Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளைமோர் தாக்குதல் நடத்திவிட்டுச் சென்ற ஆழ ஊடுவும் அணியினர் மீது தாக்குதல்: ஒருவர் பலி [செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2008, 07:38 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி மாவட்ட அரச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் சாந்தலிங்கம் விமலகுமார் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரை மக்கள் படையினர் வழிமறித்து தாக்கியுள்ளனர். இதில், ஆழ ஊடுருவும் அணியைச்சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை, மாங்குளத்துக்கும் இளவன்குளத்துக்கும் இடையில் சென்றுகொண்டிருந்த அரச செயலக உத்தியோகத்தர் சாந்தலிங்கம் விமலகுமார் மீது சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் கிளைமோர் தாக்குதல் நடத்தி படுகொலை செய்துவிட்டு தப்பிச்செல்ல முய…

    • 6 replies
    • 1.5k views
  2. பிரித்தானியத் தொழிற்கட்சியின் இறுதி நாள் மாநாட்டில் உரையாற்றிய பாராளமன்ற உறுப்பினர் சியொபெய்ன் மக்னோ அவர்கள் இலங்கையின் மனித உரிமை மீறல்களை அங்கு எடுத்துக் காட்டி இலங்கையுடன் வர்த்தகம் செய்யும் Marks & Spencer, Next போன்ற நிறுவனங்களில் பொருட்கள் வாங்கும் போது அல்லது இலங்கைக்கு விடுமுறையைக் கழிக்கச் செல்லும் போது நீங்கள் கொடுக்கும் பணம் மூன்று இலட்சம் மக்களை அடைத்து வைத்திருக்கும் அரசுக்கு செல்லத்தான் வேண்டுமா என்று யோசியுங்கள் என்றார். உலகத்திலேயே ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடு இலங்கை என்றும் அவர் குரலெழுப்பினார். காணொளி .................. http://vannikuruvi.blogspot.com/2009/10/blog-post.html

    • 3 replies
    • 1.5k views
  3. திங்கள் 20-08-2007 20:50 மணி தமிழீழம் மயூரன் தாய்லாந்திருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட மூன்று தமிழர்களும் சிறீலங்காப் படையினரால் சித்திரவதைகளுக்கு உள்ளாகலாம் என அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. நாடுகடத்தப்பட்ட மூன்று தமிழர்களும் சிறீலங்கா விமான நிலையத்தில் வைத்து சிறீலங்கா குற்றத் தடுப்பு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவேவேளை இவர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் இவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தாய்லாந்தில் ஜக்கிய நாடுகள் சபையின் அகதிகள் ஸ்தாபனத்தில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த போதும் இவர்களுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பிருப்பபதாகத் …

    • 0 replies
    • 1.5k views
  4. சென்னை குரேம்பேட்டையில் கருணாநிதியைக் கண்டித்து சுவரொட்டி சென்னை குரேம்பேட்டை தொடர்வண்டி நிலையத்தில் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியைக் கண்டித்து ”தமிழர் பேரவை” என்ற அமைப்பின் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சிக்கும் அச்சுவரொட்டியில் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழினப் பகைவன் கருணாநிதியின் நச்சு அரசியலுக்கு சாவுமணி அடிப்போம்! கருணாநிதியே! தெலுங்கனாய்ப் பிறந்து தமிழனாய் நடித்து, உழைக்கும் மக்களைப் பிரித்தாளுகிறாய்! திராவிட அரசியலால் தமிழ் இனத்தைச் சீரழித்தாய்! ஆங்கிலவழிக் கல்வியால் தமிழை அழித்தாய்! பணத்தினால் வாக்குரிமையின் வலிமையை அழித்தாய்! தொலைக்காட்சியைத் தொடங்கிப் பண்…

    • 1 reply
    • 1.5k views
  5. இலங்கையில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவுக்கு ஐஸ்வர்யா ராய் சென்றால் அவரது படங்களை புறக்கணிப்போம் என்றும், அமிதாப் வீட்டு முன்பு நாளை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் இயக்குனர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, இலங்கையில் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா ஜூன் மாதம் நடத்தப்படுவதாக அறிந்தோம். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை நடிகர் அமிதாப்பச்சன் முன்னின்று கவனித்து வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன. அமிதாப்பின் மருமகள் ஐஸ்வர்யாராயும் இந்த விழாவில் பங்கேற்க இருப்பதாக கேள்வியுறுகிறோம். இதற்காக மனவருத்தப்படுகிறோம். தமிழ் ரசிகர்கள் முழுமையாக அவரை நேசிக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் இந்த விழாவில் அவர் …

  6. கொழும்பு-ஆபாசப்படம் எடுத்தவர்கள் கைது : சிக்கியவர்கள் தமிழ்ப்பெண்களா? கொழும்பு, பெட்டா மல்வத்த சாலையில் நெடுங்காலமாக இளம்பெண்களை வைத்து நீலப்படம் எடுத்த நான்கு இளைஞர்களை கொழும்பு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள குறுந்தகடுகள், படமெடுக்கும் கருவிகள், சஞ்சிகைகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தக் கும்பலில் சிக்கியுள்ள பெண்கள் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுபவர்களா அல்லது வதை முகாம்களில் வாடும் அப்பாவிப் பெண்களைக் கடத்தி வந்து இவ்வாறு படமெடுக்கின்றனரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வதை முகாம்களிலிருந்து அவ்வப்போது கடத்திச் செல்லப்படும் தமிழ்ப் பெண்களை மயக்க மருந்து கொடு…

  7. பிள்ளையானை விடுதலை செய்யக்கோரி போராட்டம் முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அடையால உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. http://www.virakesari.lk/article/35498

  8. கொரோனா வைரஸ் உள்ளாகி நோயாளி ஒருவர் மருத்துவமனையில் மரணத்தை தழுவினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய தர செயற்பாட்டு நடைமுறைகள் குறித்து சட்டம் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் கோவிட் 19 நோயினால் ஒருவர் மரணம டைந்தால் இந்த தர செயற்பாட்டு நடைமுறைகளின் பிரகாரம் அவர்கள் எந்த சமயத்தை சேர்ந்தவர்களாயின் 24 மணித்தியாலத்துக்குள் தகனம் செய்யப்பட வேண்டும். சட்ட மருத்துவ அதிகாரிகளின் திணைக் களத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஆவணம் ஒன்றை எக்னோமிக் நெக்ஸ்ட் இணையத்தளம் பார்த்திருப்பதாக கூறுகின்றது. அத்துடன் மரணம் தீவிர சிகிச்சைப் பிரி வில் அல்லது இந்த சிகிச்சைக்கான நோக்கத் துக்காக விசேட பிரிவில் சம்பவித்தால் பிரேத பரிசோதனை தேவைப்படாது …

    • 19 replies
    • 1.5k views
  9. இலங்கை இனப்பிரச்சினை பேச்சு மூலம் தீராவிட்டால் "தனி ஈழ மாநிலம்" அமைய அதிமுக வலியுறுத்தும்: அதிமுக தேர்தல் அறிக்கை இலங்கை இனப் பிரச்சினை பேச்சு மூலம் தீராவிட்டால் தனி ஈழ மாநிலம் அமைய அதிமுக வலியுறுத்தும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது அஇஅதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இலங்கை பிரச்சினை சம்பந்தமான கோரிக்கைகள்: இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் மேற்கொள்ள அழைப்பு விடுப்பதோடு மட்டுமல்லாமல், அப்பாவித் தமிழர்களுக்கு எதிரான படுகொலையை நிறுத்தவும் உடனடியாக கோரிக்கை வைக்கப்படும். பெரும்பான்மை சிங்கள இனத்தவருக்கு சமமாக தமிழ் மக்கள் நடத்தப்பட வேண்டும். தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில், அவர்களுக்கு …

    • 10 replies
    • 1.5k views
  10. மனித உரிமை மீறல்களில் ஈடுபடுமாறு புலிகள் இராணுவத்தை தூண்டுகின்றனர்: சரத் பொன்சேகா [சனிக்கிழமை, 25 நவம்பர் 2006, 18:08 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா இராணுவத்தினரை மனித உரிமை மீறல்களில் ஈடுபடச் செய்யுமாறு விடுதலைப் புலிகள் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்று சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார். சிறிலங்கா இராணுவ தலைமையகத்தில் படையணிகளின் தளபதிகளுக்கான மூன்று நாள் பயிலரங்கை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: இராணுவத்தினரின் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் ஆத்திரமூட்டும் மீறல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு உத்தியாக செயற்படுத்துகின்றனர். இந்த வலையை நாம் தவிர்க்க வேண்டும். தனிநாட்டு கோரிக்கைக்காக மனித உரிமை மீறல்களி…

    • 2 replies
    • 1.5k views
  11. வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடு கடந்த அரசு என்பன கி.மு., கி.பி. போலாகி விட்டன. இந்நிலையில் முகாம்களுக்குள் முடங்கியுள்ள 3 இலட்சம் மக்களின் அவல வாழ்விற்கு முன்னால், இவை குறித்து உரையாட முடியுமா? அல்லது விவாதிக்க முடியுமாவென்கிற கேள்வி, சில புலம் பெயர் அறிவு ஜீவிகளால் முன்வைக்கப்படுகிறது. அதற்கான மாற்றுக் கருத்துகளையும் வழிமுறைகளையும் முன்வைப்பதே ஆரோக்கியமிக்கதாக இருக்க முடியும். வட்டுக்கோட்டை பிரகடனம் வெறும் விவாத பொருளாகி, வரலாற்றில் ஒரு மிகச் சிறிய அம்சமென சித்திரிக்கப்படுகிறது. சர்வதேச அரங்கில் ஏற்படும் மாறுதல்கள் குறித்தும், அவை பற்றியதான மேலெழுந்த வாரியான விளக்கங்கள், விரிவாகப் பேசப்படாமல் வாய்ப்பாடுகள் போன்று ஒப்புவிக்கப்படுகின்றன. ஆனாலும் கடந்த மே 19 வ…

  12. ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தை தடுக்கும் முயற்சியில் மகிந்த சமரசிங்க ஜஞாயிற்றுக்கிழமைஇ 11 மார்ச் 2007இ 17:23 ஈழம்ஸ ஜக.திருக்குமார்ஸ ஜெனீவாவில் நாளை ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் நான்காவது மாநாட்டில் கலந்து கொள்ளும் சிறிலங்காவின் மனித உரிமைகள் பேரனர்த்த நிவாரண அமைச்சர் மகிந்த சமரசிங்க சிறிலங்காவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தினால் கொண்டுவரபட தீர்மானித்திருக்கும் தீர்மானத்தை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்படுகின்றது. நாளை திங்கட்கிழமை (12.03.07) ஆரம்பமாகி 30 ஆம் நாள் வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத் தொடரில் உலகில் மனித உரிமைகளை மேம்படுத்துதல்இ பாதுகாத்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. இதில் மகிந்த சமரசிங்க தலைமையிலான …

    • 6 replies
    • 1.5k views
  13. வவுனியாவில் 156 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்: லக்ஸ்மன் கிரியெல்ல வவுனியாவில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற சமரில் 156 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகத்துறை தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகள் வசம் 95 சடலங்கள் இருக்கின்றன. அவை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட உள்ளன. இந்த மோதல்களில் விடுதலைப் புலிகள் இரு டாங்கிகளை எடுத்துச் சென்றுள்ளதுடன் 10 கொள்கலன்களில் உள்ள வெடிபொருட்கள் மற்றும் கனரக ஆயுதங்களையும் அழித்துள்ளனர். உக்கிரமான மே…

  14. இலங்கையில் தொடரும் யுத்தத்தில் கடந்த செப்ரம்பர் மாதம் படைத்ததரப்பில் 200 பேர் கொல்லப்பட்டு 997 பேர் காயமடைந்துள்ளதாகவும் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டு 29 பேர் காயமடைந்ததாகவும் பிரதமர் ரட்ணகசிறி விக்கிரமநாயக்கா நாடாளுமன்றத்தில் இன்று (ஒக்07) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட பினனர் அவசரகாலச்சட்டம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு நிலமைகள் தொடர்பாக ஆற்றிய உரையின் போதே பிரதாமர் இந்தப் புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  15. சானல் 4வுக்கு இலங்கை அரசின் பதில் வீடியோ சானல் 4 தொலைக்காட்சியில் கடந்த காலங்களில் வெளியான விவரணப் படங்களில் இலங்கைப் படையினர் பெருமளவு போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இப்போது ‘லைஸ் அக்ரீட் அப்ஒன்’ என்ற தலைப்பில், அதாவது, சனல் 4 இல் வெளியான விவரணப்படத்தை பொய்களாலானது என்று பிரசாரம் செய்யும் பாணியில் ஆங்கில மொழியிலான விவரணப் படமொன்று தற்போது இலங்கை அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. சானல் 4 இல், இலங்கை அரசாங்கமும் படையினரும் புரிந்துள்ளதாக கூறப்பட்ட பல குற்றச்செயல்களை மறுக்கும் இந்த படம், வீடியோ காட்சிகள் போலியாக தொகுக்கப்பட்டு, உண்மையானவையாக காட்டப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது. தற்போது, இலங்கை அரசின் பொறுப்பில் ம…

  16. [08 - ஆப்ரில் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] கடந்த இரண்டு நாட்களாக இலங்கையின் அச்சு, மின்பொறி ஊடகங்களில் பெரிதும் எடுத்துப் பேசப்படுகின்ற விடயம் இந்த ஆய்வுப் புள்ளி விபரங்களாகும். பாக்கியசோதி சரவணமுத்து அவர்களை தலைமைப் பொறுப்பாளராக கொண்டுள்ள சமூகக் குறிசுட்டி (ஸொcஇஅல் ஈன்டிcஅடொர்) எனப்படும் ஆய்வு நிறுவனம், 2007 பெப்ரவரியில் செய்த ஆய்வின் முடிவுகளென இவை தரப்பட்டுள்ளன. மே 2001 இலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் 25 ஆவது ஆய்வு முயற்சி இதுவாகும். சமாதான முறைவழி பற்றி அரசாங்கம் பொருத்தமான கொள் நெறியை உருவாக்கும் பொழுது இப்புள்ளி விபரங்கள் பயன்படும் என்பது ஆய்வாளர்களின் நோக்கமாகும். வெளிவந்திருக்கும் இந்த அறிக்கை மிக முக்கியமான ஒரு சூழலிலே வெளிவந்துள்ளது. யுத்த…

    • 1 reply
    • 1.5k views
  17. நவீன நீரோ மன்னன் நாடு கெட்டுக்கிடக்கிறது. இரவில் நிம்மதியாகக் கூடத்தூங்க முடியாமல் சனங்கள் பரிதவிக்கிறார்கள். பஸ்ஸில் கலக்கமில்லாமல் பயணம் செய்;யமுடியாது. விதைத்த வயலை அறுக்கமுடியாமல், வீட்டிலிருக்கும் நெல்லையோ அரிசியையோ போய் எடுக்க வழியில்லாமல் அகதி முகாம்களில் சனங்கள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். லட்சக்கணக்கானவர்களுக்கு வீடுகளில்லை. அப்படியல்ல வீடுகளிருக்கு ஆனால் அவற்றில் இருப்பதற்கு அனுமதி இல்லை. நூற்றுக்கு மேற்பட்ட பள்ளிகள் நடக்கவேயில்லை. பாதைகளுமில்லாமல் பயணங்களுமில்லாமல் மக்கள் முடக்கப்பட்டிருக்கிறார்கள். தினமும் ஒரு தடவையாவது பங்கருக்குள் நுழையாமல் அன்றிரவு படுக்கைக்குச் செல்ல முடியாது. இவ்வளவும் இலங்கைத்தீவில் நடக்கிறது. அதுவும் தமிழ்மக்களுக்குத்தான் …

  18. தலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று! தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் மேதகு வேலுப் பிள்ளை பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாள் தாயகத்திலும் புலத்திலும் இன்று கொண்டாடப்படவுள்ளது. தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறை ஆலடி வீதியில் அவரது இல்லம் அமைந்துள்ள வளாகம் அந்தப் பகுதி இளைஞர்களால் துப்புரவு செய்யப்பட்டு சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கு, இன்று காலை கேக் வெட்டிக் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன. தமிழர்தாயகத்தின் இதர பகுதிகளிலும், புலம்பெயர்நாடுகளிலும்கூடதலைவர் பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் கடந்த பல வருடங்களாக இராணுவத்தினர…

  19. President: Dr. Nithyanantha Sharma Secretary: Kopalakrishnan M.A. To Ban Ki‐Moon The Secretary General UN Head Quarters New York, USA Dear Sir, Ref: Your statement of 16/02/2009 Your aforesaid statement is biased and does not reflect the situation on the ground. For instance your statement that ‘‘the designation of the new safe zone has provided some respite for the tens of thousands of civilians.’’ is untrue. These Sri Lankan armed forces are continuing to attack the civilians of this so called safe zone with artillery shells, cluster bombs and aerial bombardments. Lives are lost on a daily basis. Dead bodies can be seen …

  20. அமைச்சரவையை மேலும் விரிவுபடுத்தி `ஆட்கடத்தலுக்கும்' ஒருவரை நியமியுங்கள் -கன்னியுரையில் சந்திரகாந்தன் எம்.பி. [08 - March - 2007] [Font Size - A - A - A] - டிட்டோ குகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் - தினமும் தமிழர்கள் கடத்தப்படுகையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்து கடத்தலுக்கு பதில் கூறும் அமைச்சரொருவரை புதிதாக நியமிக்க அரசு முன்வரவேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரகாந்தன் தனது கன்னி உரையில் வேண்டுகோள் விடுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தினமும…

  21. புலம் பெயர்மக்கள் உடனடியாக செய்யவேண்டிய ஒன்று.... உடனடியாக முடியுமான வெளி நாட்டு மக்களை உங்கள் போரட்டங்களுக்கு அழைத்து செல்லுங்கள்... இது போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை.. மிக மிக தேவையானது...காலத்தின் அவசியம்... பல நிருவனங்கள்(வெளி நாட்டு) இந்த விடையமாக போராடுபவர்களை கேட்டு உள்ளனர்.. இந்த தேவையை உடன் தீருங்கள்... நீங்கள் அனியப்படுத்தபடாமல் உலகிற்கு காட்ட இது முக்கிய தேவை.... முக்கியமாக இலண்டனில்.. மற்றும் நாடுகளில் உடன் செயல்படுத்துங்கள்.... எவ்வளவோ வெளி நாட்டு நண்பர்கள், பாடசாலை, சேர்ச் நண்பர்கள், வேலை நண்பர்கள் இருபார்கள் அவர்களை அழைத்து செல்லுங்கள்... இன்றில்லாவிட்டால் நாளை ... நாளை இல்லாவிட்டால் அதன்பின்...இப்படியெ..உடன் செயலில் இறங்குங…

  22. உசன் படை நிலைகள் மீது புலிகள் பீரங்கி தாக்குதல் இன்று இரவு எழுது மட்டுவாள் உசன் சிங்கள இராணுவ படை நிலைகள் மீது புலிகள் ஏவிய எறிகனைகள் வீழந்து வெடித்துள்ளன. இவ் தகவலை படை நிலைகளிற்குள் அருகில் உள்ள சிலர் கலகத்திற்கு தெரிவித்துள்ளனர். அவா்கள் மேலும் கூறியாவது தமிழீழ விடுதலைப் புலிகள் ஏவிய கனரக பீராங்கி மேலும் படிக்க... http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1129

  23. (ஆர்.யசி) தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்த விடயத்தில் இந்திய தரப்புடன் தாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தயாராகி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் மௌனமே நிலவியதாகவும் எனினும் தமிழர் அரசியல் விவகாரம் குறித்து தாம் நேரடியாக ஜனாதிபதியுடன் பேச தயாராக இருப்பதாகவும் கூட்டமைப்பு கூறுகின்றது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் இந்திய பிரதமர் கவனம் செலுத்தியிருந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஊடகங்களில் இந்த விடயங்கள் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்ப…

  24. மட்டக்களப்பு தாழங்குடாவில் இன்று நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தாழங்குடா கல்முனை வீதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.05 மணிக்கு சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட அதிரடிப்படையினர் ஒன்று கூடிய இடத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிரடிப்படையினரில் 4 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். மேலும் பொதுமகன் ஒருவரும் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    • 0 replies
    • 1.5k views
  25. கிழக்கு மாகாணத்தில் தொப்பிகல வரையிலான பகுதிகளைக் கைப்பற்றும் வரை இராணுவ நடவடிக்கை தொடரும் என்று கிழக்கு மாகாண இராணுவ கட்ட ளைத் தளபதி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் இதுவரை கைப்பற்றப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புலிகளால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளில் 20 சதவீதமானவற்றைப் படை யினர் மீட்டுள்ளனர். மட்டக்களப்பு திருகோணமலை நெடுஞ்சாலை மீளத்திறக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்காளர் பதிவேடுகளின் அடிப்படை யிலேயே மக்கள் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர். வாகரைப் பகுதியில் புலிகளால் கைவிடப்பட்ட முகாம் ஒன்றில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.