ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143555 topics in this forum
-
அரசாங்கத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் சில இடைக்காலத் தீர்வுகளைக்கூட ஏற்கவேண்டி வராலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நோர்வே அரசாங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவதற்காக நோர்வேக்கு விஜயம் செய்துள்ள அவர் தற்போதைய பேச்சுவார்த்தைகள் தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே இவ்வாறு கூறினார். அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் தற்போது நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் மூலம் குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வு காணப்படவேண்டும் எனவும், பேச்சுவார்த்தையில் உடனடியாகத் தீர்வு கிடைக்கும் என்பது எல்லோரும் எதிர்பார்க்கக்கூடிய காரியம் இல்லை என்பதால் சில இடைக்காலத் தீர்வுகளைக்கூட ஏற்கவேண்டி வராலம் என…
-
- 2 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா அரசிற்குத் தலையிடியாக உருவெடுத்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் வெளிநாடுகளில் இயங்கும் இலங்கைத் தூதரகங்கள் செயற்பட ஆரம்பித்துள்ளன. இதற்காக பல்வேறு உபாயங்களை வகுத்து இவை செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த வகையில் பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் துரிதமாகச் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. நாடு கடந்த அரசாங்கப் பிரதிநிதிகள் ஒரு சிலரை விலை கொடுத்து வாங்கி நாடு கடந்த அரசிற்கெதிரான பிராச்சாரங்களை அவர்கள் மூலமாக முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான காய் நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது. பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தி;ல் துணைத் தூதராகப் பணிபுரியும் அம்சா இந்தப் …
-
- 4 replies
- 1.7k views
-
-
கடற்புலி மாவீரர்களின் உயர்ந்த அர்ப்பணிப்புக்களினால் கடலிலே தமிழர்களுடைய வீரவரலாறு எழுதப்படுகின்றது என கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை அவர்கள் தெரிவித்துள்ளார். வடமராட்சிக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையின் டோறாக் கலமும் கூகர் படகும் மூழ்கடிக்கப்பட்டதில் வீரவரலாறான ஏழு கடற்கரும்புலி மாவீரர்களின் வீர வணக்க நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக சிறிலங்கா அரசும் அதன் படைகளும் விடுதலைப் புலிகள் தொடர்பான பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, கடற்புலிகள் கடலிலே வல்லமையை இழந்து விட்டார்கள் என்ற பொய்யான பரப்புரையை சிறிலங்கா அரசு திட்டமிட்டு பரப்பி வந்தது. இந்நிலையில் கடலிலே தமது வல்லமைகள் பலமான நிலையிலேயே உள்ளது எ…
-
- 1 reply
- 1.7k views
-
-
விடிவு எப்போது? -ஜூனியர் விகடன் ராஜீவ் காந்தி படுகொலையில் கைதுசெய்யப் பட்டு மரண தண்டனைக் கைதியாக வேலூர் தனிமைச் சிறையில் இருக்கும் பேரறி வாளன், சில கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழக முதல்வருக்கு ஒரு நீண்ட கடிதத்தை எழுதியிருக்கிறார். அந்த கடித நகலை நமக்கும் அனுப்பியிருந்தார். அதை வாசகர்களின் பார்வைக்கு அப்படியே வைத்திருக்கிறோம். பேரறிவாளனின் மனநிலை மட்டுமின்றி, சிறை வாழ்க்கை பற்றிய சில கண்ணோட்டங்களும் நம்மை கவனிக்க வைக்கின்றன இதில்! ''முதல்வருக்கு வணக்கம். 'நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை' என்ற நிலையற்ற இவ்வுலகில் தன்னுடைய இருத் தலுக்காக, உண்மையின் உயிர்த்தலுக்காகப் போராடும் மனிதனின் விண்ணப்பம். மீண்டும் மீண்டும் என்னுடைய பின்னணி குறித்துக் கூறுவது, தங்களுக்கு ச…
-
- 0 replies
- 1.7k views
-
-
14.05.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு
-
- 0 replies
- 1.7k views
-
-
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் நாடு என்ற இலங்கையின் நற்பெயருக்கு ஆபத்து உள்ளதாக சுவிட்ஸர்லாந்து எச்சரிக்கை விடுத்துள்ளது. விஷேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சுவிஸ் தூதரகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. கொழும்பில் உள்ள சுவிஸ் தூதர பெண் பணியாளர் ஒருவர் தவறான தகவலை வெளியிட்டதாக தெரிவித்து, இன்று கைது செய்யப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்தே சுவிட்ஸர்லாந்து இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடந்த மாதம் 25ம் திகதி கொழும்பில் உள்ள சுவிஸ் தூதர பெண் பணியாளர் ஒருவர் கடத்திசெல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் சுவிஸ் தூதரகம் இருவரும் இந்த நடவடிக்கைகளின் போது இலங்கை அதிகா…
-
- 7 replies
- 1.7k views
-
-
இலங்கை மீது அமெரிக்காவுக்கு கேந்திர முக்கியத்துவம் கருதிய கரிசனை இல்லை [17 - May - 2007] * வாஷிங்டனின் முன்னாள் தூதுவர் லன்ஸ்டெட் அமெரிக்காவிற்கு இலங்கை குறித்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நோக்கங்களோ அல்லது பொருளாதார நலனை அடிப்படையாகக் கொண்ட அக்கறையோ இல்லையென கொழும்பிற்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ஜெவ்ரி லன்ஸ்டெட் தெரிவித்துள்ளார். இலங்கையின் சமாதான முயற்சிகளில் அமெரிக்காவின் பங்களிப்பு குறித்து ஆசியா பவுண்டேஷனுக்கு அளித்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தென்னாசியாவின் ஏனைய நாடுகளுடன் உள்ளது போன்று கேந்திர நலன்களை அடிப்படையாகக் கொண்ட இராணுவ உறவு இலங்கையுடன் அமெரிக்காவிற்கு கிடையாது என தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்…
-
- 2 replies
- 1.7k views
-
-
பயங்கரவாதத்தை அடியோடு ஒழிப்பதன் மூலமே அமைதியை நிலைநாட்ட முடியும்: சரத் பொன்சேகா பிரிவினைவாதத்துக்கான பொது எதிரியை அழித்தொழிப்பதிலும் எமது தாய்நாட்டின் ஒருங்கிணைப்பைக் கட்டிகாப்பதிலும் நாங்கள் ஒன்று சேர்ந்து முன்வந்துள்ளோம் என்று சிறிலங்கா இராணுவத்தினருக்கான புத்தாண்டுச் செய்தியில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். இந்த நாட்டைப் பிரிக்கும் நோக்கில் பல பயங்கரவாதச் செயல்கள் அரங்கேறுகின்றன காட்டுமிராண்டித்தனமான பிரிவினை சக்திகளால் முடிவற்ற குற்றச்செயல்கள் இடம்பெற்று வருகின்றன வருகின்றன என்று கூறிய அவர் இந்நிலையில் கட்டுப்பாடுடனும் ஒழுங்கோடும் மனித உரிமையைக் காக்கும் வகையில் செயற்படும் தமது இராணுவத்தினரை அவர் பாராட்டினார். நாட்டின் அனைத்துக் குடிமக்க…
-
- 6 replies
- 1.7k views
-
-
விடுதலைப்புலிகள் பதுங்குகின்றனரா அல்லது பலவீனப்பட்டு விட்டனரா? என்பதே இன்று கொழும்பிலுள்ள இராணுவ ஆய்வாளர்களின் முக்கிய ஆய்வுப் பொருளாகவுள்ளது என ஈழநாதம் பத்திரிகையின் வார இதழின் பிரதம ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தனது ஆய்வில் தெரிவித்துள்ளதாவது:- இலங்கை இராணுவத்தரப்பின் தகவல்களைப் பெரும்பாலும் அடிப்படையாகக் கொள்ளும் ஆய்வாளர்களுக்கு இராணுவத்தரப்பால் இறுதியாக வழங்கப்பட்டுள்ள தகவலானது, விடுதலைப்புலிகள் பலவீனமடைந்து விட்டார்கள்: அவர்கள் வலிந்த தாக்குதலில் ஈடுபடும் சக்தியை இழந்து விட்டார்கள் என்பதாகும். இது குறித்து அண்மையில் பேசியிருந்த இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலைப் புலிகளில் 9000 பேரைக் கொன்று விட்டதாகவும், இன்னமும், 4000- …
-
- 2 replies
- 1.7k views
-
-
பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எழுதிய கடிதங்களும், அதற்கு பிரதமரின் பதில் கடிதங்களும் - வைகோநேரில் பிரதமரை சந்தித்த போது நிகழ்ந்த உரையாடல்களும், தொகுக்கப்பட்டு ‘குற்றம் சாட்டுகிறேன்’ எனும் தலைப்பில் ம.தி.மு.க. சார்பில் நூலாக வெளியிடப் பட்டுள்ளது. ஜூலை 15 ஆம் தேதி சென்னையில் நடந்த வெளியீட்டு விழாவில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்றுப் பேசினார். இந்தியாவின் துரோகத்தை அம்பலப் படுத்தும் ஆவணமாக இந்நூல் வெளிவந்திருப்பதை சுட்டிக் காட்டியும், அரசியல் தளத்தில் ஈழ விடுதலையை முன்னெடுக்க வேண்டிய அவசியம் குறித்தும் கழகப் பொதுச்செயலாளர் பேசினார். நூலில் அடங்கியுள்ள இந்திய துரோகத்தை அம்பலப் படுத்தும் செய்திகளின் சுருக்கமான தொகுப்பு இது. …
-
- 0 replies
- 1.7k views
-
-
இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பால் இலங்கை சீற்றம் இலங்கை கடற்படையினர் 1991 ஆம் ஆண்டு முதல் கடந்த ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை 77 இந்திய மீனவர்களை கொலை செய்திருப்பதாக இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி அந் நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்திருப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் சீற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ் விவகாரம் தொடர்பாக கொழும்பு புதுடில்லியுடன் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இதேநேரம், இவ்வாறான மிகைப்படுத்தலுடனான அறிக்கையை விடுத்ததன் மூலம் அந்தோனி நேர்மையற்று நடந்து கொண்டிருப்பதாக இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளும் ஏனைய தனி நலன் சார்ந்தவர்களுமே …
-
- 2 replies
- 1.7k views
-
-
இலங்கை வான்படைக்குச் சொந்தமான ஆள் இல்லா உளவு விமானம் அனுராதபுரத்தின் நுவரவௌ பிரதேசத்தில் அவசரமாகத் தரையிறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறின் காரணமாக இவ்வாறு அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை 8.45 அளவில் விமானம் அனுராதபுரத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு விமானப்படைப் பேச்சளாரைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும் அந்த முயற்சி பயனளிக்கவில்லை. இந்திய விமானமொன்றும் அண்மையில் அவசரமாக தரையிறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது நன்றி தமிழ் வின்
-
- 4 replies
- 1.7k views
-
-
ஜெனிவாவில் சிறிலங்கா அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தீர்மானம் தொடர்பாக, அமெரிக்காவுடனேயே பேசும்படி, சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்தியா ஆலோசனை கூறியுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித், இந்திய நாடாளுமன்றத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளத்தக்க இணக்கம் ஒன்றை எட்டுவதற்கு, ஜெனிவா தீர்மான வரைபு தொடர்பாக, அமெரிக்காவுடன் சிறிலங்கா நேரடிப் பேச்சு நடத்த இந்தியா ஊக்குவிக்கப் போவதாக சல்மான் குர்சித் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மான வரைபில், இந்தியாவே திருத்தம் செய்து, அதன் கடுமையைக் குறைத்திருந்தது. இம்முறையும், அதேபோன்று அமெரிக்காவின் தீர்மான வரைபின் இறுக்கத்தைக் குறைக்க,…
-
- 11 replies
- 1.7k views
-
-
மன்னார் வளைகுடாவுக்கு அதி நவீன ரோந்துக்கப்பலை அனுப்பியது இந்தியா [20 - January - 2008] [Font Size - A - A - A] இராமேஸ்வரம்: மன்னார் வளைகுடாப் பகுதி வழியாக வெளியார் ஊடுருவுவதைத் தடுக்க அதி விரைவு ரோந்து போர்க்கப்பல் இராமேஸ்வரம் பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இராணுவத்துக்கும் புலிகளுக்கும் தீவிர சண்டை நடந்து வருவதால் இந்தியாவின் மன்னார் வளைகுடாப் பகுதி வழியாக போராளிகள் ஊடுருவும் அபாயம் உள்ளதாகவும் இவ்வழியாக ஆயுதக் கடத்தலும் நடப்பதாக தகவல் வெளியானதால் கடற்படையினருடன் கடலோரக் காவல் படை பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால், இவர்கள் ஆதாம்பாலத்தைக் கடந்து சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதில் சிரமம் இருந்தது. எனவே, மன்னார் …
-
- 0 replies
- 1.7k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெஃப் கிளையானது வன்னியில் உள்ள விடுதலைப் புலிகளுக்கு குண்டு துளைக்காத வாகனங்களை வழங்கியிருப்பதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.7k views
-
-
முள்ளிவாய்க் காலில் சமர் முற்றுப் பெற ஒரு வார காலம் இருக்கும் தருவாயில் இலங்கை ராணுவம் மக்களை ராணுவ கட்டுப் பாட்டு பிரதேசங்களுக்கு வருமாறு ஒலிபெருக்கி மூலம் மக்களிடம் பிரச்சாரத்தினை மேற்கொண்டு இச்செய்தியை அனைத்து சிங்கள ஊடகங்களும் சர்வதேச ஊடகங்களும் ஒலிபரப்பு செய்து இலங்கை ராணுவத்திற்கு ஒரு நற்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் செயல் பட்டுக்கொண்டிருந்தன. இறுதி சமரின் இறுதி நான்கு நாட்களில் ராணுவம் மக்கள் மீது கண்மூடித் தனமான தாக்குதல்களை இரவு பகலாக மேட்கொண்டிருந்தது. அமெரிக்க பசிபிக் பிராந்தியத்தின் கடற்படைத் தளபதி மக்களைக் காப்பாற்ற தனது கடற்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக விடுக்கப்பட்ட அறிக்கை மேல் மக்கள் நம்பிக்கை வைக்கிறார்கள். ஒபாமாவும் பங்கிற்கு ஒரு அவசர…
-
- 4 replies
- 1.7k views
-
-
’’தந்தை பெரியாருக்கு காங்கிரசை அழிக்க வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தது. அதை நிறைவேற்ற அவருடைய பேரனாக நான் சிறையில் இருந்து புலியாக வெளிவந்து உள்ளேன். இன்னும் 10 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து பேசுவேன். இலங்கையில் திட்டமிட்ட இனப்படுகொலையை நடத்துகிறது சிங்கள ராணுவம். அதற்கு துணை போகிறது என் தேசம். இறையாண்மை பேசும் என் தேசம், தலாய்லாமா நாட்டை பிரித்து கேட்டால் ஆதரவு அளிக்கிறது. தமிழர்கள் நாட்டை கேட்டால் ஒழிக்க நினைக்கிறது. அப்போது சீனாவுக்கு இறையாண்மை, ஒருமைப்பாடு இல்லையா?. யாரும் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தராத நிலையில் தனி ஈழம்தான் தீர்வு என்று ஜெயலலிதா கூறி இருக்கிறார். அவரை வணங்குகிறேன். நான் இப்போது இந்தியா உள்பட உலக நாடுகளை கேட்பது எல்லாம…
-
- 0 replies
- 1.7k views
-
-
முகமாலை முன்னரங்கப் பகுதியில் புலிகள் அமைத்துள்ள அதியுச்ச போர் யுத்தி மற்றும் கண்ணிவெடி பொறியமைப்பை கண்டு மனிதநேய கண்ணிவெடியகற்றும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் அதிர்ந்துபோயுள்ளதாக சம்மந்தப்பட்ட தரப்புக்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. தற்போது குறித்த பகுதியில் கண்ணிவெடியகற்றும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில், குறித்த பகுதியில் முன்னரங்கப் பகுதியில் முழுமையாக கண்ணிவெடியகற்ற சுமார் 2 வருடங்கள் எடுக்கும் என அந்தப் பகுதியில் கண்ணிவெடியகற்றும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளதுடன், மொத்தமாக கண்ணிவெடியகற்ற சுமார் 7வருடங்கள் எடுக்கும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, புலிகள் முன்னரங்கப் பகுதியில் இலகுவில் கண்டறிய முடியாததும், அபாயகரமானதுமான கண…
-
- 5 replies
- 1.7k views
-
-
2010 ஆம் ஆண்டு 5 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபெறுகள் வெளியாகியுள்ளன. இதில் திருக்கோவில் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தின் மாணவி மாளவன் சுபதா 193 புள்ளிகளை பெற்று தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடம்பெற்றுள்ளார். இந்தநிலையில், அகில இலங்கை ரீதியில் கண்டி கல்வி வலயத்திற்கு உட்பட்ட கலஹா ராமகிருஸ்ண மத்திய கல்லூரி மாணவன் என்.எஸ்.என்.ஸபீர் 2 வது இடத்தை பெற்றுள்ளார். இவர் 192 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இதேவேளை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த ஜெனிஸ் ஜீட் விதுசன் பிஃகுராடோ 190 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர் அகில இலங்கை ரீதியில் 3 வது இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. முதலிடத்தில் சித்தியடைவேன் என்று கன…
-
- 15 replies
- 1.7k views
-
-
அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பவர்கள்..... -பொன்னிலா- அமெரிக்கப் படைகளால் வியட்நாம் மக்கள் மீது கொட்டப்பட்ட குண்டுகள் இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகம். அமெரிக்கப்படைகள் வியட்நாம் மக்கள் மீது கொட்டிய குண்டுகளை விட சிறிலங்கா அரசு ஈழ மக்கள் மீது கொட்டிய குண்டுகள் ஐந்து மடங்கு அதிகம். இரண்டாம் உலகப் போர்ச்சூழலை விட படுபயங்கரமான குண்டுக் கழிவுகள் தமிழர் தாயக நிலங்களின் மீது கொட்டப்பட்டிருக்கின்றன. 'அவர்கள் எங்களின் பூர்வீக கிராமங்களுக்குள் நுழைந்த போது நாங்கள் எங்கள் நெல் வயல்களை தீயிட்டுக் கொழுத்தினோம். எமது மக்கள் காலம் காலமாக குடிநீராக பயன்படுத்தி வந்த கிணறுகளில் எண்ணெய்களை எடுத்து ஊற்றினோம். அன்று எங்கள் கண்களில் வழ…
-
- 0 replies
- 1.7k views
-
-
வடக்கை வளர்க்கும் இளம் தொழில்முனைவோர் ஜெகன் அருளையா ஜெகன் அருளையா ஜெகன் அருளையா இலங்கையில் பிறந்து, தனது இரண்டாவது வயதிலேயே பிரித்தானியாவுக்குத் குடும்பத்துடன் புலம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்த அவர் 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றவர். இரண்டு தசாப்தங்களாக தகவற்தொழில்நுட்பத்திலும், அதில் பாதிக் காலம் பிரித்தானிய நிறுவனங்களுக்கு மென்பொருள் தயாரிக்கும் பணியில், கொழும்பிலும், கூர்கவோன் (இந்தியா) விலும் தங்கியிருந்தார். 2015 இல் அவர் யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயர்ந்து அங்கு சமூக, பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். லங்கா பிசினஸ் ஒன்லைன் இணையத்திற்கு ஆங்க…
-
- 3 replies
- 1.7k views
-
-
புலிக்கொடியென்பது தமிழர்களின் வரலாற்றுக்கால சோழ மன்னர்களிற்குரிய , அவர்களின் வீர வரலாற்றை பறைசாற்றிய கொடியென்பது சரித்திரம். அந்தவகையிலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் தமக்கான கொடியாக, சின்னமாக புலிக்கொடியை தேர்ந்தெடுத்திருந்தனர். தற்போதும் தமிழரின் வீரத்தினை இப்புலிக்கொடியே பறைசாற்றி வருகின்றது. அண்மையில் அனைத்துலக நாடுகளில் நடந்த தமிழர் எழுச்சிகள் அனைத்திலும் விடுதலைப் புலிகளைக் குறிக்கும் புலிக்கொடி பாவிக்கப்பட்டிருந்ததானது பல மட்டங்களில் பலவிதமாக பேசப்பட்டிருக்கிறது. அதற்கு எதிராக மற்றும் ஆதரவாக எழுப்பப்பட்டுள்ள கருத்துக்களை உற்றுநோக்கும்போது, தமிழீழ தேசியக்கொடியான புலிக்கொடி பாவிக்கப்பட்ட விடயம் அனைவர் மத்தியிலும் ஏதோவொரு தாக்கத்தினை உண்டுபண்ணியிருக்கிறது என்பது தெளி…
-
- 3 replies
- 1.7k views
-
-
“மிக முக்கியமான பாத்திரத்தை ஏற்றால் விக்கியின் தலைமையின் கீழ் சந்தோசமாகச் செயற்பட நாங்கள் தயார்”..... எம்.ஏ.சுமந்திரன் “தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தலைமைப் பாத்திரத்தில் தவறிவிட்டது என்று கூறிக்கொண்டிருப்பவர், மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக நிற்க முடியாது. அதற்குச் சாத்தியமில்லை. ஆனால், தானே விரும்புகின்ற தனது நான்காவது தெரிவின்படி, கட்சி அரசியலைவிட்டு விலகி — இங்கே இருக்கின்ற அரசியல் கட்சிகளையும், வெளிநாடுகளில் இருக்கின்ற தமிழ் அமைப்புக்களையும் ஒருங்கிணைத்து — தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வினைப் பெறும் முயற்சியின் ஒட்டுமொத்தமான தலைமை பாகத்தை வகிக்கும் மிக முக்கியமான பாத்திரத்தை ஏற்க அவர் முன்வருவாரானா…
-
- 10 replies
- 1.7k views
-
-
சீனாவின் காதல் சிக்கலில் தள்ளுமா? இந்து சமுத்திரத்தில் சீனாவின் தலையீடுகள் அதிகரிப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது என்று கூறியிருந்தார் இலங்கை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய. இவர் இதைச் சொன்னது கொழும்பில் அல்ல, இந்தியாவில் அதுவும் டேராடூனில் உள்ள இந்தியா இராணுவத்தின் பயிற்சித் தலைமையகத்தில் தான் இதைக் கூறியுள்ளார். ஒரு வாரகால இந்தியப் பயணத்தை மேற்கொண்டிருந்த போது, டேராடூனில் பயிற்சி பெற்று வெளியேறிய இந்தியப் படையினரின் அணிவகுப்பு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னரே அவர் இவ்வாறு கூறியிருந்தார். இந்தியப் பெருங்கடலில் சீனாவின் தலையீடுகள் பற்றிய, அவரது இந்தக் கருத்து இந்தியாவுக்கு திருப்தியைக் கொடுத்திருக்குமா என்பது சந்தேகம் தான். ஏனென்றா…
-
- 9 replies
- 1.7k views
-
-
பெண் அதிகாரி கடத்தப்பட்ட சம்பவம் – வெளிவிவகார அமைச்சு முக்கிய தகவல் சுவிஸ் தூதரகத்தில் பணிபுரிந்த பெண் அதிகாரி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் வழங்கிய தகவல்களில் முரண்பாடுகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முடிவுகளை தெளிவுப்படுத்துவதற்கான சந்திப்பொன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆர்யசிங்ஹ, பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் சுவிட்சர்லாந்தின் தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மொக் ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன்போதே அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. சு…
-
- 16 replies
- 1.7k views
-