ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
கடலுணவு உற்பத்திக்கான கேந்திர மையமாக இரணைதீவு உருவாக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். இரணைதீவில் இன்று(14.02.2021) கடலட்டை ஏற்றுமதிக் கிராமத்தினை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர், இரணைதீவு மக்களின் வாழ்கை செழிப்படைய வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு என்று தெரிவித்ததுடன், கடலட்டை பண்ணையின் இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பித்துள்ள மேலும் பல பேருக்கும் பொருத்தமான பிரதேசங்களை அடையாளப்படுத்தி வழங்குவதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். மேலும் கொடுவா மீன் உற்பத்திப் பண்ணைகளையும் உருவா…
-
- 16 replies
- 1.4k views
-
-
3 விடுதலை புலி உறுப்பினர்களின் சடலங்கள் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது e-Paper 3/5/2008 2:31:05 PM மன்னார் நிருபர் - மோதல்களின் போது உயிரிழந்த 03 பெண் புலிகளின் சடலங்களை படையினர் நேற்று 6.30 மணியளவில் மன்னார் வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர். அடம்பன் பகுதியில் இடம் பெற்ற மோதல்களின் போது உயிரிழந்த புலிகளின் சடலங்களையே தாம் வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது . இச்சடலங்களை இன்று மதியம் 1.30 மணியளவில் மன்னார் வட்ட நீதிவான் டி.ஜே. பிரபாகரன் வைத்திய சாலையில் சென்று பார்வையிட்டார். பின்னர் பிரதே பரிசோதனையின் பின் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் http://www.virake…
-
- 0 replies
- 1.4k views
-
-
மயானத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட சடலத்தை திருப்பி அனுப்பிய படையினர். - பண்டார வன்னியன் Friday, 02 March 2007 11:27 யாழ்ப்பாணம் தகனக்கிரிகைக்காக மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட சடலத்தினையும், விறகினையும் எடுத்துச் செல்லப் படையினர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியுள்ளனர். இச் சம்பவம் அராலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அராலி பூவோடை இந்துமயானப் பகுதியிலேயே இப்பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த வயோதிபர் ஒருவரை அடக்கம் செய்வதற்காக முன்கூட்டியே படையினரின் அனுமதியைப் பெற்று விறகும் இறக்கப்பட்டு இறுதிக்கிரியைக்கான ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. இந் நிலையில் அங்கு வந்த படை அதிகாரிகள் சிலர் சடலத்தையும் வறகையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேற …
-
- 7 replies
- 1.4k views
-
-
பிள்ளையான் தரப்பினர் பிரம்புகளை கொண்டு மாடுகளை மேய்ப்பவர்கள் அல்ல, அதனை விட நவீன ஆயுதங்களை கொண்டுள்ளவர்கள் என ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கிழக்கு மாகாண தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் பிள்ளையான் குழுவினர் முகாம்களை அமைத்து ஆயுதங்களை கொண்டுள்ளனர். இவர்கள் பிற்பகல் 4 மணியின் பின்னர் அரசாங்கம் வழங்கியுள்ள உழவு இயந்திரங்களில் சென்று தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவிததார். இதனால் பிள்ளையான் குழுவினர் பிரம்புகளை கூட வைத்திருக்கவில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறுவது பாலர் பாடசாலை உற்சவத்தை போன்றது. எனவும் அவர் கூறினார். அரசாங்க அமைச்சர…
-
- 0 replies
- 1.4k views
-
-
கோத்தபாயவின் வலது கையாக இருந்து மஹிந்த குடும்பத்திற்கு எதிரானவர்களை கடத்தி கொலை செய்தல், மிரட்டுதல்,கப்பம் கொடுத்தல் ஆகிய பணிகளைச்செய்து வந்தவர்தான் குடு ராஜா துமிந்த சில்வா. . துமிந்த சில்வா தேறுவதற்கு நாளாகும் என்பதனால் இவரால் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகளில் ஒரு பகுதியை கிழக்கின் ஒட்டுக்குழு மன்னன் கருணாவிற்கு குதி நேர தொழிலாக கொடுக்க கோத்தா திட்டமிட்டுள்ளார். . மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக கடந்தகாலங்களில் செயற்பட்ட எதிர்க்கட்சிகளின் செயற்பாட்டாளர்களை கடத்திச் செல்லுதல், அவர்கள் மீது தாக்குதல் நடத்துதல், காணாமல் போக செய்தல் ஆகியவற்றை இனிமேல் கருணா பார்த்துக்கொள்வார். அதாவது துமிந்த சில்வாவின் பணிகளை இனி கருணா பார்த்துக்கொள்வார் என கடந்த வெள்ளிக்கிழமை நட…
-
- 1 reply
- 1.4k views
-
-
வியாழன் 17-01-2008 16:10 மணி தமிழீழம் [தாயகன்] பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பியுங்கள் - ஐ.நா, ஐ.ஒ சிறீலங்கா அரசும், விடுதலைப் புலிகளும் சமாதானப் பேச்சை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமென, ஐக்கிய நாடுகள் சபையும், ஐரோப்பிய ஒன்றியமும் அழைப்பு விடுத்திருக்கின்றன. நேற்றுடன் (புதன்கிழமை) போர் நிறுத்த உடன்படிக்கை முறிவடைந்துள்ள நிலையில், மோதல்களும், தாக்குதல்களும் அதிகிரித்துள்ளன. மொனராகலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட இந்த இரண்டு அமைப்புகளும் பேச்சுக்கான அவசியத்தை வலியுறுத்தியுள்ளன. http://www.pathivu.com
-
- 0 replies
- 1.4k views
-
-
மீண்டும் யுத்தத்திற்கு இடமில்லை - ரெஜினோல்ட் குரே வடக்கில் வெவ்வேறு பகுதிகளிலிருந்து ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டாலும் மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். பெரிய மழை பெய்து முடிந்தவுடன் நிலத்தில் ஈரம் இருப்பது போன்று வட மாகாணத்தில் இடம்பெற்ற முப்பதாண்டு யுத்தத்தின் பின்னர் ஓரிரு ஆயுதங்கள் கண்டெடுக்கப்படலாம். அது யுத்தத்தின் மறு ஆரம்பமல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். http://www.virakesari.lk/article/38569
-
- 3 replies
- 1.4k views
-
-
புதிய சானல் 4 போர்குற்ற ஆவண வெளியீடு http://bcove.me/3ews1u8f http://bcove.me/xggd89lu http://bcove.me/e22ay7jh மூடி விட்டு போகலாம் என பார்த்தாலும் சில கோரகாட்சிகள் .. அனைத்துலக ரீதியில் செயல்பட இந்த எளிய தோழரின் ஆலோசனைகள் 1) அந்தந்த நாடுகளில் தமக்கு சார்பாக வாதிட ஈழ தோழர்கள் தலைமையிலான சட்டத்தரணிகளின் அமைப்புகளை உருவாக்குதல் 2) வேலை வாய்ப்புகளில் தாங்கள் உயர் அதிகாரிகளாக இருக்கும் பட்சத்தில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்குதல் 3) வங்கி ஒன்றினை உருவாக்கி அனைத்து ஏழை நாடுகளையும் கவர்ந்திடல்(வருமா வராதா என்பதெல்லா கேட்கபடாது ) 4)சிங்களவனுக்குள் காசு பணத்தால் அடித்து விட்டு உளவு துறையை இறக்கிவிடல்( ஏன் அவந்தான் கால்ம் பூர…
-
- 1 reply
- 1.4k views
-
-
கடந்த வாரம் கொண்டாடப்பட்ட சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர நாள் பெரும் அச்சங்கள் மற்றும் பதற்றங்களின் மத்தியில் கொண்டாடப்பட்டதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.4k views
-
-
புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இப்போது இரு தரப்புக் கொள்கைகள் காணப்படுகின்றன. அதில் ஒன்று விடுதலைப்புலிகளின் கொள்கையை அப்படியே பின்பற்றுகின்ற தரப்பு. மற்றைய தரப்பு சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் நிலைமைகளுக்கு ஏற்பவும் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகின்றவர்கள். இந்த இரண்டு தரப்பில் யார் சரியான கொள்கை உடையவர்கள் என்று ஆராய்வது நன்மை தரக்கூடியதன்று. மாறாக தமிழ் மக்கள் நிம்மதியான வாழ்வை வாழவேண் டும். அந்த நிம்மதி என்பது எக்காலத்திலும் குழப்ப முறாமல் நிரந்தரமானதாக இருத்தல் அவசியம் என்பதைக் கருத்தில் கொள்வதே இங்கு பொருத்து டையது. அப்படியானால் இத்தகையதோர் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியவர்கள் அரச தரப்பாகவே இருக்கமுடியும். எனினும் இலங்கையின் ஆட்சிப்பீடங்களைப் பொறுத்தவரை கா…
-
- 2 replies
- 1.4k views
-
-
இந்தியாவுக்கு எதிராக பிரிவினையைத் தூண்டியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து கைதாகி பிணையில் விடுதலையான இயக்குநர்களான சீமான் மற்றும் அமீர் ஆகியோரை மதுரை சிறை வாசலில் பாரதிராஜா தலைமையிலான திரையுலகத்தினர் வரவேற்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 1.4k views
-
-
வியாழன், 28 ஏப்ரல் 2011 17:53 .தமிழீழ விடுதலைப்புலிகளே அதன் உறுப்பினர்கள் சிலரைக் கொன்றதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் காயமடைந்த தமது பெண் போராளிகளை பஸ் வண்டியினுள் வைத்து குண்டுவைத்துத் தகர்த்தது. இந்தச் சம்பவத்தை அரசுக்கு எதிரான பிரசாரத்துக்காகப் பயன்படுத்தும் நோக்கில் ஒளிப்பதிவும் செய்தது. 2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை நேரில் கண்ட இருவர் இப்போது இதனைத் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. காயமடைந்த பெண் போராளிகள் மேற்படி பஸ்ஸினுள் அமர்ந்து தேனீர் அருந்திக்கொண்டு இருந்தபோது, விடுதலைப்புலிகளின் குறித்த பகுதிக்குப் பொறுப்பான அதிகாரி ஒருவர் தனது சகாக்களுக்கு பஸ்ஸில…
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையில் அடையாளம் காணப்படாத நிலையில் 6 உடலங்களை நேற்று புதன்கிழமை இரவு சிறிலங்கா காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.4k views
-
-
லண்டன் முத்தரப்பு உச்சி மாநாடு குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை அமைச்சர் ரம்புக்வெல லண்டனில் எதிர்வரும் ஜூலையில் நடைபெறவிருப் பதாக அறிவிக்கப்பட்டுள்ளஅரசு விடுதலைப் புலிகள் நோர்வே அரசு உச்சி மாநாடு குறித்து உத்தியோகபூர்வ மான தகவல் எதுவும் அரசுக்குக் கிடைக்கவில்லை. பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான பேச் சாளரும் அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல இத னைத் தெரிவித்தார். பிரிட்டனில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு, அரசு விடுதலைப் புலிகள் நோர்வே தரப்பு ஆகிய முத்தரப்புகளையும் கொண்ட உச்சி மாநாட்டை ஜூலை மாதம் நடத்தப்போவதாக பிரிட் டிஷ் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தது. இது குறித்து கேட்டபோது இதுவரை உத்தியோகபூர்வமான தகவல் எதுவும் அரசுக்கு கிட…
-
- 0 replies
- 1.4k views
-
-
SLMM கண்காணிப்புப் பணியில் இருந்து விலகுகிறது???? Sri Lanka Monitoring Mission withdraws from ceasefire monitoring Sunday, August 13, 2006, 13:25 GMT, ColomboPage News Desk, Sri Lanka. Aug 13, Colombo: The Sri Lanka Peace Secretariat says the Sri Lanka Monitoring Mission (SLMM) has officially stated that it is withdrawing from monitoring the ceasefire between the Sri Lankan government and the Liberation Tigers of Tamil Eelam (LTTE). The SLMM has informed both the Sri Lankan government and the LTTE of its decision. The withdrawal will be made in three steps, with withdrawal from the country as the final stage. Low
-
- 0 replies
- 1.4k views
-
-
கிழக்கில் இயங்கிவரும் சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக்குழுவின் பிள்ளையான், கிழக்கு மாகாண முதலமைச்சரானால் அரசில் அங்கம் வகிக்கும் எல்லா முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகுவார்கள் என்று "த மோர்ணிங் லீடர்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.4k views
-
-
[Monday, 2011-09-26 08:30:24] தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளான ரமேஷ் மற்றும் சூசையின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ரமேஷின் மனைவியும் சூசையின் சகோதரியுமான வத்சலா நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக ரமேஷின் மனைவி வத்சலா அமெரிக்காவின் நியூயோர்க் நீதிமன்றில் தொடுத்த வழக்கு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமெரிக்க நீதிமன்றில் இந்த வழக்கு புலிகளது முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதி ரமேஷின் மனைவி வத்சலாவினால் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாதிகள் எவ்வாறு தமக்க…
-
- 2 replies
- 1.4k views
-
-
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 8, 2011 இலங்கை அரசாங்கம் காணாமல் போனவர்கள் தொடர்பில் பதில் சொல்லியே ஆகவேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் உரிமை மீறல்கள் தொடர்பில் நேற்று வெளியான மனித உரிமை கண்காணிப்பக ஆசிய பிரதினிதி அடம் சிமித் அவர்களின் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைப்படையினரால் கைது செய்யப்பட்ட, கடத்தப்பட்ட ஏராளமான தமிழ் இளைஞர்கள், விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்களின் பெற்றோர்கள் எல்லோரிடமும் ஏன் இலங்கை அரசிடம் அதன் நல்லிணக்க ஆனைக்குழுவிடம் முரையிட்டும் இதுவரை எந்த பயனும் கிடைக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கை இந்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் மனித உரிமை க…
-
- 1 reply
- 1.4k views
-
-
புலிகள் தான் மக்கள், மக்கள் தான் புலிகள்: சீமானின் ஆவேச பேச்சு ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமாருக்கு பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் எம்.ஜி.ஆர். நகரில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சியின் செயலாளர் பெ.மணியரசன், விடுதலை ராஜேந்திரன், திரைப்பட இயக்குனர் சீமான் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். இயக்குனர் சீமான் பேசுகையில், இன்று நடக்கும் இந்த கூட்டத்திற்கு போலீசார் தடை விதிக்கப்போவதாக சொன்னார்கள். தடை தடை என்றால் அதை உடை உடை என்றுதான் எனக்கு தோன்றுகிறது. கார் எரிக்கிற கட்சியாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது. பிரபாகரனுக்கு ஆதரவாகவும், தடை செய்யப்பட்ட இய…
-
- 2 replies
- 1.4k views
-
-
சரணடைந்தவர்கள் காணாமல் போனது எப்படி? குளொபல் தமிழ் செய்திகளுக்காக றொகான் முள்ளிவாய்க்கால் போரின் இறுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் குறிப்பிடத்தக்கவர்கள் சரணடைந்தார்கள். ஈழத் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசாங்கத்தின் படைகளும் உலக வல்லாதிக்கப்படைகளும் தொடுத்த யுத்தம் மிகவும் மூர்க்கத்தனமானது. வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளிடமிருந்த கட்டுமானங்கள், ஆளணிகள், மக்கள் தொகை, இராணுவப் பலங்கள் முதலியவற்றை முழுமையாக குறி வைத்து போர் நடத்தப்பட்டது. அந்தப் போரில் நிகழ்த்தப்பட்ட அவலங்களில் சரணடைந்த போராளிகளுக்கு நடந்த குரூரங்கள் என்பது ஈழப் போரின் இறுதிநாட்களில் அரங்கேறிய கொடுமைகளில் துரோகம் மிகுந்த ஒரு பகுதி. சரணடைந்த போராளிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளும் இலங்க…
-
- 5 replies
- 1.4k views
- 1 follower
-
-
ஈழத்தில் நடைபெற்று வரும் போர், இப்பொழுது பல நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது. பெரிய வல்லரசு நாடுகளுடன் மோதியும், பல சதிச் செயல்களிலும் இருந்து வெற்றி பெற்று வரும் இந்த வேளையில், புலத்தில் வாழும் மக்கள் கதைப்பது என்ன? சிறீலங்கா இராணுவத்தினர், தமிழ் மக்களின் பல இடங்களைக் கைப்பற்றி விட்டார்கள், கிளிநொச்சியினையும் இன்னும் சில நாட்களில் கைப்பற்றி விடுவோம் என்று பல மாதங்களும் கடந்து பிடிக்கவில்லை. இப்படி இலங்கை இராணுவத்தினர் தெரிவித்து வருகின்றனர். இராணுவத்தினர், தாங்கள் வெற்றி பெறுவதாக பெரிதாக சந்தோசம் அடைந்து வருகின்றனர். சிறீலங்கா இராணுவத்தினர் வெற்றி பெற வேண்டும் என பல வல்லரசு நாடுகள், இராணுவ உதவிகள், போர் தந்திரங்கள் போன்றவற்றை வழங்கி வருகின்றது. இப்படி பல…
-
- 1 reply
- 1.4k views
-
-
வித்தியா கொலை : பிரதி பொலிஸ்மா அதிபரை கைது செய்ய நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய புங்குடுதீவு மாணவி வித்யா கொலைச் சம்பவம் தொடர்பில் அப்போது வட மாகாணத்தின் பிரதி பொலிஸ்மா அதிபராக செயற்பட்டவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கொலையின் பிரதான சந்தேகநபர் எனக் கருதப்படும், மஹாலிங்கம் சிவகுமார் என்பவரை பொலிஸ் தடுப்பில் இருந்து வெளியேற்றி கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வழக்கினை விசாரணை செய்யும், CIDயினரின் அறிக்கைக்கு அமைய, மஹாலிங்கம் சிவகுமார் எனப்படும் பிரதான குற்றவாளியை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுக…
-
- 1 reply
- 1.4k views
-
-
முஸ்லிம்கள் மீது வெறுப்படையச் செய்வதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டியது அவசியம் -ரவூப் ஹக்கீம் இன்றைய பதற்றமான சூழ்நிலையில் சந்தேகங்களும், நிச்சயமற்ற தன்மையும் மக்களது உள்ளங்களில் குடிகொண்டுள்ள வேளையில், சமகங்களுக்கிடையில் அமைதியும் ஒற்றுமையும் நிலவச் செய்வதற்கு உரிய பங்களிப்பைச் செய்வது ஊடகங்களின் கடமையும், பொறுப்புமாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பெரும்பான்மை சமூகத்தினர் முஸ்லிம்கள் மீது வெறுப்படையக் கூடியவாறு சாதாரண சம்பவங்களை கூட ஊதிப் பெருப்பித்து பூதாகரமாக்குவதை ஊடகங்களில் பணிபுரிவோர் தவிர்த்து கொள்ள வேண்டுமென வினயமாக வேண்டிக் க…
-
- 8 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகளினால் கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்படும் க்ளைமோர் குண்டுகளை விநியோகிக்கும் விடுதலைப் புலிகளின் முக்கிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், இவர் வழங்கிய தகவலுக்கமைய கைப்பற்றப்பட்ட வாகனத்திலிருந்து அதி சக்திவாய்ந்த 20 க்ளைமோர் குண்டுகளையும் கைப்பற்றியதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கூறினர். கடந்த காலங்களில் கொழும்பின் பல பிரதேசங்களில் வெடிக்கப்பட்ட க்ளைமோர் குண்டுகள், கைதுசெய்யப்பட்டுள்ள நபரினாலேயே விநியோகிக்கப்பட்டவையென விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அதேபோன்ற அதிசக்திவாய்ந்த 21 க்ளைமோர் குண்டுகளை இதற்கு முன்னர் குறித்த நபர் விநியோகித்துள்ளதாகவும் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளிலிருந…
-
- 4 replies
- 1.4k views
-
-
இலங்கையிலும் பா.ஜ.க.அரசாங்கத்தை அமைக்க திட்டமுள்ளது- அமித்ஷா தெரிவித்ததாக வெளியான கருத்தினால் சர்ச்சை இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு நேபாளத்திலும் இலங்கையிலும் பாரதிஜனதா அரசாங்கத்தினை அமைக்கும் திட்டமுள்ளது என திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் டெப் தெரிவித்துள்ள கருத்தினால் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பிப்லாப் டெப் தெரிவித்ததாக ஈஸ்ட் மொஜொ தெரிவித்துள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த சனிக்கிழமை திரிபுராவிற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உள்துறை அமைச்சர், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிபெற்ற பின்னர் பா.ஜ.க.விற்கு இலங்கையிலும் நேபாளத்திலும் அரசாங்கத்தை அமைக்கும் எண்ணமுள்ளது என குறிப்பிட்டார் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும்…
-
- 6 replies
- 1.4k views
-