ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
-
இலங்கைக்கு உதவி தொடர்பில் சீனாவுக்கும் இந்தியாவிற்கும் இடையில் முறுகல் [ ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2009, 01:49.00 AM GMT +05:30 ] இலங்கைக்கு உதவி புரிவது தொடர்பில் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தை திருப்திப்படுத்தி, நன்மதிப்பை பெறும் நோக்கிலேயே சீனா, இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருவதாக சீன அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை இந்து சமுத்திரத்தின் வர்த்தக கேந்திர நிலையமாக காணப்படுவதால், சீனாவின் வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்தும் நோக்கில் இலங்கையை இதன் மூலம் பயன்படுத்திக் கொள்ள சீனா முயல்வதாக இந்தியா கருதுகிறது. எறிகணைகள் உள்ளிட்ட பாரிய அளவிலான ஆயுதங்களை, சீன அரசாங்…
-
- 9 replies
- 1.4k views
-
-
கல்லாறு, கரடிக்குளம், மாங்கேணி முகாம்களில் இருந்து ஒரேதடவையில் வாகரைக்கிராமங்களை நோக்கி சிறீலங்கா படையினர் பாரிய ஆட்டிலறி தாக்குதலை 8 மணிநேரத்திற்கு மேலாக மேற்கொண்டுள்ளனர். வாகரை வைத்தியசாலைக்கு மிக அண்மையாகவும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. வாகரையை சிறீலங்கா படையினர் கிறீஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக இருநாட்களுக்குள் கைப்பற்றிவிடுவோம் என்று ஊடகத்தினர் மத்தியில் சிறீலங்கா இராணுவத்தளபதி லெப்.nஐனரல் சரத்பொன்சேகா சூளுரைத்திருந்தமை தெரிந்ததே.
-
- 2 replies
- 1.4k views
-
-
இந்தியாவின் கடல் கண்காணிப்பு நடவடிக்கை இலங்கைக்கு பாரிய அளவில் உதவுவதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம நேற்று தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்குவதையும் ஏனைய ஆதரவுகளையும் தடுத்து நிறுத்துமாறு சர்வதேச சமூகத்திற்கு கொழும்பு தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் ஆதரவாரளர்கள் நிதி சேகரிப்பதற்கு எதிரான நடவடிக்கைகளை அவுஸ்திரேலியா மேற்கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். 'இந்து' பத்திரிகைக்கு இது தொடர்பாக ரோகித்த மேலும் தெரிவித்ததாவது : விடுதலப் புலிகளின் மையக் கட்டமைப்பு தற்போதும் சிதைவுறாமால் இருக்கின்றதா? என்று அவரிடம் 'இந்து' கேள்வி எழுப்பியது. வெளிமட்ட உதவி தடுக்கப்பட வேணடிய தேவை உள்ளதாகவும் அதுவே …
-
- 7 replies
- 1.4k views
-
-
பரந்தனில் இருந்து முல்லைத்தீவு வரையிலான ஏ-35 வீதியை மையமாவைத்து வன்னியின் 95 வீதமான மக்கள் இப்போது வாழ்கின்றார்கள். பொதுவாக வன்னியிலுள்ள பகுதிகளில் இந்த வீதியை மையமாக வைத்த பிரதேசம் தாழ்வுநிலப்பகுதியையுடையது. புவியியல் அமைவின்படி மக்களின் குடியிருப்புக்கு இந்தப் பகுதி உகந்ததல்ல, அதிலும் போர்க்காலக் குடியிருப்புக்கு ஏற்றதேயல்ல. காரணம், எறிகணை வீச்சிலிருந்தோ விமானக்குண்டு வீச்சிலிருந்தோ பாதுகாப்பாக இருப்பதற்கான பதுங்குகுழிகளை இந்தப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் அமைக்கமுடியாது. காரணம் மாரியில் மழைநீர் - மழைவெள்ளம் பெருகியிருக்கும். கோடையில் குடிநீருக்கே பெரும் தட்டுப்பாடு நிலவும். இத்தகைய பெரும் பாதகமான சூழலில்தான் இன்று வன்னிமக்கள் வாழந்துகொண்டிருக்கிறார்கள். இதை இன…
-
- 0 replies
- 1.4k views
-
-
"எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிடும்'' என்று கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- "எவரிடமும் பேசுவதற்கு நாம் தயாரில்லை. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தனித்தே போட்டியிடுவோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை ஒரு நாளும் வெற்றியளிகாது. அதிகாரங்கள் பங்கிடப்பட்டாலும் அதை மீண்டும் இலங்கை அரசு கைப்பற்றக்கூடும். எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளை வைத்து தமிழர்களின் இனப்பிரச்சினையைத் தீர்த்துவிட முடியாது. இலங்கையில் தமிழர், சிங்களவர்களுக்கென இரண்டு தேசங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். இலங்கையில் தமிழருக்கென்று தனியான தேசம் அமை…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடிக்கடி உயர்பீடத்தை கூட்டி வெங்காயத்தையே உரிக்கிறது என மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நையாண்டி செய்துள்ளார். எதிரணிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்து ஏறாவூரில் இடம்பெற்ற தேர்தல் பிச்சார கூட்டத்தின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதிகமான கிழக்கு மாகாண மக்கள் தமக்கு விடிவு கிடைக்க வேண்டும் என தேர்தலிகளில் முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களிக்கின்றனர். ஆனால் அவர்கள் இன்றுவரை மக்களை ஏமாற்றியே வருகின்றனர். இன்று முஸ்லிம் மக்கள் மஹிந்தவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றனர். ஆனால் மு.கா. மக்களின் உணர்வகளை புரிந்துகொள்ளாது, தமது சொகுசு வாழ்க்கையையும் பதவிகளையும் மட்டும் எதிர்ப்பார்த…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு யுனிசெஃப் அமைப்பானது நிதியுதவி வழங்கி வருவதாக ஜே.வி.பியின் நாடளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.4k views
-
-
முன்னாள் அதிபர் சந்திரிக்காவிற்கு பாதுகாப்பு - 69 ஊழியர்கள் மீண்டும் நியமனம். சிறீலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்கவின் பாதுகாப்பிற்காக அதிகாரி ஒருவர் உட்பட, 69 காவல்துறையினர் அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிபர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக் கூட்டத்தில், முன்னாள் அதிபரின் அலுவலக அதிகாரிகள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டது. சந்திரிக்கா குமாரதுங்க அடுத்த மாதம் சிறீலங்காவிற்கு செல்ல இருப்பதால், அவருக்கான பாதுகாப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அரசு அவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது. சிறீலங்காவின் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவின் உத்தரவுக்கு அமைவாக கடந்த சல வாரங்களுக்கு முன்னர் …
-
- 6 replies
- 1.4k views
-
-
இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கட்சி வேறுபாடின்றி எழுப்பிய குரலுக்கு இந்திய அரசு செவி சாய்க்கவில்லை. இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென்றும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுத உதவி வழங்கக் கூடாது என்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் இணைந்து விடுத்த வேண்டுகோளையும் இந்திய அரசு பொருட்படுத்தவில்லை. இந்த நிலைமையில் ஜனவரி 7-ஆம் தேதி சென்னைக்கு வர இருக்கும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு தமிழர்களின் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதென தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது. தமிழர்களின் தன்மானம் காக்கும் …
-
- 0 replies
- 1.4k views
-
-
பிரதமர் பதவிக் காலம் பற்றி சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் அரசியல் சாசனத்தினது 46வது சரத்தின் 2வது பிரிவு சொல்வது ..... 46. (1) The total number of– (a) Ministers of the Cabinet of Ministers shall not exceed thirty; and (b) Ministers who are not members of the Cabinet of Ministers and Deputy Ministers shall not, in the aggregate, exceed forty. (2) The Prime Minister shall continue to hold office throughout the period during which the Cabinet of Ministers continues to function under the provisions of the Constitution unless he - (a) resigns his office by a writing under his hand addressed to the P…
-
- 10 replies
- 1.4k views
-
-
ஈழத் தமிழர் மூன்று தசாப்தங்களாக அறவழிப்போராட்டத்தின் மூலமாக வெல்லமுடியாத அரசியல் அபிலாசைகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவரத் தேவைப்பட்ட ஒரே ஆயுதம் பல ஈழத் தமிழ் போராளிகளை வளர்த்து தமக்குள்ளே அடிபட்டு தமிழீழத் தாயகக் கோட்பாட்டை மழுங்கடிக்க அயராது உழைத்த நாடு தான் இந்தியா. விடுதலைப் புலிகளினால் பிற தமிழ் ஆயுதக் குழுக்கள் தோற்கடிக்கப்பட்டு பின்னர் புலிகளே ஈழத் தமிழரின் தேசியத் தலைமை என்கின்ற அளவு அபார வளர்ச்சி பெற்று நின்ற வேளை இந்தியாவினால் அதனை சகித்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது. புலிகளை பலம் இழக்கச் செய்து அவர்களின் ஆயுதப் போராட்டத்தை மழுங்கடிக்க ஒரே வழி அந்த அமைப்பைத் தடை செய்வது ஒன்றுதான் வழி என்று எண்ணிய இந்தியா குறிப்பாக 80 மற்றும் 90-ஆம் ஆண்டுகளில் தமிழ் நாட்டு மக்…
-
- 6 replies
- 1.4k views
-
-
யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்! 16 Jan, 2025 | 04:02 PM யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கிய மிதவையில் காணப்பட்ட 18 புத்தர் சிலைகளையும் மருதங்கேணி பொலிஸார் மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசென்றுள்ளனர். வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்கரையில் நேற்றைய தினம் புதன்கிழமை (15) அதிகாலை மிதவை ஒன்று கரை ஒதுங்கியிருந்தது. இந்த மிதவையில் புத்தர் சிலைகள், தேங்காய்கள் முதலான பொருட்கள் காணப்பட்டன. பர்மாவில் இறந்த பிக்குகளை (தேரர்களை) நினைவுகூரும் முகமாக ஆரம்பகாலம் முதல் சடங்கு முறையொன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மிதக்கும் வீடுகளை தயார் செய்து அதற்குள் நினைவ…
-
-
- 25 replies
- 1.4k views
-
-
கடந்த சில மாதங்களில் வவுனியா தடுப்பு முகாம்களில் பணியாற்றுகின்ற இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினர் பல பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். குறைந்தது 14, 15, 16 வயதான மூன்று தமிழ்ச் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாக வவுனியா நீதிபதி முன்னால் ஒக்டோபரில் கூறியுள்ளனர். பல பாலியல் வல்லுறவுகள் தடுப்பு முகாம்களின் வலயம் 2 மற்றும் வலயம் 3 ஆகியவற்றில் நடந்தாலும் வவுனியா மருத்துவமனையில் வைத்து 14 வயதான மனநிலை குன்றிய சிறுமி ஒருவரையும் ராணுவம் கற்பழித்துள்ள விடயம் தெரிய வந்துள்ளதாக தமிழ்நெட் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. புலிகள் இயக்கத்தில் இருந்ததாக கூறப்பட்ட 17 வயதான சிறுமி ஒருவரை புலனாய்வு பிரிவினர் கற்பழித்துள்ளதோடு, அச்சிறுமியை புலிகளை அடைத்து…
-
- 11 replies
- 1.4k views
-
-
சாட்சியில்லா யுத்தத்தில் கொல்லப்பட்ட பல ஆயிரக்கண மக்களின் உடல்களை தடையமின்றி அழிக்கும் முயற்சிகள் ஆரம்பம்? உடன் விரைந்து செயற்பட வேண்டுகோள்: வன்னியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்த யுத்தத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் காயம் அடைந்தும் உள்ளனர். குறிப்பாக கடந்த இறுதுக் கட்ட நாட்களில் தொடர்ந்த மோதலின் இடையே சிக்கியிருந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் குறித்து தெளிவான தகவல்கள் எவையும் இல்லை. இறுதியாக முள்ளிவாய்க்கால் பகுதி கைப்பற்றப்பட்ட போது குறைந்தது 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள் என அங்கிருந்து எஞ்சியிருப்பவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அங்கு இருந்த மக்கள் பற்றியோ அல்லது கொல்லப்பட்ட காணாமல் போன காயம் அடைந்த படையினரால் தடுத்…
-
- 1 reply
- 1.4k views
-
-
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட சிறிலங்கா படைத்தரப்பின் முக்கிய அதிகாரிகள் சிலர், வீரச் சாவடைந்த விடுதலைப் புலிகளின் இயக்கப் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இது தற்செயலாக நடந்த நிகழ்வுதான் ஆனால் செய்வதறியாது படை அதிகாரிகள் நின்றனர். வவுனியா செந்தில்நாதன் நற்பணி மன்ற மாணவர்களின் இசை நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்த போதே அவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். குறிப்பிட்ட இசை நிகழச்சி ஆரம்பமாவதற்கு முன்னராக இடம்பெற்ற, தாயக மீட்புப் போரில் வீரமரணமடைந்த போராளிகளுக்கும் மற்றும் கொலையுண்ட பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழ் மக்களுக்கும் அஞ்சலி செலுத்துவோம் என விழா ஆரம்பிப்பாளரால் தைரியமாக சொல்லப்பட்டது. உடனடியாக அனைவரும் எழுந்து நின்று அகவணக்…
-
- 6 replies
- 1.4k views
-
-
நாங்கள் அமைதியைக் கடைப்பிடித்தால் மாதாந்தம் சிறிலங்காப் படையினர் பலர் கொல்லப்படுவது எப்படி?: இளந்திரையன் போர்க்களத்தில் அமைதியைக் கடைப்பிடித்தால் மாதாந்தம் அரச படையினர் பலர் கொல்லப்படுவது எப்படி? என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கேள்வி எழுப்பியுள்ளார். சுவிசிலிருந்து வாரமிருமுறை வெளிவரும் "நிலவரம்" (07.09.07) ஏட்டின் 17 ஆவது இதழுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் அளித்துள்ள நேர்காணல்: http://www.eelampage.com/?cn=33340
-
- 2 replies
- 1.4k views
-
-
ஆளும் ஐ.ம.சு.முன்னணிக்கு மீண்டும் ஆதரவு மட்டு. முதல்வர் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவாக செயற்படத் தீர்மானித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து வீரகேசரி இணையத்தளத்துக்குக் கருத்து தெரிவித்த அவர், “ஜனாதிபதித் தேர்தலின்போது ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்தேன். எனினும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணையவில்லை. இன்னும் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவே இருந்து வருகிறேன். அந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதே பொருத்தமானது என நினைக்கிறேன். எனினும் எனது நிலைப்பாடு தொடர்…
-
- 20 replies
- 1.4k views
-
-
லண்டனில் ஈழத்தமிழ் இளைஞர் கொலை லண்டனில் ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 34வயதுடைய யுவராஜன் சுவாமிநாதன் என்ற ஈழத்தமிழன் கடந்த புதன் கிழமை லண்டன் வைத்தியசாலையில் உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பில் ஐஸ்ரின் சந்திரகாந்தன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட மற்றுமொரு நபர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் காவற்துறையில் வாராந்தம் சமூகமளிக்குமாறும் அறுவுறுத்தப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தங்கியிருந்தபோதே தாக்குதல்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்தார். http://meenakam.com/?p=3430
-
- 2 replies
- 1.4k views
-
-
மகிந்தவிடம் ‘றோ‘ பணிப்பாளர் அலோக் ஜோசி பரிமாறிய இந்திய அரசின் ‘முக்கியசெய்தி‘ [ ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2013, 11:17 GMT ] [ கார்வண்ணன் ] திருப்பதி சென்றிருந்த போது, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம், இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான றோவின் பணிப்பாளர் அலோக் ஜோசி இந்திய அரசாங்கத்தின் ‘முக்கியமான செய்தி‘ ஒன்றைப் பரிமாறியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. “சிறிலங்கா அதிபரின் பயணத்துக்கு முன்னதாக இடம்பெற்ற சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசின் புதுடெல்லிப் பயணத்தின் நோக்கம் குறித்து, அண்மையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தியா சென்றிருந்த போது, இந்தியாவின் தேசிய நாளேடு செய்தி ஒ…
-
- 12 replies
- 1.4k views
-
-
பல அமைச்சர்களை படுகொலை செய்யத் திட்டம் Sunday, 20 April 2008 அமைச்சர்கள், பிரதியமைச்சர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளை படுகொலை செய்ய தமிழீழ விடுதலைப் புலிகள் தீட்டிய திட்டம் அம்பலமாகியுள்ளது. டி.எம்.ஜயரத்ன, மஹிந்தானந்த அலுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல்ல, நவீன் திஸாநாயக்க ஆகிய அமைச்சர்கள், முன்னாள் பாதுகாப்புப் பிரதியமைச்சர் அனுரத்த ரத்வத்தே மற்றும் நுவரெலிய குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரிகளாக கடமையாற்றிய போவெல, பொன்சேகா ஆகியோரை படுகொலைச் செய்ய தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருந்ததாகத் தெரியவருகிறது. ஜனாதிபதி உள்ளிட்ட பிரபுக்கள் நுவரெலியாவிற்கு வருகை தரும் போது ஹெலிகொப்டர் எங்கு தரையிறக்கப்படுகிறது என்பது குறித்த வீடியோ காட்சிகள் வன்னிக்கு அனுப்பி வைக்…
-
- 4 replies
- 1.4k views
-
-
ஞாயிற்றுகிழமை, செப்டம்பர் 12, 2010 கிழக்கு மாகாணம் பனிக்கங்குளத்தில் விடுதலைப்புலிகளின் மருத்துவ அணியினரின் ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்களும் மருந்துகளும் மீட்கப்பட்டுளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. உயிர்க்காப்பு மருந்துகள், மயக்க மருந்துகள், நோயெதிர்ப்பு மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சைக்குரிய மருந்துகளே மீட்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அண்மையில் பிடிக்கப்பட்ட படகோட்டிகளின் தகவலிற்கு அமையவே இந்த பொருட்கள் கடற்படையினரால் கண்டெடுக்கபப்ட்டதாக கூறப்படுகின்றது. My link
-
- 1 reply
- 1.4k views
-
-
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பான ஆவணங்களில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்றிரவு கையெழுதிட்டுள்ளதாக ‘சிலோன் ருடே‘ ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. நேற்றிரவு கட்டாருக்குப் புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர் சிறிலங்கா அதிபர் இந்த ஆவணங்களில் கையெழுத்திட்டதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் நாளை நீதி அமைச்சுக்கு அனுப்பப்படும் என்றும் அதன்பின்னர் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. முந்திய செய்தி சரத் பொன்சேகா விடுதலை தாமதமாவது என்? – மகிந்த கட்டார் சென்று விட்டதால் புதிய இழுபறி சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்…
-
- 9 replies
- 1.4k views
-
-
இலங்கை அதிபர் ராஜபட்சவும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முன்னின்று நடத்திய சரத் பொன்சேகாவும் முட்டிக் கொள்வதால், தமிழ்ச் சமூகத்துக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பிருப்பது போன்ற நம்பிக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த மோதலால் தமிழர்களுக்கு முழு உரிமைகள் கிடைக்காவிட்டாலும், குறைந்தபட்சம் போர் உச்சத்தில் இருந்தபோது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பான உண்மைகளாவது வெளிவரக்கூடும். அந்த வகையில் ராஜபட்ச - பொன்சேகா மோதல் மீது வைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கை நியாயமானதுதான். ஆனால், இதே நம்பிக்கையை பொன்சேகா மீது வைப்பது ஈழத் தமிழர்களுக்கு பெரிய ஆபத்தாக முடியலாம். போருக்குப் பிந்தைய நிவாரணப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு, தமிழர்களின் மனதில் இடம்பிடிக்க ராஜபட்ச அரசு தவறிவிட்டது என …
-
- 9 replies
- 1.4k views
-
-
கொரோனா வைரஸ் உள்ளாகி நோயாளி ஒருவர் மருத்துவமனையில் மரணத்தை தழுவினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய தர செயற்பாட்டு நடைமுறைகள் குறித்து சட்டம் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் கோவிட் 19 நோயினால் ஒருவர் மரணம டைந்தால் இந்த தர செயற்பாட்டு நடைமுறைகளின் பிரகாரம் அவர்கள் எந்த சமயத்தை சேர்ந்தவர்களாயின் 24 மணித்தியாலத்துக்குள் தகனம் செய்யப்பட வேண்டும். சட்ட மருத்துவ அதிகாரிகளின் திணைக் களத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஆவணம் ஒன்றை எக்னோமிக் நெக்ஸ்ட் இணையத்தளம் பார்த்திருப்பதாக கூறுகின்றது. அத்துடன் மரணம் தீவிர சிகிச்சைப் பிரி வில் அல்லது இந்த சிகிச்சைக்கான நோக்கத் துக்காக விசேட பிரிவில் சம்பவித்தால் பிரேத பரிசோதனை தேவைப்படாது …
-
- 19 replies
- 1.4k views
-