ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
தென்மராட்சியில் இராணுவ நிலைகளிலிருந்து பாதுகாப்பாக இடம்பெயர மக்களுக்கு புலிகள் வேண்டுகோள் யாழ். முகமாலையில் சிறிலங்கா இராணுவம் தாக்குதல்களுடன் முன்நகர்வுகளை மேற்கொண்டுள்ள நிலையில் தென்மராட்சி பிரதேசத்தில் இராணுவ முகாம்களிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வமான அறிவித்தலை மக்களுக்கு விடுத்துள்ளனர். கிளாலி புலோப்பளை மந்துவில் எழுதுமட்டுவாள் வரணி கச்சாய்இ மீசாலைஇ கொடிகாமம் உட்டபட்ட தென்மராட்சி மக்களை இராணுவ நிலைகளுக்கு அண்மைணயில் இருக்காது பாதுகாப்பான இடங்களுக்கு அதாவது இராணுவ முகாம்களிலிருந்து 1 கிலோ மீற்றர் தொலைவுக்கு இடம்பெயருமாறு மக்களுக்கு விடுதலைப் புலிகள் அறிவுறுத்தல் விடுத்துக் கொண்டிருக்கின்றனர். …
-
- 4 replies
- 1.7k views
-
-
கருணாவிற்கு அமைச்சுப் பொறுப்பு? தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த கருணாவிற்கு எதிர்காலத்தில் அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படக் கூடுமென அரசாங்க வட்டாரத் தகவல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில் அமைச்சுப் பொறுப்பிலிருந்து விலகிய கரு ஜயசூரியவின் வெற்றிடத்திற்கு கருணா நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், குறித்த அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படுமா என்பது குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை. கிழக்கு தமிழ் மக்களை அமைச்சரவை ரீதியில் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கில் கருணாவிற்கு அமைச்சுப் பொறுப்பை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக அமைச்சுப் பதவி அமைச்சர் சரத் அமுனுகமவிற்கு வழங்கப்பட உள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்குப் ப…
-
- 4 replies
- 1.7k views
-
-
தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 54.25 விழுக்காடு தமிழர்கள் தமது கருத்துக்கணிப்பில் ஆதரவு தெரிவிப்பதாக தமிழ்நாட்டின் முன்னணி ஏடான "ஆனந்த விகடன்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 10 replies
- 1.7k views
-
-
புலிகள் என நினைத்து படையினருக்கு இடையே தவறுதலான மோதல் திகதி: 04.01.2009 // தமிழீழம் // [விடியல்] மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பகுதியிலுள்ள முனைக்காடு கிராமத்தில் நேற்று சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் சிறிலங்கா விசேட அதிபடிப்படையினருக்கு இடையே ஏற்பட்ட தவறுதலான மோதல் ஒன்றின்போது ஒரு விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்தோடு, ஒரு பொதுமகனும் காயமடைந்துள்ளதாக மட்டக்களப்பிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகள் என இரு பகுதியினரும் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டதாக தெரியவருகின்றது. சங்கதி
-
- 0 replies
- 1.7k views
-
-
சிறுவர்களை பலவந்தமாக துணைப்படையில் இணைக்கும் அரச படையினரை உடன் கைது செய்ய வேண்டு-நியுயோக் மனித உரிமை அமைப்பு [Thursday November 16 2006 01:14:40 PM GMT] [யாழ் வாணன்] நியூயோர்க்கை தலைமையகமாக கொண்ட மனித உரிமைக்கான அமைப்பு பலவந்தமாக சிறுவர்களை இராணுவத்துடன் சேர்த்து இயங்கும் படையில் இணைகும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ள படையினரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளது என ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா சிறுவர் மற்றும் ஆயுத மோதல் தொடர்பான பிரதிநிதி அலன் ரொக் சிறுவர் பலவந்தமாக கருணாகுழுவின் உதவிஉடன் ஸ்ரீலங்கா இராணுவம் படையில் சிறுவர்களை இணைக்கிறது. என குற்றம் சாட்டியுள்ளாதை நியூயேர்க்கை தலைமையகமாக கொண்ட மனித உர…
-
- 2 replies
- 1.7k views
-
-
நாய் குரைத்தமைக்கும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று யாழ். நகரத்தில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது: அமெரிக்காவைச் சேர்ந்த வெளிநாட்டவர் ஒருவர் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளாராகக் கடமையாற்றி வருகின்றார். இவர் யாழ். நாவலர் வீதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு வசித்து வருகிறார். தான் வசிக்கும் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் வளர்க்கும் நாய் தொடர்ந்து குரைப்பது தமக்கு அசெளகர்யத்தை ஏற்படுத்துவதாக நேற்று வெள்ளிக்கிழமை அவர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் பிரகாரம் இரு தரப்பினரையும் பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது…
-
- 8 replies
- 1.7k views
-
-
தமிழ் யுவதிகளுக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி படைத்தரப்பு சுமார் 21 வரையிலான யுவதிகளை நேற்றிரவு கிளிநொச்சி அரச வைத்தியசாலையினில் ஒப்படைத்துள்ளது. அண்மையில் படைத்தரப்பில் இணைத்துக் கொள்ளப்பட்ட அவர்கள் அனைவரும் கிளிநொச்சியின் பாரதிபுரம் முகாமில் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. பேய் பிடித்த இவர்கள் இரவு வேளைகளில் எழுந்து நின்று சன்னதமாடுவதாக கூறியே தம்மிடம் அனுமதிக்கப்பட்டதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கருத்து வெளியிட்ட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் அனுமதிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை 13 பேரென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்த போதும் குளோபல் தமிழ்ச் செய்திகளின் சுயாதீன தகவல்கள் அவ்வெண்ணிக்கை 21 என தொவிக்கின்றன. தற்போது …
-
- 23 replies
- 1.7k views
-
-
உதுகள் ஒரு புறம் கிடக்க ...... கம்போடியா அன்று கம்பூச்சியா என்றழைக்கப்பட்ட நாட்டில் 70களில் சீன ஆதரவுடன் பொல்பொட் எனும் இயக்கம் போராட்டத்தை ஆரம்பித்தது. அது நாட்டை கைப்பற்றி எல்லாம் பிழையாகிப் போய்இ இறுதியில் உள்ளுக்குள்இ வெளியில் என்று தொடங்கி வியட்னாமும் உள்ளட்டு முடிக்கபட்டது!! ஏறக்குறைய பல மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர்!! சன இறப்பிற்கு சீனாஇ வியட்னாம்இ அமெரிக்கா ....... உட்பட பொல்பொட்டும் காரணமாக இருந்தது!!! ....... இப்போ எல்லா சாவுகளையும் பொல்பொட்டினது தலையில் உலகம் போட்டது மட்டுமல்லாதுஇ அங்குள்ள சந்ததியினரும் பொல்பொட்டையே வெறுக்க வேண்டிய சூழ்நிலை!!! உலகில் உள்ள பல அடக்கப்பட்ட மக்களின் விடுதலை அமைப்புகள் சிறிய இராணுவ அமைப்பையும்இ பலமான அரசியல் அமைப்பையும் கொண்ட…
-
- 7 replies
- 1.7k views
-
-
இலங்கையின் சுற்றாடலையும் வரலாற்றையும் அடையாளப்படுத்தும் சின்னமாக எமது மக்கள் கருதும் யானையை இலங்கையர் சீனா மீதும் மக்கள் மீதும் கொண்டிருக்கும் கௌரவத்துக்கும் அன்புக்கும் உரிய பரிசாக வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள மிருகக்காட்சிசாலைக்கு பின்னவலை யானைகள் சரணாலயத்திலிருந்து யானைக் குட்டியொன்றை அன்பளிப்பாக வழங்கிய ஜனாதிபதி அந்த நிகழ்வில் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது; "சகல விலங்குகளுக்குமே பூமி சொந்தமானது என்று நாம் நம்புகிறோம். அதனால் எதிர்கால சந்ததிக்காக நாம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். ஆட்சியாளர் இந்த மரபுரிமைக்கு உரிமையாளன் அல்ல. ஆனால், அவற்றின் தற்காலிகமான பாதுகாவலனாக ஆட்சியா…
-
- 6 replies
- 1.7k views
-
-
அம்பாறை அரந்தலாவ பகுதியில் நேற்றிரவு நடந்த கிளைமோர் தாக்குதலில் 12 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இத்தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தியதாகவும் அது தெரிவித்துள்ளது. பிரத்தானிய அமைச்சரின் வருகையின்போது பொதுமக்களை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டு விடுதலைப் புலிகள் மீது பழி சுமத்தப்பட்டுள்ளது.
-
- 3 replies
- 1.7k views
-
-
.இந்த ஊழல்கள் விசாரணைக் குழுவினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ளன - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட குழுவினர் முன்னைய ஆட்சிகாலத்தில் அந்த விமானச்சேவை தொடர்பாக இடம்பெற்ற பல மில்லியன் டொலர் ஊழல்கள் குறித்து கண்டுபிடித்துள்ளனர். இந்த ஊழல்கள் அந்த குழுவினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. விமானத்துடன் தொடர்புடைய சேவைகளை வழங்கும் பொறுப்பை யாருக்கு வழங்குவது போன்ற விடயங்களில் ஆரம்பித்து ஊழல் சகல விடயங்களிலும் இடம்பெற்றுள்ளது.தகுதியற்ற பணியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.இது தவிர பாதுகாப்பு நடைமுறைகளில் பாரிய மீறல்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பிட்ட விசாரணைகளை மேற்கொண்ட மூத்த சட்டத்தரணி ஜே.சி வெலியமுன தலைமையிலான குழு…
-
- 7 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா சுற்றுச்சூழல் அமைச்சரான ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த சம்பிக ரணவக்கவுக்கு கனேடிய தூதரகம் விசா வழங்க மறுத்துவிட்டது. மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1.7k views
-
-
அனுரதாபுரம் மகாவிலாச்சிய என்ற கிராமத்தில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் நான்கு பொதுமக்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா அரசின் தடுப்புக்காவில் உள்ள முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் பொன்சேகா சாகும் வரை உண்ணா நிலை போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவரின் மனைவி அனோம பொன்சேகா சற்று முன்னர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஜெனரல் பொன்சேகா அமெரிக்காவில் உள்ள அவரின் இரு மகள்களுடனும் தொலைபேசியில் உரையாடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. எனவே அதனை நீக்கும் வரை உண்ணாநிலை போரட்டத்தை மேற்கொள்ள பென்சேகா திட்டமிட்டுள்ளார். எனது கணவருக்கு அவரின் மகள்களுடன் பேசும் உரிமையை அரசு மறுத்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=243:2010-03-07-07-20-57&catid=34:2010-02-09-12-34-0…
-
- 19 replies
- 1.7k views
-
-
மக்களின் சாவினால் பிரிட்டன் அதிர்ச்சி அடைகிறது - டேவிட் மிலி பேண்ட் இலங்கையில் நடைபெறும் மனித அவலம் மிகவும் ஆழ்ந்த கவலை அளிக்கிறது என பிரித்தானிய வெளி விவகார அமைச்சர் கூறியுள்ளார். மேலும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் பாதுகாப்பு சபை உட்பட மற்றைய சபைகளிலும் இதனை விவாதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார் Source Link: Britain `Appalled` by Civilian Deaths, 'killing must stop' Miliband
-
- 8 replies
- 1.7k views
-
-
வெள்ளி 17-02-2006 20:15 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்] இரவில் நடமாடும் இந்த மர்ம மனிதன் யார்? யாழ்ப்பாணம் கரம்பன் உசன் குடியிருப்புப் பகுதிகளில் இரவு வேளைகளில் மர்ம மனிதன் ஒருவரின் நடமாட்டம் ஒன்றினை அப்பகுதி மக்கள் அவதானித்ததுள்ளனர். இதனால் இரவு வேளைகளில் வெளியில் வர மக்கள் அஞ்சுவதாகவும் இரவில் இரணுவத்தினரின் அச்சம் ஒருபுறம் இம்மனிதனின் நடமாட்டம் இன்னொரு புறம் என்பதால் அச்சத்துடனேயே மக்கள் இரவைக் கழிக்கின்றனர். இம் மர்ம மனிதனை இரவு 9மணிக்கு பின்னர் அவதானித்த அப்பகுதி இளஞர்கள் சிலர் இவரை கைதுசெய்ய எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. அந்த உருவம் நிர்வானக் கோலத்தில் கிறிஸ் போன்ற வழுவழுப்பான பதார்த்தம் பூசியிருப்பதாகவும் ஒருதடவை பிடிப்பதற்காக துரத்தி சென்ற வே…
-
- 3 replies
- 1.7k views
-
-
வட போர்முனையான முகமாலையில் பாரிய முன்நகர்வை சிறிலங்காப் படை மேற்கொண்டது ஏன்? என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் விளக்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.7k views
-
-
Posted by சோபிதா on 08/06/2011 in செய்தி சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நாவின் நிபுணர் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு எதிராக அறிக்கையை அல்லது கண்டனத்தை வெளியிடுமாறு நாம் எந்த ஒரு நாட்டையும் கோரவில்லை என சிறீலங்காவில் வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரீஸ் தெரிவித்துள்ளார். சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று (07) இடம்பெற்ற விவாத்தில் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தேவை ஏற்படும்போது உதவிகளை பெறுவதற்காகவே நான் இந்தியா சென்றிருந்தேன். ஐ.நா அறிக்கைக்கு எதிராக கண்டனத்தை வெளியிடுமாறு இந்தியாவுக்கு கோரிக்கை விடுப்பதற்காக நான் அங்கு செல்லவில்லை. ஐ.நா அறிக்கைக்கு எதிரான கண்டனங்களை வெளியிடும…
-
- 2 replies
- 1.7k views
-
-
இனி ஒருபோதும் யுத்தம் ஏற்படப்போவதில்லை என தான் நம்புவதாக யாழ். கட்டளைத் தளபதி மேஜர் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்தும் இராணுவத்தினர் வடக்கில் நிலைத்திருப்பது பொதுமக்களின் நன்மைக்காகவென்றும்,அவர்களின் நன்மைக்காக இராணுவம் முழுமூச்சுடன் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். படைத் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே கட்டளைத் தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் வடக்கில் நிகழும் அனர்த்த நிலைமைகள், வேறு அசம்பாவிதங்களின் போது இராணுவத்தினர் மக்களுடன் இணைந்து சேவையாற்றுகின்றனர். சாதாரண பொதுமக்களின் அனைத்து பிரச்சினைகளையும் அருகில் இருக்கும் படை முகாம்களில் முன்வைத்தால் தீர்வ…
-
- 6 replies
- 1.7k views
-
-
இராணுவத்திலிருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கை உயர்வினால் நெருக்கடியை எதிர்நோக்கும் படைத்தரப்பு : http://www.globaltamilnews.net/tamil_news....=2082&cat=1 இராணுவத்திலிருந்து தப்பியோடுவோர் மற்றும் உயிரிழப்புக்கள் காரணமாக இராணுவப் படையினர் பெரும் சவால்களை எதிர்நோக்கி வருவதாக பிரபல இந்திய ஊடகவிலயாளர் அனுஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக இலங்கை இராணுவத்திலிருந்து தப்பியோடுபவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், இந்தத் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானதென யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்துள்ளார். வெறும், 5 வீதமான படைவீரர்களே இராணுவத்திலிருந்து தப்பியோடியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ள…
-
- 2 replies
- 1.7k views
-
-
தமிழ் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கும் பிரித்தானியப் பிரதமர் வியாழன், 14 ஏப்ரல் 2011 05:41 புத்தாண்டை கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பிரித்தானியா பிரதமரும், கொன்சவேர்டிவ் கட்சியின் தலைவருமான டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டையிட்டு நேற்று வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இந்த நாட்டுக்கு வழங்கியிருக்கும் முக்கியமான பங்களிப்பை இந்தத் தருணத்தில் நான் அங்கீகரிக்க விரும்புகிறேன். அர்ப்பணிப்பு, சமூக மற்றும் குடும்பம்சார் பொறுப்புணர்வு முதலான அம்சங்களின் மீதாகவே தமிழ்ச்சமூகத்தின் இந்தப் பங்க…
-
- 8 replies
- 1.7k views
-
-
ஏட்டிக்குப் போட்டியான இராணுவ அணுகுமுறை கவலை தருகிறது அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகளது ஏட்டிக்குப்போட்டியான இராணுவ ரீதியான அணுகுமுறை பெரும் கவலையளிக்கின்றது. இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இராணுவ ரீதியான வெற்றிகள் ஒரு போதும் உதவப் போவதில்லையென இணைத்தலைமை நாடுகள் கருத்து வெளியிட்டுள்ளன. விடுதலைப்புலிகள் நேற்று முன்தினம் பலாலி இராணுவ தளம்மீது மேற்கொண்ட விமானத்தாக்குதல். வடபகுதியை நோக்கி பாரிய படை நடவடிக்கைக்கு இராணுவம் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பாக கருத்துத்தெரிவித்த இணைத்தலமை நாடொன்றின் தூதரக உயர் அதிகாரியொருவரே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவ்வதிகாரி மேலும் கூறியதாவது: இலங்கையில் மோதல்கள் நிறுத்தப்பட்டு, சமாதானப் பேச்சுவார்த்தைகள் மீ…
-
- 4 replies
- 1.7k views
-
-
வன்னிச் சமரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பீரங்கித் தாக்குதல்களினால் சிறிலங்காப் படையினர் கடும் இழப்புக்களைச் சந்தித்து வருகின்றனர் என்று வன்னிப் பிராந்திய சிறிலங்கா இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூர்ய தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.7k views
-
-
சிறிலங்காவைப் புறக்கணிக்கும் சுற்றுலா பயணிகள் – ரத்தாகும் முன்பதிவுகள் சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடிகளை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் வருகை மற்றும் வணிக முயற்சியாளர்களின் வருகைகள் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் அண்மைய அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர், 20 வீதமான அறை முன்பதிவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று கொழும்பில் 200 அறைகளைக் கொண்ட, கோல் பேஸ் விடுதியின் முகாமையாளர் சந்திர மகோற்றி தெரிவித்துள்ளார். “வழக்கமாக எமது விடுதி நிரம்பியிருக்கும். முன்பதிவு ஒதுக்கீடு பயன்படுத்தப்படாது என்ற அச்சத்தினால் நாங்கள் தள்ளுபடிகளை வழங்குகிறோம்.” என்றும் அவர் கூறினார். அதேவேளை, ”பல்வேறு …
-
- 8 replies
- 1.7k views
-
-
யாழ்ப்பாண பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள்: இமெல்டா சுகுமார்! பதிந்தவர்: ஈழப்பிரியா ஞாயிறு, 19 ஜூன், 2011 யாழ். மாவட்டத்தில் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்துச் செல்வதாக யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் கவலை தெரிவித்துள்ளார். இதற்குப் பிரதான காரணம் இளைஞர்கள் வேலைவெட்டி இல்லாமல் திரிவதுதான் என அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பெண்களிடமும் ஒழுக்கம் கிடையாது என அவர் தெரிவித்தார். கடந்த எட்டு வருடங்களாக நான் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச அதிபராக கடமையாற்றியிருந்தேன். நான் அங்கு கடமையாற்றிய காலத்தில் இப்படி பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எதுவும் காணப்படவில்லை. வன்னியில் காணப்பட்ட ஒழுக்கம் தற்போது யாழ்ப்பாணத்தில…
-
- 8 replies
- 1.7k views
-