Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மனித உரிமை மீறல்களில் ஈடுபடுமாறு புலிகள் இராணுவத்தை தூண்டுகின்றனர்: சரத் பொன்சேகா [சனிக்கிழமை, 25 நவம்பர் 2006, 18:08 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா இராணுவத்தினரை மனித உரிமை மீறல்களில் ஈடுபடச் செய்யுமாறு விடுதலைப் புலிகள் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்று சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார். சிறிலங்கா இராணுவ தலைமையகத்தில் படையணிகளின் தளபதிகளுக்கான மூன்று நாள் பயிலரங்கை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: இராணுவத்தினரின் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் ஆத்திரமூட்டும் மீறல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு உத்தியாக செயற்படுத்துகின்றனர். இந்த வலையை நாம் தவிர்க்க வேண்டும். தனிநாட்டு கோரிக்கைக்காக மனித உரிமை மீறல்களி…

    • 2 replies
    • 1.5k views
  2. இலங்கையில் புகை பிடித்தல் காரணமாக வருடாந்தம் 21,000 பேர் வரையில் சாவடைவதாக சுகாதார அமைச்சு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. புகைத்தலால் ஏற்படுகின்ற நோய்களால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோருக்கு அவர்களது குடும்பங்கள் பெருந்தொகை பணத்தை செலவிட நேரிடுவதாகவும், சிகரெட் புகையை கர்ப்பிணித் தாய்மார்கள் சுவாசிப்பதால் வருடாந்தம் ஏற்படுகின்ற கரு கலைவுகளின் எண்ணிக்கையை இதுவரை மதிப்பிட முடியாமற்போயுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. அத்துடன்புகைப் பிடித்தலை தடுப்பதற்கு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. http://www.onlineuthayan.com/News_More.php?id=834951887109570886

  3. சி.வி.யின் தலைமையில் புதிய கூட்டணி உதயம் வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது கைச்சாத்திடப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) ரில்கோ விருந்தினர் விடுதியிலேயே குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் வடக்கு முன்னாள் முதலமைச்சருமான விக்கினேஸ்வரன் தலைமையில் புதிய அணியொன்று உருவாக்கும் முயற்சிகள் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்தன. விக்கினேஸ்வரன் எனினும் கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட இழுபறி நிலைமைகளால் அது குறித்தான உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது அந்தக் கூட்டணிக…

    • 10 replies
    • 1.5k views
  4. கடினமான முடிவுகளை எடுக்கும் வல்லமை பொருந்தி ஒரே ஒரு மனிதராக பிரபாகரன் - அகாசி. கொள்கைக் பற்றில் உறுதி கொண்டவராக தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் திகழ்வதாக யப்பானின் சிறப்புத் சமாதானத் தூதுவர் யசூசி அகாசி தெரிவித்துள்ளார். யப்பானில் தலைநகரில் வைத்து இந்திய ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்திற்க வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார். மிகவும் கடினமான முடிவுகளை எடுக்கும் வல்லமை பொருந்தி ஒரே ஒரு மனிதராக பிரபாகரன் விளங்குவதாக அகாசி தெரிவித்துள்ளார். அண்மையில் வன்னி சென்று எடுக்கவிருக்கும் முக்கிய தீர்மானங்கள் குறித்து பிரபாகரனுடன் எடுத்துரைக்க உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கனவே சில அரசாங்கள் எடுத்து முடிவு போன்று தமிழிழ விடுதலைப…

    • 2 replies
    • 1.5k views
  5. கடல்கோளின் பின்னரான மூன்று வருடங்களில்....? [23 - December - 2007] [Font Size - A - A - A] இலங்கை உட்பட இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பல நாடுகளை உலுக்கிய கடல்கோள் அனர்த்தத்திற்குப் பிறகு மூன்று வருடங்கள் பூர்த்தியாவதற்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கின்றன. அனர்த்தத்தில் பலியான 2 இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை உலகம் சோகத்துடன் நினைவு கூர விருக்கிறது. நினைவுக்கெட்டிய சரித்திரத்தில் உலகம் முன்னென்றுமே எதிர்நோக்கியிராத பாரதூரமான மனிதாபிமான நெருக்கடியைத் தோற்றுவித்த கடல் கோளினால் அவலத்துக்குள்ளான ஒவ்வொரு தேசத்தினதும் ஒவ்வொரு கரையோரக் கிராமத்தினதும் புனர்வாழ்வும் புனர்நிர்மாணமும் இந்த மூன்று வருடகாலத்தில் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பதை…

    • 4 replies
    • 1.5k views
  6. காலி கோட்டையின் கண்காணிப்பு நிலைகளில் பொருத்தப்பட்டிருந்த 100 பீரங்கிகள் காணாமற் போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒல்லாந்தரின் ஆட்சியில் சிறிலங்கா இருந்த போது, பயன்படுத்தப்பட்ட பீரங்களே காணாமற் போயுள்ளதாக காலி மரபுரிமைகள் நிறுவகம் தெரிவித்துள்ளது. காலி கோட்டையில் இந்த பீரங்கிகளை கண்காணிப்பு நிலைகளில் பொருத்தி வைத்து ஒல்லாந்தர் பயன்படுத்தி வந்ததாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளப்படவுள்ளதாக சிறிலங்காவின் தேசிய மரபுரிமைகள் அமைச்சர் ஜெகத் பாலசூரிய தெரிவித்துள்ளார். இந்தப் பீரங்கிகளை உலோகத்துக்காக களவாடிச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். htt…

    • 8 replies
    • 1.5k views
  7. தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக காங்கிரசார் அவ்வப்போது புகார் கூறிவரும் நிலையில், முதல்வர் கருணாநிதி, அவையெல்லாம் வீண்பழியென்றும், இப்படியெல்லாம் ஒரு பிரச்சாரத்தை அவிழ்த்துவிட்டு தனது கட்சியினை ஆட்சியிலிருந்து அகற்ற முயன்றால் அதனைச் சந்திக்கத் தயார் என்று இப்போது கூறியிருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் தமிழ்நாடு விடுதலைப்புலிகளின் வேட்டைக்காடாகிவிட்டது என்ற ரீதியில் பேசியிருக்கிறார்கள் என்று சட்டப்பேரவையில் இப்பிரச்சினை குறித்து அரசு மீது அபாண்டமாக குற்றச்சாட்டுககள் வீசப்பட்டபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள் மௌனமாக இருந்திருககிறார்கள், இதெல்லா…

    • 0 replies
    • 1.5k views
  8. ஜெனிவா தீர்மானத்தில் இருந்து இந்தியா ஒதுங்கியது ஏன்? [Friday, 2014-03-28 08:04:19] இலங்கைக்கு எதிராக ஜஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்குபற்றாமல் தவிர்த்தது ஏன் என்று, இந்தியப் பிரதிநிதி திலிப் சின்ஹா தனது உரையில் விபரித்துக் கூறியிருந்தார். அதன் முழு விபரம் வருமாறு “இலங்கையின் மூன்று தசாப்த கால பிணக்கு 2009 இல் முடிவுற்ற பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு மூன்று தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கின்றது. பிணக்கின் முடிவு, தமிழர்கள் உட்பட அனைத்து சமூகத்தினருக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்க நிலையான அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கான தனித்துவமான வாய்ப்பை இலங்கைக்கு வழங்கியுள்ளது என்பதே எப்போதும் இந்தியாவின் கருத்தாக இரு…

  9. தமிழினியும் வாழ்வும் சாவும் ஒரு பெருந்துயரின் முடிவா? இல்லை தொடரா? "இறந்த போது ஓடி வந்தவர்கள் இருக்கின்ற போது திரும்பியும் பார்க்கவில்லை" - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக மு.தமிழ்ச்செல்வன்:- இது கிளிநொச்சியில் எங்கோ ஒரு குக்கிராமத்தில் உள்ள ஏழையின் வீடு அல்ல. கிளிநொச்சி பரந்தன் நகரத்தில் இருந்து சில கிலோ மீற்றர்கள் தொலைவில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் சிவபுரம் கிராமத்தில் உள்ள சிவகாமியின் வீடு. சிவசுப்பிரமணியம் சிவகாமி இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளீர் அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழினி ஆவார். மீள்குடியேற்றத்தின் போது அரசசார்பற்ற நிறுவனங்களால் ஒரு வருட காலத்திற்கு என அமைத்துக்கொடுக்கப்பட்ட தற்காலிக கொட்டில்கள் இவை.2013 ஆம் ஆண்டு யூன் 26 ஆம் திகதி ப…

    • 11 replies
    • 1.5k views
  10. பதிந்தவர்: ஈழப்பிரியா வியாழன், 9 ஜூன், 2011 தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து ராமநாதபுரம் நாம் தமிழர்கள் வைத்துள்ள பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள். மிகப்பெரிய மனித உரிமை மீறல் செய்த இலங்கை அரசின் மீது பொருளாதார தடை விதிக்கவும், கொலைகாரன் ராஜபக்சேவை போர் குற்றவாளி என்று அறிவிக்கவும் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து ராமநாதபுரம் நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள். source:vannionline.

  11. யாழில் குண்டு வெடித்ததில் இரு இளைஞர்கள் பலி : இரு இராணுவத்தினர் காயம் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் நாவாந்துறைப்பகுதியில் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது இரு இளைஞர்கள் குண்டினை வெடிக்க வைத்ததாகவும் இதில் இவர்கள் இருவரும் கொல்லப்பட்டு இரு சிறீலங்கா படையினரும் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. கண்ணால் கண்ட சாட்சிகள் கூறிய தகவலின்படி இரு இளைஞர்கள் கடற்கரைநோக்கி சென்று கொண்டிருந்தபோது குண்டு வெடித்ததாகவும் அறியமுடிகிறது. இக்குண்டு வெடிப்பானது யாழ்பாண நகரில் இருந்து 300 மிற்றர் தொலைவில் பழைய லேடன் ஆடைத்தொழிற்சாலை நவாந்துறைப் பகுதியில் உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இக்குண்டு வெடிப்பில் கொ…

  12. போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைவர் கிளிநொச்சி விஜயம் வீரகேசரி இணையத்தளப்பிரிவு போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைவர் லார்ஸ் ஜொகான் , சோல் பேர்க் இன்று காலை கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார் இன்று காலை உலங்கு வானூர்தி மூலம் வவுனியா சென்ற போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைவர் அங்கிருந்த எ9 நெடுஞ்சாலை மூலம் கிளிநொச்சி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி விஜயம் செய்யும் போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைவர் விடுதலை புலிகளின் சமாதான செயலக பணிப்பாளார் புலித்தேவனை சந்தித்து பேசவுள்ளார். எனினும் இச் சந்திப்பு வழமையான தொன்றென தெரிவிக்கப்படுகிறது

  13. கிழக்கு மாகாணத்தில் தொப்பிகல வரையிலான பகுதிகளைக் கைப்பற்றும் வரை இராணுவ நடவடிக்கை தொடரும் என்று கிழக்கு மாகாண இராணுவ கட்ட ளைத் தளபதி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் இதுவரை கைப்பற்றப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புலிகளால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளில் 20 சதவீதமானவற்றைப் படை யினர் மீட்டுள்ளனர். மட்டக்களப்பு திருகோணமலை நெடுஞ்சாலை மீளத்திறக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்காளர் பதிவேடுகளின் அடிப்படை யிலேயே மக்கள் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர். வாகரைப் பகுதியில் புலிகளால் கைவிடப்பட்ட முகாம் ஒன்றில…

  14. வன்னி முல்லைத்தீவு மக்களின் அவலங்கள் நீங்குவதற்கான எந்த நல்ல அறிகுறியும் தெரியவில்லை. போர்ப் பிரதேசங்களில் உணவு மற்றும் அத்தி யாவசியப் பொருள்கள் கிடைப்பதில்லை. தேவையை விட கால்வாசி, அரைக்கால்வாசியைப் பெற முடிந்தாலும் யானை விலை, குதிரை விலை கொடுக்க வக்கற்றவர்கள், அதற்கான பணப்புழக்கம் இல்லாதவர்கள், முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட நிலையில் பொழுதைக் கழித்து உடல் வற்றிச் சாகும் நிலைதான். முல்லைத்தீவுப் பகுதியில் அரிசி, கோதுமைமா மற்றும் உப உணவுப் பொருள்கள் போதியளவு இல்லை என்பது வெளிச்சம். பணப்புழக்கம் இல்லாத பகுதியில் அவற்றின் விலைகள் அவர்களுக்கு எட்டாத தொலைவில் உயரப் பறப்பது இயல்பே. தொழில் இன்றி, வருமானம் இன்றி, நிரந்தர அகதிகளாகி விட்ட லட்சக்கணக்கான மக்கள் தங்கியு…

    • 0 replies
    • 1.5k views
  15. புதன் 13-06-2007 17:05 மணி தமிழீழம் [சிறீதரன்] இந்து குருமார் பற்றி இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரனை யாழ் குடாநாட்டில் இந்து குருமார்கள் பற்றி பாரிய புலனாய்வு விசாரனையை இராணுவப் புலனாய் வாளர்களும் மற்றும் அவர்களுடன் இனைந்து இயங்கும் ஒட்டுக் குழுவான ஈ.பி.டி.பியும் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். முதற் கட்டமாக இராணுவ முகாம்களுக்கு அழைக்கப்பட்ட கிராம அலுவலர்களிடம் அவர்கள் பகுதியில் வசிக்கும் இந்து குருமார்கள் பற்றிய விபரங்கள் சேரிக்கப்பட்டள்ளன. கடந்த சில மாதங்களுக்கு மன்னர் இந்து குருமார்கள் ஒன்றியம் தமக்கு விசேட அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை ஒன்றை யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஐர் ஜெனரல் சந்திரசிறி மற்றும் ஈ.பி.டி.பி ஆகியவ…

  16. சிறிலங்க அணியை பிணையமாக பிடிக்க திட்டமிட்டோம்: லஸ்கர் இ ஜாங்வி வெள்ளி, 21 ஜனவரி 2011( 14:17 IST ) பாகிஸ்தானில் பயணம் செய்த சிறிலங்க அணியினரை பிணையமாக பிடித்து வைத்து, சிறையிலுள்ள தங்களுடைய இயக்கத்தவரை விடுதலை பெற முயற்சித்தோம் என்று லஸ்கர் இ ஜாங்வி இயக்கத்தின் அப்துல் வஹாப் உமர் கூறியுள்ளார். தற்போது பாகிஸ்தான் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு காவலில் உள்ள அப்துல் வஹாப் ஜாங்வி, பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார் என்று பிடிஐ செய்தி தெரிவிக்கிறது. “சிறிலங்க கிரிக்கெட் அணியினரை பிணையமாக பிடிப்பது என்று வஜிரிஸ்தானில் திட்டமிடப்பட்டது. அதனை நிறைவேற்ற 12 பேர் ஈடுபட்டோம். நான் லஸ்கர் இ ஜாங்வியின் அம்ஜத் ஃபரூக்கியின் …

    • 0 replies
    • 1.5k views
  17. இறுதி யுத்த வீடியோ காட்சிகளை விஜய் நம்பியார் பார்வையிட்டார் - ஐ.நா.சபையில் தகவல் தெரிவிப்பு ஐ.நா.செயலரின் தலைமை அதிகாரி விஜய் நம்பியார் இலங்கை அரசாங்கத்தின் வீடியோ காட்சிகளை பார்வையிட்டதாக செய்தி கள் வெளியாகியுள்ளன.ஐக்கிய நாடுகள் செயலாளரின் தலைமை அதிகாரி விஜய் நம்பியார் தொடர்பில் நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் சபையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன. வன்னி இறுதி யுத்தத்தின் போது ஆளில்லாத வானூர்தி மூலம் பெறப்பட்ட நேரடி வீடியோ தொடர்பான தகவல்களை விக்கிலீக்ஸ் வெளி யிட்டிருந்தது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் மார்டின் நெசர்கியிடம் நேற்று முன்தினம் கேள்வி யயழுப்பப்பட்டது.ஆளில்லா…

    • 0 replies
    • 1.5k views
  18. யாழ்ப்பாணத்தில் மிளகாய் ரூ.1,000, கீரை ரூ.60 - குணசேகரன் சுரேன் யாழ்ப்பாணத்துக்கு சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் என்றுமில்லாதவாறு அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன. 1 கிலோகிராம் பச்சை மிளகாய் 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. மரக்கறிகளில் கறிமிளகாய் 1 கிலோகிராம் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதுடன், 1 பிடி கீரை 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் போதும், கீரையை சந்தைகளில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. கத்தரிக்காய் 1 கிலோகிராம் 160 ரூபாய்க்கும், பயிற்றங்காய் 1 கிலோகிராம் 240 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோகிராம் 160 ரூபாய்க்கும், வெண்டி 1 கிலோகிராம் 160 ரூபாய்க்கும், கரட் 1 கிலோகிராம் 350 ரூபாய்க்கு…

  19. மட்டக்களப்பில் கொரோனாவை ஒழிப்பேன் : பிள்ளையான் November 10, 2020 (கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் கொரோனாவை ஒழிப்போம் என முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று செவ்வாய்க்கிழமை (10) தெரிவித்தார். அதேவேளை காத்திகை 27ஆம் திகதி மாவீரர் தினத்தையும் அவர் நினைவுபடுத்தினார். மட்டக்களப்பு மேல் நீதிமன்ற வழக்கிற்கு வருகைதந்த பிள்ளையானை வழக்கு முடிவடைந்த பின்னர் சிறைச்சாலை பஸ் வண்டியில் ஏற்றிச் செல்லும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வி…

  20. Posted on : 2008-01-28 காலம் கடந்த ஞானம் தமிழர்களின் இனப்பிரச்சினையை மையமாக வைத்துக் காலங்காலமாகத் தமது அரசியல் அதிகாரப் போர்களை நடத்தி வரும் தென்னிலங்கைப் பேரினவாதச் சிங்களத் தலைமைகள், குரூர வடிவிலான அரச அடக்குமுறையை சிறுபான்மைத் தமிழர்கள் மீது ஏவிவிடுவதை ஒரு பழக்கமாகவும், அந்தப் பழக்கத்தின் மூலம் தென்னிலங்கையில் தமது வாக்கு வங்கியை ஸ்திரப்படுத்திக் கொள்வதை ஒரு வழமையாகவும் கைக்கொண்டு வருகின்றன. அந்தத் துன்பியல் போக்கின் மிக மோசமான விளைவுகளையே இலங்கைத் தீவு எதிர்கொண்டு அந்தரித்து நிற்கின்றது. அரை நூற்றாண்டு காலத்துக்கு மேற்பட்ட நீண்ட வரலாற்றைக் கொண்ட இந்த பௌத்த சிங்களப் பேரினவாதச் சிந்தனைப் போக்கில். "காலம் கடந்த அரசியல் ஞானம்' தென்னிலங்கைக்குப் பிறப்பதும் ஓர…

    • 2 replies
    • 1.5k views
  21. இலங்கையின் வடமேற்கே தலைமன்னார் கடற்பரப்பில் இன்று அதிகாலை கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் கடற்புலிகளின் 3 படகுகளை மூழ்கடித்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் விடத்தல்தீவை அண்டிய கடற்பகுதியில் கடற்புலிகளின் படகுகளைக் கண்டு அவற்றின் மீது தர்க்குதல் நடத்தியதாகவும் இதில் குறைந்தது 25 கடற்புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடத்தல் தீவு கடற்பரப்பில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளுக்குப் பாதுகாப்பு வழங்கிய தமது படகுகள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் அதனைத எதிர்த்து நடத்தப்பட்ட தாக்குதலில் கடற்படையின் 2 படகுகள் மூழ்கடிக்கப்பட்டதா…

    • 0 replies
    • 1.5k views
  22. சிங்களப்பகுதியில் கனிமொழிவாங்கிய தேயிலை தோட்டத்தை பார்க்க சென்றீர்களா திருமாவளவரே ?: தமிழ்நாட்டிலிருந்து கு.கண்ணன் தந்தைப்பெரியாரை தலைவராக ஏற்று நடப்பவர்கள் நாங்கள், ஆனால் பெரியார் ஒருபோதும் தன்னை தலைவன் என கூறிக்கொண்டதில்லை. எப்பொழுதும் தன்னை தோழர் என்றே அறிவித்துக்கொண்டிருந்தார் என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆகையால்தான் அவர் ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் தலைவனாக உள்ளார் என்பது வரலாற்றுண்மை. அப்படிபட்ட தலைவன் வழியிலேதான் நாங்கள் நேர்மையுடன் வீறு நடை போட்டுக்கொண்டிருக்கின்றோம். தந்தைப்பெரியாரை தலைவராக ஏற்றுக்கொண்ட எங்களால் வேறு எவரையும் ஏற்றுக்கொள்ள எங்கள் மனதில் இடமில்லை, ஆனாலும் தந்தைப்பெரியாருக்கு அடுத்த இடத்தில் “மாவீரன்” பிரபாகரனுக்கு நிறந்தர இடம் கொடுத்துள்ளோ…

  23. சிறீலங்கா சுதந்திர தினம் – தமிழர் தேசத்தின் கரிநாள் . தமிழீழ விடுதலைப் புலிகள் February 2, 2022 மதிப்புக்குரிய தமிழீழ மக்களே ! மாசி 4ம் திகதி, ஈழத் தமிழர்களாகிய நாம் காலனித்துவவாதிகளின் கைகளிலிருந்து விடுபட்டு சிங்கள இனவாதிகளின் கோரப் பிடிக்குள் சிக்கிக் கொண்ட அவலத்தின் ஆரம்ப நாளாகும். இதனால் சிறீலங்கா சுதந்திரம் அடைந்த நாளை தமிழீழத்திலும், புலத்திலும் தமிழ் மக்கள் கரிநாளாக தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றார்கள். பிரித்தானியார்களிடம் இருந்து இலங்கைக்கு 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசு இயங்கிய காலத்தைத் தவிர, இன்றைய நாள் வரை விடுதலைக் காற்றைத் தமிழ் மக்கள் சுவாசித்ததே கிடையாது. ஏறத்தாழ 442 ஆண்டுகள் காலனித்து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.