ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
அரசுடன் இணையும் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள்: ரணில் எதிர்கொள்ளும் புதிய பிரச்சினை. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணி தலைவர்கள் பலரும் விரைவில் ஐக்கிய சுதந்திர முன்னணி அரசில் இணைந்து, அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என வெளியாகியிருக்கும் செய்திகள் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பெரும் தலையிடியைக் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றது. இம்மாத இறுதிக்குள் அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்வதற்கு திட்டமிட்டுள்ள அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இவ்விதம் அரசுடன் இணைந்துகொள்ளும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்குவதற்கும் தயாராகவிருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணித் தலை…
-
- 0 replies
- 828 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இரசாங்கத்திற்கும் இடையிலான 16வது சுற்றுப்பேச்சுவார்த்தை இன்று செவ்வாயக்கிழமை நடைபெறவிருக்கின்றது. இன்றைய பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் விடுத்த அழப்பை ஏற்றுக்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றைய சேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள இருப்பதாக அதன் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே 15ம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் அரசாங்கம் முன்பு வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்றாததால், பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டதாக கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்திருந்தது. இப்போது அரசாங்கத்தின் அழைப்பை எதுவித நிபந்தனையுமின்றி ஏற்றுக்கொண்டுள்ள கூட்டமைப்பு, தமது முன்னைய முடிவை ஏன் மாற்றினோம் என்பது குறித்தும் மக்களுக்கு எதுவித வ…
-
- 2 replies
- 853 views
-
-
இலங்கை அரசுடன் இப்போதைக்கு பேச்சு நடத்துவதற்கு தாம் தயாரில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கூட்டாகத் தீர்மானித்துள்ளனர். அத்துடன் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவையும் நிராகரிப்பதாக இதன்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 'ஜனாதிபதியைச் சந்திப்பது குறித்தும் கட்சியின் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களே கூடி முடிவெடுப்பர்' என்று நேற்றைய கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகிய…
-
- 40 replies
- 1.8k views
-
-
ஒருவருக்கு உரிமை தேவை என்றால் போராடப் பழக வேண்டும். அதைவிட்டு அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பேச்சில் கலந்துகொள்ள வேண்டும் என்று கோருவது எந்த வகையில் சரியானது. இவ்வாறு யாழ்.மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார். கல்முனை மாநகர சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாண்டிருப்பு பிரதான வீதியில் பிரசாரப் பொதுக் கூட்டம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற் கண்டவாறு கூறினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட தேர்தல் முகவர…
-
- 10 replies
- 1.2k views
-
-
அரசாங்கத்துடன் ஒத்துப் போகும் அரசியற் செயற்பாட்டின் மூலம் தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டை ஒற்றுமையினூடாக வலுப்படுத்த வேண்டியது வவுனியா, யாழ்ப்பாணம் நகர, மாநகர சபைகளுக்கான தேர்தல்களில் தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த கடமையாகும் என வவுனியாவில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது உரையாற்றும் போது அக்கட்சி தெரிவித்துள்ளது. யுத்தம் முடிவடைவதற்கு முன்னால் விடுதலைப் புலிகளை அழித்து விட வேண்டுமென்ற தேவை அரசாங்கத்திற்கு இருந்தது. இந்தத் தேவையை அப்போதைய இராணுவத் தளபதி, அமைச்சர்கள் எனப் பலரும் வலியுறுத்தினார்கள். விடுதலைப் புலிகளை அழித்து விட்டால் இந…
-
- 0 replies
- 678 views
-
-
அரசுடன் கலந்தாலோசிக்காமல், எவ்வித இராஜதந்திர தீர்மானங்களையும் எடுக்கக்கூடா தென வெளிநாடுகளில் சேவையாற்றும் தனது அனைத்து இராஜதந்திரிகளுக்கும் இலங்கை அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக பூரண விளக்கத்துடன் வெளிவிவகார அமைச்சினூடாக இராஜதந்திரிகளுக்கு அரசு அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது என தெரியவருகின்றது. அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய கடந்த வாரம், கொழும்பு நிர்வாகத்துடன் கலந்துரையாடாமல் இலங்கையின் பாதுகாப்பு நிலவரங்கள் சம்பந்தமாக அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியிருந்தார். இதன் போது, சீனாவுக்கு எதிராகவும் அவர் கருத்து வெளியிட்டார் எனவும், அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடத் தயாராக இருந்தார் என்றும் …
-
- 3 replies
- 637 views
-
-
இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுக்களில் தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள அரசு கொள்கை அளவில் இணங்கி உள்ளது. எந்தெந்த அதிகாரங்களை, எந்த அளவில் எப்படிப் பகிர்ந்து கொள்வது என்று அடுத்தடுத்த அரசியல் பேச்சுக்களில் ஆராய்வது என்றும் இரு தரப்புகளும் முடிவு செய்துள்ளன. அதிகாரங்களைப் பகிரும் போது மத்திய, மாநில அல்லது மாகாண அரசுகளுக்கு இடையில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் பொதுப்பட்டியல் இருக்கக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிரேமச் சந்திரன் உதயனுக்குத் தெரிவித்தார். அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு இடையிலான ஐந்தாம் கட்ட சந்திப்பு நேற்று மாலை 6…
-
- 7 replies
- 1.5k views
- 1 follower
-
-
அரசுடன் கூட்டுச் சேர்வதே இப்போது பொருத்தமானது - வடக்கு முதலமைச்சர் எமக்கு அரசியல் ரீதியாகத் தவறு இழைக்கப்பட்டுள்ளது உண்மையே. அதற்காக நாம் எம் மனதில் வெறுப்பையும் துவேசத்தையும் வளரவிடுவது பிழையென்றே எனக்குப் படுகின்றது. அது வன்முறைக்கே வித்திடும். வன்முறையால் ஏற்பட்ட அவதிகளையும் இடர்களையும் அல்லல்களையும் அனுபவித்தவர்கள் எமது மக்கள். மீண்டும் பொறாமை, துவேசம், வெறுப்புணர்ச்சி போன்றவற்றின் பாதையில் பயணிப்பது எமக்கு அழிவையே ஏற்படுத்தும். எமது சிந்தனைகள் மாறவேண்டும். அரசில் தமிழ் மக்களின் உரிமைகளை மனமுவந்து ஏற்றுக் கொள்வோருடன் கூட்டுச்…
-
- 2 replies
- 393 views
-
-
அரசுடன் சேரும் நோக்கம் இல்லை - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதராகலிங்கம் மலையக, மற்றும் முஸ்லீம் அரசியல்வாதிகள் போன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி அரசாங்கத்துடன் சேரும் நோக்கம் எதுவும் தம்மிடம் இல்லையென கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோதராகலிங்கம் தெரிவித்தார். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்றுபேர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக பொறுப்பற்ற சில இணையத்தளங்கள் வெளியிட்ட செய்திகளை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் ஏடு பிரசுரித்தமைக்கு கண்டனம் வெளியிட்ட அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் செய்திகளுக்கு இடமளிக்க வேண்டாமெனக் கோரிக்கை விடுத்தார். அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத…
-
- 0 replies
- 606 views
-
-
நடந்து முடிந்த 2020 ஆம் ஆண்டு பொது தேர்தலில் 09 ஆசனங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்று வெற்றி ஈட்டியதை தொடர்ந்து இன்று திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் இரா.சம்பந்தன் தலைமையில் விசேட பூசைகள் இடம் பெற்றது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் மற்றும் அதன் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஊடகங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் கருத்து தெரிவிக்கையில், இம்முறை இடம் பெற்ற தேர்தல் ஒரு ஜனநாயக தேர்தலாக நான் கருதவில்லை. மக்களுக்கு பணம் வழங்கி நன்கொடை கொடுத்து மதுபானம் வழங்கி ஆளும் கட்சியினர் ஆசனங்களை பெற்று கொண்டுள்ளனர். சிறிய சிறிய தமிழ் கட்சிகள் போட்டியிட்டு தமிழ் வாக்குகளை பிரித்து உள்ளனர் இதனால…
-
- 11 replies
- 1.5k views
-
-
முஸ்லிம் காங்கிரஸ் சலுகைகள் மற்றும் பணத்துக்காக அரசுடன் இரகசிய ஒப்பந்தமொன்றை செய்து கொண்டுள்ளதுடன் பகிரங்கமாக அரசை எதிர்ப்பது போன்று செயற்பட்டு மக்களது வாக்குகளை சேகரித்து அரசுக்கு விற்பனை செய்யும் சதித் திட்டத்தை தீட்டியுள்ளது என்று என்று முஸ்லிம் மக்களே தெரிவிக்கிறார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின்ன் தேசியக் குழு மற்றும் கிழக்கு மாகாண குழுத்தலைவர் தயா கமகே தெரிவித்துள்ளார். கடந்த இரு தினங்களாக கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற ஐ.தே.க தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.முஸ்லிம் மக்களுக்கு நன்மை செய்வது போல் செயற்பட்டு அவர்களை அரசுக்கு விற்று மக்களின் உரிமைகளை மீறி தனது இருப்பைப் பேணிக் கொள்ள முயற்சிக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கு எ…
-
- 0 replies
- 515 views
-
-
அரசுடன் பேச 8 பேர் கொண்ட குழு- நியமித்தது கூட்டமைப்பு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்காக, இலங்கை அரசாங்கத்துடன் விரைவில் பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதற்கான குழுவொன்றையும் நியமித்துள்ளது. கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நேற்றுக்காலை 10 மணி தொடக்கம், பிற்பகல் 1 மணிவரை நடந்த கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் மாவை சேனாதிராசா, ரெலோ சார்பில், கோவிந்தம் கருணா…
-
- 2 replies
- 378 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து அரசுத் தரப்புடன் பேச்சு நடத்து வதற்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் இருபத்தியிரண்டு நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கும் ஆளும் பொது மக்கள் ஐக்கிய முன்னணி அழைப்பு விடுத்திருக்கின்றது. பொதுமக்கள் ஐக்கிய முன்னணியின் செயலாளர் என்ற முறையில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இது தொடர்பான அழைப்புக் கடிதங்களைக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு அனுப்பி வைத்திருக்கின்றார். அரசுத் தரப்புடன் பேசுவதற்கான வசதியான திகதி மற்றும் நேரத்தைக் கூட்டமைப்பு எம்.பிக்களே முடிவு செய்து தமக்குத் தகவல் தரலாம் என அவர் அந்த அழைப்புக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் என அறியவந்தது. தமிழ்க் கூட்டமைப்பின் தலைமைக்கு அல்லது அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு அழைப்பு வ…
-
- 0 replies
- 483 views
-
-
(ஆர்.ராம்) இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக ராஜபக்~ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளதாக அதன் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்கு ஒரு தடையாக அமையாது என்றும் அரசாங்கம் அனைத்து மக்களுக்குமான புதிய அரசியலமைப்பொன்றை ஸ்தாபிப்பதற்கு விரும்பினால் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர்ந்து செல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித…
-
- 1 reply
- 381 views
-
-
அரசுடன் பேசத்தயார் ! ஜெனிவா தீர்மானம் தடையல்ல என்கிறார் சுமந்திரன் (ஆர்.ராம்) இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக ராஜபக்~ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளதாக அதன் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்கு ஒரு தடையாக அமையாது என்றும்ரூபவ் அரசாங்கம் அனைத்து மக்களுக்குமான புதிய அரசியலமைப்பொன்றை ஸ்தாபிப்பதற்கு விரும்பினால் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர்ந்து செல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது, ஐக்கிய ந…
-
- 1 reply
- 325 views
-
-
அரசுடன் பேசுவதில் இரகசியம் வெளியிடப்படமாட்டாது என்கிறார் சுமந்திரன் எம் பி [sunday, 2011-07-24 22:30:07] லண்டனில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பங்கேற்க அங்கு சென்றிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தீபம் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியின் காணொளி இணைப்பு.. http://youtu.be/_eRQbrnWWVo http://youtu.be/XOpdbpUrsBs http://youtu.be/LWTP20OSgRU http://youtu.be/ZHS2K6Qx10U http://www.seithy.com/breifNews.php?newsID=47091&category=TamilNews&language=tamil
-
- 6 replies
- 908 views
-
-
அரசுடன் பேச்சுக்களை நடத்த விடுதலைப்புலிகள் தயார்.சுப தமிழ்ச்செல்வன் தெரிவிப்பு. அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மீண்டும் ஆரம்பமாகியிருக்கின்ற சமரை நிறுத்துவதற்கு சமாதான பேச்சு வார்த்தைகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு விடுதலைப்புலிகள் தயாராக இருப்பதாக விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப தமிழ்ச்செல்வன் இன்று ரொய்ட்டர் செய்தி சேவைக்கு வழங்கியுள்ள மின்னஞ்சல் செவ்வியில் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த பேச்சு வார்த்தை ஸ்ரீலங்கா படையினர் தங்களது தாக்குதல்களை நிறுத்துவதன் மூலமாக மட்டுமே உடனடியாக சாத்தியமாகலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
-
- 0 replies
- 1.1k views
-
-
அரசுடன் பேரம் பேசும் தமிழ் தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பதற்கு சில தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பேரம் பேசலில் இறங்கியுள்ளதாக அறிய முடிகிறது. சில காலமாகவே அரசுடன் நெருங்கிச் செயற்பட்டு வரும் சிறிகாந்தா, கிசோர் ஆகியோருடன் அண்மைக் காலம் வரை வெளிநாடுகளில் அரசிற்கெதிரான பிரச்சாரங்களைத் தீவிரமாக முன்னெடுத்த மற்றொரு பாராளுமன்ற உறுப்பினரும் இந்தப் பேரத்தில் இறங்கியுள்ளதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்தி கிடைத்துள்ளது. மூலம் : http://www.tamilstar.org
-
- 5 replies
- 1.5k views
-
-
வடக்கு மாகாண சபையில் மென்போக்குடன் நடந்து கொள்ளுங்கள் என்று உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். சபையின் இன்றைய அமர்வுக்கு முன்பாக உறுப்பினர்களை நேற்று அவசரமாகச் சந்தித்தார் முதலமைச்சர். வடக்கு மாகாண சபைக்கும் அரசுக்கும் இடையில் முரண்பாடுகளை வளர்க்கும் வகையில் செயற்படாமல் மென்போக்குடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அப்போது உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார் முதலமைச்சர். அத்துடன் மூன்று உறுப்பினர்கள் சமர்ப்பித்துள்ள பிரேரணைகள் கடுமையானவையாக இருப்பதால் அவற்றில் திருத்தங்களைச் செய்யும் படியும் அவர் வலியுறுத்தினார். சர்வதேச விசாரணை, முள்ளிவாய்க்காலில் நினைவுச் சின்னம், நடந்ததும் நடந்து கொண்டிருப்பதும் இனப்படுகொலை என்று பிரகடனப்படுத்தல் ஆகிய …
-
- 0 replies
- 166 views
-
-
தேசியப் பட்டியல் ஆசனங்கள் தொடர்பில் விமல் வீரவன்ச அரசுடன் முரண்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்கு முன்னர் தமது கட்சிக்கு இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் வழங்கப்படும் என உறுதி வழங்கப்பட்டிருந்ததாகவும் ஆனால் தற்போது ஒரேயோரு தேசியப் பட்டியல் ஆசனமே வழங்கப்பட்டிருப்பதாகவும் இது தமக்கு இழைக்கப்பட்ட அநீதி எனவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைச்சரவையில் இடம்பெறுவதில்லை என முதலில் முடிவு செய்திருந்ததாகவும் எனினும் செயற்குழு கூடி அமைச்சுப் பொறுப்புகளை ஏற்பதெனத் தீர்மானித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. SOUrce: http://www.eelamweb.com
-
- 1 reply
- 1k views
-
-
அரசுடான போரை எதிர்கொண்டு, தமிழ் மக்களைப் பாதுகாக்கும் பலம் புலிகளுக்கு உண்டு - பா. நடேசன் சிறீலங்கா அரசுடனான போரை எதிர்கொண்டு, தமிழ் மக்களைப் பாதுகாக்கும் பலம் விடுதலைப் புலிகளுக்கு உண்டு என தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற கண்காணிப்புக் குழுவின் தலைவருடனான சந்திப்பை அடுத்தே உடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருருந்து தன்னிச்சையாக விலகுவதாக அறிவித்ததுடன், கண்காணிப்புக் குழுவினர் எதிர்வரும் 16ம் நாள் தமது நாடுகளுக்குத் திரும்புகின்றனர். இவர்கள் தமது நாடுகளுக்குத் திரும்பும் முன்னர் இவர்களுடன் ஒரு சுமூகமான சந்திப்பை ஏற்படுத்தினோம்.…
-
- 6 replies
- 2.4k views
-
-
Posted on : 2008-03-20 அரசுத் தலைமை தன்போக்கை திருத்திக்கொள்ள இறுதி வாய்ப்பு இலங்கை நிலைவரம் குறித்து நேரில் ஆராய இங்கு வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக்குழு பல்வேறு தரப்புகளையும் சந்தித்து விரிவாக உரையாடியிருக்கின்றது. தனது விஜயத்தின் முடிவில் அக்குழு ஊடகவியலாளர்களையும் சந்தித்திருக்கின்றது. எனினும், இந்த ஊடகவியலாளர் மாநாட்டை நடத்துவதை ஒட்டி இலங்கை அதற்கு விதித்திருந்த கெடுபிடி ஒழுங்கு விதிகளை அனுசரித்து, அதற்கு அமைவாக அங்கு கருத்துத் தெரிவித்துச் சென்றிருக்கின்றது அக்குழு. மேலோட்டமாகப் பார்த்தால் இந்தச் செய்தியாளர் மாநாடும் அதில் வெளியிடப்பட்ட கருத்துகளும் அவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தாமல் அடங்கிப்போய்விட்டன போல் படும். ஆனால் அந்தச் செய்தியாளர் மாநா…
-
- 3 replies
- 1.7k views
-
-
அரசுத்தரப்புக் கொறடவாக அண்ணன்; அதனால் பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து கீதாஞ்சன குணவர்த்தன விலகல்! ஆளுங் கட்சியின் எம்பியும் பிரதி சபாநாயகருமான கீதாஞ்சன குணவர்தன பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். இவர் தமது இராஜினாமாக் கடிதத்தைச் சபாநாயகர் டபிள்யூ ஜே.எம். லொக்கு பண்டாரவிடம் நேற்றுக் கையளித்தார் என்று சபாநாயகர் தெரிவித்தார். தனது சகோதரர் ஆளுங்கட்சியின் பிரதம கொரடாவாக இருக்கின்ற நிலையில் தான் பிரதி சபாநாயகராக இருப்பது அரசியல் விழுமியங்களுக்கு அப்பாற்பட்டது எனக் குறிப்பிட்டே கீதாஞ்சன பதவியை இராஜினாமாச் செய்திருக்கிறார். கீதாஞ்சன குணவர்தனவின் மூத்த சகோதரர் தினேஷ் குணவர்தனவே ஆளுங் கட்சியின் பிரதம கொரடாவாக அண்மையில் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். …
-
- 0 replies
- 640 views
-
-
அரசும் அரச சார்பற்ற நிறுவனங்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தற்காலிக வீடு களை அமைத்தல், மலசல கூடங்களை அமைத் தல், வாழ்வாதார உதவிகளை வழங்குதல், அவ சர நிலைமைகளின் போது உதவுதல் ஆகிய பணி களைச் செய்வதற்கு மட்டுமே அரசாங்கம் அனு மதி வழங்கி உள்ளது. எமது சமூகம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள் ளது. அதனால் எங்கள் மக்களின் சமூக, கல்வி மற்றும் உளநலத் தேவைகள் அதிகரித்துள்ளன. ஆனால் அவற்றை நிறைவேற்றுவதற்கு குடா நாட்டின் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு நிதி வசதி வழங்குவதற்கு வெளிநாட்டு நிதி நிறுவனங் களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜனாதிபதி விசேட செயலணியி னால் வழங்கப்படும் அனுமதியைக் காண்பித் தால் மட்டுமே வெளிநாட்டு நிதி நிறுவன அமைப் …
-
- 0 replies
- 445 views
-
-
அரசும் படையினரும் எத்தகைய தடைகளை ஏற்படுத்தினாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோத்லில் இருந்து விலகாது [Tuesday, 2011-07-19 18:14:14] அரசும் படையினரும் எத்தகைய தடைகளை ஏற்படுத்தினாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் நிச்சயம் போட்டியிடும்; ஒருபோதும் விலகாது என்று தெரிவித்தார் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன். அரசு தொடர்ந்து நெருக்கடிகளைக் கொடுத்தால் தேர்தலில் இருந்து கூட்டமைப்பு விலகிவிடும் என்று வல்வெட்டித்துறை நகரசபைக்கான கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். அது குறித்துத் கூறிய சுரேஷ் பிரேமச்சந்திரன் எத்தகைய நிலையிலும் தேர்தலில் இருந்து விலகுவ…
-
- 3 replies
- 239 views
-