ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
10 ராமேஸ்வரம் மீனவர்கள் கடத்தல்இலங்கை கடற்படை அட்டூழியம்செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 11, 2007 ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை அத்துமீறித் தாக்கிய இலங்கை கடற்படையினர் 10 பேரை பிடித்துச் சென்று விட்டனர். இதனால் ராமேஸ்வரத்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது.ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 400க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் நேற்று மீன் பிடிக்கச் சென்றனர்.கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லைக்குள் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அஙகு இலங்கை கடற்படையினர் அத்துமீறி நுழைந்தனர். பின்னர் தமிழக மீனவர்களை கடுமையாக தாக்கினர்.பிறகு அமரன், மாணிக்கம், மணி, ஸ்டாலின் உள்ளிட்ட 10 மீனவர்களை தங்களுடன் அழ…
-
- 3 replies
- 1.4k views
-
-
Friday, 15 April 2011 01:07 ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கையை தமிழ், சிங்களத்திலும் வெளியிடுங்கள்:அரசிடம் ஆசிய மனித உரிமைக் குழு கோரிக்கை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையை தமிழிலும் சிங்களத்திலும் மொழி பெயர்த்து வெளியிடவேண்டும்.ஆசிய மனித உரிமைகள் ஆணைக் குழு இலங்கை அரசை மேற்கண்டவாறு கோரியுள்ளது. அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்; நிபுணர் குழுவின் அறிக்கையை ஊடகங்கள் மூலம் வெளியிட இலங்கை முன்வர வேண்டும் என்றும் இலங்கை அரசைக் கோரியுள்ளது.இந்த அறிக்கையை தமிழிலும் சிங்களத்திலும் மொழி பெயர்ப்பது அவசியம் அந்த அறிக்கையின் உள்ளடக்கத்தை அறிந்து அது குறித்து விவாதிக்க மக்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அவர்களின் நாட்டை, உயிரைப்பற்றி…
-
- 0 replies
- 1.4k views
-
-
“புறோக்கர் வேலையை முதலமைச்சர் விக்னேஸ்வரன் கைவிடவேண்டும்” வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன், பொலிஸ் சேவையில் தமிழ் இளைஞர் , யுவதிகள் இணைந்து செயற்படவேண்டும் என தெரிவித்திருக்கும் கருத்துக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் பதில் கருத்தினை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு , அண்மையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் இளைஞர் யுவதிகளை பொலிஸ் படையில் இணைந்துகொள்ளுமாறு பகிரங்கமாகவே ஊடகங்களில் கருத்துத் தெரிவித்துள்ளார். …
-
- 6 replies
- 1.4k views
-
-
வான் புலிகளின் தாக்குதலிலும் அரசியல் லாபம் தேடும் முயற்சி ` கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீதான வான் புலிகளின் தாக்குதல், தென்னிலங்கையில் பலத்த அதிர்ச்சி அலைகளை உருவாக்கியிருக் கும் அதேசமயம், பெரும் வாதப் பிரதிவாதங்களை யும் தோற்றுவிக்கத் தவறவில்லை. தென்னிலங்கைத் தேசமே பெரும் அச்சுறுத் தலை எதிர்கொண்டிருக்கும் இச்சமயத்தில், குறு கிய அரசியல் வேறுபாடுகளைத் துறந்துவிட்டு, "பயங்கரவாதத்திற்கு' எதிராக ஒன்றுசேர்ந்து எழுமாறு சகல அரசியல் கட்சிகளையும் மக்களை யும் பகிரங்க அறிக்கை மூலம் அரசு ஒருபுறம் கோருகின்றது. ஆனால், மறுபுறத்திலோ, இந்த நெருக்கடி விவகாரத்தை கையாளும்படி அரசினால் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட அமைச்சர்களே, இந்த விடயத்திலும் தமது குறுகிய அரசியல் வேறுபாடுகளை சாதித்…
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழர் கொந்தளிப்பு இந்தியா முழுவதும் பரவும்! தா.பாண்டியன் சூடான நேர்காணல் "தி சண்டே லீடர்" ஆங்கில வார இதழின் செய்தியாளர் லசந்தாவிக்கிரம துங்கேவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் இலங்கைப் பிரச்சனை குறித்து விரிவான நேர்காணல் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு: கேள்வி: இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிக்கவும் இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு காணவும் கோரி - குறிப்பாக இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரத் தைப் பகிர்ந்து அளிக்கக்கோரி போராடி வருகிறீர்கள். இதற்குத் தங்கள் தரப்பிலான நியாயம் என்ன? பதில்: மொத்த உலகமே இதற்கான அடிப்படைக் காரணங்கள் எவை என்பதை நன்றாக அறியும். 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இலங்கை…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்குத் தேர்தல்களில் போட்டியிடும் துரைரத்தினசிங்கம் : திட்டமிடப்பட்டுள்ள வடக்குத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் என கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துரைரத்தினசிங்கம் தெரிவித்துள்ளார். வடக்கில் தேர்தல்களை நடாத்துவது குறித்த விவாதங்கள் எதிர்வரும் 20ம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. புதிய சட்ட மூலமொன்றின் மூலம் வடக்கில் உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்தத் தேவையான சட்டப் பின்னணி உருவாக்கப்படவுள்ளது. புதிய சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் வடக்கு உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் கோரப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. http://www.globaltamilnews.net/tamil_news....=83…
-
- 5 replies
- 1.4k views
-
-
இலங்கை தீர்மானம்-பிரதமருக்கு கருணாநிதி கோரிக்கை செவ்வாய்க்கிழமை, மே 26, 2009, 14:29 [iST] சென்னை: இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்து வாழும் லட்சக்கணக்கான தமிழர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலிடம் இலங்கை வழங்கியுள்ள தீர்மானம் தமிழர்களுக்கு எதிராக உள்ளதாக இந்த விஷயத்தில் உரிய முடிவை எடுக்குமாறு பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை தமிழர்களின் நிலை குறித்து விவாதிக்க ஜெனீவாவில் அவசரமாகக் கூடும் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலிடம் இலங்கை அரசு ஒரு தீர்மானத்தை முன் மொழிந்துள்ளது. அதில், தமிழர்களுக்கு நிவாரணத்தை இலங்கை அரசே வழங்கும் என்றும், இதில் மற்ற நாடுகள் தலையிடக் கூடாது என்றும் கூறப்பட்டு…
-
- 5 replies
- 1.4k views
-
-
கொழும்பில் பிரித்தானிய தூதரகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் தூதரகத்தின்மீது தாக்குதல் ‐ கண்ணாடிகள் சேதம்: பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபேண்டுக்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. கொழும்பில் பிரித்தானிய தூதரகத்திற்கு எதிரில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகவும் சிலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இலங்கையின் உள்விவகாரத்தில் மிலிபேண்ட் தலையீடுவதாகவும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் குற்றம்சுமத்தியுள்ளனர். பிரித்தானிய தூதரகத்தின் மீது ஆத்திரமடைந்த சிலர் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் ஆயிரம் பேர் கொண்ட குழு இந…
-
- 2 replies
- 1.4k views
-
-
வடபகுதியில் சிங்களவர்களின் வருகை யாழ்.மக்களுக்கு எரிச்சலூட்டியுள்ளது வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தினை அடுத்து நடைபெற்ற சிறிலங்கா அதிபர் தேர்தல் காலத்தில் யாழ்ப்பாணம் – கண்டி வீயை அரசு திறந்தது. இந்த ஏ-9 வீதியை திறத்ததன் மூலமாக தென்பகுதியில் வாழும் சிங்களவர்கள் அதிகளவில் வடபகுதிக்கு விஜயம் செய்வார்கள் அதன் மூலமாக தமது யுத்த வெற்றிகளை அவர்கள் நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என சிறிலங்கா அரசு எதிர்பார்த்தது. அந்த ஆசை எதிர்பார்த்ததனைவிடவும் அதிகமாகவே நிறைவேறி வருகின்றது எனலாம். கடந்த 90ம்; ஆண்டு காலத்திற்கு பிந்திய காலத்தில் வவுனியாவுக்கு அப்பால் சிற்களவர்கள் செல்வதற்கு அவசியம் இருக்கவில்லை. அவர்கள் வடபகுதிக்கு செல்வதனை தவிர…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஈ.ழத்தில் தமிழர் தாயகங்களில் இருந்து சிங்கள இராணுவத்தை வாபஸ்பெற சிங்கள அரசை இந்தியா வற்புறுத்த வேண்டும் - விஜயகாந் தமிழர் பகுதிகளிலிருந்து இராணுவத்தைத் திரும்பப்பெற சிங்கள அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு; சிங்கள அரசு தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொருளாதாரத் தடையை செயல்படுத்தி வருகிறது. இதனால், தமிழ் மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கப்பெறாமல் அவதிப்படுகின்றனர். இது எந்த அளவுக்கு மோசமான நிலையை எட்டியுள்ளது என்றால் அங்குள்ள தமிழர்கள் சிலர் பட்டினியால் இ…
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணம் 35 நிமிடம் யாழ்.மாவட்ட மற்றும் தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களின் தீர்மானங்களை புறம்தள்ளி தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்ட விகாரை அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அதன் போது , தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் உள்ள தனியாருக்கு , அருகில் உள்ள விகாரை காணிகளை வழங்குவதற்கு , அல்லது அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என வடமாகாண ஆளுநர் தெரிவித்தார். ஜனாதிபதியும் அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். அதனை நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனும் ஏற்றுக்கொண்டார். இருந்த போதிலும் , நாடளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் ப…
-
-
- 21 replies
- 1.4k views
-
-
தமிழகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர் பிரபாகரனின் நெருங்கிய சகா ? 22 ஜூலை 2015 தமிழகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் நெருங்கிய சகா எனத் தெரிவிக்கப்படுகிறது. கிருஸ்ணகுமார் என்ற இலங்கையரை இந்திய அதிகாரிகள் கைது செய்திருந்தனர். இவரிடமிருந்து சயனைட் குப்பிகள், சயனைட் மற்றும் தொடர்பாடல் சாதனங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நபர், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நெருக்கமானவர் என தெரிவிக்கப்படுகிறது.இந்திய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் சந்தேக நபரிடம் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். கிருஸ்ணகுமார் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்க…
-
- 15 replies
- 1.4k views
-
-
தமிழ் கட்சிகளின் டில்லிக் கூட்டம் சுதர்சனம் நாச்சியப்பன் இந்திய நாடாளுமன்றத்தைச் சேர்ந்த மனித உரிமைகள் மற்றும் உலக வளர்ச்சிக்கான குழு, இலங்கைப் பிரச்சினை தொடர்பாக, இலங்கையில் உள்ள எட்டு தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு நாட்களும் ஆலோசனை நடத்தியது. சுதர்சன நாச்சியப்பன் எம்.பி. தலைமையிலான அந்தக் குழு ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில், நேற்று தங்களுக்குள் ஆலோசனை நடத்திய இலங்கைப் பிரதிநிதிகள், இன்று இந்திய எம்.பி.க்களுடன் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். சுதர்சனம் நாச்சியப்பன் நேர்காணல் இலங்கை தமிழ் கட்சிகளுடன் பேசிய விடயங்கள் இந்திய நாடாளுமன்றத்தில் அலசப்படும் என்று கூறுகிறார் இந்திய நாடாளுமன்ற உற…
-
- 2 replies
- 1.4k views
-
-
கிறுக்கல் சித்திரமாகிவிட்ட யாழ்ப்பாணப் பொருளாதாரம் சித்திரத்தில் பல வகைச் சித்திரங்கள் உண்டு. எனினும் எல்லோருக்கும் சித்திரம் கைவந்த கலையல்ல. சித்திரம் வரை யத் தெரியாத மாணவர்கள் சங்கீதப் பாடத்தை படிப்பதுண்டு. சாரீரம் இல்லாவிட்டாலும் சங்கீதம் பாடலாம் என்ற தற் துணிவுதான் அதற்குக் காரணம். நம் போன்றவர்கள் சித்திரம் வரையத் தெரியாத காரணத்தினால் சங்கீதம் படித்து தாளம் போடக் கற்றுக்கொண்டதுண்டு. அன்று தாளம் போடக் கற்றுக் கொண்டதால் தான் இன்று எல்லோருக்கும் தாளம் போட முடிகின்றது. இருந்தும் சித்திரம் தெரியாமல் போய்விட்டதே என்ற கவலைக்கு ஓர் அறிஞர் மருந்து கூறினார். அதுதான் கிறுக்கல் சித்திரம். கண்டபாட்டில் கிறுக்கி அதில் ஏதேனும் வடிவங்களை உருவாக்குவது கிறுக்கல் சித்திரத்தி…
-
- 1 reply
- 1.4k views
-
-
இராணுவத்தின் கொடுந்தாக்குதலைச் சந்தித்துவரும் இலங்கைத் தமிழர்களின் இன்னலைத் தீர்க்க மத்திய, மாநில அரசுகள் மேலும் அக்கறை காட்ட வேண்டும், இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளான தமிழர்களுக்கு உணவு, மருந்து, உடைகள் போன்றவற்றை உடனடியாக அனுப்பி உதவ வேண்டும், இதற்குத் தடங்கல்கள் வருமானால் மத்திய அரசிலிருந்து திமுக விலக வேண்டும் என்று தமிழ்நாட்டின் 10 பெரிய நகரங்களில் நடத்திய கருத்துக் கணிப்பிலிருந்து தெரிகிறது. சென்னை, கோயமுத்தூர், ஈரோடு, சேலம், மதுரை, வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் இம் மாதம் 6 முதல் 11 வரையில் 1,031 பேர்களிடம் கருத்து கேட்டபோது இந்தத் தகவல்கள் கிடைத்தன. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக் குழுமம் சார்பில், சமூகத்தின் அனைத…
-
- 5 replies
- 1.4k views
-
-
இன்று முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 16 வது ஆண்டு நினைவு நாள் திகதி:16.08.2010, உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள். அங்கயற்கண்ணியின் மனம் இறுகிப் பாறையானது. “இவங்களுக்கு இதுக்கு ஒரு சரியான பதிலடி குடுக்கவேணும்” அந்த நிமிடத்திலேயே மனதளவில் அவள் ஒரு கரும்புலியானாள். சிறீலங்காக் கடற…
-
- 20 replies
- 1.4k views
-
-
ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ இன்று தனது இரண்டாவது பதவிக்காலத்தை ஏற்றுக்கொள்வதையிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்ளையும் மகிழ்ச்சியையும் தெரிவிப்பதுடன், ஏற்கனவே கலந்துரையாடப்பட்டது போன்று இணைந்துசெயற்பட தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப் பிரமாணம் குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் கையெழுத்திட்டு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ இன்று தனது இரண்டாவது பதவிக் காலத்தை ஏற்றுக் கொள்வதையிட்டு தமிழ்…
-
- 5 replies
- 1.4k views
-
-
வன்னிப் பெண்கள் சாமானியர்கள் அல்லர் சாதிப்பவர்கள் :அமைச்சர் ஐங்கரநேசன் வன்னிப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கென முன்மாதிரியாக அவர்களைத் தொழில் முனைவோர்களாகக் கொண்டு பயணிகள் ஓய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்குவதற்கு உதவி வழங்கும் நிறுவனங்கள் செலவிட்டுள்ள பணத்தில் ஒரு டொலரேனும் வீண் போகாது. வன்னிப் பெண்கள் சாமானியர்கள் அல்லர் அவர்கள் மீளவும் சாதித்துக் காட்டுவார்கள் என்று அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். பெண்களைப் பங்குதாரர்களாகக் கொண்ட வன்னிவள சுய அபிவிருத்தி நிறுவனம் மாங்குளம், கண்டி வீதியில் கைப்பணிப் பொருட்களின் காட்சியறை மற்றும் பாரம்பரிய உணவகத்துடன் கூடிய பயணிகள் ஓய்வகம் ஒன்றை உருவாக்கியுள்ளது. யு.எஸ்.எய்ட் மற்றும் எஸ்.டி.சி நிறுவனங்…
-
- 11 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும் அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராஜா பத்மநாதனை அவர் பதுங்கியுள்ள நாட்டில் வைத்து சுட்டுக்கொல்வதே தமது நோக்கம் என்றும் சூழ்நிலைகள் சரிவர அமையாததனால் அவரை கைது செய்து சிறிலங்கா கொண்டுவர வேண்டியதாகிவிட்டது என்றும் சிறிலங்கா படைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பத்மநாதன் மலேசியாவில் வைத்து கடத்தப்பட்டது தொடர்பில் சிறிலங்கா படைத்துறையைச் சேர்ந்த மூன்று பேர் அனைத்துலக ஊடக நிறுவனமான 'ரொய்ட்டர்ஸ்' செய்தி நிறுவனத்துக்கு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளனர். அவரை சிறிலங்கா கொண்டுவரவேண்டும் என்று நாம் நினைக்கவில்லை. ஆனால் அவரைக் கொல்வதற்கு சூழ்நிலைகள் எம்மை அனுமதிக்கவில்லை என்றும் அவர்கள் 'ரொய்ட்டர்ஸ்' செய்தி நிறு…
-
- 0 replies
- 1.4k views
-
-
மத்திய கிழக்கு பகுதிக்கு பெண்களை அனுப்பாதீா்கள்- மகிந்தா மத்திய கிழக்கு பகுதிக்கு பெண்களை அனுப்பாதீா்கள் என மகிந்த ரம்புக்கலவிற்கு பணித்துள்ளார். மத்திய கிழக்கில் பணி புாியும் பெண்கள் பாலியல்.அடிமைகளாக . வதைக்கபட்டு கொல்லப்படுவதாலும் மேலும் மேலும் படிக்க..// http://www.kalakam.com/forum/viewtopic.php?t=933 _______________
-
- 4 replies
- 1.4k views
-
-
முன்னாள் விடுதலைப் புலிகள் சமூகத்தில் மீண்டும் கலப்பதில் தாம் சில பிரச்சனைகளை சந்தித்து வருவதாக இலங்கை அதிகாரிகள் கூறுகின்றனர். புனர்வாழ்வு நடவடிக்கைக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட போராளிகள் சிலர் காவல் துறையினரால் விசாரணைக்காக கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதேநேரம் இவ்வாறு திரும்ப கைதுசெய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமானது என்றும் முன்னாள் போராளிகள் விடுவிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அரசு கூறுகிறது. இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதி கட்டத்தில் 11 ஆயிரம் விடுதலைப் புலிகள் சரணடைந்ததாக இலங்கை இராணுவம் கூறுகிறது. ஆனால் இவர்களின் நிலை குறித்த சர்ச்சை நீடிக்கிறது. மனித உரிமை அமைப்புகள் கவலை இந்தப் போராளிகள்…
-
- 3 replies
- 1.4k views
-
-
வன்னிக்கான உழவு இயந்திரங்களில் பாதியை சிங்களவர்களுக்கு பிடுங்கிக் கொடுத்தது சிறிலங்கா அரசு [ ஞாயிற்றுக்கிழமை, 24 ஒக்ரோபர் 2010, 04:25 GMT ] [ புதினப்பலகை - வவுனியா செய்தியாளர் ] அனைத்துலக செஞ்சிலுவைக் குழு வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கவிருந்த உழவு இயந்திரங்களில் ஒரு பகுதியை சிறிலங்கா அரசாங்கம் சிங்களக் குடியேற்றவாசிகளுக்கு வழங்கியுள்ளது. இதையடுத்து உழவு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற அனைத்துலக செஞ்சிலுகைக் குழுவின் வவுனியா பணியகத்தின் பொறுப்பதிகாரியான மேரிஸ் லிமோனார் என்ற பெண்மணி தனது வாகனத்தின் பின்புறமாகச் சென்று குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தார். வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 400 இருசக்கர உழவு இ…
-
- 9 replies
- 1.4k views
-
-
Posted on : Sat Nov 17 18:30:00 2007 காங்கேசன்துறைக் கடலில் நேற்றிரவு குண்டுச்சத்தங்கள் காங்கேசன்துறைக் கடற்பரப்பில் நேற்றிரவு 10 மணி தொடக்கம் பாரிய குண்டுச்சத்தங்கள் கேட்டன. இரு தரப்புகளுக்கிடையில் மோதல் இடம்பெறுவது போன்ற சத்தங்களுடன் படகுகள் ஓடித்திரியும் சத்தங்களும் கேட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர். இந்தச் சத்தங்கள் மோதல் காரணமாகவா, ஒத்திகை காரணமாகவா என்பது குறித்து அறிந்து கொள்ளமுடியவில்லை. (அ1) http://www.uthayan.com/
-
- 0 replies
- 1.4k views
-
-
சம்பூரில் தமிழர்கள் மீது குண்டுவீச்சு நடத்தவில்லை: சிறிலங்கா அரசாங்கம் திருகோணமலை சம்பூர் பகுதியில் தமிழர்கள் மீது குண்டு வீச்சு நடத்தப்படவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது. சிறிலங்காவின் அரச பயங்கரவாதம் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அரசாங்கம் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார். இதற்குப் பதிலளித்து சிறிலங்கா அரசாங்கம் சார்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றில் பேசியதாவது: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களது அறிக்கை எமக்கு அதிர்ச்சியளிக்கிறது. சிறிலங்கா அரசாங்கம் மீது அரச பயங்கரவாதம் மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்ட…
-
- 1 reply
- 1.4k views
-
-
இன்றைய பூகோள அரசியலிலே, இரு சக்திமிக்க நாடுகளுக்குகிடையிலான உறவென்பதுவும், உறுதித் தன்மையென்பதுவும் பொருளாதரா நலன்களை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகிறது. மாறாக அரசியல் என்பது பொருளாதாரத்துக்கு நிகராக செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஒன்றாக முக்கியத்துவப்படுத்தப்படவில்லை. இது, நான்காம் கட்ட ஈழப்போரில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தாலும், ஈழத்தமிழர்களுடைய இருப்புக்கான போராட்டம் இனியும் உத்வேகத்துடன் தொடரலாம் என்பதற்கான நம்பிக்கை, சமிஞ்சை. போராட்டம் என்பது தனித்து போர்க்கலங்களால் மட்டும் நகர்த்தப்படுவதல்ல. போராட்டத்தை முன்னெடுப்பதற்கு பொருளாதாரம், ஊடகம், மற்றும் இராஜதந்திரம் போன்றவையும் ஆயுதங்களாக மாற்றமடையும். களம், காலம், சூழல் போன்றவற்றை வைத்தே போராட்டத்தின் …
-
- 6 replies
- 1.4k views
-