுள்ளதாக நோர்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இலங்கை அரசின் கோரிக்கைக்கேற்ப விடுதலைப் புலிகளின் தலைவர்களை வரும் வெள்ளிக்கிழமையன்று கிளிநொச்சியில் சந்திக்கத் நோர்வே சிறப்பு சமாதானத் தூதுவர் ஜான் ஹான்சன் பவர் திட்டமிட்டுள்ளதாக நோர்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். www.tamilwin.com
-
- 8 replies
- 1.9k views
-
-
உண்மைக்குப் புறம்பாகப் பேசலாமா? -ஜெயராஜ்- * வன்னியை ஐந்து டிவிசன் படையணிகள் சுற்றிவளைத்து விட்டன. * இந்தியா ஒரு தடவை தலையிட்டு எமது முயற்சியைத் தடுத்தது. * தலைவர்களான ரணசிங்க பிரேமதாசவும், சந்திரிகா குமாரதுங்கவும் முயற்சிகள் எடுத்தனர். ஆனால் அரசியல் அழுத்தங்களால் இம்முயற்சிகளைக் கைவிட்டுவிட்டனர். * கிளிநொச்சியை நிச்சயம் கைப்பற்றுவோம். * கிளிநொச்சியைக் கைப்பற்றிவிட்டு கடந்த காலத்தைப் போல் விட்டு விலகமாட்டோம். இவை யாவும் சிறிலங்கா இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா சிங்கள நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ள சில விடயங்களாகும். இதன் அடிப்படையில் பார்க்கையில், சிங்களவர்கள் அனைவரும், இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவைத் தம…
-
- 0 replies
- 1.9k views
-
-
இராணுவ வீரர்களை கௌரவித்து நினைவுகூரும் பொப்பி மலரை தன் கோர்ட்டில் குத்தியவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் காணப்பட்டார். http://www.thinakkural.lk/article.php?local/ntkhjr0pzd771948d4167a0f25848csxof3bc10686a1ad20a8008c73gicqo#sthash.VerQUV7r.dpuf
-
- 12 replies
- 1.9k views
-
-
13ஆவது திருத்தம் - வெறும் மாயமான் அம்பலப்படுத்துகிறார் கிழக்கு முதல்வர் [25 நவம்பர் 2008, செவ்வாய்க்கிழமை 9:15 மு.ப இலங்கை] இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இலங்கை அரசுத் தரப்பின் - சிங்களத் தலைமையின் - முகமூடியைக் கிழித்து அம்பலப்படுத்தியிருக்கின்றா
-
- 6 replies
- 1.9k views
-
-
வவுனியாவில், போதைப் பொருளுடன் மூவர் கைது! வவுனியா ஓமந்தை பகுதியில் காரில் கேரளா கஞ்சாவினை கடத்திச்சென்ற மூவரை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஏ9 வீதியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே யாழ்ப்பாணத்திலிருந்து சம்மாந்துறை நோக்கி காரில் பயணித்த மூவர் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 24, 28, 29 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து 1 கிலோ 126 கிராம் கேரளா கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்க…
-
- 0 replies
- 1.9k views
-
-
அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் யசூசி அகாசி, ஜனாதிபதி மஹிந்த ராஜபஷவை சந்திக்கச் சென்றபோது கைகளைக் குலுக்கி “நீங்களே உலக நாயகன்” என வாழ்த்தியுள்ளார். பதிலுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் காலத்தில் பொதுமக்களுக்கு ஜப்பான் வழங்கிய உதவிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். மோதல்களில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அகாசி, அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கான நடவடிக்கைகளும் ஒரே நேரத்தில் கொண்டுசெல்லப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். வன்னி மோதல்களில் பொதுமக்களுக்கென பாதுகாப்புப் பிரதேசத்தை…
-
- 12 replies
- 1.9k views
- 1 follower
-
-
ராமநாதபுரம்: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு 6 மாதத்தில் தீர்வு காண வேண்டும் என அந்நாட்டு அரசுக்கு இந்தியா கெடு விதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழர்களின் பிரச்சினை குறித்து சட்டசபையில் விவாதம் நடைபெற வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்தும் பேச வேண்டும். இங்கு விவாதிக்காமல் அப்பிரச்சிøயை வேறு எங்குமே விவாதிக்க முடியாது. சமீபத்தில் கடலூருக்கு வந்த அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் கூட, அயர்லாந்து, போஸ்னியா பிரச்சினைகளுக்கு அமைதித் தீர்வு காணப்பட்டது போல இலங்கைப் பிரச்சினைக்கும் அமைதியான, சுமூக தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவித்தார். இதை…
-
- 8 replies
- 1.9k views
-