ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143605 topics in this forum
-
மருத்துவ கல்லூரி மாணவி கொலையில் இந்திய அரசின் கைவரிசை. சீ எம் ஆர் வானொலிக்கு பிரபல குமுதம் ஆய்வாளர் திரு ஏகலைவன் வழங்கிய செவ்வி இன்று அவர் வழங்கிய செவ்வியின் போது ஒருசில முக்கிய விடயங்களை பகிர்ந்திருந்தார்.இந்த இந்திய மருத்துவக்கல்லூரி மாணவியின் கொலையை இந்திய அரசு பூதாகாரமாகவெடுந்து கையாண்ட விடயம் மக்களை வாயில் விரல் வைக்க வைத்திருக்கிறது.மக்களை மட்டுமல்ல உலக நாடுகளைக்கூட;இதற்காக பல உதாரணங்களை அவர் முன் வைத்தார்.இதே டெல்லியில் முன்பும் இதே மாதிரியான சம்பவங்கள் நடை பெற்றுள்ளதாகவும் இன் நிகழ்வு திரைப்படங்களையும் மிஞ்சுவதாகவும் தெரிகிறது.ஆகவே இது ஒரு திட்டமிடப்பட்ட செயல்.ஊழலில் கொடிகட்டி பறக்கும் அரசு பழைய ஊழல்களைத்தான் விசாரிக்கின்றது.தற்போது நடைபெறும் ஊழல்களை தடுக்க ம…
-
- 5 replies
- 1.3k views
-
-
சேர்.பொன்.இராமநாதனை முதலில் விழித்த பிரதமர் ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆவது சம்மேளனத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சேர்.பொன்னம்பலம் இராமநாதனுக்கு முதலில் விழித்ததோடு ஐ.தே.க கடந்த காலத்தில் தவறுகளை இழைத்திருந்தால் அதற்கு மன்னிப்புக் கோருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆவது சம்மேளனம் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற போது அங்கு உரையாற்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 1915ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற கலவரத்தின் போது அரசியல் தலைவர்கள் கொல்ப்பட்டார்கள். ஆனால் அந்த சந்தர்ப்த்தில் சேர்.பொன்னம்பலம் இராமநாதன் துணிந்து செயற்பட்டதால் பல விளைவுகளை தவிர்க்க முடிந்தது. ஒரு தமிழ்த் தலைவர் இவ்வாற…
-
- 5 replies
- 731 views
-
-
சிறிலங்கா இராணுவ இரகசியங்களை இந்தியாவுக்கு வழங்கினாரா சுரேஸ் பிறேமச்சந்திரன்? [ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 02:01 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்காவின் இராணுவ இரகசியங்களை இந்திய நாளிதழுக்கு வெளியிட்டது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனிடம் சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். கொழும்பில் நாலாம் மாடியில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தலைமையகத்துக்கு நேற்றுக்காலை காலை 10 மணிக்கு அழைக்கப்பட்ட சுரேஸ் பிறேமச்சந்திரனிடம் இது தொடர்பாக சுமார் 2 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 'ரைம்ஸ் ஒப் இந்தியா' நாளிதழுக்கு சுரேஸ் பிறேமச்சந்திரன் அளித்த செவ்வி ஒன்றில், சிறிலங்கா இராணுவத்த…
-
- 5 replies
- 1.4k views
-
-
சில விடயங்களில் சிறிலங்கா முன்னேற்றத்தை எட்டியுள்ள போதிலும், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் இன்னும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் ருவிட்டர் செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார். “உட்கட்டமைப்பு, மீள்குடியமர்வு, கண்ணிவெடிகளை அகற்றல் போன்ற விடயங்களில் சிறிலங்கா அடைந்துள்ள முன்னேற்றத்தை அமெரிக்காவும் அனைத்துலக சமூகமும் மதிக்கின்றன. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவது சாதகமானது. ஆனால், தெரிவு செய்யப்பட்ட பரிந்துரைகளை மட்டும் தான் சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. எல்லாத் தரப்பினதும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்…
-
- 5 replies
- 1.2k views
-
-
இலங்கை மாநாட்டில் மன்மோகன் சிங் பங்கேற்பது கேள்விக்குறி! - மூத்த தலைவர்களுடன் ஆலோசனை!! இலங்கையில் இடம்பெறவிருக்கும் பொதுநலவாய அரசியல் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்பது குறித்தான தமது முடிவை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மீள்பரிசீலனை செய்து வருவதாக இந்திய இராஜதந்திர வட்டாரங்களின் ஊடாக அறியமுடிகின்றது. எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெறும் பொதுநலவாய அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டை முக்கிய சில நாடுகள் புறக்கணிப்பது தொடர்பில் ஆலோசித்து வருகின்றன. இந்நிலையில் இந்த மாநாட்டை இந்தியாவும் புறக்கணிக்க வேண்டும் என தமிழகத்தின் அரசியல்வாதிகள் இந்திய மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றமை தொடர்பில் காங்கிரஸ்…
-
- 5 replies
- 906 views
-
-
இலங்கையை பௌத்த குடியரசாக பிரகடனம் செய்வதற்கு பிரயத்தனம் : இந்திய உயர்ஸ்தானிகரிடம் சம்பந்தன் சுட்டிக்காட்டு ஆர்.ராம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசை ‘இலங்கை பௌத்த குடியரசாக’ பிரகடனம் செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பிரயத்தனம் செய்து வருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது இந்திய உயர்ஸ்தானிகரத்தின் அரசியல் பிரிவு ஆலோசகர் பாணுபிரகாஷ் மற்று…
-
- 5 replies
- 733 views
- 1 follower
-
-
வடமாகாண, வைத்தியர்களின்... சம்பளம் குறைப்பு! பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தற்போது வைத்தியர்கள் பணியாற்றி வரும் நிலையில், வடமாகாணத்தில் அவர்களுக்கான சம்பளம் குறைக்கப்பட்டு முழுமையாக வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் கதிரமலை உமாசுதன் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பல்வேறு நெருக்கடிகள் தற்போது நாட்டில் காணப்பட்டாலும் கூட அதை எதிர்கொண்டு வைத்தியர்கள் தங்களால் இயன்றவரை பணியாற்றி வருகின்றனர். நாம் பல்வேறு கோரிக்கைகளை உயர் அதிகாரிகளுக்கு முன்வைத்த போதும் அதனைக் கருத்தில் கொள்ளாது வடமாகாணத்தில் வைத்தியர்களின் சம்பளத்தை குறைத்துள்ளதுடன் முழுமையாக வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது. …
-
- 5 replies
- 300 views
- 1 follower
-
-
தமிழக ஊடகமான 'விடுதலை' யில் வந்த 'முதன் முதலாக விடுதலைப்புலிகள் விமானம் மூலம் தாக்குதல்!' முதன் முதலாக விடுதலைப்புலிகள் விமானம் மூலம் தாக்குதல்! ருசியாவின் `மிக்’ ரக சண்டை விமானங்களும் இசுரேலின் `கிபிர்’ ரக விமானங்களும் கடும் சேதம் அதிர்ச்சியில் உறைந்தது சிங்கள இராணுவம்! கொழும்பு, மார்ச் 26- விடுதலைப்புலிகள் முதன்முதலாக விமானத் தாக்குதலைத் தொடுத்து சிங்கள இராணுவத்தினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினர். சிங்களர்களின் விமானப்படைத் தாக்குதல் அத்துமீறிப் போய்க் கொண்டிருப்பதால், விடுதலைப்புலிகள் மிகப்பெரிய பதிலடி கொடுப்பார்கள் என்று உளவுத் துறையினர் கூறிவந்தனர். புலி வருகிறது, புலி வருகிறது’ என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில், உண்மையிலேயே புலி வந்து கிலிய…
-
- 5 replies
- 2.3k views
-
-
[ வியாழக்கிழமை, 23 யூன் 2011, 00:39 GMT ] [ கார்வண்ணன் ] நியுயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகம் அருகேயுள்ள ஐ.நா தேவாலய நிலையத்தில் 'சிறிலங்காவின் கொலைக்களங்கள்' ஆவணப்படம் நேற்று திரையிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபை, மனிதஉரிமைகள் கண்காணிப்பகம், முரண்பாடுகளுக்கான அனைத்துலக குழு ஆகியன இணைந்து இந்த ஆவணப்படத்தை திரையிட்டுள்ளன. சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்களுக்கு இந்த ஆவணப்படம் சாட்சியாக உள்ளது என்று, இதனை திரையிட முன்னர் அனைத்துலக மன்னிப்புச்சபை வெளியிட்ட முன்னுரையில் கூறப்பட்டிருந்தது. இந்த ஆவணப்படத்தை பல்வேறு நாடுகளினதும் இராஜதந்திரிகளும் அதிகாரிகளும் பார்வையிட்டுள்ளனர். இந்த நிகழ்வில் அழைக்கப்பட…
-
- 5 replies
- 1.4k views
-
-
February 19, 2019 யாழ்.கொக்குவில் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசியதுடன், வாகனங்களையும் தீயிட்டு கொழுத்திய சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற தொலைக்காட்சி ஒன்றின் ஊடகவியலாளரை காவற்துறையினர் தாக்கியுள்ளனர். யாழில் உள்ள தொலைக்காட்சி நிறுவனமொன்றில் பணியாற்றும் 32 வயதுடைய நடராஜா குகராஜ் எனும் ஊடகவியலாளரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் தெரிவிக்கையில், “சம்பவ இடத்தில் செய்தி சேகரிப்பதற்காக சென்றிருந்தபோது அங்கே காவற்துறையினரும் நின்றிருந்தனர். வழக்கம்போல் நான் சற்று தூரமாக நின்று…
-
- 5 replies
- 729 views
-
-
சாந்தனின் இறுதி நிகழ்வு இன்று! Published By: DIGITAL DESK 3 04 MAR, 2024 | 10:44 AM ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து அதிலிருந்து விடுதலையாகி ஒன்றரை ஆண்டுகள் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சாந்தன் அவர்களுடைய உடலைச் சுமந்த ஊர்தி நேற்று ஞாயிற்றுக்கிழமை (03)வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்ட நிலையில் மக்கள் அஞ்சலிக்காக குமரப்பா நினைவு சதுக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் தலைவர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் அஞ்…
-
- 5 replies
- 640 views
- 1 follower
-
-
சிறிலங்காவில் வன்முறைகள் நிகழலாம் – அமெரிக்கா எச்சரிக்கைAUG 08, 2015 | 13:25by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அங்கு தேர்தலை ஒட்டி வன்முறைகள் இடம்பெறலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறிலங்காவுக்குச் செல்லும், சிறிலங்காவில் வதியும் தமது நாட்டுக் குடிமக்கள் இத்தகைய தேர்தல் வன்முறைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உள்ளூர் ஊடகங்களை அமெரிக்க குடிமக்கள் தொடர்ச்சியாக கண்காணித்து வர வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அமைதியான முறையில் நடக்கின்ற பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக திரும்பமான என்பதால், இத்தகைய பேரணிகள், போராட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்துக் கொள்ளுமாற…
-
- 5 replies
- 1k views
-
-
Published By: DIGITAL DESK 7 31 JUL, 2024 | 10:36 AM வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுரியா நகர் பகுதியில் ஆயுதங்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு (30) நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விஷேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர்களுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போதே ஆயுதங்களுடன் 43 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ரி-56 ரக இரு துப்பாக்கிகள், ஒரு வாள், துப்பாக்கி ரவைகள் 60, மெகசீன் 2 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், கைது செய்யப்பட்ட நபரையும் ஆயுதங்களையும் வாழைச்சேனை பொலிஸார் நீதிமன்றில்…
-
-
- 5 replies
- 475 views
- 1 follower
-
-
இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தகாலப்பகுதியான மே 16,17,18 ஆகிய நாட்களில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் பலர் காணாமல் போயுள்ளனர். சரணடைந்தவர்களில் பலர் மனைவி, பிள்ளைகளோடும் சரணடைந்துள்ளனர். அவர்களின் நிலையென்ன என்பது தொடர்பாக இதுவரை சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை. தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன், மற்றும் புலித்தேவன் உள்ளிட்ட பலர் சரணடைந்தமை பலரும் அறிந்ததே. இந்நிலையில் அவர்கள் சிறிலங்கா படையினரால் சித்திரவதைகளின் பின்னர் படுகொலைசெய்யப்பட்டுள்ளமை காட்டும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இதேபோன்று சரணைடைந்த மட்டக்களப்பு மாவட்ட தளபதி ரமேஸ் அவர்களையும் சித்திரவதையின் பின்னர் படுகொலைசெய்யப்பட்டதற்கான ஆதார புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.…
-
- 5 replies
- 2.2k views
-
-
பாக்.மற்றும் சீனாவிடமிருந்து ஆயுதங்களை இலங்கை கொள்வனவு செய்து வருகின்றது. இதனை நாம் அறிவோம். தமிழக மீனவர் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசை கேட்டுக் கொண்டுள்ளோம் என்று பாரதப் பிரதமர் தெரிவித்துள்ளார். ம.தி.மு.கழகத்தின் செயலாளர் வைகோ நேற்று முன்தினம் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின் போதே பிரதமர் மன்மோகன் சிங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஆயுத உதவி செய்வதை நிறுத்த வேண்டும் என்று வைகோ எழுதிய கடிதத்தினை நினைவு கூர்ந்த பிரதமர், இலங்கைக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கவில்லை என்று தெரிவித்தார். இலங்கை இராணுவத் தளபதிகளும் அமைச்சர்களும் இந்தியா ஆயுதங்களை வழங்குவதாக கூறியுள்ளானரே என வைகோ கேட்ட போது அது தவறான தகவல், அதி…
-
- 5 replies
- 991 views
-
-
ஆயுததாரி டக்கிளஸ் தலைமையில் சிறப்பு செயலணிக் குழுவாம் வடக்கு மாகாணத்திற்கான இடைக்கால நிர்வாக சபை ஒன்றை சிறீலங்கா அரசாங்கம் அரங்கேற்றியுள்ளது. நிர்வாக சபைக்கு ஈடாக சிறப்பு செயலணிக் குழு ஒன்றை சிறீலங்கா அரசாங்கம் உருவாக்கியுள்ளது. இந்த சிறப்பு செயலணிக் குழு ஆயுததாரி டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சிறீலங்கா அதிபரின் ஆலோசகர் பசில் ராஜபக்ச, அமைச்சர் பத்தியூன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். வடக்கு மாகாணத்தின் தேர்தல்கள் இடம்பெறுவதற்கு முன்னர் இந்த சிறப்பு செயலணிக் குழுவினர் அபிவிருத்தி தொடர்ப்பில் பணியாற்றுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவை சிறீலங்கா அதிபர் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்மொழிந்த போது, அதற்கு அமைச்சர…
-
- 5 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சியில் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்: 2 அப்பாவி பொதுமக்கள் பலி; 2 சிறார்கள் உட்பட 13 பேர் காயம் [புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2008, 11:54 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி நகர் கனகாம்பிக்கைக்குளம் வீதி மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு சிறார்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர். குண்டுச்சிதறல்கள் கிளிநொச்சி பொதுமருத்துவமனைப் பகுதிகளிலும் வீழ்ந்துள்ளன. கிளிநொச்சி நகரில் உள்ள கனகாம்பிகைக்குளம் வீதி ஏ-9 சாலை அருகில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று புதன்கிழமை முற்பகல் 10:20 நிமிடத்துக்கு சிறிலங்கா வான்படையின் இரண்டு கிபீர் வானூர்திகள் …
-
- 5 replies
- 1.1k views
-
-
இலங்கை பிரச்சினை தொடர்பில் தமிழக சட்டசபையில் மோதல் [புதன்கிழமை, 12 நவம்பர் 2008, 09:11 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்] இலங்கை பிரச்சினை தொடர்பில் தமிழக சட்ட சபையில் இன்று புதன்கிழமை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கும் இந்திரா காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தும் தீர்மானத்தின் மீது தமிழக சட்டசபையில் ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் பேச சபாநாயகர் வாய்ப்பு அளித்தார். முதலில் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர் விஜயகாந்தை பேச அழைத்தார். அவர் சபையில் இல்லாததால் அடுத்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டசபை உறுப்பினர் ரவிக்குமாரை உரையாற்றுமாறு அழைத்தா…
-
- 5 replies
- 1.3k views
-
-
ஈஸ்டர் பயங்கரவாதம்; விசாரணைகள் நிறைவு! ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் முழுமை பெற்றுள்ளது என்று சிஐடியினர் இன்று (23) கொழும்பு பிரதான நீதிவானுக்கு அறிவித்துள்ளனர். அத்துடன் விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் சிஐடியினர் தெரிவித்துள்ளனர். https://newuthayan.com/ஈஸ்டர்-பயங்கரவாதம்-விசா-3/
-
- 5 replies
- 1.2k views
-
-
இந்தியாவை ஏமாற்றும் நடவடிக்கையே பீரிஸின் இந்திய விஜயம் என்கின்றார் விக்னேஸ்வரன் இந்தியாவை தனது நட்பு நாடென காட்டிக்கொள்ளும் விதமாக, இந்தியாவிற்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி இந்தியாவை ஏமாற்றும் நடவடிக்கையே இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் இந்திய விஜயம் என சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். எனவே வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் வாக்குறுதிகளை நம்பி இந்தியா ஏமாந்துவிட கூடாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் இந்திய ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட இந்தியாவிற்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதியையும் இலங்கை அர…
-
- 5 replies
- 367 views
- 1 follower
-
-
முஸ்லிம்களின் துன்பம், வலியை எம்மால் உணர முடிகின்றது.! தமிழ் மக்களின் உரிமைக்காக வழங்கும் அழுத்தங்களை போன்று முஸ்லிம் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும் கவனத்தில் கொண்டு இம்முறை ஜெனிவா தீர்மானம் அமைய வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்கள் தமிழர் என்ற உணர்வில் எமது உரிமைக்காக இணைந்து போராடவேண்டிய காலம் வந்துள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அடக்குமுறைகளின் கொடுமையினை அனுபவித்தவர்கள் என்ற ரீதியில் முஸ்லிம் மக்கள் மீதான அடக்குமுறையை எம்மால் உணர முடிகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில்…
-
- 5 replies
- 700 views
-
-
பட்டினிச் சாவிலிருந்தும் படுகொலைகளிலிருந்தும் தமிழரைப் பாதுகாக்க ஐ.நாவுக்கு அவசர வேண்டுகோள். தமிழ்மக்களைப் பட்டினிச் சாவிலிருந் தும் அரச பயங்கரவாதப் படுகொலைகளி லிருந்தும் பாதுகாக்குமாறு ஐக்கிய நாடு கள் சபைக்கு அவசர வேண்டுகோள் விடுக் கப்பட்டுள்ளது. வாகரையில் அரசாங்கம் நடத்திவரும் படுகொலைகளைக் கண்டித்தும் ஏ9 வீதி மூடப்பட்டுள்ளதால் உண்டாகியுள்ள மனி தப் பேரவலத்துக்குக் கண்டனம் தெரிவித் தும் ஐக்கிய நாடுகள் சபைக்கு விலாசமிட்டு கிளிநொச்சி வெகுசன அமைப்புகளின் ஒன் றியம் கையளித்த மகஜரிலேயே மேற்கண்ட அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அந்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட் டுள்ளதாவது சிறிலங்காவில் தமிழ் பேசும் மக்கள் மீது அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட…
-
- 5 replies
- 1.4k views
-
-
அண்மையில் கல்விச் சுற்றுலாவுக்கு சென்ற யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் இசைத் துறை மாணவர்களை ஜனாதிபதியுடன் சந்திக்க வைத்து அங்கு கலாநிதி நவரத்தினம் தெரிவித்த கருத்துக்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மட்டத்தில் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதி ஒருவர் குளோபலுக்குத் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் இசைத்துறைத் தலைவர் கலாநிதி நவரத்தினம் இசைத்துறை மாணவர்களை கல்விச்சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்ற பொழுது அவர்களை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை சந்திக்க வைத்துள்ளார். அங்கு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கு பொன்னாடை போர்த்தி பரிசில் வழங்கி கௌரவித்துமுள்ளார் அங்கு கருத்துத் தெரிவித்த கலாநிதி நவரத்தினம் 2009மே இற்க…
-
- 5 replies
- 1.8k views
-
-
புத்த பகவானுக்கு சிலை எடுத்த தமிழன் வியாழன், 12 மே 2011 07:13 இலங்கையில் தமிழர் ஒருவர் புத்த பகவானுக்கு சொந்தச் செலவில் மாபெரும் சிலை அமைத்து - கட்டிடம் எழுப்பிக் கொடுத்து உள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் எம்.பி சாம் தம்பிமுத்துவின் புதல்வரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக் களப்பு மாவட்ட பிரதம இணைப்பாளர்களில் ஒருவருமான அருண் தம்பிமுத்துவே 10 மில்லியன் ரூபாய் செலவில் இத்திருப்பணியைச் செய்து உள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமங்களா ராம ராஜ மகா விகாரையில் இக்கட்டிடம் அமைத்துக் கொடுக்கப்பட்டு உள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் சிலை தாய்லாந்தில் இருந்து கொண்டு வரப்பட்டு உள்ளது. இன்று இக்கட்டிடம் திற…
-
- 5 replies
- 2k views
- 1 follower
-
-
உடையார்கட்டு வெள்ளப்பள்ளம் குளம் அடாத்தாகாக ஆக்கிரமிப்பு ; சம்பவ இடத்திற்கு சாள்ஸ் எம்.பி விஜயம்! Published By: Digital Desk 3 27 May, 2023 | 11:55 AM முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட உடையார்கட்டு பகுதியில் வெள்ளப்பள்ளம் குளம் அடாத்தாகாக ஆக்கிரமிப்பு செய்வதை இன்று சனிக்கிழமை (26) பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நேரில் சென்று பார்வையிட்டார். வெள்ளப்பள்ளம் குளம் தனியார் ஒருவரினால் ஆக்கிரமிக்கப்பட்டு எல்லையிடப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு அக்கிராம மக்களினால் தெரிவிக்கப்பட்டதன் பிரகாரம் சம்பவ இடத்…
-
- 5 replies
- 620 views
- 1 follower
-