ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
“மைனாகோகமவில்” ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றுடன், 7ஆவது நாள் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி அலரி மாளிகைக்கு முன்பாக மைனாகோகமவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 7 ஆவது நாளாகவும் தொடர்கிறது. இதேவேளை நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வருகைதரும் மக்கள், ஆர்ப்பாட்டத்திற்கு தங்களின் ஆதரவை தெரிவித்தவண்ணமுள்ளனர். மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ள அரசாங்கமும் ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் இந்த அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தில் மதத் தலைவர்கள், என பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடதக்கது. https://athavannews.com/2022/1279345
-
- 0 replies
- 157 views
-
-
-நவரத்தினம் கபில்நாத் 'யுத்தமும் அதன் பின்னரான இலங்கையின் நிலைமையும்' என்ற தொனிப்பொருளில் புகைப்படக் காண்காட்சி வவுனியா நகரசபை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (11) ஆரம்பமாகியுள்ளது. இக்கண்காட்சியின்போது வடபகுதியில் யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகள், வெடிப்புச் சம்பவங்கள், விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஆயுதங்கள், மக்களின் அவலநிலை மற்றும் தற்போதைய அபிவிருத்தி பணிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. புதன்கிழமைவரை (12) நடைபெறவுள்ள இக்கண்காட்சியை வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, வன்னி மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, மும்மதத் தலைவர்கள், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தலைவர்…
-
- 0 replies
- 531 views
-
-
யாழ்ப்பாணத்தில் அனைவருக்கும் வாழ்வாதாரங்களை வழங்குமாறு நோர்வே தூதுவரிடம் கோரிக்கை யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு தவிர்ந்த ஏனைய மக்களுக்கும் வாழ்வாதார திட்டங்களை வழங்குமாறு நோர்வே நாட்டின் இலங்கைக்கான தூதுவர் தோர்ப்ஜோர்ன் கௌசடாதிடம் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று (19) விஜயம் மேற்கொண்ட நோர்வே நாட்டின் இலங்கைக்கான தூதுவர் தோர்ப்ஜோர்ன் கௌசாட்சதர் (thorbjorn gausadaether) மற்றும் அவரது குழுவினர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடினார். அந்த சந்திப்பின் போது, யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திகள் மற்றும் மீள்குடியேற்றம் உட்பட உட்கட்டமைப்பு வசதிக…
-
- 3 replies
- 437 views
-
-
கொழும்பு துறைமுகத்தின் இரசாயன கொள்கலனில் தீப்பற்றியுள்ளது. வீரகேசரி இணையம் 5/18/2010 9:06:43 PM கொழும்பு துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரசாயன கொள்கலன் ஒன்று தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தின் பின்புறமாக உள்ள துறைமுகப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கொள்கலனிலேயே தீப்பற்றியுள்ளதாகவும் இதனால் அப் பிரதேச மக்கள் சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதோடு கண்கள் எரிச்சல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=23396
-
- 2 replies
- 923 views
-
-
கோபியின் தலைக்கு 10 இலட்சம் ரூபா விலை! – பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு. [saturday, 2014-03-22 17:12:12] விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படும் கஜீபன் பொன்னையா செல்லநாயகம் அல்லது கோபி அல்லது காசியன் என்ற பெயரால் அழைக்கப்படும் நபர் பற்றிய தகவல் வழங்குபவர்களுக்கு 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 31 வயதான இந்நபர் 6 அடி உயரமானவர். குறித்த நபர் தொடர்பான சரியான தகவலை வழங்குபவர்களுக்கு 10 லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் அதேவேளை தகவல் வழங்குபவர் குறித்து இரகசிய தன்மை பேணப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜீத் ரொஹண தெரிவித்தார். கடந்த வாரம் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இந்நபரை கைது செய்யச் சென்றவேளை பொலிஸாரை …
-
- 0 replies
- 498 views
-
-
ஒரு குண்டு அல்ல நூறு குண்டுகள் பாராளுமன்றின் மீது வீசப்பட வேண்டும் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பாராளுமன்றின் மீது நூறு குண்டுகள் வீசப்பட வேண்டுமென முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பாராளுமன்றின் அதிகாரங்களை குறைத்து பெயரளவு பாராளுமன்றமாக உருவாக்கி மாகாணசபைகளுக்கு அதீத அதிகாரங்கள் வழங்கப்பட்டால் ஒரு குண்டு அல்ல நூறு குண்டுகள் பாராளுமன்றின் மீது வீசப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். ஆசியாவிலேயே இலங்கை மிகவும் முக்கியமான நாடாக காணப்படுகின்றது எனவும் இதனால் அனைவரும் இலங்கை குறித்து அவதானித்து வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 65, 000 கிலோ மீற்றரைக் கொண்ட இந்த சிறிய நாட்டின் வளங்கள் பற்றி எம்மை வ…
-
- 1 reply
- 399 views
-
-
பொதுஜன பெரமுன – பிரதமர் ரணிலுக்கு, இடையில்... வெடித்தது மோதல் ! பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் முதலாவது பனிப்போர் தற்போது ஆரம்பித்துள்ளது. ஒரு நாளை வீணடிப்பதைத் தவிர்க்க, ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினரை பிரதி சபாநாயகராக ஏகமனதாக நியமிக்குமாறு ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டார். இருப்பினும் ஆண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை குறித்த பதவிக்காக பொதுஜன பெரமுன மும்மொழிந்துள்ள நிலையில் தற்போது இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றுவருகின்றது. இதேவேளை நாடாளுமன்றில் இன்று பலரும் வாக்கெடுப்பை நடத்தாமல் கட்சித் தலைவர்கள் கூடி ஏகமனதாக ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என கோரியிருந்தனர். இருப்பினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்…
-
- 0 replies
- 131 views
-
-
தமிழில் கூறுவதை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பவர்கள் யார்? BBC Harftalk
-
- 3 replies
- 1.7k views
-
-
தமிழின அழிப்புக்கு நீதிகோரும் போராட்டத்தில் றியூனியன் தீவு வாழ் தமிழர்களும் இணைந்தனர் ! [Friday, 2014-03-28 08:09:25] அனைத்துலக விசாரணையினை மையப்படுத்தி தமிழின அழிப்புக்கு நீதிகோரும் போராட்டத்தில் றியூனியன் தீவு வாழ் தமிழர்களும் இணைந்துள்ளனர். ஈழத் தமிழ் மக்களது நீதிக்கான போராட்டத்துக்கு தங்களது தோழமையினை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ள றியூனியன் தமிழ் சங்கம், தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிக்கு அனைத்துலக விசாரணை கோருவதாக தெரிவித்துள்ளது. றியூனியன் வாழ் தமிழ் மக்கள் சார்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கு தமிழ் சங்கம் அனுப்பியிருந்த கடிதத்திலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://www.seithy.co…
-
- 0 replies
- 363 views
-
-
யாழில் நேற்றிரவு கொட்டித் தீர்த்த பெருமழை; வழுக்கையாறின் நீர்மட்டம் உயர்வு! யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பாகங்களிலும் நேற்று நள்ளிரவை எட்டிய நேரத்தில் கடும் இடி மின்னலுடனான பெருமழை பொழிந்துள்ளது. இதனால் மாவட்டத்தின் நீர் நிலைகள் நிரம்பி வழிவதாக ஐபிசி தமிழின் களநிலைச் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். வடகிழக்கு பருவப்பெயர்ச்சி ஆரமித்துள்ள நிலையில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் கனமழை பொழிந்து வருகிறது. இதனிடையே மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கலாம் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு பெய்த கடும் மழையினால் யாழ்ப்பாணக் குடா நாட்டின் பருவகால ஆறான வழுக்கையாறின் நீர்மட்டம…
-
- 0 replies
- 578 views
-
-
முல்லைத்தீவில் கோத்தபாய அவர்களினால் இராணுவ தலைமையகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த இராணுவ தலைமையகம் வவுனியா மற்றும் , அனுராதபுரம் படைத்தலைமையகக்ங்களிற்கு சமமான வசதிகளையும் தளங்களையும் கொண்டிருக்கும் என கூறியுள்ளார் கோத்தபாய. சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த இராணுவ தலைமையகம் அமைந்துள்ளது. ஈழநாதம்
-
- 1 reply
- 978 views
-
-
தமிழ்த் தலைவர்கள் எதையும் சாதிக்கவில்லை தமிழ் மக்களுக்கான உரிமை மற்றும் தீர்வு தொடர்பான, எமது தமிழ்த் தலைவர்களின் வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் பேச்சளவிலானது மாத்திரமே என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் சாடியுள்ளார். வவுனியா விபுலானந்தாக் கல்லூரியில் புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கான மதிப்பளிப்பு விழா பாடசாலை முதன்மை மண்டபத்தில் பாடசாலை அதிபர் சு.அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: அப்போதிருந்த தந்தை செல்வா தொடக்கம் தற்போது சம்பந்தன் ஐயா வரைக்கும…
-
- 1 reply
- 451 views
-
-
சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை, தேசிய நலன் மற்றும் அயல் நாடுகளுடனான உறவுகளை கருத்தில் கொண்டே புறக்கணிக்க முடிவெடுக்கப்பட்டது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிசேக் சிங்வி தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு 4 ஆயிரம் கோடி ரூபா நலத் திட்டங்களை இந்திய அரசு செயற்படுத்தி வருகிறது. எந்தவொரு ஆட்சியிலும் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்படாத உதவிகளை காங்கிரஸ் அரசாங்கம் வழங்கி வருகிறது. தேசிய நலன் மற்றும் அயல் நாடுகளுடனான உறவுகளை கருத்தில் கொண்டு, ஜெனிவா தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது. இதன் அர்த்தம், இந்த தீர்மானத்தை ந…
-
- 0 replies
- 282 views
-
-
வடகிழக்கு இணையாவிட்டால் பொருளாதார ரீதியான பின்னடைவை சந்திப்பது முஸ்லிம் மக்களே வடகிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம் மக்களிடத்தில் பலநெடுங்காலமாக பொருளாதார ரீதியான பின்னிபிணைந்த உறவு இருந்து வருகின்றது. வடகிழக்கு இணையாவிட்டால் அந்த உறவு இல்லாமல்போகும் நிலையேற்படும். இதனால் பொருளாதார ரீதியான பின்னடைவை சந்திப்பது முஸ்லிம் மக்களே இவ்வாறானதோர் நிலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லவே காராணமாக அமைவார் என கிழக்கு மாகாண முன்னாள் பிரதி தவிசாளர் பிசன்னா இந்திரகுமார் தெரிவித்தார். அண்மையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா வடகிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடரந்து …
-
- 0 replies
- 232 views
-
-
புதிய நியமனங்கள் வழங்கப்பட்ட போதிலும்... நாட்டின் நிலைமை, மோசமடைந்து வருகின்றது – சஜித் குற்றச்சாட்டு. ஜனாதிபதியை பதவி விலகுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் பிரதமர் பதவியை ஏற்று நாட்டை ஆட்சி செய்ய விரும்பவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்த பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்து செய்தால் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார். அம்பலாங்கொடையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய சஜித் பிரேமதாச, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நடக்கத் தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார். புதிய நியமனங்கள் வழங்கப்பட்ட போதிலும்…
-
- 0 replies
- 159 views
-
-
முள்ளிவாய்க்கால் படுகொலை எச்சங்களை அழிப்பதில் கடந்த 06 மாதங்களாக இஸ்ரேல் நிபுணர்கள் நேரடியாக உதவி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. சர்வதேச பயங்கரவாதம் தொடர்பில் ஆலோசனை வழங்கும் பிரித்தானிய பிரஜை ஒருவரால் இந்த செய்தி கசிந்துள்ளது. சில நோக்கங்கள் கருதி அவரது பெயர் இங்கு குறிப்பிடப்படவில்லை. சிறிலங்கா அரசாங்கம் வன்னியின் இறுதிப்போரில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்தது. கூடவே போராளிகள் மற்றும் இளைஞர்களையும் சித்திரவதை செய்து கொன்றது. சிங்கள அரசின் இந்த இனப்படுகொலைகளையும் அப்பட்டமான போர் நிறுத்தங்களையும் அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் நூறு வீத சாட்சியங்களை வைத்திருந்தபோதும் அதனை தமது வாணிப மற்றும் பொருளாதார பூக…
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கை ஜனநாயக குடியரசின் அதி மேதகு நிறைவேற்று அதிகாரம் கொண்ட கௌரவ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு …..? இலங்கை திரு நாட்டின் ஜனாதிபதியாக நீங்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு கொடூரமான யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தபோது முஸ்லிம்கள் நாங்கள் மிகவும் சந்தோசப்பட்டோம் ஏனெனில் தொடர் யுத்தத்தினால் தமிழ் முஸ்லிம் சிங்களம் என்று மூன்று சமூகமும் உயிர் பொருள் என்று இழந்து சொல்லெனா துயரத்தை அனுபவித்தனர். உங்கள் ஆட்சியிலான யுத்த வெற்றியானது உங்களை இரண்டாம் துட்டகைமுனுவாகவே சிங்கள மக்களைப்போலவே பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் மக்களும் பார்த்தனர், அதனை நிறுவும் முகமாக நீங்களும் மேடைகளில் தமிழில் உரை நிகழ்த்தி எங்கள் மனங்களில் இடம்பிடித்தீர்கள் உங்கள் மேடைப்பேச்சில் தமிழர்களையும் முஸ்லிம்களை…
-
- 1 reply
- 596 views
-
-
ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ... பிணையில், விடுதலை கோட்டை நீதவான் முன்னிலையில் சரணடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குற்றப்புலனாய்வு திணைக்களம் அறிவிக்கும் திகதியில் வாக்குமூலமளிக்க வருகை தர வேண்டும் எனவும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற அமைதியின்மை சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ சந்தேகநபராக பெயரிடப்பட்டார். இந்…
-
- 0 replies
- 228 views
-
-
லங்கா ஹெஸ்பிடல் நிறுவனத்தின் பணிப்பாளராக கோத்தபாய ராஜபக்ஸவே பணியாற்றிவருவது குறித்து கேள்வி எடுப்பப்பட்டுள்ளது 19 July 10 11:14 am (BST) அரசாங்கத்தின் நிர்வாகத் துறையில் செயலாளராக பணியாற்றும் ஒருவர் தனியார் நிறுவனங்களில் பணிப்பாளர் பதவியை வகிக்க முடியாது என்ற போதிலும் லங்கா ஹெஸ்பிடல் நிறுவனத்தின் பணிப்பாளராக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவே பணியாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லங்கா ஹெஸ்பிடல் நிறுவனத்தில் கோத்தபாய ராஜபக்ஸ சுமார் ஒரு வருடம் பணிப்பாளராக பணியாற்றியதாகவும் கடந்த வருடத்தில் அந்த நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளதாகவும் அரசாங்கத்தின் தொலைக்காட்சி சேவையான சுயாதீன தொலைக்காட்சியின் நிகழ்ச்சியொன்றில் தெ…
-
- 0 replies
- 823 views
-
-
இலங்கையில் புதிய வகை உயிரிய-உரம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தேயிலை செய்கையில் 50 வீதமளவு இரசாயன உரத்தின் பாவனையைக் குறைக்க முடியும் என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது பயோஃபில்ம்(biofilm) என்கின்ற கூட்டு நுண்ணுயிரிகளின் படலத்தை ஒரு தொழிநுட்பமாகப் பயன்படுத்தி இந்த விவசாய உரம் உருவாக்கப்பட்டுள்ளதாக கண்டி அடிப்படை ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுத்துறைப் பேராசிரியர் காமினி செனவிரட்ன தெரிவித்தார். 'குறிப்பாக பக்டீரியாக்கள், ஃபங்கஸுகள் போன்ற நுண்ணுயிரிகள் அடங்குகின்ற தொழிநுட்பம் தான் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு இதன்மூலம் பெருமளவு உயிரிய இரசாயனம் கிடைக்கிறது' என்றார் பேராசிரியர் காமினி செனவிரட்ன. கடந்த 10 ஆண்டுகாலம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் பலனாக உரு…
-
- 2 replies
- 511 views
-
-
கடற்படை தளபதிக்கு ஆறு மாத பதவி நீடிப்பு.! கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் சிறிமெவன் ரணசிங்கவுக்கு ஆறு மாத பதவி நீடிப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 19 ஆம் திகதி தனது 55 வயதை பூர்த்தி செய்த நிலையிலேயே மேலும் ஆறு மாதங்களுக்கு கடற்படை தளபதியாக பணியாற்ற ஜனாதிபதியினால் இந்த பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. 22 ஆவது கடற்படைத் தளபதியான சிறிமெவன் ரணசிங்க, முன்னாள் தளபதி சின்னையாவின் பதவி காலத்தின் பி ன்னர் ஜனாதிபதியினால் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதியே நியமிக்கப்பட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்…
-
- 0 replies
- 197 views
-
-
போலி அகதிகளை இலங்கைக்கு நாடுகடத்த அவுஸ்ரேலியா திட்டம்! - கோதபாய ராஜபக்ஷவுடன் பேச்சு. [saturday, 2014-04-26 09:54:20] போலி புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதற்கு அவுஸ்திரேலியா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கத்துடன் அவுஸ்திரேலியா அரசாங்கம் இது தொடர்பில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. கடந்த காலங்களில் அவுஸ்திரேலியாவில் போலியான முறையில் புகலிடம் பெற்றுக் கொண்டவர்களை நாடு கடத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவு இணைந்து செயற்பட்டு வருகிறது. கடந்த கால அரசாங்கங்களின் போது சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு பிரவேசித்து புகலிடம…
-
- 0 replies
- 435 views
-
-
முல்லைத்தீவில் பொலிஸார் – தங்க வேட்டை!! தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகளைத் தேடும் நடவடிக்கைளை முல்லைத்தீவு பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். முல்லைத்தீவு- சுதந்திரபுரம் நிரோஸன் விளையாட்டு மைதானத்தில் இந்தத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு- நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன், பொலிஸ் சிறப்புப் படையணியின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் இந்தத் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனினும் தோண்டப்பட்ட இடங்களில் எவ்வித பொருள்களும் மீட்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். http://newuthayan.com/story/507…
-
- 2 replies
- 257 views
-
-
இலங்கை விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கைக்கான தகவல்களைத் திரட்டுவதற்காக அணுகப்படக்கூடிய இலங்கை அதிகாரிகளின் பட்டியலொன்றை தயாரித்து வருவதாக அறியமுடிகின்றது. முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவும் அப்பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புள்ள ஒருவரா என கேட்கப்பட்டபோது மேற்படி ஐ.நா. வட்டாரம் பதிலளிக்க மறுத்துவிட்டது. எனினும் நிபுணர் குழுவை சந்திக்கத் தயார் என சரத்பொன்சேகா பகிரங்கமாக கூறியுள்ளதால் அவரின் பெயர் பட்டியலில் சேர்க்கப்படலாம் அவ்வட்டாரம் தெரிவித்தது. அணுகப்படக்கூடிய இலங்கை அதிகாரிகளின் பெயர்களை நிபுணர்குழு இன்னும் தெரிவு செய்யவில்லை. நிபுணர் குழு இலங்கை வருவதற்கு விசா வ…
-
- 0 replies
- 872 views
-
-
யாழில் பெண் ஊடகப் பணியாளர் கிணற்றில் சடலமாக மீட்பு Report us Thayalan 7 hours ago ய்பெண் ஊடகப் பணியாளர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொன்னாலையைச் சேர்ந்தவரும் தற்போது நெடுந்தீவில் வசித்தவருமான திருமதி யோகேந்திரன் பத்மாவதி (வயது-32) என்பவரே அவரது வீட்டுக்கு அருகில், தோட்டக் காணியொன்றில் இருந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொன்னாலையைச் சேர்ந்த இவர் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் நெடுந்தீவில் திருமணம் செய்து அங்கு வசித்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் அவரைக் காணவில்லை எனத் தேடியபோது இன்று அதிகாலை 1.00 மணியளவில் அயலில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 511 views
-