Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசிலிருந்து... வெளியேற தயாராகின்றது, இ.தொ.கா – முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார் ஜீவன் தொண்டமான்! அமைச்சு பதவிகள் அல்ல, மக்களின் தீர்மானமே காங்கிரசுக்கு முக்கியம். எனவே, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றப்படாவிட்டால் அரசிலிருந்து இ.தொ.கா. வெளியேறும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசின் பங்காளிக்கட்சியாக இருந்தாலும், மக்களை பாதுகாப்பதே எமது முதன்மை நோக்கமாகும். …

    • 7 replies
    • 506 views
  2. நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15 ம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பையேற்று 15ம் திகதி இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்லும் ஜனாதிபதி 18ம் திகதி வரை அங்கு தங்கியிருப்பாரென ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்திக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இருதரப்புப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவார்.அத்துடன், அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து அவர் பேசவுள்ளார். இதேவேளை, பெளத்தர்களின் புனித தலமான புத்தகயாவுக்குச் செல்லவுள்ள அவர், அங்கி…

  3. சர்வதேச சட்டங்களுக்கு அமைய அமெரிக்காவிற்கு எதிராக நடவடிக்கை – இலங்கை! பிரசுரித்தவர்: NILAA August 9, 2011 அமெரிக்க தாக்குதல் ஜெட் வானூர்திகள் சில இலங்கை வான்பரப்பில் அத்துமீறி பறந்தமை தொடர்பில் உடனடி அறிக்கை சமர்பிக்குமாறு பொது வானூர்தி சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பாக அறிவுறுத்தல் தமக்கு அமைச்சரிடம் இருந்து கிடைத்துள்ளதாக வானூர்தி சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் எச்.எம்.சி.நிமலசிறி தெரிவித்தார். இதன்படி தாம் அறிக்கையை தயாரிக்கும் பணிகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கை கிடைக்கப் பெற்றதும் விடயங்களை ஆராய்ந்து சர்வதேச சட்டத்திட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்…

  4. 08 MAY, 2024 | 02:34 PM வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையை ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், முழுமையான கடன் மறுசீரமைப்புப் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுப்பதன் மூலம் இலங்கையின் கடன் சுமையை 17 பில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைக்க முடியும் என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கடன் தவணையைப் பெற்ற பின்னர் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளைத் தொடர முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று புதன்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இதனைத் …

  5. சிங்களப்படைகளின் பாரிய புதை குழியாக வன்னி பெருநிலப்பரப்பு - அதன் படுதோல்வி வெகுதொலைவில் இல்லை -எல்லாளன் 1995 இல், யாழ் குடாநாட்டிலிருந்து ஒரு தந்திரோபாயப் படைவிலகலைப் புலிகள் இயக்கம் செய்திருந்தது. அதன் பின்னர், வன்னிப் பெருநிலப்பரப்பில் விடுதலைப் போராட்டம் மையம் கொண்டு பன்னிரெண்டு வருடங்கள் பூர்த்தியாகி விட்டன. இந்தப் பன்னிரெண்டு வருடங்களில் நாலரை வருடங்கள் சமாதான காலமாகக் கழிந்திருந்தன. மிகுதி 8 வருடங்களும் போர்க்காலமாகக் கழிந்து கொண்டிருக்கின்றன.இந்த 8 வருடப் போர்க்காலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்த வகையில் போரியல் முக்கியத்துவம் வாய்ந்த காலப் பகுதியாகும். இக்காலத்தில்தான் புலிகளின் மரபுவழிப் போர் ஆற்றல் உலகிற்குத் தெரியவந்த சமர்கள் நிகழ்ந்த கால…

  6. பலத்த இழுபறியின் பின்னர் ஒருவாறு வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்த இலங்கை அரசாங்கம் முன்வந்திருக்கிறது. கூடவே முதலமைச்சர் வேட்பாளரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்து விட்டது. தமிழர் உரிமைக்காகப் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் உயிரைப் பணயம் வைத்து உழைத்த எத்தனையோ பேர் இருக்கையில்; நீதி நேர்மை தெரிந்த சட்ட நுணுக்கங்களை நன்கறிந்த கல்வியாளரென்ற வகையில் முன்னாள் நீதியரசர் ஒருவர் முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அனுபவப்பட்ட அரசியல் தலைமைத்துவத்தைக் காட்டிலும், படித்த, உயர் பதவி வகித்த ஒருவரையே முதலமைச்சர் வேட்பாளராக வைக்க வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவின் சாதக பாதகங்களை இப்போது எதிர்வுகூறுவது அவ்வளவு எளிதானதல்ல. …

  7. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு கிழக்கு நகரசபை உறுப்பினர்கள் உட்பட பல உறுப்பினர்கள் இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துக் கொண்டனர். 09 November 09 02:12 pm (BST) வடக்கு கிழக்கு மாநகரச சபைகளைச் சேர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, டெலோ, ஐக்கிய தேசியக்கட்சி, மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 26 உறுப்பினர்கள் இன்று உத்தியோகபூர்வமாக லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துக் கொண்டனர். இன்று மாலை 5.30 மணியளவில் அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷமுன்னிலையில் அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொள்வதாக தெரிவித்தனர். இந்த நிகழ்வில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செய…

  8. வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட குடும்பத் தலைவர் உயிரிழப்பு நல்லூர் சங்கிலியன் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட குடும்பத் தலைவர் இன்று காலை உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. 4 மோட்டார் சைக்கிள்களில் 8 பேர் கொண்ட குழுவென்று குறித்த குடும்பத் தலைவரை நேற்றுக் கடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை குறித்த குடும்பத் தலைவர் சங்கிலியன் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு யாழ் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையிலேயே இவர் இன்று மதியம் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. http://newuthayan.com/story/29963.html

  9. சிறிலங்கா படைகளில் சிறார்கள் சேர்ப்பு தொடர்பாக சிறிலங்கா விளக்கம் [புதன்கிழமை, 31 டிசெம்பர் 2008, 06:19 மு.ப ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்கா படைகளில் சிறார்கள் சேர்க்கப்படுவது தொடர்பாக சிறிலங்கா படைத்தரப்பு விளக்கம் அளித்துள்ளது. சிறிலங்கா படைத்தரப்பு பேச்சாளர் உதய நாணயக்கர கூறியுள்ளதாவது: முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளுடனான மோதலில் கொல்லப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்த மொகொட்டிக ரவி துஸ்மந்த (அடையாள அட்டை எண்: 911780313 V) என்பவரின் புகைப்படத்தை விடுதலைப் புலிகள் ஆதரவு இணையத்தளம் வெளியிட்டது. அந்த இணையத்தளம் வெளியிட்ட புகைப்படமும் பெயரும் சரி. ஆனால் அடையாள அட்டை மட்டும் போலியாக விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்டது. படைத்தரப்புக்கு எதிரான பரப்புரைக்காக அது உர…

  10. தற்போதைய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எத்தகைய குழப்பவாதியாக இருந்தார், தனக்கு எப்படி, எத்தகைய துரோகங்களைச் செய்தார் என்பதை, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள விரிவான செவ்வியில் விளக்கியுள்ளார். அந்தச் செவ்வியின் முக்கியமான பகுதிகளின் தொகுப்பின் நிறைவுப் பகுதி இது:- முதற்பகுதியினை படிக்க : “மகிந்தவின் துரோகங்கள்” – மனந்திறக்கிறார் சந்திரிகா கேள்வி – 2000ம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர், நீங்கள் உங்கள் தாயாரை பிரதமர் பதவியில் இருந்து எதற்காக நீக்கினீர்கள்? சந்திரிகா - உண்மையில், எனது தாயார் தன்னை பதவியில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அ…

  11. இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உடனடிக் கவனம் செலுத்த வேண்டும் என தென், மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் பிரதிச் செயலாளர் றொபர்ட் ஓ பிளேக் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக வடபகுதியில் வாழும் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு, தேசிய மீள் இணக்கம் ஆகியவற்றை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் எனவும் பி.பி.சி செய்திச்சேவைக்கு வழங்கிய பேட்டியில் அவர் கூறினார். இதேவேளை, இராணுவப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவை இலங்கை அரசாங்கம் கையாளும் விதம் குறித்தும் அமெரிக்கா அதிருப்தி வெளியிட்டுள்ளது. ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைது குறித்து கொழும்பு சட்ட ஒழுங்குகளை பின்பற்ற வேண்டும் எனவும் றொபர்ட் ஓ பிளேக் வலியுறுத்தினார். ht…

  12. ரம்புக்கனை சம்பவம் : ஆழ்ந்த மனஉளைச்சலுக்கு... ஆளான, பிரதமர் ! ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பொலிஸாரால் பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாக பிரதமர் கூறியுள்ளார். இதேவேளை போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தமது உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ரம்புக்கனை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் ரம்புக்கனையில் இடம்பெற்ற அனர்த்தத்தைத் தொடர்ந்து ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com…

  13. அனந்தியின் ஜெனிவா உரை – அமைச்சரவையிலும் எதிரொலித்தது. [saturday, 2014-03-22 08:42:12] இலங்கையின் உண்மையான நிலைமைக்குப் புறம்பான தகவல்களை புலி உறுப்பினர் எழிலனின் மனைவியான அனந்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கூறியிருப்பதாக, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவைக்கு விளக்கமளித்துள்ளார்.அமைச்சரவைக்கு அறிக்கையொன்றை சமர்ப்பித்து விளக்கமளித்த அமைச்சர், புலிகளுக்கு சிறுவர் போராளிகளை இணைப்பதற்கு ஒத்துழைப்பாகவிருந்த அனந்தி, ஜெனீவா சென்று இலங்கையின் உண்மை நிலைக்குப் புறம்பான தகவல்களையும், வடமாகாணம் தொடர்பான பொய்யான தகவல்களையும் வழங்கியிருப்பதாகச் சுட்டிக்காட்டினார். இலங்கை அரசாங்கம் மீது அவர் போ…

    • 7 replies
    • 783 views
  14. சிங்கள மக்கள் காலம் காலமாக வாழ்ந்தனராம் – அவர்களை மீளக்குடியேற்ற வேண்டுமாம் – சொல்கிறார் சிங்களக் கைக்கூலி ராகவன் http://meenakam.com/?p=11100 யாழ்ப்பாணத்தில் காலம் காலமாக சிங்கள மக்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன என்று லண்டனில் இருந்து யாழ் வந்துள்ள சிங்கள கைக்கூலி ராகவன் குறிப்பிட்டுள்ளார். கி.பி 15 நூற்றாண்டு முதல் நடத்தப்பட்ட கணக்கெடுப்புக்களின்படி 1000 வரையிலான சிங்கள மக்கள் வாழ்ந்துள்ளதை யாழ்ப்பாண வைபவமாலை மற்றும் யாழ்ப்பாண சரிதம் முதலிய நூல்கள் சொல்லுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர் 1984ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி திருமணம் செய்து கொண்டு புலம்பெயர்ந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மத்திய குழு உறுப்பி…

    • 7 replies
    • 1.2k views
  15. இவ்வருடத்திற்குள் தீர்வை பெற்றுக்கொடுப்பதில் அமெரிக்கா உறுதி! – சம்பந்தன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஐ.நா.வுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இவ்வருடத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளதென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் எமது ஆதவன் செய்திச் சேவைக்கு தெரிவித்தார். இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகராக கடமையாற்றி வந்த அதுல் கெஷாப், தனது பதவிக்காலம் நிறைவடைந்து செல்லவுள்ளார். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரை இன்று (வியாழக்கிழமை) அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியதோடு, புதிய உயர்ஸ்தானிகரையும் அறிமுகப்படுத்தினார். குறித்த சந்திப்பைத…

    • 7 replies
    • 1.2k views
  16. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் (FAO) கொள்வனவு செய்யப்பட்ட 3,820 தொன் யூரியா நெல் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக இன்று விவசாய அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை, பதுளை, அம்பாறை, மாத்தளை, புத்தளம், குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் உள்ள 72,200 சிறு நெல் விவசாயிகளுக்கு யூரியா உரத்தின் புதிய இறக்குமதி அனுப்பப்படும் என இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுடன், அடையாளம் காணப்பட்ட நெல் உற்பத்தியாளர்களிடையே ஒருங்கிணைந்த தாவர ஊட்டச்சத்து முகாமைத்துவ மூலோபாயத்தை அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவளிக்கிறது. இலங்கையின் நெற் செய்கை துறைக்கு…

  17. [size=4][/size] [size=4]கொழும்பில் திடீரெனப் பெருமளவு தெருநாய்கள் மர்மமான முறையில் காணாமற்போயுள்ள நிலையில், கொழும்பு நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சி கலந்து விற்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் தெருநாய்கள் திடீரெனக் காணாமற் போயுள்ளதை சிறிலங்கா காவல்துறையும், பிராணிகள் நல அமைப்புகளும் உறுதி செய்துள்ளன. கொழும்பு விகாரமாதேவி பூங்கா பகுதியில் காணப்பட்ட 10 வரையிலான தெருநாய்கள் திடீரெனக் காணாமற் போயுள்ளன. இந்தநிலையில், கொழும்பிலுள்ள இறைச்சிக் கடைக்காரர் ஒருவர், ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சி கலந்து விற்கப்படுவதை உறுதி செய்துள்ளார். அதேவ…

  18. சரணடைந்தவர்களை இராணுவம் கொன்றது; உறுதியாகக் கூறுகின்றார் எரிக் சொல்ஹெய்ம் “பிரபாகரனின் 12 வயது மகன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர் கொல்லப்பட்டார். இதில் எமக்கு மிக மிக உறுதியான சந்தேகம் உண்டு. இது இலங்கை இராணுவத்தின் பொறுப்பற்ற மிகத் தீய செயலாகும். துரதிர்ஷ்டவசமாக, இலங்கை இராணுவம் ஏன் சரணடைய வந்தவர்களை ஏற்று அவர்களை நீதிமன்றின் முன்னிலையில் நிறுத்தாமல் கொலை செய்தது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார் இலங்கைக்கான முன்னாள் விசேட தூதுவரும், 2002 – 2006 காலப்பகுதியில் புலிகள் – அரசு சமாதானப் பேச்சை முன்னின்று நடத்தியவருமான எரிக் சொல்ஹெய்ம். இந்தியாவின் ‘வியோன்’ சனல் என்று அழைக்கப்படும் ‘வேர்ள்ட் இஸ் வன் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு …

  19. மஹிந்தவுக்கு மன்மோகன் அழைப்பு- 13ஆவது திருத்தத்தை அமூல்படுத்தவும் வலியுறுத்தல் 11 ஏப்ரல் 2013 கொழும்புக்கு சென்றுள்ள இந்திய நாடாளுமன்ற குழுவிடம் பிரதமர் மன்மோகன் கடிதம் ஒன்றை வழங்கியதாக தெரியவருகின்றது. அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிடம் கடிதத்தை நாடாளுமன்ற குழு கையளித்ததாகவும் அந்த கடிதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கொடுப்பட்டுள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் ஊடாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வருகிறது. 13ஆவது திருத்தச் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் வடமாகாண சபைத் தேர்தல் நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்தாகவும் இந்திய செய்தியாளர்களை மேற்கோள்காட்டி கொழும்பு அரசியல் வ…

  20. 5 எம்.பிக்கள் ஜேர்மனி பயணம் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் உள்­ளிட்ட 5 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், ஜேர்­ம­னி­யின் அர­ச­மைப்­புத் தொடர்­பில் ஆராய்­வதற்காக 5 நாள் பய­ண­மாக இன்று புறப்­பட்­டுச் செல்­ல­வுள்­ள­னர். இலங்கைக்கு அண்மையில் வந்திருந்த, ஜேர்மன் சபாநாயகர் இதற்கான அழைப்பை விடுத்திருந்தார். அரசியல் பார்வை என்ற தலைப்பில் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது. இந்தப் பயணத்தின்போது ஜேர்மனியின் அரசமைப்பு, அங்குள்ள நடைமுறைகள் தொடர்பில் நேரில் ஆராயப்படவுள்ளது. இந்தக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சபாநாயகர் கரு ஜயசூரியா, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், சரத் அமுனுகம, கயந்த கருணாதிலக, நாடாளுமன்ற உறுப்பின…

  21. http://www.channel4.com/news/sri-lanka-white-vans-interview-leena-manimekalai-video

    • 7 replies
    • 1.3k views
  22. யாழ்அச்சுவேலியில் இராணுவத்தினர் தேர் இழுத்தனர் – (படங்கள் இணைப்பு) அச்சுவேலி உலவிக்குளம் சித்திவிநாயகர் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழாவின் போது அச்சுவேலி இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் தேர் இழுத்தனர். அச்சுவேலி சித்திவிநாயகர் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது. அதன் போது ஆலயத்திற்கு இராணுவ சீருடையில் வந்த இராணுவத்தினர் தமது மேலங்கியை கழட்டி தேர் வடம் பிடித்து தேர் இழுத்தனர். இராணுவத்தினரின் திடீர் செயற்பாட்டை கண்ணுற்ற பக்தர்கள் செய்வதறியாது இருந்தனர். http://globaltamilnews.net/2018/89487/

  23. ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்பு சற்றுமுன்னர் உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியானால் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் நான்குகரை வருடங்கள் ஆவதற்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது எனவும் அவ்வாறு கலைக்க வேண்டுமானால் பாராளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது அவசியம் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அப்போது பிரதமாராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார். அதிலிருந்து நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக…

  24. இந்தியாவில் இருந்து அதிக அளவில் வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதால், சீன வெங்காயத்தின் தேவை குறைந்துள்ளதால், அவற்றை கையிருப்பில் இருந்து நீக்க வேண்டியுள்ளதாக புறக்கோட்டையில் உள்ள வர்த்தகர்கள் கூறுகின்றனர். கடந்த நாட்களில் ஒரு கிலோ சீன வெங்காயம் 300 ரூபாவுக்கு விற்கப்பட்டதாகவும், தற்போது ஒரு கிலோ சீன வெங்காயம் 100 ரூபாவுக்கு கூட விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். நெதர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் இரண்டு கிலோ 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ இந்திய வெங்காயத்தின் விலை 150 முதல் 250 ரூபா வரை குறைந்துள்ளது. இந்திய வெங்காய இறக்குமதி; தேவை இழந்த சீன வெங்காயம் (newuthayan.com)

      • Thanks
      • Like
    • 7 replies
    • 674 views
  25. தமிழர்களுக்கு எதிரான போரில் சிறிலங்கா படையினர் இந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் வரை மொத்தம் 1,099 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 7 ஆயிரம் படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா படைத்தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.