Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழர்கள் மட்டும் வடபகுதியில் இருப்பதனால்தான் புலிகள் திரும்ப திரும்ப நிமிர்ந்து எழுவார்கள். இதற்கு மகிந்த ஒரு தீட்டம் வகுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. கொழும்பு மற்றும் தென்பகுதியில் தமிழர்கள் வாழ்வது போல யாழ்ப்பாணத்திலும் சிங்களவர்களை குடியேற்ற போகிறார்கள். இதற்காக நாட்டை விட்டு வெளியேறிய தமிழர்களினுடைய வீடு, நிலங்கள் அரசாங்கத்தினால் அபகரிக்கப்பட்டு சிங்களவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

  2. 150 நாட்களாக வதைமுகாம்களில் வாடும் மக்களை விடுவிக்கக் கோரி அக்.17 இல் மீண்டும் லண்டனில் மாபெரும் பேரணி – பிரித்தானிய தமிழர் பேரவை ஐப்பசி 17ம் திகதியோடு, முள்வேளியின் பின்னால் வதைமுகாங்களில் எமது மக்கள் அடைக்கப்பட்டு 150 நாட்கள் ஆகின்றது. இதனை உலகிற்கு மீண்டும் – மீண்டும் நினைவூட்டி நீதிகேட்குமுகமாக லண்டனில் மாபெரும் பேரணியை பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. ஐப்பசி மாதம் 17ம் திகதி (17/10/2009) மதியம்12.00 மணிக்கு லண்டன் எம்பாக்மண்ட் இல் ஆரம்பமாகும் இப்பேரணி ஹட் பார்க்கில் முடிவடையும். திறப்புப் போராட்டத்தின் ஓர் அங்கமாக நடைபெறும் இப்பேரணியில் “வதைமுகாங்களில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும் இயல்பு நிலை வாழ்க்கைக்கு திரும்பவேண்டும், எமது மக்களை கொன்றொ…

    • 8 replies
    • 1.1k views
  3. அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் எவ்விதத் திட்டமும் இல்லை கிஷோர், ஸ்ரீகாந்தா 22 November 09 01:37 am (BST) அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் எவ்விதத் திட்டமும் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோர் மற்றும் என்.ஸ்ரீகாந்தா ஆகியோர் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிஷோர் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவக் கூடுமென அண்மைக் காலமாக பரவலாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இடம்பெயர் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துடன் இணைந்து ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்…

  4. எதிர்வரும் 26ஆம் திகதி இந்தியப் பிரதமராக பதவி ஏற்கவுள்ள நரேந்திர மோடி, விழாவிற்கு வருகை தரும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவர்களுக்கு விருந்தளிக்கவுள்ளார் என்று இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோடியின் பதவியேற்பு விழாவிற்கு 8 நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. பாகிஸ்தானை தவிர மற்ற 7 நாடுகளும் மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதை உறுதி செய்துவிட்டன. 26ஆம் திகதி பதவியேற்பு விழா முடிந்தவுடன் வெளிநாட்டு தலைவர்களுக்கு அன்றிரவு விருந்து அளிக்க மோடி முடிவு செய்துள்ளார். வெளிநாட்டுத் தலைவர்களின் டெல்லி வருகையை வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது. இந்நிலையில், இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்புவிடுத்துள்ளது குறித்து இந்திய வெளி…

  5. Started by akootha,

    பாடம் ! இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில், ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களின் வாழ்வை பறித்து சாகடித்த இலங்கைக்கு ஐ.நா.,வில் பாடம் புகட்டப்பட்டது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், இந்தியா உட்பட 24 நாடுகளின் ஆதரவுடன் நேற்று நிறைவேறியது. இத்தீர்மானத்தை ஆதரித்த இந்தியா, இலங்கையில் தமிழர்கள் கவுரமாக வாழும் வகையில், அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் தன் கருத்தை வலியுறுத்தியது. இலங்கையில், 2009ல், விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இறுதிக்கட்ட போரில் தமிழர்கள் வசித்த பகுதியிலும், மருத்துவமனைகள் மீதும் இலங்கை ராணுவம் குண்டு வீசியதால், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.…

  6. பிரித்தானிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு நிகரான சட்டம் இலங்கையில் அறிமுகம் [ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2016, 12:29.32 AM GMT ] பிரித்தானிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு நிகரான சட்டமொன்று இலங்கையிலும் அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போது நாட்டில் அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட உள்ளதாக அரசாங்க உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அரச சார்பற்ற நிறுனங்களும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையும் கோரியுள்ளன. பிரித்தானிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அடிப்படையில் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய அதிகாரமுண்டு. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்…

    • 8 replies
    • 964 views
  7. வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு உலங்குவானூர்தியில் மலர் தூவிய விமானப்படையினர் வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்றைய தினம்(திங்கட்கிழமை) ஆரம்பமானது. குறித்த உற்சவம் இன்று அதிகாலை மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு சிறப்புற ஆரம்பமானது. கடந்த 01.06.2020 அன்று உப்பு நீரில் விளக்கெரிப்பதற்காக முல்லைத்தீவு சிலாவத்தை கடற்கரையில் தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கடந்த ஏழு நாட்களாக முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் விளக்ககெரிக்கப்பட்டு வரும் அற்புத காட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று காட்டு விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை அங்கிருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு வற்…

  8. தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கும் சுமணரட்ன தேரர்! ஞானசாரரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு Report us Gokulan 4 hours ago வடக்கு, கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு சொத்துகள் இல்லை, காணிகள் இல்லை என ஞானசாரதேரர் தெரிவித்த கருத்தை நான் தேரர் என்ற வகையில் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கின்றேன், அத்துடன் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கின்றேன் என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஞானசாரதேரர் தெரிவித்த கர…

  9. வடக்கில் சீனாவும் இந்தியாவும் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியுள்ளோம்: வாசுதேவ வடக்கில் சீனாவும் இந்தியாவும் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியதாகவும் இதனால் வட பகுதி மக்கள் அதிக நன்மைகளை அடைவார்கள் என நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறிமாவோ பண்டார நாயக்கா காலப்பகுதியில் இருந்து இலங்கையானது சீனாவுடனும் இந்தியாவுடனும் நெருக்கமான தொடர்புகளை பேணுகின்றது. அவருடைய காலப்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டபோது எமது நாடு நடுநிலையாக …

  10. மட்டக்களப்பு மக்களை எண்ணி நான் பெருமைகொள்கிறேன் – இந்திய தூதுவர் காந்தியின் அகிம்சைப்போராட்டத்தினையும் தியாகத்தினையும் தொடர்ந்து மட்டக்களப்பு மக்கள் நினைவுகூருவதை எண்ணி தான் பெருமைகொள்வதாக இந்திய தூதுவர் கோபால் பக்லே தெரிவித்தார். காந்தி ஜெயந்தி தினம் நாளைய தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் அதன் சிறப்பு நிகழ்வு இன்று மட்டக்களப்பு காந்திபூங்காவில் நடைபெற்றது. அகிம்சையினை உலகுக்கு போதித்த மகாத்மா காந்தியின் பிறந்த தினம் காந்தி ஜெயந்தி தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது. இன்றைய தினம் காந்தி ஜெயந்தி தின நிகழ்வுகள் மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலையருகில் நடைபெற்றது. காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிக…

  11. முகநூலில் (Facebook) படம் போட்டவர் யாழில் படுகொலை ஜன 1, 2011 வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தின் குடத்தனை கிழக்கில் வீடு புகுந்து ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது: நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் குடத்தனை கிழக்கில் உள்ள இவரது வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் அவரது கணனியை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர். அதற்கிணங்க வீட்டினுள் அழைத்துச் சென்றபோது ஆயுததாரிகள் அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இவரது மனைவி ஆயுததாரிகளை கட்டிப்பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த…

  12. வன்னியில் பாரிய தாக்குதல் நடத்த படைத்தரப்பு திட்டம் சிறீலங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை ஆறு வருடங்களின் பின்னர் இன்று உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வன்னியை நோக்கிய பாரிய படை நடவடிக்கைகளையும், கோரமான விமானக் குண்டுத் தாக்குதலையும் மேற்கொள்ள சிறீலங்கா அரசும், படைத் தரப்பின் உயர் மட்டமும் திட்டமிட்டிருப்பதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிகின்றன. சிறீலங்கா தரப்பின் தாக்குதலுக்கு முன்னர், தென் பகுதி மொனராகலையில் இன்று மூன்று தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதால், அவற்றில் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு அரச தரப்பு தள்ளப்பட்டுள்ளது. மொனராகலை கிளைமோர் தாக்குதலைத் தொடர்ந்து ஊவா மாகாணத்தில் அனைத்துப…

  13. 'இனச்சுத்திகரிப்பு': தீர்மானம் கோரும் வடக்கு முஸ்லிம் அமைப்பு 22 பிப்ரவரி 2015 வடக்கு மாகாண முஸ்லிம்கள் 1990-ம் ஆண்டில் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர்இலங்கையில் வடக்கிலிருந்து 1990-ம் ஆண்டில் முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட சம்பவம் இனச்சுத்திகரிப்பு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு கோரியுள்ளது. இலங்கையில் இடம்பெற்றது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையே என்று சர்வதேசத்தின் ஆதரவுடன் போர்க்குற்ற விசாரணைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிவருகின்ற பின்னணியிலேயே இந்தக் கோரிக்கை வெளியாகியுள்ளது. இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தை வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றியுள்ள தமிழ்த் தேசியக் கூ…

  14. ஈழத்தமிழர்கள் சிந்திய குருதியும், செய்த தியாகங்களும் வீண்போகாது, தமிழர்களுக்குத் தனிநாடு ஒரு நாள் உருவாகும் என்று கூறியுள்ளார் திமுக தலைவர் மு.கருணாநிதி. தனி ஈழம் அமைப்பதற்கு ஐ.நா தலையீட்டுடன் பொது வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு வரவேற்புத் தெரிவித்து, கருத்து வெளியிட்டு இரண்டு நாட்களில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “உலகெங்கும் வாழும் தமிழர்களின் காதுகளில் தனித் தமிழீழம் விடுதலைப் பாடலாக ஒலிக்கிறது. சிறிலங்காவில் தமிழர்கள் சிந்திய குருதியும் செய்த உயிர்த் தியாகங்களும் வீண் போகாது. நாளை இல்லாது போனாலும்,தமிழீழம் ஒரு நாள் உருவாகும்" என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். http://w…

  15. பௌத்த விகாரையின் பிரதம சங்க நாயக்கர் - இர்ஷாத் றஹ்மத்துல தம்புள்ள ரன்கிரி பிரதேசத்தில் சர்ச்சைக்குட்படுத்தப்பட்டுள்ள ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாலை சூழ பாதுகாப்பு நிமித்தம் விசேட அதிரடிப் படைகளினால் பாதுகாப்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன்,அப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலீஸ்,இரானுவம்,விசேட அதிரடிப் படையினர் என குவிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதே வேளை இன்று காலை பௌத்த விகாரையின் பிரதம சங்க நாயக்கர் மூலம் சகல சிங்கள கிரமாங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்தியாதெனில் தம்புள்ள நகரில் உள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் சிங்ளவர்கள் எவரும் பொருட் கொள்வனவு செய்யக் கூடாது என்று ,இதே வேளை நேற்று மாலை முஸ்லிம்கள் செறி…

    • 8 replies
    • 1.3k views
  16. அமெரிக்க இறுதி வரைவு தீர்மானம் வெளியீடு: சர்வதேச விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை! [Tuesday, 2013-03-19 07:33:03] இலங்கைக்கு எதிராக திருத்தப்பட்ட இறுதி வரைவு தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில். அமெரிக்கா வெளியிட்டது. இத்தீர்மானத்தில் சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை நீக்கப்பட்டுள்ளது தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இத்தீர்மானம் தற்போது நான்காவது முறையாக திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனிவாவில் கடந்த மாதம் 22ம் தேதி முதல் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர உள்ளது. முன்னதாக இலங்கையில் நடந்த போர்க்குற்றங…

  17. தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் கரிசனை காட்டவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், இலங்கை அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அப்பாவி பொதுமக்கள் மீது தாம் காட்டி வரும் அக்கறையை அரசாங்கம் பிழையாக விளங்கிக் கொண்டுள்ளது எனவும், தாம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கட்சி என அரசாங்கம் முத்திரை குத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்தைச் சேர்ந்த சில முக்கிய அமைச்சர்கள் 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுடன் மிக நெருங்கிச் செயற்பட்டதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்த…

  18. ரிஷாட் பதியுதீன், அவரது சகோதரர் வீடுகள் நள்ளிரவு சுற்றிவளைப்பு – அதிகாலை இருவரும் கைது 2 Views அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் இன்று அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். நள்ளிரவில் அவர்களுடைய வீடுகளை சுற்றிவளைத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடுமையான சோதனைகளை மேற்கொண்ட பின்னர் இன்று அதிகாலை அவர்களை கைது செய்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகவே அவர்கள் இருவரும் கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர். ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நள்ளிரவில் அவரது இல்லத்தை சுற்றிவளைத்துள்ளதாக…

  19. இலங்கை நெருக்கடி: "கொடியும் வேண்டாம், அதிமேதகு என அழைக்கவும் வேண்டாம்" - ரணில் எடுத்த அதிரடி தீர்மானம் 24 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, இலங்கை பதில் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொள்ளும் ரணில் விக்ரமசிங்க இலங்கையில் தமது ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 19வது திருத்த சட்டத்தை மீள அமல்படுத்துவதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை தான் மேற்கொண்டு வருவதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 'பதில் ஜனாதிபதி' (Acting President) ஆக பதவியேற்ற பிறகு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவரது உரையில் இடம்பெற்ற முக்கிய விடயங்களின் தொகுப்பு …

  20. கனேடிய பிரதமரின் தமிழ் இனப்படுகொலை என்ற கூற்றை நிராகரித்தது இலங்கை அரசாங்கம் தமிழ் இனப்படுகொலை நினைவு நாள் என்ற கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கூற்றினை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. 23ஆம் திகதி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் பற்றி அறிக்கை வெளியிட்டிருப்பார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு, தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் என தெரிவித்துள்ளது. மேலும் இது இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்திற்கு உகந்ததல்ல எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேநேரம் இலங்கையில் ஸ்திரத்தன்மை, முன்னேற்றம் மற்றும்…

    • 8 replies
    • 928 views
  21. இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரி ஆனைவிழுந்தான் பிரதேச மக்கள் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைவிழுந்தான் பிரதேச மக்கள் சிலர் இன்றைய தினம் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி நகரப் பகுதியில் அமைந்துள்ள 55 ஆவது படைப்பிரிவின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், தமது பகுதியில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக்கூறி கவனயிர்ப்பில் ஈடுபட்டனர். தமது பகுதியில் அனைத்து விடயங்களிலும் இராணுவம் ஒத்தாசை புரிவதாகவும் தற்பொழுது ஏற்பட்டுள்ள வறட்சியான நிலைமையிலும் தங்களுக்கான குடிநீர் விநியோகத்தினையும் இராணுவத்தினரே மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர். தமது பகுதிகளில் நடைபெறும் எந்த ஒரு நிகழ…

  22. இந்து மயானத்திலிருந்து பயங்கரவாதியின் உடற்பாகங்களை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்! மட்டக்களப்பு, கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள ஈஸ்டர் குண்டுதாரி மொஹமட் ஆஷாத்தின் உடற்பாகங்களை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ரிஸ்வான் முன்னிலையில் இந்த உடற்பாகங்களை அகற்றும் பணிகள் நடைபெறுகின்றது. கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதியின் உடற்பாகங்களை அரச செலவில் புதைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மட்டக்களப்பில் தமது பகுதிகளில் பயங்கரவாதியின் உடற்பாகங்களை புதைப்பதற்கு மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர். …

    • 8 replies
    • 1.1k views
  23. தினமும் 5 படையினருக்கு சிராய்ப்பு.. நாலு படையினருக்கு எறும்புக்கடி.. 3 படையினருக்கு நுளம்புக்கடி.. 2 படையினருக்கு மன்னாரில் அடம்பனில் மாடு முட்டிக் காயம்.. என்று அறிக்கை விட்டுவரும் சிறீலங்கா பாதுகாப்பமைச்சும் (MCNS ) அதன் இராணுவ இணையத்தளங்களும் இன்று நாடாளுமன்றத்தில் சிறீலங்காப் பிரதமர் விடுத்த அறிக்கை ஒன்றை அடுத்து சற்றே அதிர்ச்சியில் உள்ளனர். அது ஒன்றுமில்ல பிரதமர் ரட்னசிறிவிக்கிரம நாயக்கா அவர்கள் பெளத்த பிக்குகளுடன் இணைந்து கூட்டிக்கழிச்சு.. சொல்லக் கூடிய தொகை ஒன்றை சொல்லி இருக்கிறார். அதுதான் கடந்த மாதம் மட்டும் சிறீலங்காப் படை 104 படைவீரர்களை இழந்து 822 பேரைக் காயப்படுத்தி களத்தை விட்டு வெற்றிகரமாக வெளிநகர்த்தி இருக்கின்றது என்ற கூற்றுத்தான் அது. படையினர் …

  24. கொழும்பு வெள்ளவத்தை ராமகிருஷ்ண ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகளின் சடலங்களை காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் கொட்டகலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என காவற்துறையினர் கூறியுள்ளனர். 4 நாட்களுக்கு முன்னர், மகனுடன் இவர்கள் கொழும்புக்கு வந்துள்ளனர். மகன் தற்போது காணாமல் போயுள்ளார். இந்த மர்மமான மரணங்கள் தொடர்பில் வெள்ளவத்தை காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/81710/language/ta-IN/article.aspx

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.