ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143568 topics in this forum
-
[sunday, 2011-07-03 13:09:24] பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணை விரைவில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. கொன்சவேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Lee Scott yp ஸ்கோட்டின் தகவல்படி இன்னும் விவாதத்துக்கான உறுதிப்படுத்தப்பட்ட திகதி குறிக்கப்படவில்லை. இலங்கையில் சமாதானத்தையும் நீதியையும் நிலைநாட்டுவது தொடர்பிலேயே இந்த விவாதம் இடம்பெறவுள்ளது. இந்தப்பிரேரணை 52 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் இலங்கை தொடர்பில் பரிந்துரைத்துள்ள போர்குற்றம் தொடர்பில் சுயாதீன விசாரணையை மேற்கொள்ளல் தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணைக்கு தொழில்க்கட்சியும் ஆதரவளிக்கிறத…
-
- 1 reply
- 319 views
-
-
டிசம்பர் 31க்கு முன் காணிகளை விடுவிப்பதற்கு பங்களிப்பை வழங்குமாறு ஜனாதிபதி ஆளுநர்களுக்கு பணிப்பு. October 22, 2018 வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பாதுகாப்பு படையினரின் வசமுள்ள காணிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நடவடிக்கையினை இவ்வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்ய தேவையான பங்களிப்பினை வழங்குமாறு ஜனாதிபதி மாகாண ஆளுநர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 2018ஆம் ஆண்டிற்கான மாகாண சபை செயற்பாடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த பணிப்புரையினை விடுத்துள்ளார். சகல மாகாணங்களினதும் ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மற்றும் பிரதம செயலாளர்…
-
- 0 replies
- 273 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி: இனப்பிரச்சினைக்கான தீர்வு மாவட்ட சபை! இலங்கையில் தற்போதுள்ள மாகாணசபை ஆட்சி முறையினை நிறுத்தி, மாவட்ட சபை முறையிலான ஆட்சி முறையை உருவாக்குவதே இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. கொழும்பு சார்ந்த அரசியல் கட்சிகளினால் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தமது தீர்வுத்திட்ட யோசனை கொண்ட அறிக்கையினை மே மாதம் சமர்ப்பிக்கவுள்ளனர். நேற்று நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், தீர்வுத் திட்டம் குறித்த யோசனைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வில,; தற்போதுள்ள மாகாணசபை முறைய…
-
- 1 reply
- 1.1k views
-
-
கழிவகற்றும் நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு யாழ். மாநகர சபை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பிரணவநாதன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாநகரசபையினால் அகற்றப்படும் திண்மக் கழிவுகள் இதுவரை கல்லுண்டாய் பகுதியில் கொட்டப்பட்டு வந்தது. தற்போது குறித்த பகுதியில் கழிவுகளை கொட்டுவதில் தடைகள் ஏற்பட்டுள்ளது. எனவே மாநகர சபை கழிவகற்றல் நடைமுறையை தற்காலிகமாக இடைநிறுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. இந்த கழிவு அகற்றும் முறை மீண்டும் ஆரம்பிக்கும் வரை மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட குடியிருப்பாளர்கள் மற்றும் அரச, அரச …
-
- 2 replies
- 567 views
-
-
இலங்கையின் கோரிக்கைக்கு அமைய, இந்திய கடற்படைக்கு சொந்தமான Donier-228 கடல் கண்காணிப்பு விமானம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க விமானப்படை முகாமில் விமானத்தை கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. குறித்த Donier-228 கடல் கண்காணிப்பு விமானம் இரண்டு வருடங்களுக்கு நாட்டின் விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க இதனைப் பெற்றுக்கொண்டுள்ளார். இந்தியா – இலங்கைக்கிடையிலான தொடர்பு மேலும் வலுவடைந்துள்ளதுடன், எதிர்காலத்தில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்பட எதிர்பார்ப்பதாக இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் பாவிக்க…
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
இறுதி நாட்களும் எனது பயணமும் – 11 பதிந்தவர்: ADMIN திங்கள், 11 ஜூலை, 2011 சற்றுநேரமேனும் என்னை புரிந்துகொண்டவர்களாய் என்னோடிருந்த மனிதர்களும் சென்றுவிட்டார்கள். அவர்கள் எழுந்துசென்ற இடைவெளியை வேறு யாரோ வந்து நிரப்பினார்கள். மங்கலாகிவிட்ட பார்வையை கூர்மைப்படுத்தியபடி அவதானித்தேன். வயோதிப தம்பதியொன்று தமது பைகளை போட்டு அவைமீது குந்திக்கொண்டிருந்தனர். எனக்கோ கண்களை திறக்க முடியாமல் தலையை வலித்தது. உடலும் மனமும் களைத்து சோர்ந்துபோய்விட்டிருந்தது. போத்திலில் இருந்த, ஒரு மிடறுக்கும் போதாத பானத்தை கவிழ்த்து ஊற்றி நாக்கை முழுதுமாய் நனைத்து விழுங்கினேன். சற்றுநேரத்தில் என்முன்னால் சிறுவன் ஒருவன் வந்துநின்றான். ‘அக்கா அந்த போத்தில தாறிங்களா?’ என்றபடி. அந்த போத்தில் என…
-
- 0 replies
- 905 views
-
-
மத்தள விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றுக்கு பாரியளவு கடன் வட்டி செலுத்த நேரிட்டுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நிர்மானிக்கப்பட்ட மத்தள விமான நிலையம் மற்றும் மற்றம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியனவற்றுக்காக பாரியளவில் கடன் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கடன்களுக்காக மிகக் கூடுதலான வட்டித் தொகையை செலுத்த நேரிட்டுள்ளது. எவ்வாறெனினும் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதலாம் பகுதியின் இரண்டாம் கட்ட பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதனால் அதனை தொடர்ந்தும் முன்னெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மத்தளை விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியன தொடர்வில் எவ்வாறான தீர்மானம் எடுப்பது என்பது குறித்து எத…
-
- 0 replies
- 312 views
-
-
கொழும்பு சிங்களவர்களின் தலைநகரம் – யாரும் உரிமை கோர முடியாது : கம்மன்பில வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றால் கொழும்பு சிங்களவர்களின் தலைநகரம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை சிங்கள பௌத்த நாடு. இந்த நாட்டில் எந்த இடத்தையும் தமிழர்களுக்குச் சொந்தம் என்று தமிழ் அரசியல்வாதிகள் உரிமை கோர முடியாது. வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் அல்ல. அங்கு மூவின மக்களும் வாழ்கின்றார்கள். இந்நிலையில், மூவின மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கத் தமிழ் அரசியல்வாதிகள் முயல்கின்றார்கள். இ…
-
- 17 replies
- 1.4k views
-
-
கடலில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை விடுவியுங்கள் : சீமான் [Friday, 2011-07-15 11:26:10] இந்தோனேசிய அரசால் நடுக்கடலில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை விடுவிக்க தமிழக முதல்வர் முயற்சி மேற்கொள்ள கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை: கடலில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை விடுவியுங்கள் : சீமான் இலங்கையில் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆன பின்னரும் தமிழர்கள் மீது சிங்கள இனவாத அரசு தொடர்ந்து நடத்திவரும் இன அழித்தலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவும், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்துக்கொள்ளவும், நியூசிலாந்து நாட்டை நோக்கி கப…
-
- 0 replies
- 315 views
-
-
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வாக்கெடுப்பு இன்று! சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டு வந்துள்ள அவநம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளது கடந்த இரண்டு நாட்களாக விவாதம் இடம்பெற்றிருந்த நிலையில், இன்று அதன் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த அவநம்பிக்கையை முன்வைத்துள்ளதுடன் அதற்கு ஆதரவாக தங்களது தரப்பினர் வாக்களிப்பார்கள் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1348602
-
- 2 replies
- 560 views
- 1 follower
-
-
துரையப்பா பொதுவிளையாட்டு மைதானம் படையினரின் பயிற்சி தளமாகியுள்ளது. யாழ். கோட்டைப்பகுதி துரையப்பா பொதுவிளையாட்டு மைதானப்பகுதியில் அதிகாலை 5.00 மணித்தொடக்கம் காலை 8.00 மணிவரை படையினர் குவிக்கப்பட்டு பயிற்சி நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கனரக வாகனங்களில் கொண்டுவந்து இறக்கப்படும் நூற்றுக்கணக்கான படையினர் இப்பகுதியில் பயிற்சி நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு இருப்பதுடன் 53 ஆம் பிரிகேட் படையினரே தலையில் சிகப்பு ரிபனை கட்டி கொமாண்டோ பயிற்சிகளை எடுக்கின்றனர். இவர்கள் பெரும்சத்தம் இட்டுகத்தி பயிற்சியில் ஈடுபடுவதாகவும் பொதுமக்களின் பாவனைக்குரிய துரையப்பா விளையாட்டு மைதானம் யாழ். நூலக முன்வீதி மக்கள் பாவனைக்கு தடைசெய்யப்பட்டு பட…
-
- 0 replies
- 1k views
-
-
அரசுடனான பேச்சுக்கள் வெற்றிபெற கூட்டமைப்புக்கே வாக்களியுங்கள்; விக்கிரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களிடம் கோரிக்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் நடைபெற்றுவரும் பேச்சுகளில் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமானால், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கே வாக்களிக்க வேண்டும். அதுவே புத்திசாலித்தனமாகும். இவ்வாறு புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் உதயனுக்குத் தெரிவித்தவை வருமாறு: அரசு எந்தவிதமான யுக்திகளைக் கையாண்டாலும் வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சக்தியை அணு அளவாவது அசைக்…
-
- 0 replies
- 284 views
-
-
November 13, 2018 வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் நிலைகொண்டுள்ள கஜா புயல் அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு பக்கமாக தென்மேற்கு திசை நோக்கி வலுப்பெறும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கஜா புயல் காரணமாக எதிர்வரும் 14, 15 ஆம் திகதிகளில் வடக்கு, வடமத்திய மாகாணங்கள், புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. யாழ். குடா நாட்டை அண்மித்த பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 80 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மன்னார், புத்தளம், திருக…
-
- 1 reply
- 427 views
-
-
17 SEP, 2023 | 10:23 AM முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் நேற்று (16) மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் நபரொருவர் கடந்த புதன்கிழமை (13)காணாமல் போயிருந்த நிலையில், இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் தென்னம் காணியொன்றில் இருந்து துர்நாற்றம் வீசியமையால் அங்கிருந்த கிராமவாசி ஒருவர் சென்று பார்த்தவேளை அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் காணப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட குறித்த நபர் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியைச் சேர்ந்த இராசலிங்கம் சுதர்சன் என …
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
-
அமைச்சர் ஆறுமுகன் தலைமையிலான குழுவினர் தாக்குதல்: 15 பேர் காயம் _ 7/23/2011 11:44:37 AM அமைச்சர் ஆறுமுகன் தலைமையில் தலவாக்கலை தோட்டத்துக்குச் சென்ற 80 பேர் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் 15 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு ஒரு மணியளவில் இடம்பெற்றதாகவும், தாக்குதலை மேற்கொண்டவர்களில் பெரும்பாலானோர் குடி போதையில் இருந்தாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32836
-
- 0 replies
- 313 views
-
-
ஈ.பி.டி.பி தவிர்ந்த அனைத்து கட்சிகளுக்கும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் பொதுச்சின்னத்தில், தமிழ் மக்கள் கூட்டணி தேர்தலை சந்திக்கும் என அவர் மேலும் கூறியுள்ளார். யாழ். பலாலியிலுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வின்போது, பேரவையின் இணைத்தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மீண்டும் மீண்டும் குரோதங்களையும் விரோதங்களையும் வளர்த்துக்கொண்டு முரண்பாடுகள் ஏற்பட இடமளிக்காமல் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை அடிப்படையில் தேர்தல் அரசியலை எதிர்நோக்குவதற்கு முன்வருமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். கொள்கை அடிப்படையில் ஒன்றுபட…
-
- 0 replies
- 492 views
-
-
(துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை இலுப்பைக்குளத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் இரகசியமான முறையில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிடுகின்றனர். திருகோணமலை இலுப்பைக்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர்ப்பலகை நடப்பட்டுள்ள பகுதியில் இரகசியமான முறையில் இரவு வேளைகளில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். திங்கட்கிழமை (25) இரவு சில கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் விகாரையின் கட்டுமானப் பணிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநரினால் தடை விதித்து தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் இரக…
-
- 0 replies
- 287 views
-
-
சிங்களவர்களுடன் தமிழ் மாணவர்கள் கிரிக்கெட் போட்டியா? பெரியார் தி.க. கண்டன போராட்ட அறிவிப்பு டெல்லியில் நடைபெறவிருக்கும் கிரிக்கெட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆதரவாக விளையாட பொள்ளாச்சி கல்லூரி மாணவர்கள் 4 பேர் சென்றுள்ளனர். இதற்கு பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார். Short URL: http://meenakam.com/?p=31521
-
- 0 replies
- 694 views
-
-
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாக உள்ள 20 ஏக்கர் தனியார் காணியை இராணுவத்தினரின் தேவைகளுக்காக சுவீகரிக்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று காணிகளின் உரிமையாளர்கள் பிரதேச செயலகம் முன்பாக போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டம் காரணமாக காணிகளை அளவீடு செய்ய வந்திருந்த நில அளவையாளர் குழு, தமது நடவடிக் கையைக் கைவிட்டுச் சென்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், பிர தேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள காணியை, இராணுவத்தின ரிடம் கையளிப்பதற்கு நேற்று திட்ட மிடப்பட்டிருந்தது. கிளிநொச்சி மாவட்ட காணி சுவீகரிப்பு அலுவலர் இதற்குரிய முயற்சிகளை மேற் கொண்டிருந்தார். இந்த நடவடிக்கை களை நிறுத்துமாறு வடக்கு மாகாண முதலமைச்சரும், காணி அமைச்சரு மான க.வி.விக்னேஸ்வரன் …
-
- 9 replies
- 537 views
-
-
08 OCT, 2023 | 11:05 AM (லியோ நிரோஷ தர்ஷன்) மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சீனாவுக்கு செல்கின்றது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உள்ளிட்ட சீன அரசின் முக்கியஸ்தர்களுடன் பெய்ஜிங்கில் பரந்துப்பட்ட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு பல்வேறு எதிர்பார்ப்புகளுடனேயே சீனா செல்கின்றது. அந்த வகையில் கடன் மறுசீரமைப்பு மற்றும் கடன் தவணைகள் உள்ளிட்ட தடைப்பட்ட திட்டங்களுக்கு நிதி பெறுதல் மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் என்று பரந்துப்பட்ட இலக்குகளை உள்ளடக்கியதாகவே இந்த வி…
-
- 0 replies
- 190 views
- 1 follower
-
-
புதுக்குடியிருப்பில் வான்குண்டுத் தாக்குதல்: வயோதிப பெண் பலி- இருவர் காயம் [செவ்வாய்க்கிழமை, 29 மே 2007, 16:36 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் வயோதிப பெண்மணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.55 மணியளவிலும், பின்னர் பிற்பகல் 2.20 மணியளவிலும் புதுக்குடியிருப்பு பகுதி வான்பரப்பில் நுழைந்த மிக்-27 ரக வானூர்திகள் வேணாவில் பகுதி மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன. இத்தாக்குதலில் வயோதிபப் பெண்ணான புதுக்குடியிருப்பு வேணாவிலைச் சேர்ந்த மெய்யாப்பிள்ளை அழக…
-
- 3 replies
- 1.5k views
-
-
அட்மிரல் ரவியை வெலிக்கடைச் சிறையில் பார்வையிட்டார் மகிந்த கார்வண்ணன்Nov 30, 2018 | 2:07 by in செய்திகள் கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை, சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்ச சந்தித்து நலன் விசாரித்துள்ளார். மகிந்த ராஜபக்ச நேற்று, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு அவரைப் பார்வையிட்டுள்ளார். இதனை மகிந்த ராஜபக்சவின் ஊடகச் செயலர் றொகான் வெலிவிட்ட உறுதிப்படுத்தியுள்ளார். வெலிக்கடைச் சிறையில், அட்மிரல் விஜேகுணரத்னவை பார்வையிடச் சென்ற மகிந்த ராஜபக்ச, தண்டனைக் கைதிகள…
-
- 0 replies
- 499 views
-
-
18 OCT, 2023 | 05:16 PM (எம்.வை.எம்.சியாம்) நாம் வழங்கிய அதிகாரத்தை கைமாற்றியுள்ளனர். இழந்த சுதந்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக மீண்டும் போராட வேண்டியுள்ளது. வடக்கு, கிழக்கு மாத்திரமல்ல. முழு நாட்டையும் மீட்பதற்கு வாருங்கள். பழைய பகைகளை மறந்து இரண்டாவது சுதந்திர போராட்டத்துக்காக அனைவரும் இணைய வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். இலங்கை எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் உப தலைவர் சட்டத்தரணி எல்.எஸ்.என்.பெரேரா எழுதிய ஈழ மூடநம்பிக்கையின் வெளிக்கொணர்வு நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்றுமுன்தினம் கொழும்பு பொது நூலகத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். …
-
- 5 replies
- 726 views
- 1 follower
-
-
முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: மாவடி ஓடைப் பாலத்திருந்து சிறீலங்காப் படைகள் பின்வாங்கல். மட்டக்களப்பு குடும்பிமலை எல்லையோரக் காட்டுப்புறத்தில் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இன்று முற்பகல் 11.20 மணியளவில் மாவடிஓடைப் பாலத்திருந்து விடுதலைப் புலிகள் நிலைகொண்டுள்ள காட்டுப் பகுதிகள் நோக்கி எறிகணைச் சூட்டாதரவுடன் பாரிய படை நடவடிக்கையை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுள்ளனர். ஒரு மணிநேரம் இடம்பெற்ற கடும் சமர்களையடுத்து சிறீலங்காப் படையினர் பலத்த இழப்புகளுடன் முன்னேற்ற முயற்சிகளைக் கைவிட்டுவிட்டுத் தப்பியோடினர். படையினரின் முன்னேற்ற முயற்சியின் பின்னர் படையினர் ஏற்கனவே நிலைகளை அமைத்திருந்த மாவடிஓ…
-
- 0 replies
- 1.4k views
-