ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143576 topics in this forum
-
[size=4]தஞ்சம் வழங்குவது இப்படித்தானா? - ஏக்கத்தில் உறவுகள் (சிட்னி) கடந்த 2009ஆம் ஆண்டு வன்னியில் இடம்பெற்ற போரின் இறுதியில் இராணுவத்தின ரால் பிடிக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நபர் ஒருவர் தற்போது அவுஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் கோரியுள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு அகதியாகச் சென்ற இவர் தற்போது அவுஸ் திரேலியாவில் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார். [/size] [size=4]ஐ.நா. விசாரணை இன்னும் முடிபுறாத பட்சத்தில் விசாரணை முடிபுறும்வரை இவரை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கு எதிரான சித்திரவதை விசாரணைக்குழு, அவுஸ்திரேலியா அரசினை கேட்டுக்கொண்டுள்ள போதும் அவுஸ்திரேலிய…
-
- 6 replies
- 1.5k views
-
-
வவுனியாவில் ஓரினச்சேர்க்கையால் அதிகரிக்கும் எயிட்ஸ் - இளைஞர்களை அவதானமாக இருக்குமாறு வவுனியா மாவட்ட பாலியல் நோய் தடுப்பு சிகிச்சை பிரிவு பொறுப்பதிகாரி வைத்தியர் கே. சந்திரகுமார் தெரிவித்திருந்தார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/139739/snapshot_011.png இன்று வவுனியா வைத்தியாசாலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், உலக எய்ட்ஸ் தினம் ஒவ்வொரு டிசம்பர் மாதம் முதலாம் திகதியும் நினைவுகூறப்படுகிறது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் உலக எய்ட்ஸ் தினத்தை நினைவு கூறவிருக்கிறோம். இலங்கையைப் பொறுத்தவரையில் இன்றைக்கு வரைக்கும் கிட்டத்தட்ட 4000 நோயாளிகள் எய்ட்ஸ் உடன் இனங்கா…
-
- 15 replies
- 1.5k views
-
-
புலிகள் தப்பிச் செல்வதற்கு உத்தரவிட்டவர் யார் என்பதனை ரணில் தெரிவிக்கவேண்டும் வீரகேசரி நாளேடு கொழும்பிலிருந்து விடுக்கப்பட்ட உயர்மட்ட உத்தரவின் பேரிலேயே தொப்பிகலையிலிருந்து ஆயிரம் புலி உறுப்பினர்கள் வன்னிக்கு தப்பிச் சென்றதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அப்படியானால் யார் அவ்வாறு கொழும்பிலிருந்து உத்தரவை பிறப்பித்த உயர்மட்ட நபர் என்பதனை ரணில் வெளிப்படுத்தவேண்டும் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது : தொப்பிகலை காட்டுப்பிரதேசம் என்று முதலில் ர…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழ்ச்செல்வனின் கடைசி வருகை -கு.கவியழகன் நவம்பர் இரண்டாம் திகதி, இதே நாள், எட்டு வருடங்களின் முன் வன்னிக் காடுகள் தம் மேனிசிலிர்க்க புளகாங்கிதம் தாளாமல் ஆனந்தக் கண்ணீர் சிந்தின. அன்று தான் வன்னிக் காட்டின் மார்பைப் பிளந்து தமிழர் மீது 'இறுதி வெற்றி" (ஜெயசிக்குறு) என வந்த சிங்களப் படையை துவம்சம் செய்து இந்தக்காட்டின் பிள்ளைகள் முன்னேறிக் கொண்டிருந்தனர். காடும் தன் பிள்ளைகளின் தீரம் கண்டு திமிர் கொண்டு எழுந்தது. வர்ணிக்க முடியா போர்க்களம். வகை சொல்ல இயலா வெற்றி. குதிரைக்கு கொம்பு முளைத்தாற்போல் உலகத் தமிழருக்கெல்லாம் திமிர் ஏறிய திருநாள் அன்று. எட்டு வருடம் கழித்து, அதே நாள் காலை விடிந்த பொழுதில் எல்லாவற்றையும், எப்பொழுதும் கண்ணுற்றிருக்கும் வானம் வன்னியில் அழு…
-
- 5 replies
- 1.5k views
-
-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விவகாரத்தில் வேகமாக காலடி எடுத்து வைக்கத் தொடங்கி விட்டார் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலாநிதி வசந்த பண்டார தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பாக மன்மோகன்சிங் மெதுவாகவே காலடி எடுத்து வைத்தார். ஆனால், நரேந்திர மோடி வேகமாக காலடி எடுத்து வைக்க ஆரம்பித்து விட்டார். தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் அழுத்தம் இல்லாமல் இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு அழுத்தம் கொடுத்திருக்கமாட்டார். சிறிலங்கா அரசாங்கம் போட்ட கணக்கு பிழைத்து விட்டது. உடனடியாக புதிய அரசியலமைப்பை உருவாக்கி, 13 வது திருத்தச் சட்டத்துக்கு அரசாங்கம் சாவு மணி அடிக்க வேண்டும். இல்லாவிட்டால் சிங்கள பௌத்த மக்களின் ஆதரவை இழக்க வேண்…
-
- 16 replies
- 1.5k views
-
-
எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த! – சபாநாயகர் அறிவிப்பு எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்வுகளின் போதே சபாநாயகர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். எனினும், சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி பொதுஜன பெரமுனவில் இணைந்தவருக்கும் அரசாங்கத்தில் பதவிகளை பெற்றுக்கொண்ட தரப்பிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன வாதிட்டு வருகின்றன. அத்தோடு, நாடாளுமன்ற தெரிவுக் குழுவை அமைத்து இதற்கு தீர்வுகாண வேண்டுமென்றும் அறிவித்துள்ளன. http://at…
-
- 10 replies
- 1.5k views
- 1 follower
-
-
குளோபல் தமிழ்ச் செய்திகள்… இரணைமடுகுளம் அதன் வான் பாயும் நிலையை அடைகின்ற போது நீர்ப்பாசனத்திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக ஜனாதிபதியை அழைத்து வந்து திறப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார் கிளிநொச்சி இரணைமடுகுளத்திற்கு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே இன்று(05) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2178 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு தற்போது இரண்டு வருடங்களின் பின் குளத்தின் நீர் கொள்ளளவு முழுமையை எட்டியுள்ள நிலையில் ஆளுநர் றெஜினோல்ட் குரே விஜயம் செய்து நிலைமைகளை நேரில் ஆராய்ந்த…
-
- 9 replies
- 1.5k views
- 1 follower
-
-
நள்ளிரவில் பரா வெளிச்சம், துப்பாக்கிப் பிரயோகம். மக்கள் பதற்றம். Written by Ellalan - May 11, 2007 at 04:44 PM நேற்று முன்தினம் இரவு திடீரென காங்கேசன்துறை மாதகல் மற்றும் பருத்தித்துறை கடற்பரப்பில் இடம் பெற்ற துப்பாக்கிப்பிரயோகம் மற்றும் பரா வெளிச்சக் குண்டுகளின் ஏவுதல் நடவடிக்கைகள் காரணமாக கரையோரப் பகுதிகளில் பதட்டமான நிலமை காணப்பட்டது. இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகிய இந்த நடவடிக்கை சுமார் பதினைந்து நிமிடங்கள் வரை இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் இடைக்கிடையே லேசர் குண்டுகளும் ஏவப்பட்டதையும் அவதானிகக் கூடியதாக இருந்தது. இரவு நேரமாகையால் கடலில் காணப்பட்ட அசைவைத் தொடர்ந்து கடற் படையினர் கடலில் இத்தகைய செயல்பாட்டை மேற்கொண்டதாக உயர் பாதுகாப்பு வல…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஞாயிறு 09-09-2007 03:24 மணி தமிழீழம் [செந்தமிழ்] பருத்தித்துறையில் சிறீலங்கா புலனாய்வுபிரிவின் உறுப்பினர் சுட்டுப்படுகொலை! சனிக்கிழமை மாலை 4.45 மணியளவில் தட்டாதெரு பகுதி பருத்தித்துறையில் சிறீலங்கா புலனாய்வு பிரிவின் உறுப்பினர் ஒருவர் விடுதலைப்புலிகளின் பிஸ்டல்குழு உறுப்பினர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இக்குறிப்பிட்ட சிறீலங்கா புலனாய்வு உறுப்பினர் பிரதானவீதியில் தட்டாதெரு பகுதியில் பிரயாணிக்கும்போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து சிறீலங்கா படையினர் பெரும்எடுப்பில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இதன்போது கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை எனவும் தெரியவருகிறது. நன்றி பதிவு.
-
- 1 reply
- 1.5k views
-
-
பிரிட்டன் தொலைக்காட்சி சனல் 4ஐ முடக்க சிறீலங்கா அரசு சதி செய்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் பிரிட்டன் தொலைக்காட்சி சனல் 4 ஒளிபரப்பிய சிறீலங்கா இராணுவத்தின் படுகொலைக் காட்சிகளின் பின்னர், அது பெரும் நெருக்கடிகளைச் சந்தித்துவருவதாகக் கூறப்படுகிறது. பிரிட்டனில் இருந்து ஒளிபரப்பாகும் அனைத்துத் தொலைக்காட்சிகளையும் கட்டுப்படுத்தும் அல்லது நெறிப்படுத்தும் நிறுவனமாக விளங்கும் 'ஆப்காம்' (OFCOM)திடம் இலங்கை பல முறையீடுகளை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன். எந்தக் காட்சிகளை மக்கள் பார்க்கலாம் அவை பயங்கரவாதத்தை துண்டுகின்றனவா என்பது போன்ற ஒளிபரப்புக்களை நெறிப்படுத்தும், ' ஆப்காம்' நிறுவனம் ஒரு தனியார் நிறுவனமாகும். இந்நிறுவனம் நினைத்தால்…
-
- 12 replies
- 1.5k views
-
-
இன்று ஸ்ரீலங்கா முகம் கொடுத்திருக்கும் நிலைமை 1940 ஆம் ஆண்டு தசாப்தங்களில் ஜப்பானும் தாய்வானும் சீன ஆதிக்கத்திற்கு முகம் கொடுத்தது போன்ற நிலைமையாகும். அந்தக் காலகட்டத்தில் சீன ஆதிக்கத்தினால் ஏற்பட்ட பல்வேறு சவால்களை ஜப்பானும் தாய்வானும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. படை பலம் வாய்ந்ததும் பெரும் கண்டப்பரப்பைக் கொண்டதுமாகிய சீனாவின் கண்டப்பரப்பின் கரையோரத்தில் பலமற்ற ஜப்பான் சிறிய நாடாகவும் அதைவிடச் சிறியதும் பலமற்றதுமான நாடாக தாய்வானும் இருந்தன. 1940 தசாப்தங்களில் சீனாவின் ஆட்சி அமைப்பும் பொருளாதார கூட்டமைப்புகளும் கம்யூனிஸ அடிப்படையில் மாறிக் கொண்டிருந்தவேளை ஜப்பானும் தாய்வானும் சீனாவின் ஆதிக்க அழுத்தத்திற்கு எதிராக பெரும் இக்கட்டுகளுக்கு மத்தியில் கம்யூனிஸத்துக்குள் சிக்காம…
-
- 2 replies
- 1.5k views
-
-
சந்திரிகா, ரணில் முக்கிய பேச்சு! - அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு!! கூட்டணி அரசியல் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழ்லையில் சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் திடீரென சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலியிலுள்ள பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில் ஓரிரு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற இச்சந்திப்பில் முக்கியமான அரசியல் விடயங்கள் குறித்து தீர்க்கமாகப் பேசப்பட்டதாக அறியமுடிகின்றது. ஏற்கெனவே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிப…
-
- 1 reply
- 1.5k views
-
-
மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாகக் கூறிவரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலில் வெற்றிபெற்றால், அமெரிக்காவுக்கு உள்ளே மாத்திரமன்றி ஏனைய நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளிலும் மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விபரம்.. http://www.swissmurasam.info/content/view/7092/1/
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழர் பூமி இலங்கை என மத்திய இணை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி, இலங்கை தமிழர்களுக்கு சொந்தமான பூமி இலங்கை, தமிழர் பூமியான இலங்கையை கைப்பற்ற வேண்டும். தமிழீழக் கனவு நனவாக வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். இஸ்ரேல் ,பாலஸ்தீனம் போன்று இலங்கையில், தமிழர் பகுதியான இலங்கையை கைப்பற்ற வேண்டும். என்றார். http://www.seithy.com/breifNews.php?newsID=92435&category=IndianNews&language=tamil
-
- 22 replies
- 1.5k views
-
-
Posted on : Fri Jun 29 6:15:02 EEST 2007 தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் ஒரு போதும் செயற்படமாட்டாது - ஜனாதிபதி அரசாங்கம் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்படப் போவ தில்லை. இப் படிக் கூறியுள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நாட்டின் பாதுகாப்பு மற்றும் சமாதான முன்னெடுப்புகள் குறித்து மகாசங்கத்தினருக்கு விளக்கம் அளிக்கும் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது. அங்கு வைத்து ஜனாதிபதி தெரிவித்ததாவது: நாட்டில் யுத்தம் இடம்பெறுகின்ற அதேவேளை, அபிவிருத்தியும் முன்னெடுத் துச் செல்லப்படும். நாட்டின் பொறுப்பை என்னிடம் கையளிப்பதற்கு முன்னின்று உழைத்த வர்கள் மகா சங்கத்தினர். மக்கள் முன்வைக்கப் படும் முரண்பாடான கருத்துக்களின் உண்மை நிலையை மகா நா…
-
- 5 replies
- 1.5k views
-
-
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு பேர் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.. உண்மையா?
-
- 2 replies
- 1.5k views
-
-
"அ.தி.மு.கவுடன் கூட்டணி சேர்வது என்பது ஈழத் தமிழர்களுக்குச் செய்யும் துரோகம், ஈழத் தமிழர்களுக்கு எதிரானது. தி.மு.க. கூட்டணியில் இருப்பதை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம்" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இல்லை என்ற நிலை கிட்டத்தட்ட ஏற்பட்டு விட்டது. இந்த நிலையில் நேற்று முதல்வர் கருணாநிதியைத் திருமாவளவன் மாலையில் சந்தித்துப் பேசினார். அப்போது தொகுதிப் பங்கீடு குறித்தும், பா.ம.க. குறித்தும் பேசப்பட்டது. திருமாவளவனுடன் கட்சி எம்.எல்.ஏ. ரவிக்குமார், தலைமை நிலைய செயலாளர் வன்னியரசு ஆகியோரும் கலந்து கொண்டனர். அதன் பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணிக்குப் போவ…
-
- 7 replies
- 1.5k views
-
-
இலங்கையிலிருந்து உளவு பார்த்த இந்திய “றோ” அதிகாரி நாடு கடத்தப்பட்டார்: திகதி:15.09.2010 இந்தியாவின் ரோ உளவுப் பிரிவைச் சேர்ந்த முக்கியஸ்தர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. நான்கு பேர் அடங்கிய ரோ உளவுப் பிரிவு குழுவொன்று இவ்வாறு இலங்கையில் உளவு பார்க்கும் பணிகளில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இந்தக் குழுவின் தலைவரை இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து நாடு கடத்தியுள்ளனர். கொழும்பு விஹாராமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் யாசகர் வேடமிட்டு உளவுப் பணியில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவு உயரதிகாரியை இலங்கை புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் கைது செய்துள்ளனர். …
-
- 5 replies
- 1.5k views
-
-
தென்னிந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்குவதாக இந்தியா புதிய புரளி! By: seiyyon தென்னிந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கி வருவதாக புதிய புரளி ஒன்றை இந்திய மத்திய அரசாங்கம் கிளப்பியுள்ளது. கடந்த 1992ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையை, மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்திருக்கும் இந்திய மத்திய அரசாங்கம், தமது முடிவுக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் தென்னிந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்குவதாக தெரிவித்துள்ளது. இதனிடையே, தமிழீழ தேசியத் தலைவரின் தாயாரான பார்வதி அம்மாவை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கு இந்திய மத்திய அரசாங்கத்திற்கு பணிப்புரை வழங்குமாறு தொடரப்பட்ட வழக்கை ஏற்றுக் கொள்வதற்கு இந்திய உச்சநீதிமன்றம் மறுப்புத…
-
- 4 replies
- 1.5k views
-
-
அண்மைக்கால குண்டு வெடிப்புக்களுக்கு சிறீலங்கா நீதிமன்றமே பொறுப்பு என நாடாளுமன்ற அமைப்பாளரும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னான்டோப் புள்ளே குற்றம் சுமத்தியுள்ளார். சிங்கள வானொலியான ''இசிர'' வானொலியில் நடைபெற்ற ''பத்திரிகைத் தலைப்பு'' எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகள் மற்றும் படுகொலைகளுக்கு நீதிமன்றின் தீர்ப்புக்களே காரணம் என நீதிமன்றின் தீர்ப்பை பெர்னான்டோ புள்ளே விமர்சித்தார். வீதிச் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட வேண்டும், மற்றும் வீடுகள், விடுதிகளை இரவு நேரங்களில் சோதனையிட முடியாது என்ற சிறீலங்கா உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்களையே அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இத்தீர்ப்புக்க…
-
- 3 replies
- 1.5k views
-
-
(Lanka-e-News-31.March.2012, 11.55PM) Captain Bharatha Kodituwakku , the leader of the murder squad of the south of the youngest member Namal Rajapakse, of the MaRa regime notorious for sending its criminal white Van to kill its own Mayor; and to abduct its own local body members, had himself disclosed full details in regard to the digging for treasure which is being carried out on behalf of Namal the synthetic Lawyer. Captain Bharatha Kodituwakku is the chief of the Matara Army camp is the brother of Captain Moorthy Kodituwakku the head of Namal’s Nil Balakaya and his coordinating officer . Their father was for some time an artist of Mahinda Rajapakse drawing his pi…
-
- 1 reply
- 1.5k views
-
-
துரோகக் கும்பல்களே ஊரைவிட்டு கிளம்புங்கள்-தமிழ் மாணவர் ஒன்றியம் குடாநாட்டு மக்களின் துன்ப துயரங்களுக்கு துணைபோகும் துரோகக் கும்பல்கள் ஊரைவிட்டு கிளம்புவதே தமிழ் மக்களுக்கு செய்கின்ற பெரிய உபகாரமாக இருக்கும். ஏன தமிழ் மாணவர் ஒன்றியம் விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்கள் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: எச்சில் எலும்பு எங்களுக்கு வேண்டாம் ! எமது மக்களின் துயர் தோய்ந்த வாழ்வு தொடர்ந்தும் நீடிக்கின்றது. பட்டினியும், அரச பயங்கரவாதமும் தமிழ் மக்களை பாதாளத்தில் தள்ளி விட்டிருக்கின்றது. அடுப்படியில் பூனை படுக்க அவலப்பிடியில் மக்கள் துடிதுடிதுடிக்கின்றனர். படைகள் புரியும் கொலைகள் குலை நடுங்க வைக்க வெள்ளைவான்களில் எங்கே போகின்றோம். எதற்காக…
-
- 1 reply
- 1.5k views
-
-
01/02/2009, 14:44 [ கொழும்பு நிருபர் மயூரன் ] இலங்கை விவகாரத்தில் கனடா மெளனத்தைக் கலைக்க வேண்டும் - அல்பினா குவார்னியறி இலங்கை விவகாரம் தொடர்பில் கனடிய அரசாங்கத்தன் மௌனம் கலைக்க வேண்டும் என லிபரல் கட்சியின் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் அல்பினா குவார்னியறி கேட்டுக் கொண்டுள்ளார். நேற்று சனிக்கிழமை கனடிய பாராளுமன்றில் உரையாற்றிய போது இலங்கை விவகாரம் தொடர்பில் கனடிய அரசாங்கம் நீண்டகாலமாகவே மௌனத்தைக் கடைப்பிடித்து வருகிறது. அந்த மௌனத்தைக் கனடிய அரசாங்கம் உடனடியாகக் கலைக்க வேண்டும். அப்பாவித் தமிழ் மக்கள் இராணுவத்தினரால் அகோரமான தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். காணாமல் போதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மக்கள் படையினரின் தாக்குதல்கள் காரணமாக பலவந்தமாக இடம…
-
- 6 replies
- 1.5k views
-
-
உலகத் தமிழர் பேரவை-அமெரிக்கத் துணைச் செயலாளர் றொபேட் பிளேக் சந்திப்பு!(Att;Photo) Published on March 30, 2011-7:56 am உலகத் தமிழர் பேரவை அமெரிக்கத் துணைச்செயலாளர் றொபேட் பிளேக்கை வொஷிங்டனில் உள்ள அரசதிணைக்களத்தில் கடந்த திங்கட்கிழமை சந்தித்து இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து விளக்கியுள்ளனர். உலகத் தமிழர் பேரவைத் தலைவர் வண. சீ.யோ.இமானுவேல் அடிகளாரின் தலைமையில், அமெரிக்கத் தமிழ் அரசியற் செயலவைத் தலைவர் டாக்டர் எலயஸ் ஜெயராசா, திருமதி கிறேஸ் விலியம்ஸ், சுரேன் சுரேந்திரன் ஆகியோர் உலகத் தமிழர் பேரவையின் குழுவில் பங்குபற்றினர். இச்சந்திப்பை அமெரிக்கத் தமிழ்அரசியற் செயலவை ஒழுங்கு செய்திருந்தது. உலகத் தமிழர் பேரவையானது, வடகிழக்கில் வாழும் தமிழ் மக்கள…
-
- 15 replies
- 1.5k views
-
-
[09 - September - 2007] -பீஷ்மர்- சென்றவாரம் பாராளுமன்றம் வட-கிழக்கு பற்றிய ஒரு சிறப்பு விவாதத்தினை நடத்தியபோது தொடக்க உரையை நிகழ்த்திய சம்பந்தன் வடக்கு - கிழக்கில் இராணுவமும் அரசு நிர்வாகமும் மேற்கொள்ளவுள்ள சில நடவடிக்கைகள் பற்றி வெட்ட வெளிச்சமாகவே பேசினார். பத்திரிகை நிருபர்கள் அப்பேச்சின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியது மாத்திரம் அல்லாது அடுத்த நாள் தமிழ் தினசரிகளில் சம்பந்தன் கூறிய சில விடயங்கள் தலைப்புச் செய்தியாகவும் வெளிவந்தன. அந்த உரை ஏற்படுத்திய தாக்கத்தின் தன்மை காரணமாக அரசாங்கம் அடுத்த நாளே அமைச்சவைத் தீர்மானங்களை அறிவிக்கும் பத்திரிகை மகாநாட்டிலும் சம்பந்தன் கூறியவற்றை அவை நடக்கப்போவதில்லையென்று மறுதலித்து கூறினார். பொறுப்புமிக்க ஒரு …
-
- 0 replies
- 1.5k views
-